Monday, June 18, 2007

எனக்கு இன்று நடந்த விபத்து.
இன்று(18-06-07) எப்பொழுதும் போல் காலையில் (6.30 AM) அவசர அவசரமாக அலுவலகம் செல்ல தயாராகிக்கொண்டிருந்தேன். எனது மகள் வழக்கிற்கு மாறாக அதிகாலையிலே எழுந்து கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தாள். ஏனோ காலையில் எழுந்ததில் இருந்த ஏதோ ஒரு பரபரப்பு மணதில் ஒட்டிக் கொண்டிருந்தது. ஒரு வேளை திங்கள் காலை என்பாதால் கூட இருக்காலாம்.

பிறகு காரில் எறி அமர்ந்து வண்டியை ஆன் செய்தவுடன், பெட்ரோல்(காஸ்) இல்லை என்ற லைட் எரிய தொடங்கியது. என் மீது எனக்கே கோபம் வந்தது. சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் சுற்றியிருக்கிறோம். நடுவில் பெட்ரோல் போடாமல் விட்டுவிட்டோமே என்று.

வழக்கம் போல் டாக் ரேடியோவை ஆன் செய்துவிட்டு வண்டியை கிளப்பினேன்.

முதல் கேஸ் ஸேடசன் ஒன்று வந்தது. சரி அடுத்த ஸேடசன் ஆபிஸ்க்கு பக்கமாக இருக்குமே, அங்கே போட்டுக்கலாம் என சென்றேன்.

அந்த காஸ் ஸேடசனுக்குள் நுழைய வேண்டுமென்றால் எதிர் வரும் போக்குவரத்தை துண்டித்துவிட்டுதான் செல்ல முடியும்.

நானும் இடது இன்டிக்கேட்டரைப் போட்டுவிட்டு நின்றேன். சில விநாடிகளில் எதிர் போக்குவரத்து கார்கள் வழிவிட்டு நின்றன்.

ஒரு நன்றியை கை செய்கையில் கூறிவிட்டு இடது பக்கம் திரும்பினேன். அது மூன்று லேன் ரோடு. எனக்கு இரு லேன் வண்டிகள்தான் வழிவிட்டன. மூன்றாவதை நான் மறந்தேவிட்டேன். அவ்வளவுதான், அதில் வேகமாக வந்த கார் எனது காருடன் மோத ..

நானும் அந்த ஓட்டுநர்( அமெரிக்க பெண்) இருவம் காயமின்றி தப்பினோம்.

ஆனால் செல்வு மட்டும் 700$ கடந்துவிட்டது. போலிஸின் டிக்கடுடன்..

49 Comments:

Anonymous dom said...

hallo from italy

June 18, 2007 1:31 PM  
Anonymous Anonymous said...

இதுவே இந்தியாவாக இருந்தால் எவனாவது செத்துபோயிருப்பான்.
தலைக்கு வந்த்து தலப்பாவோட போச்சு. இனிமே கொஞ்சம் கூச்சப்டாம ஹார்ன் , ஹெட்லைட், இன்டிகேட்டார் எல்லாத்தையும் பயன்படுத்தவும்

June 18, 2007 1:43 PM  
Blogger சின்னக்குட்டி said...

வணக்கம் சிவபாலன் . எதுவித ஆபத்தில்லாமல் முடிந்து விட்டது ..இனிமேலாவது கவனம் எடுங்கள்

June 18, 2007 1:44 PM  
Blogger பெருசு said...

சிவபாலன், உங்களுக்கு ஒண்ணும் ஆகலியே!வண்டி போனா தொலையுது
கழுத,

பாத்து ஓட்டுங்க.

June 18, 2007 1:45 PM  
Blogger Thekkikattan|தெகா said...

சிவா,

இது மிகவும் பொதுவாக நடக்கக் கூடிய சாலை விபத்து, ரோட்டைத் துண்டித்து எடுக்கும் வளைவுகளில் மிகவும் பொறுமையும் ஒவ்வொரு லேனாக தாண்டாவும் செய்ய வேண்டும் (ஏற்கெனவே இரண்டு லேன் வண்டிகள் நிறுத்தப் பட்டதால் எட்டிப் பார்ப்பது எளிதுதானே...)

எப்படியோ மிகச் சேதாராம் இல்லாமல் நீங்கள் இருவரும் தப்பியதற்கு ஒரு பெரிய கும்பிடு,,,,

June 18, 2007 1:49 PM  
Blogger பிரபு ராஜதுரை said...

Take care!

June 18, 2007 1:51 PM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

இந்த மாதிரி இடங்களில் கடக்கவே கூடாது. இதே போல என் நண்பர் ஒருவருக்கு நடந்தது.

ஆபத்தில்லாமல் தப்பியதுகுறித்து மகிழ்ச்சி. Air bag வந்திருந்தால் வண்டி முழு மதிப்புக்கும் காப்பீடு பெற்றுவிட்டு புதிதாய் வாங்கிக்கொள்ளலாம். இல்லையென்றால் செலவுதான்.

உதவி தேவையென்றால் அழைக்கவும். சீரியசா.

June 18, 2007 2:07 PM  
Blogger Boston Bala said...

Take care... It is a traumatic experience!

June 18, 2007 2:56 PM  
Blogger துளசி கோபால் said...

நல்லவேளை, அடி ஒண்ணும் பலமா இல்லைதானே?

கவனமா இருங்க. படிச்சதும் கவலையாப் போச்சு.

June 18, 2007 3:15 PM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

சிவபாலன்!
நீங்களும் அப்பெண்ணும் எதுவித பாதிப்புமின்றி தப்பியது போதும்.

June 18, 2007 3:24 PM  
Blogger வைசா said...

// நானும் அந்த ஓட்டுநர்( அமெரிக்க பெண்) இருவம் காயமின்றி தப்பினோம். //

இதுதான் மிக முக்கியமானது. இந்த அநுபவத்தின் தாக்கத்தில் இருந்து மீள சில நாட்களாகலாம். Insurance இந்தச் செலவுகளை cover பண்ணும் அல்லவா?

இங்கு பிரிட்டனில் மூன்று லேன் உள்ள வீதிகளைத் துண்டித்துச் செல்லவேண்டுமானால் அந்த இடம் signal controlled ஆகத்தான் இருக்கும்.

வைசா

June 18, 2007 4:07 PM  
Blogger செல்வன் said...

சிவபாலன்

உங்களுக்கும் அந்த பெண்ணுக்கும் ஒன்றும் ஆகவில்லை என்பது பெரும் நிம்மதியை தருகிறது. வரும்காலத்தில் கவனமாக இருங்கள்.

June 18, 2007 4:14 PM  
Blogger "வற்றாயிருப்பு" சுந்தர் said...

ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். கவனமாக இருங்கள்.

எந்த அவசரம் இருந்தாலும், ஓட்டும்போது பதற்றமில்லாமல் இருத்தல் அவசியம்.

இறைவனுக்கு நன்றி.

June 18, 2007 4:44 PM  
Blogger நெல்லை காந்த் said...

Sivabalan, Take Care and Careful sir

June 18, 2007 5:29 PM  
Blogger கோவி.கண்ணன் said...

கெட்ட காலத்திலும் நல்ல காலம். $700 உடன் முடிந்ததே. மகிழ்ச்சி அடையுங்கள். பதட்டத்தை மறங்கள், கவனம் கொள்ளுங்கள் !

June 18, 2007 6:25 PM  
Blogger வடுவூர் குமார் said...

பாத்துங்க சிவபாலன்.பெரிய விபத்தாக மாறாமல் இருந்ததே சந்தோஷம் தான்.
அதை மறக்க இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க.
அந்த வரைபடத்தை பெரிதாக்கி பார்க்கும் போது .. சாலையில் இருந்து சின்ன சின்ன தாக மெல்லிய கோடு (பூரான் கால் மாதிரி) இருக்கே,அது என்ன? வீட்டுக்குப்போகும் உள் சாலையா?
என்ன பண்ணுவது? இந்த மாதிரி படமெல்லாம் பார்க்கும் போது இப்படித்தான் யோசிக்க தோனுகிறது.

June 18, 2007 6:46 PM  
Blogger ஜோ / Joe said...

காயமின்றி தப்பியது மகிழ்ச்சி .take Care.

June 18, 2007 7:17 PM  
Blogger delphine said...

Grand Escape! Thank God!

June 18, 2007 7:37 PM  
Blogger Rajagopal said...

பாதுகாப்பாக இருங்கள் அய்யா. காரில் எப்பொழுதும் பெட்ரோல் கலத்தில் 25% குறையாமல் வைத்துக் கொள்ளுவது வீண் பதட்டத்தைத் தவிர்க்க உதவும்.

அன்புடன்
இராசகோபால்

June 18, 2007 8:36 PM  
Blogger சிவபாலன் said...

DOM,

Thanks for dropping by..


அனானி,

நன்றி! உண்மைதான் உயிர்சேதம் ஏற்பட வாய்பிருந்தது. ம்ம்

June 18, 2007 9:54 PM  
Blogger சிவபாலன் said...

சின்னக்குட்டி,

மிக்க நன்றி!

தங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி!

June 18, 2007 9:55 PM  
Blogger சிவபாலன் said...

சீனியர்

ஆமாங்க.. காயமின்றி தப்பித்தது மகிழ்ச்சி. அதுவும் உங்களைப் போன்ற நல்ல உள்ளங்களுடன் பகிர்ந்ததில் கொஞ்சம் அதன் தாக்கம் குறைந்தது என்பதில் ஐய்யமில்லை.

June 18, 2007 9:58 PM  
Blogger சிவபாலன் said...

தெகா

Blind Spotல் மாட்டிக்கொண்டேன். அதனால்தான் எல்லாம்..

June 18, 2007 10:00 PM  
Blogger சிவபாலன் said...

பிரபுராஜாதுரை சார்

மிக்க நன்றி!

June 18, 2007 10:01 PM  
Blogger சிவபாலன் said...

சிறில்

It was my terrible mistake! mmmmm..

Anyway I Paid the penalty for that!

Now, I am absolutely fine!

Thanks

June 18, 2007 10:03 PM  
Blogger சிவபாலன் said...

BaBa,

My license history,vehicle history and insurance history all are affected within few secs... :(:(:(

June 18, 2007 10:07 PM  
Blogger சிவபாலன் said...

துளிசிமேடம்

உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி.

June 18, 2007 10:10 PM  
Blogger சிவபாலன் said...

யோகன் பாரிஸ் அய்யா,

உங்களின் அன்பிற்கு மிக்க நன்றி.

June 18, 2007 10:15 PM  
Blogger சிவபாலன் said...

வைசா,

உண்மைதான். அதன் தாக்கம் கொஞ்சம் இருக்கத்தான் செய்யும். பலருடன் பகிர்ந்தகொண்டதில் ஓரளவு ஆறுதல்.

இல்லைங்க.. இன்சுரன்ஸ் கொடுத்தது போகத்தான் இந்த 700$. இன்சுரன்ஸ் இல்லை என்றால் சுமார் 3500$ கொடுக்கவேண்டி இருந்திருக்கும். (இன்சுரன்ஸ் இல்லாமல் கார் ஓட்டவே முடியாது) ம்ம்ம்ம்

உங்கள் அன்பிற்கு நன்றி

June 18, 2007 10:21 PM  
Blogger சிவபாலன் said...

செல்வன் சார்,

உங்கள் அன்பிற்கு நன்றி

June 18, 2007 10:22 PM  
Blogger சிவபாலன் said...

"வற்றாயிருப்பு" சுந்தர்,

மிக்க நன்றிங்க

June 18, 2007 10:23 PM  
Blogger விடாதுகருப்பு said...

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று. இனிமேல் எச்சரிக்கையாக இருங்கள் சிபா.

June 18, 2007 10:24 PM  
Blogger சிவபாலன் said...

நெல்லை காந்த்,

Thanks a lot!

June 18, 2007 10:25 PM  
Blogger சிவபாலன் said...

GK,

நன்றிங்க!

June 18, 2007 10:28 PM  
Blogger சிவபாலன் said...

வடுவூர் குமார்,

உங்கள் அன்பிற்கு நன்றி

அமாங்க மறந்துதான் ஆகவேண்டும்.!

ஆமாங்க அந்த ரோடு எல்லாம் வீடுகளுக்கு செல்லும் ரோடுகள்தான்.

நேரம் கிடைக்கும் போது WWW.Mapquest.com சென்று Libertyville, IL 60048
என்று போட்டு பாருங்க..

நன்றி

June 18, 2007 10:34 PM  
Blogger சிவபாலன் said...

ஜோ,

ரொம்ப நன்றிங்க...!

June 18, 2007 10:35 PM  
Blogger சிவபாலன் said...

Delphine Madam,

Thanks.

June 18, 2007 10:37 PM  
Blogger சிவபாலன் said...

ராஜகோபால்,

உங்களின் அன்பிற்கு நன்றி.

June 18, 2007 10:39 PM  
Blogger சிவபாலன் said...

சதிஷ்

நன்றிங்க..!

June 18, 2007 10:40 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

Sivabalan,

Relieved to know that you (and the other lady) were not injured.

Do take care in future.

enRenRum anbudan
BALA

June 18, 2007 11:51 PM  
Blogger Chandravathanaa said...

சிவபாலன்
நீங்களுக்கும் அந்தப் பெண்ணும் எதுவும் நடக்காமல் தப்பித்தீர்களே.
அது போதும்.

June 18, 2007 11:55 PM  
Blogger வாசகன் said...

சி.பா,
நலம் தானே...!
கவனமாக இருங்கள்.

June 19, 2007 12:39 AM  
Blogger தென்றல் said...

காயமின்றி தப்பித்தது மகிழ்ச்சி, சிவபாலன்!

அந்தப் பெண்ணுக்கும் எதுவும் காயம் இல்லையே?!

பார்த்துங்க, சிவபாலன்.

June 19, 2007 7:52 AM  
Blogger நாகை சிவா said...

கவனமாக இருக்கவும்...

700 $ எல்லாம் மேட்டரே இல்ல... விடுங்க தல... எந்த காயமும் இல்லாமல் இருந்ததே போதும்...

June 19, 2007 8:33 AM  
Blogger வினையூக்கி said...

சிவபாலன் சார், :( :( take care sir.

June 19, 2007 8:44 AM  
Blogger மங்கை said...

சிவா..எச்சரிக்கையா இருங்க...நல்ல வேலை..take care

June 19, 2007 10:53 AM  
Blogger குமரன் (Kumaran) said...

பாத்து சிவபாலன்.

நல்ல வேளை யாருக்கும் காயமின்றிப் போனது. வருபவர் இன்னும் அதிக வேகத்தில் வந்திருந்தால் கடுமையான விளைவுகள் நேர்ந்திருக்கும். இனி மேல் நானும் இந்த மாதிரி சூழ்நிலைகளில் அதிக கவனம் செலுத்துகிறேன். நீங்கள் பார்த்து செய்யுங்கள்.

June 20, 2007 2:03 AM  
Anonymous செந்தழல் ரவி said...

காயமின்றி தப்பியது மகிழ்ச்சி...

திருஷ்டி கழிஞ்சதுன்னு விடுங்க...( இது தான் இங்கே ரெகுலர் டயலாக் அண்டு நான் அடிக்கடி கேக்கறது)

உங்களுக்கு பெங்களூர்ல ஒரு வாரம் கார் ஓட்டும் தண்டனை தறேன்...

அதுக்கப்புறம் எல்லாம் சரியாகிடும்...

June 20, 2007 11:14 PM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

எப்டி இருக்கீங்க உங்களுக்கென ஒரு அழைப்பு .. பதிவு போடுங்க.

http://theyn.blogspot.com/2007/06/7-9.html

June 21, 2007 2:45 PM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv