Monday, July 02, 2007

கோவையில் மழை "அழகு" - படங்கள்!

வால்பாறையில் கனமழை காரணமாக கூழாங்கல் ஆற்றில் வெள்ளம் சீறிப்பாய்கிறது. அடுத்த படம்: கன மழை காரணமாக நொய்யல் குளங்களுக்குத் தண்ணீர் அதிகளவில் வருகிறது. கோவை வீரகேரளம் அருகேயுள்ள கொலராம்பதி குளத்திற்குத் தண்ணீர் வந்துகொண்டுள்ளது.


கனமழை காரணமாக கோவை சாடிவயல் தரைப்பாலத்தில் வாகனங்கள் செல்ல முடியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.


கனமழை காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்தோடுகிறது. சுண்ணாம்பு காளவாயில் நொய்யல் தடுப்பணையைத் தாண்டி சீறிப்பாய்கிறது வெள்ளம்.


நீலகிரியில் கனமழை தொடர்கிறது. குன்னூர் அருவங்காடு வெடிமருந்து ஆலை கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பணை நிரம்பியது. அங்கிருந்து வெளியேறும் உபரிநீர் காட்டேரி பகுதியில் அருவியாய்க் கொட்டுகிறது.


கனமழையால் கோவை நம்பியழகன்பாளையத்திலுள்ள வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்தோடுகிறது. வாய்க்காலில் Ôடைவ்Õ அடித்து குளித்து மகிழும் இளைஞர்கள்.


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக உடுமலை அமராவதி அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.


கோவை பில்லூர் அணையின் மதகுகள் இன்று காலை திறக்கப்பட்டதையட்டி பவானி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. மேட்டுப்பாளையம் ஓடந்துறை பகுதியில் உள்ள ஆற்றுப்பாலத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.


நீலகிரியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்தது. ஊட்டி நகருக்கு குடிநீர் வழங்கும் காமராஜர்சாகர் அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.


தண்ணீர் நிறைந்து அழகு ததும்ப காட்சியளிக்கும் சித்திரைச்சாவடி அணை.


கனமழையால் நொய்யல் ஆற்றில் தண்ணீர் சீறிப் பாய்கிறது. திருப்பூர் நொய்யல் பாலத்தில் நீந்த டைவ் அடிக்கிறான் ஒரு சிறுவன்.


நொய்யலில் வெள்ளம் காரணமாக ஒரத்துப்பாளையம் அணையில் ஒரே நாளில் 12 அடி நீர்மட்டம் உயர்ந்தது.


தமிழக, கேரள எல்லைப்பகுதியான மேட்டுப்பாளையம் அருகேயுள்ள சாவடியூர் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் மூழ்கியது.

நன்றி: மாலை முரசு

16 Comments:

Blogger மங்கை said...

சிவா

மழை இப்படித்தான் இருக்குமா..சரி சரி..

நன்றி சொல்றதா இல்ல வயித்தெரிச்சல கிளப்பினதுக்கு உங்களை திட்டறதான்னு தெரியலை...:-)))

July 02, 2007 9:21 AM  
Blogger சிவபாலன் said...

மங்கை

நீங்களாவது பக்கத்தில் இருக்கீங்க.. ஒரு எட்டு போய் பார்த்துட்டு வந்திடலாம்.. என் நிலைமை நினைத்து பார்த்து சந்தோசப்பட்டுகுங்க..

July 02, 2007 9:24 AM  
Blogger சிவபாலன் said...

நன்றி: மாலை முரசு

July 02, 2007 9:39 AM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
படங்களுக்கு நன்றி.
பார்த்தேன்.
இரசித்தேன்.
கோவையில் ஆற்றில் நீந்தி விளையாடி இரசிக்கத் துடித்தேன்.:-))

July 02, 2007 10:25 AM  
Blogger ilavanji said...

சிவபாலன்,

மனதிற்கு மகிழ்வளிக்கும் படங்களைய்யா!

// திருப்பூர் நொய்யல் பாலத்தில் நீந்த டைவ் அடிக்கிறான் ஒரு சிறுவன். // இதே வேலையை நானும் செஞ்சதுண்டு! அப்போ நொய்யல்ல மழைத்தண்ணிகூட இல்லை. சாயப்பட்டரை தண்ணிலயே! :)

July 02, 2007 11:54 AM  
Blogger செல்வநாயகி said...

nice pictures.

July 02, 2007 12:42 PM  
Blogger Thekkikattan|தெகா said...

சிவபாலன்,
படங்களுக்கு நன்றி.
பார்த்தேன்.
இரசித்தேன்.
கோவையில் ஆற்றில் நீந்தி விளையாடி இரசிக்கத் துடித்தேன்.:-))

அதே அதே... :-))

July 02, 2007 1:47 PM  
Blogger noyyalon said...

அன்பின் சிவபாலன் உங்களின் கோவை மழை அழகை தமிழ்சத்திரத்தில் மறுபதிப்பு செய்துள்ளேன் நன்றி.
http://www.tamilpayani.com/tamilsatiram/viewtopic.php?f=34&t=861&start=0&st=0&sk=t&sd=a

July 02, 2007 8:49 PM  
Blogger சிவபாலன் said...

வெற்றி

எனக்கு பழைய நினைவுகள்.. பேருர் நொய்யலில் விளையாடிய நினைவுகள்

July 02, 2007 8:59 PM  
Blogger சிவபாலன் said...

இளவஞ்சி,

வாங்க..!

எனக்கும் நொய்யல் ஆற்றில் எனது சகோதரர்களுடனும் நண்பர்களுடனும் விளையாடி நினைவுகள் வந்து போகிறது.

July 02, 2007 9:01 PM  
Blogger சிவபாலன் said...

செல்வநாயகி,

மிக்க நன்றிங்க..!

July 02, 2007 9:03 PM  
Blogger சிவபாலன் said...

தெகா

வாங்க!

உங்களுக்குமா!! Ha Ha Ha..

பழைய நினைவுகளை அப்படியே ஓட விடுங்க

July 02, 2007 9:09 PM  
Blogger சிவபாலன் said...

நொய்யலோன்,

வாங்க!

மிக்க நன்றிங்க..!

எனது பதிவை பகிர்ந்துகொண்டமைக்கு மிக்க நன்றி!

July 02, 2007 9:12 PM  
Blogger ராஜ நடராஜன் said...

நானும் கைய நனச்சிட்டுப் போறேங்க

July 03, 2007 4:47 AM  
Blogger மஞ்சூர் ராசா said...

கோவை மழையில் நடந்த கோவை இணைய நண்பர்கள் சந்திப்பை இங்கு காணுங்கள்:
http://vanusuya.blogspot.com/2007/07/3.html

தவறவிட்டவர்கள் அடுத்த சந்திப்பில் சந்திப்போம்.

July 03, 2007 9:23 AM  
Anonymous Anonymous said...

I miss Kovai Very Much...

Thanks for the pictures..

July 03, 2007 7:15 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv