இப்படி ஒரு விசயம் நடக்கிறது.. தெரியுமா?
வேள்விகளில் தேவாரம், திருவாசகத்தைப் பாட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளதைக் கண்டித்தும், தமிழ் வழிபாட்டை வலியுறுத்தியும் கோவை காந்திபுரத்தில் தமிழ்நாடு தெய்வத்தமிழ் வழிபாட்டுரிமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் இன்று உண்ணாவிரதம் நடந்தது. பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், முன்னாள் எம்.பி. ராமநாதன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
22 Comments:
நன்றி: மாலை முரசு
உண்ணாவிரதத்தின் நோக்கம் வெற்றி பெற்று தேவார திருவாசகங்கள் வேள்விகளின் போது முழங்க இறைவன் அருள் புரியட்டும்.
சிவபாலன், இந்த உயர் நீதிமன்றத் தடை தேவார திருவாசகங்களுக்கு மட்டும் தானா? நாலாயிர திவ்ய பிரபந்தங்கள் எல்லா வைணவக் கோவில்களிலும் வேள்விகளிலும் எப்போதும் போல் முழங்கிக் கொண்டிருக்கும் என்று நம்புகிறேன். நீதிமன்றத் தடை பற்றி மேல் விவரம் கிடைக்குமா?
குமரன் சார்,
சுட்டியைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்ததும் தருகிறேன்.
நான் அறிந்தவரையில், தேவாரம் திருவாசகத்திற்கு மட்டும்தான் இந்த தடை.
திருமணங்கள், கோவில் கும்பாபிசேகம் போன்றவற்றில் தேவாரம் பாடக்கூடாது என உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது.
சுட்டியை விரைவில் தருகிறேன்
சிவபாலன்,
இவர்களைப் பார்த்தால் தமிழெதிரிகள் போலவும், ஆத்திக வேசம் போட்ட நாத்திகர்கள் போலவும் உள்ளது.
உண்மையிலேயே பக்தி இருந்தால் எந்த மொழியில் பாடினால் என்ன ? இறைவனுக்கு காது கேட்காதா ?
எதற்கு இப்படியெல்லாம் வீன்பிடிவாதம் பிடிக்கிறார்கள் ?
:)))
இவர்கள் சித்தம் தனை தெளிவிக்க
அந்த சிவனே வரட்டும்.
ஓம் நமசிவாய!.
//முன்னாள் எம்.பி. ராமநாதன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். //
இவரை குடுமி இராமநாதன் என்று சொல்லுவார்கள். பச்சையாக எப்படி பேசுவது என்று பச்சைக் கிளிக்குக்கூட பாடம் நடத்துபவர். அதிமுககாரர். இப்போது இவரை சீந்துவார் யாரும் இல்லை என்பதால் கவனத்தை பெற இங்கு வந்து உட்கார்ந்து இருக்கிறார்.
ஐந்தெழுத்து மந்திரமும் ஐம்பத்தோரு அட்சரமும் சமஸ்கிரதத்தில் உச்சரிக்கும் போது அதன் அதிர்வு அலைகளால் ஆலயம் தூய்மையடைவதாக பக்திமான்களின் நம்பிக்கை. வேதங்களிலும் இதற்கான குறிப்பு இருக்கிறது.
இவையெல்லாம் தமிழுக்கு இருக்கிறதா ? இவர்கள் வேறு எதாவது உருப்படியாக செய்யலாம். கோவில்களில் தமிழ் வழிபாடு நடைமுறை படுத்தும் போராட்டத்தை கைவிட்டு பக்தியை வளர்க்க இவர்கள் வேறு எதாவது செய்யலாமே ?
கருணாநிதியின் கைகூலிகளோ ?
இதுபோல் எல்லாம் பிரச்சினைகள் வரும் என்றுதான் நீச பாஷையான தமிழில் பாட கற்காலத்திலேயே எங்க சங்கராச்சாரி தடை வச்சார். யாரும் கேட்டீங்களோ?
//ஐந்தெழுத்து மந்திரமும் ஐம்பத்தோரு அட்சரமும் சமஸ்கிரதத்தில் உச்சரிக்கும் போது அதன் அதிர்வு அலைகளால் ஆலயம் தூய்மையடைவதாக பக்திமான்களின் நம்பிக்கை. வேதங்களிலும் இதற்கான குறிப்பு இருக்கிறது.//
இதெல்லாம் சொன்ன எத்தனைகோயில்களை தீட்டுக்கழிக்கிறார்கள் என்பது தெரியுமா கோனாரே?
//உண்மையிலேயே பக்தி இருந்தால் எந்த மொழியில் பாடினால் என்ன ? இறைவனுக்கு காது கேட்காதா ?//
அதான செவுட்டுச்சாமிக்கு பாட்டுப்போடவா இந்த நீச பாஷ வெறியனுங்க கொடி தூக்குறான்னுங்க?
முதல்ல இந்த கோயில எல்லாம் இடிச்சா எதாவது நாலு பள்ளிக்கோடம் கட்ட எடம் கிடைக்கும்
//திருமணங்கள், கோவில் கும்பாபிசேகம் போன்றவற்றில் தேவாரம் பாடக்கூடாது என உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. //
சர்காரின் சரியான நடவடிக்கை.
சமஸ்கிரதம் பாடினால் ஆண்டவனுக்கு புரியும் என்று நம்புகிறோம், தமிழில் தேவாரமும், திருவாசகமும் பாடினால் ஆண்டவன் புரிந்து கொள்வதை அப்பால் வைப்போம். அவைகள் தமிழர்களுக்கு புரியுமா ?
//திருமணங்கள், கோவில் கும்பாபிசேகம் போன்றவற்றில் தேவாரம் பாடக்கூடாது என உயர்நீதி மன்றம் தடை விதித்துள்ளது. //
இதேபோல் சமஸ்திருத தேவபாடையிலும் கூடாது எனச் சொல்ல இந்த மைனாரிட்டி திமுக அரசுக்கு மாஞ்சா இருக்கிறதா?
//சமஸ்கிரதம் பாடினால் ஆண்டவனுக்கு புரியும் என்று நம்புகிறோம், தமிழில் தேவாரமும், திருவாசகமும் பாடினால் ஆண்டவன் புரிந்து கொள்வதை அப்பால் வைப்போம். அவைகள் தமிழர்களுக்கு //
செவிட்டுச் சாமிக்கு காது கேக்குமாம் அதிலும் தேவ பாடைல பாடினா கேக்குமாம் குடுமிய மறைங்க அய்யா
அனானி தெய்வங்களா
ஆகா.. இன்று கும்மிக்கு இந்த பதிவு கிடைத்துவிட்டதா? ம்ம்ம்
சிவபாலன்,
/* வேள்விகளில் தேவாரம், திருவாசகத்தைப் பாட உயர்நீதிமன்றம் தடை */
எக் காரணங்களின் அடிப்படையில் அறங்கூறு நிலையம் இத் தடையை விதித்தது என அறியத் தருவீர்களா?
வெற்றி
நான் அறிந்த வரையில் தமிழ் வேள்வி செய்வோர், தேவாரம் பாடி கும்பாபிசேகம் திருமணம் போன்றவைகளை சம்ஸ்கிரதம் ஓதுபவர்கள் இல்லாமலேயே செய்வதாக கூறி ஒரு மடம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை வாங்கியுள்ளது.
வழக்கு நீதி மன்றத்தில் இன்னும் உள்ளது. இது இடைக்கால தடைதான்.
அனானி தெய்வங்களா
ஆகா.. இன்று கும்மிக்கு இந்த பதிவு கிடைத்துவிட்டதா? ம்ம்ம் //
இந்த பதிவை சூடான இடுகைக்குள் கொண்டுவராமல்நாங்கள் ஓய மாட்டோம் இது பற்றிய கட்டுறைகள் இன்னும் பல வரவும் எங்களை வேண்டிக் "கொல்லவும்"
திருமணத்தில்கூட தேவாரம் பாடக்கூடாதாமா? எங்கே நம்
தனி மனித உரிமை காவலாளிகள்?
எதெதற்குத்தான் இடைக்காலத் தடை விதிப்பது என்று ஒரு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது :-(.
வைசா
அன்புள்ள சிவபாலன்,
உங்கள் பதிவிலிருந்து வேள்விகளில் தான் தேவாரம், திருவாசகம்
முழங்கத் தடை என்று அறிந்தேன்.
வேள்விகள் வேறு, கோயில் கர்ப்பகிரகத்தில் அர்ச்சனை, அபிஷேகம் போன்றவை சுவாமி சிலைக்கு செய்யும் பொழுது
பாடும் பாடும் துதி வகைப்பட்ட மந்திரங்கள் வேறு
வேள்வி என்பது தீ வளர்து, மந்திரங்கள் ஓதிச் செய்யும் சடங்கு.
இதற்கும் தேவார, திருவாசகத்திற்கும் எந்த சம்பந்தமுகில்லை.
இது கூடத் தெரியாமலா, அத்தனைத் துறவிகள் உண்ணாவிரதம்
இருந்திருப்பார்கள்?.. எங்கே கோளாறு என்று எனக்குப்
புரியவில்லை.
நண்பர் ஜீவி அவர்கள் சொன்னது போல் கோவில்களில் இறைவன் முன் தீந் தமிழ்ப் பண்களான தேவரத்தையும் திருவாசகத்தையும் பாடும் வழக்கம் இன்று பெரும்பாலான கோவில்களில் இருந்து வருகிறது. ஆறுகால பூஜையின் முடிவில் ஓதுவார் பாடும் பண்களில்லாமல் பூஜை நிறைவு பெறாது. வேள்வி என்பது வெறும் சடங்கே. அது தேவர்களை மகிழ்விப்பதற்காக ஒரு பிரிவினரால் செய்யப் படுவது. இங்கே தேவராம் பாட வேண்டிய அவசியம் என்ன வந்தது ? விளங்கவில்லை. வைணவர்கள் நடத்தும் வேள்விகளில் கூட பிரபந்தம் பாடப்படுவதில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். மேலும் தமிழர்கள் பின்பற்றும் சைவ சித்தாந்த வழிபாட்டு முறையில் வேள்விக்கு இடமில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்
இது இரண்டு பிரிவினர் தங்களது ego வை நிலைநிறுத்தவும், சொல்லப் போனால் ஒரு விளம்பரம் தேடிக்கொள்ளும் முயற்சியாகத் தெரிகிறது
நண்பர் கும்பகோணம் கோவாலு தனது பின்னூட்டத்தில்
குறிப்பிட்டிருக்கும் இராமனாதன் வேறு. அவர் எம்.எல்.ஏ.
இராமனாதன். முன்னாள் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்.
அவர் எந்தக் காலத்தும் எம்.பி. ஆனதில்லை.
இவர் கோவை இராமனாதன் என்று நினைக்கிறேன்.
Post a Comment
<< Home