Wednesday, August 15, 2007

வெற்றிலைப் பாக்கு - Adult சிறுகதை!அன்று முழு நிலவு. தெளிந்த வானம். செம்மேடு கிராமத்தில் மின்சார விளக்குகள் மிகக் குறைவு. அதனால் நிலவின் ஒளி வெள்ளதில் வயல் வெளிகள், தெருக்கள் மற்றும் வீடுகள் எல்லாம் மிக அழகாக காட்சி அளித்தன.

அந்த ஒளிவெள்ளத்தில் கிழே தெரியும் தனது நிழலை பார்த்து மகிழ்ந்தவாறு சரவணன் அவன் பாட்டி வீடு நோக்கி சென்றான்.

பாட்டியும் தாத்தாவும் எப்போதும் 8 மணிக்கெல்லாம் படுத்துவிடுவார்கள். தற்பொழுது மணி 9.

"பாட்டி....பாட்டி" என்று தட்டிய கதவை திறக்க பாட்டிக்கு சில நிமிடங்கள் ஆனது.


"என்னடா இந்த நேரத்தில்" என்ற பாட்டியின் கேள்விக்கு "இல்லை பாட்டி", "அம்மா தான் அனுப்பி வைத்தாங்க". என்றான் சரவணன்.

"சரி உள்ளே வா!".

"என்னடா விசயம்?" என்றாள் பாட்டி.

"பாட்டி எங்க அப்பா ஒன்னு கேட்கச் சொன்னார்". "அப்பறம் எங்கம்மா ஒன்னு கேட்கச் சொன்னாங்க" என்ற சரவணனை உற்றுப் பார்த்தார் தாத்தா.

அதற்குள் தாத்தா, "உங்க அப்பாவா?"....." ம்ம்ம்"

காலைச் சுற்றி வந்த பூனையை இரசித்தவாறே "ஆமாம்" என்றான் சரவணன்.

"பாட்டி", "எங்க அம்மா உனக்கு எத்தனையாவது குழந்தை?" எனற சரவணனின் கேள்விக்கு, "இது என்னடா கேள்வி?!", "உங்க அம்மாதான் ஏழாவது, கடைசி வேற". "இதைக் கேட்கத்தான் இந்த நேரத்தில் வந்தியா?!"

"இல்லை பாட்டி"... "அது இல்லை கேள்வி?" என்றான் சரவணன்.

என்ன கேள்வியாக இருக்கும் என்று அந்த மழழையின் முகத்தை பார்த்தவாரே கயிற்று கட்டிலில் சென்று அமர்ந்தாள் பாட்டி.

"என்னடா சொல்லுடா" என்றார் தாத்தா.

"அப்பா வந்து எங்கம்மாவை ஏன் பெத்தீங்கன்னு கேட்டுவிட்டு வரச்சொன்னாரு". என்றான்.

பாட்டி சததம் போட்டு சிரித்துவிட்டாள்.

"ஏன்டா உங்க அப்பா", "அப்படி கேட்டார்?" என்றாள் பாட்டி.

"இல்லை", "எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா வேணும் என்று அப்பா கிட்ட சொன்னேன்". "அவர் எங்க அம்மா கிட்ட கேட்டார்." "எங்க அம்மா வேணாம் என்று சொல்லிட்டாங்க.." "அதனால் தான், எங்க அப்பா எங்க அம்மாவை ஏன் பெத்தீங்கன்னு?" "உங்க கிட்ட கேட்கச் சொன்னார்", என்றான் மழழை மொழியில்.

"சரி உங்க அம்மா என்ன கேட்கச் சொன்னாள்?" என்று வினவினார் தாத்தா.

"எங்க அம்மா, வெற்றிலை பாக்கு வாங்கி வரச்சொன்னாங்க" என்றான சரவணன்.

அதற்கு பாட்டி, "இங்க ஏதுட வெத்திலைப் பாக்கு?"

"நீங்க எப்பவுமே நிறைய வைத்திருப்பீங்களாமா?!" என்றான் சரவணன்.

அதற்குள், தாத்தா, "ஏன்டா?" "இப்பதான் தங்கச்சி பாப்பா வேண்டாம் என்று உங்க அம்மா சொல்லியதாக சொன்னாய்", "அதற்குள சமாதணமாகி வெத்திலைப் பாக்கு வாங்கி வரச்சொல்லிட்டாளா!?" என்று சொல்லி சிரித்தார்.

சரவணனுக்கு ஒன்றும் புரியவில்லை.


"அந்த காலத்தில் நாங்க போடாத வெத்திலைப் பாக்கா?" என மனதில் நினைத்தவாறே, வெற்றிலைப் பாக்கு சுண்ணாம்புடன் எடுத்து சரவணன் கையில் கொடுத்தார் தாத்தா.

40 Comments:

Blogger Udhayakumar said...

நானும் இந்த கதைய கேட்டிருக்கேன்... இன்னமும் என்னன்னு புரியலை :-)

August 15, 2007 9:10 PM  
Blogger கோவி.கண்ணன் said...

//சரவணனுக்கு ஒன்றும் புரியவில்லை. //

மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் போனாதற்கு வெற்றிலை விவசாயம் தான் காரணமா ?

:):)

August 15, 2007 9:14 PM  
Anonymous விடாது கருப்பு said...

பின்னிட்டேள் போங்கோ!

August 15, 2007 9:42 PM  
Blogger துளசி கோபால் said...

வெத்தலை பாக்குக்கு முதல்லே தடா போடணும்.

122 கோடி போதுமைய்யா போதும்.
ஜனங்க மூச்சுமுட்டிச் செத்துப் போகப்போகுது(-:

August 15, 2007 9:51 PM  
Blogger வவ்வால் said...

சிவபாலன்,

காமெடிலவும் கலக்குறிங்க! நாக்கு சிவக்க சுண்ணாம்பு வேணும் ,கன்னம் சிவக்க மச்சானும் வேணுமா?

August 15, 2007 10:00 PM  
Blogger Anandha Loganathan said...

இப்படி எல்லாம் எல்லாத்துக்கும் idea தரக்கூடாது.
:)

ஆனா கதை பின்னிட்டீங்க.

August 15, 2007 10:29 PM  
Blogger delphine said...

நல்ல கதை..

கதைதானே?:(

August 15, 2007 10:42 PM  
Blogger வித்யாசாகரன் (vidyasakaran) said...

ஒண்ணுமே புரியலை! :(

August 15, 2007 11:06 PM  
Blogger Senthil Alagu Perumal said...

வெற்றிலை பாக்கு தடை செய்ய முடியாது ஆனால் அதை ஒரு பிலாஸ்டிக் கவரில் வைத்து உபயோகிக்கலாம். மக்கட்தொகையும் கட்டுப்படும், வெற்றிலைப் பாக்கும் போட்ட மாதிரி இருக்கும் :‍) :)

August 16, 2007 12:08 AM  
Blogger நிலவு said...

நல்ல விடயம். முயற்ச்சிக்கு வாழ்த்துகள்

August 16, 2007 3:35 AM  
Blogger Thekkikattan|தெகா said...

நம்ம மாதிரி சீரியசனா ஆட்கள் எல்லாம், சரவணன் மாதிரி ஆட்களுக்கு வெத்திலைப் பாக்கையெலாம் மொத்தமாக வாங்கி வந்து எப்படி குளிர் சாதனப் பெட்டியில வைச்சு அடுத்த முறை வெத்தலைப் பாக்கு வெளிய அனுப்பி வாங்கியாரச் சொன்னா, இந்தாருக்குன்னு எடுத்துக் கொடுக்கிற மாதிரி விழிப்புணர்வேற்றணுமைய்யா :-))) அப்பயாவது, ஜனத்தொகை குறையும் :-P

கதை சூப்பர் நகைச்சுவை, சிவா! விட்டா சிறுகதை தொகுப்பே போடுற மாதிரி சரக்கு வைச்சிருக்கீங்ளே.

August 16, 2007 7:26 AM  
Anonymous தலைப்பு புரியாதவன். said...

கத பரவாயில்லாம இருக்கு. ஆனாக்க தலைப்புல ADULT னு போட்டிருக்கே அப்டின்னா இன்னா?

August 16, 2007 7:52 AM  
Blogger சிவபாலன் said...

உதய்

புரியவில்லையா???!!!??!! Ha Ha Ha..


நல்லதுதான்..

August 16, 2007 8:20 AM  
Blogger சிவபாலன் said...

GK,

// மக்கள் தொகை கட்டுக்கடங்காமல் போனாதற்கு வெற்றிலை விவசாயம் தான் காரணமா ? //


அதுவும் காரணம்..Ha Ha Ha..

August 16, 2007 8:38 AM  
Blogger சிவபாலன் said...

அனானி (விடாது கருப்பு),


மிக்க நன்றி!

August 16, 2007 8:40 AM  
Blogger சிவபாலன் said...

துளசி மேடம்,

சீனாவை விரைவில் முந்திவிடுவோம் போல் இருக்கு.. (-:


Ha Ha Ha..

August 16, 2007 8:42 AM  
Blogger சிவபாலன் said...

வவ்வால்,

//நாக்கு சிவக்க சுண்ணாம்பு வேணும் ,கன்னம் சிவக்க மச்சானும் வேணுமா? //


அதே... அதே...

நன்றி!

August 16, 2007 8:43 AM  
Blogger சிவபாலன் said...

ஆனந்த லோகநாதன்,

நான் எங்கே ஐடியா கொடுத்தேன்..நீங்க வேற.. Ha Ha Ha..

மிக்க நன்றிங்க!

August 16, 2007 8:45 AM  
Blogger சிவபாலன் said...

டாக்டர் டெல்பின்,

நன்றி!

கதைதான்.. அதிலயே உங்களுக்கு சந்தேகமா? Ha Ha Ha..

August 16, 2007 8:47 AM  
Blogger சிவபாலன் said...

வித்யாசாகரன்,

உங்களுக்கு திருமனம் ஆகவில்லை என்றால் எப்படியாவது புரிந்துகொள்ளப்பாருங்கள்.. நிச்சயம் உதவும்! நாட்டுக்கு..

திருமனம் ஆகிவிட்டதென்றால்.. புரியாமலேயே போகட்டும்.. Ha Ha Ha

August 16, 2007 8:50 AM  
Blogger சிவபாலன் said...

செந்தில் அழகு பெருமாள்

சூப்பர் கமென்டுங்க!!

நன்றி!

August 16, 2007 8:52 AM  
Blogger சிவபாலன் said...

நிலவு,

மிக்க நன்றிங்க!

August 16, 2007 8:53 AM  
Blogger சிவபாலன் said...

தெகா

உங்களுக்கு குசும்பு ஜாஸ்தி! அம்மனி ஊருக்கு இன்னும் வந்து சேரலையா? அதுதான் இப்படி ரவுசு கிளப்பிட்டு இருக்கீங்க..Ha Ha Ha..

நன்றி, தெகா!

August 16, 2007 8:56 AM  
Blogger சிவபாலன் said...

அனானி,

"அப்பாவித் தலைப்பு புரியாதவன்" என பெயரை மாற்றிக் கொள்ளவும்! Ha Ha Ha..

நன்றி!

August 16, 2007 8:58 AM  
Blogger ILA(a)இளா said...

இது உண்மையான கிராமத்து வாசனை. கிராமத்துல இதுக்குன்னு ஒரு அகராதியே இருக்கு. வெற்றிலை கல்யாணம் ஆனவங்களுக்கு. புகையிலை... வேணாமே. விஷயத்தை சட்னு பட்னு சொன்ன விதம் சூப்பர். :)

August 16, 2007 9:11 AM  
Anonymous இப்பவும் தலைப்பு புரியாதவன் said...

தலைப்புல ADULT னு போட்டிருக்கு. அதுக்கும் கதைக்கும் என்ன சம்பந்தம்னு பிரியலயே.

August 16, 2007 9:14 AM  
Blogger சிவபாலன் said...

இளா

உண்மைதாங்க.. கிராமத்து ஆட்களுக்கு இந்த தாமப்த்திய இரகசியம் எழுதில் புரிந்துவிடும். இலை மறை காய் மறையாக சொல்லிருக்கிறேன். அதனால்தான் அந்த சரவணன் கதாப்பாத்திரம் சிறுவனாக காண்பித்ததுள்ளேன்.

இது போன்ற கிராமத்து வாசனை நகர வாழ்க்கையில் இல்லாமல் போனது ஒரு சோகம் தான். நகரத்தில் எல்லாமே இயந்திரமயமாகிவிட்டது. அதனால் பாட்டி தாத்தா போன்ற உறவுகள் கூட அவசரகதியில் தான் அனுகப்படுகிறது. இதனால் பல விடயங்கள் நம்க்கு தெரியாமல் போய்விடுகிறது.

பாராட்டுக்கு மிக்க நன்றி!

August 16, 2007 9:24 AM  
Blogger சிவபாலன் said...

அனானி

வயது வந்தவருக்கு மட்டும்! என்பதற்காக..

நன்றி!

August 16, 2007 9:27 AM  
Blogger ILA(a)இளா said...

இதோ எங்க ஊர் Adult அகராதி :
கல்யாணம் ஆனவங்க - வெத்தல போட்டாச்சா?
இளைஞர்கள்- பொகையிலை போட்டாச்சா?
ஆணும், பெண்ணும்- முழுச்சாப்பாடு, ஊறுகாய், அளவு சாப்பாடு.
அர்த்தம் எல்லாம் நீங்களே புரிஞ்சுக்குங்க :)

August 16, 2007 9:53 AM  
Blogger சிவபாலன் said...

இளா

சூப்பர்.. மிக்க நன்றி!

இருங்க நானும் ஒரு விசயத்தை சொல்லிடறேன்.. Ha Ha Ha..

கொஞ்ச நேரம் நிலவு வெளிச்சத்தில் கயிற்றுக் கட்டிலில் இளைப்பாறுவது..
:-)

August 16, 2007 10:02 AM  
Blogger தீரன் said...

கொட்டாப்ப் பாக்கும் கொழுந்து வெத்தலயும் போட்டா வாய் சிவக்கும் னு சொன்னது - இப்போ தான் விளங்கினது

August 16, 2007 1:24 PM  
Blogger சிவபாலன் said...

வாங்க தீரன்,

விளக்கம் தெரிந்ததா!?! மகிழ்ச்சிதான்!

நன்றி!

August 16, 2007 1:47 PM  
Blogger வெட்டிப்பயல் said...

//ILA(a)இளா said...

இதோ எங்க ஊர் Adult அகராதி :
கல்யாணம் ஆனவங்க - வெத்தல போட்டாச்சா?
இளைஞர்கள்- பொகையிலை போட்டாச்சா?
ஆணும், பெண்ணும்- முழுச்சாப்பாடு, ஊறுகாய், அளவு சாப்பாடு.
அர்த்தம் எல்லாம் நீங்களே புரிஞ்சுக்குங்க :) //

நிஜமாலுமே பிரியல :-(

இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க விவாஜி

August 16, 2007 2:58 PM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பதிவுலகில் எல்லோரும் வயது வந்தவர்கள் தானே!
புருஞ்சுக்குவாங்க!!

August 16, 2007 3:29 PM  
Anonymous Anonymous said...

கி.ராஜநாராயணன் சிறுகதை ஒன்று இதே மாதிரி வரியுடன் முடிந்திருக்கும்.

August 16, 2007 4:00 PM  
Blogger VSK said...

இந்தக்கதையில் ஒரு பிழை இருக்கு, சிபா!

உடனே சொல்லில் பிழையா, பொருளில் பிழையான்னு நக்ல்கீரன் ரேஞ்சுக்கு கிளம்பாதீங்க!

:))

அது வெத்தலை பாக்கு இல்லை.

வெத்தலை சுண்ணாம்பு!

வெத்தலை பாக்கு போடறது என்பது அடிச்சு வாயுல ரத்தம் வரவழைக்கறது.

வெத்தலையை தடவிக் கொடுத்து...

அன்பா, சுண்ணாம்பைத் தடவி....

, அப்படியே நடுவுல கிழிச்சு.....


சரி விடுங்க!


அடுத்து என்ன வருதுன்னு பாக்கலாம்!

August 16, 2007 6:22 PM  
Blogger மங்கை said...

///டாக்டர் டெல்பின்,
நன்றி!
கதைதான்.. அதிலயே உங்களுக்கு சந்தேகமா? Ha Ha Ha.. ////

டாக்டரம்மா....எனக்கு சந்தேமே இல்லை...:-)))

August 16, 2007 8:36 PM  
Blogger தஞ்சாவூரான் said...

என்ன எல்லாம் ஒரு ரேன்ச்சுக்குப் போய்ட்டுருக்கு :)

அது வியெஸ்கே சொன்ன மாதிரி வெத்தல சுண்ணாம்புதான்..

பிரியாதவங்க, கல்யாணமானவங்களா இருந்தா, அப்படியே மெய்ன்டைன் பன்னுங்க!

எங்க ஊர்ல, 'மீசைய முறுக்கிகிட்டு..வெத்தலய போட்டுக்கிட்டு' அப்டினு சொல்வாங்க!!!

August 16, 2007 9:00 PM  
Blogger somberi said...

i think parents sent the kid to Grandparent's house to have "free time" to try for the girl..why you are all talking about "vettilai-paakku"..grand parents are smart..they knew why the kid came over there

August 17, 2007 1:03 PM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

பாட்டி வீடு எவ்வளவு தூரத்துல இருக்குதுண்ணு சொல்லலியே?

August 17, 2007 1:42 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv