Tuesday, August 14, 2007

நான் எடுத்த வீடியோக்கள் - குளிர்காலம், துருவக் கரடி, விஸ்கான்சின் டெல்ஸ், பூங்கா

அமெரிக்காவில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு குறைவே இருக்காது. உண்மையில் நமக்குத்தான் நேரம் பத்தாது. இந்தியாவிலும் நிறைய இடங்கள் உண்டு. ஆனால் சென்று அடையும் நேரம் அதிகம் தேவைப் படும்.

இங்கே, நேரம் கிடைக்கும் போதெல்லாம், எங்கயாவது சென்றுவிடுவோம். இரண்டு கேம்கார்டர் (CAMCORDER)வைத்திருக்கிறோம். ஒன்று சோனி(SONY) மற்றொன்று கெனான்(CANON).

சோனியில் எடுக்கும் தரம் எப்பொழுதும் மிக நன்றாக இருக்கும். அதாவது, ஒலிகளை மிகத்துள்ளியமாக பதிவு செய்யும். எடுத்த வீடியோவை டிவியில் போட்டு பார்க்கும் போது நேரில் செல்லும் அனுபவம் ஏற்படும். ஆனால் அதுவே கேனான், அவ்வளவு துல்லியமாக இல்லை. இது என் அனுபவம்.

சரி, அப்படி எடுத்த வீடியோக்கள் என்னிடம் நிறைய உள்ளது. அதில் ஒரு சிலவற்றை இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்ற எண்ணத்துடன் இந்த இடுக்கை.


குளிர்காலம்: - "CHICAGO WINTER DELIGHTS"


இந்த வீடியோ போன வருடம் டிசம்பர் மாதம் எடுத்தது. வீடியோ எடுத்த நாளுக்கு முந்தைய இரவில் பெரிய பனிப் புயல். அதானல் அலுவலகத்திலிருந்து எனக்கு வீடு வந்து சேர சுமார் 5 மணி நேரம் ஆனது. பொதுவாக ஒரு மணி நேரம்தான் ஆகும்.

அந்தப் பனிப்புயலின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

இங்கே சென்றால் கூட "குளிர்காலம்" வீடியோ பார்க்கலாம்




அடுத்த வீடியோ துருவக் கரடி.இந்த துருவக் கரடி இருக்கும் இடம் "லிங்கன் விலங்கியல் பூங்கா." இந்த கரடியை படம் பிடிக்க வெகு நேரம் காத்திருக்க வேண்டியது ஆகிவிட்டது. அது அந்த கண்ணாடித்தொட்டியின் இன்னொரு பக்கத்தில் சென்று அங்கேயே இருந்துவிட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கே செல்ல முடியவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு வந்து காட்சி தந்தது.

கரடி எப்படி விளையாடுகிறது என்று வீடியோ பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

இங்கே சென்றும் "துருவக் கரடி" வீடியோ பார்க்கலாம்





அடுத்து விஸ்கான்சின் டெல்ஸ் (WISCONSIN DELLS). இது நான் இருக்கும் இல்லினாய்(ILLINOIS) மாகானத்திற்கு பக்கத்து மாகானமான விஸ்கான்சினில் உள்ளது. (நம்ம உதயககுமார் ஊர்)


அந்த இடத்திற்கு பெயர் டெல்ஸ். இதை தண்ணீர் விளையாட்டு இடங்களின் உலகத் தலை நகரம் என்று அழைக்கிறார்கள் "(WISCONSIN DELLS - THE WATER PARK CAPITAL OF THE WORLD)". அது உண்மையும் கூட. எவ்வளவு விதமான தண்ணீர் விளையாட்டுகள் உலகில் உள்ளதோ அவ்வளவு அங்கே கிடைக்கும். காசும் அவ்வளவு ஒன்றும் அதிகமில்லை. அதுவும் சீசன் இல்லாத காலங்களில் மிகக் குறைவு.

அங்கே படகில் சென்று சுற்றிப்பார்க்கும் வசதியும் உள்ளது. நான் படகில் செல்லும் போது எடுத்த வீடியோ தான் இங்கே கொடுத்துள்ளேன். பார்த்து இரசியுங்கள்.

இங்கே சென்றும் "விஸ்கான்சின் டெல்ஸ" வீடியோ பார்க்கலாம்







அடுத்து, சிகாகோ தாவிரவியல் பூங்கா. இந்த பூங்கா எங்க வீட்டிலிருந்து சுமார் 5 மைல் தூரத்தில் இருக்கிறது. மிக அழகாக இருக்கும். நம்முடைய ஊட்டி தாவரவியல் பூங்கா போன்றே மிக அருமையாக இருக்கும். இதைப் பற்றி ஏற்கனவே நம்ம சிறில் அலெக்ஸ் படங்களுடன் பதிவு போட்டிருக்கிறார்.

நல்ல அமைதியான சூழல். சுத்தமான காற்று, ஆனந்தமான சூழ்நிலை. இந்த "பூங்காவில்" உறுப்பினராக சுமார் இரண்டு வருடங்கள் இருந்தேன். நிறைய முறை சென்று அதன் அழகை இரசித்திருக்கிறேன். அப்படி ஒரு முறை எடுத்த வீடியோ இப்ப உங்களுக்காக பகிர்ந்துகொள்கிறேன்.

இங்கே சென்றும் "சிகாகோ தாவிரவியல் பூங்கா" வீடியோ பார்க்கலாம்






நன்றி

அன்புடன்
சிவபாலன்

10 Comments:

Blogger Udhayakumar said...

//சிகாகோ தாவிரவியல் பூங்கா//

till now i haven't visited there. Do you remember our plan for the last year thanks giving day :-)

August 14, 2007 11:18 PM  
Blogger ராஜ நடராஜன் said...

சிவபாலன் அவர்களுக்கு,
நீங்கள் சொன்னதுபோல் சோனியின் வர்ணங்கள் நன்றாகவே உள்ளது.கேனானை நான் பரிட்சித்து பார்க்கவில்லை.வீடியோவினை எப்படி எனது பதிவில் இடுவது என்று விளக்கினீர்கள் என்றால் சிலவற்றை நானும் பரிட்சித்துப் பார்க்க இயலும்.தங்கள் பதிவிலோ தனிமடலோ எதிர்பார்க்கிறேன்.

August 15, 2007 3:57 AM  
Blogger oosi said...

/*எவ்வளவு விதமான தண்ணீர் விளையாட்டுகள் உலகில் உள்ளதோ அவ்வளவு அங்கே கிடைக்கும். காசும் அவ்வளவு ஒன்றும் அதிகமில்லை. */

நிஜம்தான்...

Michigan state ல் Holland என்ற இடமும் நன்றாக இருக்கும். Michigan Beach ஒரத்தில் உள்ளது. Tulips festival பிரசித்தம்.

அதே போல் Chicago Winter Fest அருமை. December, January மாதங்கள் - இடம் : Navy Pier.

August 15, 2007 9:01 AM  
Blogger Thekkikattan|தெகா said...

சிவா,

விடீயோக்கள் நன்றாக வந்திருக்கிறது. நட்டு கேட்ட அதே கேள்விதான் எப்படி விடீயோக்களை வலை ஏத்துவது.

இன்னமும் மெதுவாக ஃப்ரேம் பை ஃப்ரேமாக மெதுவாக கேமராவை நகர்த்தினால் இன்னமும் மெறுகூட்டலாம்.

என்னிடம் கேனன் தான் உள்ளது, ஆனால் அதுவும் டிஸ்க் போட்டு எடுப்பது மாதிரி கிடையாது. No USB cable either.

August 15, 2007 9:09 AM  
Blogger வெற்றி said...

சிவபாலன்,
பகிர்வுக்கு நன்றி.

படக் காட்சிகள் மிக வேகமாக ஓடுகிறது. :-))

August 15, 2007 3:34 PM  
Blogger சிவபாலன் said...

உதய்

நீங்க ரொம்ப பிஸியா இருந்தீங்க.. இப்பவும் அப்படித்தானா?.. முடிந்தால் ஒரு பதிவர் சந்திப்புக்கு சிறில் மற்றும் நம்ம குப்புசாமி செல்லமுத்து அவர்களையும் கலந்து ஏற்பாடு செய்யலாம். நம்ம சிறில் இது சம்ந்தமாக ஏற்கனவே சில ஏற்பாடுகளை செய்து வருகிறார். உங்களை மிக விரைவில் தொடர்பு கொள்வார்..

மிக்க நன்றி!

August 16, 2007 8:05 AM  
Blogger சிவபாலன் said...

நட்டு,

மிக்க நன்றிங்க!

சோனி கொஞ்சம் விலை அதிகம் அதனால் நிச்சயம் தரம நன்றாகத்தான் இருக்கும்.

நீங்க சோனி வைத்திருக்கிறீர்கள் என்றால், கூடவே அதன் மென்பொருளும் கொடுத்திருப்பார்கள். அதை முதலில் லோட் செய்யுங்க. அப்பறம் யுஎஸ்பி கேபிள் வேண்டும்.

கேம்கார்டரில் சென்று, யுஎஸ்பி மோடு முதலில் ஆன் செய்யவேண்டும். பிறகு கேபிளை கனனியுடன் இனைக்க வேண்டும். இனைத்தவுடன், அந்த மென்பொருள் உடனே வேலை செய்ய ஆரம்பிக்கும். அந்த மெபொருளைக் கொண்டு உங்களுக்கு எப்படி தேவையோ அவ்வாறு வீடியோவை கனனியில் ஏற்றிக்கொள்ளலாம்.

முயன்று பாருங்கள். சந்தேகம் இருந்தால் கேளுங்கள்!

நன்றி!

August 16, 2007 8:11 AM  
Blogger சிவபாலன் said...

ஊசி,

தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி! இந்த டியுலிப் விழா இந்த முறை முயற்சி செய்து பார்க்கவேண்டும்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

August 16, 2007 8:13 AM  
Blogger சிவபாலன் said...

தெகா

நான் தேர்தெடுத்த முறையில் இதுமாதிரி வேகமாக ஓடும் படம் வந்துள்ளது. ஒரிஜினல் வீடியோ மெதுவாகத்தான் உள்ளது.

வீடியோ எப்படி லோடு செய்வது என நட்டு அவர்களுக்கு சொல்லியிருக்கிறேன், சந்தேகம் இருந்தால் கேளுங்கள்!

நன்றி!

August 16, 2007 8:15 AM  
Blogger சிவபாலன் said...

வெற்றி

கருத்துக்கு மிக்க நன்றி!

நான் தேர்ந்தெடுத்த வீடியோ அப்படி.. அதனால் கொஞ்சம் வேகமாக இருக்கும்.. நமக்கு எப்பவும் வேகம்தாம்.. அதனால்தான் அந்த விபத்து கூட.. Ha Ha Ha..

நன்றி!

August 16, 2007 8:18 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv