நான் இரசித்த "ஹாலிவுட் நட்சத்திரங்கள்!" (HOLLYWOOD STARS)
பொதுவாகவே ஹாலிவுட் என்றவுடன் நம் மனதில் வருவது பிரம்மாண்டம் தான். திரை அரங்கிற்கு நம்மை இழுத்து வருவது இந்த பிரம்மாண்டம் என்றாலும் படத்தில் சொல்லப்படும் பொருள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நம் அபிமான நட்சத்திரங்களும் தான். பல படங்கள் நமக்கு பிடித்த நட்சத்திரங்கள் தோன்றுவதாலேயே படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது என்றால் மிகையாகாது.
அந்த வகையில் நான் இரசித்த ஹாலிவுட் நட்சத்திரங்களை பட்டியிலிடும் முயற்சிதான் இந்த இடுக்கை.
முதலில் நம்ம அம்மினிகளை பட்டியலிட்டு விடலாம்.
ஜீலியா ராபர்ட்ஸ் (Julia Roberts):
இந்த பெயரைக் கேட்டாலே எதோ மந்திரிச்சு விட்டது போல் உள்ளது. மிக நல்ல நடிகை. மிக அழகாக பாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருப்பார். உண்மையில் இவரை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இவர் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது என்றால்
1. எரின் ப்ராக்விச் (Erin Brockovich)
2. ரன் எவே பிரைட் (Runaway Bride)
3. நாட்டிங் கில் (Notting Hill)
4. மை பெஸ்ட் பெரன்ட்ஸ் வெட்டிங் (My Best Friend's Wedding)
ஏஞ்சலினா ஜீலி (Angelina Jolie)
வாவ். அவ்வளவு தாங்க வார்த்தையே வருது. ஒவ்வொரு படமும் கலக்கியிருப்பாங்க. அதுவும் சன்டை காட்சிகளில் அவர் தோன்றும் போது இன்னும் அழகு கூடிவிடும். கண்கள் பார்த்துக்கொண்டே இருக்கலாம். நான் இரசித்த சில படங்கள்
1. லாரா கிராஃப்ட் டோம் ரெய்டர்- கிரடில் ஆப் லைப் (Lara Croft Tomb Raider: The Cradle of Life)
2. லாரா கிராஃப்ட் டோம் ரெய்டர் (Lara Croft: Tomb Raider)
3. மிஸ்டர் & மிஸ்ஸஸ் ஸிமித் (Mr. & Mrs. Smith)
4. லைப் ஆர் சம்திங் லைக்தட் (Life or Something Like It)
கேத்ரின் ஷீட்டா ஜோன்ஸ் (Catherine Zeta-Jones):
அழகாய் இருப்பாங்க. எனக்கு மிகவும் பிடிக்கும். தனக்கு என்று ஒரு பானி வைத்துள்ள நடிகை. முகம் பாவனைகளே பல விசயங்களைப் பேசும்.
இரசித்த படங்கள்
1. தெ டெர்மினல் (The Terminal)
2. இன்டாலரபல் குரியால்டி. (Intolerable Cruelty) (கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்...செம கல்க்கல்..)
3. என்ட்ரப்மென்ட் (Entrapment)
4. மாஸ்க் ஆப் சோரோ (The Mask of Zorro)
ட்ரூவ் பெரிமோர் (Drew Barrymore)
நல்ல நடிகை. அழகிய முகம். இவர் நடித்த படங்களில் நான் இரசித்தது
1. 50 ஃபர்ஸ்ட் டேட்ஸ்(50 First Dates). (ஏடம் சேன்டலருடன் சேர்ந்து அட்டகாடமாக நடித்திருப்பாங்க. மனநோயாளிப் பாத்திரம். ஆன மிக நேர்த்தியா செய்திருப்பாங்க.)
2. டூப்ளக்ஸ் (Duplex). (வாவ். மிக ஜாலியான படம். பென் ஸ்டிலருடன் ஜோடி சேர்ந்து நடித்த படம். அமெரிக்க நடுத்தர வாழ்க்கையை படம் பிடித்து காட்டியிருப்பாங்க..நல்ல படம்)
சேன்ட்ரா புல்லாக் (Sandra Bullock).
இவங்க சிரிப்புதான் அழகு. துறு துறுவென நடிப்பாங்க. இவர் நடித்த பல படங்கள் எனக்கு பிடிக்கும். அவற்றில் சில
1. மிஸ் காஞ்சினியால்டி (Miss Congeniality)
2. ஸ்பீட் (Speed)
3. பிரிமோனிசன் (Premonition)
4. க்கிரேஷ் (Crash)
5. டூ வீக்ஸ் நோட்டிஸ் (Two Weeks Notice)
சரி, இப்ப நம்ம ஹிரோக்களைப் பார்க்கலாம்.
டாம் ஹான்ஸ் (Tom Hanks).
இவரைப் பற்றி அறிமுகமே தேவை இல்லை. எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நல்ல நடிகர். இவரிடம் எனக்கு பிடித்தது அவருடைய கண்கள். பேசும் கண்கள் என்று கூட சொல்லலாம். அவர் நடித்த படங்களில்
1. தி டெர்மினல். (The Terminal)
2. கேஸ்ட வே (Cast Away)
3. தி டா வின்ஸி கோட் (The Da Vinci Code)
ஏடம் சான்ட்லர் (Adam Sandler)
இவர் நம்ம பேவரட். எனக்கு இவரை மிகவும் பிடிக்கும். இவருடைய எல்லாப் படங்களுமே எனக்குப் பிடிக்கும். நம்ம ஊர் ரஜினி மாதிரி. அவர் நடித்து எனக்கு ரொம்ப பிடித்த படங்கள்.
1. எங்கர் மேனஜ்மென்ட் (Anger Management). (கட்டாயம் பார்க்கவேண்டிய படம்)
2. கிளிக் (Click)
3. 50 ஃபர்ஸ்ட் டேட்ஸ்(50 First Dates).
4. மிஸ்டர். டீட்ஸ் (Mr. Deeds)
5. ஸ்பேங்லிஸ் (Spanglish)
6. பிக் டேடி (Big Daddy)
7. ஹப்பி கில்மோர் (Happy Gilmore) - (ஜாலியான படம்)
ராபின் வில்லியம்ஸ் (Robin Williams)
இவர் நடிப்புக்கு ஈடு இனையே இல்லை என சொல்லலாம். அவ்வளவு நேர்த்தியா ஒவ்வொரு பாத்திரத்தையும் செய்வார். நிச்சயம் இவருடைய நடிப்பை யாரும் பிடிக்கவில்லை என சொல்லவே மாட்டாங்க.. உண்மையில் சில வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது இவருடைய நடிப்பை.. வாவ்..சிம்பிளி சூப்பர்..
அவர் நடித்த படங்களில் எனக்கு பிடித்தது:
1. மிஸ்ஸஸ் டவுட் பயர் (Mrs. Doubtfire). ( நம்ம ஊர் அவ்வை சன்முகி)
2. ஆர்.வி. (R.V.)
3. நைட் அட் தி மியூசியம் (Night at the Museum)
4. தி ஃபைநல் கட் (The Final Cut)
5.ஒன் ஹவர் போட்டோ (One Hour Photo)(தயவு செய்து பாருங்க!)..
இவருடைய படங்கள் நிறைய இருக்கு.. மிகச் சுருக்கமாக கொடுத்திருக்கிறேன்.
கெவின் கேலைன் (Kevin Kline)
சிறந்த நடிகர். மிக நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.. அவற்றில் சில ..
1. லைஃப் ஏஸ் எ ஹவுஸ் (Life as a House) (தயவு செய்து பாருங்க)
2. தி எம்பரர்ஸ் கிளப் (The Emperor's Club)-- (A Clean Film..Pls See this movie)
பென் ஸ்டில்லர் (Ben Stiller):
ரொம்ப ரொம்ப ஜாலியான நடிகர். அப்பாவியாய் நடிப்பதில் இவரை விட்டால் ஆளே இல்லை என சொல்லலாம். இவர் நடித்த படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை என சொல்ல முடியாது. நல்ல நடிகர். அவர் நடித்த படங்கள் சில..
1. நைட் அட் தி மீயூசியம் (Night at the Museum) (இது கட்டாயம் பார்க்க வேண்டிய படம்)
2. மீட் தி ஃபாக்கர்ஸ் (Meet the Fockers) (கொஞ்சம் ஒரு மாதிரியான படம்தான்..ஆனாலும் ரொம்ப ஜாலியாக இருக்கும்)
3. மீட் தி ஃபேரன்ட்ஸ். (Meet the Parents)
4. டூப்ளக்ஸ் (Duplex) (கட்டாயம் பாருங்கள்)
நிக்கோலஸ் கேஜ் (Nicolas Cage).
இவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல நடிகர். எல்லா பாத்திரங்களையும் திறம்பட செய்யக்கூடியவர். அவர் நடித்த படங்களில் எனக்கு பிடித்தது.
1. லார்ட் ஆப் வார் (Lord of War). ( தயவு செய்து பாருங்க.. உலகில் நடக்கும் அத்தனை போர்களும் ஏன் நடக்கிறது என்பதை மிக அழகாக படம்பிடித்திருப்பார்கள். கடைசி வரிதான் படத்தின் பன்ஞ்.. அது என்ன வென்றால்.. உலகின் போர்களின் கடவுள்.. அமெரிக்க ஜனாதிபதி என்று முடிக்கும் போது ..சூப்பர் என கை தட்ட சொல்லும்)
2. தி வெதர் மேன் (The Weather Man)
3. கோஸ்ட் ரைடர் (Ghost Rider)
4. தி ஃபேமிளி மேன் (The Family Man) ( கட்டாயம் பாருங்க.. அருமையான திரைக்கதை)
5. அடாஃப்ஷன் (Adaptation)

24 Comments:
நிகலஸ் கேஜ்
Face Off ஐ விட்டு விட்டீர்களே!
என்னை மறந்து பார்த்த படம்.
வடுவூர் குமார்,
சரியாக சொன்னீங்க.. நல்ல படம்.. மறந்துவிட்டேன்..
நிறைய படங்களை வரிசைப் படுத்துமால் விட்டிருக்கிறேன் என்பதை நான் கடைசியா படிக்கும் போது கூட உணர்தேன்..
பதிவு ரொம்ப முன்னாடியே ரெடி பண்ணியதில் நிறைய விடுபட்டவை.
சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!
kevin kline
1. A fish called Wanda
2. Soap Dish
இவர் நடிச்சதில இரண்டு கலக்கல்
நகைச்சுவைப் படங்கள்!
நீங்க சொல்ற இரண்டு படமும் பார்க்கல,
பார்க்கிறேன்.
அனானி
நீங்க சொன்ன படம் நான் பாத்தது இல்லை... விடுங்க டிவிடி எடுத்து பார்த்துடுவோம்..
நான் சொன்ன இரண்டு படங்களும் பாருங்கள்.. இவரின் நடிப்பின் இன்னொரு பரிமானம் இரசிக்கலாம்.. நல்ல நடிகர்..
நன்றி!
ட்ரூவ் பெரிமோர் நம்ம ஜோ மாதிரியே இருப்பாங்க.E.T படத்துல இவங்க ஒரு சூச்சுவா வருவாங்க.
நல்ல தொகுப்புங்க சிவபாலன்..
ராபின் வில்லியம்ஸினுடைய Patch Adams பார்த்திருக்கிறீர்களா?? முன்னாபாய் M.B.B.S படமே அதைத் தழுவி எடுக்கப் பட்டதுதான்.
சிவபாலன் அய்யா! என்ன நம்ம Seane Connery பற்றி ஒண்ணயுமே காணோம் எனக்கு பிடித்த Bond இவரும், Pears Branson னும் தான்.
என்னோட All Time Favourite "Russel Crow" நீங்க கண்டிப்பா பார்க்க வேண்டிய படங்கள்
1. A Beatiful Mind
2. Cindrella Man
3. Master and Commander
அதோட Hollywood Superstar Tom cruise பற்றி பேசவே இல்ல.
Jonn Trivolta வோட வில்லத்தனம் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
அப்புறம் Halle Berry அம்மையார் எனக்கு பிடிக்கும்.
எழுத எழுத வந்துக்கிட்டே இருக்கு....
சாரி முடிச்சிக்கறேன்.
சிவபாலன்!
ஏன் அற்புதமான வில்லன் நடிகர்களை விட்டு விட்டீர்கள்.
ஜாலிஜம்பர்
வாங்க! ஆமாங்க ட்ரூவ் பெரிமோர் நல்ல நடிகை..
நீங்க 50 First Dates மற்றும் Duplex பார்த்திருக்கீங்களா? இல்லை என்றால் பாருங்க.. ரொம்ப ரசிப்பீங்க..
நன்றி!
நந்தா
பார்த்தது இல்லை.. கன்டிப்பா பார்கிறேன்.. நன்றி!
One Hour Photo பாருங்க.. முக்கியமா அதுல Deleted Scenes பாருங்க.. அதாவது அந்த போட்டோ கடையில் இருந்து வெளியேறும் காட்சி.. டைரக்டர்க்கு எப்படி எல்லாம் வேணும் என்று கருதி அவரே பல விதங்களில் செய்து காண்பிப்பார்.. வாவ்.. சூப்பர்..
பாருங்க...நல்லா இருக்கும்..
நன்றி!
அனானி (திகிலன்)
நீங்க சொன்ன மாதிரி எனக்கு இந்த Bond படங்களில் ஏனோ அவ்வளவு ஆர்வம் இல்லை. இப்பக் கூட Bond (Daniel Craig ... James Bond) நடித்து வெளியான Casino Royale பார்த்தேன். இரசித்தேன்.
ஆனால் ஏனோ மனதில் ஒட்டவில்லை.. அதுபோல் கிட்டதட்ட எல்லா Bond படங்களும் அப்படித்தான்.
நீங்க சொன்ன மாதிரி Seane Connery & Pears Branson இருவரும் சூப்பர் நடிகர்கள்.
நீங்க சொன்ன படங்களை நிச்சயம் பார்க்கிறேன். பரிந்துரைக்கு நன்றி!
சூப்பர் ஸ்டார் Tom cruise பற்றி சொல்லனும் என்றால், அவர் நடித்த சில படக்கள் பார்த்தேன். அதில் ரெயின் மேன் (RAIN MAN) ஓரளவு நல்லாயிருக்கும்..
ரொம்ப யூத் புல்லா இருக்கிறதால் ஏனோ மனதில் ஒட்ட மறுக்கிறார். மற்றபடி அவர் படங்கள் நல்ல படங்கள் தான்.
பகிர்வுக்கு மிக்க நன்றி
யோகன் அண்ணா
நீங்க சொன்னது போல் வில்லன் நடிகர்களை தொடாமல் விட்டுவிட்டேன். பிறகு ஒரு இடுக்கையில் சேர்க்க முயற்சிக்கிறேன்.
மிக்க நன்றி!
என்ன சார், Al Pacino, Dustin Hoffman, Denzel Washington, Morgan Freeman மாதிரி ஜாம்பவான்களை உட்டுட்டீங்களே !!!!
அப்புறமா இந்த "Hotel Rwanda" புகழ் Don Cheadle, "Ray" புகழ் Jamie Foxx .... ?
அதுமட்டுமில்லாம எங்க தங்கத்தலைவி Meg Ryan-ஐ சொல்லாம விட்ட ஒங்கள என்ன பண்ணா தகும் ?
அன்புடன்
முத்து.
பி.கு. சட்டுன்னு நினைவுல மின்னின பெயர்கள் இவை.
டாம் ஹான்ஸ் (Tom Hanks).
//
Saving Private Rayan என்ன விட்டுப்போச்சி?
எல்லோரும் என்ன என்னமோ சொல்றீங்க...எனக்குத்தான் ஒண்ணும் புரியல.ஆனா அம்மணிகள மாத்திரம் அங்க இங்கன்னு எங்கோ பார்த்த மாதிரி தெரியுது.
நண்பரே,
டாம் ஹேன்க்ஸ் நடித்த "The Green Mile" படம் தவர விடாதீர்கள். ஒரு நல்ல படம். மனித உறவுகளை பற்றி அழகாக் சொன்ன ஒரு படம்.
ஒரே ஒரு படத்திலத்தான் நடிச்சிருந்தாலும்... எனக்கு ஆல் டைம் ஃபேவரைட் "மோனிகா லிவிங்ஸ்கி" தான் பிடிக்கும் :D
சரி, இங்க யாராவது "ட்டாம் ஹேங்ஸ்" நடிச்சு வெளிவந்த ஒரு டிராமாப் படம் Forrest Gump பார்த்திருக்கீங்களா... அப்புக்களா, அசத்தல் ஆக்டிங் விட்டிருக்கும் நம்ம ஹாலிவுட் கமல் :-))
அண்ணாத்தே...
ஜேக் நிக்கல்ஸன்,மேட் டெமான்,ஜூட் ஃபாஸ்டர் எல்லாம் லிஸ்டிலே இல்லையே???
அண்ணே அந்த 50பர்ஸ்ட் டேட்ஸ் அம்மணி செம அழகு. :)))
அந்த படம் அதவிட அழகு.
காதல்ன்ற மொக்கையான சப்ஜெக்ட்ல ஹாலிவுட்காரனால மட்டும்தான் இப்படி படத்த எடுக்க முடியும்.
கொறஞ்சது பத்து முறை பாத்திருப்பேன்.
என்ன கொடுமை சிவபாலன், நாட்டிங்ஹாம் ஹில், ரன்னவே பிரைட் என்று ஒருத்த அலைவரிசையில் நிற்கிறீர்கள். பாலபாரதி போடுவதை போல
ரீப்பீட்டேய்
forrest gump மற்றும் the green mile சூப்பர் படங்கள்.
caddyshack(rodney dangerfield), there is something about mary, dirty joe போன்ற படங்களும் நல்லாருக்கும்.
my cousin winny பத்தி பிரபு ராஜதுரை கொஞ்ச நாளைக்கு முன்னாடி எழுதியிருந்தார்.
டாம் குரூஸ், கிளிண்ட் ஈஸ்ட்வுட், கிரி கிரி பெக், ஸ்டீவ் மக்குயீன், டஸ்டின் ஹோப்மேன், ஹாரிசன் போர்ட் போன்ற இன்னும் சிலரை விட்டுவிட்டீர்களே.
Nicolous cage in city of angel,ennachu??
russel crow in gladiator??
mel gibson in brave heart???
tom hanks in the big paatheengala???namma sj suriya da new...
Post a Comment
<< Home