இவர் தான் உண்மையான தலைவர்
தொண்டமுத்தூர், செப்.11- : கோவை மாவட்டம், தென்னம்மநல்லூர் ஊராட்சியின் தலைவர் சிவசாமி. தி.மு.க.வைச் சேர்ந்தவர். பி.எஸ்.சி. பி.எட் படித்தவர். ஞாயிறுதோறும் இவர் தனது நண்பர்களுடன் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிக ளில் உள்ள பொதுக்கழிப்பிடங்களைச் சுத்தம் செய்யும் பணியை மேற் கொண்டு வருகின்றனர்.
கழிப்பிடம் செல்லும் பாதையில் உள்ள முட்புதர்களை அகற்றுதல், வெள்ளை அடித்தல், சுத்தம், சுகாதாரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
தென்னம்மநல்லூர் காந்தி காலனியிலுள்ள பொதுக்கழிப்பிடத்தைச் சுற்றியுள்ள புல்செடிகளை பொதுமக்களுடன் சேர்ந்து அகற்றுகிறார் ஊராட்சி தலைவர் சிவசாமி.
மூன்று வாரங்களாக ஞாயிறுதோறும் கழிப்பிடங்களைச் சுத்தம் செ ய்யும் பணியை தொடர்ந்து வருகிறார். ஊராட்சி பகுதியில் தனி நபர் கழிப்பிடம் அமைக்க பொது மக்களை வலியுறுத்துகிறார்.
ஊராட்சி தலைவரே கழிப்பிடத்தைச் சுத்தம் செய்வது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் மேலோங்கும். ஆண்களே சுத்தம் செய்வதால் கழிப்பிடத்தை பெண்கள் முறையாக பயன்படுத்துவர். கழிப்பிடம் மட்டுமின்றி ரோடு, சாக்கடை போன்றவையும் சுத்தம் செய்யும் பணியை யும் நானே முன்னின்று மேற்கொள்வேன். அனைத்து தரப்பு மக்களுக்கும் சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும், என்று ஊராட்சி தலைவர் சிவசாமி நம்பிக்கை தெரிவிக்கிறார்.
- நன்றி - தமிழ் முரசு, நாள் : 11-09-2007.
18 Comments:
Good Example :)
We need such persons in politics.
அட, நல்லாருக்கே மேட்டரு.
படிச்சவங்க பதவிக்கு வந்தா சில நன்மை வந்து சேரும்.
;)
நல்ல உதாரணம்.
குழந்தைகளுக்கு நாம் ஏதாவது புதிதாக ஒரு நல்ல பழக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டுமென்றால் அவர்களிடம் விளக்கிக்கொண்டும் கத்திக்கொண்டும் இருப்பதைவிட, ஏதும் சொல்லாமலேயே அவர்கள் கண்பட பல முறை அந்த செயல்களை செய்தால், குழந்தைகள் அதை 'கப்'என பிடித்துக்கொள்ளும்.
அதைப்போலவே இதுவும்.
படிப்பு வேறு, பதவி வேறு, சேவை மனப்பான்மை வேறு என்பதை நமக்கு அழகாக புரியவைக்கிறார்.
மேலும் பெரிய பதவிகள் அடைந்து மாநில அளவில் இது போன்ற சேவைகள் பல செய்வார் என நம்பி வாழ்த்துவோம்.
நன்றி.
இவரது பணிக்கும் படத்துக்கும் இன்னும் ஊடகத்தின் வெளிச்சம் கிட்டுமாயின் நன்றாயிருக்கும்.
அரசியல் சாக்கடைகளை சுத்தபடுத்த இது போன்ற செயல்வீரர்கள் அவசியம்.
பாராட்டுக்குரியவர்.
சிவபாலன்,
தமிழ் நாட்டுல மொத்தம் ,
மாநகராட்சிங்க -6,
நகராட்சிங்க - 102
நகரப்பஞ்சாயாத்துங்க - 609
மாவட்ட பஞ்சாயத்துங்க - 29,
பஞ்சாயத்து ஒன்றியங்கள் - 384
கிராம பஞ்சாயத்துகள்- 12609
இதில் வார்டு கவுன்சிலர்கள் எல்லாம் சேர்த்து மொத்தமா 1, 17,966 ஊராட்சி பிரதிநிதிகள் இருக்காங்க , ஆனால் எத்தனை பேரு உண்மைல மக்களுக்கு சேவை செய்றாங்க! ஏன் இவங்க எல்லாம் இப்படி இருக்காங்கனு கேள்வி கேட்டா பதிலே வரமாட்டங்குது, ஆனாலும் கேள்வி கேட்கிறத மட்டும் நிறுத்தவே கூடாது!
இத்தனை பேரில் சிவசாமினு ஒரே ஒருத்தர் மட்டும் வித்தியாசமா இருக்கிறார்னா உண்மைல சந்தோஷமான செய்தி தான்.அவரைப்போல எல்லாரும் மக்கள் பணிக்கு முன்னுறுமை கொடுத்தா இந்தியா வல்லரசு ஆகுதோ இல்லையோ நல்லரசாக ஆகிவிடும்!
//படிச்சவங்க பதவிக்கு வந்தா சில நன்மை வந்து சேரும்//
:))
kadavule
//இவர் தனது நண்பர்களுடன் //
நாலு இளவட்டங்கள் ஒண்ணா சேந்தா தண்ணி அடிச்சிட்டோ, சினிமா கதை பேசியோ திரியும் காலத்தில் இப்படியும் ஒரு நல்ல நண்பர் கூட்டம். வாழ்த்துக்கள், விரைவில் ஒரு மாதிரி கிராமத்தை உருவாக்குவதற்கு.
சிவசாமி உங்களின் உற்சாகமும், இந்த மனோ பாங்கும் என்றென்றும் நிலைத்து நிற்க வேண்டிக்கொள்கிறேன்.
வவ்ஸ், என்றைக்குமே ஆயிரத்தில் ஒருவனாக கோவிந்தாப் போடுவது எளிது, தனிமையில் போடத்தான் மிக்க நம்பிக்கையும், விடா மனதும் வேண்டும் அதுவே நல்ல பலனையும் ஈட்டுகிறது என்பதற்கு சிவசாமி ஓர் நல்ல உதாரணம்.
வாழ்த்தி வணங்குகிறேன் சிவசாமியை!
சிவ்சாமியை முன்னுதாரணமாக கொண்டு பிற கட்சிக்காரர்கள் - பொதுச்சேவையில் ஈடுபடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு -ஏமாற்றத்தில்தான் முடியும்.
தமிழகத்தில் உள்ள
மாநகராட்சி, நகராட்சி, நகரப்பஞ்சாயாத்து, மாவட்ட பஞ்சாயத்து,பஞ்சாயத்து ஒன்றியங்கள்,
மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள தி.மு.க.வை சார்ந்த
வார்டு கவுன்சிலர்கள் மற்றும் ஊராட்சி பிரதிநிதிகளாவது, தனது கட்சிக்காரனை -முன்னுதாரணமாக கொண்டு சேவை செய்ய முன்வரவேண்டும்.
அனானி-1, அனானி - 2,
கருத்துக்கு நன்றி!
சர்வேசன்,
சமுதாய அக்கறை உள்ளவர்கள் வரவேண்டும்.
அதுவும் இவர்கள் ஞாயிற்றுக் கிழமைகளில் தான் சேவை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துக்கு நன்றி!
மாசிலா
கருத்துக்கு நன்றி!
நட்டு, திகிலன் (அனானி),
கருத்துக்கு நன்றி!
வவ்வால்,
//கேள்வி கேட்கிறத மட்டும் நிறுத்தவே கூடாது!//
மிகச் சரி.
கருத்துக்கு நன்றி!
அனானி, புபட்டியன்,
கருத்துக்கு நன்றி!
தெகா, பிறைநதிபுரத்தான்,
கருத்துக்கு நன்றி!
Post a Comment
<< Home