Thursday, August 30, 2007

தினமலர் - தமிழ் முரசு - மாறுபடும் கோணம்



நன்றி : தமிழ் முரசு

-----------------------------------------





நன்றி : தினமலர்

---------------
சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் அழியக்கூடாது என்பதற்காகவும் நடத்தப்படும் நிகழ்வாகவே நான் பார்க்கிறேன். தமிழ் தேவாரம் பாடி இது போன்று குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) செய்யக் கூடாது என சென்னை உயர் நீதி மன்றம் தடை விதித்திருப்பது இங்கே குறிப்பிடடத் தககது.

தினமலர் தன் வாசகர்கள் யாரெனறு அறிந்து அவர்களுக்கு ஏற்றவாறு செய்தி வெளியிடுகிறது. தமிழ்முரசும் அவ்வாறே, இங்கே பத்திரிக்கைகளை குறை சொல்வது ஒரு புறம் இருந்தாலும் சமுதாய அமைப்பு மீதுதான் அதிகம் குற்றம் சாட்டவேண்டியுள்ளது.


உங்கள் கருத்தை சொல்லுங்கள்..

38 Comments:

Blogger Victor Suresh said...

ஒரு படம் ஆயிரம் வார்த்தைகளைப் பேசலாம். உங்களது போன்ற கூரிய பார்வை இருந்தால் இரு படங்களுக்கிடையேயான வேறுபாடுகள் நூறாயிரம் வார்த்தைகளைப் பேசலாம். நல்ல பங்களிப்பு. நன்றி.

http://thabaal.blogspot.com/

August 30, 2007 8:47 AM  
Blogger சிவபாலன் said...

ஏவிஎஸ்

உங்கள் கருத்துக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி!

அடுத்த நூற்றாண்டிலாவது இந்நிலை மாறுமா?

August 30, 2007 9:05 AM  
Blogger கோவி.கண்ணன் said...

முதல்படம் கோவில் பக்தர்களுக்காக, அவர்களின் வேண்டுதல் தெரிகிறது.

இரண்டாவது படம் கோவிலில் ஆண்டவனுக்கு அருகில் யார் செல்ல முடியும் என்று சொல்லுது.

என்னோட வேலை முடிந்துவிட்டது !
:))

August 30, 2007 9:10 AM  
Blogger மாசிலா said...

இலட்சம் சாதாரண பக்தர்கள் ஒரு ஆதிக்க தனி மனிதனுக்கு சமம்.

சரீங்களா?

தனிமனித வழிபாடேலேயேதான் இந்த நாடே குட்டிச்சுவராக கிடக்கிறது.

விரைவில் மாற்றம் வரும்.

நன்றி.

August 30, 2007 9:22 AM  
Blogger சிவபாலன் said...

ஜிகே,

சமுதாய நிலையைத் தான் எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். ஏற்றுக் கொள்ளத்தக்கதே.

நன்றி!

August 30, 2007 10:04 AM  
Blogger சிவபாலன் said...

மாசிலா

ஓரளவுக்கு சரியாகவே சொல்லிவிட்டீர்கள்..

மாற்றம வரட்டும்.. வந்தால் நல்லது..

கருத்துக்கு நன்றி!

August 30, 2007 10:05 AM  
Blogger Thamizhan said...

மூன்று விழுக்காடு மீதி அனைவரையும் புரியாத மந்திரத்தாலும்,தமிழ் தெரியாத தமிழ்க் கடவுள் முருகன் பெயராலும் கழட்ட முடியாத விலங்காலும் அடிமைப் படுத்தியுள்ளதை அப்பட்டமாக விளக்கியுள்ளீர்கள்.

அந்த மூன்று விழுக்காட்டையும் அவர்கள் பத்திரிக்கைகளையும் "அன்புடன்"ஆதரிப்போர் அடிமைத் தமிழர்கள் தாம்!

August 30, 2007 10:27 AM  
Blogger Balaji Chitra Ganesan said...

தினமலரில் மக்கள் தரிசிக்கும் புகைப்படம் இங்கே.

இந்த பதிவு சிவபாலன் செய்யும் சாதி 'அரசியல்' என்பதில் சந்தேமில்லை!

கோவில் கும்பாபிசேகம் பற்றிய செய்தியில் கலசத்தைக் காட்டாமல் வேறு எதைக் காட்டுவார்கள்? அத்தனை ஆயிரம் மக்கள் எதை ஆவளோடு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்?

இந்தப் பதிவு மேலே அமர்ந்திருக்கும் பாடகர் சீர்காழி (பெயர் ஞாபகமில்லை) யின் அடக்கமின்மை, பணம், செல்வாக்குள்ளவர்கள் மற்றவரை எவ்வாறு புறந்தள்ளுகிறார்கள் என்பதை வேண்டுமானால் தெரிவிக்கிறது.

மற்றபடி தினமலர், மூன்று சதவீதம் பேச்சு எல்லாம் சிவபாலன் மற்றும் பிறரின் சாதி வெறியையே காட்டுகிறது.

August 30, 2007 10:58 AM  
Anonymous Anonymous said...

sivabalan...
please write responsibly...

August 30, 2007 11:08 AM  
Blogger சிவபாலன் said...

பாலாஜி

ரொம்ப உணர்ச்சிவசப்பாடாதீங்க..

மேலே புனித நீர் ஊற்றுபவர் உயர்சாதியினராகத்தான் இருக்க வேண்டும் என்ற சமுதாய அமைப்பைத் தான் கேள்வி கேட்கிறேன்,

தினமலர் என்ற பத்திரிக்கை இந்த சமுதாய சீர்கேட்டில் ஒரு மிகச் சிறிய பங்கே.. இதன் பெரும் பங்கு நம்மிடம் இருக்கிறது.

அதற்கான மாற்றத்தை தான் நான் எதிர்பார்க்கிறேன்.

கருத்துக்கு நன்றி!

August 30, 2007 11:12 AM  
Blogger சிவபாலன் said...

அனானி

நீங்களும் உணர்ச்சிவசப்பட்டுடீங்க..

இது வெறும் தினமலரை தாக்க கொடுத்த இடுக்கை அல்ல..

அப்படி என்றால் நிறையப் பதிவு போடலாம்.

அது என் நோக்கமில்லை.

தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்!

கருத்துக்கு நன்றி!

August 30, 2007 11:14 AM  
Blogger சிவபாலன் said...

இது போல் மக்கள் கூட்டம் அடங்கிய படம் தினமலரில் வரவில்லை என நான் எங்கும் சொல்லவில்லை.

அதே சமயத்தில், முதல் பக்கத்தில், தினமலரில் புனித நீர் ஊற்றும் காட்சியும், தமிழ் முரசில் மக்கள் கூட்டம் இருக்கும் காட்சியும் படமாக வெளியிடப்பட்டுள்ளது. இதைதான் அவர்களிம் பார்வையின் கோணம் மாறுபடுகிறது என தலைப்பை வைத்தேன்.

இன்னும் விளக்கவேண்டுமா?

அது சரிங்க.. இந்த ஏற்றத்தாழ்வுக்கு இந்து மதம் என்ன தீர்வு சொல்லப் போகிறது எனபதை அறிய ஆவல்..

அதற்குத்தான் இந்த இடுக்கை.. இது என் பார்வை... மற்றவர்கல் கோணம் மாறலாம்.. அதையும் வரவேற்கிறேன்.

August 30, 2007 11:22 AM  
Anonymous Anonymous said...

பூணூல் போட்டிருப்பவர் எலலாம் பார்ப்பனர் என்று பொருளில்லை.
அது சிவாச்சாரியார்.

August 30, 2007 11:29 AM  
Blogger சிவபாலன் said...

அனானி

தகவலுக்கு நன்றி!

அவர் எந்த சாதி என்பதைவிட, சமுதாயத்தில் உயர்சாதியா என்பதே கேள்வி? அப்படி ஆனால், இந்த சமுதாயத்த சீர்கேட்டை எவ்வாறு சரிசெய்யலாம்?

August 30, 2007 11:32 AM  
Blogger சிவபாலன் said...

தமிழன்

கருத்துக்கு நன்றி!

மாற்றம் வரவேண்டும் என்பதே என் எண்ணம்.

August 30, 2007 11:43 AM  
Blogger ? said...

குடமுழுக்கு நடைபெறுவதைப் பற்றி செய்தி படிப்பவர் குடமுழுக்கை காண விரும்புவாரா இல்லை பக்தர்களை காண விரும்புவாரா?
நீங்கள் சமுதாய சீர்கேட்டை பற்றி பதிவுபோட விரும்பினால் நேரடியாக போடலாம். அதைவிடுத்து தினமலர், தமிழ் முரசு, மாறுபடும் கோணம் என ஒரே மொக்கை போட வேணாமே!

August 30, 2007 3:33 PM  
Blogger சிவபாலன் said...

குடமுழுக்கின் மூலம் நடக்கும் சாதி ஏற்றத்தாழ்வைத்தான் சாடுகிறேன்.

இந்த குடமுழுக்கை வேறு யாரேனும் சமுதாயத்தில் செய்ய அனுமதி உண்டா.? அதைத் தான் சாடுகிறேன்.

புரிந்தும் புரியாது போல் மொக்கை என்பது சூப்பர்.. வாழ்க நம் மக்கள்.. வளர்க நம் சமுதாயம்.

தேவாரம் பாடி குடமுழுக்கு செய்யக்கூடாது என்ற தடையைப் பற்றி தங்கள் கருத்து?..

என்ன அதுவும் மொக்கையா? சரி..சரி.. இப்போ புரிகிறது..Ha Ha Ha..

கருத்துக்கு நன்றி

August 30, 2007 3:44 PM  
Anonymous Anonymous said...

தேவாரம் பாடி குடமுழுக்கு செய்யக்கூடாது ...This ordered by court....

If you everything is correct, lwayers can explain the rights so that court can withdraw the bar.

Here you took only one line தேவாரம் பாடி குடமுழுக்கு செய்யக்கூடாது ...That is not court ordered....

Can you give us the entire order....Do not give single word....Like difference between Dinamalar and Tamilmurasu...

Dinamani also published thew same picture as Dinamalar.

There may be difference ...Most of hindu' wants to see the Kudamulukku in picture but tamil murasu showed only the people. We really want the real activity going on....

On the above that they can show how many people came or how they prayed....

This proves that you want to ask something but used wrong example to show

MM

August 30, 2007 4:06 PM  
Anonymous Anonymous said...

முதல் பக்கத்தில், தினமலரில் புனித நீர் ஊற்றும் காட்சியும், தமிழ் முரசில் மக்கள் கூட்டம் இருக்கும் காட்சியும் படமாக வெளியிடப்பட்டுள்ளது.

Both are news approach.....

ஏற்றத்தாழ்வுக்கு இந்து மதம் என்ன தீர்வு சொல்லப் போகிறது எனபதை அறிய ஆவல்..

What is the relationship with your heading...

I can see you cruel mentallity to relate anything to anything...

If you remove your screen (you always think your thinking is always different from others), everything looks good.

Hope you know the story about Dharma and Arjuna...
Arjuna sees everyone bad and Sharma see everyones goods...This may be a story but there is punchline

Kudiyanavan...
(till I start my blog, please bear with my English)

August 30, 2007 4:17 PM  
Blogger சிவபாலன் said...

அனானி -1

கூகுள் ஆண்டவரைக் கேளுங்கள் ஏகப்பட்ட சுட்டி கிடைக்கும் தேவரா தடைப் பற்றி..

இல்லை கலசம் தான் பார்க்கவேண்டும் என்பது எண்ணம். அதை ஊற்றும் மனிதரை அல்ல. கொஞ்சம் குடமுழுக்கு சம்பந்தமான புகைப் படங்கள அடங்கிய தினமலரல்லாத பத்திரிக்கைகளையு பாருங்கள்.

நான் கேட்கும் கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லையே?

August 30, 2007 5:17 PM  
Blogger சிவபாலன் said...

அனானி - 2

என்னுடைய பார்வையில் தான தவறா?

சமுதாயம் ஏற்றத்தாழ்வில்லாமல் சரியாக இருக்கிறதா? அப்ப சரி என்னுடைய பார்வையை மாற்றிக்கொள்கிறேன்.

August 30, 2007 5:18 PM  
Blogger ? said...

வெங்காயம், நான் குடமுழுக்கே வேஸ்டுங்கறேன். அங்க தேவாரம் பாடுவாங்களோ இல்லை குத்து பாட்டு பாடுவாங்களோ.நமக்கெதுக்கு?

இங்கெல்லாம் போனதான நம்ம ஏறி மிதிப்பாங்க.வேலில போற ஓணான எடுத்து எதுக்கு வேட்டிக்குள்ள விடுவானே... அப்புறம் குத்துது குடையுதுன்னு புலம்புவானே?

August 30, 2007 6:00 PM  
Blogger ? said...

சகோதரே,

நான் சொல்ல வந்தது என்னனா....நீர் சுட்டிய தினமலரின் செய்திக்கும் சமுதாய ஏற்ற தாழ்வுக்கும் என்ன சம்மந்தம்?

தமிழ்முரசு படம்... தினமலர் படம்... சமுதாய ஏற்றதாழ்வு.... ஐயோ ஒண்ணுமே புரியலையே?

ஏதோ படத்தை பிடிக்க வேண்டியது... கீழ சம்பந்ததா சம்பந்தம் இல்லாம சமுதாய ஏற்றதாழ்வு அது இதுன்னு இரண்டு முணூ வரி எழுதினா மொக்கை பதிவுன்னு சொல்லாம வேற என்ன சொல்ல?

August 30, 2007 6:15 PM  
Blogger சிவபாலன் said...

நந்தவனத்து ஆண்டி ,

ஆமாங்க .. வெங்காயம் தான்.. என்ன செய்ய.. ஜனம் கூட்டம் கூட்டமா போகுதே..

அந்த பொண்ணான நேரத்தை எவ்வளவோ நல்லவிதமா செல்வு செய்யலாம்..

இங்கு அதைப் பற்றி பேசிவில்லை.. (நீங்க வேற குடமுழுக்கு வேஸ்ட் என்று சொன்னால் அது அவர்களின் நம்பிக்கைக்குள் செல்கிறோம் என்று எதிர்ப்பு வரமுங்க)

அங்கே நடக்கும் ஏற்றத்தாழ்வைப் பற்றித்தான் கேள்வியே!

August 30, 2007 6:18 PM  
Blogger சிவபாலன் said...

நந்தவனத்து ஆண்டி ,

எனக்கு பெரிய பெரிய இடுக்கையாக எழுதுவதில் உடன்பாடில்லை...

சொல்வந்ததை சுருக்கமாக சொல்லிவிட்டதாகவே உணர்கிறேன்..

எனினும் நீங்கள் மொக்கை என்று ஒரே குத்தாக குத்திவிட்டதால் இந்த சிறிய விளக்கம்.

1. தினமலர் - இந்துதுவா செய்திகளை தாங்கிப் பிடிக்கும். அதில் உயர்சாதியினர்தான் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று வேதம் சொல்வதாக உணர்த்தி மக்களை நம்பவும் வைத்துவிட்டனர். முருகன் தமிழ் கடவுள் என்கிறார்கள். அப்பறம் எதற்கு சம்ஸ்கிரத்தத்தில் குடமுழுக்கு.

நீங்களே உணர்ந்திருப்பீர்.. இங்கே வந்த ஒரு அனானிப் பின்னூடம், என் பார்வை சரியில்லை என்று. அந்த அளவு நாம் Immune ஆகிவிட்டோம்.

வேறு கோணத்தில் சிந்திக்க முடிவதில்லை. சிந்திப்பவனுக்கு பார்வை சரியில்லை என்ற பட்டம்.

என் அனுபவத்தை இங்கே சொல்லிவிடுகிறேன்.
மருதமலையில் இது போன்று ஒரு பெரிய குடமுழுக்கு விழா நடந்தது.

அதை இதே போல் பத்திரிக்கைகள் வெளியிட்டன.

தினதந்தியும், தினகரனும் மக்களையும், கலசத்தையும் முதல் பக்கத்தில் வெளியிட்டன. தினமலர் நான் சொல்லித்தெரிய வேண்டியதில்லை..

இது காலம் காலம் மாக இப்படித்தான் செய்தி வெளியிடுகின்றனர்.

சரி, இது எதனால், சமுதாய சூழல் அப்படித்தான் இருக்கிறது. அதைத் தான் சாடினேன்.

இதில் வெறும் தினமலரை மட்டும் குறை சொல்வது மடத்தனம். அதனால்தான் சமுதயாத்தின் மீது குற்றம் சாட்டினேன்.

எதாவது புரிஞ்சுங்களா? இல்லை என்றால் விட்டு விடுங்க... இன்னொரு நாளைக்கு பேசிக்குவோம்..

நன்றி1

August 30, 2007 6:37 PM  
Anonymous Anonymous said...

1. தினமலர் - இந்துதுவா செய்திகளை தாங்கிப் பிடிக்கும். அதில் உயர்சாதியினர்தான் குடமுழுக்கு செய்ய வேண்டும் என்று வேதம் சொல்வதாக உணர்த்தி மக்களை நம்பவும் வைத்துவிட்டனர். முருகன் தமிழ் கடவுள் என்கிறார்கள். அப்பறம் எதற்கு சம்ஸ்கிரத்தத்தில் குடமுழுக்கு.

Even after explaining that பூணூல் போட்டிருப்பவர் எலலாம் பார்ப்பனர் என்று பொருளில்லை.
அது சிவாச்சாரியார். You want to insist that the dinamalr picture shows that they are பார்ப்பனர்.

Please remove your screen from your eyes. Here your heading only targetted dinamalar point of view. Thats the activity going on.

I have a BIG question.

முருகன் தமிழ் கடவுள் என்கிறார்கள். அப்பறம் எதற்கு சம்ஸ்கிரத்தத்தில் குடமுழுக்கு.

What is the defintion of Tamil here? and do you know they did sanskirit here?

Still I didnot understand understand you answers and you asked first.....Please read and come and explain. They words shows dinamalar also dinamani published the same...You want accuse dinamalar thats why you try to justify anything....

1. Nowhere the picture shows sanskirit used 2. do you want to say the puring water on kalasam is not tamil culture. 3. There are people with பூணூல் போட்டிருப்பவர் எலலாம் பார்ப்பனர் என்று பொருளில்லை.
அது சிவாச்சாரியார்.

So Please clear your
கோண minded view

August 30, 2007 6:51 PM  
Blogger சிவபாலன் said...

அனானி

தினமலர்காரன் எந்த கருமம்மாக இருந்தாக எனக்கென்ன.. நான் பதில் கேட்கும் முக்கியமான கேள்வி.. உயர்சாதியனர்தான் குடமுழுக்கு செய்ய முடியுமா? என்பதுதான்..

அதற்கு பதில் சொல்லுங்க..

August 30, 2007 7:08 PM  
Blogger சிவபாலன் said...

கேள்விக்கு பதில் சொல்லும் அனானிப் பின்னூடம் மட்டுமே அனுமதிக்கப் படும்.. தர்கம் செய்பவர்களுக்காக அல்ல அனானி ஆஃப்சன்..

நன்றி!

August 30, 2007 7:12 PM  
Blogger TBCD said...

சிவபாலன்,

ஒரு சிறிய ரோசனை...

நீங்கள் குறிப்பிடும் போது.."சமுதாயத்தில் உயர்சாதியா"
என்று குறிப்பிடுவதை தவர்ங்கள்..

உயர் சாதி என்று ஒன்று இருந்தால் தாழ்ந்த சாதி என்று இருப்பதாகிவிடும்..

நான் ஒடுக்கப்பட்டவர்களை, தாழ்த்தப்பட்டவர் என்று சொல்லுவது போல் உயர்த்தப்பட்டவர் என்று வேண்டுமானால் சொல்லுங்கள்...

மற்றுபடி என் கண்னுக்கு தெரிந்தது..

முதல் படத்தில் பக்தியும்..
இரண்டாம் படத்தில் ஆணவமும்

August 30, 2007 8:23 PM  
Anonymous Anonymous said...

"A wise man hears one word and understands two" என்னும் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.
நன்றி
ஜகன்
தோஹா

August 31, 2007 3:15 AM  
Blogger செல்வமுத்துகுமரன் said...

சூப்பர் சிவபாலன். அதுவும் தினமலரிலும் மக்களிருக்கும் படம் வந்திருக்கிறது என்ற விளக்கத்திற்குப் பின்னும் நீங்கள் காட்டும் கொள்கைத் தெளிவு வியக்க வைக்கிறது. தொடருங்கள்.
பி.கு: நானும் உங்களை பின்பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறேன் இங்கே.

August 31, 2007 3:33 AM  
Anonymous Anonymous said...

தமிழ் முரசு - சாமியை தரிசிக்கும் பக்தர்களைக் காட்டுகிறது.

தினமலர் - பக்தர்கள் வணக்கும் சாமியை காட்டுகிறது.

நேரில் போகாமலேயெ, படம் மூலம் குடமுழுக்கை பார்த்துக்கொள்ளலாம்.

August 31, 2007 5:54 AM  
Anonymous Anonymous said...

//தினமலர்காரன் எந்த கருமம்மாக இருந்தாக எனக்கென்ன.. நான் பதில் கேட்கும் முக்கியமான கேள்வி.. உயர்சாதியனர்தான் குடமுழுக்கு செய்ய முடியுமா? என்பதுதான்..//

எங்க ஊர்ல எங்க கோவிலுக்கு பூசாரி (தாழ்த்தப்பட்டவர்)தான் குடமுழுக்கு செய்தார்.

நீ வேணும்னா உங்களுக்குன்னு ஒரு கோவில் கட்டி நீயே குடமுழுக்கு செய்துக்க.

இதுக்கு ஏன் இவ்வளவு பில்டப்பு.

August 31, 2007 6:01 AM  
Anonymous Anonymous said...

தினமலர்காரன் எந்த கருமம்மாக இருந்தாக எனக்கென்ன.. நான் பதில் கேட்கும் முக்கியமான கேள்வி.. உயர்சாதியனர்தான் குடமுழுக்கு செய்ய முடியுமா? என்பதுதான்..


Yes we can If we know the procedures and Mantras either tamil/english/sanskirit/teleugu/Hindi. Example Masaniamman temple in Pollachi. If you donot know about please ask any coimbatore people.

you didnot my answer how did your heading questioned these...

You never answer my question....

Once again I request you to remove your screen from your eyes

August 31, 2007 6:38 AM  
Blogger சிவபாலன் said...

கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி! இனி சொல்ல போகிறவர்களுக்கும் நன்றி!

August 31, 2007 7:24 AM  
Anonymous Anonymous said...

சிவபாலன், தினமலரிலும் மக்கள் போட்டோ வந்திருக்கிறது என்ற பின்னூட்டத்தோடு ஆட்டம் முடிந்து விட்டது! அதற்குப் பிறகும் 'என் கேள்விக்கென்ன பதில்' என்கிற ரீதியில் தலைப்பை விட்டுவிட்டு வாதம் செய்வதில் உண்மையின் ஒளி இல்லை. Human greatness lies in accepting the fall and rising again. You are bigger than this post. அடுத்த பதிவிற்கு அன்பான வாழ்த்துக்கள்!

August 31, 2007 7:50 AM  
Blogger சிவபாலன் said...

அனானி

என்னங்க.. தலைப்பு .. தலைப்பு.. என்று சொல்லிட்டு இருக்கீங்க.. நான் தலைப்பில் கூட சமுதாயம் என்கிற வார்த்தையை சேர்த்திட்டா உடனே பதில் கிடைக்குமா?

ஒருத்தருக்கும் தைரியமா ஆமாம், தாழ்த்தப்பட்டவனும் செய்யலாம் எனறு சொல்ல முடியவில்லை..

பதிவு நல்லா படிங்க.. சமுதாயத்தின் மீதுதான் குற்றம் சாட்டியிருக்கேன்.. அங்கே இருந்துதான் பதிலும் எதிர்பார்க்கிறேன்.

தினமலர் விசுவாசிகளிடமிருந்து அல்ல..

தங்கள் கருத்துக்கு நன்றி!

August 31, 2007 7:56 AM  
Anonymous Anonymous said...

>ஒருத்தருக்கும் தைரியமா ஆமாம், தாழ்த்தப்பட்டவனும் செய்யலாம் எனறு சொல்ல முடியவில்லை.. >

அது மாதிரி எல்லாம் சொல்ல மாட்டாங்க

எதையாவது சொல்லி பதிவைத்தான் திசை திருப்புபாங்க
பாருங்க யாராவது தலித்கூட செய்யலாம் என்று சொல்லிடப்போராங்கன்னு பயந்துவிட்டு, எதை எதையோ சொல்லி மழுப்புறாங்க

இவங்களை என்ன சொல்லறது

- குமார்

August 31, 2007 8:02 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv