Thursday, August 23, 2007

நோ கமென்ட்ஸ்....:(




35 Comments:

Blogger PRINCENRSAMA said...

நாங்க கமெண்ட் போடலாம்ல...

August 23, 2007 2:20 PM  
Blogger சிவபாலன் said...

PRINCENRSAMA,

:)

Yes, வரவேற்கிறேன். :)

August 23, 2007 2:24 PM  
Blogger சின்னப் பையன் said...

இந்த புகைப்படங்களை பார்த்து அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை...கடவுள் வந்து கேட்டாரா, இவ்வளவு செலவு செய்து கோவில் கட்டவேண்டுமென்று...300 கோடி ரூபாய்....ஒரு தொழிற்சாலையோ, கல்லூரியோ, அடிப்படை மருத்துவமனையோ - என்னன்னவோ செய்திருக்கலாமே....கடவுளே..:-(

August 23, 2007 2:25 PM  
Blogger PRINCENRSAMA said...

அட கோடி கோடியா
கொட்டிக் கொட்டிக்
கோயிலைக் கட்டிக் கொடுத்தோம்...உனக்கு
கோயிலைக் கட்டிக் கொடுத்தோம்...
உனக்குக் கோயிலைக் கட்டிக் கொடுத்துப்புட்டு குடிசையில படுத்தோம்!
- அறிவுமதி

August 23, 2007 2:26 PM  
Blogger Unknown said...

சிவபாலன்

கோயில் புகைப்படம் மிக அருமையாக இருக்கிறது. கோயில் பற்றிய ஏதேனும் வலைதளம் இருந்தால் கொடுங்கள்.இந்தியா வந்தால் போக உதவும்.

August 23, 2007 2:30 PM  
Blogger மாசிலா said...

கொடுமை ஐயா இது. மிகவும் பரிதாபகரமான காட்சிகள்.

ஏன் இந்திய மக்கள் இந்த நிலமைக்கு வந்தார்களோ?

எல்லா வளமும் உள்ள இந்த திருநாட்டில் இவைகளை சரியான முறையில் பங்கிட்டு அனைவரும் கண்ணியமான வாழ்க்கை வாழ இந்த சமுதாயமும் அரசாங்கமும் என்றுதான் வழி வகுக்குமோ?

இதற்கு நாம் என்ன செய்யப் போகிறோம்?

நம் காலத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்க விடலாமா?

நாம் அனைவரும் வெட்கி தலைகுனிவதோடு சரியா?

நமக்கு சொரனையே கிடையாதா?

வந்தோம், வாழ்ந்தோம் செத்தோம் என்று வாழ்ந்து மடியத்தான் இம்மண்ணில் பிறந்தோமா?

இதையெல்லாம் வேடிக்கை பார்த்துவிட்டு செத்துப் போகப் போகும் நமக்கும் மண்புழுக்களுக்கும் என்ன வித்தியாசம்?

அய்யோ! இந்த மக்கள் மட்டும் என்ன அப்படி பெரிய இல்லாத பாவத்தை செய்துவிட்டார்கள்?

அரசியல் வாதிகள், சமூக, பொது நல தலைவர்கள், சங்கங்கள் அனைவரும் போர்கால அடிப்படையில் அல்லவா கூடி பேசி இம்மக்களுக்கு உடனடி தீர்வு காணவேண்டும்.

உலகில் உள்ள ஒவ்வொரு தமிழரும் மனது வைத்தால் இது போன்ற ஏழை மக்கள் இருப்பதை தவிர்க்கலாம்.

தமிழர்களில் புத்திசாலிகளுக்கா பஞ்சம். நினைத்தால் எதையும் சாதிக்க முடியும்.

அரசாங்கத்தின் ஆதிக்கத்தில் இருக்கும் அனைத்து அதிகாரிகளையும், கையிருப்புகளையும், பொருட்களையும் சரிவர உபயோகம் செய்து நல்ல திட்டங்களை தீட்டி கடனை உடனையாவது பட்டு இம்மாதிரியான மக்களிம் துயர் துடைக்க சமூகம் பாடுபடவேண்டும்.

மனதை மிகவும் பாதித்த படங்கள்.

"இதுதான் எங்க இந்தியா" என்ற தலைப்பை கொடுத்திருக்கலாம்.

பகிர்ந்தமைக்கு நன்றி சினபாலன்.

August 23, 2007 2:31 PM  
Blogger Thekkikattan|தெகா said...

Surely, this would be the Eighth wonder of the world!!

August 23, 2007 2:34 PM  
Blogger Unknown said...

இப்ப தான் அனைத்து பின்னூட்டங்களையும் படித்து பார்த்தேன்.இந்த பதிவில் இப்படி ஒரு உ.கு இருக்கா?:)

இம்மாதிரி ஏழைகளுக்கு அந்த கோயிலே வேண்டியதை செய்யும்.கவலை வேண்டாம்.

ஏன் என்றால் இந்தியாவில் டொமெஸ்டிக் டூரிசத்தில் 80% ஆன்மிக டூரிசம்தான். அதுவும் மூன்றே மூன்று மாநிலங்களில் தான்..தமிழ்நாடு,உபி,ஆந்திரா.

டூரிசத்தை போல் வேலை வாய்ப்பை பெருக்கும் துறை எதுவும் கிடையாது.இந்த கோயிலால் வரண்டு கிடக்கும் வேலூருக்கு பல்லாயிரம் வேலை வாய்ப்புகள் கிட்டும் என்பது உறுதி..பழனி கோயிலால் பழனி நகரம் அடைந்த முன்னேற்றத்தை போலவும், திருப்பதி கோயிலால் திருப்பதி அடைந்த முன்னேற்றத்தை போலவும் வேலூரும் இனி முன்னேறும்.

August 23, 2007 2:49 PM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

ஒன்னுமே புரியல ஒலகத்திலே!

August 23, 2007 2:58 PM  
Blogger Unknown said...

ஒரு கோயிலின் மூலம் வரும் வருமானம் அனைத்தும் சமூகத்துக்கே சென்று சேர்கிறது.

உண்டியலில் விழும் காசு முழுவதும் அரசுக்கு.(உண்டியல் வைக்காத தனியார் கோயில்களில் அந்த கேள்வி இல்லை).

கோயிலை நம்பி நாவிதர்கள்,பிரசாத ஸ்டால் வைத்திருப்போர், ஓட்டல், சிற்றுண்டி நடத்துவோர்,செருப்பு ஸ்டால் வைத்திருப்போர், ஆட்டோ,ரிக்சா ஓட்டுவோர் என பலர் பிழைக்கின்றனர்.இவை நேரடியான வேலை வாய்ப்புகள்.மறைமுகமாக அந்த ஊரில் டூரிஸ்டுகளால் செய்யப்படும் செலவுகள், போக்குவரத்து, அடிப்படை கட்டமைப்பு மேம்படுதல் என ஏராளம் வருமானம் உண்டு.

திருவிழா சமயங்களில் அந்த ஊரே நன்மைகளை அடையும்.

இதுபோல் பொருளாதார நடவடிக்கை மூலம் அந்த ஊரில் வேலை வாய்ப்புகள் பெருகி ஏழைகள் நன்மை பெறுவார்கள்.

கோயிலுக்கு எத்தனை எத்தனை செலவு செய்கிறோமோ அத்தனைக்கு அத்தனை டூரிஸ்ட்கள் வருகை அதிகரிக்கும்.சான்றாக இந்த புகைப்படத்தை பார்த்ததும் எனக்கு தோன்றிய முதல் எண்ணமே வேலூருக்கு போக வேண்டும் என்பதுதான்.

அதனால் கோயிலை போல் சமூகத்தின் அடித்தட்டு மக்களுக்கு நன்மை செய்யும் வேறெந்த பொருளாதார நடவடிக்கையும் இருப்பதாக தெரியவில்லை.

அதனால் நீங்கள் இந்த இரு புகைப்படங்களையும் இட்டது மிக பொருத்தமானதாக்வே தோன்றுகிறது.

August 23, 2007 3:04 PM  
Blogger Thamizhan said...

கல்லாப் பெட்டி வைத்துக் கொண்டு கடவுள் தினமும் யார் எவ்வளவு கொடுக்கிறார்கள் என்று கணக்கு பார்க்கிறாரா?
தங்கத்தால் கடவுளை விலைக்கு வாங்க நினைப்போர்கள் பாவம்!
மூன்று இளையவர்கள் சேர்ந்து நடத்தும்
kivo.org பார்க்க வேண்டுகிறேன்.இதைத் தமிழ்நாட்டில் எடுத்துச் செய்ய சில இளைஞர்கள் முன்வருவார்களா?

August 23, 2007 3:09 PM  
Blogger வவ்வால் said...

சிவபாலன் ,
முன்னரே இப்படி கட்டப்போகிறேன் என்று அந்த சாமியார் சொல்லியிருந்தார் , கட்டிவிட்டாரா, அவர் ஒரு 420 ஆசாமி , ஷ்ரி நாராயணி சக்தி பீடம் என்று வைத்துக்கொண்டு , மேல்மருத்துவர் போல இவரும் தன்னை சக்தி அம்மா என்று அழைத்துகொள்கிறார். இவர் மீது நிறைய வழக்குகள் கூட இருந்தது, திடீர் என சாமியார் அவதாரம் எடுத்து , கோயில் கட்டி வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார் , ஜூ.வி யில் ஒரு கட்டுரைப்போட்டான் முன்னர்.

வேலூர் அருகே இருந்த ஒரு கூட்டுறவு நெசவாலையை கூட 100 கோடி செலவு செய்து வாங்கினார். ஒரு அமைச்சரின் ஆதரவோடு தான் இவர் வேகமாக வளர்ந்தார்.

எங்கிருந்து வெகு குறுகிய காலத்தில் இத்தனை பணம் வந்தது. இவரை சி.பி .ஐ விசாரித்தால் பல ரகசியங்கள் வெளிவரும்!

August 23, 2007 3:12 PM  
Blogger ILA (a) இளா said...

No Comments, as heading.
However,
ஏழை மக்கள் எல்லா ஊரிலும் உண்டு, கோயில் எல்லா ஊரிலும் இருந்தது இல்லை.

ஏழை உருவாக்கப்படுகிறானா? பிறக்கிறானா? ஏழையாகவே பிறந்தவன் ஏழையாகவே இறப்பதில்லை. ஏழையாகவே இருக்கவேண்டும் என்ற அவசியமும் இல்லை.

August 23, 2007 3:16 PM  
Blogger Thekkikattan|தெகா said...

தமிழன் கொடுத்த சுட்டியின் சரியான முகவரி http://kiva.org/ .
ஆஹா, தமிழா அருமையான ஐடியாவா இருக்கே... அதுக்கெல்லாம் மனசு வேணுங்க...

August 23, 2007 3:18 PM  
Blogger Thekkikattan|தெகா said...

வவ்ஸ்,

நீங்க என்ன கண்ணி CPUவா, எத எடுத்துக் கொடுத்தாலும், ச்சும்மா டக், டக்கின்னு வந்து விழுந்திட்டே இருக்கு...

I am amazed about you, vovs!!

August 23, 2007 3:24 PM  
Blogger மாசிலா said...

செல்வன் //இம்மாதிரி ஏழைகளுக்கு அந்த கோயிலே வேண்டியதை செய்யும்.கவலை வேண்டாம்.

ஏன் என்றால் இந்தியாவில் டொமெஸ்டிக் டூரிசத்தில் 80% ஆன்மிக டூரிசம்தான். அதுவும் மூன்றே மூன்று மாநிலங்களில் தான்.. தமிழ்நாடு,உபி,ஆந்திரா.//

தோழர் செல்வன் ஐயா!

கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலையலாமா?

இருக்கிற வளங்களை அது தேவைப்படுகிற மக்களுக்கு, அதற்கு உரிமை உள்ள மக்களுக்கு உடனடியாக பங்கிட்டு கொடுக்க வேண்டாமா?

யார் இந்த அந்நியர்கள்?

இந்த அந்நியர்கள் என்ன இவர்களுக்கு மாமனா மச்சானா?

அவர்கள் வரும்வரை இவர்கள் காத்திருக்க வேண்டுமா?


அவர்களுக்காக இந்த மக்கள் பசியில் பஞ்சத்தில் வாடவேண்டுமா?

அவர்கள் பார்த்து இரசிக்க இவர்கள் தங்களது உடைமைகளை உயிர்களை தியாகம் செய்ய வேண்டுமா.

இம்மக்களுக்கு அடிப்படை குறைந்தபட்ச வசதிகளுடன் தனிமனித உரிமைகளுடன் வாழ உரிமை கிடையாதா?

சுதந்திரம் வாங்கி அறுபது ஆண்டுகள் ஆகியும் அடிமைத்தாகம் மட்டும் நம்மை விட்டு அகல மாட்டேன்கிறதே!

மூக்கை நேராக தொடுவதற்கு பதில் தலையை சுற்றி வந்து தொடுவதற்கு அறிவுரை கொடுப்பது போல் இருக்கிறது உங்களது கூற்று.

இதற்கு விளக்கம் கொடுப்பீர் என நம்புகிறேன்.

அன்புடன் மாசிலா.

August 23, 2007 3:24 PM  
Blogger ILA (a) இளா said...

சிவா, கம்னு ஏழைக்கள் இருக்கும் ஊருல கோயில் அவசியமான்னு ஒரு விவாதம் வைக்கலாம். பின்னூட்டம் மட்டும் சரியா மட்டுறுத்தப்பட்டால்..

August 23, 2007 3:27 PM  
Blogger Unknown said...

மாசிலா

டொமஸ்டிக் டூரிசம் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்.டொமஸ்டிக் டூரிசம் என்றால் உள்நாட்டு சுற்றுபயணம் என்று பொருள்.

அன்னிய சுற்றுபயணிகள் வரத்தின் மூலம் இந்தியாவுக்கு வருடம் 10 மில்லியன் பயணிகள் வருகின்றனர்.இந்திய அரசு ஏகப்பட்ட கோடிகளை செலவு செய்து வெளிநாடுகளில் விளம்பரம் செய்து டூரிஸ்டுகளை அழைக்கிறது.குறிப்பாக கேரள அரசு.தமிழ்நாடு அரசின் சுற்றுலாதுறை அத்தனை சுறுசுறுப்பாக இருப்பதாக தெரியவில்லை.

டூரிசம் வறுமையை ஒழிக்க சிறந்த வழி.டூரிசத்தால் உயர்ந்த நாடுகள் பிரதேசங்கள் ஏராளம் உண்டு (ஸ்விஸ்,ஆக்ரா,வேகஸ்,பாரிஸ்).

வேலைவாய்ப்பை வேண்டாம் என்றால் வறுமை எப்படி ஒழியும் மாசிலா? சிந்தியுங்கள்.

அன்புடன்
செல்வன்

August 23, 2007 3:30 PM  
Blogger வவ்வால் said...

தெ.கா ,
இதெல்லாம் ஓவருங்க :-))

நாம எல்லா பத்திரிக்கையும் படிப்போம்ல, அப்போ அப்போ இந்த கோயில் கட்டுற சாமியார் மேல புகார் வரும், செய்தியும் வரும். ஏடாகூடாமான ஆசாமி போல.

இதே போல இன்னொரு ஜெயின் கோயில் வேலூர் அந்தப்பக்கம் பிரம்மாண்டமா பளிங்கில் கட்டுறாங்க , எல்லாம் அரசு புறம்போக்கு இடமாம்.பத்திரிக்கைகளில் செய்தி வந்தது.கட்டுறது ராஜஸ்தான்ல இருந்து வந்த சாமியார்.

செல்வன் சொல்வார் சுற்றுலா நல்லா வளரும்னு.நாமும் வளரட்டும்னு வேடிக்கைப்பார்ப்போம்!

August 23, 2007 3:35 PM  
Blogger வவ்வால் said...

செல்வன் ,

உங்கள் அளவுக்கு யாருக்கும் இங்கே பொருளாதாரப்பார்வை இல்லை :-))

மேல் மருத்துவரில் கோயில் இருப்பதால் விழுப்புரம் மாவட்டமே வளர்ந்து விட்டது பாருங்க , அதே போல இந்த கோயிலால் வேலூர் மாவட்டமே வளர்ந்து விடும்.:-))

உள்ளூர்காரன் வரனும் என்றாலும் அவனுக்கும் கைல காசு இருந்தா தான் வருவான் , சோத்துக்கே வழி இல்லைனாலும் கோயிலுக்கு வந்து வாழ வைப்பானா அங்கே இருக்க மக்களை!

இப்படி கோயிலைக்கட்டி மக்கள் வாழ்கை தாரத்தை உயர்த்த முடியும் என்றால் அரசாங்கமே மாவட்டத்திற்கு இரு தங்க கோயில் கட்டலாமே !

மாசிலா சொல்வதையும் கொஞ்சம் கவனத்தில போட்டு வைங்க !

August 23, 2007 3:42 PM  
Blogger வவ்வால் said...

செல்வன்,
வியாபாரிகளுக்கு தன் அதனால் லாபம் ஆனால் பொதுவாக சுற்றுலாத்தலங்களில் ஏற்படும் சீர்கேடுகளைப்பாருங்கள்.

ஒரு இடத்தில் டூரிசம் அதிகம் ஆனால் அங்கே என்ன என்ன மாற்றம் ஏற்படும்,

மது , விபச்சாரம் ,இன்னும் சில இடங்களில் சிறுவர் பாலியல் கொடுமைகள் நடக்கும்(உ.ம். மகாபலிபுராம்) போதைப்பொருள் நடமாட்டம் அதிகரிக்கும்.

திடீர் புதிய வரவுகளால்,சுற்றுப்புற சூழல் சீர்கெடும், உ.ம் சபரிமலை.

உள்ளூர் விலைவாசிகள் ஏறும். வெளியூர்காரர்களின் அவசரத்தை பயன்படுத்திக்கொள்ள விலை ஏற்றுவார்கள் , அவர்களும் ஒரு நாள் தானே என கேட்ட விலையைத்தருவார்கள் , விலைவு அதே ஊரில் இருப்பவன் வருடம் முழுவதும் கஷ்டப்படுவான்!

August 23, 2007 3:47 PM  
Blogger மாசிலா said...

//டொமஸ்டிக் டூரிசம் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளேன்//
ஆவேசத்தில் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுவிட்டேன். இருந்தாலும் என் அடிப்படை ஆழக் கருத்திலும் கேள்விகளிலும் எந்த வித மாற்றமுமில்லை.

//அன்னிய சுற்றுபயணிகள் வரத்தின் மூலம் இந்தியாவுக்கு வருடம் 10 மில்லியன் பயணிகள் வருகின்றனர்//
அந்நியர்கள் இந்தியாவில் விரும்புவது இதுபோன்ற தங்கத்தால் ஆன புதுப்பொலிவுடன் மின்னும் போலி கோயில்களை அல்ல. அவர்கள் பொதுவாக பழையவனைகளை விரும்புவர். பாழடைந்ததாக இருந்தாலும் அவர்கள் அதில் உள்ள கலை கலாச்சாரம் பண்பாடு சிற்ப வேலைபாடுகள் வரலாறு ஆகியவைகளையே முக்கியம் விரும்புவர்.

யாரோ ஒருவர் தங்கக் கோவில் கட்டிவிட்டார் எனபதற்காக இல்லாத காரணங்களை காட்டி இது போன்ற ஏடாகூடங்களை நியாயப்படுத்த நினைப்பது சரியாக தெரியவில்லை செல்வன் ஐயா.

எனது சிந்தனை ஏழை மக்களை பற்றியதே. மண்ணின் மைந்தர்கள். அவர்கள் உண்டு அனுபவித்ததின் மீதத்தைதான் மற்றவர்கள் உண்ணவோ அனுபவிக்கவோ வேண்டும் தோழர் செல்வன்.

டூரிசம் எனபது மக்கள் மட்டும் சமுதாயத்தை பண்பாட்டை கலாச்சாரத்தை மொழியை வாழும் முறைகளை பிரதிபலிப்பதுபோல், இயற்கை மற்றும் பொருளாதார சுற்றுச்சூழலுக்கு ஒத்தது போல் இருக்க வேண்டும். மக்களை கவரவேண்டும் என்று நாளை சேரிகள் நடுவில் இது போல் கோயில்களை கட்ட முடியுமா?

என் கேள்விக்கு பதில் அளித்ததற்கு மிக்க தோழர் செல்வன்.

August 23, 2007 3:55 PM  
Blogger Sundar Padmanaban said...

இம்மாதிரி ஆடம்பரங்கள் ஒருபுறம் குவிந்துகிடக்க மறுபுறம் ஏழைகள் தவித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்ற முரணை எடுத்துக்காட்டுவதில் எனக்கு கருத்துவேறுபாடுகள் இல்லை. ஏழைகளையும் அரசு கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் 'இதுதான் இந்தியா' என்று ஒரு முத்திரை குத்தி மற்ற எல்லா தேசத்திலும் ஏழைகளே இல்லாததுபோல ஒரு பிரமையை உருவாக்குவது தவறு. அமெரிக்காவில் Empire State Building-ம் இருக்கிறது. அதே தெருவில் இருக்க வீடு, பிழைக்க வேலை இல்லாது கையேந்தும் ஏழை மக்களும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள். துபாயில் புர்ஜ்அல்அராப் என்ற ஏழரை :-) நட்சத்திர விடுதி ஓட்டல் கடலிலும் (ஒரு நாளைக்கு அறை வாடகை சில லட்சங்கள் மட்டுமே) பத்துக்குப்பத்து அறையில் பத்து கூலித் தொழிலாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இம்மாதிரி வேற்றுமைகளும் ஏற்றத்தாழ்வுகளும் இல்லாத சமூகம் என்று ஒன்றை ஏதாவது ஒரு தேசத்தில் காட்டுங்கள் - அறிந்து கொள்கிறேன்.

எல்லாரும் சமம் என்று வாய்கிழிய எல்லாரும் பேசுவதோடு சமத்துவம் நின்றுபோய் விடுகிறது என்பது சோகம்.

இம்மாதிரி செலவுகளைச் செய்ய முடிபவர்கள் செய்துகொள்ளட்டும். ஆனால் வறுமையில் உழல்பவர்களுக்காக அரசு ஏதாவது செய்யவேண்டும். நல்ல நிலைமையில் இருக்கும் மக்களும் முனைந்து உதவவேண்டும்.

August 23, 2007 3:57 PM  
Blogger மாசிலா said...

தங்கக்கோயில்கள் ஆயிரம் கட்டினாலும்
தட்டி கட்டி வசிக்கும் ஏழையின்
ஒரு புண்சிரிப்பிற்கு ஈடாகுமோ?


அன்புடன் மாசிலா.

August 23, 2007 4:01 PM  
Blogger கோவி.கண்ணன் said...

சிபாவுக்கு மட்டும் இதெல்லாம் எப்படி கண்ணில் படுகிறதோ .....
:)))

August 23, 2007 7:06 PM  
Anonymous Anonymous said...

:-(

August 23, 2007 8:31 PM  
Blogger PRINCENRSAMA said...

கோயில்கள் பெருகப் பெருக பிச்சையெடுப்போருக்கு வேலை வாய்ப்பும் பெருகுகிறது. உண்மைதான் செல்வன்

August 23, 2007 10:18 PM  
Blogger அரை பிளேடு said...

அரியூரில் இந்த கோவிலை சார்ந்து ஒரு மருத்துவமனையும் இருக்கிறது என்பது ஒரே நல்ல விஷயம்.

August 23, 2007 11:10 PM  
Blogger மாசிலா said...

PRINCENRSAMA //கோயில்கள் பெருகப் பெருக பிச்சையெடுப்போருக்கு வேலை வாய்ப்பும் பெருகுகிறது.//

சரியா சொன்னீங்க ஐயா.

August 23, 2007 11:58 PM  
Blogger வெங்கட்ராமன் said...

இந்த புகைப்படங்களை பார்த்து அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை...கடவுள் வந்து கேட்டாரா, இவ்வளவு செலவு செய்து கோவில் கட்டவேண்டுமென்று...300 கோடி ரூபாய்....ஒரு தொழிற்சாலையோ, கல்லூரியோ, அடிப்படை மருத்துவமனையோ - என்னன்னவோ செய்திருக்கலாமே....கடவுளே..:-(

August 24, 2007 12:35 AM  
Anonymous Anonymous said...

Perhaps that the 'getleman' who is responsible for the construction of the temple might have thought that the Tamils need only Temples and not Industries. He knows that the local politicians in TN would object if an industry comes there but will welcome a temple!Anyhow it is pathetic indeed.

August 24, 2007 5:20 AM  
Anonymous Anonymous said...

///டூரிசம் வறுமையை ஒழிக்க சிறந்த வழி.டூரிசத்தால் உயர்ந்த நாடுகள் பிரதேசங்கள் ஏராளம் உண்டு (ஸ்விஸ்,ஆக்ரா,வேகஸ்,பாரிஸ்).////


டூரிசம் வளர்ந்து கலாச்சாரம் கெட்டுப்போன எவ்வளவு நாடுகளை நான் உதாரணம் காட்ட ?

தாய்லாந்து இன்றைக்கு ஒரு விபச்சார கண்ட்ரியாகி கேவலப்பட்டு நிற்பதற்கு காரணம் டூரிஸ்ட்தானே

- செந்தழல் ரவி

August 24, 2007 5:48 AM  
Blogger பழூர் கார்த்தி said...

Here is a point....

சமூகத்தின் இரு துருவங்களையும் (முரண்களையும்) காட்டியிருக்கிறீர்கள்.. நல்ல பதிவு & தலைப்பு !!

August 24, 2007 6:14 AM  
Blogger ஆளவந்தான் said...

//உள்ளூர் விலைவாசிகள் ஏறும். வெளியூர்காரர்களின் அவசரத்தை பயன்படுத்திக்கொள்ள விலை ஏற்றுவார்கள் , அவர்களும் ஒரு நாள் தானே என கேட்ட விலையைத்தருவார்கள் , விலைவு அதே ஊரில் இருப்பவன் வருடம் முழுவதும் கஷ்டப்படுவான்!//

இது தவறான முன்னுதாரணம். ஏன் அந்த ஏழைக்கும் வேலை வாய்ப்பு பெருகும் அல்லவா?

August 24, 2007 11:20 AM  
Blogger ஆளவந்தான் said...

//இந்த புகைப்படங்களை பார்த்து அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை...கடவுள் வந்து கேட்டாரா, இவ்வளவு செலவு செய்து கோவில் கட்டவேண்டுமென்று...300 கோடி ரூபாய்....ஒரு தொழிற்சாலையோ, கல்லூரியோ, அடிப்படை மருத்துவமனையோ - என்னன்னவோ செய்திருக்கலாமே....கடவுளே..:-(
//

இது தவறான முன்னுதாரணமே. இந்த கோயில் பிரசித்தி பெற்றால், நீங்கள் கேக்குற எல்லாமே தானாகவே வந்து விடுமே. திருப்பதி, பழனி இதற்க்கு ஒரு உதாரணம்

August 24, 2007 11:24 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv