Monday, September 03, 2007

ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்!

நம்மில் பல பேருக்கு இந்த உணவுச் சங்கிலி விடயம் புரிய மறுக்கிறது. இது உண்மையில் சில சமயம் எரிச்சலைத்தான் வரவைக்கிறது.

கிழே இரு செய்திகளைப் பாருங்கள்.

1. குரங்கு குட்டியை விழுங்க நினைத்த மலைப்பாம்புடன் சண்டையிட்ட தாய் குரங்கு. இது உணவுச் சங்கிலியில் நிகழும் சாதரண விடயம். இதில் மனிதன் என்ற சமூக விலங்கு ஒன்று குறுக்கே புகுந்து ஏதோ குரங்கை காப்பாற்றுவதாக எண்ணி மலைப்பாம்பை கோடாரியால் கொல்ல அதன் வாயில் இருந்த தாய் குரங்கும் இறந்துவிட்டது. குட்டி காப்பாற்றப்பட்டது.


நன்றி: தினகரன் - நாள்: 04-09- 2007
------------------------------


2. காட்டில் வாழும் பாம்பு ஒன்று காட்டு எலியை இரையாக்கும் படம். இதுவும் ஒரு சாதரண நிகழ்வுதான். ஆனால் இதைப் படிக்கும் மக்களின் எண்ணம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனை.


நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் நேற்று கட்டுவிரியன் பாம்பிடம் ஒரு காட்டெலி சிக்கி உயிருக்கு போராடியது. அந்த உயிர்த்துடிப்புக் காட்சிகள்: எலியை பாய்ந்து பிடிக்கிறது பாம்பு. வாலால் சுருட்டி எலியை அமுக்குகிறது. அடுத்த படங்களில் உயிருக்கு போராடி, துடிக்கிறது எலி.

நன்றி: தினகரன் - நாள்: 04-09- 2007
-------------------------------------

இந்த செய்தியையும் கொஞ்சம் படியுங்க..



முதுமலை யானை முகாம் அருகே உணவு கிடைக்காமல் இறந்து கிடந்த 2 வயது புலிக்குட்டி.

நன்றி: தமிழ் முரசு - நாள்: 01-09- 2007
-----------------------------

பாம்பு பாவம் பார்த்தால் தான் சாக வேண்டியதுதான்.

மேற்கண்ட விடயத்தில் குறிப்பாக குரங்கு பற்றிய செய்தியில் ஏன் அந்த மனிதன் அவ்வாறு நடந்துகொண்டான். இரக்கம் ஒரு காரணம். அப்ப, அந்த பாம்பின் மீது யார் இரக்கம் காண்பது. மற்றுமொரு பார்வை என்னவென்றால், பாவம் புண்ணியம் என்ற மனிதனின் சிந்தனை.

இந்த பாவம் புண்ணியம் என்பது நமக்குள் அதாவது மனிதனிக்குள் சுமுகமாக வாழ்த்தான் என்பது என் எண்ணம்.

ஆனால் இதை வைத்தே கடவுள் என்ற பய உணர்வையும் சேர்த்தி மனிதனுக்குள் வைத்துவிட்டார்காள். புரிந்துகொண்டால் எல்லோருக்கும் நலம்.

முடிந்தால் இந்த "வீடியோவைப் பாருங்கள்.."

பி.கு. நான் ஏதோ இரக்க குனம் அற்றவன் என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். உணவுச் சங்கிலி விடயத்தில் அது பொருந்தாது என்பது என் எண்ணம்.

24 Comments:

Blogger கோவி.கண்ணன் said...

சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள் சிபா,

அனைத்தும் இறைவன் படைப்பு என்று சொல்லிக் கொண்டே முதலையின் வாயைக் கிழித்து யானையைக் காப்பாற்றினார் கிருஷ்ணர் என்று சாத்விக கதையெல்லாம் இருக்கிறதே.

முதலைக்கு உணவே அங்கு வரும் விலங்குதான் என்று படைப்பில் (பிழை?) வைத்துவிட்டு யானையை காப்பாற்ற முதலையைக் கொள்வது எந்த வகை நியாயமோ ?

மனிதனே மாபெரும் சமூக விலங்கு, இதில் தம் சுயநலத்திற்காக சமூகங்களாக பிரித்து உயர்வு தாழ்வில் வயிறு வளர்கையில். நீங்கள் சொன்ன நிகழ்வும் மலைப்பாம்பை கொன்ற பாதகர்களும் கண்டிக்கப்பட வேண்டியவை.

எல்லாம் இருத்தலை தக்கவைத்துக் கொள்ளும் போராட்டாம், அதற்கான எதிர்வினைகளும் அதே என்பது அறிவியல் சித்தாந்தம் புரிந்து கொள்ள மறுப்பர். காரணம் சுயநலம்.

September 03, 2007 6:35 PM  
Blogger துளசி கோபால் said...

எல்லா யானையுமா முதலைகிட்டே மாட்டினதும் 'ஆதிமூலமே'ன்னு கூவுச்சு?

கூப்பிட்ட குரலுக்கு மட்டும்தான் உதவி.

பைபிளில் கூட 'கேளுங்கள் கொடுக்கப்படும்'தானே இருக்கு.

உணவுச் சங்கிலி புரிஞ்சாலும் மனுஷனுக்குக் கண்முன்னே யாராவது கஷ்டப்பட்டாப் பொறுக்காது.
ஆனா அவனே ஆட்டையும் கோழியையும் அடிச்சுத் தின்னுருவான்(-:
என்னவோ போங்க.

September 03, 2007 7:19 PM  
Blogger TBCD said...

ஏன்னா வெட்டும் போது ஒரு ஆடும், கோழியும் என்ன வெட்டாதே அப்படின்னு சொல்லுறதில்லை...
(தமிழ்ல சொன்னா தான் கேப்போம்..)

எந்த மொழியில வேனாலும் அது ஆதிமூலத்தைக் கூப்பிடட்டும்..
அவர் வந்து காப்பாத்தட்டும்..
அது வரை..வாரம் வாரம்...பிரியாணி தான்..

அதுதாங்க உணவு சங்கிலி....


//*துளசி கோபால் said...
எல்லா யானையுமா முதலைகிட்டே மாட்டினதும் 'ஆதிமூலமே'ன்னு கூவுச்சு?

கூப்பிட்ட குரலுக்கு மட்டும்தான் உதவி.

பைபிளில் கூட 'கேளுங்கள் கொடுக்கப்படும்'தானே இருக்கு.

உணவுச் சங்கிலி புரிஞ்சாலும் மனுஷனுக்குக் கண்முன்னே யாராவது கஷ்டப்பட்டாப் பொறுக்காது.
ஆனா அவனே ஆட்டையும் கோழியையும் அடிச்சுத் தின்னுருவான்(-:
என்னவோ போங்க. *//

September 03, 2007 8:19 PM  
Anonymous Anonymous said...

//எல்லா யானையுமா முதலைகிட்டே மாட்டினதும் ஆதிமூலமேன்னு கூவுச்சு? //

ஆதிமூலமே அப்படின்னு கூவுற அளவு விவரமுள்ள யானை, முதலை வாய்க்குள்ள காலை விடுறமாதிரி மக்காவா ஆதிமூலம் படைச்சிருப்பார் துளசி டீச்சர்? நீங்களுமா? :-) பாவம், வாய் கிழிபட்ட முதலையை எந்த ஆதிமூலம் படைச்சாரோ! ஒருவேளை அது ஆதிமூலமேன்னு கூவியிருந்தா யானையைத் தூக்கி வந்து குளத்துக்குள்ள போட்டிருப்பாரா? ஒரே கொயப்பமா கீதே.

September 03, 2007 8:28 PM  
Blogger TBCD said...

//*ஒருவேளை அது ஆதிமூலமேன்னு கூவியிருந்தா யானையைத் தூக்கி வந்து குளத்துக்குள்ள போட்டிருப்பாரா? ஒரே கொயப்பமா கீதே.*//

repeat ^ 1000
yaar intha anony ariya aaaaaval

September 03, 2007 9:13 PM  
Anonymous Anonymous said...

if you look at the human outlook towards saving animals, its typically against predators, towards herbivors (and/or human friendly) AND when the act happens in front of their eyes. No human goes into wild animal habitats inorder to save helpless herbivors.

So, there should be no worries about human not understanding food chain ;-). These little things make life interesting!

September 03, 2007 10:05 PM  
Blogger Unknown said...

கதை சொல்லி யாரின் பார்வையில் கதை சொல்கிறார் என்பதைப் பொறுத்துத்தான் கதை கேட்பவனின் அனுதாபம் ஒரு தரப்புக்கு கிடைக்கும்.

உதாரணம்:
Finding Nemo வில் மீன் தப்பிக்க வேண்டும் என்று நினைக்க வைப்பார்கள்.

Brither Bear படத்தில் Bear க்கு ஒரு மீனாவது உணவாக கிடைத்துவிடாதா என்று பார்வையாளனை ஏங்க வைப்பார்கள்.

**
ஆதரவு பாம்பிற்கா அல்லது குரங்கிற்கா என்பது அந்த கதையின் கதாநாயகர் யார் என்பதைப் பொறுத்து அமையும்.

***

மனிதனுக்கு உணவுச் சங்கிலி நன்றாகவே புரிந்து உள்ளது. அதனால்தான் ஊர்வன, பறப்பன என்று எல்லாவற்ரையும் சாப்பிட்டுவிட்டு குற்ற உணர்வு இல்லாமல் இருக்க முடிகிறது. இல்லை என்றால் ஆடைக் கொல்லும் காசாப்புக் கடைக்காரனை கொன்று ஆட்டை விடுவித்து இருப்பார்கள் அல்லவா? :-))

***

துளசிக்கா,
காமெடிக்கு அளவே இல்லையா? :-))

இறைவன் கூப்பிட்டால்தான் வருவான் என்றால் ஊமைகள் என்ன செய்வார்கள். கடவுள் என்ன கோர்ட் ஆசாமியா? வழக்கு போட்டால் மட்டும் பதில் சொல்ல? அப்படி இருப்பவன் எப்படி எல்லாம் அறிந்த கடவுள் ஆக முடியும்.?

September 04, 2007 12:15 AM  
Blogger Unknown said...

//ஒருவேளை அது ஆதிமூலமேன்னு கூவியிருந்தா யானையைத் தூக்கி வந்து குளத்துக்குள்ள போட்டிருப்பாரா? ஒரே கொயப்பமா கீதே.
//

:-)))

போலீஸ் ஸ்டேசனில் யார் முதலில் வந்து புகார் சொல்கிறானோ அவனுக்கு ஆதரவாகவே ஆரம்ப நடவடிக்கைகள் இருக்கும். கிராமங்களில் அடித்துக் கொள்ளும் இரு குடும்பங்கள், இதற்காக ஓடிப்பிடித்து புகார் செய்வது உண்டு.

கடவுளும் யார் முதலில் கூவுகிறார்களோ அவருக்குத்தான் ஆதரவு தருவார் போல :-)))

September 04, 2007 12:19 AM  
Blogger Hariharan # 03985177737685368452 said...

லௌகீக வாழ்க்கையில் மனிதன் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு மிகுந்த தளர்வுறுவது இயல்பு.

பாரதத்தில் சனாதனதரும வாழ்வியலில் புராணக்கதைகள் மூலமாக நம்பிக்கையும் மனத்தெம்பும் மக்களுக்கு உளவியலாக பக்தி எனும் வடிவில் தரப்பட்டது.

உலகை நிகழ்வுகளை நடத்தும் சக்தியாகிய இறைவனை நினைத்து அவனிடத்திலே சரணடைந்தால் சிரமங்களில் இருந்து விடுபடலாம் என்பது உளவியலாகச் சொல்லப்பட்டு வந்திருக்கிறது.

சனாதன தருமமாகிய இந்துமதத்தில் சிம்பாலிஸம் மிக முக்கியம். இங்கே சொல்லப்பட்ட தளம் psycological and NOT just physical!

ஆதிமூலமான யானை என்பது சிரமங்களில் சிக்குண்டு தவிக்கும் மாந்தர்... முதலை என்பது சிக்கல்

புராணக்கதை வெளிப்படுத்தும் கருத்தினை உள்வாங்குவதில் பிழை ஏற்படாமல் இருத்தல் அவசியம்.

முதலையை வாயைக்கிழித்தல் நியாயமா என்பது physical தளத்திலிருந்து பார்ப்பதால் வருவது.

விளைவு விஷயம் விளங்கிக் கொள்ளாமலே "பிரியாணி" ஆகிறது
:-))

September 04, 2007 1:45 AM  
Blogger Unknown said...

காடுகளில் விலங்குகளுக்கு அடித்துத் தின்பதே தர்மம். இயன்றால் அவைகளுக்குத் தெரியாமல் வேடிக்கை பார்க்கலாம். நாம் தலையிட்டு அந்த உணவுச்சுழற்சி முறையை கெடுக்கக் கூடாது.

September 04, 2007 6:55 AM  
Anonymous Anonymous said...

///காட்டில் வாழும் பாம்பு ஒன்று காட்டு எலியை இறையாக்கும் படம்.///

இருக்கிற 'இறை' போதாதா?
இரை என்று சரியாகப் போடக்கூடாதா?

September 04, 2007 7:56 AM  
Blogger சிவபாலன் said...

நவீன் (அனானி)

பிழைதிருத்தம் செய்துவிட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி!

September 04, 2007 8:04 AM  
Blogger Hariharan # 03985177737685368452 said...

//ஆதிமூலமான யானை என்பது சிரமங்களில் சிக்குண்டு தவிக்கும் மாந்தர்...// என்பதை

இறைவனை ஆதிமூலமே என அழைத்த கஜேந்திரனான யானை என்பது சிரமங்களில் சிக்குண்டு தவிக்கும் மாந்தர்..

எனப் படிக்கவும்

நன்றி

September 04, 2007 8:11 AM  
Anonymous Anonymous said...

அரியண்ணன் அவ்வப்போது அவுத்துவிடுவாறு... தப்பா எடுத்துக்காதேள் கதையை எடுத்துவிடுவார்ன்னேன்.

பால்கரப்பவனை தீண்டாமல் இருப்பதற்கு காரணம் கோமாரி நோய் பரவாமல் தடுக்கத்தான் என்ற ஆரிய கண்டுபிடிப்பைச் ச்சொன்னவர் அல்லவா ?

அரியண்ணா வாழ்க...

September 04, 2007 8:32 AM  
Blogger வினையூக்கி said...

:) :)

September 04, 2007 8:56 AM  
Anonymous Anonymous said...

//முதலையை வாயைக்கிழித்தல் நியாயமா என்பது physical தளத்திலிருந்து பார்ப்பதால் வருவது.

விளைவு விஷயம் விளங்கிக் கொள்ளாமலே பிரியாணி ஆகிறது//

ஹரிஹரன் அய்யா, பிரியாணி சாப்பிடாமலேயே பிரியாணி தின்பவனையெல்லாம் நக்கலடிக்கவும், சாராயத்தை முகர்ந்துகூடப் பார்க்காமல் சாராயம் குடிப்பவனை நக்கலடிக்கவும் தனிய்யா ஒரு திறமை வேணும் அய்யா! அவ்வளவு ஆசையா இருந்தா ஒரு பாக்கெட் கோளி பிரியாணிப் பொட்டலம் வாங்கி சாப்பிட்டுப் பார்க்கிறதுதானே, திங்கிறவனைப் பார்த்து ஏன் வயிறெரியணும் அய்யா. ஒருவேளை விர்ச்சுவல் பிரியாணி ஏதும் சாப்பிடுவீங்களா அய்யா. அந்த யானை முதலை வாயில காலை விடுறதுக்கும் கூட திரா விட பொத்தடின் கட்சிகளும் பெரியார் நாமசாமி ராயக்கரும்தான் காரணம் அய்யா. அய்யா சிம்பலைப் புடிச்சுக்கிட்டு தமிழ்நாட்டு மக்கள்தான் ஆனை திரா விட கட்சிகள்தான் முதலைன்னு பிரியாணி பாக்கெட்டை பிரிச்சுருங்க அய்யா. அப்பிடியே சைக்காலஜிகலுக்கு ஸ்பெல்லிங்க் மிஷ்டேக் பாருங்க அய்யா. பிரியாணின்னு பேரைக் கேட்டதுமே இம்மையில கிட்டாத பிரியாணி மறுமையிலயாவது கிட்டுமோன்னு ஏக்கத்துல மயக்கம் வந்து மிஷ்டேக் ஆயுடுச்சா அய்யான்னு நம்ம பின்னூட்ட பலா(ப்பழ) அய்யா கேக்குறாரு அய்யா.

September 04, 2007 9:41 AM  
Blogger Sundar Padmanaban said...

பதிவுக்குத் தொடர்பில்லாத சிறிய சந்தேகம் (அப்றம் எதுக்கு இங்க வந்து கேக்கறே என்று கேட்காதீர்கள். விலங்கு மனிதன்னு வர்றதால அதோட தொடர்புபடுத்தி..அட போங்கப்பா. சந்தேகத்தைக் கேக்க விடுங்க).

உலகிலேயே தன் இனத்தைச் சாராத பிற உயிரினங்களை வளர்ப்புப்பிராணியாக வைத்து வளர்க்கும் ஒரே உயிரினம் மனிதன் - இது சரியா? இல்லாட்டி pets வைத்துக்கொள்ளும் பழக்கம் வேறு ஏதாவது உயிரினங்களிடம் இருக்கிறதா?

ரோட்டோர டீக்கடையில் டீ சொல்லிவிட்டு வெளியில் பெரிய சட்டியில் பொரிக்கப்படும் வாழைக்காய் பஜ்ஜியை அல்லது போண்டாவை வாங்கித் தின்கையில் நம்மையே பார்த்துகொண்டிருக்கும் அந்த நாய்க்கு ஒரு துண்டு கிள்ளிப் போடச்சொல்லி உள்ளே நம்மைத் தூண்டும் அந்த Instinct நமக்கே நமக்கானதா? அல்லது வேறு உயிர்களுக்கும் உண்டா?

சும்மா தெரிந்துகொள்வதற்காகக் கேட்கிறேன்.

September 04, 2007 4:33 PM  
Anonymous Anonymous said...

//ரோட்டோர டீக்கடையில் டீ சொல்லிவிட்டு வெளியில் பெரிய சட்டியில் பொரிக்கப்படும் வாழைக்காய் பஜ்ஜியை அல்லது போண்டாவை வாங்கித் தின்கையில் நம்மையே பார்த்துகொண்டிருக்கும் அந்த நாய்க்கு ஒரு துண்டு கிள்ளிப் போடச்சொல்லி உள்ளே நம்மைத் தூண்டும் அந்த Instinct நமக்கே நமக்கானதா? அல்லது வேறு உயிர்களுக்கும் உண்டா?//

ரோட்டோர விளக்குக் கம்பத்தில் காலைத்தூக்கி வாட்டர்மார்க் போட்டுவிட்டு மகாகனம் பொருந்திய நாயார் (நாயர் அல்ல), பக்கத்திலேயே இருக்கும் தனது டீக்கடையான ரோட்டோர குப்பைத்தொட்டியிலிருந்து தான் தின்னும் பஜ்ஜி அல்லது போண்டாவில் ஒரு துண்டு கிள்ளிப்போட்டால் நாம் சாப்பிடுவோமா? ;-)

சுந்தர், சும்மா தமாசுதான், டென்சன் ஆவாதீங்க :-).

September 04, 2007 10:41 PM  
Blogger Hariharan # 03985177737685368452 said...

//அப்பிடியே சைக்காலஜிகலுக்கு ஸ்பெல்லிங்க் மிஷ்டேக் பாருங்க அய்யா. //

நான் பயன்படுத்திய பரங்கியர் மொழிச் சொல்லில் ஏற்பட்ட எழுத்துப்பிழை பொறுக்கமுடியாமல் இன்னல்படும் அனானி சார் தவறைச் சுட்டியதற்கு நன்றி.


ஆனா நீங்க தாய்மொழி தமிழிலேயே கவுந்திட்டீங்க...
//ஒரு பாக்கெட் கோளி பிரியாணிப் பொட்டலம் //

கோளி அல்ல கோழி... இதைச்சுட்ட கோழி பிரியாணி சுவைத்திருக்கணும் என்று பகுத்தறிவு சுனாமியாய் பொங்கி எழுந்து சொல்ல மாட்டீர்கள் என நம்புகிறேன் :-))

//சாராயத்தை முகர்ந்துகூடப் பார்க்காமல் சாராயம் குடிப்பவனை நக்கலடிக்கவும் தனிய்யா ஒரு திறமை வேணும் அய்யா! //

நிதானமா இருந்தாகணுமே சாராயம் செய்யும் கொடுமையை நக்கலடிக்கும்போது இல்லீங்களா!

KCn , NaCn இது ரெண்டும் பொட்டாசியம் சயனைடு, சோடியம் சயனைடு நாக்கில் பட்டாலே கொல்லும் விஷம்னு தெரியும்.. சயனைடு தின்னாமலே நமக்குத் தெரியலையா...

என்னமோ போங்க அனானி சார் பின்னிப் பெடலெடுக்குறீங்க காமெடில:-))

September 04, 2007 11:24 PM  
Anonymous Anonymous said...

//ஆனா நீங்க தாய்மொழி தமிழிலேயே கவுந்திட்டீங்க...//

கோளிங்கிறது கிண்டல் ஹரிஹரன் அய்யா. லளழ சொல்லுங்க, லளழ லளழ.

//நிதானமா இருந்தாகணுமே சாராயம் செய்யும் கொடுமையை நக்கலடிக்கும்போது இல்லீங்களா!

KCn , NaCn இது ரெண்டும் பொட்டாசியம் சயனைடு, சோடியம் சயனைடு நாக்கில் பட்டாலே கொல்லும் விஷம்னு தெரியும்.. சயனைடு தின்னாமலே நமக்குத் தெரியலையா...

என்னமோ போங்க அனானி சார் பின்னிப் பெடலெடுக்குறீங்க காமெடில:-))//

கோளி தின்னு சாராயம் குடிச்சதாலதான் திரா விட பொத்து டின்களான பில்கேட்சும் அய்ன்ஸ்டைனும் ஐசக் நியூட்டனும் பள்ளிக்கூடத்துலயே பெயிலாப்போயி பிளாட்பாரத்துல கவுந்தடிச்சி கிடந்தானுவளா அய்யா. முன்னப்பின்ன கறி தின்னு சாராயம் குடிக்கறவன் கிட்ட வேலை பார்த்தது இல்லியா அய்யா. பிரியாணி திங்கிறவன் உங்களுக்கே முதலாளியா இருந்தாலும், வெறும் மக்குப்பய எப்படியோ அந்த பொசிசனுக்கு வந்துட்டான், ஆனா ரியல் பிரெயினு உங்களை மாதிரி நான்-சயனைடு (அட, non சயனைடுங்க) ஒழுக்கசீலர்கள்தான் இல்லிங்களா அய்யா? குடிக்கிறவனெல்லாம் குடிகாரன், பிரியாணி திங்கிறவனெல்லாம் மாக்கான்னு சொல்றீங்களா அய்யா. பாரத தேச நான்-சயனைடு, நான்-சாராயங்கள் வெளிநாட்டுக்குப் போய் ஆடு, மாடு, கோழி, நண்டு நட்டுவாக்களின்னு தின்னு, பீர் ஒயின் ரம் விஸ்கின்னு குடிக்கிற நீசப்பயலுக கிட்ட போய் வேலைபாக்கிறாங்களே அய்யா. இந்த அநியாயத்தை கேப்பார் இல்லியா அய்யா. கறி தின்னு சாராயம் குடிக்கிற வெள்ளைக்காரனுக்கு புத்தி மந்தமுன்னா எப்படி அய்யா அவனுகளை இத்தனை நாள் நம்ம பாரத தேசத்தை ஆள விட்டோம்? உங்களை மாதிரி கறி திங்காத சாராயம் குடிக்காத நல்லவால்லாம் இருந்தும் நம்ம நாட்டை ஏன் அய்யா காப்பாத்த முடியாம போச்சு அய்யா. ஓ, 1550ல பொறந்த நாமசாமி ராயக்கரும் திரா விட பொத்து டின் கட்சிகளும்தானய்யா எல்லாரையும் பிரியாணி திங்கவச்சு சாராயம் குடிக்கவச்சு நம்மை பிரிட்டிஸ்காரனுக்கு அடிமையாக்கிட்டாங்க அய்யா. மாதவிலக்கான பொம்பளை சந்திரமுகி மாதிரி பிளவாளூமையோட இருப்பான்னு நீங்க திருவாய் மலர்ந்தது மாதிரி உங்க ஆபீஸ்லயும் சயனைடு தின்னு சாராயம் குடிக்கிறவனுக்கு தனி க்யூபிக்கிள் போட சொல்லிருங்க அய்யா.

என்னமோ போங்கய்யா, பெடலே இல்லாத சைக்கிளை உன்னித் தள்ளிக்கிட்டே நீங்க பெத்த டின்னு திரா விட அப்படின்னு சூறாவளி சுற்றுப்பயணம் போறப்ப எங்களால முடிஞ்ச பெடலையும் போட்டுக்கறோம் அய்யா, மன்னிச்சு கஜேந்திர மோட்சம் குடுத்துருங்க அய்யா. தலப்பாக்கட்டு, ஆற்காடு, பர்மாக் கடைன்னு பல ரகத்துல பிரியாணி இருக்கு அய்யா. அடுத்த தடவை மூக்கைப் புடிச்சுட்டாவது (திரா விட கும்பல் நாறுமில்ல அய்யா) போய் முகர்ந்தாவது பாத்துருங்க அய்யா. உங்களுக்கு சயனைடு கொண்டார் னு பட்டம் கொடுத்துரலாம் அய்யா.

September 05, 2007 7:14 PM  
Blogger Hariharan # 03985177737685368452 said...

//கறி தின்னு சாராயம் குடிக்கிற வெள்ளைக்காரனுக்கு புத்தி மந்தமுன்னா எப்படி அய்யா அவனுகளை இத்தனை நாள் நம்ம பாரத தேசத்தை ஆள விட்டோம்? உங்களை மாதிரி கறி திங்காத சாராயம் குடிக்காத நல்லவால்லாம் இருந்தும் நம்ம நாட்டை ஏன் அய்யா காப்பாத்த முடியாம போச்சு அய்யா. //

வெள்ளைக்காரன் கிட்ட கப்பம் கட்டி கிழக்கிந்திய கம்பெனியின் ஆயுத-ராணுவ-பாதுகாப்பு டீல் போட்ட அரசர்கள் அடிப்படைக் காரணம்.

உள்ளுக்குள்ள ஒருத்தர ஒருத்தர் அடிச்சுப் பிரிச்சுமேயுறதிலேயே 90% சக்தியைச் செலவிட்டவர்கள் பாரதத்தின் பண்டைய அரசர்களான சேர-சோழ-பல்லவ-பாண்டியர்-புலிகேசிகள்-கலிங்கர்-குப்தர்கள்.

நையாண்டி அனானி சார் உங்களுக்குப் பிடிச்ச தலப்பாக்கட்டு பிரியாணியை செமக்கட்டு கட்டிக்கோங்க! தின்னு சலிச்சு உடம்பு தளரும்போது "பிரியாணியாகவும்-குவார்ட்டர் சைட்டிஷ் ப்ரைடு சிக்கனாகவும் பலநூறு கோழிகளின் பிணங்களுக்கு புதைகுழியாக உங்கள் வயிறு இருந்திருப்பதை எண்ணி வருத்தப்படுவீர்கள்.

தனி க்யூபிக்கிள் எல்லாம் Healthy mutual understandingக்கு பெரிய Obstacle அனானிசார்!

எப்படியோ நல்லா இருந்தா சரிதான்.

September 05, 2007 11:37 PM  
Anonymous Anonymous said...

//நையாண்டி அனானி சார் உங்களுக்குப் பிடிச்ச தலப்பாக்கட்டு பிரியாணியை செமக்கட்டு கட்டிக்கோங்க! தின்னு சலிச்சு உடம்பு தளரும்போது பிரியாணியாகவும்-குவார்ட்டர் சைட்டிஷ் ப்ரைடு சிக்கனாகவும் பலநூறு கோழிகளின் பிணங்களுக்கு புதைகுழியாக உங்கள் வயிறு இருந்திருப்பதை எண்ணி வருத்தப்படுவீர்கள்.//

சரி அய்யா. ஆடு, மாடு, கோழியோட சேர்த்து தவளை, மீனுண்ணு முழுங்கற ஜப்பானியன் எப்படி அய்யா நம்ம பாரத தேசத்தவரை விட அதிக வருசம் உயிரோட இருக்கான்? அதை விடுங்கய்யா, அப்படியே குளிரிலும் பனியிலும் நம் பாரத தேசத்தை காக்கும் ராணுவ ஜவான்களுக்கும் வெறும் புளியோதரையும் ஊறுகாயும் தேங்காச்சட்னியும் மட்டும் போட சொல்லிரலாம் அய்யா. உங்க ஜீவகாருண்யமெல்லாம் பாலூட்டி, பறவை, மச்சாவதாரங்களுக்கு மட்டும்தானா அய்யா. கோடானுகோடி தாவர தானிய உயிர்களுக்கு உங்கள் வயிறும் புதைகுழி தானே அய்யா. கண் காது மூக்கு இல்லாததால் அவை உயிர்கள் இல்லியா அய்யா. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் சொன்னது ஏன் அய்யா, தின்ன பயிர்கள் இல்லாமல் போய்விட்டதே என்ற வடலூர் வள்ளலாரின் வயிற்று உறுமலால் வந்த பதட்டத்தாலா அய்யா? கி.பி.1550ல் பிறந்த நாமசாமி ராயக்கரும் அவரது அடிப்பொடிகளான திரா விட குஞ்சுகளும்தான் வள்ளலாரின் வயிற்றுக்குள் உறுமல் சவுண்டு வருமாறு அவர் தூங்கும்போது ஆப்பு ரேசன் செய்து ஒரு சவுண்டு மிசினை பிட்டிங் பண்ணி அவரை அப்படிப் பாட வைத்து சதி பண்ணிவிட்டார்கள் இல்லையா அய்யா? இது பிரியாணி தின்பவர்களின் பக்கா திரா விட சதி அய்யா.

//எப்படியோ நல்லா இருந்தா சரிதான்.//

விழைவதும் அதுவே அய்யா. நன்றி அய்யா. நையாண்டியில் உங்களை மிஞ்ச முடியுமா அய்யா.

September 06, 2007 7:57 AM  
Blogger Hariharan # 03985177737685368452 said...

//கோடானுகோடி தாவர தானிய உயிர்களுக்கு உங்கள் வயிறும் புதைகுழி தானே அய்யா.//

மறுப்பில்லை. இருப்பதிலேயே குறைவான குற்றம் தாவரங்களை உண்டு வாழ்வதால்.

நாக்கின் சுவைக்காக கதறக் கதற வெட்டிக்கொன்று தசையினைப் புசிப்பதை குற்றமாக மனம் உணரவில்லை எனில் என்ஜாய்!


//வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று வள்ளலார் சொன்னது ஏன் அய்யா//

அதே வள்ளலார் தெளிவாக இன்னொன்று சொல்லியிருக்கின்றார்:

"தூண்டிலில் துடிதுடித்த புழுவை ஆசைப்பட்டு உண்டு தூண்டிலின் முள்ளில் சிக்கித் துடிதுடிக்கும் மீனைப் பிடித்து ஆசையாக சுவைத்து உண்ணும் மனிதன் இவன் என்ன துடிதுடிப்பானோ என்று வாடுகிறேன்" என்று.

அனானி வள்ளலார் சொன்ன இதையும் முழுசா இல்லைன்னாலும் அவ்வப்போது கருத்தில் கொள்ளவும் என விண்ணப்பிக்கிறேன்.

September 06, 2007 8:29 AM  
Anonymous Anonymous said...

//மறுப்பில்லை. இருப்பதிலேயே குறைவான குற்றம் தாவரங்களை உண்டு வாழ்வதால். நாக்கின் சுவைக்காக கதறக் கதற வெட்டிக்கொன்று தசையினைப் புசிப்பதை குற்றமாக மனம் உணரவில்லை எனில் என்ஜாய்!//

குறைந்தபட்ச குற்றமா? என்ன சொல்றீங்க, திக்குங்குதே அய்யா. ஏன் அய்யா, கொலையில 10% கொலை, 20% கொலைன்னு ஏதாவது இருக்கா அய்யா. ஏன் அய்யா, பூச்சி உண்ணி தாவரங்களையும் ஆதிமூலம் தான அய்யா படைச்சாரு. ஒருவேளை திரா விட பொத்தல் டின் பிரியாணி தின்னிகளை படைச்ச மாதிரி அதுகளையும் அரைத் தூக்கத்துல படைச்சிருப்பாரோ அய்யா. அப்படி ஜீவகாருண்யம் பார்க்கணும்னா பூச்சி உண்ணித் தாவரங்களை அவியல் வச்சு சாப்பிடுறதுதான அய்யா, பூச்சிகளைக் காப்பாத்தலாம் இல்லியா அய்யா. இன்றைக்கு நீங்க திங்கிற நெல்லு கோதுமையெல்லாம் கூட காட்டுத் தாவரத்தில இருந்து அடக்கி ஒடுக்கப்பட்டு தீனித் தாவரமா ஆக்கப்பட்டதுதானே அய்யா? ஏன் அய்யா மாமிச உண்ணி மனுசனுங்க அடக்கி ஒடுக்கின பயிர்வகையை தின்னுட்டு, பிரியாணி திங்கிறவனெல்லாம் மாக்கான் அப்படிங்கிற அர்த்தம் தொனிக்க பிரியாணி அப்படின்னு மேற்கோள் குறிக்குள்ள போட்டு நெக்குலு விடுறீங்க அய்யா. கான்கிரீட் காட்டுல வீட்டுக்குள்ள பருப்பு சாதம் சாப்பிடறதுக்கு காரணம், மனுசன் காட்டு விலங்குகளை அடக்கியும், அடங்காதப்ப கொன்னு தின்னும் மனித குலத்துக்கு இடம் உருவாக்கிக்கிட்டதாலதான் இல்லிங்களா அய்யா. அப்படி செய்யாம சைவச்சாமியா இருந்தாலோ குளிகையைத் தின்னுட்டிருந்தாலோ இப்ப வரைக்கும் குகைதான், சிக்கிமுக்கிக் கல்லுதான் இல்லியா அய்யா. காலங்காத்தால கரடி முகத்தில முழிச்சிருப்பீங்களே அய்யா, இப்ப பாத்ரூமுல கண்ணாடி முன்னாடி முழிக்க முடியுதே அய்யா. ஒண்ணு கிழங்கைத் தோண்டி திங்கணும், இல்லை குகை முன்னாடி போற மிருகத்தை கொன்னு திங்கணும், இல்லியா அய்யா. அப்படித் தின்னவன் உருவாக்கி வச்ச வசதிகளை அனுபவிச்சு இப்ப தசையைப் புசிக்கிறது பிரியாணி திங்கிற திரா விட குஞ்சு கரும்பாறை ஈனா வேனா ரானாவோட சதி அப்படிங்கறீங்களா அய்யா. அதுவும் சரிதான் அய்யா. நீங்க சொன்னா மறுப்பு ஏது அய்யா. அந்த நன்றியுணர்ச்சி இல்லாம பிரியாணி திங்கிறவன் தான் ஏதோ நாகரிகத்தை ஒழிச்சான், பிளாட்பாரத்துல உருண்டு புரள்றான் அப்படிங்கிற மாதிரி சொல்றீங்களே அய்யா, அதுவும் நியாயந்தான் அய்யா. உணவுச் சங்கிலின்னு இங்கே போட்டிருக்கிறது எதுக்கு அய்யா, சொன்னது புரிஞ்சுதா அய்யா. தசையினை மட்டும் புசிப்பது இல்லை அய்யா, மூளை மிளகுப் பொரியல், கிட்னிக் குழம்பு, கல்லீரல் குழம்பு, கடுகு உளுந்தம்பருப்பு கருவேப்பிலை கடலைப்பருப்பு வறுத்துப் போட்டு மஞ்சளும் கொத்தமல்லியும் மிளகாத்தூளும் போட்டுப் பிரட்டி எடுத்த ரத்த வறுவல் எல்லாம் கூட சாப்பிடறது உண்டு அய்யா. அப்படி சாப்பிடறவன் எல்லாம் காட்டு மிராண்டியா அய்யா. சொல்லுங்க அய்யா. தசை என்ன அய்யா தசை, செடியைப் பிச்சாலுந்தான நார் நாரா வருது அய்யா. நெல்லும் கோதுமையும் எள்ளும் உளுந்தும் non-பிராணநாதா, என்னை விட்டுருங்க விட்டுருங்க அப்படின்னு மானபங்க காட்சி ஹீரோயின் மாதிரி சுத்த தமிழில் கதறினா தான் கருணை காட்டுவீங்களா அய்யா.

//தூண்டிலில் துடிதுடித்த புழுவை ஆசைப்பட்டு உண்டு தூண்டிலின் முள்ளில் சிக்கித் துடிதுடிக்கும் மீனைப் பிடித்து ஆசையாக சுவைத்து உண்ணும் மனிதன் இவன் என்ன துடிதுடிப்பானோ என்று வாடுகிறேன். அனானி வள்ளலார் சொன்ன இதையும் முழுசா இல்லைன்னாலும் அவ்வப்போது கருத்தில் கொள்ளவும் என விண்ணப்பிக்கிறேன்.//

கடல்ல நீந்தப் போயி சுறா வாயில காலைக் குடுத்தா சுறா ஆசையா ஒரு நக்கு நக்கிட்டு விட்டுருமா அய்யா? மனுசனுக்கு புத்தியைக் குடுத்திருக்கிறதுனால சுறாப்புட்டு வச்சு திங்கிறான். கடல்ல இருக்கிற, நிலத்தில் இருக்கிற விலங்குகளை அடக்கி ஒடுக்கி உபயோகத்துக்கும் தீனிக்கும் உபயோகிக்கிற மனுசன் இருக்கிறதாலதான் பசுமாடு உங்க தொழுவத்துல நிக்குது இல்லையா அய்யா. பசுமாடு காட்டெருமையா இருந்தா பால் கறந்து மத்து வச்சு கடைஞ்சு வெண்ணெ எடுத்து முருங்கை இலை போட்டு வதக்கி ருசியா எடுத்த நெய்யை சோத்துல விட்டு திங்கிறதுக்கு வாய்ப்பே இல்லாம காம்புல கைவைக்க வர்றப்பவே முகரையைக் கட்டி ஒரே உதையா விட்டு பால் கறக்க வந்தவன் பல்லை நொறுக்கிப்புடாதா அய்யா. ஏதோ தாவர உண்ணிகள்தான் சுத்தங்கிற மாதிரி பேசறீங்க அய்யா. நீங்க நிம்மதியா பால் கறக்கணும்னா எவனோ ஒருத்தன் அந்த மாட்டோட கொள்ளுத்தாத்தன் மாடை அடக்கி, கொன்னு தின்னுருக்கணும் அய்யா. என்ன அய்யா இப்படி சொல்லிட்டீங்க. இப்ப நீங்க சொன்ன நம்ம சனாதன சிம்பலிச பாரம்பரியத்துக்கு வருவோம் அய்யா. யாக குண்டத்துல மிருகங்களைப் போட்டு எரிச்சா மட்டும் ஒருவேளை சரியோ என்னமோ அய்யா. சிம்பலிசம் அப்படின்னு நீங்க எதோ சொன்னீங்களே அய்யா, காளையை யாகத்துல போட்டு எரிக்கிறது ஆக்ரோசத்தைப் போட்டு எரிக்கிற மாதிரி, கோழியைப் போட்டு எரிக்கிறது கோழைத்தனத்தை எரிக்கிற மாதிரி, மாட்டைப் போட்டு எரிக்கிறது ஆசையைப் போட்டு எரிக்கிற மாதிரி அப்படின்னு சிம்பல் குத்தி ஆடு மாடு தவளை தக்காளின்னு யாக குண்டத்தில போட்டு எரிக்கலாமா அய்யா. அத்வர்யுக்கள் அப்ப வெறும் நெய்யை மட்டும்தான் யாக குண்டத்துல ஊத்த குடுத்துட்டு இருந்தாங்க அப்படின்னு சொல்றீங்களா அய்யா? யாக குண்டம் நம்ம பாரம்பரியம் இல்லையா அய்யா? சோம பானம் நமது பாரம்பரியம் இல்லையா அய்யா? சோம பானம் அப்படிங்கிறது இருமல் மருந்தா அய்யா? நமது பாரத பாரம்பரியத்தை நாமே இப்படி பராமரிக்காமல் விடலாமா அய்யா? என்னமோ போங்க அய்யா. யாக குண்டத்துலயும் பிசிக்கல் பிசுக்காலஜிக்கல் அப்படின்னு எதாவது இருக்கா அய்யா. யாகத் தீ அப்படிங்கிறது சிம்பல் தான், அதில போட்டு எரிச்ச மாடும் ஒரு சிம்பல் தான் இல்லிங்களா அய்யா. திரா விட குஞ்சுகள் இதையெல்லாம் ஒழுங்கா பின்பற்றி பலி குடுத்துட்டு தான அய்யா இருந்தாங்க. ஜெயலலிதா அய்யா ஏன் தடை போடணும் அய்யா? பசுவுக்கு மட்டும் 33% ரிசர்வேசன் குடுத்து புனித பசுவா ஆக்கிட்டதுனாலயா அய்யா? இந்த இட ஒதுக்கீட்டை ஒழிச்சு, பசுவையும் காலி பண்ணி நம்ம பாரம்பரியத்துக்கு மரியாதை குடுக்கணும் அய்யா. அதுவும் குறிப்பா இந்த கிரீமி லேயர் பசுக்கள் இருக்கே அய்யா, அப்பப்பா அதோட தொல்லை தாங்க முடியலை அய்யா. கோழி ஆடு எல்லாம் கசாப்புக் கடையில மெரிட்டுல சீட் வாங்கும்போது பசுவுக்கு மட்டும் ஏன் அய்யா ரிசர்வேசன். ரிசர்வேசனை தூக்கணும் அய்யா. எல்லாம் இந்த கரும்பாறையின் தொண்டர் குஞ்சுகள் செய்யுற அநியாயம் அய்யா.

September 06, 2007 8:37 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv