Tuesday, August 28, 2007

"மாற்றுத்திறனுடையோர்" - உடல் ஊனமுற்றோர் அல்ல..


தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களுக்கு செல்லும் மாற்றுத்திறனுடையோர் கோயில் முழுவதும் சுற்றிப்பார்த்து மன நிறைவுடன் சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலை இருந்தது. இக்குறையைப் போக்கும் விதமாக நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் ‘வீல்சேர்’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாற்றுதிறன் படைத்தவர்களை வீல்சேரில் அமர வைத்து கோயில் பணியாளர்கள் மற்றும் உழவார பணிக்குழுவினர் கோயில் பிரகாரங்கள் மற்றும் சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி போன்ற பகுதிகளுக்கு அழைத்துச் செல்வர்.

நன்றி: தமிழ் முரசு 28-08-07

----------------------------------------

மேலே இருக்கும் செய்தி தமிழ் முரசு மாலை நாளிதழில் படித்தேன். மிக அருமையான சொல். "மாற்றுத்திறனுடையோர்" . இனி அவர்கள் உடல் ஊனமுற்றோர் அல்ல. அவர்களுக்கு சாதாரண மக்களின் திறனுக்கு பதில் மாற்று திறன் இருக்கிறது. அதைக் கொண்டு உலகில் வாழ்கின்றனர்.

இனி தயவு செய்து எல்லோரும் மாற்றுத்திறனுடையோர் என்ற சொல்லைப் பயன்படுத்தலாமே!

18 Comments:

Blogger குமரன் (Kumaran) said...

மாற்றுத்திறனுடையோர் நல்ல சொல் தான் சிவபாலன். அதே போல் இந்த கோவில் சுற்றிக் காட்டும் பணியும் மிக நல்ல பணி. தெரியப்படுத்தியதற்கு நன்றி.

August 28, 2007 7:49 AM  
Blogger கோவி.கண்ணன் said...

//""மாற்றுத்திறனுடையோர்" - உடல் ஊனமுற்றோர் அல்ல.." //

சிபா,
இங்கே சிங்கையில் உடல் குறையுற்றோர், பார்வை இழந்தோர், கேட்கும் திறனற்றோர் என்ற மாற்றுச் சொல் பயன்பாட்டில் இருக்கிறது.

நீங்கள் சொல்லி இருப்பதில் நேர்பெருளாக ( பாசிடிவ்) இருப்பதால் பயன்படுத்தலாம் என்று நானும் கருதுகிறேன்

August 28, 2007 7:49 AM  
Anonymous Anonymous said...

ithukkum yaarm innum saani adikkallayaa?

August 28, 2007 7:50 AM  
Blogger மங்கை said...

சிவா..

போன பிப்ரவரில நாங்க ஒரி கான்ஃப்ரன்ஸ் ஏற்பாடு செய்தோம்...

''Challenges and issues faced by differently abled People''

அப்ப ஒரு ரிடையர்ட் மேஜர் ஒருத்தர் வந்து இருந்தார்.. இங்க தில்லியில அவர் பிரபலம்.. ஒரு விபத்துல தன் கால்கலை இழந்தவர்..

இந்த மாற்றுத்திறனுடையோர் வார்த்தை உயயோகத்துக்கு வந்து சில நாட்கள் ஆச்சு..

அந்த மேஜர் சொன்னார்

"Initailly we were reffred as Physiccally handicapped.. then physically challenged and now differenly abled...waht diffrerence does it make anyway.. we are not bothered how you people refer us...we are bothered about the sense you have about our accessability to places that you have access"

இதுவும் உணமி தானே...

August 28, 2007 8:20 AM  
Blogger TBCD said...

ஆங்கிலத்தில் physically challenged என்று கூறுகின்றார்கள்..அதுவே ஒரு நல்ல மாற்றாக கருதப்பட்டது..

தமிழில், மாற்றுத்திறனுடையோர் என்பது பொதுப்படையாக இருக்கின்றது...

இன்னும் அதனை ரீபையன் செய்ய வேண்டும்...

இது ஒரு நல்ல ஆரம்பம்...

August 28, 2007 8:21 AM  
Blogger வவ்வால் said...

சிவபாலன்,
நல்ல கருத்து, சமீபகாலமாக இப்படி தான் வார்த்தை பிரயோகம் செய்யப்படுகிறது, ஆனால் பத்திரிக்கைகள் தான் பழைய முறையிலேயே போடுகின்றன. எதாவது சந்தர்ப்பத்தில் இதனை சுட்டி இப்படி போட சொன்னால் ஒழிய மற்ற நேரங்களில் செய்தித்தாள்களைப்பாருங்கள் ஊனமுற்றோர் என்று தான் செய்திபோடும்!

சட்டமே இருக்கிறது சாய்தள மேடை வசதி , அனைத்து பொதுமக்களும் புழங்கும் இடங்களிலும் வைக்க வேண்டும் என இந்தியாவில் எத்தனை இடங்களில் அப்படி வசதி இருக்கிறது!

August 28, 2007 8:36 AM  
Blogger பிறைநதிபுரத்தான் said...

சிவபாலன்,
இந்தியாவில் பணிபுரியும் பல பன்னாட்டு தொண்டு நிறுவனங்கள் (OXFAM, Save the Children, Help Age etc) ஊனமுற்றோரை - மாற்றுத்திறனுடையோர் என்றே அழைத்து வருகிறார்கள்.

வலயுலகில் இந்த வார்த்தை அறிமுக்கப்படுத்திய உங்களுக்கு நன்றி.

August 28, 2007 8:49 AM  
Blogger PPattian said...

ஆமாங்க, மங்கை சொல்வது போல் ஆங்கிலத்தில் "Differently Abled" என்பது இப்போது வெகுவாக உபயோகிக்கப்படும் சொல். ஆனால், தமிழில் "மாற்றுத்திறனுடையோர்" என்பது புதிதாக உள்ளது..

இப்போது எல்லா நாடுகளும் "Disabled Friendly Tourism" நோக்கி செல்ல தொடங்கி விட்டன. பல நாடுகள் ஏறக்குறைய அவ்வாறு ஆகி விட்டன.

August 28, 2007 8:51 AM  
Blogger வெற்றி said...

"மாற்றுத் திறனுடையோர்" --- நல்ல சொல். அங்கவீனர்கள் என்றோ அல்லது உடல் ஊனமுற்றோர் என்றோ சொல்வதை விட இச் சொல் நல்லது என நினைக்கிறேன்.

இந்த ஆலயத்தின் முன்மாதிரியைப் பின்பற்றி மற்றைய ஆலயங்களும் இப் பணிகளைச் செய்ய வேண்டும். உண்மையில் இதுதான் உண்மையான சைவ நெறி.

August 28, 2007 10:19 AM  
Blogger சிவபாலன் said...

குமரன்

கருத்துக்கு நன்றி!

August 28, 2007 12:21 PM  
Blogger சிவபாலன் said...

GK,

நானும் அதைத்தான் உணர்ந்தேன்.. ஒரு பாஸ்டீவ் அப்ரோச்..

August 28, 2007 12:22 PM  
Blogger சிவபாலன் said...

அனானி

கருத்துக்கு நன்றி!

August 28, 2007 12:22 PM  
Blogger சிவபாலன் said...

மங்கை

நீங்க சொல்லவருவது புரிகிறது. அவங்களை பொருத்தவரை ஊனம் ஒரு பெரிய தடைதான். ஆனால் இது போன்ற பாஸிடீவ் ஆன சொல்லாடல்கள் மற்றவர்களுக்கு இவர்களைப் பற்றி நல்ல புரிதலைத் தரும் என உணர்கிறேன்.

August 28, 2007 12:25 PM  
Blogger சிவபாலன் said...

TBCD,

இல்லை. physically challenged என்பதை விட Differently Abled மிகச் சரியாக படுகிறது. அதைதான் தமிழில் சொல்லியிருக்கிறார்கள்.

நன்றி!

August 28, 2007 12:28 PM  
Blogger சிவபாலன் said...

வவ்வால்

நீங்கள் சொல்வது மிகச் சரி.. இன்னும் பல நாளிதழ்களில் சுப்ரீம் கோர்ட் என்று தான் எழுதுகிறார்கள்..உச்ச நீதி மன்றம் எனற எளிய தமிழ் வார்த்தை இருக்கும் போது..

நன்றி

August 28, 2007 12:35 PM  
Blogger சிவபாலன் said...

பிறைநதிபுரத்தான்,

தகவல் பரிமாற்றத்திற்கு மிக்க நன்றி!

August 28, 2007 12:37 PM  
Blogger சிவபாலன் said...

புபட்டியன் ,

தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி

August 28, 2007 12:39 PM  
Blogger சிவபாலன் said...

வெற்றி

கருத்துக்கு மிக்க நன்றி!

August 28, 2007 12:40 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv