Sunday, August 06, 2006

கொங்கு நாட்டு புத்தகத் திருவிழா!!

இந்த புத்தகத் திருவிழாவில் முக்கியமான விசயம் என்னவென்றால் 250 ரூபாயிக்கு மேல் புத்தகம் வாங்கினால் "புத்தக ஆர்வலர்" என்னும் சான்றிதழை மக்கள் சிந்தனைப் பேரவை வழங்குகிறது.



நன்றி: தமிழ் முரசு.

கிழக்கு பதிப்பகம் அறையில் இலக்கிய நூல்கள் கிடைத்தாலும் ஜெ.ராம்கி எழுதிய "மு.க" அதிகமாக விற்பனையாகிறது.


மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோட்டில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. விழாவுக்கு நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்தியன் ஆயுர்வேத மருத்துவமனை அறிவழகன், மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். யாருக்கு பரிசு கொடுத்தாலும், புத்தகத்தை பரிசு கொடுங்கள் என புத்தக திருவிழாவில் குமரிஅனந்தன் பேசினார்.

நன்றி: தின மலர்.

10 Comments:

Blogger Sivabalan said...

Update-

கிழக்கு பதிப்பகம் அறையில் இலக்கிய நூல்கள் கிடைத்தாலும் ஜெ.ராம்கி எழுதிய "மு.க" அதிகமாக விற்பனையாகிறது.

August 06, 2006 11:11 AM  
Blogger செல்வநாயகி said...

நேற்றுத்தான் புத்தகக் கண்காட்சி அழைப்பிதழ் வந்து சேர்ந்தது . இது குறித்து நண்பர்களுக்குச் சொல்ல நினைத்துக்கொண்டிருந்தேன். நீங்கள் இப்படியொரு நல்ல பதிவை இது குறித்து இங்கு இட்டிருப்பதற்கு நன்றி

August 06, 2006 11:44 AM  
Blogger Sivabalan said...

செல்வ நாயகி,

வருகைக்கும் கருத்துபதிவுக்கும் மிக்க நன்றி.

இந்த நல்ல விசயத்தை நீங்களும் பதிவிடுங்கள். நிறைய பேருக்கு சென்றடையும்.

நன்றி.

August 06, 2006 11:59 AM  
Blogger இயற்கை நேசி|Oruni said...

கோவை இது போன்ற விசயங்களுக்கு ஒரு சிறப்பான இடம், நான் அங்கிருக்கும் பொழுது "டவுன் ஹால்" பக்கமிருக்கும் பழைய புத்தகக்கடையில் நிறைய நேரம் செலவழிப்பதுமுண்டு. பிறகு லான்ட்மார்க் புத்தக நிலையம்... அப்பப்ப வந்து போகிற புத்தக கண்காட்சிகள், இப்படி நிறைய அதெல்லாம் ஒரு காலம்...

August 06, 2006 12:17 PM  
Blogger Sivabalan said...

தெகா

டவுன் ஹால் நிச்சயம் ஒரு புத்தக பாசறை என்று கூட சொல்லலாம்..

அங்கே வரிசையாக புத்தக கடைகள், பதிப்பகங்கள் மற்றும் நடைபாதை புத்தகக் கடைகள் என ஒரே புத்தகமாக இருக்கும்..

அநத வழியாக போய் வந்தாலே புத்தக காதல் அதிகமாகிவிடும்..

August 06, 2006 12:44 PM  
Blogger Sivabalan said...

Update:

தினமலர் செய்தி

August 06, 2006 9:46 PM  
Blogger ஜெ. ராம்கி said...

Shiva,

Thanks for the updates! :-)

August 06, 2006 11:45 PM  
Blogger Sivabalan said...

ராம்கி,

வருகைக்கு நன்றி.

உங்களுடைய வெற்றிப் படைப்பான "மு.க." வுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்..

மேலும் வெற்றிகளை குவிக்க வாழ்த்துக்கள்..

August 07, 2006 6:25 AM  
Blogger கோவி.கண்ணன் said...

நம்ம ராம்கி புத்தகம் மு.க நன்றாக விற்கிறதா ? ... தேர்தலுக்கு முன்பே வரும் என்று எதிர்ப்பார்க்கப் பட்ட நூல் ... அவருடைய தலைவர் மாதிரியே ... லேட்டா மலர்ந்தாலும் லோட்டஸ்சாக (தாமரையாக) மலர்ந்திருக்கிறது ... ம் ... மு.க வாசனையும் ராம்கி வாசனையும் நன்றாக பரவட்டும் :)

August 07, 2006 6:40 AM  
Blogger Sivabalan said...

GK,

நம்ம ராம்கியின் படைப்பு வெற்றி படைப்பாக அமைந்திருப்பது நல்ல விசயம்..

வருகைக்கு நன்றி.

August 07, 2006 7:05 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv