Wednesday, August 02, 2006

தந்திரி என்பவர் யார்?



சபரிமலை நடைமுறைகளைத் தெரிந்துகொண்டாலே, சர்ச்சை தொடர்பான பல விஷயங்கள் புரிபடும். திருவாங்கூர் தேவஸ்தானம் என்று அழைக்கப்படும் தேவசம் போர்டுக்குச் சொந்தமாக ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் இருக்கின்றன. அதில் சபரிமலையும் ஒன்று.

அந்த வகையில் கோயில் நிர்வாக விஷயங்களில் தேவசம் போர்டுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், வழிபாடு சம்மந்தமான முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம், செங்கன்னூர் தாழமண் மடத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கே பரம்பரை பரம்பரையாக உண்டு.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள்தான், ஆண்டுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் சபரிமலையில் தந்திரியாக இருப்பார்கள். அதிகபட்ச அதிகாரம் பெற்றவர்கள் அவர்களே.
அவர்களுக்கு அடுத்தபடியாக அதிகாரம் படைத்தவர்கள், மேல்சாந்தி என்றழைக்கப்படும் குருக்கள். அவர்களுக்குக் கீழே இருப்பவர்கள் கீழ்சாந்தி.

தேவசம் போர்டுக்குச் சொந்தமான கோயில்களில் குருக்களாக இருப்பவர்களில் அனுபவம் வாய்ந்த முதியவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதிலிருந்து ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள். அப்படி தேர்வானவர், ஓராண்டுக்கு மேல்சாந்தியாக இருப்பார். இதே போல் தேர்ந்தெடுக்கப்படும் இன்னொருவர் கீழ்சாந்தியாக 3 ஆண்டுகள் இருப்பார்.

மேல்சாந்தியும் கீழ்சாந்தியும் தேவசம் போர்டைச் சேர்ந்தவர்கள் என்றாலும், சபரிமலையைப் பொறுத்தவரை தந்திரிக்குக் கட்டுப்பட்டவர்கள். ஐயப்பனின் நகைகளைப் பராமரித்துவரும் பந்தள ராஜ பரம்பரையினருக்குக் கூட கோயில் உள்ளே அறை கிடையாது. ஆனால் தந்திரிக்கும் மேல்சாந்திக்கும் உண்டு.

அதிகாரம் படைத்த தந்திரிகளின் பலம் சபரிமலையில் மட்டுமே. அவர்களுக்கு வேறு கோயில்களிலும் வேலை இல்லை. அதிகாரமும் இல்லை. இதில் முக்கியமான விஷயம், அவர்கள் சந்நியாசிகள் இல்லை. குடும்பஸ்தர்கள்.

ஐயப்பன் சீசன் இல்லாத நாட்களில் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் யாகம் செய்யவும் பிரதட்சண பூஜை செய்யவும் கிளம்பிவிடுவார்கள். தவிர, ஐயப்பனையே தொட்டு வணங்கும் வல்லமை படைத்தவர் என்ற பெருமை தந்திரிகளுக்கு உண்டு.

நன்றி: தினகரன்.

25 Comments:

Blogger கோவி.கண்ணன் said...

//ஐயப்பன் சீசன் இல்லாத நாட்களில் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் யாகம் செய்யவும் பிரதட்சண பூஜை செய்யவும் கிளம்பிவிடுவார்கள். தவிர, ஐயப்பனையே தொட்டு வணங்கும் வல்லமை படைத்தவர் என்ற பெருமை தந்திரிகளுக்கு உண்டு.//

வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் யாகம்? அல்லது ஸ்திரி போகமா ?
பிரதட்சண பூஜை ? 'அங்க(ங்கள்)' பிரதட்சண பூஜை ? :))

தந்திரிக்கு கண்ட(ன)ம் :))

August 02, 2006 8:05 PM  
Blogger Thekkikattan|தெகா said...

ஓ, இது குடும்ப பிசினஸ்னு சொல்ல வாரீங்க... அப்படித்தானே :-)))

August 02, 2006 8:31 PM  
Blogger Sivabalan said...

GK,

வல்லமை படைத்த தந்திரிகள் சமூக பொருப்பையும் உணரவேண்டும்

August 02, 2006 9:02 PM  
Blogger Sivabalan said...

தெகா,

Best Commentங்க..

என்னத்த சொல்ல ..

அனைத்து தர மக்களும் இதை புரிஞ்சுகிட்டா சரி...

August 02, 2006 9:06 PM  
Blogger Unknown said...

நல்ல பதிவு சிவபாலன்,

பத்திரிக்கைகளில் படித்தவரை தந்திரி தப்பு செய்திருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவே தெரிகிறது.இதை மத பிரச்சனையாக திசை திருப்ப அவரோ அல்லது வேறு சிலரோ முயற்சிக்ககூடும்.அதை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிய வேண்டும்.இந்து இயக்கங்கள் இவருக்கு ஆதரவாக களத்தில் குதித்தால் அவற்றின் பெயர் தான் ரிப்பேர் ஆகும்.

இந்த விஷயத்தை பொறுத்தவரை அந்த பெண்(ஷோபனா) இவரை மயக்கி பணம் பிடுங்கியிருக்கிறாள்.சின்னவீடு வைத்து கொள்வது ஒரு மனிதனின் சொந்த விஷயம்(அவர் மனைவி புகார் தராதவரை) என்ற வாதம் இங்கே அடிபடக்காரணம் இவர் 1 கோடி ரூபாய் வரை அந்த பெண்ணுக்கு தந்துள்ளார் என்ற (வதந்தி)செய்தி.

யார் காசு இந்த 1 கோடி ரூபாய்?ஐயப்பன் காசு தானே?

இந்த பிரச்சனை கம்யூனிசம்,இந்துத்வா என திசை திருப்பப்படாமல்(இதுவரை அப்படி நடக்கவில்லை,நல்லவேளை) உண்மை வெளிவர வேண்டும்.கோயில் சொத்தை ஆடிட் செய்து முறைப்படி கணக்குகளை அரசு கண்காணிக்க வேண்டும்.அப்படி நடக்கும்போது ஐயப்பன் பெயரை சொல்லி அழுவார்கள் கயவர்கள்.விடக்கூடாது.

ஐயப்பன் சொத்து.திருடி சின்னவீட்டுக்கு தரலாமா?அது எவ்வளவு பெரிய பாவம்?இந்து மத துறவிகளே இதற்கு எதிராக குரல் தரவேண்டும்.

அதே சமயம் தேவையின்றி ஐயப்பன் கோயிலில் பிரச்சனைகளை ஏற்படுத்தி பூஜை நின்று போகக்கூடாது.

தருமம் ஜெயிக்கட்டும்.அதற்கு வழி செய்யப்பா,ஐயப்பா.

சாமி சரணம்
சரணம் ஐயப்பா

August 02, 2006 10:01 PM  
Blogger Sivabalan said...

செல்வன சார்

நல்ல கருத்துப் பதிவு.

உண்மைதான். இவ்வளவு வல்லமை படைத்தவர் சமூக அக்கறை கொண்டவராகவும் இருந்திருக்க வேன்டும்.

அந்த காசு ஐய்யபனுக்கு அனைத்து பக்தர்களும் கானிக்கையாகையவை.

ஒரு தனிமத விசயத்தில் யாரும் தலையிட முடியாது தான். இருந்தாலும் இந்துக்களால் பெரிதும் போற்றப்படும் ஐயப்பன் கோவில் மிக வல்லமை படைத்தவராக தந்திரி இருப்பதால் அனைதுவித தணிக்கைக்கும் உடபடுத்தப படவேண்டும்.

ஐயப்ப பக்தர்களுக்கு உணமையை எடுத்துக் கூறும் கடமை நீதி துறைக்கும் அரசாங்கத்திற்கும் நிறைய உள்ளது.

August 02, 2006 10:18 PM  
Blogger லக்கிலுக் said...

தந்திரிகள் யாரோ? எவரோ அவர்களுக்கு சக்தியும், பக்தியும் இருக்கிறதோ? இல்லையோ...... அதையெல்லாம் விட்டுத் தள்ளுங்க....

சர்ச்சைக்குரிய தந்திரி யாரோட செல்லப்பிள்ளை, யார் கிட்டே டிரைனிங் எடுத்தார் என்பதற்கு ஒரு புகைப்பட ஆதாரம் இருக்கு.... இங்கே பாருங்களேன் : http://madippakkam.blogspot.com/2006/08/blog-post_02.html

August 02, 2006 10:32 PM  
Blogger Sivabalan said...

luckylook,

கலக்கல் போட்டோ...

நல்ல டைமிங்...

மிகவும் இரசித்தேன்..

நன்றி, வருகைக்கும் சுட்டிக்கும்...

August 02, 2006 10:37 PM  
Blogger Unknown said...

தகாத முறையில் ஒரு ஆண் வலியச் சென்று ஒரு பெண்ணை நாடினாலும் சரி அதுவே ஒரு பெண் வலிய ஆணை நாடினாலும் சரி குற்றம் சாட்டப்படுவது பெண்தான்.அழகிகள் கைதுதான் செய்தியாகுமே தவிர போக்கிரி ஆண் கைதானதாக செய்திகிடையாது.

//இந்த விஷயத்தை பொறுத்தவரை அந்த பெண்(ஷோபனா) இவரை மயக்கி பணம் பிடுங்கியிருக்கிறாள்.//

தினத்தந்திச் செய்தியும் அப்படித்தான் உங்கள் பார்வையும் அப்படித்தான் :-((

இதுவே ஏன் "தந்திரி தந்திரமாக பணத்தால் அப்பாவிப் பெண்ணை மயக்கினான் " என்று உங்களால் சொல்ல முடியவில்லை?

ஆண்:- குற்றம் நிருபிக்கப்படும் வரை நிரபராதியாகவே இருக்கிறான்.
பெண்:- குற்றம் சாட்டப்பட்ட உடனேயே தண்டணையை அனுபவிக்கத் தொடங்குகிறாள்.நிரபராதி என்று தெரிய வரும் போது அவளிடம் இழப்பதற்கு எதுவும் இருப்பதில்லை.

பாலியல் குற்றங்கள் ஒருகை தட்டுவதால் மட்டும் ஓசை பிறப்பதில்லை.இரண்டுபேரின் தொடர்பும் உண்டு.பாலியல் தொழிலாளியாகவே இருந்தாலும் அவர்களின் பக்கமும் எதாவது நியாயம் இருக்கும். அது நமக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம், அதற்காக மயக்கி,பிடுங்கி என்பன ஒருதலைப்பட்சமானவை.

//யார் காசு இந்த 1 கோடி ரூபாய்?ஐயப்பன் காசு தானே?//

தனது பணம் இவ்வாறு செலவு செய்யப்படுவது எல்லாம் அறிந்த ஐயப்பனுக்கு தெரியாமலா இருந்திருக்கும்.
தேவைக்கு அதிகமாக பணம் சேரும் போது பாலியல் குற்றங்களும் இன்னபிற தவறுகளும் நடக்கும் அது எந்த புனித இடமாக/மடமாக இருந்தாலும் சரி.எந்தக் கடவுளும் பணம் கேட்பது இல்லை.பக்தர்கள் பணம் போடுவதைக் குறைத்துக் கொண்டலே கோவில்களில் போட்டி,பொறாமை,இது போன்ற குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு.

August 02, 2006 10:46 PM  
Blogger Sivabalan said...

கல்வெட்டு அய்யா,

//எந்தக் கடவுளும் பணம் கேட்பது இல்லை.பக்தர்கள் பணம் போடுவதைக் குறைத்துக் கொண்டலே கோவில்களில் போட்டி,பொறாமை,இது போன்ற குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு. //


சமுதாயத்தில் இக்கருத்து நிலை நிறுத்தப் படவேண்டுமானால் உணமை வெளிவந்து முகமூடிகள் கிழிக்கப் படவேண்டும். ஆனாலும் மக்கள் எளிதில் விசயங்களை மற்ந்துவிடுவதால், ஒரு நீன்ட கால தீர்வாக இது போன்ற சர்ச்சைகளில் உணமைகள் எந்த வித உந்துதலுமின்றி வெளிக்கொண்டுவருவதின் மூலம் ஓரளவு சாத்தியம்.

ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமானால் மீன்டும் பெரியார் வேண்டும். அது தான் சமுதாயத்தில் ஒரு மறு மலர்ச்சிக்கு வாய்ப்பு.

வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.

செல்வன் மீன்டும் வருவார் என நம்புகிறேன்.

August 02, 2006 11:03 PM  
Blogger Unknown said...

கல்வெட்டு,

அந்த பெண் மாபியா கும்பலை வைத்து தந்திரியையும் தன்னையும் நிர்வாண புகைப்படம் எடுக்க வைத்திருக்கிறாள்.தந்திரி உத்தமர் கிடையாது.காமுகர்.ஆனால் அந்த பெண் பிளாக் மெயிலர்.ஒருகோடி ரூபாய் வரை பேரம் பேசி படியாமல் போய் அவரை கட்டிவைத்து மிரட்டி ரசாபாசமாகி பின்னர் விவகாரம் வெளி வந்திருக்கிறது.

தந்திரி செய்த தப்பு ஊழலும்,தவறான நடத்தையும்.அந்த பெண் செய்த தப்பு பிளாக்மெயில் மற்றும் தவறான நடத்தை.

//பாலியல் குற்றங்கள் ஒருகை தட்டுவதால் மட்டும் ஓசை பிறப்பதில்லை.இரண்டுபேரின் தொடர்பும் உண்டு.பாலியல் தொழிலாளியாகவே இருந்தாலும் அவர்களின் பக்கமும் எதாவது நியாயம் இருக்கும். அது நமக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருக்கலாம், அதற்காக மயக்கி,பிடுங்கி என்பன ஒருதலைப்பட்சமானவை.//

மாபியா கும்பலை வைத்து நிர்வாண புகைப்படம் எடுத்து பிளாக்மெயில் செய்வது மயக்கி பிடுங்குவதாகாதா கல்வெட்டு?

August 02, 2006 11:05 PM  
Blogger Unknown said...

தட்ஸ்தமிழ் செய்தியை பாருங்கள்.(முழு செய்திக்கு சுட்டியை சொடுக்கவும்.தொடர்புடைய செய்தியை மட்டும் தந்துள்ளேன்.தந்திரி எவ்வள்வு பெரிய கயவன் என்பதும் அந்த பெண் எவ்வளவு பெரிய கில்லாடி என்பதும் தெரியவரும்)

http://thatstamil.oneindia.in/news/2006/08/03/thantri.html

விபச்சாரப் பெண்களுடன் தான் இருப்பது போல புகைப்படம் எடுக்க கூலிப் படையை ஏவிய விபச்சாரப் பெண் ஷோபா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து தந்திரி கண்டரரு மோகனரு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கொச்சியில் உள்ள ஃபிளாட்டில், சாந்தா என்ற பெண் உள்ளிட்ட சில விபச்சாரப் பெண்களுடன் தந்திரி கண்டரரு மோகனரு இருப்பது போல புகைப்படம் எடுக்கப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.


விபச்சாரப் பெண் சாந்தா, அவர் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் ஷோபா ஜான் (இவருக்கும் விபச்சார தொழில் தான்) ஆகியோரிடம் கடந்த சில நாட்களாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஷோபாதான், மோகனருவை புகைப்படம் எடுக்க கூலிப படையை ஏவியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஷோபா, அவரது கூட்டாளிகள் விஜில் மற்றும் அணில்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

கொச்சி நகரில் விபச்சாரத் தொழிலை மிகப் பெரிய அளவில் ஷோபா செய்து வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

August 02, 2006 11:14 PM  
Blogger Unknown said...

//மாபியா கும்பலை வைத்து நிர்வாண புகைப்படம் எடுத்து பிளாக்மெயில் செய்வது மயக்கி பிடுங்குவதாகாதா கல்வெட்டு?//

செல்வன்,
நான் சொல்ல வருவது இதுதான். தந்திரியை லேசாக விமர்சித்துவிட்டு பெண் என்பதால் மயக்கி,பிடுங்கி என்று குற்றம் சாட்ட வேண்டாம் என்பதே.

விசாரணையின் முடிவில் அவர் இவ்வாறு செய்தது நிரூபிக்கப்பட்டால் பெண் என்பதற்காக எந்த சலுகையும் தரவும் கூடாது. அவ்வளவே.

//தந்திரி உத்தமர் கிடையாது.காமுகர்.ஆனால் அந்த பெண் பிளாக் மெயிலர்.//

இது இரண்டு தவறான நபர்களுக்கு இடையே நடக்கும் போட்டி. இந்த காமுகன் விமர்சனத்தை நீங்கள் முன்னமே சொல்லிய்ருந்தால் நான் ஏதும் சொல்லியிருக்க மாட்டேன்.

மேலதிகத் தகவலுக்கு நன்றி

August 02, 2006 11:27 PM  
Blogger Sivabalan said...

செல்வன் சார் & கல்வெட்டு அய்யா

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி.

August 03, 2006 8:11 AM  
Blogger கோவி.கண்ணன் said...

சிபா ... எந்த பதவிக்கும் தனிமனித ஒழுக்கம் அவசியமா ? தனிப்பட்டவர்களின் இச்சைகள் விமர்சனத்துக்கு உரியதா ? உங்கள் கருத்து என்ன ?

August 03, 2006 8:40 AM  
Blogger Sivabalan said...

GK,

மனிதன் என்று வந்து விட்டாலே நல்லொழுக்கம் தீய ஒழுக்கம் இரண்டும் இருக்கத்தான் செய்யும் என்பது அனைவரும் அறிந்ததே... ஆனாலும் தந்திரி போன்றோர் கொஞ்சம் மனக்கட்டுபாடோடு இருத்தல் சமுதாய கடமை ஆகிவிடுகிறது..

என்னமோ போங்க.. இன்னைக்கு பேப்பர் பார்தப்பக்கூட ரொம்ப வருத்தமாக இருந்த்து.. இந்தியாவில் தான் இப்படியா? அல்லது எல்லா இடங்களிலும் இப்படியா?

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

August 03, 2006 8:55 AM  
Blogger கோவி.கண்ணன் said...

//ஆனாலும் தந்திரி போன்றோர் கொஞ்சம் மனக்கட்டுபாடோடு இருத்தல் சமுதாய கடமை ஆகிவிடுகிறது//

மனக்கட்டுப்பாடு தேவை இல்லிங்க ... வெளியில் செய்தி கசியாமல் எச்சரிக்கையாக நடந்து கொண்டாலே போதும். :))))))))))

August 03, 2006 8:59 AM  
Blogger Sivabalan said...

GK,

மேட்டர்ல மாட்டிட்டாலே மேட்டர் வெளிய வந்திரும்..

எ.க. பிரேமானந்தா.

August 03, 2006 9:03 AM  
Blogger VSK said...

தனிமனித ஒழுக்கம் சுயக்கட்டுப்பாட்டால் வருவது.

ஒவ்வொருவருக்கும் இது உடல் நலத்துக்கும், உள்ள நலத்துக்கும் அவசியப் படுகிறது.

அதை மீறுவதும், மீறாததும் அவரவர் விருப்பம்.

ஆனால், தந்திரி என்றல்ல; பொது வாழ்க்கையில் ஈடுபடும் அனைவருக்குமெ இது மிகவும் முக்கியம்.

தன்னால் தன் இயக்கமோ, நிறுவனமோ பலமாக பாதிக்கப்படக் கூடிய சாத்தியக்கூறுகள் இதில் கண்டிப்பாக உண்டு.

வேசியின் தொழிலை அவள் செய்தாள்.

அவளிடமிருந்து வேறு ஒன்றும் எதிர்பார்க்கவில்லை.

ஆனால், பல லக்ஷம் மக்கள் பக்தியுடன் வணக்கும் பொறுப்பில் உள்ள ஒருவருக்கு இது இல்லாமல் போயிருந்தால், அது மன்னிக்கக் கூடியது அல்ல.

தண்டிக்கப்பட வேண்டியதே!

August 03, 2006 9:20 AM  
Blogger Sivabalan said...

SK அய்யா,

நீங்கள் சொல்வது சரிதான். பொது வாழ்வில் இருப்பவர்கள் எல்லோரும் கடை பிடிக்கவேண்டும்.

ஆனால், மதம் சம்பந்தப்பட்ட மற்றும் இறை நம்பிக்கை என வரும் பொழுது, அந்த சுய நல்லொழுக்கம் எனும் சமூக அக்கறை மிக அதிகமாகிவிடுவது தவிர்க்க முடியாதது...

August 03, 2006 9:38 AM  
Blogger VSK said...

நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்கிறேன்!
Still,இதில் பிரித்துப் பார்த்தல் தவிர்க்கலாமே!
பொது, பொதுவாய் இருக்கட்டுமே!

August 03, 2006 10:13 AM  
Blogger Sivabalan said...

SK அய்யா,

அப்படிங்கிறீங்களா... சரி விடுங்க பொதுன்னு வைத்துக் கொள்வோம்..

ஆனால், பாருங்க.. உடனே அரசியல் வாதிகளும் இதில் அடங்கிறாங்க...

அதனால தான் கொஞ்சம் யோசிக்க வேண்டியதாகிவிட்டது.

August 03, 2006 10:20 AM  
Blogger VSK said...

//அரசியல் வாதிகளும் இதில் அடங்கிறாங்க...

அதனால தான் கொஞ்சம் யோசிக்க வேண்டியதாகிவிட்டது.//


அவர்கள் இதில் சேர மாட்டார்கள்!
அனேகமாக நிறையப் பேர் 'அவள்' பிரிவில் சேர்வர்!!!.

August 03, 2006 10:42 AM  
Blogger Sivabalan said...

SK அய்யா,

உண்மைதான்.

'அவளாக' இருந்தால் மட்டுமே அரசியலில் நிலைக்க முடியும். இது கிட்டதட்ட எல்லா நாட்டுக்கும் பொருந்தும்.

அதனால நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்கிறேன்.

August 03, 2006 10:47 AM  
Blogger Sivabalan said...

ஒரு சின்ன Update - தந்திரி பற்றி.

தந்திரிக்கு சாதகமாகவே மேல்சாந்தி இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் பதவி போய்விடும்.

சில ஆண்டுகளுக்கு முன், கேரளாவில் இரு மதத்தினர் இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. அதைத் தவிர்ப்பதற்காக, அருகிலுள்ள தேவாலயத்துக்குச் சென்றார் அப்போதைய மேல்சாந்தி.

மத நல்லிணக்கத்துக்கான இந்தச் செயலை தந்திரி பெரிதுபடுத்தி, அவரைப் பதவி நீக்கம் செய்தார். பிறகு அவர் நீதிமன்றத்தின் உதவியோடு மீண்டும் பதவிக்கு வந்தது தனிக்கதை.

August 03, 2006 10:50 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv