"கோக்" ஏன் குடிக்க கூடாது?
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய (சி.எஸ்.இ.) இயக்குனர் சுனிதா நாராயண் 02-08-06 அன்று ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.
குளிர்பானங்களில் 23 மடங்கு அதிகமாக பூச்சிமருந்துகள் இருப்பது தெரிந்தது.
குறிப்பாக கெபலாகுனோர் - 4 மடங்கு
லிண்டேன் - 54 மடங்கு
குளோர்பைரிஃபாஸ் - 47 மடங்கு அதிமாக உள்ளது.
இதனால் ஏற்படும் பாதிப்பு
புற்றுநோய்
நரம்பு கோளாறுகள்
மூளை பாதிப்பு
பார்வை கோளாறு.
கடந்த 2003 பிப்ரவரியில் இந்த சர்ச்சை ஆரம்பித்தபோது, குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் இரண்டிலுமே பூச்சிமருந்து கலந்திருக்கிறது என்றார் சுனிதா. தண்ணீர் பாட்டில்களுக்கான தரக் கட்டுப்பாடுகளை நிர்ணயித்து மத்திய அரசு அதே ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. 5 மாதங்கள் விசாரணை நடத்திய கூட்டுக்குழு 2004 பிப்ரவரியில் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.
சி.எஸ்.இ. சொன்ன பல குற்றச்சாட்டுகளை ஆமோதித்த நாடாளுமன்றக் குழு, இந்திய நிலைமைக்கு ஏற்றவாறு குளிர்பானங்களுக்கு தரக் கட்டுப்பாடு களை நிர்ணயிக்க வேண்டும் என அரசுக்கு ஆலோசனை சொன்னது. ஒரு ஆண்டு காலத்துக்கு குளிர்பானங்களில் இருக்கும் பூச்சிமருந்துகள் பற்றி கண்காணித்து, அதன்பிறகு தரக்கட்டுப்பாடுகளை நிர்ணயிக்கலாம் என இது முடிவெடுத்தது.
இதற்கிடையே இந்திய தர நிர்ணயக் கழகம் தனியாக, ஒரு தரக்கட்டுப்பாடு நிர்ணயிக்க முயன்றது. இதை குளிர்பான நிறுவனங்கள் எதிர்த்தன.
குளிர்பானங்கள் மூன்றே பொருட் களை வைத்துதான் தயாரிக்கப்படுகின்றன. தண்ணீர், சர்க்கரை மற்றும் குளிர்பான கான்சன்ட்ரேஷன். சர்க்கரையின் தரத்தை ஆராயாமல், குளிர்பானத்துக்கு தரம் நிர்ணயம் செய்யக்கூடாது என்பது அவர்களின் ஆட்சேபம்.
இதைத் தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாடு முழுக்க 200 சர்க்கரை சாம்பிள்களை எடுத்து ஆராய்ச்சி செய்தது. சர்க்கரையில் பூச்சிமருந்து எதுவும் இல்லை என முதற்கட்ட ஆராய்ச்சி முடிவில் தெரிந்தது. இரண்டாவது கட்ட ஆராய்ச்சி முடிவு வரும் 2007 மார்ச்சில் வெளிவரும். அப்போதுவரை வேறெந்த முடிவும் எடுக்க வாய்ப்பு இல்லை. அதன்பின், தண்ணீரை பரிசோதிக்க வேண்டும் என குளிர்பான நிறுவனங்கள் கேட்டாலும் கேட்கலாம்.
02-08-06 அன்று உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு மசோதா நாடாளுமன்றத்தில் குரல் ஓட்டு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் உணவுக் கண்காணிப்பு என்பது, கிட்டத்தட்ட 9 அமைச்சகங்கள் சம்மந்தப்பட்ட விவகாரம். எல்லா அமைச்சகங்களிலும் ஒரு சுற்று சுற்றிவரும்போது, தட்டிக்கழிப்பது இயல்பாகி விடுகிறது. இதுதவிர, கலப்படம் தொடர்பான நடவடிக்கை என்பது மாநில அரசு சார்ந்த விஷயமாகி விடுகிறது.
தண்ணீரில் இயல்பாக இருக்கும் பூச்சிமருந்துகள் குளிர்பானத்தில் சேர்கின்றன. நாங்கள் முடிந்தவரை அதை நீக்குகிறோம் என்கின்றன குளிர்பான நிறுவனங்கள்.
ஆனால், மேற்கத்திய நாடுகளில் செய்யும் சுத்திகரிப்பு முறைகளை இந்த நிறுவனங்கள் இங்கே செய்வதில்லை என்பதுதான் குற்றச்சாட்டே.
Update:-
பெப்சிகோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டிக் டெட்விலர் நேற்று(09-08-06) கூறும்போது, இந்தியாவில் தயாராகும் எங்கள் பானங்களில் நச்சுப்பொருள் கலக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் புகாரை மறுக்கிறோம். இந்திய நாட்டின் தரக்கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் சர்வதேச கட்டுப்பாட்டு சட்டங்களின் அடிப்படையிலேயே அவை தயாராகின்றன. உலகம் முழுவதும் எந்த தரம், ருசியில் அவை இருக்கிறதோ, அதே தரம் மற்றும் ருசியில்தான் இந்தியாவிலும் இருக்கிறது என்றார்.
-------------------------
ஐரோப்பிய யூனியன் விதிமுறைகளின்படியே இந்தியாவில் குளிர்பானங்களை தயாரிக்கிறோம். நச்சுப் பொருள் இருக்கிறதா, இல்லையா என்று உறுதியாக தெரியாமலேயே பல மாநிலங்களில் தடை விதித்துள்ளது அதிருப்தி அளிக்கிறது என்று கோககோலா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கார்ஜ் ஜோரஸ் கூறியுள்ளார்.
-------------------------
நன்றி: தினகரன்
71 Comments:
பிரச்சனைஉயை ஆழமாப் பார்த்தால் நாம் இந்ந்தியாவில் சாதரணமாய் குடிக்கும் நீரும் இப்படித்தான் இருக்குமா? இதைவிட மோசமாகவும் இருக்கலாமே?
சிறில்
நீங்கள் சொல்லும் கருத்தில் தான் குளிர்பான நிறுவனங்களும் வாதிடுகின்றன.
ஆனால் இந்த கருத்தை மறுக்க நம்மிடம் தகுந்த ஆதாரம் இல்லை..
உ.ம். திருப்பூர் சுற்றியுள்ள கிராமங்களில் தண்ணீர் முற்றிலும் கெட்டுவிட்டது..
வருகைக்கும் கருத்து பதிவுக்கும் நன்றி.
சிவபாலன்,
இதுபற்றி இந்திய அரசு, மற்றும் தமிழக அரசுகள் என்ன சொல்லுகின்றன?
வெற்றி,
மத்திய அரசு தடைவிதித்தால் தமிழக அரசு ஆதரிக்கும் என தெரிகிறது.
பள்ளிகளில் தடை செய்யப பட்டுவிட்டதாக கேள்விப்பட்டேன்.
மத்திய அரசு இன்னும் எந்த முடிவுக்கும் வரவில்லை என தெரிகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//பிரச்சனைஉயை ஆழமாப் பார்த்தால் நாம் இந்ந்தியாவில் சாதரணமாய் குடிக்கும் நீரும் இப்படித்தான் இருக்குமா? //
ஆமாம், இந்த பிரட்சினையை ஆணிவேர் வரை சென்று தேடிப்பார்த்தால் கடைசியில் வந்து நிற்கும் இடம் பூச்சிக் கொல்லி (மனிதக் கொல்லியும்தான்) மருந்து. நேரடியாக கொடுக்கமால் மண்ணுக்குள் கொட்டி கொஞ்சம் கொஞ்சமாக தற்கொலை செய்து கொள்வதுதான். இது.
என்றைக்கு டி.டி.ட்டி போன்ற பூச்சிக் கொல்லிகள் நாட்டிற்குள் புகுந்தனவோ அன்றைக்கு ஆரம்பித்தது இந்த இழவுகள்.
நம்ம தாத்தாவும் பாட்டிக்கு பாட்டியும் மார்பாக புற்றுநோய் வந்த செத்தார்கள், அன்றைய தினத்தில்? ஏன் 10 இரண்டு பெண்களுக்கு மேலை நாடுகளில் மார்பாக புற்று நோய் தாக்குகிறது?
//இதைவிட மோசமாகவும் இருக்கலாமே?//
இந்திய நிலத்தடி நீர் அதி வேகமாக மாசுப்பட்டு வருவது உண்மைதான், இந்த அந்நிய பூச்சி கொல்லி மற்றும் உரங்களை அதிக மகசூல் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் பயன்படுத்தப் போய் அதுவே இன்று எமனாக அமைந்தது, உண்மைதான்?
தாய்பாலில் கலப்படம் செய்வது மட்டுமே மிச்சம் அங்கும் இந்த கோக் போன்ற தண்ணீருக்கு மாற்று குடிநீராக பயன்படுத்துவதின் மூலமாக, மூளையை கொன்று பிறக்கும் பொழுதே பிறக்கலாம்.
சிபா ... !
டாஸ்மாக் சரக்காவது நச்சின்னு இருக்குமா ?
//பிரச்சனைஉயை ஆழமாப் பார்த்தால் நாம் இந்ந்தியாவில் சாதரணமாய் குடிக்கும் நீரும் இப்படித்தான் இருக்குமா? //
ஆமாம், இந்த பிரட்சினையை ஆணிவேர் வரை சென்று தேடிப்பார்த்தால் கடைசியில் வந்து நிற்கும் இடம் பூச்சிக் கொல்லி (மனிதக் கொல்லியும்தான்) மருந்து. நேரடியாக கொடுக்கமால் மண்ணுக்குள் கொட்டி கொஞ்சம் கொஞ்சமாக தற்கொலை செய்து கொள்வதுதான். இது.
என்றைக்கு டி.டி.ட்டி போன்ற பூச்சிக் கொல்லிகள் நாட்டிற்குள் புகுந்தனவோ அன்றைக்கு ஆரம்பித்தது இந்த இழவுகள்.
நம்ம தாத்தாவுக்கு prostrate வகை புற்றுநோயும் பாட்டிக்கு பாட்டி மார்பாக புற்றுநோயும் வந்தா செத்தார்கள், அன்றைய தினத்தில்? ஏன் 10க்கு இரண்டு பெண்களுக்கு மேலை நாடுகளில் மார்பாக புற்று நோய் தாக்குகிறது? கொஞ்சம் லாஜிக்கலாக யோசிப்போமே... யோசிக்கலாம் தானே?
//இதைவிட மோசமாகவும் இருக்கலாமே?//
இந்திய நிலத்தடி நீர் அதி வேகமாக மாசுப்பட்டு வருவது உண்மைதான், இந்த அந்நிய பூச்சி கொல்லி மற்றும் உரங்களை அதிக மகசூல் பெறவேண்டும் என்ற எண்ணத்தில் பயன்படுத்தப் போய் அதுவே இன்று எமனாக அமைந்தது, உண்மைதான்?
தாய்பாலில் கலப்படம் செய்வது மட்டுமே மிச்சம் அங்கும் இந்த கோக் போன்ற தண்ணீருக்கு மாற்று குடிநீராக பயன்படுத்துவதின் மூலமாக, மூளையை கொன்று பிறக்கும் பொழுதே பிறக்கலாம்.
இதற்கு இன்னொரு தீர்வும் இருக்கிறது, எல்லா இந்தியர்களையும் நிலத்தடி நீர் மாசு பட்டு போனதினால், அமெரிக்கவிற்கு குடிபெயரச் சொல்லலாம்தானே...
தெகா
நீங்கள் சொல்வது சரி. செயற்கை உறங்கள் நிலங்களை கெடுத்து குட்டிச் சுவர் ஆக்கிவிட்டன.. இதில் கலக்கும் மழை நீரும் கெட்டுவிடுகிறது.
இதில் இன்னுமொரு கொடுமை காற்றில் இருக்கும் மாசினால் மழை நீரே கெட்டுத்தான் வருகிறது.
என்னமோ போங்க.. ஒன்னும் புரியவில்லை..
GK,
பன மரத்து பதநீர் (சில விசயங்களை சேர்த்தினால் கள்ளு) ஒரு வேளை நன்றாக இருக்கலாம்.
இருக்கவே இருக்கு இளநீர்... அதிலையும் ஏகப்பட்ட பிரச்சனை இருக்கிறது..ம்ம்ம்ம்ம்
GK, உங்கள் பதில் பின்னூடமிட்டேன். வரவில்லை. கொஞ்சம் Check பண்னுங்க..
அனைவரும் ஒரு விசயத்தை பார்க்க தவறுகிறீர்கள்,
இது கோக் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சனையோ அல்லது பூச்சிக் கொல்லி பற்றிய பிரச்சனையோ அல்ல.
இது நமது நிலத்தடி நீரை, நீலத்தங்கத்தை தனது சந்தைத் தேவைக்காக ஏகாதிபத்தியங்கள் கபளீகரம் செய்யும் 'GATS' ஒப்பந்தத்தின்படியான, நாட்டை காலனியாக்கும் ஒரு மறுகாலனியாதிக்கத் திட்டம் பற்றிய பிரச்சனை.
மக்கள் தண்ணீருக்கு தவித்துக் கொண்டிருக்கும் பொழுது ஆறு , குளங்களை தனியார் மயமாக்கி அவன் எங்கு லாபம் கிடைக்கிறோதோ அங்கு விற்பது பற்றிய பிரச்சனை.
யார் உரிமை கொண்டாடுவது என்பது பற்றிய பிரச்சனை.
தண்ணீர் தனியார் மயம் பற்றிய பிரச்சனை.
தண்ணீர் மற்றும் இயற்க்கை வளங்களான -- சமூகத்தின் சொத்துக்களை யாரோ ஒரு சிலரின் லாப வெறிக்காக சமூகத்துக்கு எந்தப் பயனுமின்றி தனியார்மயமாக்குவது பற்றிய பிரச்சனை.
நாடு அடிமையாவது பற்றிய பிரச்சனை.
பாடுபட்டு பெற்ற அரைகுறை சுதந்திரம்கூட பறிபோவது பற்றிய பிரச்சனை.
இந்த அம்சத்தை யாரும் புரிந்து கொண்ட மாதிரி தெரியவில்லை.
கோக் லிட்டர் 1.2 பைசாவுக்கு தாமிரபரணியில் தண்ணீர் எடுக்கிறது தெரியுமா?
எனது ப்திவையும் அதில் நான் கொடுத்துள்ள சுட்டிகளில் உள்ள விசயங்களையும் நேரம் செல்வழித்து படித்துப் பார்த்தால் நாம் எவ்வளவு பெரிய ஆபாயத்தை நோக்கிச் செல்கிறோம் என்பது தெரியும்.
http://poar-parai.blogspot.com/2006/08/blog-post.html
மேலும் எல்லா பன்னாட்டு குளிர்பானங்களிலும் பூச்சிக் கொல்லி இருப்பதன் காரணம். பசுமை புரட்சி, .....
பசுமை புரட்சி என்னும் ஏகாதிபத்திய சதி இந்திய சந்தையை அவர்கள் சூரையாட மட்டும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரவில்லை மாறாக இந்திய விதைகளை அழித்தன, இந்திய நிலம், நீரை மாசுபடுத்தி விட்டன.
இன்றும், நாம் உண்ணும் காய்கறிகளில் மிக அபாயகரமானதாக மேல் நாடுகளில் தடை செய்யப்பட்ட ரசாயன பூச்சிக் கொல்லிகளின் Residue உள்ளது. இது பற்றி அவ்வப்பொழுது குமுதத்தில் கூட கட்டுரைகள் வந்துள்ளன.
குளிர் பானங்கள் 8 லிட்டர் தண்ணீரிலிருந்து ஒரு லிட்டராக மாற்றி தயாரிக்கப்படும் தாயாரிப்பு முறையை கையாளுகின்றனர். இதன் விளைவால் பூச்சிக் கொல்லிகளின் concentration(அடர்த்தி) அதிகமாகிறது. மேலும் கம்பேனிகளும் பூச்சிக் கொல்லிகள் சேர்க்கிறார்கள்.
மேலும் ஒரு லிட்டர் போக மீதி 7 லிட்டர் தண்ணீர் தண்ணீர் அவர்களது தாயாரிப்பின் முடிவில் நஞ்சாக மாறிவிடுகிறது. இது நிலத்தில் அப்படியே விடப்படுகிறது. இது தன் பங்கிற்க்கு 48 லிட்டர் நிலத்தடி நீர பாழாக்குகிறது(எ-கா, கேரள பிளச்சிமாடா).
இவை எல்லாம் பிரச்சனைகள் என்றாலும்
நாடு அடிமையாவதுதான் இதன் மையாமான மிக முக்கியமான பிரச்சனை.
நன்றி,
அசுரன்
அசுரன்
நீங்கள் கூறும் கருத்து ஆழ சிந்திக்க வேண்டிய விசயம்.
நீங்கள் சொல்லும் கருத்தில பார்க்கும் பொழுது
1. பனியன் தொழிற்சாலை
2. சாயப் பட்டறை
3. காகித தொழிற்சாலை
4. சக்கரை தொழிற்சாலை
இன்னும் பிற தொழிற்சாலைகள்
இவை அனைத்திலும் சரியான அல்லதி முறையான கழிவு நீர் சுத்திகரிப்பி இல்லை. ஜெர்மினியின் தொழில் நுட்பட்த்தை கணக்கில் கொண்டால் நம்முடைய தொழிற்சாலையின் தரம் மிகவும் மோசம்.
இப்பிரச்சனையை கணிக்கில் கொண்டால் நம்மில் பாதிக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளை மூட வேண்டி வரும். இதை எவ்வாறு எதிர் கொள்ளப் போகிறோம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
இன்னொரு முக்கியமான விசயத்தை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
நம் நாட்டில் பெரு வாரியான தொழிற்சாலைகளில் கழுவு நீரில் வண்ணம் நீக்குதல் (Colour Removal) நடை பெறுவதில்லை. காரணம் இதன் விலை மிக மிக மிக அதிகம். இது மேலை நாடுகளில் காட்டாயம்.
இதற்கும் என்ன செய்ய போகிறோம்.
அமெரிக்காவில் கர்ப்பிணி பெண்கள் சில வகை மீன்கள்
சாப்பிடக்கூடாதென்கிறார்கள். கடலில் அத்தனை
மெர்க்குரி நிறைந்திருக்கிறது.சில வகை மீன்களை
உண்டால் குழந்தைகளுக்கு மூளை குறைபாடு ஏற்படும்.
Piranha வந்து தன் கால்களைத் தின்று விட்டது கூடத் தெரியாமல் Gameboy விளையாட்டில் மூழ்கிவிட்ட அந்த பையனின் படத்துக்கும், பூச்சிக் கொல்லி கோக் கும் என்ன சம்பந்தம்?
ஆதிரை,
நீங்கள் சொல்லும் மெர்க்குரி எனும் விசம் மிகக் கொடுமையானது. உண்மையில் இதற்கு சரியான மருத்துவ முறைகள் இல்லை என கேள்விப்பட்டேன்.
நம்முடைய மாமல்லபர கடகறை ஓரம் இந்த மெர்க்குரியின் அளவு அதிகமாக உள்ளதாக படித்திருக்கிறேன். ஆனால் இந்த பிரச்சனையை பொதுமக்களுக்கு எடுத்து செல்லப் படவில்லை என்பதுதான் இதில் மிகப் பெரிய சோகம்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
சிவபாலன்,
எனது பின்னூட்டத்தில் பிரதானமாக நான் குறிப்பிட்டிருப்பது நாடு அடிமையாவது பற்றி. சுற்றுச் சுழல் பிரச்சனை சிறிதாக ஒரு தக்வல் என்ற அடிப்படையில்தான் வருகிறது.
ஆனாலும் தாங்கள் கேட்டதால் சுற்றுசூழல் பிரச்சனைக்கும் பதில் சொல்கிறேன்.
நான் பதில் சொன்னது போல் நீங்களும் எனது நாடு அடிமையாவது பற்றிய முந்தைய பின்னூட்டத்தின் பெரும் பகுதிக்கு கருத்து சொல்லக் கடைமைப் பட்டுள்ளீர்கள்.
தொழில் வளர்ச்சிக்கு தடையாக இருப்பவன் கம்யுனிஸ்டாக இருக்க முடியாது.
இயற்கையுடன் நமது உறவை சீராக வைத்துக் கொண்டே தொழில் வளர்ச்சியடைய முடியாதா?
இதற்க்கு தடையாக இருப்பது என்ன?
ஏகாதிபத்தியத்தின் சந்தை வெறி.
அதற்க்காக, அராஜகமாக தேவைக்கு அதிகப்படியாக இயற்கையை சிதைத்து சின்னாபின்னமாக்கி உறப்த்தி செய்வது. (அதாவது 100 எண்ணிக்கை விற்பனையாகும் வாய்ப்புள்ள கார் சந்தைக்கு, 4 கம்பெனிகள் 60 எண்ணிக்கையில் மொத்தம் 240 கார்கள் உறப்த்தி செய்வது. இழப்பு - 140 கார்களுக்கான மனித உழைப்பு, இரும்பு, சுற்றுச் சூழல் மாசுபாடு, ETC).
இதுதானே....காரணம்
க்யொட்டா பொராட்டோ கால் என்ன சொல்கிறது.
அமெரிக்கா மாசு படுத்துவதை மற்ற நாடுகளிடம் விற்கிறது.(அதாவது அமெரிக்கா தனது மாசில் 50%(Example) மற்ற ஏழை நாடுகளில் மாசைக் குறைக்க உதவி செய்தோ அல்லது பணம் கொடுத்து மற்ற ஏழை நாடுகள் அந்த மாசுக்கு பொறுப்பாக்கிக் கொள்ளாச் செய்து தான் மாசு படுத்துவதை தொடர்கிறது)
இது இந்த பொருளாதார அமைப்பின் failure இல்லையா?
நீங்கள் சொன்ன சாயப் பட்டறைகள், பனியன் தொழிற்சாலைகள் எல்லாமே புரட்சிக்கு பிந்திய சமூகத்திலும் இருக்கும். ஒரு வேளை ஒரு குறிப்பிட்ட தேவைக்காக இயற்க்கையை மாசுபடுத்துவது தவிர்க்க முடியாது எனில், ஒருங்கிணைந்து போராடி தனது விடுதலையை தேடிக் கொண்ட, புரட்சி செய்த அந்த சமுதாயத்துக்கு வேறு கஸ்டமான மாற்று வழிகளை கையாளுவதோ அல்லது தனது தேவைகளை மாற்றிக் கொள்வதோ பெரிய பிரச்சனையாக இருக்காது.
அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தில் தேவைகளுக்காக உற்பத்தி இருக்கும் மாறாக சந்தைகளுக்கான உறப்த்தி இருக்காது.
சந்தை உற்பத்தியில்தான் தேவைகளை விளம்பரங்கள் மூலம் உருவாக்க வேண்டியுள்ளது. அதாவது 'தேவை உற்பத்தி'(விளம்பரங்கள்) என்பதே ஒரு தனி தொழிலாக உருவாகியுள்ள கோமாளித்தனம் ஏகாதிபத்திய சமூக்த்தின் சீரழிவைத்தான் காட்டுகிறது.
தன்னுள் இயைந்து செயல்படும் இயற்கையை, தனித்தனியாக தனக்குள்ளேயே அடித்துக் கொள்ளும் ஒருங்கிணைப்பு இல்லாத ஏகாதிபத்திய மனித சமூகம் எதிர் கொள்ள முடியும் என்று நினைப்பது அடி முட்டாள்தனமானது.
இது பற்றி இரு விரிவான கட்டுரைகள் இட்டேன்:
http://poar-parai.blogspot.com/2006/07/1.html
http://poar-parai.blogspot.com/2006/07/ii.html
படித்துப் பார்க்கவும்
நன்றி,
அசுரன்
வஜ்ரா
கோகின் சுவையில பூச்சிக் கொல்லி தெரிவதில்லை என்பதற்கான ஒரு உவமை..
சரியா வரவில்லையா?
அசுரன்
நீங்கள் கொடுத்த அனைத்து சுட்டியையும் படித்து பார்த்துவிட்டு முடிந்தவரை பதில் அளிக்கிறேன்.
நீங்கள் சொல்லியிருக்கும் கருத்து மிகவும் விவாதத்திற்குரியது. மிக அருமையான பின்னூடம்.
நானும் எனக்கு தெரிந்தவரை பதில் கூறுகிறேன்.
எனக்கு சற்று அவகாசம் வேண்டும்.
மீன்டும் வருகைக்கு நன்றி.
சிவபாலன்,
//எனக்கு சற்று அவகாசம் வேண்டும்.//
உறுதியாக.....
எனது கருத்துக்களை சிலரைப் போல விதன்டவாதம் செய்யாமல் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதாக சொன்னதற்க்கு நன்றி.
கட்டாயம் தங்களது கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
ஆவலுடன் காத்திருக்கிறேன்
நன்றி,
அசுரன்.
அசுரன்
புரிந்துகொண்டமைக்கு நன்றி.
நிச்சயம் நீங்கள் இங்கே கூறியிருக்கும் கருத்தில் எனக்கு சிலவற்றில் உடன்பாடில்லை. அதை முடிந்தவரை விளக்குகிறேன்.
நன்றி.
//GK, உங்கள் பதில் பின்னூடமிட்டேன். வரவில்லை. கொஞ்சம் Check பண்னுங்க.. //
சிபா ...
வரவே இல்லை !
GK,
சே.. இந்த பிளாக்கர் தொல்லைக்கு அளவில்லாமல் போய்விட்டது.
இப்ப Over to உங்க பதிவு.
// Sivabalan said...
GK,
சே.. இந்த பிளாக்கர் தொல்லைக்கு அளவில்லாமல் போய்விட்டது.
இப்ப Over to உங்க பதிவு.
//
சிபா ...
போட்டாச்சு ... போட்டாச்சு :))
சிபா ... இரண்டுதடவை அதே பின்னூட்டம் போட்டிருந்திங்க ... ஒன்னு அப்போதே போட்டுவிட்டேன் .. இன்னும் ஒன்றை நீங்கள் சொன்னதும் இப்போதுதான் போட்டேன் .. :)
சிபா ... !
என்ன பெரிய வார்த்தை சொல்லிட்டிங்க .. இரண்டுதடவை பின்னூட்டம் போட்டால் என்ன ?மூழ்கின குடி (அந்த பதிவு)வடிந்துவிடவா போகிறது ...
:):):):):):):):)
நான்கைந்து வருடங்களுக்கு முன்பு கொடைக்கானலில் உள்ள தெர்மாமீட்டர் செய்யும் ஒரு தொழிற்சாலையின் மெர்க்குரிக் கழிவு சுற்றுச் சூழலை மிகவும் பாதிக்கிறது என்று ஒரு போராட்டம் கொஞ்ச நாள் நடந்தது. அதனால் எந்த பயனும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
நமக்கு அரசின் சட்ட திட்டங்களை (law of the land)மதிக்கத் தெரியாது; அரசுக்கு தாங்கள் போடும் சட்ட திட்டங்களை நிறைவேற்றும் நோக்கமும் கிடையாது. எல்லாமே நம்மூரில் "விளையாட்டுத்தான்:. :(
கொஞ்சநாள் இந்த கோக் விஷயம் எல்லோரும் பேசுவோம். அதன்பின்...?
//நான்கைந்து வருடங்களுக்கு முன்பு கொடைக்கானலில் உள்ள தெர்மாமீட்டர் செய்யும் ஒரு தொழிற்சாலையின் மெர்க்குரிக் கழிவு சுற்றுச் சூழலை மிகவும் பாதிக்கிறது என்று ஒரு போராட்டம் கொஞ்ச நாள் நடந்தது. அதனால் எந்த பயனும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. //
தருமி, இதனைத்தான் நான் Fuji Film தயாரிக்கும் தொழிற்சாலை என்று தவறுதலாக எனது ஒரு பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தேன். நீங்கள் கூறிய அந்த தொர்மமீட்டர் விசயம்தான் நான் சொல்லவந்ததும்.
ஒண்ணும் நடந்த பாடில்லைதான். உடல் நலம் சார்ந்த விழிப்புணர்வு அற்ற நிலையே இதற்கெல்லாம் காரணமென்று நான் கருதுகிறேன்...
தருமி அய்யா,
மெர்க்குரி கொடிய விசமே.. அது மெல்ல சாககடிக்கும்.
பொதுவாக மக்கள் (பெரும் பாலான நாடுகளில்) பிரச்சனையை எளிதில் மறந்துவிடுகிறார்கள். இதற்கு ஊடகங்களும் சில தேவையற்ற விசயங்களை பெரிது படுத்தி மறக்கடிக்கச் செய்கின்றன என்று கூட கூறலாம். உம் Kushboo விசயம்..
ஆனால், குளிர்பான ஜாம்பவானுகளுக்கு எதிராக ஊடகங்களில் செய்தி வருவதே பெரிய விசயமாகிவிடுகிறது.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
தெகா,
அவசரமாக்கப்பட்ட வாழ்க்கை அமைப்பு மக்களை மாக்கள் ஆக்கிக் கொண்டிருப்பது ஒரு கசப்பான உண்மை.
மக்கள் மாக்களாக இல்லாமல் போராடியதில் ஒரிஸ்ஸாவில் குண்டடி பட்டு 12 Tribals பலி
நன்றி,
அசுரன்.
அசுரன்
நீங்கள் குறிப்பிடும் சம்பவம் கலிங்கா நகர் டாடா ஸ்டீல் தொழிற்சாலையைப் பற்றியது என நினைக்கிறேன். உண்மைதான், மிகவும் வருத்தமான சம்பவம்தான்.
நீங்கள் சிவப்பு சிந்தனையுடன் பிரச்சனையை அனுகுவது போல் நான் உணர்கிறேன்.
நீங்கள் கொடுத்த சுட்டியை படித்துவிட்டு பதிலளிக்கிறேன்.
நீங்களும் தெகாவும் சொல்வதைப் பார்த்தால் மனிதன் சக்கரத்தை கண்டுப் பிடித்ததே தவறு என்பது போல் ஒரு பிரம்மை ஏற்பட்டுவிடுவது தவிர்க்க முடியவில்லை.
//நீங்களும் தெகாவும் சொல்வதைப் பார்த்தால் மனிதன் சக்கரத்தை கண்டுப் பிடித்ததே தவறு என்பது போல் ஒரு பிரம்மை ஏற்பட்டுவிடுவது தவிர்க்க முடியவில்லை.//
சிவா, எனக்கு எந்த ismத்தின் மீதும் ஈர்ப்பும் கிடையாது ஒன்றும் கிடையாது. என் மனதில் தோன்றியதை அப்படியே இங்கு எழுதி வைக்கிறேன் அவ்வளவே. அதுவும் இயற்கை பலாத்காரத்தை மட்டுமே மனதில் கொண்டு. மற்றபடி யார் எக்கோடு கெட்டால் எனக்கென்ன, என்ற சராசரி மனித நிலையில்தான் நானும். புத்திசாலியாக. எனது இரத்த அழுத்தமும், மிக சராசரியாகவே இருக்கிறது.
மீசையெல்லாம் துடிக்கவில்லை :-))
வேண்டுமானல் பிராண்ட் சர்ட்டும், மற்ற இத்தியாதி விசயங்களையும் செய்து மெஜாரிட்டியுடன் ஐயக்கமாகிவிடுவோம். ஒழிந்தது பிரட்சினை.
தெகா,
நல்ல படியாக இப்பொழுதாவது தெரிந்துகொண்டீர்களே...
பிளாக்கின் தலைப்பை உடனே மாற்றுங்கள்.." செயற்கை நேசி" என்று... :)
சிவபாலன்
நல்ல பதிவு.விவசாயிகள் அதிக அளவில் பூச்சிகொல்லிகளை பயன்படுத்தியதால் வந்த விளைவு நிலத்தடி நீர் முழுக்க நஞ்சாகி விட்டது.இயற்கையான பூச்சி கொல்லிகளுக்கு இனி மாற முடியாது.ஏனெனில் அவை இனி பலன் தராது என நினைக்கிறேன்.
ஐரோப்பிய தரக்கட்டுப்பாடு அளவை இந்தியாவில் கொண்டுவந்தால் பல இந்திய நிறுவனங்கள் அழிந்துவிடும்.அவற்றால் அந்த அளவுக்கு செலவு செய்து தண்ணீரை சுத்திகரிக்க முடியாது.வேண்டுமானால் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் அதை கட்டாயமாக்கலாம்.கோக் பெப்சியால் செலவு செய்ய முடியும் என்பதால் அவை இரண்டுக்கு மட்டுமாவது இந்த விதியை கட்டயமாக்கலாம்.
அதை விட முக்கிய விஷயம் நம் நீர் ஆதாரங்களை எப்படி காக்க்ப்போகிறோம் என்பதுதான்.நிலத்தடி நீரை எப்படி சுத்தம் செய்யப்போகிறோம்?ஒன்றும் புரியவில்லை.
தண்ணீர் பஞ்சம் உள்ள இடங்களில் கோக்,பெப்சி மற்றும் எந்த நிறுவனத்துக்கும் அனுமதி தராமல் நீர் வளம் மிகுந்த இடங்களுக்கு அவற்றை அனுமதித்தல் இன்னொரு தீர்வு.அதையும் முயலலாம்.அல்லது தொழிற்சாலைகள் தமக்கு தேவையான் நீரை மழைநீர் சேகரிப்பு போன்று தாமே பெறும் முறையையும் பரிசீலிக்கலாம்.
தண்ணியும் முக்கியம்,தொழிலும் முக்கியம்.
பார்க்கலாம் என்ன செய்கிறார்கள் என்று.
//பன மரத்து பதநீர் (சில விசயங்களை சேர்த்தினால் கள்ளு) ஒரு வேளை நன்றாக இருக்கலாம்.//
சுண்ணாம்பு சேர்த்தால்தான் பதநீர். ஒன்றும் சேர்க்கவில்லையென்ரால் அது கள்ளு...
சிவபாலன்
நேற்று இது பற்றிய இன்னொரு தளத்தில் இந்தியாவில் தயாராகும் மதுவகைகளிலும் பூச்சிகொல்லி மருந்து அதிகம் உள்ளது என படித்தேன்.குடிமகன்கள் இந்த சாக்கை வைத்தாவது திருந்துவார்களா இல்லை வழக்கம் போல் நாளை முதல் குடிக்க மாட்டேன் என சத்தியம் செய்வார்களா?:)))))
செல்வன் சார்
நல்ல கருத்தை சொல்லியிக்கிறீர்கள்.
உண்மைதான், நமது தொழிற்சாலைக் கழிவுகளில் நான் அறிந்த வரையில் வண்ணம் நீக்குதல் எங்கேயும் இல்லை. வண்ணம் நீக்கும் முறை அமல் படுத்த வேண்டுமானல் அதற்கு செலவிடு தொகை அந்த தொழிற்சாலையை விட அதிகமாகத்தான் இருக்கக்கூடும்.
நிலத்தடி நீரை வளமைப் படுத்த ஆழ் குழாய் மழை நீர் சேகரிப்பு ஒரு விதத்தில் உதவும்.
கோக் பிரச்சனை நிச்சயம் தொழில்மயமாக்கலால் ஏற்படும் பிரச்சனை. இதை அனைத்து தரப்புக்கும் ஏற்றவாறு ஒரு தீர்வு காணபதே நாட்டின் முன்னேறுவதற்கு உறுதுணையாக இருக்கும்.
உதய்,
சுட்டிக்காடியதற்கு நன்றி.
கொஞ்சம் மப்புள உலறிட்டேன்னு நினைக்கிறேன்..
ஆமா நம்ம ஏரியாவுல பனை மரமே அதிகமாக இல்லையே, எப்படி நீங்க சரியா சொன்னீங்க?
செல்வன் சார்
மதுவில் பூச்சிக் கொல்லி இல்லை என்றால் தான் நாங்க போராடுவோம்... அப்பவாது குடிக்காமல் இருப்பாங்களேன்னு தான்..:)
எங்க ஏரியாவில இருக்கிற கொஞ்ச நஞ்ச பனை மரத்திலையும் எந்த மரத்துல கள்ளு இறக்கறாங்க, எந்த மரத்துல பதநீர்ன்னு தெளிவா பானையை வைச்சே கண்டுபிடுச்சிருவோம்.
உதய்,
தனிமடல் அனுப்புகிறேன்.. கொஞ்சம் அந்த டெக்னிக்கை சொல்லி கொடுத்திருங்க.. அடுத்த முறை செல்லும் போது கொஞ்சம் உபயோகமாக இருக்கும்.
தெகா
சும்மா ஜாலியாக போட்ட Comment.
தப்பா நினைச்சுக்காதீங்க.
அசுரன்,
நான் வரும் வார இறுதியில் உங்களுக்கு பதிலளிக்கிறேன்.
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
சிவாபாலன்,
//நீங்களும் தெகாவும் சொல்வதைப் பார்த்தால் மனிதன் சக்கரத்தை கண்டுப் பிடித்ததே தவறு என்பது போல் ஒரு பிரம்மை ஏற்பட்டுவிடுவது தவிர்க்க முடியவில்லை. //
மேற்குறிப்பிட்டதை ஒத்த கருத்தை இந்த பதிவின் பின்னூட்டத்திலேயே முன்பொருமுறை நீங்கள் சொல்லி அதற்க்கு ஒரு பதில் பின்னூட்டம் இட்டேன்.
ஆனால், மீண்டும் அதே கருத்து தங்களிடமிருந்து வருகிறது, ஆகையால் மீண்டும் அந்த பின்னூட்டத்தை இடுகிறேன்.
//தொழில் வளர்ச்சிக்கு தடையாக இருப்பவன் கம்யுனிஸ்டாக இருக்க முடியாது.
இயற்கையுடன் நமது உறவை சீராக வைத்துக் கொண்டே தொழில் வளர்ச்சியடைய முடியாதா?
இதற்க்கு தடையாக இருப்பது என்ன?
ஏகாதிபத்தியத்தின் சந்தை வெறி.
அதற்க்காக, அராஜகமாக தேவைக்கு அதிகப்படியாக இயற்கையை சிதைத்து சின்னாபின்னமாக்கி உறப்த்தி செய்வது. (அதாவது 100 எண்ணிக்கை விற்பனையாகும் வாய்ப்புள்ள கார் சந்தைக்கு, 4 கம்பெனிகள் 60 எண்ணிக்கையில் மொத்தம் 240 கார்கள் உறப்த்தி செய்வது. இழப்பு - 140 கார்களுக்கான மனித உழைப்பு, இரும்பு, சுற்றுச் சூழல் மாசுபாடு, ETC).
இதுதானே....காரணம்
க்யொட்டா பொராட்டோ கால் என்ன சொல்கிறது.
அமெரிக்கா மாசு படுத்துவதை மற்ற நாடுகளிடம் விற்கிறது.(அதாவது அமெரிக்கா தனது மாசில் 50%(Example) மற்ற ஏழை நாடுகளில் மாசைக் குறைக்க உதவி செய்தோ அல்லது பணம் கொடுத்து மற்ற ஏழை நாடுகள் அந்த மாசுக்கு பொறுப்பாக்கிக் கொள்ளாச் செய்து தான் மாசு படுத்துவதை தொடர்கிறது)
இது இந்த பொருளாதார அமைப்பின் failure இல்லையா?
நீங்கள் சொன்ன சாயப் பட்டறைகள், பனியன் தொழிற்சாலைகள் எல்லாமே புரட்சிக்கு பிந்திய சமூகத்திலும் இருக்கும். ஒரு வேளை ஒரு குறிப்பிட்ட தேவைக்காக இயற்க்கையை மாசுபடுத்துவது தவிர்க்க முடியாது எனில், ஒருங்கிணைந்து போராடி தனது விடுதலையை தேடிக் கொண்ட, புரட்சி செய்த அந்த சமுதாயத்துக்கு வேறு கஸ்டமான மாற்று வழிகளை கையாளுவதோ அல்லது தனது தேவைகளை மாற்றிக் கொள்வதோ பெரிய பிரச்சனையாக இருக்காது.
அப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தில் தேவைகளுக்காக உற்பத்தி இருக்கும் மாறாக சந்தைகளுக்கான உறப்த்தி இருக்காது.
சந்தை உற்பத்தியில்தான் தேவைகளை விளம்பரங்கள் மூலம் உருவாக்க வேண்டியுள்ளது. அதாவது 'தேவை உற்பத்தி'(விளம்பரங்கள்) என்பதே ஒரு தனி தொழிலாக உருவாகியுள்ள கோமாளித்தனம் ஏகாதிபத்திய சமூக்த்தின் சீரழிவைத்தான் காட்டுகிறது.
தன்னுள் இயைந்து செயல்படும் இயற்கையை, தனித்தனியாக தனக்குள்ளேயே அடித்துக் கொள்ளும் ஒருங்கிணைப்பு இல்லாத ஏகாதிபத்திய மனித சமூகம் எதிர் கொள்ள முடியும் என்று நினைப்பது அடி முட்டாள்தனமானது.
இது பற்றி இரு விரிவான கட்டுரைகள் இட்டேன்:
http://poar-parai.blogspot.com/2006/07/1.html
http://poar-parai.blogspot.com/2006/07/ii.html//
தங்களது கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கிறென்
நன்றி,
அசுரன்.
தெகா,
//மற்றபடி யார் எக்கோடு கெட்டால் எனக்கென்ன, என்ற சராசரி மனித நிலையில்தான் நானும். புத்திசாலியாக. எனது இரத்த அழுத்தமும், மிக சராசரியாகவே இருக்கிறது.
மீசையெல்லாம் துடிக்கவில்லை :-))
வேண்டுமானல் பிராண்ட் சர்ட்டும், மற்ற இத்தியாதி விசயங்களையும் செய்து மெஜாரிட்டியுடன் ஐயக்கமாகிவிடுவோம். ஒழிந்தது பிரட்சினை. //
நல்ல விசயம்
இன்றைய நடுத்தர வர்க்கத்தின் பிழைப்புவாத உணர்வை அப்படியெ படம்பிடித்து காட்டியுள்ளீர்கள்.
நன்றி,
அசுரன்.
இந்த அமெரிக்க பொருளாதாரம் எப்படி வேலை செய்கிறதென்று
பாருங்கள்.
வண்டி வண்டியாக ப்ரென்ச் ப்ரையை தட்டில் கொட்டி
ஒரு பக்கம் மெக் டொனால்ட் மக்களை obese ஆக்கி
உடல் நலத்தை கெடுக்கிறது.
இன்னொரு பக்கம் உப்பி போன உடலை இளைக்க வைக்க
ஏராளமான health club, diet plan, diet drink.
ரெண்டு பக்கமும் காசு.
ஆதிரை
நீங்கள் சொல்வது மிகச்சரி.
என்னுடன் வேலை செய்யும் அமெரிக்கர் ஒருவர் இந்த் "Diet Pepsi" அடிமை. ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு 12 டின் காலி செய்துவிடுவார்.
என்ன செய்வது? எல்லா இடங்களிலும் இதே நிலைமைதான்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//இந்த அமெரிக்க பொருளாதாரம் எப்படி வேலை செய்கிறதென்று
பாருங்கள்.
வண்டி வண்டியாக ப்ரென்ச் ப்ரையை தட்டில் கொட்டி
ஒரு பக்கம் மெக் டொனால்ட் மக்களை obese ஆக்கி
உடல் நலத்தை கெடுக்கிறது.
இன்னொரு பக்கம் உப்பி போன உடலை இளைக்க வைக்க
ஏராளமான health club, diet plan, diet drink.
ரெண்டு பக்கமும் காசு. ///
அமெரிக்கா கொடுப்பது சாய்ஸ்.தேர்வு செய்யும் உரிமை.
மெக்டொனால்ட்ஸ் பிரென்சு பிரையும் தரும்.புரூட் சாலடும் தரும்.எதை வாங்குவது என்பது உங்கள் விருப்பம் என்ற சாய்சையும் தரும்.
பிரென்சு பிரையை நாமாக விருப்பப்பட்டு வாங்கிவிட்டு "அமெரிக்கா என்னை குண்டாக்கிவிட்டது" என புலம்பினால் அர்த்தம் இல்லை.
குண்டாவதும் உண்டாவதும் அவரவர் விருப்பம்.தப்பு நாம் செய்துவிட்டு அடுத்தவன் மீது பழிபோடுவதில் அர்த்தம் இல்லை...ஹி..ஹி
செல்வன சார்
மெக்டொனால்ட்ஸ்க்கு சென்று விட்டு பிரென்சு பிரை சாப்பிடாமல் எப்படி வெளியே வருவது..
சுவை அப்படி.. என்ன செய்வது...
//மெக்டொனால்ட்ஸ்க்கு சென்று விட்டு பிரென்சு பிரை சாப்பிடாமல் எப்படி வெளியே வருவது..
சுவை அப்படி.. என்ன செய்வது...//
Thats why I said
"குண்டாவதும் உண்டாவதும் அவரவர் விருப்பம்.தப்பு நாம் செய்துவிட்டு அடுத்தவன் மீது பழிபோடுவதில் அர்த்தம் இல்லை...ஹி..ஹி"
மூலப்பொருட்களின் தரம் சரி இல்லை என்று மருந்துப் பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களும் தரம் குறைந்த மருந்துகளை விற்பேன் என்று வாதிட்டால் இதைப்போன்றே விட்டு விட முடியுமா என்ன?
செல்வன் சார்
சுவைக்கு / ஒரு பழுக்கத்திற்கு அடிமையாகிவிட்டால் கொஞ்சம் கடினம்தான் ... அதிலிருந்து வெளியே வருவதற்கு.
நவீன பாரதி,
நிச்சயம் விட முடியாது.
குளிர்பான நிறுவனங்கள் கட்டாயம் ஏதாவது செய்து பூச்சிக் கொல்லியை கட்டுப் படுத்த வேண்டும்.
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் நன்றி.
அசுரன்
உங்கள் கருத்துக்கு மிகுந்த மதிப்பளிக்கிறேன்.
நிச்சயம் எனக்கு தெரிந்த பதிலையும், எனக்கு தெரியாதவற்றை உங்களிடம் கேல்வியாகவும் தந்துவிடுகிறேன்,
உங்கள் வருகைக்கும் கருத்துப்பதிவுக்கும் மிக்க நன்றி.
Update:- Pepsi Co - statement
பெப்சிகோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டிக் டெட்விலர் நேற்று(09-08-06) கூறும்போது, இந்தியாவில் தயாராகும் எங்கள் பானங்களில் நச்சுப்பொருள் கலக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் புகாரை மறுக்கிறோம். இந்திய நாட்டின் தரக்கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் சர்வதேச கட்டுப்பாட்டு சட்டங்களின் அடிப்படையிலேயே அவை தயாராகின்றன. உலகம் முழுவதும் எந்த தரம், ருசியில் அவை இருக்கிறதோ, அதே தரம் மற்றும் ருசியில்தான் இந்தியாவிலும் இருக்கிறது என்றார்
Update:- Coca Cola - statement
ஐரோப்பிய யூனியன் விதிமுறைகளின்படியே இந்தியாவில் குளிர்பானங்களை தயாரிக்கிறோம். நச்சுப் பொருள் இருக்கிறதா, இல்லையா என்று உறுதியாக தெரியாமலேயே பல மாநிலங்களில் தடை விதித்துள்ளது அதிருப்தி அளிக்கிறது என்று கோககோலா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கார்ஜ் ஜோரஸ் கூறியுள்ளார்.
//"குண்டாவதும் உண்டாவதும் அவரவர் விருப்பம்.தப்பு நாம் செய்துவிட்டு அடுத்தவன் மீது பழிபோடுவதில் அர்த்தம் இல்லை...ஹி..ஹி"//
இப்படி எல்லாமே நாம்ம சாய்ஸ்யாக ஆகிவிட்டால் பிறகு எதற்கு அரசாங்கமும், சுகாதார துறையும், உணவு சார்ந்த தர கட்டுப்பாட்டு துறையும் ஏனைய பிறவும்? மக்களை ஆரோக்கியமாகவும் செல்வந்தர்களாக வருமையின்றி பார்த்துக் கொள்ளவும்தானே நாம் எல்லோருக்கும் பொதுவாக ஒரு அரசாங்கத்தை (கடவுளாக) அமர்த்தி பார்த்துக் கொள்ளச் செய்கிறோம்.
எல்லாமே நமது சாய்ஸ்யாக இருந்தால், வரி எவ்வளவு கட்டுவது அரசாங்கத்திற்கு என்பதுவும் மக்களின் சாய்ஸ்சாகவே இருந்தால் எப்படி இருக்கும் :-) மிரட்டி சிறைச்சாலையில் போட்டுவிடுவேன் என்று கூறாமல்...
சிவா ஒன்று தெரியுமா உங்களுக்கு, இந்த அனைத்து விரைவு உணவகங்களும் தனது உணவுப் பொருட்களில்
'அடிக்டிவ் ஏஜென்ட்' ஒன்றை கலந்துதான் வழங்கிறது. மீண்டும் மீண்டும் குண்டாகி உண்டாகி வருபவர்களை பிடித்து (சனியன் பிடித்த விடுமா) உள்ளேயே வைத்துக் கொள்ள...
மார்ல்ப்ரோ சிகரெட்டிலும் இது போன்ற ஒரு சமாச்சாரம் உண்டாம்... கசேதான் கடவுளாடா... நம்ம ஊரு கல்லச் சாரயமும் இதுவும் ஒன்றுதான். ஆனா என்ன நம்ம ஊரு கல்லச் சாரய ஆசாமி லூங்கி பனியனோட ஒளிஞ்சி ஒளிஞ்சி வியாபாரம் பண்ணுவார, இந்த மாதிரி ஆட்கள் கோட், டையோட பெரிய இடத்து 'பேக்கப்'வுடன் ஜரூர வியபாரம் பாக்கிறாங்க... அவ்ளொதான் வித்தியாசம்...
//எல்லாமே நமது சாய்ஸ்யாக இருந்தால், வரி எவ்வளவு கட்டுவது அரசாங்கத்திற்கு என்பதுவும் மக்களின் சாய்ஸ்சாகவே இருந்தால் எப்படி இருக்கும் :-) மிரட்டி சிறைச்சாலையில் போட்டுவிடுவேன் என்று கூறாமல்...//
அண்ணா...கன்ஸ்யூமர் சாய்ஸ் என்பது வேறு.எல்லாமே நம்ம சாய்ஸ் என்பது வேறு அண்ணா.வரிகட்டுவதுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லைஙணா.
//சிவா ஒன்று தெரியுமா உங்களுக்கு, இந்த அனைத்து விரைவு உணவகங்களும் தனது உணவுப் பொருட்களில்
'அடிக்டிவ் ஏஜென்ட்' ஒன்றை கலந்துதான் வழங்கிறது. மீண்டும் மீண்டும் குண்டாகி உண்டாகி வருபவர்களை பிடித்து (சனியன் பிடித்த விடுமா) உள்ளேயே வைத்துக் கொள்ள... //
அண்ணா..அது அடிக்டிவெ ஏஜென்ட்(addictive agent) கிடையாதுங்ணா.அட்டிடிவ் ஏஜென்ட்(Additive agent).அட்டிடிவ் ஏஜென்ட் என்றால் வண்ணத்தை உருவாக்க,சுவையை உருவாக்க சேர்க்கப்படுபவை.
அடிக்டிவ் ஏஜென்ட் சேர்த்தால் போலிஸ் புடிச்சுட்டு போயிடுவாங்க்ணா.புதுசு புதுசா என்னன்னெவோ சொல்றீங்ணா.
//அடிக்டிவ் ஏஜென்ட் சேர்த்தால் போலிஸ் புடிச்சுட்டு போயிடுவாங்க்ணா.புதுசு புதுசா என்னன்னெவோ சொல்றீங்ணா.//
ஆமாங்கண்ணா அதுவேதானுங்கண்ணா நானும் சொல்றேனுங்கண்ணா... எந்த போலிஸ்கங்கண்ணா
ஏனுங்கண்ணா நல்ல படிச்சிப்போட்டு இப்படி பெரும் பெரும் கார்பரேட் விக்கிற நமத்துப்போன போலி உண்மைகளை நம்பிகொண்டு வாங்கிப்போட்டு திர்கிறீகள்...
நமக்கு இன்னும் வயசு இருக்குதுங்கண்ணா... பார்த்து மெது மெதுவா சொல்லுவோம்ணவோ...
//ஆமாங்கண்ணா அதுவேதானுங்கண்ணா நானும் சொல்றேனுங்கண்ணா... எந்த போலிஸ்கங்கண்ணா//
காக்கி சட்டை போட்டிருக்கும் இந்திய போலிஸ் புடிக்கலைன்னாலும் நீல சட்டை போட்டிருக்கும் அமெரிக்க போலிஸ் புடிச்சுட்டு போயிடுங்க்ணா.
//ஏனுங்கண்ணா நல்ல படிச்சிப்போட்டு இப்படி பெரும் பெரும் கார்பரேட் விக்கிற நமத்துப்போன போலி உண்மைகளை நம்பிகொண்டு வாங்கிப்போட்டு திர்கிறீகள்...//
படிச்சதுனால தான் சொல்றேனுங்ணா.தப்பான தகவல் மக்களுக்கு போய் சேர கூடாது தானுங்ணா?அதனால தான் சொல்றேனுங்ணா.
/நமக்கு இன்னும் வயசு இருக்குதுங்கண்ணா... பார்த்து மெது மெதுவா சொல்லுவோம்ணவோ.../
கண்டிப்பா சொல்லிகிட்டே இருப்போம்ணா..காசா பணமா..பின்னூட்டம் தானே
//படிச்சதுனால தான் சொல்றேனுங்ணா.தப்பான தகவல் மக்களுக்கு போய் சேர கூடாது தானுங்ணா?அதனால தான் சொல்றேனுங்ணா.//
சரிங்ண்ணா சரிங்ண்ணா அப்ப நீங்க சொன்ன சரியாத்தானுங்ண்ண இருக்கும்...
ஹொல்த்தி உணவு எல்லாரும் உலகம் முழுக்க வாங்கி சாப்பிட எடுத்து சொல்லுங்கண்ணா...
இது தொடர்பா இதுதாணுங்கண்ணா என் கடைசி வீணாப்போன பின்னூட்டங்கண்ணா...
பராவயில்லைங்கண்ணா நல்லா படிச்சீட்டீங்கண்ணா...
சிவா,
கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியில் சில உண்மைகள் விளக்கப்பட்டுள்ளன... முடிந்தால் "super size me" என்ற படத்தையும் and "the fast food nation" என்ற புத்தகத்தையும், முயற்சித்துப் பாருங்கள்...
related with the adictive agent, URL
http://www.rense.com/general52/msg.htm
இப்படி போயிகிட்டு இருக்கு இந்த fast food industry;
George W. Bush and his corporate supporters are pushing a Bill through Congress. Called the "Personal Responsibility in Food Consumption Act" also known as the "Cheeseburger Bill", this sweeping law bans anyone from suing food manufacturers, sellers and distributors. Even if it comes out that they purposely added an addictive chemical to their foods.
தெகா
சுட்டிக்கு மிக்க நன்றி.
நிச்சயம் முயன்று பார்க்கிறேன்.
செல்வன் சார் & தெகா,
தங்களின் வருகைக்கும் கருத்துப் பதிவுக்கு நன்றி.
மெக் டொனால்ட்சில் ப்ரூட் சாலட் இருக்கா?
எது நல்ல உணவு , எது கெட்டது என்று (சாய்ஸ் ) புரியும் வயதுக்கு முன்னரே
குழந்தைகளை மெக்டோனால்டினின் ப்ரென்ச் ப்ரைக்கு அடிமைப் படுத்துகிறார்கள்.
எப்படி என்று கேட்க்கிறீர்களா? டிவியில் வரும் விளம்பரங்கள் பெரும்பாலும்
நேரடியாக குழந்தைகளை குறி வைத்தே எடுக்கப்படுகிறது. இதை விட
கொடுமை, என் மகள் போகும் குழந்தைகள் காப்பகத்திற்கு மாதம் ஒரு முறை
மெக் டொனால்ட்ஸ் படை எடுத்து கூப்பன், உணவு எல்லாம் கொடுத்து
சிறு வயதிலேயே அடிமைப்படுத்திவிடுகிறார்கள். பெற்றோர்களால் கூட
இதை தடுக்க மடியவில்லை. மெக் டோனால்டின் ரெண்டு வளைவை
எங்கு பார்த்தாலும் என் மகள் பர்கர், பை என்று சத்தம் போடுமாறு
ஆக்கிவிட்டார்கள்.
ஆதிரை
உணமைதான்.. எங்க வீட்டிலேயும் நீங்க சொல்லும் கூத்துதான் நடக்கிறது...
கொஞ்சம் கடினமான விசயம்தான் இந்த அடிமைதனத்திலிருந்து விடுபடுவது...
அசுரன்,
// நான் பதில் சொன்னது போல் நீங்களும் எனது நாடு அடிமையாவது பற்றிய முந்தைய பின்னூட்டத்தின் பெரும் பகுதிக்கு கருத்து சொல்லக் கடைமைப் பட்டுள்ளீர்கள். //
இந்த உலகம் முழுவதும் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் இருக்கிறோம்.. பொதுவாக அடிமைப் படுதலுக்காக இதை சொல்கிறேன்.
இனி இந்த பிரச்சனை சமந்தமாக அடிமை படுதலைப் பற்றை என் கருத்து..
கோக் மட்டுமல்ல இன்னும் பிற் விசயங்களிலும் தான் நாம் அடிமைப் பட்டுள்ளோம்.. அதை எக் கோணத்தில் அனுகிறோமோ அதன் அள்வுகோலே இதற்கும் என்பது என் கருத்து.
அசுரன்,
// இது இந்த பொருளாதார அமைப்பின் failure இல்லையா? //
இது சந்தைப் படுத்துதலினால் வரும் சில எதிர் வினைகள். அந்த எதிர் வினை இல்லாமல் சந்தைப் படுத்துதலும் இல்லை..
சந்தைப் படுத்துதல் சம்ந்தமாக உங்கள் கருத்தைப் பொருத்தே என் கருத்தை சொல்லமுடியும்.
அசுரன்,
//ஒருங்கிணைந்து போராடி தனது விடுதலையை தேடிக் கொண்ட, புரட்சி செய்த அந்த சமுதாயத்துக்கு வேறு கஸ்டமான மாற்று வழிகளை கையாளுவதோ அல்லது தனது தேவைகளை மாற்றிக் கொள்வதோ பெரிய பிரச்சனையாக இருக்காது. //
நீங்கள் சொல்லும் சமுதாயம் நிச்சயம் தற்போதய இளைய தலைமுறைக்கு பொருந்தாது என்பது என் கருத்து. காரணம் உலகமே ஒரு சிறு கிராமம் போல் சுருங்கிவிட்டதால் கூட இருக்கலாம்.
அதனால் இன்றைய இளைய சமுதாயம் நீங்கள் சொல்வதுபோல் எளிதாக தகவமைத்துக் கொள்ளாது.
அசுரன்,
// சந்தை உற்பத்தியில்தான் தேவைகளை விளம்பரங்கள் மூலம் உருவாக்க வேண்டியுள்ளது. அதாவது 'தேவை உற்பத்தி'(விளம்பரங்கள்) என்பதே ஒரு தனி தொழிலாக உருவாகியுள்ள கோமாளித்தனம் ஏகாதிபத்திய சமூக்த்தின் சீரழிவைத்தான் காட்டுகிறது. //
நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வானொலி தொலைக்காட்சி கூட தேவை இல்லைதான். ஒரு காலத்தில் அதை அவ்வாறுதான் சொன்னார்கள். இப்பொழுது அரசாங்கமே இலவசமாக கொடுக்கும் அளவுக்கு முக்கியமாகிவிட்டது..
பொருளாதார வளர்ச்சியின் அங்கம் இது.. என்பது என் கருத்து.
அசுரன்,
//தன்னுள் இயைந்து செயல்படும் இயற்கையை, தனித்தனியாக தனக்குள்ளேயே அடித்துக் கொள்ளும் ஒருங்கிணைப்பு இல்லாத ஏகாதிபத்திய மனித சமூகம் எதிர் கொள்ள முடியும் என்று நினைப்பது அடி முட்டாள்தனமானது //
இதில் எனக்கு மாற்று கருதில்லை..
ஆனால் வளர்ந்துவரும் பொருளாதாரம், மக்கள் தொகை, வேலை வாய்ப்பு போன்ற பல விசயங்களையும் கருத்தில் கொள்ள கடமைப் பட்டுள்ளோம்.
Post a Comment
<< Home