Wednesday, August 09, 2006

ராஜாஜியின் சிந்தனைத் துளிகள்

1. ஆணின் மூளையும், பெண்ணின் நல்லிதயமும், ஒரு குழந்தையின் புத்துணர்வும் சேர்ந்தே ஒரு சிறந்த மனிதனை உருவாக்கும்.

2. ஒரு புது மொழியைக் கற்க சிறந்த வழி ஒரு குழந்தை செய்வது போல -- உற்றுக் கேள்!

3. உன் நடத்தையில் ஒரு மாற்றம் வந்தாலன்றிசெய்துதான் ஒரு புது நிகழ்வைக் கற்க வேன்டுமனின், உன்னால் அதை முழுது கற்று, உள்வாங்குவது மிகக் கடினம்.

4. ஒரு நிகழ்வில் நீ ஈடுபடவில்லையெனின், உன் உணர்வுகள் அதில் ஈர்க்கப்படவில்லை எனப் பொருள். ஈடுபடாமல் விலகி நிற்கிறாய் என்றால், உன் உணர்ச்சிகளை அடக்கி இருக்கிறாய் எனப் பொருள்.

5. சமநிலையைத் திணிப்பதின் மூலம் ஒற்றுமையை ஒரு நாட்டில் உருவாக்க முடியாது.

6. மத[இறை] அனுபவம் என்பது ஒரு பொருள் அதுதான் என்னும் விழிப்புநிலை. உண்மைநிலையின் மேல் உள்ள தீவிர தெரிபு.

7. பொறுமை ஒரு பலம்; பலவீனம் அல்ல.

8. நம் எண்ணங்களாலும், செயல்களாலும் நம்மை உருவாக்கிக் கொள்கிறோம்; நமது அடுத்த பயனத்துக்கு நம் ஆன்மாவைக் கொண்டு செல்லத் தயார் செய்து கொள்ளுகிறோம் என்னும் திடநிலையின் தீவிரம்.

9. நன்னடத்தை என்பது ஏதோ வெறும் காற்றில் அலையும் பொருள் அல்ல; தீர்மானமான முடிவு மற்றும்னம்பிக்கை மூலமே அது இயங்கும். சில நேரங்களில் அப்படித் தானே மிதப்பது போலத் தோன்றலாம்; ஆனால், உண்மையில் மரபுகளின் மற்றும் குடும்ப வளர்ப்பின் மூலமே அது நிகழக் கூடும். ஆன்மீக ஆதாரம் மிகத் தேவையான ஒன்று இதற்கு.

10. ஒரு சமூகத்தை நேசிப்பது ஒரு நற்குணமே1 தீயபண்பல்ல! நாம் கட்டுதற்கு உதவும் ஒரு செங்கல். நாம் நிற்கும் இந்தப் பூமி போன்று நிஜமானது. சமூகத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அதன் இடத்தில் உண்மையில்லாத, பொய்யான வேறொன்றைக் கட்ட முயற்சிப்பது அறிவீனமான, பலனற்ற ஒரு செயல்.

01 - 10 வரை தமிழாக்கம் செய்து தந்த திரு SK அய்யா அவர்களுக்கு எனது நன்றிகள்.

11.திருவள்ளுவர் அனைத்துப் பிரிவினர்களையும் சமயங்களையும் கடந்து உலகளாவிய சிந்தனை கொண்ட அரிய மாமனிதர்களில் ஒருவர். அவரது பார்வை எந்தவிதமான கொள்கைகளாலோ பிடித்தங்களாலோ மறைக்கப் படவில்லை. அவர் தமது நல்லொழுக்க விதிகளை எழுதிய நடை மனித உளவியலை அவர் நன்கு அறிந்திருந்ததைக் காண்பிப்பதுடன் தீமைகளை எதிர்த்து நிகழ்த்தும் போராட்டத்தில் மனிதர்களுக்கு நடைமுறை குறிப்புகளை வழங்கும் ஆர்வத்தையும் காட்டுகின்றன.

12. விஞ்ஞானம் பருப்பொருளின் ஆதாரத்தின் திரைகளை கிழித்து படைப்பின் ஒப்பனையறையில் அத்துமீறிய நாள் ஒரு துரதிட்டமான நாளாகும். கோபமுற்ற இயற்கை பழி வாங்குவதைப்போல உள்ளது. ஞானம் வருந்தி சிறுமையும் மன்னிப்பும் தேட வேண்டும்.

13. இராமாயணம் வரலாறும் இல்லை புவியியலும் இல்லை. அது ஒரு இந்து புராணம். பெர்னாட்ஷா போன்ற மதமறுப்பாளரே புராணங்களின் இன்றியமையாமையினை ஏற்றுக் கொண்டுள்ளனர். புராணங்கள் மதத்தின் ஒருங்கிணைந்த பாகம். எவ்வாறு ஒரு பழத்தின் சாற்றுக்கும் சுவைக்கும் அதன் தோலும் கட்டமைப்பும் பாதுகாப்பு நல்குமோ அவ்வாறே சமயத்திற்கும் நாட்டுகலாசாரத்திற்கும் புராணங்கள் தேவையானவை.

14இந்த நீண்ட முன்னேற்ற காலத்தில் மனித இனம், நிறம் மற்றும் பிற வித்தியாசங்களை வைத்து தங்களை பல இனங்களாகவும் நாடுகளாகவும் பிரித்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு, வளர்ச்சியடைந்த விஞ்ஞான மற்றும் தொழிற்நுட்பங்களால், தம்மில் சிறந்தவற்றை முழுவதும் அழிக்க பயமுறுத்துவது எத்தனை சோகமானது ?

11 - 14 வரை தமிழாக்கம் செய்து தந்த திரு.மணியன் அவர்களுக்கு எனது நன்றிகள்.

1. It needs three things to make a truly great man - a man's brain, a woman's heart and a child's freshness of outlook.

2.The way to learn a language is to do as a child does: listen to it.

3. It is very difficult to assimilate new facts or ideas when they may demand a change of conduct.

4. To be disinterested means that one's feelings are not involved. To be detached means that one has learned to subdue one's emotions.

5. You don't bring unity to the country by imposing uniformity.

6. Religious experience means a consciousness that a thing is so: an intense awareness of reality.

7. Patience is a sign of strength, not weakness.

8. We make ourselves by our own thoughts and actions, and it is the character that we hammer out in this life that the soul carries With it at the start of its next journey.

9. Right conduct cannot float in the air, but requires a conviction and faith to support it. It may in some cases seem so to be able to float—but it is really supported by tradition and family upbringing. A spiritual foundation is necessary for right conduct.

10. Love of one’s community is a virtue and not a vice. It is a brick which can help us to build. It is a fact as true as the earth we stand upon, and it is futile to ignore it and build on something that is not true and does not exist.

11. Tiruvalluvar was one of those rare and great men whose catholic spirit rose above all denominations and religions, whose vision was not clouded by dogma or prejudice of any kind. His approach to moral doctrine is marked by a very thorough knowledge of human psychology, and a desire to help men with practical hints in the struggle against evil.

12. It was an unfortunate day when science lifted the curtain of fundamental matter and trespassed into the greenroom of creation. It seems as if outraged Nature is having her revenge. Knowledge must go into penitence and humble condition and forgiveness.

13. The Ramayana is not history or biography. It is a part of Hindu mythology. Even an iconoclast like Bernard Shaw has acknowledged the essentiality of myths.Mythology is an integral part of religion. It is as necessary for religion and national culture as the skin and the skeleton that preserve a fruit with its juice and its taste

14.But what a tragedy it is that human beings have, during the long period of this advance, developed colour and other differences, and divided themselves into races and nationalities and created fields of mutual conflict which, together with progress in science and technology, threaten to bring about total destruction of the best elements of the human specie

பி.கு. பதிவு ஆங்கிலத்தில் உள்ளது. மன்னிக்கவும்.

32 Comments:

Blogger VSK said...

1. ஆணின் மூளையும், பெண்ணின் நல்லிதயமும், ஒரு குழந்தையின் புத்துணர்வும் சேர்ந்தே ஒரு சிறந்த மனிதனை உருவாக்கும்.

2. ஒரு புது மொழியைக் கற்க சிறந்த வழி ஒரு குழந்தை செய்வது போல -- உற்றுக் கேள்!

3. உன் நடத்தையில் ஒரு மாற்றம் வந்தாலன்றிசெய்துதான் ஒரு புது நிகழ்வைக் கற்க வேன்டுமனின், உன்னால் அதை முழுது கற்று, உள்வாங்குவது மிகக் கடினம்.

4. ஒரு நிகழ்வில் நீ ஈடுபடவில்லையெனின், உன் உணர்வுகள் அதில் ஈர்க்கப்படவில்லை எனப் பொருள். ஈடுபடாமல் விலகி நிற்கிறாய் என்றால், உன் உணர்ச்சிகளை அடக்கி இருக்கிறாய் எனப் பொருள்.

5. சமநிலையைத் திணிப்பதின் மூலம் ஒற்றுமையை ஒரு நாட்டில் உருவாக்க முடியாது.

6. மத[இறை] அனுபவம் என்பது ஒரு பொருள் அதுதான் என்னும் விழிப்புநிலை. உண்மைநிலையின் மேல் உள்ள தீவிர தெரிபு.

7. பொறுமை ஒரு பலம்; பலவீனம் அல்ல.

8. நம் எண்ணங்களாலும், செயல்களாலும் நம்மை உருவாக்கிக் கொள்கிறோம்; நமது அடுத்த பயனத்துக்கு நம் ஆன்மாவைக் கொண்டு செல்லத் தயார் செய்து கொள்ளுகிறோம் என்னும் திடநிலையின் தீவிரம்.

9. நன்னடத்தை என்பது ஏதோ வெறும் காற்றில் அலையும் பொருள் அல்ல; தீர்மானமான முடிவு மற்றும்னம்பிக்கை மூலமே அது இயங்கும். சில நேரங்களில் அப்படித் தானே மிதப்பது போலத் தோன்றலாம்; ஆனால், உண்மையில் மரபுகளின் மற்றும் குடும்ப வளர்ப்பின் மூலமே அது நிகழக் கூடும். ஆன்மீக ஆதாரம் மிகத் தேவையான ஒன்று இதற்கு.

10. ஒரு சமூகத்தை நேசிப்பது ஒரு நற்குணமே1 தீயபண்பல்ல! நாம் கட்டுதற்கு உதவும் ஒரு செங்கல். நாம் நிற்கும் இந்தப் பூமி போன்று நிஜமானது. சமூகத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அதன் இடத்தில் உண்மையில்லாத, பொய்யான வேறொன்றைக் கட்ட முயற்சிப்பது அறிவீனமான, பலனற்ற ஒரு செயல்.

[தூக்கம் வருகிறது! மீதி நாளைக்கு!!]

August 09, 2006 11:22 PM  
Blogger Sivabalan said...

SK அய்யா,

நல்ல தமிழில் அருமையாக தமிழாக்கம் செய்து தந்துள்ளீர்கள். மிக்க நன்றி.

மற்றவைகளையும் தமிழாக்கம் செய்து தாருங்கள்.

வருகைக்கு நன்றி.

August 10, 2006 6:45 AM  
Blogger Sivabalan said...

Update - தமிழாக்கம் by SK அய்யா

August 10, 2006 6:46 AM  
Blogger கோவி.கண்ணன் said...

அறிஞர் என்று பேரெடுத்தவர்களுல் அண்ணாவும், ராஜாஜியும் சிறப்பானவர்கள்... ராஜாஜியின் திட்டமான குலத் தொழில் திட்டம் தவிர மற்றவை ஏற்றுக் கொள்ளத்தக்கது.

sk அருமையாக மொழிப் பெயர்த்திருக்கிறார்.

சிபா ... ! அருமையாக தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். மேலும் நடுநிலையாக பெரியார் கருத்துக்களையும் போடுகிறீர்கள் ... அவருக்கு எதிர்கொள்கை உடையவரான மூதறிஞர் கருத்துக்களையும் வெளியிடுகிறீர்கள் ... !

August 10, 2006 7:06 AM  
Blogger Sivabalan said...

GK,

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

பகுத்து அறிய நல்ல விசயங்களை படிப்பது மிக மிக அவசியம்.

ராஜாஜியின் கருத்துக்களும் அவசியம்...

நன்றி.

August 10, 2006 7:31 AM  
Blogger Thekkikattan|தெகா said...

//3. It is very difficult to assimilate new facts or ideas when they may demand a change of conduct.//

இந்த நிலையில்தானே நாம் சிக்குண்டு வெளியில் வரமுடியாமல், பல பிரட்சினைகள்ளுகும் ஆளகிப் போகிறோம்...

//8. We make ourselves by our own thoughts and actions, and it is the character that we hammer out in this life that the soul carries With it at the start of its next journey.//

உண்மையோ உண்மை...

//9. Right conduct cannot float in the air, but requires a conviction and faith to support it. It may in some cases seem so to be able to float but it is really supported by tradition and family upbringing. A spiritual foundation is necessary for right conduct. //

இதில் எனக்கு.... but it is really supported by tradition and family upbringing... உடன்பாடு கிடையாது. ஒரு மனிதனுக்கு தவறான பொற்றோர்களோ, குடும்பமோ அமையக்கூடும் அக்குழந்தையின் கைகளை மீறி. அது போன்ற சூழலிலிருந்து வந்த குழந்தைகள் எல்லோரும் நன்னடைத்தையுடன் வாழ்வது கிடையாது என்பதை போல ஒரு பிம்பத்தை அந்த வாக்கியம் உணர்த்துவதாக எனக்குப் படுகிறது.

நம் ஓவ்வொருவருக்குள்ளும் "Universal Consciouness" என்ற ஒன்று உண்டு, அதுவே நம்மை அந்த பிரக்ஞை உணர்வில் வைத்து அடுத்தவர்களுக்கு ரொம்பவே துன்பம் விளைவிக்காமல் இருக்கச் செய்கிறது. அதனையே அதிகமாக பயன்படுத்தும் பட்சத்தில் அது ஒருவரின் குணாதிசியம் ஆகிறது.

உதாரணமாக, சட்டமே இல்லாத ஒரு தீவில் வசிக்க நேர்ந்த ஒரு கூட்டத்திற்கு அது போன்ற "உணர்வு சார்ந்த நிலை" இல்லவே இல்லை என்று பொருளா?

August 10, 2006 8:01 AM  
Blogger Sivabalan said...

தெகா

தங்கள் வருகைகும் கருத்துக்கும் நன்றி.

நீங்கள் சொல்லும் ஒரு சில குடும்பங்களை கருத்தில் கொண்டால், ராஜாஜியின் இந்த சிந்தனை வேறு பொருளைத் தான் தரும். சமூகத்தில் இருக்கும் பெரு வாரியான குடும்பங்களை கருத்தில் கொண்டால் இது பொருந்தும் என நான் நினைக்கிறேன்.

உங்களுடைய கேள்விக்கு என்க்கு பதில் தெரியவில்லை.

நன்றி

August 10, 2006 8:37 AM  
Blogger Unknown said...

//நன்னடத்தை என்பது ஏதோ வெறும் காற்றில் அலையும் பொருள் அல்ல; தீர்மானமான முடிவு மற்றும்னம்பிக்கை மூலமே அது இயங்கும். சில நேரங்களில் அப்படித் தானே மிதப்பது போலத் தோன்றலாம்; ஆனால், உண்மையில் மரபுகளின் மற்றும் குடும்ப வளர்ப்பின் மூலமே அது நிகழக் கூடும். ஆன்மீக ஆதாரம் மிகத் தேவையான ஒன்று இதற்கு.//

புரியவில்லை என்ன சொல்கிறார் ராஜாஜி?

August 10, 2006 8:43 AM  
Blogger Thekkikattan|தெகா said...

//சமூகத்தில் இருக்கும் பெரு வாரியான குடும்பங்களை கருத்தில் கொண்டால் இது பொருந்தும் என நான் நினைக்கிறேன்..//

சிவா, ஒரு பேச்சுக்காக வைத்துக்கொள்வோம்... இந்த நன்னடைத்தை என்றதொரு விசயம், எந்த, யார் அளவுகோலின் படி நிர்ணயிக்கப்படுகிறது?

உதாரணமாக அமெரிக்காவில் பிக்கினி போட்டு சூரியக் குளியல் எடுப்பது ஒரு நார்மலான விசயம், ஆனால் புதிதாகவோ அல்லது ஒரு பாரம்பரிய இந்தியக் கண்ணோட்டத்தில் வளர்க்கப்பட்ட ஒருவர் அதனை காணும் பொருட்டு இது வேறு மாதிரி ஒரு ஒழுக்க மற்ற செயலாக பார்க்கப் படுகிறது.

அப்படியெனில் இந்த அளவுகோல் பார்க்கப்படும் கண்ணோட்டத்தினாலும் சமூதாய கட்டமைப்பினாலும் நிர்ணயிக்கப்படுகிறது அல்லவா?

அப்படியெனில் தனிப்பட்ட மனிதரின் உள்நோக்கு அலசல் அவரைப் பொருட்டு எங்கே போனது, வெளிப் புற நிர்யிணயிக்கப்பட்ட அளவுகோலுகளுக்கு அப்பாற்பட்டு?

No child left behind ;-))

August 10, 2006 8:52 AM  
Blogger Sivabalan said...

மகேந்திரன்,

"நல் ஒழுக்கம் எனும் கட்டிடம் மரபு மற்றும் குடும்ப வளர்ப்பு எனும் அஸ்திவாரத்தில் உள்ளது" எனப் பொருள்படுகிறது என்று நான் கருதுகிறேன்.

August 10, 2006 8:56 AM  
Blogger Sivabalan said...

மகேந்திரன்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

August 10, 2006 8:58 AM  
Blogger Unknown said...

//நல் ஒழுக்கம் எனும் கட்டிடம் மரபு மற்றும் குடும்ப வளர்ப்பு எனும் அஸ்திவாரத்தில் உள்ளது" //

அதாவது அவரின் வழக்கமான பல்லவி குலக் கல்வி போல? :))

நல்லொழுக்கம் என்பது வளர்ப்பிலும், மரபிலும் தான் வருமென்றால் அவரும் எழுதிய ராமாயணத்தை எழுதிய வால்மீகி பற்றி ராஜாஜியின் கருத்தென்னவோ? கண்ணப்பர் பற்றி?

வாழும் சமூக கட்டமைப்பின் மேல் தனி மனிதனின் பார்வையும் அதன் தாக்கமுமே ஒருவனின் நல்லொழுக்கத்திற்கு அடிப்படை தேவைகள் என்பது எனது கருத்து

August 10, 2006 9:03 AM  
Blogger VSK said...

//மகேந்திரன்.பெ said...
//நன்னடத்தை என்பது ஏதோ வெறும் காற்றில் அலையும் பொருள் அல்ல; தீர்மானமான முடிவு மற்றும்னம்பிக்கை மூலமே அது இயங்கும். சில நேரங்களில் அப்படித் தானே மிதப்பது போலத் தோன்றலாம்; ஆனால், உண்மையில் மரபுகளின் மற்றும் குடும்ப வளர்ப்பின் மூலமே அது நிகழக் கூடும். ஆன்மீக ஆதாரம் மிகத் தேவையான ஒன்று இதற்கு.//

புரியவில்லை என்ன சொல்கிறார் ராஜாஜி?//

நல்லவனாக இருக்க விரும்பி, அதற்கெனச் செய்யும் செயலே நன்னடத்தை எனப்படும்.

நன்னடத்தை என்பது தானே இயங்க முடியாது.

அவ்வாறு இயங்க, நான் ஒருபோது பிறழ மாட்டேன் என்னும் திட முடிவும், முறை தவறி நடக்கமாட்டேன் எப்போதும் என்னும் திட நம்பிக்கை என்ற சுயக்கட்டுப்பாடுகள் மிகவும் அவசியம்.

இந்த சுயக்கட்டுப்பாடுகள் இல்லாமல் சில நேரங்களில் இந்த நன்னடத்தை இருப்பது போல் தோன்றலாம்.

ஆனால், அப்படி நிகழ்வதற்கு, சில மரபுகளைக் கடைப்பிடிக்கப்படுவதாலோ, அல்லது குடும்ப வளர்ப்புகளோ தான் அடிப்படையாய் இருந்திருக்கும்.

உதாரணத்துக்கு, "நமக்கே விருப்பமில்லாவிடினும்", ஒரு வயது வரை, கோயிலுக்குப் போவது, போன்ற மரபுகளையோ, பெரிவங்ககிட்ட மரியாதையாப் பேசலைன்னா அப்பா அடிப்பார், மாலையானால் கைகால்களை அலம்பிவிட்டு, சாமி கும்பிட்டுவிட்டு, பள்ளிப்பாடங்களைப் படிப்பது என்கிற வளர்ப்பு சம்மந்தப்பட்ட நிகழ்வுகளோதான் காரணமாய் இருக்கும்.

ஒரு சில காலத்திற்குப் பின்னர், இவைகளின் ஆளுகை நம்மீது இல்லாதபோது, நாமே சுதந்திரமாக இயங்க ஆரம்பிக்கும் போது, 'மேலே நான் மொழிபெயர்த்திருக்கிற' அந்த இரண்டு சுயக்கட்டுப்பாடுகள் இல்லாமல் முடியாது.

இறுதியாக, இந்த சுயக்கட்டுப்பாடுகள் சரியே அமைந்து, நன்னடத்தை என்னும் குணம் படிய, ஆன்மீகம் ஒரு அடித்தளமாக அமைகிறது!.......

.....என்று நான் சொல்லவில்லை!

திரு.ராஜாஜி சொல்லுகிறார் இந்த ஒன்பதாவது துளியில், திரு. பெ. ம.!!

August 10, 2006 9:14 AM  
Blogger கால்கரி சிவா said...

//3. உன் நடத்தையில் ஒரு மாற்றம் வந்தாலன்றிசெய்துதான் ஒரு புது நிகழ்வைக் கற்க வேன்டுமனின், உன்னால் அதை முழுது கற்று, உள்வாங்குவது மிகக் கடினம்.//

இதைத்தான் ஒஷோ சொல்லுவார் " மாற மனமிரூந்தால் வா"

August 10, 2006 9:15 AM  
Blogger Unknown said...

thanks SK i got it

August 10, 2006 9:18 AM  
Blogger Sivabalan said...

Calgary சிவா,

ஒஷோவின் கருத்தை இங்கே பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

வருகைக்கும் கருத்து பதிவுக்கும் மிக்க நன்றி.

August 10, 2006 9:23 AM  
Blogger Sivabalan said...

மகேந்திரன் & SK அய்யா,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

மதியத்திற்கு பிறகு பதிலளிக்கிறேன்

August 10, 2006 9:25 AM  
Blogger dondu(#11168674346665545885) said...

ராஜாஜி அவர்களின் கல்வித் திட்டத்தைப் பற்றி நான் போட்ட பதிவு இதோ.

பார்க்க: http://dondu.blogspot.com/2006/08/2.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

August 10, 2006 10:07 AM  
Blogger Sivabalan said...

இராகவன் சார்,

வருகைக்கும் சுட்டிக்கும் மிக்க நன்றி.

August 10, 2006 10:12 AM  
Blogger மணியன் said...

பகுதி மொழிபெயர்ப்பை நானும் முயன்றேன். அவை:
11.திருவள்ளுவர் அனைத்துப் பிரிவினர்களையும் சமயங்களையும் கடந்து உலகளாவிய சிந்தனை கொண்ட அரிய மாமனிதர்களில் ஒருவர். அவரது பார்வை எந்தவிதமான கொள்கைகளாலோ பிடித்தங்களாலோ மறைக்கப் படவில்லை. அவர் தமது நல்லொழுக்க விதிகளை எழுதிய நடை மனித உளவியலை அவர் நன்கு அறிந்திருந்ததைக் காண்பிப்பதுடன் தீமைகளை எதிர்த்து நிகழ்த்தும் போராட்டத்தில் மனிதர்களுக்கு நடைமுறை குறிப்புகளை வழங்கும் ஆர்வத்தையும் காட்டுகின்றன.

12. விஞ்ஞானம் பருப்பொருளின் ஆதாரத்தின் திரைகளை கிழித்து படைப்பின் ஒப்பனையறையில் அத்துமீறிய நாள் ஒரு துரதிட்டமான நாளாகும். கோபமுற்ற இயற்கை பழி வாங்குவதைப்போல உள்ளது. ஞானம் வருந்தி சிறுமையும் மன்னிப்பும் தேட வேண்டும்.

13. இராமாயணம் வரலாறும் இல்லை புவியியலும் இல்லை. அது ஒரு இந்து புராணம். பெர்னாட்ஷா போன்ற மதமறுப்பாளரே புராணங்களின் இன்றியமையாமையினை ஏற்றுக் கொண்டுள்ளனர். புராணங்கள் மதத்தின் ஒருங்கிணைந்த பாகம். எவ்வாறு ஒரு பழத்தின் சாற்றுக்கும் சுவைக்கும் அதன் தோலும் கட்டமைப்பும் பாதுகாப்பு நல்குமோ அவ்வாறே சமயத்திற்கும் நாட்டுகலாசாரத்திற்கும் புராணங்கள் தேவையானவை.

14இந்த நீண்ட முன்னேற்ற காலத்தில் மனித இனம், நிறம் மற்றும் பிற வித்தியாசங்களை வைத்து தங்களை பல இனங்களாகவும் நாடுகளாகவும் பிரித்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு, வளர்ச்சியடைந்த விஞ்ஞான மற்றும் தொழிற்நுட்பங்களால், தம்மில் சிறந்தவற்றை முழுவதும் அழிக்க பயமுறுத்துவது எத்தனை சோகமானது ?

August 10, 2006 10:21 AM  
Blogger Sivabalan said...

மணியன் சார்,

வருகைக்கு மிக்க நன்றி.

11-14 வரை தமிழாக்கம் செய்து தந்த உங்களுக்கு எனது நன்றிகள்.

அருமையாக தமிழாக்கம் செய்து தந்துள்ளீர்கள். மிக்க நன்றி.

August 10, 2006 10:30 AM  
Blogger Sivabalan said...

Update - தமிழாக்கம் by திரு.மணியன்

August 10, 2006 10:31 AM  
Blogger Sivabalan said...

உண்மையில் நான் Google Serach தேடும் போது ராஜாஜியின் கருத்துக்கள்/சிந்தனைகள் எனக்கு தமிழில் தொகுப்பு கிடைக்கவில்லை.

இங்கே தமிழாக்கம் செய்ததினால் நிச்சயம் உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.

தமிழாக்கம் செய்து தந்த SK அய்யா மற்றும் திரு.மணியன் அகியோருக்கு மீன்டும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

August 10, 2006 10:42 AM  
Blogger Sivabalan said...

அன்பு நன்பர் ஆப்பு அவர்களே,

பெரியாரைப் பற்றி இன்னும் பல விசயங்களை பகிர்ந்துக் கொள்ளப் போகிறேன்.

அடுத்து பெரியார் தாசன் அவர்களைப் பற்றியும் பதிவிடப் போகிறேன்.

ஆனால் என் பதிவில் மற்றவர்களை குறை சொல்வதில்லை என வைத்துள்ளேன்.

உங்கள் கருத்தை மட்டுறுத்தல் செய்து வெளியிட அனுமதி கோருகிறேன்.

தயவுசெய்து அனுமதிக்கவும்.

August 10, 2006 8:24 PM  
Blogger கோவி.கண்ணன் said...

சிபா...!
எந்த கால நேரத்தில் இதை எழுதினீர்களோ தெரியவில்லை. சர்ச்சைகள் பிச்சிக்கிட்டு போவுது
:)

August 10, 2006 8:28 PM  
Blogger Sivabalan said...

GK,

HI..HI...HI.....

என்ன இன்று பதிவிடவில்லையா? ஒரு பதிவை தட்டி விடுங்க படிப்போம்...

August 10, 2006 8:34 PM  
Blogger Sivabalan said...

திரு.உரிச்சவெங்காயம் அவர்களே,

தங்கள் வருகைக்கு நன்றி.

யாரையும் புன்படுத்தும் நோக்கில் "சார்" என்று குறிப்பிடவில்லை.

தங்களுக்கு இதனால் வருத்தம் ஏற்பட்டிருந்தால் மிகவும் வருந்துகிறேன்.

மன்னித்துவிடுங்கள்.

August 10, 2006 9:58 PM  
Blogger கோவி.கண்ணன் said...

உரிச்சவெங்காயம் சார்,

தங்கள் வருகைக்கு நன்றி.

யாரையும் புன்படுத்தும் நோக்கில் "சார்" என்று குறிப்பிடவில்லை.

சார், தங்களுக்கு இதனால் வருத்தம் ஏற்பட்டிருந்தால் மிகவும் வருந்துகிறேன்.

மன்னித்துவிடுங்கள் சார் :)

August 10, 2006 10:01 PM  
Blogger Muse (# 01429798200730556938) said...

உபயோகமான கருத்துக்கள். வெளியிட்டவருக்கும், மொழிபெயர்த்தவர்களுக்கும் நன்றிகள்.

August 10, 2006 10:15 PM  
Blogger Sivabalan said...

Muse,

வருகைக்கு நன்றி.

August 10, 2006 10:17 PM  
Blogger குழலி / Kuzhali said...

//5. சமநிலையைத் திணிப்பதின் மூலம் ஒற்றுமையை ஒரு நாட்டில் உருவாக்க முடியாது.//
புரியலையே.... சரி அப்போ சமநிலை எப்போதான் எப்படித்தான் வருவதாம்? சமமற்ற நிலையில் மேலிருப்பவர்கள் கீழிருப்பவர்களை மனமுவந்து சமமாவதை அனுமதிக்க மாட்டார்கள்... இந்த நிலையில் சமநிலையை திணிக்காமல் எப்படி சமநிலையை உருவாக்குவது?

நன்றி

August 10, 2006 10:22 PM  
Blogger Sivabalan said...

குழலி,

முதல முறையாக பதிவுக்கு வந்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

எனக்கும் முழுமையாக இதைப் பற்றி தகவல் கிடைக்க வில்லை.

எனினும் நீங்கள் கேட்கும் இதே கேள்வி என் மனதில் உதித்தது..

எனக்கு பதில் சொல்ல தெரியவில்லை.

என்னை பொருத்தவரை இடஒதுக்கீடு என்பது சம்நிலைக்கான விசயம் என்க் கொள்ளமாட்டேன்.

இட ஒதுக்கீடு என்பது என் பிற்ப்புரிமை.

இதைதான் தருமி அய்யா தனது பதிவில் " இட பங்கீடு" என்க் குறிப்பிட்டுள்ளார். அது தான் சரி.

நான் தகவல் சேகரித்த சுட்டி இங்கே கொடுத்துள்ளேன். மேலும் தகவல் அறிய.

http://www.switzerinstrument.com/Rajaji-Original/

August 10, 2006 10:33 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv