Friday, August 11, 2006

"பாகிஸ்தானுக்கு நன்றி"

படம்: இஸ்லாமபாத்

SK அய்யாவின் "இந்தப் பதிவில்" அழைப்பு விட்டிருந்தார். அதை ஏற்று இப்பதிவு.


அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை குறிவைத்து எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்று இரு நாடுகளின் உளவுத்துறைகள் ஏற்கனவே எச்சரித்திருந்தன.

இந்நிலையில், பாகிஸ்தான் - ஆப்கன் எல்லைப் பகுதியில் தீவிரவாதி என்ற சந்தேகத்தில் ஒருவனை பாக். உளவுத்துறையினர் சில வாரங்களுக்கு முன்பு கைது செய்தனர்.

அவனிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் முக்கிய தீவிரவாதிகளுடன் அவனுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர்.

விமானங்களை தகர்க்க தீவிரவாதிகள் தயாராகிவிட்டனர். வெகு விரைவில் அத்தாக்குதலை நடத்த நாள் குறிக்கப்பட்டுவிட்டது என்று அவன் கூறினான். இங்கிலாந்தில்தான் இந்த தாக்குதல் நடக்கப்போகிறது என்றும் தெரிவித்தான்.


இங்கிலாந்து உளவுத்துறைக்கு இத்தகவலை பாக். அதிகாரிகள் உடனே தெரிவித்தனர்.

இதையடுத்து, இங்கிலாந்து தலைநகர் லண்டன், ஹீத்ரு, பர்மிங்காம், தேம்ஸ் பள்ளத்தாக்கு உட்பட பல பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. விமான நிலையங்கள் உடனே சீல் வைக்கப்பட்டன. பயணிகளோடு பயணிகளாக தீவிரவாதிகள் கலந்திருக்கலாம் என்பதால், அவர்களைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது.

34 Comments:

Blogger VSK said...

விவரமான தகவல்களுக்கும், 'நன்றி' பதிவிட்டதற்கும் நன்றி, சிபா!

August 11, 2006 11:38 AM  
Blogger Sivabalan said...

SK அய்யா,

வருகைக்கு நன்றி

August 11, 2006 11:42 AM  
Blogger இயற்கை நேசி|Oruni said...

அடெடா, சிவா இப்படி ஒரு பதிவு எல்லாம் போட்டு இருக்கீங்களா... எனக்கு இந்த வேதிப் பொருள் கொண்டு வெடிபொருள் பண்ணமுடியுமென்றும் இப்பொழுது பல்துலக்கும் பற்பசை கூட எடுத்துக்கொண்டு பிரயானம் பண்ண முடியாது என்ற வருத்தத்தில் நான் இப்படி ஒரு பதிவை இன்று இங்கு பதிந்து வைத்தேன், சிவா.

http://orani-sittingby.blogspot.com/2006/08/what-we-lose-in-awake-of-recent-terror.html

August 11, 2006 8:36 PM  
Blogger கோவி.கண்ணன் said...

சிபா... !

எதிரிகளை திருத்துவதற்கு ... அவர்களின் நல்ல செயல்களை பாராட்டுவது தான். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு நன்றி சொன்னதில் உங்களுடன் இணைந்து கொள்கிறேன் !

August 11, 2006 8:55 PM  
Blogger Sivabalan said...

நேசி,

இப்பொழுதுதான் படித்தேன்.. என்னமோ போங்க..

எங்கே போகிறோம் நான்..???

நேரம் கிடைத்தால் தமிழிலும் ஒரு பதிவு போடுங்க..

August 11, 2006 9:00 PM  
Blogger Sivabalan said...

GK,

உணமைதான்.. புகழ்ச்சியின் மகிழ்ச்சியில் மேலும் ஏதாவது நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கையில்...

August 11, 2006 9:03 PM  
Blogger ஜோ/Joe said...

பாகிஸ்தான் மக்களோடு நமக்கிருக்க வேண்டிய உறவு குறித்து எனது பழைய பதிவு பங்காளிகள்

August 11, 2006 10:37 PM  
Blogger Sivabalan said...

ஜோ,

வருகைக்கும் சுட்டிக்கும் நன்றி.

August 11, 2006 10:43 PM  
Blogger பெத்தராயுடு said...

பாகிஸ்தானுடன் எப்போதும் senti-யா உறவு பாராட்டும் இந்தியர்கள்; நேப்பாளியர்களுடனோ, பங்ளாதேசிகளுடனோ, இலங்கையர்களுடனோ அதே அளவு நெருக்கத்தை உணர்கிறோமா?

August 11, 2006 11:46 PM  
Anonymous Anonymous said...

நன்றி சகோதரர் சிவபாலன்.

அன்பே உருவான உலகத்துக்கு அடித்தளமிடும் சகோதரர்களுடன் இணைவதில் பெருமிதம் கொள்கிறேன்.

அன்புடன்
இறை நேசன்

August 12, 2006 1:37 AM  
Blogger Sivabalan said...

பெத்த ராயுடு,

நீங்கள் சொலும் விசயம் எனக்கும் ஆச்சரியத்தை தருகிறது.. ஏன் நாம் பாக்கின் மீது மட்டும் சென்டியாக Feel பண்ணுகிறோம்..

யாராவது பதில் சொல்லுங்கப்பா..

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

August 12, 2006 8:42 AM  
Blogger Sivabalan said...

இறை நேசன்,

உண்மைதான்.. அன்பு ஒன்று தான் இப்பூலகை நல் வழிக்கு இட்டுச் செல்லும்..

இணைந்து கொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி.

வருகைக்கு நன்றி.

August 12, 2006 8:44 AM  
Blogger Amar said...

அவசரபட்டுவிட்டீர்கள் சிவபாலன்.

எப்.பி.ஐயின் தூண்டுதலின் பேரில் தான் பாகிஸ்தான் சில தீவிரவாதிகளை கைது செய்ததாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலிம் இந்த மும்பை குண்டுவெடிப்பில் பயன்படுத்தபட்ட வெடிப்பொருட்களின் தன்மை இன்னும் கண்டறியபடவில்லை.

ஒரு வேளை இந்த திரவ வெடிப்பொருட்களை சோதனை செய்ய மும்பை குண்டு வெடிப்பு நடந்து இருக்கலாம் என்றும் சில intel அதிகாரிகள் சந்தேகபடுகின்றனர்.

இது முழுக்க-முழுக்க ஒரு எம்.ஐ.15வின் ஆப்ரேஷன்.இறுதி கட்டத்தில் எப்.பி.ஐ மற்றும் ஐ.எஸ்.ஐ ஈடுபடுத்தபட்டது.

தாவூத்தும், லஷ்கரும் அப்படியே இருக்கும் போது பாகிஸ்தானை இந்தியர்கள் பாராட்ட என்ன இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை, சிவபாலன்.

August 12, 2006 8:55 AM  
Blogger Sivabalan said...

சமுத்ரா

நீங்கள் சொல்வதில் உண்மை இருக்கலாம்..ஆனால் பாகிஸ்தானியர்கள் எந்த ஒரு விசயத்திலும் முடிந்தவரை வளைந்து கொடுக்காதவர்கள். இந்த விசயத்தில் கொஞ்சம் முன் வந்திருப்பது பாராட்ட வேண்டிய விசயம்..

ஆனால், எந்த ஒரு பிரச்சனைக்கும் பல கோனங்களில் விசயங்கள் வெளி வந்து கொண்டுதான் இருக்கும். அதில் உண்மையும் இருக்கலாம்..

என்க்கு இந்த செய்தியை படித்த உடன் பாகிஸ்தான் மேல் ஒரு நன்றியுணர்ச்சி ஏற்பட்டது. அதன் பாதிப்பே இந்தப் பதிவு.

இதனால் நான் பாகிஸ்தான் செய்யும் எந்த ஒரு செயலுக்கு நான் ஆதரவு தெரிவிக்கவில்லை. மாறாக அவர்கள் மும்பை வரை செய்த பல விசயங்களை எதிர்க்கவே செய்தேன்.

பலமை வாதிகள் நிறைந்த நாட்டில் இது ஒரு சம்பவத்தை பாராட்டுவதன் மூலம் அந்நாட்டு பிற மக்களுக்கு ஒரு நல்லுணர்வு கட்டாயம் ஏற்படும்.

ஆட்சியாளர்களும் முடிந்தவரையில் ஏதேனும் செய்வார்கள் என்ற நம்பிக்கையில்..

மேலும் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் இப்பதிவில்லை.

நான் இந்தியன் என்பதில் பெருமை படிகிறேன். நான் முதலில் இந்தியன்.

வாழ்க பாரதம்!!! ஜெய்கிந்த்!!

August 12, 2006 9:11 AM  
Blogger Sivabalan said...

சமுத்ரா,

வருகைக்கும் கருத்துபதிவுக்கும் மிக்க நன்றி

August 12, 2006 9:13 AM  
Blogger Amar said...

சிவபாலன்,

பாகிஸ்தானை பாராட்டுவதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஆனால் பாராட்டும் முன்பு நாம் ஒரு விஷயத்தை முழுசாக அலச வேண்டும்.

1993ஆம் ஆண்டு மும்பை குண்டுவெடிப்பு தொடர்பான ஆதாரங்களை நமது RAW அமெரிக்காவிடம் கொடுத்து பாகிஸ்தானை அடக்கு என்ற சொன்ன போது மிக வசதியாக அந்த ஆதாரங்களை "தொலைத்துவிட்டோம்" என்று சொல்லி கைகழுவி விட்டது அமெரிக்கா.

இந்தியாவை தீவிரவாதிகள் மூலம் நோகடிப்பதில் அமெரிக்காவும்-பாகிஸ்தானும் கூட்டாக செயல்படுபவர்கள் என்பது எனது கருத்த அல்ல, தனது வாழ் நாளில் பெரும் பகுதியை RAWவில் பனியாற்றிய திரு.ராமன் அவர்களின் கருத்து.

தீவிர அமெரிக்க admirerஆன் மஹாராஜாதிராஜா லிச்சாவிபுத்திரா சமுத்ராவே அமெரிக்காவுக்கு எதிராக ஒரு கருத்து சொன்னா நம்புங்க, சிவபாலன். :-)

ஜெய் ஹிந்த்!

August 12, 2006 10:33 AM  
Blogger Sivabalan said...

// தீவிர அமெரிக்க admirerஆன் மஹாராஜாதிராஜா லிச்சாவிபுத்திரா சமுத்ராவே அமெரிக்காவுக்கு எதிராக ஒரு கருத்து சொன்னா நம்புங்க //

கலகிடீங்க...


நம்புகிறேன்.. சமுத்திரா..

வருகைக்கு நன்றி.

வாழ்க பாரதம்!! ஜெய் ஹிந்த்!!

August 12, 2006 11:06 AM  
Blogger Sivabalan said...

சமுத்திரா,

பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

August 12, 2006 11:09 AM  
Blogger Muse (# 01429798200730556938) said...

இதற்கான நன்றிகளை நாம் ஏன் தெரிவிக்க வேண்டும் என்பதுதான் புரியவில்லை.

இந்த செயலால் பாதுகாக்கப்பட்டது இங்கிலாந்து.

பாகிஸ்தான் இந்தியாவில் நடைபெறவிருந்த ஒரு கொடுஞ்செயலைத் தடுத்திருந்தால் பாராட்டியிருக்கலாம். நன்றி சொல்லியிருக்கலாம்.

பாகிஸ்தானை ஏதாவது ஒரு காரணத்திற்கு பாராட்டியே ஆகவேண்டும் என்கிற நோக்கம்தான் எனக்குத் தெரிகிறது. அப்படி ஏதேனும் பாராட்டித்தான் ஆக வேண்டுமென்றால் அது இந்திய மக்கள்தொகை குறைப்பில் செய்துவரும் பணிகளைப் பாராட்டலாம்.

August 12, 2006 11:14 AM  
Blogger Sivabalan said...

Muse,

இந்த பாராட்டின் நோக்கமே அவர்கள் இந்த செயலையும் நம்க்கும் செய்யவேண்டும் என்பதற்காக..

மற்றபடி அவர்களை பாராட்ட எந்த உள்நோக்கமில்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

August 12, 2006 11:22 AM  
Blogger Muse (# 01429798200730556938) said...

நீங்களே சொல்லுங்கள் சிவபாலன், நாம் எத்தனை முறை நட்புடன் கை நீட்டியிருக்கிறோம். விளைவுகள்தான் என்ன?

அந்த நாட்டின் முழு அரஸியலும் இந்திய அழிப்பில்தான் இருக்கிறது. நமக்கு பாக்கிஸ்தானிய ப்ரச்சினை பத்தோடு பதினொன்று.

நம்முடைய நல்ல நம்பிக்கைகளுக்குக் காரணம் இதுவரை நம் வீட்டை தீவிரவாதிகள் தாக்கவில்லை என்பதால் இருக்கலாம்.

August 12, 2006 11:28 AM  
Blogger Muse (# 01429798200730556938) said...

உங்களுக்கு எந்தவித உள்நோக்கமுமில்லை என்பது எனக்குத் தெரியும் நண்பரே. நீரில் விழுந்த தேளை காப்பாறும் குணம் நம்முடையதாக இருக்கிறது. அடுத்தமுறை கொட்டாது என்றுதான் ஒவ்வொரு முறையும் ஏமாறுகிறோம்.

August 12, 2006 11:31 AM  
Blogger Sivabalan said...

Muse,

உண்மைதான். அவர்கள் இந்தியாவை வைத்துதான் அரசியல் செய்கிறார்கள்..

பாகிஸ்தானிலும் நிச்சயம் நல்ல உள்ளங்கள் இருக்கத்தான் செய்யும்.

நம்முடைய சமூக அமைப்புமும் நன்றாக இருப்பதால் நல்ல நம்பிக்கைகளுக்கு காரனமாகிவிடுகிறது..

ஆனால் இந்தியர்களின் மீது நடத்தப் படும் தீவிவாத தாக்குதலை எதிர் கொள்ளும் சக்தி ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கிற்து. உ.ம். மும்பை குண்டு வெடிப்பு.

August 12, 2006 11:39 AM  
Blogger Muse (# 01429798200730556938) said...

எல்லா ஊரிலும், எல்லா குழுக்களிலும் நல்ல உள்ளங்கள் உள்ளனர் சிவபாலன். ஆனால் இருக்க வேண்டிய இடத்தில் அவர்கள் இல்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை.

August 12, 2006 11:43 AM  
Blogger Muse (# 01429798200730556938) said...

இங்கே பாக்கிஸ்தானுக்கு வரிசையில் நின்று நாம் நன்றி சொல்லிக்கொண்டிருக்கும் போது அமெரிக்கா தன்னுடைய நன்றியை எப்படி செலுத்தியது என்பது டிவியில் தெரிந்தது.

"பாகிஸ்தானிலிருந்து நேரடியாக வரும் விமானங்களை அமெரிக்கா தடை செய்துள்ளது."

August 12, 2006 11:43 AM  
Blogger Muse (# 01429798200730556938) said...

>>>>> ஆனால் இந்தியர்களின் மீது நடத்தப் படும் தீவிவாத தாக்குதலை எதிர் கொள்ளும் சக்தி ஒவ்வொரு இந்தியனுக்கும் இருக்கிற்து. உ.ம். மும்பை குண்டு வெடிப்பு.<<<<

நீங்கள் எந்த சக்தியைப் பற்றி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. உண்மையில் நமக்கு நிஜமான எதிர்கொள்ளும் சக்தி இருந்திருக்குமானால் இது மீண்டும் மீண்டும் நடந்திருக்காது. குறைந்த பக்ஷம் இந்த தீவிரவாதச் செயலில் ஈடுபட்டவர்களில் ஒரு இரண்டு பேருக்காவது தண்டனை கிடைத்திருக்கும்.

August 12, 2006 11:47 AM  
Blogger Sivabalan said...

//அடுத்தமுறை கொட்டாது என்றுதான் ஒவ்வொரு முறையும் ஏமாறுகிறோம்.//


எனக்கென்னமோ நீங்கள் ரொமப ஆதங்கப் படுகிறீர்கள் எனத்தெரிகிறது..

இப்பதிவின் நோக்கம ..

//இந்த செயலையும் நம்க்கும் செய்யவேண்டும் என்பதற்காக..//

இது தான்..

August 12, 2006 11:56 AM  
Blogger Sivabalan said...

Muse,

//"பாகிஸ்தானிலிருந்து நேரடியாக வரும் விமானங்களை அமெரிக்கா தடை செய்துள்ளது."//

அமெரிக்கா தடை செய்யக் காரணம் பாகிஸ்தானில் Control Mechanism குறைபாடு இருப்பதால்..

ஆனால் அதற்காக இச் செயலை பாராட்டாமல் இருக்க முடியாது.

ஏன் பாராட்டினேன் என்பதற்கு ஏற்கனவே பதில கூறிவிட்டேன்

August 12, 2006 11:57 AM  
Blogger Sivabalan said...

Muse,

//இது மீண்டும் மீண்டும் நடந்திருக்காது. //

உலகம் முழுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது..


//நீங்கள் எந்த சக்தியைப் பற்றி சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. //

அதை திரம் பட எதிர் கொள்வதென்பது தீவிரவாதம் நிகழ்ந்தவுடன் நிலைமை சமாளிக்கும் திறனும் அடங்கும்.. முன்கூட்டியே தடுப்பதும் அட்ங்கும்..

சமாளிக்கும் திறன் மற்ற நாடுகளைவிட இந்தியாவுக்கு அதிகம் என்பதை தான் சொன்னேன்.

August 12, 2006 12:02 PM  
Blogger Sivabalan said...

Muse,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

August 12, 2006 12:03 PM  
Blogger பெத்தராயுடு said...

ஒரு பிரச்சினையை தீர்க்க நான்கு முறைகளைக் கையாளலாம்.

சாம, தான, பேத தண்டம்.

சாம தான முறைகளினூடே நாம் அல்லாடிக் கொண்டிருப்பதினால்தான் இம்மாதிரி நல்லெண்ணங்கள் பொருட்படுத்தப்படுவல்லை. இது வரலாறு சொல்லும் பாடம்.

August 12, 2006 12:39 PM  
Blogger Thekkikattan|தெகா said...

சமுத்ரா,

//தீவிர அமெரிக்க admirerஆன் மஹாராஜாதிராஜா லிச்சாவிபுத்திரா சமுத்ராவே அமெரிக்காவுக்கு எதிராக ஒரு கருத்து சொன்னா நம்புங்க, சிவபாலன். :-) //

அட நீர் இது போன்ற ஒரு உண்மையை இங்கு வைத்திருக்கீறா... இருங்க தூங்கிக்கொண்டு இருக்கிறேனா... இல்ல முழிச்சுகிட்டுத்தான் இருக்கிறேனா... நன்றி சமுத்ரா ;-)))

August 12, 2006 3:45 PM  
Blogger Sivabalan said...

பெத்த ராயுடு,

நன்றாக சொல்லியுள்ளீர்கள். உணமைதான்..

வருகைக்கு நன்றி

August 13, 2006 9:36 AM  
Blogger Sivabalan said...

தெகா,

:)

August 13, 2006 9:40 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv