கல்பனா சாவ்லா விருது - Dr. வசந்தா கந்தசாமி
ஐ.ஐ.டி. விரிவுரையாளர் டாக்டர் வசந்தா கந்தசாமிக்கு, இந்த ஆண்டுக்கான ‘கல்பனா சாவ்லா விருது வழங்கப்படும்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘தீரச்செயல் புரியும் பெண்ணுக்கு விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு விருது வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான ‘கல்பனா சாவ்லா விருது’ ஐ.ஐ.டி. விரிவுரையாளர் டாக்டர் டபிள்யூ.பி.வசந்தா கந்தசாமிக்கு வழங்கப்படு கிறது.
டாக்டர் வசந்தா கந்தசாமி, கணிதத்துறையில் சிறந்த அறிஞர், ஆராய்ச்சியாளர். ஐ.ஐ.டி. நிறுவனத்தில் 17 ஆண்டுகள் விரிவுரையாளராக பணிபுரிந்து, கணிதத்தில் பல மாணவர்கள் டாக்டர் பட்டம் பெற வழிகாட்டியாக இருந்துள்ளார்.
கணிதத்துறையில் இவர் எழுதிய 14 நூல்கள் அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளது. எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பாகவும் 2 நூல்கள் எழுதியுள்ளார்.
ஐ.ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும்போது, சமூக நீதி அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று போராடியுள்ளார்.
டாக்டர் வசந்தா கந்தசாமியின் கணித அறிவாற்றலையும், சமூக நீதியை நிலைநாட்டிட தீரமுடன் போராடிய மன உறுதியையும் பாராட்டி, அவருக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது ரூ.5 லட்சத்துடன், பதக்கமும் கொண்டது. சுதந்திரத் தினத்தன்று முதல்வர் கருணாநிதி இந்த விருதை வழங்கி கவுரவிக்கிறார்
நன்றி: The Hindu, தினகரன்
http://www.hindu.com/2006/08/10/stories/2006081019050500.htm
19 Comments:
சிபா...!
நல்லப் பதிவு ... விருதையும், விருது பெற்றவர்களை கவுரவிக்கும் விதமாக இந்த பதிவு அமைந்துள்ளது. நன்று !
GK,
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
Dr. வசந்தா கந்தசாமி
அவர்களை கவுரவிக்கும் வகையில் தான் இப்பதிவு.
ஏற்கனவே திரு.பத்ரி அவர்களும் பதிவிட்டுருக்கிறார்.
விரிவுரையாளர் திருமதி. வசந்தா கந்தசாமிக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
இந்த பரிசு மூலம் வேலையிடத்தில் அவருக்கு சிக்கல்களே வரும்.
Pot"tea" kadai,
சாதனையாளர்களை வாழ்த்துவது மகிழ்ச்சியான விசயமே.
வருகைக்கு நன்றி.
அருண்மொழி,
சிக்கலை இதுவரை சந்தித்ததுக்கும் இனி சந்திப்பதுக்கும் தான் இந்த வீர விருது...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
சாதனையாளருக்கு தகுந்த பரிசு கிடைத்ததில்/ கொடுத்ததில் மகிழ்ச்சி. அவருக்கு எனது பாராட்டுக்கள் !!
தகவலுக்கு நன்றி சிவபாலன்.
மணியன சார்,
உண்மைதான்.. Dr. வசந்தா கந்தசாமிக்கு இது தகுந்த பரிசு/விருது...
வருகைக்கு நன்றி.
புதுமை விரும்பி,
வருகைக்கு நன்றி.
மேடம் கல்பனா சாவ்லாவின் அறிவு பற்றியோ ஆராய்ச்சித்திறமை பற்றியோ ஒரு எழுத்தும் சொல்லத் தகுதி எனக்கில்லாமல் இருந்தாலும், அவருடைய நாட்டுப்பற்று குறித்து சொல்ல முடியும். அவர் உயிருடன் இருந்தப் போதே இந்தியக் குடியுரிமையை விட்டுவிட்டு அமெரிக்க குடியுரிமை பெற்றவர். அவருடன் இறந்தவர்களில் ஒரே ஒரு விஞ்ஞானி மட்டும் தன் உடம்பில் தன்னாட்டுக்கொடியால் (இஸ்ரேல்) போர்த்தப்பட்டார். மற்றவர்கள்-கல்பனா சாவ்லா உட்பட அனைவருக்கும் அமெரிக்கக் கொடி தான்.
நமது அரசுக்கு விருது அறிவிக்க இந்தியப் பற்றுள்ள விஞ்ஞானிகளா கிடைக்கவில்லை?
அல்லது ' ஐ.ஜி ய எனக்குத் தெரியும்' மனப்பான்மையா?
டாக்டர். வசந்தா அவர்களுக்கு கிடைத்த அங்கீகாரத்துக்கு ஒரு இந்தியனாக நானும் பெருமிதப்படவே செய்கிறேன்.
ராஜா,
// ஐ.ஜி ய எனக்குத் தெரியும்' மனப்பான்மையா? //
இதை இரசித்தேன்...
அலெக்சான்டர் கிரகம் பெல் நினைவாக "Hello" சொல்கிறோமல்லவா.. (அப்படித்தான் நான் நினைக்கிறேன்)...
இந்திய வமசாவழியில் வந்த ஒரு பெண்ணை மரியாதை செய்யும் விதமாக செல்வி.ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்டதுதான் இந்த விருது...
இதில் பெண்ணின் வீரம்/துணிச்சல் போன்றவற்றை பார்க்கலாம் என எனக்கு தோன்றுகிறது.
வருகைக்கு நன்றி.
ராஜா, நீங்கள் சொன்ன தகவல் என்னை வருந்த வைக்கின்றது. இந்திய குடியுரிமையை விரும்பாத ஒரு
சாதனையாளர் பெயரால், இந்திய அரசு அல்லது மாநில அரசு, விருது வழங்குவது வெட்கக்கேடு தான்.
//நமது அரசுக்கு விருது அறிவிக்க இந்தியப் பற்றுள்ள விஞ்ஞானிகளா கிடைக்கவில்லை?//
மிகவும் அருமையான கேள்வி
சிவபாலன், உங்களையும் பாராட்ட வேண்டும். விசயங்களின், நல்ல பக்கங்களைப் பார்ப்பதற்காக.
புதுமை விரும்பி,
புரிந்துகொண்டமைக்கு நன்றி.
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி.
ராஜா,
அப்படி இரட்டை குடியுரிமை பெற்று தனது தாய் நாட்டின் மீது இன்னமும் பாசம் வைத்திருக்க முடியாது என்று பொருள் கொள்ள முடியுமா?
இந்தியா மிகப்பெரிய சுதந்திர நாடுதான். நம் தலைவர்களுக்கு சுதந்திரமோ சுதந்திரம்.
வேறு ஒரு நாட்டின் புகழுக்காக/வளர்ச்சிக்காக உழைத்தவரின் பெயரில் விருதுகள் வழங்க தலைவர்களுக்கு முடிகிறதே. அதுவும் இந்தியாவின் வளர்ச்சியை பொறுக்காத அமெரிக்கருக்கு.
பாவம் நாம் தான்.
புதுமை விரும்பி, உங்களை வருந்த வைக்க நேர்ந்ததற்காக வருந்துகிறேன்.
நான்சொல்லவந்தது 'பெயரளவிலும்' சில அரசியல் முடிவுகள் எடுக்கப்படுகிறது என்பதைத் தான். முனைவர். வசந்தா அவர்களுக்கு வாழ்த்தாக வந்த இந்தப் பதிவில் இதை இன்னும் விரிவாகச் சொல்ல விரும்பவில்லை.
தெ.கா, மேடம் கல்பனா சாவ்லா அவர்கள் இரட்டை குடியுரிமை கொண்டிருந்தார் என்று யார் சொன்னது?
மாஹிர்,
பெண்ணின் வீரம் மட்டுமே கருத்தில் கொண்டு பார்த்தால் விருதுக்கு ஏற்ற பெயர்தான்..
நீங்கள் சொல்வதுபோல் இந்தியாவிலும் நல்ல துணிச்சல் மற்றும் வீரத்திற்கு பெயர் போன பெண்கள் உள்ளனர் விருதுக்கு பெயராய்..
எனினும் சர்வதேச அளவில் கல்பனா சாவ்லாவின் வீரம்/ துணிச்சல் போற்றப் பட்டது என்றால் மிகையாகாது...
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி.
தெகா, ராஜா
வருகைக்கு நன்றி.
Post a Comment
<< Home