அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்துக்கு தடை
தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும். இதில் ஜாதி பாகுபாடு காட்டக்கூடாது என்ற கோரிக்கை எழுந்தது. இதை தொடர்ந்து அனைத்து ஜாதியை சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்க வகை செய்யும் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959-ல் திருத்தம் கொண்டு வர இந்த மசோதா வகை செய்கிறது.
இந்த அவசர சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
மதுரை மற்றும் திருச்சியை சேர்ந்த ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்க உறுப்பினர்கள் சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சபர்வால் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.
வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அனைத்து ஜாதி யினரும் கோவில் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது.
இது தொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது
நன்றி: The Hindu, மாலைமலர்.
http://www.hindu.com/thehindu/holnus/000200608141201.htm

16 Comments:
நல்ல வேளை நான் அர்சகர் ஆவதற்கு முயற்சிக்கவில்லை ஒரு வேளை முயன்றிருந்தால் ஏமாந்து போய் இருப்பேன் :))
வணக்கத்துடன்,
மிகுந்த மன வேதனையுடன் தான் இந்தப் பதிவிட்டேன்..
நீங்க என்னங்க ஆப்பு அது இதுன்னு பதிவிட்டுருக்கிறீங்க...
வஞ்சப் புகழ்ச்சியா?
சமூக நீதிக்காக ஒரு விசயத்தை கொண்டுவந்தா அதை ஏன் நீங்க பிராமனர்களுக்கு எதிரானதுன்னு சொல்லறீங்க .. ஒன்னும் புரியவில்லை..
நீங்க சொல்லறத பார்த்தா இதற்காக அரசாங்கத்தையே கலைத்து விட வேண்டியதுதான..
உங்கள் நிலைப் பாடு புரியவில்லை..
உண்மையில் செய்ய வேண்டியது, அர்ச்சகரே தேவையில்லை என்றாக்குவது தான். நான் கோவிலுக்குப் போகிறேன், அனால் அர்ச்சகரின் மூலம் எதுவும் செய்வதில்லை.
வணக்கத்துடன்,
இப்பொழுது நன்றாக புரிந்த்துவிட்டது..
//அரசை கலைக்கும் அதிகாரம் இவர்களிடம் இல்லாத காரணத்தால் 'நோட்டீஸ்' விட்டு நோண்டியிருக்கிறார்கள் //
இது சூப்பருங்க...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
//சமூக நீதிக்காக ஒரு விசயத்தை கொண்டுவந்தா அதை ஏன் நீங்க பிராமனர்களுக்கு எதிரானதுன்னு சொல்லறீங்க //
சிவபாலன்,
இது உங்களுக்கு இப்பத்தான் தெரியுமா? தமிழ்,தமிழர் என்று கூறினால் அது பிராமணர்களுக்கு எதிர்ப்பு என்று சொல்லி விடுவார்கள்.
சம்ஸ்கிருதம் எதற்கு அது நம் மொழி இல்லையே என்றால் அதுவும் பிராமணரை வேண்டுமென்றே எதிர்ப்பதாகிவிடும்.
நம்மல்லாம் ஒன்று என்று கூறிக்கொண்டே நம்மை அடிமைப்படுத்தவது இது என்று இதைத்தான் கூறினார்கள் பெரியவர்கள்
GK,
உங்களுக்கு மட்டுமா ஏமாற்றம்...
ஜெயபால்,
இன்னும் கொஞ்சம் காலத்திற்கு மற்றவர்களும் அர்ச்சகர்களாக இருக்கட்டும்.. சமூக நீதிகாக..
மற்றபடி
உண்மையாவே நல்ல யோசனைதான்...
எதில் எதிலோ பரினாமபடும் நாம் இதில் ஏன் இவ்வாறு மாறக் கூடாது...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
முத்து,
என்னங்க எல்லாமே உண்மையாக சொல்லியிருக்கீங்க..
//நம்மல்லாம் ஒன்று என்று கூறிக்கொண்டே நம்மை அடிமைப்படுத்தவது இது என்று இதைத்தான் கூறினார்கள் பெரியவர்கள்//
இது சூப்பருங்க... கலக்கல்...
அவஸரம் ஏன்? பொறுமை. இது வெறும் ஸ்டே மட்டுமே. வழக்கமாக இதுபோன்ற வழக்குகளை விஸாரிக்கும்போது, வழக்கு தீவிரமாக மாறுவதற்கு முன்பு இப்படி ஒரு இடைக்கால தடையை கோர்ட் ஏற்படுத்துவது வழக்கம்தான்.
வழக்கு நடந்து தகுதியுள்ள அனைவரும் அர்ச்சகராகலாம் என்று கோர்ட் தீர்ப்புக்கூறினால் நான் மகிழ்வேன். இறையிடம் நம் விருப்பத்தை தெரிவிப்போம். இறை நம்பிக்கை இல்லாதோர் இது நடக்கும் என்று உறுதியாக எண்ணுவோம். நல்ல எண்ணங்கள் பலிக்கும்.
Muse,
// தகுதியுள்ள அனைவரும் அர்ச்சகராகலாம் என்று கோர்ட் தீர்ப்புக்கூறினால் நான் மகிழ்வேன். //
என் எண்ணமும் அதுவே..
வருகைக்கும் கருத்துபதிவுக்கும் மிக்க நன்றி.
துளசி மேடம்,
இனைப்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி.
வருகைக்கும் சுட்டியைகொடுத்தமைக்கும் மிக்க நன்றி.
வணக்கத்துடன்,
இப்படி அடிக்கடி வந்து பிதற்றுங்கள். அப்போதுதான் படிப்பவர்களுக்கு வித்யாஸம் தெரியும்.
சிவபாலன்,
நான் சட்டத்தரணி இல்லை. எனவே இந்த விடயத்தில் உள்ள சட்டச் சிக்கல்கள் எனக்குத் தெரியாது. ஆனால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் தான் பூசாரியாகலாம் என்பதை அறங்கூறு மன்றம் ஆதரிக்குமேயாயின், இந்திய நீதித்துறையே நகைப்புக்கிடமாகும். அதுமட்டுமல்ல தமிழகத் தமிழர்கள் இன்னும் விழிப்படையவில்லை என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
வெற்றி ,
நீங்கள் சொல்லும் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி.
தாங்கள் மட்டும்தான் தட்டேந்தி பிச்சையெடுத்து உழைக்காமல் வயிறு வளர்க்க வேண்டும் என்ற பார்ப்பனர்களின் நல்ல எண்ணத்திற்கு செவிசாய்த்த நீதிமன்றத்திற்கு நன்றி.
விடாதுகருப்பு,
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி.
Post a Comment
<< Home