Wednesday, October 18, 2006

நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை




மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடப்பங்கீடு செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை ஏற்க இயலாது.
கொள்கை தொடர்பான விசயங்களில் முன்கூட்டியே தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளது.

டெல்லியில் மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடப்பங்கீடு அளிப்பது தொடர்பாக சட்டம் கொண்டு வருவது என்பது நாடாளுமன்ற நிலைக் குழுவின் சொந்த விஷயம். அது தொடர்பாக அந்தக் குழு ஆலோசித்து வருகிறது.

தனது அறிக்கை நாடாளுமன்றத்தில்தான் அந்தக் குழு முதலில் தாக்கல் செய்ய வேண்டும். சட்டம் கொண்டு வரப்பட்ட பின், அது தொடர்பாக விசாரணை நடத்தவோ, தலையிடவோ, கருத்து சொல்லவோ நீதிமன்றங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்பே அதில் தலையிடவோ, கொள்கை விஷயங்களில் தலையிடவோ நீதிமன்றங்களுக்கு சிறிதும் அதிகாரம் இல்லை.

கொள்கை விஷயங்கள் எதுவானாலும், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும். அது நாடாளுமன்றத்துக்கே உள்ள தனிப்பட்ட உரிமை. சட்டம் கொண்டு வருவதில், நாடாளுமன்றத்தில் அதை அறிமுகம் செய்வதுடன் அரசின் பணி முடிந்துவிட்டது.

பின்னர், அதை நிறைவேற்றுவதோ, திருத்தம் செய்து நிறைவேற்றுவதோ நாடாளுமன்றத்தின் உரிமை. அதனால், இடப்பங்கீடு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் அதற்கு அரசு உட்பட யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.

ஆனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றத் அதிகாரத்தில் தலையிடுவதாகதான் கருத வேண்டும். இதை ஏற்க முடியாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதற்கிடையில் இடப்பங்கீடு விவகார உத்தரவில் திருத்தம் செய்தது உச்சநீதிமன்றம்

உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடப்பங்கீட்டை அமல்படுத்துவது பற்றிய நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபின் சமர்ப்பிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இடப்பங்கீடு தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில்தான் முதலில் தாக்கல் செய்ய வேண்டும் என்று பல அரசியல் கட்சிகள் கூறின.

இந்த நிலையில், தனது உத்தரவில் திருத்தம் செய்து உச்சநீதிமன்றம் நேற்று வெளியிட்டது.

18 Comments:

Blogger Sivabalan said...

உச்ச நீதி மன்றத்திற்கு ஏன் இந்த அவசரம்.

October 18, 2006 5:50 PM  
Blogger Sivabalan said...

ஒரு நன்பரின் ஆலோசனையை ஏற்று படத்தில் சிறிய மாற்றம்.

October 18, 2006 6:52 PM  
Blogger சும்மா அதிருதுல said...

நீதி மன்றங்கள் தற்போது சந்தேக வட்டத்தில உள்ளது
இது இந்தியாவுக்கு நல்லதல்ல..


பல நேரங்களில் விலைக்கு வாங்க படுகின்றன நீதிகள்

October 18, 2006 7:04 PM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

சிபா...!

எல்லாவற்றிலும் நீதிமன்ற தலையீடு இருந்தால் பின்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதற்கு ?

மார்க்சிஸ்ட் கேள்வியில் ஞாயம் உண்டு !

October 18, 2006 7:09 PM  
Blogger Sivabalan said...

சின்னபுள்ள,

நீங்கள் சொல்வதும் ஒரு விதத்தில் சரிதான். அவைகள் சந்தேகத்திற்கு இடமின்றி நடக்க தவறுகின்றன என தோன்றுகிறது.

அதுவும் இடப்பங்கீடு போன்ற விசயங்களில் ஒரு தலைப் பட்சமாகவே செயல்படுவதாகவே தெரிகிறது.

அவசரமாக உத்தரவில் மாற்றம் கொண்டுவந்துள்ளது கேள்விக்குரியது.

உங்கள் வருகைக்கு நன்றி

October 19, 2006 6:51 AM  
Blogger Sivabalan said...

அரசு பதவி உயர்வுகளில் எஸ்.டி., எஸ்.சி.க்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் கொண்டு வரப்பட்ட 77-வது திருத்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட் இன்று தீர்ப்பளித்தது.

தலைமை நீதிபதி ஒய்.கே.சபர்வால் தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் இந்த தீர்ப்பை வழங்கியது. மொத்த இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டக் கூடாது எனவும், வசதி படைத்தவர்களுக்கு இடஒதுக்கீடு கூடாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

October 19, 2006 7:19 AM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

எல்லாவற்றிலும் நீதிமன்ற தலையீடு இருந்தால் பின்பு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதற்கு ?

Supreme Court has to intervene
to ensure that the government does
not deny equality in the name
of reservation,and, to ensure that
govt. does not act beyond its
powers.Constitution is supreme
in India.I support the intervention
by Supreme Court.Otherwise Ramadoss
and Co will try to pass laws providing
for 100% reservation.

October 19, 2006 7:36 AM  
Blogger Sivabalan said...

GK,

உண்மைதான். நீதிமன்றங்களின் வரைமுறை சுதந்திரம் பெற்று 60 வருடங்களுக்கு மேலாகியும் சரியாக நிர்னியக்கப்பாடாத்து வருந்ததக்கது. அதுவும் இட பங்கீடு விசயங்களில் மிகவும் சொதொப்புகிறார்கள்.

மார்க்சிஸ்ட் கேள்வி கேட்டவுடன் உத்தரவை மாற்றுகின்றனர். இது நீதி மன்றமா அல்லது வேறு ஏதாவதா? ஒன்றும் புரியவில்லை.

ஏன் இரண்ட நாளில் உத்தரவை மாற்றுகின்றனர். நீதிபதிகள் என்ன செய்கிறார்கள். ஏன் இந்த தடுமாற்றம்.

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

October 19, 2006 9:05 AM  
Blogger Sivabalan said...

Ravi Srinivas Sir,

நீங்கள் சொல்வதுதான் (நீதிமன்றங்களின் தலையீடு) நடந்து கொண்டிருக்கிறதே.. அப்பறம் அதைப் பற்றி ஒன்னும் சொல்வதற்கில்லை.

இங்கே பிரச்சனை என்னவென்றால் நீதிமன்றம் வரிந்துகட்டும்போது ஏன் தடுமாறுகிறது என்பதுதான்.

இதிலிருந்து என்ன தெரிகிறது, உண்மையில் இவர்கள் சரியாக அனுகுவதில்லை அல்லது அவசர அவசரமாக "அ" நீதியை நிலை நாட்டுகின்றனர்.. ம்ம்ம்ம்..

உங்கள் வருகைக்கு மிக்க நன்றி

October 19, 2006 9:55 AM  
Blogger Unknown said...

இயற்றப்பட்ட சட்டங்களைக் கொண்டுதான் நீதி மன்றம் செயல்பட வேண்டும். சட்டமியற்றுவதில் தலையீடு நீதி மன்றங்களுக்கு அழகல்ல.

October 19, 2006 10:08 AM  
Blogger Sivabalan said...

வைசா,

மிகச் சரியாக சொன்னீர்கள்.

நாடாளுமன்ற குழுவின் அறிக்கை இன்னும் நாடாளுமன்றத்திலே சமர்பிக்கப்படவில்லை. அதற்குள் அதை இவர்கள் வாங்கி படிக்க வேண்டுமாம். ஏன் ஏதற்கு என்பது அனைவரும் அறிந்ததே...

கேள்விகள் வந்தவுடன் அந்தர் பல்டி அடித்துவிட்டனர்..

என்னமோ போங்க...

வருகைக்கு மிக்க நன்றி

October 19, 2006 10:18 AM  
Blogger VSK said...

இவ்வளவு சொன்ன நீங்கள் அந்த திருத்தம் என்ன செய்தார்கள் என்பதையும் சொல்லியிருந்தால் கருத்து தெரிவிக்க உதவியாய் இருந்திருக்கும்.

October 19, 2006 10:24 AM  
Blogger Sivabalan said...

சுல்தான்,

இரத்தின சுருக்கமாக சொல்லிவிட்டீர்கள்..

புரிய வேண்டிய நீதி மன்றங்களுக்கு புரியுமா?

வருகைக்கு மிக்க நன்றி

October 19, 2006 10:35 AM  
Blogger Sivabalan said...

SK அய்யா

//உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடப்பங்கீட்டை அமல்படுத்துவது பற்றிய நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபின் சமர்ப்பிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.//


பதிவிலேயே இருக்கிறதே..


வருகைக்கு நன்றி

October 19, 2006 11:49 AM  
Blogger Sivabalan said...

SK அய்யா,

//முறையான சட்டம் இயற்றாமல் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தகூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இடஒதுக்கீடு செய்வதற்கான காரணம் மற்றும் பார்லிமென்ட் குழு அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
//

இதுதான் முதலில் உச்ச நீதி மன்றம் கொடுத்த உத்தரவு.

அதை இரண்டே நாளில் மாற்றிவிட்டனர்.

October 19, 2006 12:03 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

Supreme Court had modified its earlier order.There is nothing wrong in it.Parliament has powers
to enact laws but that right could
not result in altering the basic
structure of the constitution.

October 19, 2006 7:56 PM  
Blogger Sivabalan said...

Ravi Srinivas Sir,

உங்கள் கருத்துக்கு நன்றி

October 24, 2006 9:28 AM  
Blogger தமிழ் அகராதி said...

அன்புள்ள அய்யா,

தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாம வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.

நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.

இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.

தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.

கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.

எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.

சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.

தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.

இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.

கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.

தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?

December 11, 2006 6:15 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv