Tuesday, October 17, 2006

லிவ் இன் அரேஞ்மென்ட்



மேற்கத்திய பாணி "லிவ் இன் அரேஞ்மென்ட்' கலாசாரம், பரவத்துவங்கி விட்டது. பெங்களூரை தொடர்ந்து ஐதராபாத்திலும் சாப்ட்வேர் துறையில் கைநிறைய சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் இன்ஜினியர்களிடம் இப்படிப்பட்ட பழக்கம் தொற்றி வருகிறது.

காதலன், காதலி இவருக்கும் தங்களின் வரம்பு எது என்று தெரியும் என்று கூறினாலும், அந்த வரம்பு என்பது அவர்கள் நிர்ணயிப்பது தான். அவர் களுக்கு குழந்தை பெற்று, வளர்க்க வேண்டும், ஆளாக்க வேண்டும் என்று நினைக்கும் போது தான், அவர்களால், சட்டப்பூர்வ திருமணம் பற்றி சிந்திக்க நேர்கிறது.

அவர்களில் இருவருக்கும் எல்லா வசதிகளும் கிடைக்கிறது. ஆனால், வாழ்க்கை, பந்தம், கட்டுப்பாடு என்பதெல்லாம் நம்பிக்கையில்லாத விஷயமாகி வருகிறது. இவர்களின் பெற்றோர், இவர்களின் திருமணத்தை நடத்த முன்வந்தாலும், இந்த ஆணோ, பெண்ணோ முன்வருவதில்லை.

நாங்கள் ஒரே ப்ளாட்டில் தங்குவது தவறாக தெரிகிறதா? நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். ஆனால், திருமணம் என்ற பந்தத்துக்குள் போக தயாரில்லை. இப்படியே இருப்போம். குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவைப்பட்டால், அதை சட்டப்பூர்வமாகத்தான் செய்வோம்' என்று கூறுகின்றனர்.

பிரபல மனோதத்துவ நிபுணர் நிரஞ்சன் ரெட்டி கூறுகையில், "இந்த சமுதாயத்தின் கட்டுப்பாடான நடைமுறைகள் பிடிக்கவில்லை. நாங்கள் மாற்றத்தான் போகிறோம். அதற்காகத்தான் இந்த திருமண சடங்கு, சம்பிரதாயங்களை உடைக்கிறோம். நாங்கள் திருப்தியாக வாழாத நிலையில் பிரிந்துவிடுவோம் என்றும் கூறுகின்றனர்.

அந்த அளவுக்கு அவர்களிடம் திருமண பந்தம் என்ற கட்டுப்பாட்டின் மீது பயம், வாழ்வில் பிடிப்பின்மை, பாதுகாப்பின்மை இருப்பதை உணர முடிகிறது' என்றார்.

நன்றி: தினமலர்

30 Comments:

Blogger Sivabalan said...

இவ்விசயம் சம்பந்தமாக என் கருத்து.

குடும்பம் என்பது ஒவ்வொரு தனிமனிதனின் ஆக்கத்தில் முக்கிய பங்கு வகுக்குகிறது. குடும்பம் சார்ந்த வாழ்க்கை ஓரளவுக்கு இது வரை சமுதாயத்தில் நல்லதொரு அமைப்பாகவே உள்ளது. அதை நான் மறுக்கவும் இல்லை. எதிர்க்கவும் இல்லை.

ஆனால் இது போல் வாழ்பவர்களை கலாச்சாரத்தின் பேரால் அந்த தனிமனிதர்களின் உரிமையை பரிப்பதை நான் எதிர்கிறேன்.

அதற்காக நான் இவர்களை ஆதரிக்கவில்லை.

குடும்ப வாழ்க்கை நிச்சயம் நல்ல விசயமே. (இதில் சில விடுபட்டவைகளும் உண்டு)

October 17, 2006 6:21 PM  
Blogger Unknown said...

சிவபாலன்

இவர்கள் உரிமையை பறிப்பது தவறு.ஆனால் இந்தியாவில் பெண்களுக்கு இதனால் கிடைக்கும் சட்டபூர்வ பாதுகாப்புகள் பாதிக்கப்படலாம். உதாரணத்துக்கு திருமணம் நடந்திருந்தால் தான் ஜீவனாம்சம், சொத்தில் பங்கு ஆகியவை கிடைக்கும். இந்த வாழ்க்கை முறையால் அவற்றை பெண்கள் இழக்க நேரிடலாம். அதேல்லாம் தேவை இல்லை என கருதுவோருக்கு மட்டுமே இது ஒத்துவரும் என நினைக்கிறேன்

October 17, 2006 7:16 PM  
Blogger கால்கரி சிவா said...

சிவபாலன்,

கனடாவில் உள்ள இந்திய குழந்தைகள் எல்லாரும் விபசாரம் செய்வதாக என்னிடம் ஒருவர் பின்னூட்ட சண்டை போட்டார். அதாவது இளைஞர்களும் இளஞிகளும் டேட்டிங் செய்து காதலித்து பிறுகு உடலால் இணைவது விபசாரமாம் அவருக்கு. இன்னும் இந்த மனநிலையில் தான் உள்ளார்


இதே இந்தியாவில் நடந்தால் அவ்வளவுதான் அந்த பெண்ணை எல்லாரும் அவமதித்து நாசம் செய்துவிடுவார்கள்.

ஆனால் நவீன இளைய சமுதாயம் மாறிதான் வருகிறது. என்னுடன் இந்தியாவில் வேலைப்பார்த்த தென்னகத்தை சேர்ந்த பெண்ணும் வடநாட்டை சேர்ந்த ஆணும் 4 வருடங்கள் இணைந்து வாழ்ந்து பிறகு திருமணம் செய்துகொண்டு நல்ல வாழ்கை வாழ்கின்றனர்.

ஆனால் அந்த பெண்ணை மக்கள் பேசிய பேச்சு அப்பப்பா...

October 17, 2006 7:52 PM  
Blogger துளசி கோபால் said...

இங்கே நியூஸியில் ரெண்டு வருஷம் ஒண்ணா இருந்தாவே மனைவி/கணவனுக்கு உரிய உரிமைகள் எல்லாம் கிடைச்சிரும்.
பிரிஞ்சுபோனாங்கன்னா எல்லாத்தையும் சரிபாதி பாகம் பிரிச்சுக்கணும்.
குழந்தைகள் இருந்தால் அவுங்களுக்கு
யார்கிட்டே பசங்க இருக்கோ வுங்களுக்கு மற்ற பாதி மெயிண்டனன்ஸ் காசு தரணும்.

October 17, 2006 8:06 PM  
Blogger Thekkikattan|தெகா said...

சிவா,

நான் என்னத்தா சொல்றது, இதப்பத்தி; சட்டி சுட்டதடா, கை விட்டதடாங்கிறத விட... ரொம்ப கஷ்டமுங்க, ரொம்ப விழிப்புணர்வோட இருந்து காதலிலிலிலிச்சுகிட்டே இருக்கணும் ;-)

சரி, கமலுக்கு பக்கதில (வலது கைப்பக்கம்) ஒரு சின்ன பெண் ஒண்ணு கை கோர்த்துகிட்டு உட்கார்ந்து இருக்கே அது யாருங்க...

October 17, 2006 8:20 PM  
Blogger PRABHU RAJADURAI said...

சிவபாலன்,

இது குறித்து எனது பதிவு...http://marchoflaw.blogspot.com/2006/09/blog-post_27.html

சில வருடங்களுக்கு முன்னர் இதனை மரத்தடி இணையகுழுவில் எழுதிய பொழுது சில எதிர்வினைகள் இருந்தன...

October 17, 2006 8:21 PM  
Blogger PRABHU RAJADURAI said...

தேவையெனில் கட்டுரையின் இறுதிப்பகுதியினை வெளியிடவும்

"திருமணமே பொருளாதார பாதுகாப்பை முன்னிறுத்தி ஏற்பட்டுள்ள ஒரு வழக்கம். பொருளாதார பாதுகாப்பை தவிர வேறு உபயோகங்கள் திருமணங்களுக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. 'திருமணப் பந்தத்தினை மீட்டெடுப்பதற்கான' சட்டங்கள் (Restitution of Conjugal Rights) இருந்தாலும் விரும்பாத ஒரு கணவனையோ அல்லது மனைவியையோ நடைமுறையில் சேர்ந்து வாழ வைப்பது நீதிமன்றங்களால் முடியாத காரியம். எனவேதான் தனது குடிமக்களுக்கு சமுதாய, பொருளாதார பாதுகாப்பை அளிக்கவல்ல வளர்ச்சியடைந்த நாடுகளில் தற்போது திருமண பந்தமில்லாமல் 'long term relationship' என்று அழைக்கப்படும் மனமொத்த இருவர் சேர்ந்து வாழும் முறை பரவலாக பின்பற்றப்படுகிறது. இந்த முறையில் வாழ்வதால் பல அனுகூலங்கள் இருக்கின்றன. இந்தியாவும் அவ்வாறு பொருளாதார வளர்ச்சி பெறும் எதிர்காலத்தில் இங்கும் மெல்ல மெல்ல அத்தகைய முறை பின்பற்றப்பட போகிறது. மும்பை போன்ற நகரங்களில் மேல்தட்டு மக்கள் சிலர் ஏற்கனவே அப்படி வாழ்கின்றனர். தகுந்த பொருளாதார பாதுகாப்பு இருக்கையில் இப்படி வாழ எண்ணம் கொள்ளும் யாரும் இம்முறையை தாராளமாக கடைபிடிக்க முடியும். 'இது அந்நிய கலாச்சாரம் இல்லை. காந்தர்வ முறை என்று தி நூல்களில் சொல்லப்பட்ட இந்திய கலாச்சாரத்தின் நவீன வடிவம்தான்’ என்ற வாதமும் வைக்கப்பட இயலும். எது எவ்வாறாயினும், கணவன் மனைவிக்கிடையே நிலவும் அன்பும், ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் தன்மையைத் தவிர வேறு எந்த தாலியும் திருமண பந்தத்திற்கு வேலி இல்லை..."

October 17, 2006 8:25 PM  
Blogger சும்மா அதிருதுல said...

டீச்சர் நியுசி நிலநடுக்கம் எதும் பதிப்பு உண்டா..?


( என்னது கயமதனமா..? )

October 17, 2006 8:39 PM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

சிபா ...!
எனக்கென்னுமோ இதற்கெல்லாம் காரணம் எஸ்ட்ஸ் பயமாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது !

October 17, 2006 8:49 PM  
Blogger Sridhar V said...

சிவபாலன் அவர்களே,

திருமண ஒப்பந்தத்தை பற்றி நாம் பொதுவாகத்தான் விவாதிக்க முடியும். மற்றபடி அது சரியா தவறா என்று முடிவு எடுக்க வேண்டியது அவரவர் முடிவு. பிரபு ராஜதுரை அருமையாக சொல்லியிருக்கிறார். எந்த ஒரு ஒபந்தமுமே சம்பந்தப் பட்டவர்களின் மன மகிழ்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கக்கூடாது.

எனது (மராட்டிய) ஆண் நண்பர் திருமணமாகி ஒரு வருடத்தில், மனைவி விவாகரத்திற்கு விண்ணப்பித்து விட்டார். அதுவும் மிகப் பெரிய ஜீவனாம்சத்திற்கு (சுமார் 25 லட்சம் இந்திய ரூபாய்கள்) விண்ணப்பிததார். இந்திய குடும்ப நீதிமன்றங்கள் ஆண்களுக்கு பாரபட்சமாகத்தான் (சற்றே) நடந்துகொள்கின்றன. மிகவும் மண உளைச்சளும், நேர விரயமும், பொருட்ச் செலவும் தாண்டி அவர் சமீபத்தில் விவாகரத்துப் பெற்றார். அவர் வெற்றிப் பெற்றாலும் சுமார் 7 லட்ச இந்திய ரூபாய்கள் வரை செலவு செய்ய வேண்டி இருந்தது. அவருக்கு சிறு வயதாக இருந்தாலும், இனி மறு திருமணம் பற்றி யோசிப்பது மிகவும் கடினம்.

முக்கியமான கேள்வி இங்கே... இந்த செய்திக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு தெரிந்த வரை கமலும் கௌதமியும் தாங்கள் இப்படி ஒரு ஒப்பந்ததில் இருப்பதாக எங்கேயும், எப்பொழுதும் சொன்னதாக தெரியவில்லை. நாமாக (அல்லது பத்திரிகைகளாக) ஒரு முடிவை அவர்கள் மேல் திணித்துக் கொண்டிருக்கிறோம் என்றுதான் தோண்றுகிறது. :-)

- ஸ்ரீதர்

October 17, 2006 9:27 PM  
Blogger ஒன்றுமில்லை said...

மேஜரான ஆணும் பெண்ணும் அவர்களது விருப்பத்திற்கேற்ப இருக்க உரிமை உண்டு
அறிந்தவராயின் உங்கள் ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ளலாம். இல்லாவிட்டால் சும்மாயிருத்தலே நலம்

கமல் படம் பதிவின் தரத்தை குறைக்கிறது

October 17, 2006 9:43 PM  
Blogger ஒன்றுமில்லை said...

மேஜரான ஆணும் பெண்ணும் அவர்களது விருப்பத்திற்கேற்ப இருக்க உரிமை உண்டு
அறிந்தவராயின் உங்கள் ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ளலாம். இல்லாவிட்டால் சும்மாயிருத்தலே நலம்

கமல் படம் பதிவின் தரத்தை குறைக்கிறது

October 17, 2006 9:43 PM  
Blogger ஒன்றுமில்லை said...

மேஜரான ஆணும் பெண்ணும் அவர்களது விருப்பத்திற்கேற்ப இருக்க உரிமை உண்டு
அறிந்தவராயின் உங்கள் ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ளலாம். இல்லாவிட்டால் சும்மாயிருத்தலே நலம்

கமல் படம் பதிவின் தரத்தை குறைக்கிறது

October 17, 2006 9:43 PM  
Blogger GiNa said...

//
திருமணமே பொருளாதார பாதுகாப்பை முன்னிறுத்தி ஏற்பட்டுள்ள ஒரு வழக்கம். பொருளாதார பாதுகாப்பை தவிர வேறு உபயோகங்கள் திருமணங்களுக்கு இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை.//

சரியாகத்தான் சொன்னார். தமிழ்த்திருநாட்டில் இன்று பல திருமணங்கள் தொடர்வதற்கு பெண்களின் பொருளாதார அவசியமே காரணமாக் இருக்கிறது உண்மை. வேறு வழியில்லாமலும், சமூகத்துக்கு பயந்தும் பிடிக்காத கணவனுடன் காலம் தள்ளுகிறார்கள்.

சிவா,

நீங்கள் கனடா பெண்களைப்பற்றி இந்தியர் கருத்து சொன்னதுபொல, ஒரு வெளிநாட்டவர் நம் கலாச்சசரத்தை பற்றி கேட்டார் - எப்படி முன்பின் தெரியாத ஒரு ஆடவனுடன், வாழ்க்கை முழுவதும் சேர்ந்து வாழ முடிவு செய்து, அன்றிரவே முதலிரவுக்கு செல்ல முடியும்? எங்களால் இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது! என்று சொன்னார்.

என் நண்பர் ஒருவர் கனடாவில் இருக்கிறார், அவருக்கு திருமண வயதில் இருக்கும் மகள் சொல்கிறார் - எக்காரணம் கொண்டும் இந்தியாவில் பிறந்து வளர்ந்த இந்தியனை திருமணம் செய்துகொள்ள மாட்டேன். என்னைப்போல் தன்காலில் நிற்கும் பெண்ணுடன் வாழ அவர்கள் ஈகோ இடம் கொடுக்காது. கனடாவில் வளர்ந்த இந்தியனாவது என்னை புரிந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது!

எல்லாம் அவரவர் பார்வையில்!

October 17, 2006 11:43 PM  
Blogger Sivabalan said...

செல்வன் சார்

உங்கள் கருத்து ஏற்புடையதே.

வருகைக்கு நன்றி

October 18, 2006 12:33 PM  
Blogger Sivabalan said...

கால்கரி சிவா அவர்களே,

உங்களிடம் அவ்வாறு சொன்னவரின் பார்வை நிச்சயம் தவறு. தனி மனித உரிமையை (மற்றவர்களுக்கு துன்பம் தராத) தட்டிப் பறிப்பதற்கு யாருக்கும் அதிகாரமோ உரிமை இல்லை.

அந்த தென்னகத்து பெண்ணுக்கு ஏற்பட்ட நிலை வருந்ததக்கது.

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

October 18, 2006 12:38 PM  
Blogger Sivabalan said...

துளசி மேடம்,

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

வருகைக்கு நன்றி

October 18, 2006 12:40 PM  
Blogger Sivabalan said...

தெகா

//காதலிலிலிலிச்சுகிட்டே இருக்கணும் //

நீங்கள் சொல்லவருவது புரிகிறது.

வருகைக்கு நன்றி

October 18, 2006 12:42 PM  
Blogger Sivabalan said...

பிரபுராஜதுரை அவர்களே,

உங்கள் சுட்டிக்கு மிக்க நன்றி.

உங்கள் கருத்துக்கும் நல்ல பின்னூடத்திற்கும் மிக்க நன்றி.

வருகைக்கு நன்றி

October 18, 2006 12:44 PM  
Blogger Sivabalan said...

சின்னபுள்ள,

வருகைக்கு நன்றி

October 18, 2006 12:45 PM  
Blogger Sivabalan said...

GK,

உங்கள் கருத்துக்கு நன்றி.

வருகைக்கு நன்றி

October 18, 2006 12:46 PM  
Blogger Sivabalan said...

ஸ்ரீதர்,


உங்கள் கருத்துக்கு நன்றி.

கமல் அப்படி ஒரு அரேஜ்மென்டில் இருக்கிறாரா இல்லையா எனக்கு தெரியாது? அதுபற்றி ஊடகங்களில் பலவாறு கிசு கிசுக்கள் வந்து கொண்டுதான் இருக்கிறது.

கமல்-கவுதமி அவவாறு வாழ்வது அவர்களின் உரிமை. அதை பறைசாற்றவே இப்படம்.

மற்றபடி கமலின் இரசிகர்களில் நானும் ஒருவன். அதனால் அவரை குறை சொல்ல அவர் படத்தை போடவில்லை.

வருகைக்கு நன்றி

October 18, 2006 12:55 PM  
Blogger Sivabalan said...

சில கேள்விகள்,

உங்கள் கருத்துக்கு நன்றி

ஆலோசனை வழங்கத்தான் பதிவு போடனுமா? OH.. OH... இது எனக்கு தெரியாமல் போய்விட்டதே.;) சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.:)

சும்மாவெல்லாம் என்னால் இருக்க முடியாது.

வருகைக்கு நன்றி

October 18, 2006 1:00 PM  
Blogger Sivabalan said...

இன்னொரு விசயம், நான் பணிபுரியும் அமெரிக்க நிறுவனத்தில் பாதிக்கு மேல் இது போன்றுதான். அதற்கு முக்கிய காரணம் சிகாகோ லிவிங் காஸ்ட்.

October 18, 2006 1:03 PM  
Blogger Sivabalan said...

flemingo,

நல்ல தொரு கருத்தை சொன்னீர்கள். நான் இங்கே சொல்லிக்கொள்வதெல்லாம், கலாச்சாரத்தை காரணம் காட்டி யார் உரிமையும் யாரும் பறிக்க முடியாது.

குடும்ப வாழ்க்கையிலும் சில தோல்விகள் உள்ளது. யாரும் மறுப்பதற்கில்லை.

பொதுவாக சுதந்திர சமுதாயம் என்ற முறையில் அவர் அவர்களுக்கு எது நல்லதோ அதை தேர்ந்தெடுக்கும் உரிமை இருக்க வேண்டும்.

October 18, 2006 1:10 PM  
Blogger Sivabalan said...

flemingo,

வருகைக்கு நன்றி!

October 18, 2006 1:11 PM  
Blogger ஒன்றுமில்லை said...

சிவபாலன்

//
ஆலோசனை வழங்கத்தான் பதிவு போடனுமா? OH.. OH... இது எனக்கு தெரியாமல் போய்விட்டதே.;) சுட்டிக்காட்டியமைக்கு மிக்க நன்றி.:)

சும்மாவெல்லாம் என்னால் இருக்க முடியாது.
//

நான் பதிவின் விடயம் பற்றிய என் தனிப்பட்ட கருத்தாய் சொல்லியிருந்தேன்.

ஏன் பதிவீட்டிர்கள் என பதிவை நோக்கி கேள்வி எழுப்பி அல்ல. நல்ல பதிவுதான். இது போன்ற சமூக மாற்றங்களை பற்றி எழுதுவது பலருக்கு இதை பற்றிய பார்வையை கொடுக்கும்.

புகைப்படம் கமல் என்ற தனிமனிதரை பற்றிய நோக்கிய விமர்சனம் எழுப்பலாம் என்ற ஆதங்கத்தில் சொன்னேன்.

உங்கள் மனத்தை புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன்.

October 18, 2006 2:08 PM  
Blogger Sivabalan said...

சில கேள்விகள்,

உஙகளுடைய விளக்கத்திற்கு மிக்க நன்றி.

உங்கள் ஆதங்கம் எனக்கு புரிகிறது.

கமல் படத்திற்கான விளக்கத்தை சொல்லியுள்ளேன். மற்றபடி வேறு உள்நோக்கமில்லை.

மீன்டும் வந்து உங்கள் நிலைப்பாட்டை புரியவைத்தமைக்கு மிக்க நன்றி.

நேரம் கிடைக்கும் போது என் பதிவுகளில் உங்கள் கருத்துகள்/கேள்விகளை தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

மிக்க நன்றி.

October 18, 2006 2:23 PM  
Blogger Sivabalan said...

மதுசூதனன் ராமானுஜம் has left a new comment

சிவபாலன் அவர்கள் கூறயபடி
//இவர்கள் உரிமையை பறிப்பது தவறு.ஆனால் இந்தியாவில் பெண்களுக்கு இதனால் கிடைக்கும் சட்டபூர்வ பாதுகாப்புகள் பாதிக்கப்படலாம். உதாரணத்துக்கு திருமணம் நடந்திருந்தால் தான் ஜீவனாம்சம், சொத்தில் பங்கு ஆகியவை கிடைக்கும். இந்த வாழ்க்கை முறையால் அவற்றை பெண்கள் இழக்க நேரிடலாம். அதேல்லாம் தேவை இல்லை என கருதுவோருக்கு மட்டுமே இது ஒத்துவரும் என நினைக்கிறேன்//

இதை என்னால் ஏற்க முடியாது என்றே கருதுகிறேன். நம் நாட்டைப் பொருத்தவரையில் நல்ல பொருளாதார வசதியும், ஓரளவிற்கு நல்ல கல்வியறிவும் உள்ள பெண்கள் மட்டுமே இத்தகைய ஒரு ஏற்ப்பாட்டிற்க்கு இசைகின்றனர். மேலும், இந்த ஏற்பாட்டின் மூலம் கிடைக்கும் பல வசதிகளுக்காகவே பலர் இதை விரும்புகின்றனர். அப்படியிருக்க, அவர்கள் சட்டப்பூர்வ பாதுகாப்பை எதிர் பார்க்கவில்லை என்பது என் கருத்து.

October 19, 2006 8:00 AM  
Blogger Sivabalan said...

மதுசூதனன் ராமானுஜம்,

அதுதான் அந்த கருத்திலும் குறிப்பட்டுள்ளது.

பிளாக்கர் சொத்ப்பியதால் உங்கள் பின்னூடம் வரவில்லை. அதனால் தான் நானே வெளியிட்டேன்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

October 19, 2006 12:31 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv