Monday, October 16, 2006

மந்திர சக்தியா? இயந்திர சக்தியா?

இது பெரியார் கூறிய கருத்து.. இன்றும் தேவைப் படுகிறது..


பகுத்தறிவு

இராமாயணத்திலும், பாரத்திலும் ஆகாய விமானம் இருக்கிறது. ஆனால், அது மந்திர சக்தியால் ஓடியிருக்கிறது. ஆங்கில இலக்கியத்தில் ஆகாய விமானம் பற்றிய விளக்கம் இருக்கிறது. இது இயந்திர சக்தியால் ஓடுகிறது. நமக்கு எது வேண்டும்? மந்திர சக்தியா? இயந்திர சக்தியா?

அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் தேவைக்கும் பொருத்தமில்லாத காரியங்கள் பழக்கத்தின் பேராலோ, வழக்கத்தின் பேராலோ, தெய்வத்தின் பேராலே மதத்தின் பேராலே, சாதி வகுப்பின் பேராலோ மற்றெதன் பேராலே நடத்தப்படக் கூடாது.

கடவுள் சென்னது, மகான் சொன்னது, ரிஷி சென்னது, அவதார புருடர்கள் சொன்னது என்று பார்க்கின்றானே ஒழிய, தன்புத்தி என்ன சொல்லுகிறது என்று பார்ப்பதே இல்லை.

மூட நம்பிக்கைகளைப் பகுத்தறியாமல் பின்பற்றியதாலேயே உழை ப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வந்தது.

மாறுதலைக் கண்டு அஞ்சாமல், அறிவுடைமையோடும் ஆண்மையோடும் நின்று எதையும் நன்றாய் ஆராச்சி செய்து, காலத்திற்கும் அவசியத்திற்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளிக் கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவுடைய மனிதனின் இன்றியமையாத கடமையாகும்.


அறிவியல்

வாழ்க்கையில் இவ்வளவு மாற்றமடைந் துள்ள நம் மக்களின் புத்திமட்டும் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலவே இருக்கிறதே!.

கொஞ்ச காலத்திற்குமுன் கடவுளைப் பற்றிய கதைகளை அப்படியே, அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பிக்கொ ண்டிருந்தவர்கள் கூட, இப்பொழுது அப்படியே நம்புவதற்கு வெட் கப்பட்டுக் கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத தன் மையை மறைத்துக் கொண்டு, விஞ்ஞானத்தின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டு சிரமப்படுகிறார்கள்.

சக்கிமுக்கிக் கல்லால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து "எடிசன்" அப்புறம் படிப்படியாக முன்னேற்றமாகி இப்பொழுது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம்; எனவே மாற்றம் இயற்கையானது; அதைத் தடுக்க யாராலும் முடியாது.
மக்கள் பிறப்புக்கூட இனி அருமையாகத்தான் போய் விடும்.

அது போலவே சாவும் இனிக் குறைந்து விடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டு வாழ முடியும். யாரும் சராசரி என்று இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற மாட்டார்கள்.

ஆண், பெண் உறவுக்கும் பிள்ளைப் பேற்றுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும்.

12 Comments:

Blogger குமரன் (Kumaran) said...

நல்ல கருத்து.

October 16, 2006 2:33 PM  
Blogger சிறில் அலெக்ஸ் said...

எல்லாவற்றையும் அறிவியல்பூர்வமாகப் பார்க்க முடியலியே.

ஆத்மார்த்தமாக சில விஷயங்கள் மனிதனுக்கு (மட்டுமே) புலப்படுகின்றன.

அறிவியல் எல்லோருக்கும் எட்டவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

எவரஸ்டை பார்த்தும் மலையை புரிந்து கொள்ளலாம். ஒரு சின்ன மணற்குவியலைப்பார்த்தும் புரிந்துகொள்ளலாமே.

October 16, 2006 2:53 PM  
Blogger கதிர் said...

தா.கோவேந்தன் அவர்கள் பெருந்தகை வெ.ஆனைமுத்து உதவியுடன் எழுதிய பெரியார் ஒரு சிந்தனைக்களஞ்சியம் நூலில் இதை படித்ததாக ஞாபகம்.

பெரியாரின் தொலைநோக்கு பார்வை வியப்பளிக்ககூடியதாக இருக்கிறது.

கம்பியில்லா தொலைத்தொடர்பு சாதனம் அவரவர் பையில் இருக்கும், படங்களை தந்திக்கம்பி வழியே அனுப்பும் வசதி, எங்கோ இருந்து கொண்டு பாடமெடுக்கும் வசதி, இன்னும் பல மறந்துவிட்டது. இவையெல்லாம் எதிகாலத்தில் தோன்றுமென்று விடுதலையில் எழுதியிருந்தார்.

இன்று இவையெல்லாம் நடந்துவிட்டது.

அவர் வலியுறுத்திய சுயமரியாதை, சமதர்மம் ஆகியவை 100 நிறைவேறியதா என்றால்? இல்லையென்றே சொல்ல வேண்டியிருக்கிறது வெட்கத்துடன்.

October 16, 2006 3:11 PM  
Blogger Thekkikattan|தெகா said...

//அது போலவே சாவும் இனிக் குறைந்து விடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டு வாழ முடியும். யாரும் சராசரி என்று இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற மாட்டார்கள். //

இது முடிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு மறுப்பதற்கில்லை. ஆனால்,

//ஆண், பெண் உறவுக்கும் பிள்ளைப் பேற்றுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும்.//

இது போன்ற ஒத்த கருத்துக்கள் அண்மைய காலத்தில் எல்லா இடத்திலும் வெளிப்படையாக பேசப்பட்டு, ஒரு அவாவை வெளிப்படுத்துவது போலவே பல தட்டு மக்களிடே நிலவிவருகிறது.

ஆனால், இதில் ஒரு கவனிக்கதக்க விசயம் என்னவென்றால், இயற்கையில் மனிதனுக்கு ஒவ்வொரு வளர்ச்சி நிலையிலும், பல ஹார்மோன்களின் சுரப்புகளால்தான் அந்த குறிப்பிட்ட phase தலையெடுக்கிறது. அதனையொட்டி இயற்கையாக நமக்கு அதன் மீது ஒரு ஈர்ப்பு வருகிறது.

உண்மை அப்படியாக இருக்கையில் சிவா, எப்படி அந்த phaseஏ வேண்டாமென்று தாவி அடுத்த நிலைக்கு ரத்தமும், நரம்புகளாலும் பின்னப்பட்ட மனிதனாகிய இந்த emotional bundle அதனை மறுத்து, விஞ்ஞான வளர்ச்சிக்கென தன்னையும் தொலைத்து, அதிலிருந்து கிடைக்கக் கூடிய வளர்வு - முதிர்ச்சியையும் மறுத்து செல்வதால் கிடைப்பதுதான் என்ன?

சரி, பகுத்தறியும் தன்மைக்கும் ஒரு எல்லை இருப்பதாக எனக்கு இந்த வயதில், இருக்கும் சூழலை வைத்துப் பார்க்கும் பொழுது படுகிறது... அது என்னவென்று எனது அடுத்த பின்னூட்டத்தில் தொடர்கிறேன்...

October 16, 2006 3:21 PM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

//இப்பொழுது அப்படியே நம்புவதற்கு வெட் கப்பட்டுக் கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத தன் மையை மறைத்துக் கொண்டு, விஞ்ஞானத்தின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டு சிரமப்படுகிறார்கள்.
//

சிபா ...!
இது 100% உண்மை !
சில மந்திரங்களில் அதிர்வு இருக்கிறது அதன் மூலம் பலன் கிடைக்கிறது என்பதெல்லாம் இது போல பேத்தல்கள் தான் !

October 16, 2006 7:13 PM  
Blogger ஒன்றுமில்லை said...

இறைநம்பிக்கை தனி மனிதன் சுதந்திரம். அது அவனுக்கும் அவனது பூசைகளுக்கும் நடுவே இருக்க வேண்டும்.

வீட்டின் கதவுகளுக்கு வெளியே எடுத்து வந்து பள்ளியில், அரசியலமைப்பில், அரசியலில் ,சமூக அமைப்புகளில் கொண்டு வந்து படையல் வைக்கையில்தான் அதனை புறம் தள்ள வேண்டியதாகிறது.

பல நம்பிக்கைகள் உள்ள சமூகத்தில்
எது சமூக உரிமை,எது தனி உரிமை என்று தெரியாமல் பொதுவில் அவரவர் இறைநம்பிக்கையை இழுத்தொடும் போது நம் மீது அதன் விளிம்புகள் உரசாமல் விலகுவது பிரச்சனையாய் உள்ளது.

அவரவர் அளவோடு நிறுத்தி கொண்டால் ஆண்டவனால் பொதுவில் பிரச்சனை இல்லை.

October 16, 2006 8:56 PM  
Blogger Sivabalan said...

சிறில் அலெக்ஸ்,

ஆத்மார்த்தம் என பொதுப் படுத்துதலை என்னால் ஏற்க முடியாது. குறிப்பிட்டால் நானும் தெரிந்து கொள்வேன்.

வழிபாட்டு முறைகள் பற்றிய உங்கள் கருத்து.

அறிவியலுக்கு புலப்படவில்லை என்றால் அது கடவுளா?

அப்படித்தான் இந்த கடவுள் கான்செப்ட் வந்தது என நினைக்கிறேன்.

வருகைக்கு நன்றி

October 17, 2006 5:48 PM  
Blogger Sivabalan said...

குமரன் சார்

வருகைக்கு நன்றி

October 17, 2006 5:50 PM  
Blogger Sivabalan said...

தெகா

அப்படித்தான் இருக்கவேண்டும் என்று பெரியார் சொல்லவில்லை. அதுபோன்று குழந்தைகளையும் பெற்றுக் கொள்ளலாம் என்பதே. மீன்டும் பகுத்தறிவைப் பயன் படுத்தி வேண்டதவற்றை தவிர்த்துவிடுங்கள். அது தான் பெரியார் சொன்னது.

வருகைக்கு நன்றி

October 17, 2006 5:55 PM  
Blogger Sivabalan said...

GK,

அருமையாக சொன்னீர்கள்.

வருகைக்கு நன்றி

October 17, 2006 5:56 PM  
Blogger Sivabalan said...

சில கேள்விகள்,

நீங்கள் சொல்லும் கருத்து மத நல்லினக்கத்தை ஒட்டியது. நிச்சயம் வரவேற்க கூடியது.

ஆனால் கடவுள் இருக்கிறாரா?

வருகைக்கு நன்றி

October 17, 2006 5:58 PM  
Blogger Sivabalan said...

தம்பி

வெட்கப்படவேண்டியது கடவுளை இன்னமும் கற்பிக்கும் சமுதாயம். நம்து பொன்னான நேரங்கள் வீனடிக்கப்படுகிற்து.

இவர்கள் கற்பித்த கடவுள் கான்சப்டினால் தான் இப்பொழுது மதத்தின் பேரால் மனிதன் அடித்துக் கொள்கிறான்.

அடுத்தது, கடவுளை கற்பிப்பவன்/கற்பித்தவன் அடிவாங்குவான். அப்பொழுது இது முடிவுக்கு வரும்.

வருகைக்கு நன்றி

October 17, 2006 6:03 PM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv