Thursday, October 19, 2006

நடிகை ஸ்ரீவித்யா திடீர் மரணம்




பிரபல நடிகை ஸ்ரீவித்யா நேற்று திருவனந்தபுரத்தில் காலமானார். அவருக்கு வயது 53. பிரபல பின்னணி பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகளும், தமிழ் திரைப்பட நடிகையுமானவர் ஸ்ரீவித்யா.

கடந்த வாரம் ஸ்ரீவித்யா திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புற்றுநோய் காரணமாக ஸ்ரீவித்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாயின. எனினும், உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீவித்யா திடீரென மரணமடைந்தார். 53 வயதான அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதையடுத்து சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

செய்தி: தின மலர்

15 Comments:

Blogger Sivabalan said...

எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

October 19, 2006 10:55 AM  
Blogger Thekkikattan|தெகா said...

சிவபாலா, என்னது வெறும் மரண செய்தியா கொடுத்துட்டு இருக்கீங்க. ஸ்ரீவித்யா, எனக்கு பிடித்த அம்மா குணாச்சித்திரங்களில் வரும் நடிகைகளில் ஒருவர். மரணமா? இந்த இள வயதிலா? என்ன சொல்றது போங்க.

அவரின் கண்ணீர் புகைப்படத்தையும் போட்டு நொஞ்சில் ஒரு பாரத்தையும் ஏத்தி வைத்து விட்டீர்கள், சிவா.

October 19, 2006 11:06 AM  
Blogger VAIRA VARIGAL said...

அம்மா வேடத்தில் நடித்து பிரபலமாகி

எல்லோர் மனதில் இடம் பிடித்தார் அவர் மறைவு தமிழ் மற்றும் மலயாளம்
சினிமாவுக்கு மாபெரும் இழப்பு.

இவன்

அமீன்

October 19, 2006 11:18 AM  
Blogger enRenRum-anbudan.BALA said...

Good actress !

இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்

October 19, 2006 11:29 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

மறைந்த நடிகை ஸ்ரீவித்யா அவர்களுக்கு என் இரங்கல் !

October 19, 2006 11:55 AM  
Blogger யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இவர் சிறந்த குணசித்திர நடிகை, என் ஆழ்ந்த அனுதாபங்கள்!
இவர் தாயார், எம்.எல்,வசந்தகுமாரி சிறந்த பின்ணணிப் பாடகி மாத்திரமல்ல!!, மிக மிகச் சிறந்த கர்நாடக இசை வித்தகி, எம்.எஸ்.எஸ் அம்மா, பட்டம்மாளுக்கு நிகரானவர்.
யோகன் பாரிஸ்

October 19, 2006 1:03 PM  
Blogger துளசி கோபால் said...

அலட்டலே இல்லாத அருமையான நடிப்பு. மிகவும் நல்ல மனுஷியும்கூட.

அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றொம்.

October 19, 2006 1:41 PM  
Blogger murali said...

ஐயா,
நானும் பதிவு போட வேண்டும் என்று நினைத்தேன். உங்கள் பதிவுக்கு நன்றி. அற்புதமான நடிகை.வசந்தின் ஒரு படத்தில் கவுதமியின் அம்மாவாக மிகச் சிறப்பாக நடித்திருப்பார்.அப்புறம் அந்த அபூர்வ ராகங்கள் மறக்க முடியாத நடிப்பு.

அமரன் படம் என்று நினைக்கிறேன்,
ஒரு பாடல் கூட பாடியிருப்பார்.

மிக நாகரீகமான,குடும்ப பாங்கான அழகு.முக்கியமாக அந்த கண்கள்.

தனிப்பட்ட வாழ்வில் மிகப்பெரிய சோகத்தை சுமந்து வாழ்ந்த பெண்.

கல்லூரி வாழ்வில் ஏற்பட்ட கண்மூடித்தனமான காதலில் தேடிக்கொண்ட துனையால், தன் வாழ்வில் சந்தித்த துயரங்களை ஒரு பத்திரிக்கை பேட்டியில் சொல்லியிருந்ததாக ஞாபகம்.

கடைசிவரை அவரது கணவர்,அவருக்கு விவாகரத்து தரவில்லை என நினைக்கிறேன்.

ஏதோ ஒரு பெண் எழுத்தாளரிடம்
(அனுராதா ரமனன் (அ )சிவசங்கரி (அ )
வாசந்தி (அ ) இந்துமதி என நினைக்கிறேன் )....குழந்தை வயிற்றில் இருக்கும் பொழுது, அந்த உணர்வு எப்படி இருக்கும் என்று கேட்டு ஆதங்கப் பட்டதாகவும் படித்திருக்கிறேன்.

சட்ட சிக்கலில் வாழ்க்கையை தொலைத்த அவருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்.

"மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா"
என்னும் இந்த நாட்டினில்தான் பெண்களுக்கு எத்தனை இன்னல்கள்.
வருத்தத்துடன்,
பா.முரளி தரன்.

October 19, 2006 3:59 PM  
Blogger கானா பிரபா said...

அன்னாருக்கு என் அஞ்சலிகள்,

அமரன் படத்தில் சொந்தக்குரலில் பாடியிருக்கிறார், காதல்மதியின் இசைத்தொகுப்பிலும் முழுதுமாகப் பாடியிருக்கிறார்.

October 19, 2006 4:40 PM  
Blogger Sivabalan said...

பா.முரளி தரன,

//மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திடல் வேண்டுமம்மா"
என்னும் இந்த நாட்டினில்தான் பெண்களுக்கு எத்தனை இன்னல்கள். //

இந்த வரிகள் மிகவும் வருத்தப் படவைத்தது

October 19, 2006 5:10 PM  
Blogger  வல்லிசிம்ஹன் said...

மிக்க வருத்தப் பட வைக்கும் செய்தி.
எத்தனை அழகான கண்கள்.
அமைதி அடையட்டும்.
அக்டோபர் 31 அவருடைய அம்மா மறைவு தினம்.எப்போதும் அம்மா படம் போட்டு தன் பெயரையும் கொடுப்பார் ,ஹிண்டு பத்திரிகையில் வரும்.

October 19, 2006 6:59 PM  
Blogger SP.VR. SUBBIAH said...

அபூர்வ ராகங்களில் அற்புதமாக நடித்து தமிழகத்தையே அசத்தியது இன்னும் நினைவில் நிற்கிறது.
அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கின்றேன்

October 19, 2006 7:11 PM  
Anonymous Anonymous said...

தளபதியில் இரண்டு பிள்ளைகளும் கணவனுக்கிடையிலும் ஒரு தாய் தவிக்கும் தவிப்பை மிகத் தத்ரூபமாக வெளிப்படுத்தியிருக்கும் அவரது நடிப்பு.

October 20, 2006 4:52 AM  
Blogger Sivabalan said...

ஸ்ரீவித்யா மறைவு குறித்து கமலஹாசன் கூறியதாவது:-

`நான் மட்டுமல்ல ஸ்ரீவித்யாவும் கடந்த ஒருவருடமாக இப்படி ஒரு நிலைமையை எதிர்பார்த்து கொண்டு இருந்தோம். தைரியமாக மரணத்தை தழுவியவர் எனது தோழி ஸ்ரீவித்யா. அவரது அசாதாரணமான தைரியம் தான் இதற்கு காரணம். ஒரு நல்ல நண்பரை இழந்து தவிக்கிறேன்."பொண்ணுக்கு தங்க மனசு'' கண்ணுக்கு நூறு வயசு'' என்ற கண்ணதாசன் பாடல் தான் எனக்கு நினைவுக்கு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

October 20, 2006 6:58 AM  
Blogger Sivabalan said...

அரசு மரியாதையுடன் ஸ்ரீவித்யா உடல்தகனம்.

October 20, 2006 7:01 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv