Sunday, October 22, 2006

இந்திய கம்யூனிஸ்டு எதிர்ப்பு - உச்ச நீதி மன்ற உத்தரவுக்கு



சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு இந்திய கம்யூனிஸ்டு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மத்திய செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-


சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக நீடித்து வரும் தீண்டாமை கொடுமை, சமூக பாகுபாடு, கல்வி, வேலைவாய்ப்பில் சமஉரிமை மறுப்பு ஆகியவை காரணமாக இட ஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு இட ஒதுக்கீட்டு கொள்கையையும், அதன் அமலாக்கத்தையும் மாற்றி அமைக்க பார்க்கிறது. இதன்மூலம் பாராளுமன்ற, சட்டசபைகளின் அதிகாரத்தை ஆக்கிரமிக்கிறது.


நமது ஆட்சி முறையில் பாராளுமன்றத்துக்குதான் அதிக அதிகாரம் உள்ளது. அது மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது. கொள்கைகளையும், சட்டங்களையும் உருவாக்குகிறது. கொள்கை முடிவு என்பது பாராளுமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டதே தவிர, நீதித்துறையின் அதிகாரத்துக்கு உட்பட்டது அல்ல.


இட ஒதுக்கீடு எவ்வளவு காலத்துக்கு நீடிக்க வேண்டும் என்பதை பாராளுமன்றம், சட்டமன்றங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்மானிக்க கூடாது.


சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, பிற்போக்கு தனமானது. இது சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான நீதித்துறை தாக்குதல். ஆகவே, இதில் பாராளுமன்றம் தலையிட்டு இந்த ஆபத்தான போக்கை மாற்றி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு என்ற லட்சியத்தை இத்தீர்ப்பு சிதைத்து விடும்.


இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

26 Comments:

Blogger Sivabalan said...

ravi srinivas said...

Somebody should teach the politbureau a lesson or two
about the Indian Constitution
and powers of the Supreme
Court.The parliament has powers
but that has to be exercised
subject to some conditions.
In the name of reservations
the parliament can not and
should not make a mockery
of the principle of equality
and fundamental rights of
the citizen.

October 22, 2006 12:06 PM  
Blogger Sivabalan said...

Test Comment

October 22, 2006 12:08 PM  
Blogger Sivabalan said...

நெகடிவ் ஓட்டு போடும் ஜடங்களே.. தைரியமாக உங்கள் வாதத்தை வையுங்கள்.. கோழைகள் போல் செயல்படாதீர்கள்..

October 22, 2006 12:38 PM  
Blogger BadNewsIndia said...

சிவபாலன் சார்,

நமது நாடு இருக்கும் நிலையில் எனக்கு பாராளுமன்றத்தையும் சட்டமன்றத்தையும் விட நீதிமன்றத்தின் மீதுதான் நம்பிக்கையும் மதிப்பும் இருக்கிறது.
சுதந்திர இந்தியாவின் அப்போதைய நிலயில் ஒடுக்கப்பட்டோர்க்கு உண்மையான ஏற்றம் ஏற்பட, உண்மையான தலைவர்களால் உருவாக்கப்பட்டது தான் இந்த இட ஒதுக்கீடு.

சுதந்திரம் அடைந்து 60 வருடங்கள் ஆகப்போகிறது. ஒரு generation வாழ்ந்து மரித்து விட்டது.

இட ஒதுக்கீட்டால் உண்மையான பலன் இருந்திருந்தால், வறுமை கோட்டின் கீழே இருப்பவர்கள் குறைந்திருக்க வேண்டுமே? எல்லா மாநிலங்களிலும் 100% படித்தவர்கள் இருந்திருக்க வேண்டுமே?

இட ஒதுக்கீடு என்பது தேர்தலின் போது மக்களை ஏமாற்றும் ஒரு பெரிய கருவியாக மட்டும் இருக்கிறது என்பதே உண்மையான வேதனை.

நமது மாநிலத்தில் 75% மக்கள் இட ஒதுக்கீட்டில் சேரும் தகுதி உள்ள கீழ் நிலை மக்களாமே? உண்மையாகவே அந்த 75% மக்களும் கஷ்டப்படும் வர்கம் என்று நினைக்கிறீர்களா?
(எஞ்சி இருக்கும் மற்ற பிரிவினர்களும் OBC ல் சேர வேலைகள் நடக்கிறது. கூடிய விரைவில் ஒரு சிலரை தவிர எல்லாரும் பிற்படுத்தப்பட்டோரே.)

எவ்வளவு ஒதுக்கினாலும், சரியான செயல் திட்டங்கள் இல்லாதபோது உதவிகள் சேர வேண்டியவரை சேராது.

நமக்கு வேண்டியது more % அல்ல, more thoughtful sensible leaders - சிங்கப்பூர், ஜப்பான் நாட்டு தலைவர்கள் போல், ஊர் மக்களின் நலத்தை மட்டும் நினைவில் கொண்டு பொது வாழ்க்கைக்கு வரும் தலைவர்கள் தான் இப்போதைய தேவை.

ஜாதி அடிப்படையில் அல்லாது, வருமான அடிப்படையில் இருப்பதாய் இருந்தால் நல்லதுதான். ஆனால், சட்டம் அப்படி மாறிவிட்டால், பிறகு நமது தலைவர்கள், மக்களை பிச்சைக்காரர்களாகவே எப்பொழுதும் இருக்குமாறு செய்து விடுவார்கள்.

பதிவில் சுப்ரீம் கோர்டின் உத்தரவின் details போடுங்கள். உபயோகமா இருக்கும்.

நன்றி. தீபாவளி எல்லாம் ஆச்சா?

October 22, 2006 5:23 PM  
Blogger BadNewsIndia said...

சிவபாலன், நீங்களும் என்ன மற்றவர்கள் போலே தொடங்கி விட்டீர்கள்?
யார் ஜடங்கள்?

வருபவர்கள் விருப்பதிர்க்கு ஏற்ற மாதிரி ஓட்டு போடத்தானே இரண்டு options கொடுத்திருக்கிறீர்கள்?
ஓட்டு போடுவோரெல்லாம் பின்னூட்டம் இட வேண்டும் என்று எதிர்பார்த்தால், தமிழ்மணம் கருவிப்பட்டையை, பின்னூட்டம் இடும் பக்கத்தில் சேர்க்க முடியுமா என்று பாருங்கள்.

சுடு சொர்க்களை முடிந்த வரை குறைப்போம்.

;)

October 22, 2006 5:29 PM  
Blogger Sivabalan said...

Bad News India,

இந்த சுட்டிகளை நீங்கள் வைக்கும் வாதத்திற்கு பதில் இதில் இருக்கும் என நம்புகிறேன்..


http://dharumi.blogspot.com/2006/07/167-4.html

http://dharumi.blogspot.com/2006/07/164-1.html

http://dharumi.blogspot.com/2006/07/165-2.html

http://dharumi.blogspot.com/2006/07/166-3.html

http://dharumi.blogspot.com/2006/07/167-4.html

http://dharumi.blogspot.com/2006/06/161.html

http://dharumi.blogspot.com/2006/06/162.html

மற்றபடி இடபங்கீடு என்று வரும் போது இந்த ஆதிக்க சக்திகள் தங்களின் கையில் இருக்கும் ஆயுதத்தை (நீதிமன்றங்கள்) பயன் படுத்துகிறார்கள்..அவ்வளவே..

நீதிமன்றங்களை நீங்கள் நம்பும் அளவிற்கு என்னால் நம்ப முடியாது.

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

October 22, 2006 7:01 PM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

மக்களாட்சி என்ற பெயரில் ரூ 1000 கோடிவரை செலவு செய்து, தேர்தால் வாக்கு உறுதிக் கேற்ப மக்கள் அரசை தேர்ந்தெடுக்கின்றனர். எந்த ஒரு மக்களாலும் தேர்ந்தெடுக்கப்படாத சுப்ரீம் கோர்ட் மக்கள் அமைத்த பாராளுமன்றத்தின் முடிவுகளை மாற்றி அமைக்கத் துணிவதைப் பார்க்கும் போது ஜனநாயக நாடு என்று சொல்வதில் அர்த்தம் இல்லை !

October 22, 2006 7:03 PM  
Blogger Sivabalan said...

Bad News India,

நான் தீபாவளி கொண்டாடவில்லை.. பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது.. எனினும் உங்கள் அன்புக்கு மிக்க நன்றி.

உங்கள் வீட்டில் தீபாவளி எவ்வாறு சென்றது..

இனிப்புகள் அப்படியே இங்கே கொஞ்சம் பார்சல் பண்ணுங்க..

October 22, 2006 7:09 PM  
Blogger Sivabalan said...

Bad News India,

உங்களைப் போல் நல்ல உள்ளங்களை பார்த்து அவ்வாறு சொல்லவில்லை. நெகடிவ் வோட்டுகளை நிச்சயம் வரவேற்கவே செய்கிறேன். அது என் பதிவுகளின் தரத்தை உயர்த்த பேறு உதவியாக இருக்கும்.

ஆனால் பாருங்க.. இந்த ஆதிக்க சக்திகளின் மறைமுக போரை நான் வெறுக்கிறேன். இடப்பங்கீடு விசயத்தில் என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை..

உங்களைப் போன்றோர்களை இது காயப்படுத்தியதற்காக நான் வருந்துகிறேன்.

உரிமையோடு தட்டி கேட்டதற்கு உங்களைப் பாராட்டுகிறேன்.

October 22, 2006 7:15 PM  
Blogger Sivabalan said...

Ravi Srinivas Sir,

உங்கள் கருத்துக்கு நன்றி

வருகைக்கு நன்றி

October 22, 2006 7:26 PM  
Blogger BadNewsIndia said...

சிவபாலன்,
தருமியின் பதிவுகளை நேரம் கிடைக்கும் போது முழுதும் படிக்கிறேன். நன்றி!
ஆனால் நீதி மன்றங்களின் மேல் நம்பிக்கை வையுங்கள். அவர்களையும் நம்ப முடியாமல் போனால், பிறகு நாம் அகதிகளாக அண்டை நாடுகளை தேடித்தான் போக வேண்டும்.

கோவி கண்ணன்,
மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பாராளுமன்றங்கள் தவறுகள் செய்யும்போது, அதை தடுத்து நேர்வழி படுத்தவே நீதி மன்றங்கள்.
நீதிமன்றங்கள் இருந்தே இந்த நிலை - இல்லாதிருந்தால் இன்னும் என்னென்ன நடக்குமோ?
சிலருக்கு total-freedom கொடுத்தால் அம்புடுதேன் - ஊரை கூரு போட்டு அரேபிய ஷேக்குக்கு விற்றிருப்பார்கள் இந்நேரம்.

---------
என் தீபாவளி என்றும் போல் மிக இனிமையாக முடிந்தது.

நீங்கள் தீபாவளி கொண்டாடி பத்து ஆண்டுகள் ஆனது என்பது மன வருத்தத்தைத் தருகிறது.
அது உங்கள் personal preference. I just hope it has nothing to do with our friends, 'நரஹாசுரன் is a திராவிடன்' logic. ;)
இந்த topic ஐ திசை திரும்ப வேண்டாம். நாம் அதை வேறெங்காவது விவாதிக்கலாம் ;)
-------------

October 22, 2006 7:34 PM  
Blogger அருண்மொழி said...

இட ஒதுக்கீடு கொடுக்காதே, மூளையை உபயோகித்து முன்னேறு. இடஒதுக்கீட்டால் இந்தியா வல்லரசாக முடியவில்லை.........

இப்படி கூக்குரலிட்ட அவர்களால் எதுவும் செய்ய இயலவில்லை என்பதால், கோர்ட் மூலம் புது அவதாரம் எடுத்து உள்ளார்கள்.

முதலில் OBCக்கு creamy layer. இப்போது SC/STக்கும் creamy layer. இந்த உத்தரவு வந்தவுடன் Letter to editor பாருங்கள். எல்லா மக்களும் ஏழைகளுக்கு இடஒதுக்கீடு கிடைத்ததற்கு சந்தோஷப் படுகின்றார்கள்.

எல்லா கட்சிகளும் இணைந்து அளவிற்கு மீறி ஆட்டம் போடும் supreme court மகான்களுக்கு ஆப்பு வைப்பார்கள் என நம்புவோம்.

வாழ்க பாரதம்.

October 22, 2006 7:59 PM  
Blogger BadNewsIndia said...

Sivabalan, The link for this topic in thenkoodu is broken.
check and fix.

Arun mozhi, Identifying and removing creamy-layer from getting reservation benefits is much needed. whats wrong with that?

October 22, 2006 8:17 PM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

//மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட பாராளுமன்றங்கள் தவறுகள் செய்யும்போது, அதை தடுத்து நேர்வழி படுத்தவே நீதி மன்றங்கள்.
நீதிமன்றங்கள் இருந்தே இந்த நிலை - இல்லாதிருந்தால் இன்னும் என்னென்ன நடக்குமோ?//

நீதிமன்றங்களின் நடுநிலை நினைத்தால் சிரிப்பாக வருகிறது !
காசு வாங்கிக் கொண்டு அப்துல் கலாமுக்கே கைது வாரண்ட் கொடுத்தவர்கள் ஆயிற்றே !
:)

October 22, 2006 8:31 PM  
Blogger அருண்மொழி said...

//Arun mozhi, Identifying and removing creamy-layer from getting reservation benefits is much needed. whats wrong with that?//

First, let them implement the reservation properly (in all educational institutions, govt offices ...). Then we can discuss about creamy layer.

October 22, 2006 8:38 PM  
Blogger அருண்மொழி said...

//நீதிமன்றங்களின் நடுநிலை நினைத்தால் சிரிப்பாக வருகிறது !
காசு வாங்கிக் கொண்டு அப்துல் கலாமுக்கே கைது வாரண்ட் கொடுத்தவர்கள் ஆயிற்றே !//

ஹி ஹி ஹி. IAS அதிகாரியை peon என்று விளிக்கும் சர்வ வல்லமை பெற்றவர்களும் இவர்கள்தான்.

October 22, 2006 8:44 PM  
Blogger BadNewsIndia said...

//First, let them implement the reservation properly (in all educational institutions, govt offices ...). Then we can discuss about creamy layer.//

இவ்வளவு வருட காலமாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இருக்கத்தானே செய்கிறது. If we dont remove the creamy-layer atleast now, the next 50 years of reservationed system won't cause any difference.
The poor will still be poor.
well, if it is meant to be, it will be!!!

October 22, 2006 9:08 PM  
Blogger bala said...

It is not surprising that the ultra rich, powerful,and deceitful creamy layer OBCs want constitutional legitimacy for the loot that has been going on for many decades now.

As our comrade Asuran would say, if you tear the shirts of these creamy layer OBCs you will see the stamp of despotic, ruling class.
Sivabalan is one among this community who despite being rich and powerful will want the easy money reservation will provide.

bala

October 22, 2006 9:59 PM  
Blogger Sivabalan said...

Bala,

கருத்துக்கு நன்றி

October 22, 2006 10:33 PM  
Blogger அருண்மொழி said...

//இவ்வளவு வருட காலமாக பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் இருக்கத்தானே செய்கிறது.//

மன்னிக்கவும். எல்லா இடங்களிலும் இல்லை என்பது என் கருத்து. தமிழகத்தில் பரவலாக இருக்கலாம். ஆனால் மற்ற மாநிலங்களில்??

மத்திய, மாநில அரசு வேலை வாய்ப்புகளில் எப்படி இவர்கள் ஏமாற்றப் பட்டுள்ளார்கள் என்பதை படித்து பாருங்கள்.

October 23, 2006 7:29 AM  
Blogger Sivabalan said...

GK,

//முடிவுகளை மாற்றி அமைக்கத் துணிவதைப் பார்க்கும் போது ஜனநாயக நாடு என்று சொல்வதில் அர்த்தம் இல்லை //

உங்கள் ஆதங்கம் தான் எனக்கும்.. இவர்கள் தங்கள் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் மிகவும் மோசமானது.

வெகு ஜன ஊடகத்தினால் பீடிக்கப்பட்டிருக்கும் சகோதர்கள் விழித்துக்கொண்டால் இவர்களின் நிலை பரிபாத்திற்குரியதாகிவிடும் என்று தெரியாமல் செயல்படுகிறார்கள்..

பார்ப்போம்.. என்ன நடக்கின்றது என்று.

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

October 23, 2006 7:52 AM  
Blogger Sivabalan said...

அருண்மொழி அவர்களே,

//எல்லா மக்களும் ஏழைகளுக்கு இடஒதுக்கீடு கிடைத்ததற்கு சந்தோஷப் படுகின்றார்கள். //

நீங்கள் சொலவது மிகச் சரி..

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

October 23, 2006 7:56 AM  
Blogger Sivabalan said...

Bad News India,

//Sivabalan, The link for this topic in thenkoodu is broken.
check and fix. //

உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி.

அந்தப் பதிவில் பிளாக்கர் பிரச்சனை.

நன்றி

October 23, 2006 8:00 AM  
Blogger Sivabalan said...

GK,

மீன்டும் வந்து கருத்துக் கூறியதற்கு நன்றி

October 23, 2006 8:02 AM  
Blogger Sivabalan said...

Bad News India,

மீன்டும் வந்து கருத்துக் கூறியதற்கு நன்றி

October 23, 2006 8:02 AM  
Blogger Sivabalan said...

அருண்மொழி அவர்களே,

மீன்டும் வந்து கருத்துக் கூறியதற்கு நன்றி

October 23, 2006 8:03 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv