நாங்கள் என்ன பாவம் செய்தோம்?
பீகார் மாநிலத்தில் உள்ளது கல்யாண்பட்டி என்ற கிராமம். இங்கு, ஒரு அரசுப் பள்ளி உள்ளது. ஆரம்பத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் காலனியில் இந்தப் பள்ளி இருந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு உயர் ஜாதி மக்கள் வசிக்கும் பகுதிக்கு பள்ளி இடம் மாறியது.
அப்போதிருந்து தாழ்த்தப்பட்ட குழந்தைகள், பள்ளி வளாகத்துக்கு உள்ளேயே அனுமதிக்கப் படவில்லை. பள்ளிப் பதிவேட்டில் அந்தக் குழந்தைகளின் பெயர் உள்ளது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட குழந்தைகளை பள்ளிக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர்.
இன்றாவது பள்ளிக்குள் அனுமதிப்பார்கள்; பாடம் படிக்கலாம் என ஆசையோடு செல்வோம். ஆனால், அங்கு அடி, உதைதான் கிடைக்கும். பள்ளிக்குள் நுழைய விடாமல் துரத்தி அடித்து விடுவார்கள். நாங்கள் என்ன பாவம் செய்தோம்?... இது, பிரபாஷ் குமார் என்ற சிறுவனின் அழுகுரல்.
இருப்பது ஒரே பள்ளி. எங்கள் வாழ்க்கைதான் சீரழிந்துவிட்டது. எங்கள் குழந்தைகளாவது படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், ஜாதி வெறி இங்கு தலை விரித்து ஆடுகிறது. இந்த பள்ளியில் எங்கள் குழந்தைகள் படிப்பது சாத்தியமில்லை.
எங்கள் குழந்தைகளை ஆசிரியர்களே அடித்து, உதைத்து, அவமானப்படுத்தி, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகின்றனர். எங்கு போய் சொல் வது இந்தக் கொடுமையை?... குமுறுகிறார் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த நந்த்லால்.
பள்ளியை மீண்டும் தங்கள் காலனிக்கு மாற்றிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் என தாழ்த்தப்பட்ட மக்கள் கருதுகின்றனர். அப்படி செய்தால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று மிரட்டுகின்றனர் உயர் ஜாதியினர். கல்யாண்பட்டி கிராமம் போல பீகாரில் பல கிராமங்களில் ஜாதி வெறி தலை விரித்து ஆடுகிறது. ஆனால், பீகார் அரசோ, கண்டும் காணாமல் இருக்கிறது.
நன்றி: தினகரன்
22 Comments:
உலகின் பெரிய சனநாயக இந்தியா வாழ்க!
வேதனைதான். என்ன செய்வது.
பீஹார விடுங்க, நம்ப ஊர் பிரச்சன்ய மொதல்ல தீர்ப்போம் வாங்க.
//பீகாரில் பல கிராமங்களில் ஜாதி வெறி தலை விரித்து ஆடுகிறது. ஆனால், பீகார் அரசோ, கண்டும் காணாமல் இருக்கிறது.//
சிபா...!
இந்தியாவில் இதுபோல் நடப்பது இல்லை ! யாரோ வேண்டுமென்றே இந்தியர்களை பழிப்பதற்காக இத்தகைய செய்திகளை வெளியிட்டு இருப்பார்கள். வெள்ளைக்காரன் இந்தியாவில் நுழைந்து நம் மக்களிடையே விச விதைகளை தூவிவிட்டார்கள் அதன் விளைவே இத்தகைய பொய் செய்திகள்!
படித்தவர்களே, பண்புள்ளோர்களே நீங்கள் எல்லாம் இதை நம்ம வேண்டுமா ?
வேண்டாமை இந்தியர்களிடம் உள்ளது !
அதாவது எதையும் வேண்டாமல், எல்லாம் நிறைந்து வாழ்கின்றனர். அதை எவரோ தீண்டாமை என்று திரித்துவிட்டனர்.
இந்தியர்கள் அனைவரும் ஒற்றைமையாகவே இருக்கிறேம் என்பதை எத்தனை முறை சொன்னாலும் சிலர் புரிந்து கொள்ளவே இல்லை !
தேவையில்லாத பதிவு,
எத்தனை காலம்தான் இப்படி நமக்குள் பிரிவினை பேசி நம் ஒற்றுமையை குலைப்பீர்கள்.
கல்கி அவதாரம் வந்தவுடன் எல்லாம் சரியாகிவிடும்.
:)))
புரிந்துகொள்ளுங்கள் அய்யா...
Thanks for sharing !
//அப்படி செய்தால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று மிரட்டுகின்றனர் உயர் ஜாதியினர்.
//
It will serve the purpose better if you name the so called upper caste in this posting !
CAPitalZ,
வாழ்க சனநாயகம்!! வாழ்க!! வாழ்க!!
வருகைக்கு நன்றி
Bad News India,
மிகவும் வருத்தமான விசயம்தாங்க..
இல்லைங்க...தலித் மீது நடக்கும் வன்முறைகள் பற்றிய சிந்தனைகளே இல்லாமல் இருக்கும் நமது சமுதாயத்திற்காகத்தான்... தமிழ்நாட்டிலும் இரட்டை டம்ளர் போன்ற கொடுமைகள் நடக்கத்தான் செய்கின்றன..
வருகைக்கு நன்றி
GK,
என்ன இப்படி சொல்லிட்டீங்க.. இது மிகவும் ஆதார்ப்பூர்வமான செய்தி..
இந்தியாவில் இல்லை என்று சொல்லும் கண்களை மூடும் பூனைகளின் கருத்தை பிரிதிபலிக்கிறீர்களா? ம்ம்ம்ம்...என்னமோ போங்க...
//படித்தவர்களே, பண்புள்ளோர்களே நீங்கள் எல்லாம் இதை நம்ம வேண்டுமா ?//
ஆமா ஆமா... நம்பாதீங்க நம்பாதீங்க..
வருகைக்கு நன்றி
பூங்குழலி,
நல்லா சொன்னீங்க... அருமை.. பாராட்டுக்கள்..
வருகைக்கு நன்றி
எ.எ.அ.பாலா,
அந்த செய்தியில் என்ன சாதி என்று குறிபிடவில்லை.. இருந்தால் நிச்சயம் போட்டிருப்பேன்.. ஏனென்றால் ஆதிக்க சக்திகள் எல்லா உயர்சாதியிலும் உள்ளனர்.
வருகைக்கு நன்றி
வைசா,
நல்ல கேள்வி..ம்ம்ம்...
வருகைக்கு நன்றி
kulakkodan,
கருத்துக்கு நன்றி
வருகைக்கு நன்றி
இந்த மாதிரி செய்திகள படிக்கும்போதே எரிச்சலா இருக்கு!
எந்த அடிப்படைல இந்த வாத்தியார்கள தேர்ந்தெடுக்கறாங்கன்னு தெரியல!
ஊர் ஆளுங்க என்ன சொன்னாலும் வகுப்புக்குள்ள அனுமதிக்கறது வாத்தியாரின் கடமை.
மேல்சாதிக்கு மட்டும்தான் அந்த பள்ளின்னா அந்த பள்ளியையே இழுத்து மூடிடணும்.
அவங்க மட்டும்தான் படிக்கணும்னு எழுதி இருக்கா என்ன?
இன்னும் எத்தனை காலத்துக்குதான் இந்த சாதிய அரசியல வளர்த்து வச்சிருப்பாங்களோ தெரியல இந்த பெருசுகள்.
தம்பி
உங்கள் ஆதங்கம் சரியே.
நினைத்துப்பாருங்கள், அவ்வாறு நம் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும் யாரேனும் தடுத்தால் மனது எவ்வளவு வலிக்கும்..
பாவம் அவர்கள், அதை எவ்வாறு வெளிப்படுத்துவது என்று கூட தெரியாமல் இருப்பதுதான் இன்னும் வேதனையான விசயம்.
கல்வி மட்டுமே இவர்கள் எல்லாம் தரும். அதை தடுப்பவர்களை என்னத சொல்ல... ம்ம்ம்ம்ம்
என்னமோ போங்க..
உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
அக்டோபர் 24, 2006!
வாழிய பாரதம்!
இல்லை இல்லை! வழியுது பாரதம் !
என்னத்தச் சொல்ல!
:((
SK அய்யா,
//இல்லை இல்லை! வழியுது பாரதம் !
என்னத்தச் சொல்ல! //
உண்மைதான்..ம்ம்ம்ம்..
என்னத்த சொல்ல...
வருகைக்கு நன்றி
என்னங்க இது அக்கிரமமா இருக்கு?
கல்வி எல்லோருக்கும் பொது இல்லையா?
நல்ல சமத்துவம் போங்க(-:
துளசி மேடம்
ஆமாங்க.. ஜாதியின் பேரால் ரொம்ப அராஜாகம் பன்னிகிறார்கள்.. எல்லாம் மனிதர்களே என்ற எண்ணம் எப்பொழுது வரப்போகிறது..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
முதலில் கல்யாண்பட்டி உயர்ஜாதி மக்களுக்கு சமூக நீதி வகுப்பு நடக்கட்டும். சட்டங்களும் திட்டங்களும் போட்டென்னப் பயன், ஆளுமையில்லா அரசு இருந்தால் ?
மணியன் சார்
சமூக நீதி என்றால் என்ன என்று கூட தெரியாமல் இருப்பதுதான் வருந்தக்கூடிய விசயம்.
நீங்கள் சொல்வதுபோல் சமூக நீதி வகுப்புகள் முதலில் நடத்தப் படவேண்டும்.
வருகைக்கு நன்றி
சடை அப்பா,
நீங்கள் சொல்வதும் சரிதான்.
உயர் சாதி ஆதிக்க சக்திகள் திருந்தினால் சரிதான்.
வருகைக்கு நன்றி
பூர்வீக குடிகள் ஓரத்திலே
போக்கிரி குரங்குகள் நடுவிலே.
அதிகார மாலை கையில் எடுத்து
அநியாயம் மனம் போன போக்கில்.
காலடியில் கிடக்கும் கம்பை
கையில் எடுப்பது எப்போதோ?
மனங்கெட்ட குரங்கை அடக்க
மண்ணின் மைந்தர்களே!
Post a Comment
<< Home