ஜீவ் மில்கா சிங் (JEEV MILKHA SINGH)- வாழ்த்துகள்!!
ஸ்பெயினில் நடந்த ‘வோல்வோ மாஸ்டர்ஸ்’ ஐரோப்பிய கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் ஜீவ் மில்கா சிங் சாம்பியன் பட்டம் வென்றார். பரிசுக் கோப்பையுடன் உற்சாகமாகப் போஸ் கொடுக்கிறார் ஜீவ்.
ஐரோப்பிய கோல்ப் போட்டி :
வால்டெரமா, அக். 31: ஸ்பெயின் நாட்டில் நடந்த ‘வோல்வோ மாஸ்டர்ஸ்’ ஐரோப்பிய கோல்ப் பந்தயத்தில், இந்திய வீரர் ஜீவ் மில்கா சிங் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.
ஐரோப்பிய கோல்ப் போட்டியில் பட்டம் வெல்லும் முதல் ஆசிய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு பரிசுத் தொகையாக மூன்றே முக்கால் கோடி ரூபாய் வழங்கப்பட்டது. தனிநபர் விளையாட்டில், இவ்வளவு பெரிய தொகையை வென்ற முதல் இந்தியர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஜீவ் மில்கா சிங் ஐரோப்பிய அளவில் ‘டாப் 20’ மற்றும் உலக அளவில் ‘டாப் 100’ கோல்ப் வீரர்களில் ஒருவராக இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்திய கோல்ப் போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
6 Comments:
சாதனை புரிந்த இந்திய வீரர் ஜீவ் மில்கா சிங்கிற்கு எனது பாராட்டுகள்!! வாழ்த்துக்கள்!!
அப்பாடா, கிரிக்கெட் இல்லாத மத்த விளையாட்டுக்களும் இந்தியாவில் விளையாடுறாங்க அப்படின்னு கேட்கவே சந்தோஷமா இருக்கு...
சிவா, அப்பப்ப கிரிக்கெட் இல்லாத இந்த மாதிரி மத்த விளையாட்டுச் சம்பந்தமா ஏதாவது நடந்தா சொல்லுங்க, காது குளிர கேப்போம் ;-)
சிபா...!
கால்ப் விளையாட்டு பணக்காரர்கள் நடந்து பழகும் உடற்பயிற்சிக்காக விளையாடும் காஸ்ட்லி விளையாட்டு என்று நினைத்திருந்தேன்!
நம் இந்தியர்கள் விஜய் சிங் தொடர்ந்து, ஜீவ் மில்கா சிங் அதில் வெற்றி வாகை சூடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.
தெகா
நீங்க சொல்வது சரிதான்.. நம்மவர்கள் கிரிகெட் தவிர மற்ற விளையாட்டுகளை கண்டுகொள்வதில்லை..
எனினும் இவரின் சாதனை ஒரு மைல்கல்தான். இனி இது போன்று தொடர்ந்து வெற்றிகளை குவிப்பார் என நம்புவோமாக.
இந்தியாவின் டைகர் உட்ஸ் என பேர் வாங்கினால் சந்தோசம்தான்.
GK,
நீங்கள் சொல்வதுபோல் இது பணக்காரங்க விளையாட்டுதான். Hi Hi Hi...
இவர் ஜீவ் மில்கா சிங் ஒரு இந்தியர் என்பதில் நமக்கு பெருமை. விஜய் சிங் ஒரு பிஜியன். ஆனால் நீங்கள் சொல்வதுபோல் இந்திய வம்சாவழியை சேர்ந்தவர்.
வருகைக்கு நன்றி
ஜீவ் மில்கா சிங் பற்றி மேலும் இந்த வலைதளங்களில் அறியலாம்.
http://en.wikipedia.org/wiki/Jeev_Milkha_Singh
http://sports.espn.go.com/golf/players/profile?playerId=629
Post a Comment
<< Home