Friday, November 10, 2006

நமக்காக இயற்கையா?!...

தெகா அவர்கள் ஒரு அருமையான பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவின் நோக்கம் இது போன்ற விசயங்கள் மக்கள் மத்தியில் விழிப்புனர்ச்சி ஏற்படவேன்டும் என்பதே..


தயவுசெய்து "அப்பதிவை" படித்துவிட்டு இங்கே வாங்க.. அப்பொழுதுதான் இப்பதிவின் ஆழத்தை அனுபவிக்க முடியும்.

அப்பதிவுக்கு இது ஒரு இனைப்பு (அல்லது விளம்பரம்) என்க் கொள்ளலாம்..


சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பி.டி.ரக நெற்பயிரை பயிர் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்டம் ஆலாந்துறையில் உள்ள ஒரு வயலில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை பிடுங்கி எறிந்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நேற்று போராட்டம் நடத்தினர்.கோவை ஆலாந்துறை அடுத்துள்ள ராமநாதபுரம் கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை பி.டி விதை களை(மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள்) தயாரிக்கும் தனியார் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்தது. இங்கு பயிரிடப்பட்ட பி.டி ரக நெற்பயிரால் வயல் வெளியில் சுற்று சூழல் மாசு ஏற்பட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் சங்கத்தினர் புகார் கூறினர்.


இந்நிலையில், நேற்று விவசாய சங்கத்தினர் பி.டி.நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ள வயலுககுள் சென்றனர். கையுறை, முகமூடி அணிந்து, வயலின் எல்லை யை குறிக்கும் வகையில் பல அபாய பலகைகளையும், யாரும் நுழை யாத வகையில் நாடாக்களை கொண்டு வேலி அமைத்தனர்.


பின்னர், முற்றிய, அறுவடைக்கு தயாராக இருந்த பி.டி.நெற் பயிரை வேரோடு பிடுங்கினர்.
மேலும், கோவை மாவட்ட கலெக்டர் உடனே இங்கு வர வேண்டும் என்றும், பி.டி.நெற்பயிரை சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி எரித்து அழிக்க வேண்டும் என்றும் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


இது குறித்து உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து கூறுகையில், ‘‘பி.டி பருத்தி விதைகளை விதைத்தால், அதிக மகசூல் ஆகும் என்று வாக்குறுதிகளை அமெரிக்க தனியார் நிறுவனம் கூறி வருகிறது.


இந்த விதையால், ஆந்திரா, மகாராஸ்டிரா மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். உணவை நச்சாக மாற்ற முயற்சிக்கும் இந்த கம்பெனியின் நடவடிக்கையை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது, என்றார்.தெகா, "நேசி" என்ற பெயரில் இன்னொரு பதிவிட்டிருக்கிறார். "பரிணாமச் சீர்கேடு ஒர் அறிமுகம்..." அதையும் கொஞ்சம் படித்துவிடுங்க.. ப்ளிஸ்

21 Comments:

Blogger Sivabalan said...

தெகா

உங்களைக் கேட்காமலேயே உங்க தலைப்பை எடுத்துக் கொண்டேன்.. தவறாக எண்ணவேன்டாம்..

நன்றி.

November 10, 2006 10:31 PM  
Blogger Sivabalan said...

செய்தி : தினகரன்.

நன்றி.

November 10, 2006 10:33 PM  
Blogger Thekkikattan said...

சிவா,

நல்ல வேலை செய்தீர்கள், இதோ இந்த சமயத்தில் இந்த இனைப்பையும் எடுத்து இங்கே, தொடுப்பு கொடுத்துவிடுங்கள். நன்றி!

http://kurangumudi.blogspot.com/2006/08/blog-post.html. இந்த பதிவில், எப்படி பலத்காரத்தின் அடிப்படையில் இயற்கை சூரையாடப் படுகிறது என்பதனை விரிவாக அலசப் பட்டு முன் வைக்கப்பட்டு இருக்கிறது.

November 10, 2006 10:50 PM  
Blogger மங்கை said...

இப்பதான் NDTV ல செய்தி வந்துச்சு

பாராட்டுகுரியது

November 10, 2006 10:50 PM  
Blogger Thekkikattan said...

//இந்த விதையால், ஆந்திரா, மகாராஸ்டிரா மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். உணவை நச்சாக மாற்ற முயற்சிக்கும் இந்த கம்பெனியின் நடவடிக்கையை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது, என்றார்.//

இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே slow poison போல நுழைந்து இயற்கையையும், மனிதர்களையும் பலத்காரம் செய்யாமல் செய்து வாழ்வு முழுமைக்குமே மாற்றத்தினை ஏற்படுத்தி, நரகத்தில் தள்ளுவது என்றால். எல்லாமே காசு மயம்.

November 10, 2006 10:54 PM  
Blogger Sivabalan said...

Update - இயற்கை நேசியின் பதிவு - "பரிணாமச் சீர்கேடு ஒர் அறிமுகம்..."

November 10, 2006 11:10 PM  
Blogger Sivabalan said...

மக்களே தயவு செய்து இந்த பதிவுக்கும் கொஞ்சம் வாங்க..

November 10, 2006 11:25 PM  
Blogger மணியன் said...

வந்துட்டோமுங்கோ ! மக்கள் விழிப்புணர்ச்சியோடு இல்லையென்றால் நம் வருங்கால தலைமுறை நம்மை பழிக்கும்.கோவை விவசாயிகள் வாழ்க !

November 11, 2006 1:02 AM  
Blogger ENNAR said...

வாழ்த்துகள் நன்றி இதை நான் பார்க்க வில்லை பார்த்திருந்தால் இது சம்பந்தமாக வேறு ஒன்றை எழுதியிருப்பேன். நான் ஒரு விவசாயி

November 11, 2006 10:21 AM  
Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...

பயனுள்ள பதிவு சிபா!

பசுமைப் புரட்சி செய்த நம் நாட்டில், இந்த மிரட்சிக்கு எல்லாம், இப்போது MS சுவாமிநாதன் போல் இன்னொருவர் தேவை! பயனுள்ள மாற்றங்களை வரவேற்று, மற்றவற்றைப் புறம் தள்ளும் நாள் என்னாளோ?

கோவை விவசாயிகள் முயற்சி தொடர வேண்டும். "களை" போல் பரவ வேண்டும்.

//பி.டி பருத்தி விதைகளை விதைத்தால், அதிக மகசூல் ஆகும் என்று வாக்குறுதிகளை அமெரிக்க தனியார் நிறுவனம் கூறி வருகிறது//

அதக்கப்புறம் கொஞ்ச நாள் கழித்து "there is no such thing called free lunch" என்று இலக்கணச் சுத்தமாகச் சொல்லுவாங்க பாருங்க!

November 11, 2006 10:41 AM  
Blogger Sivabalan said...

தெகா

எல்லாம் காசு மயம் என்று ஒற்றை வரிகளில் நன்றாக கூறிவிட்டீர்கள். அந்த காசையும் தாண்டி இயற்கையை சிந்திக்க வேண்டும்.

ஒரு விதத்தில் இந்த விவசாயிகளின் முயற்சி மகிழ்ச்சியளிக்கிறது.

November 11, 2006 9:29 PM  
Blogger Sivabalan said...

மங்கை

NDTV செய்தது நல்ல விசயம். பாராட்டுகள். நிறைய பேரை இது சென்றடையும்.

பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி

November 11, 2006 9:31 PM  
Blogger Sivabalan said...

மணியன் சார்

மக்கள் விழிப்புணர்ச்சி பெற வேண்டும்.

அழைப்பை ஏற்று வருகை தந்தமைக்கு மிக்க நன்றி

November 11, 2006 9:35 PM  
Blogger Sivabalan said...

என்னார் அய்யா

தாங்கள் ஒரு விவசாயி என்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சி.

உங்கள் பதிவையும் பார்த்தேன். அருமை..

வருகைக்கு மிக்க நன்றி

November 11, 2006 9:38 PM  
Blogger Cervantes said...

"இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக உள்ளே slow poison போல நுழைந்து இயற்கையையும், மனிதர்களையும் பலத்காரம் செய்யாமல் செய்து வாழ்வு முழுமைக்குமே மாற்றத்தினை ஏற்படுத்தி, நரகத்தில் தள்ளுவது என்றால். எல்லாமே காசு மயம்."

அதாவது, சிவபாலன் அவர்கள் ஆப்பு என்ற விஷச்செடியை கருத்து சுதந்திரம் என்ற போர்வைக்குள் பின்னூட்டப் பெட்டிக்குள் உள்ளே விட்டது போல என்று கூறிக் கொள்ளலாமா தெகா அவர்களே?

உங்கள் பதிவு சூப்பர் என்று பாராட்டி ஒரு சிறு எலும்புப் போட்டு உங்கள் பின்னூட்டப் பெட்டியில் அரசியல் செய்யலாம் என்கிறீர்களா சிவபாலன்? வருகைக்கு வேறு நன்றி கூறி மகிழ்கிறீர்கள்?

கிருஷ்ணன்

November 11, 2006 9:40 PM  
Blogger Sivabalan said...

ரவிசங்கர்

வந்து பின்னூடமிட்டு ஆதரவு தெரிவித்தமைக்கு கோடான கோடி நன்றிகள்.

மக்களின் மனதில் விழிப்புணர்வு ஏற்பட்டு நம்து நாட்டு விவசாய நிலங்கள் பாதுக்கப் படவேண்டும்.

November 11, 2006 9:44 PM  
Blogger Sivabalan said...

கிருஷ்ணன்,

நீங்கள் சொன்ன பின்னூடம் டெலிட் செய்யபட்டுள்ளது.

வருகைக்கு மிக்க நன்றி

November 11, 2006 9:46 PM  
Blogger ravi srinivas said...

There are conflicting reports on impacts of Bt Cotton.Some studies claim that it is beneficial to farmers while some dispute that.
I think one has to be careful in
jumping into conclusion.National
Academies of Science have called
for more studies.But so far there has been no report which proves that they are toxic or bad for health.

November 11, 2006 9:53 PM  
Blogger Sivabalan said...

Ravi Srinivas Sir,

நீங்கள் சொல்வதுபோல் இன்னும் தெளிவுக்கு வரமுடியவில்லை என்றாலும் விவசாயிகளின் உணர்வுக்கு மதிப்பளிப்பதும் முக்கியம்.

விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் நிலங்கள் பாதுகாக்க அரசும் மற்ற அமைப்புகளும் முன்வந்து விரைவில் ஒரு தீர்வு ஏற்பட வேண்டும்.

வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி

November 11, 2006 10:06 PM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

சிபா !
நல்ல விழிப்புணர்வு பதிவு ! முக்கியத்துவம் கருதி பூங்காவிலும் வந்திருக்கிறது !
பாரட்டுக்கள் !

November 20, 2006 10:04 AM  
Blogger Sivabalan said...

GK,

மிக்க நன்றி!

November 20, 2006 11:24 AM  

Post a Comment

Links to this post:

Create a Link

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv