Wednesday, November 15, 2006

தகவல் தொழில்நுட்ப துறையில் மகத்தான நாள்



தகவல் தொழில்நுட்ப துறையில் 14-11-06 அன்று மகத்தான நாள். தகவல் தொழில்நுட்ப தொழில் சங்கம் ஒன்று கொல்கத்தாவில் அமைக்கப் பட்டுள்ளது.

தொழில் சங்கங்கள் வெறும் வேலை நிறுத்தம் செய்வதற்கே என்று நினைத்தால் அது மிகப் பெரிய முட்டாள்தனம்.

இந்த துறையில் தொழில் சங்கம் அமைத்திருப்பது அத்துறையில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களும் ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் வந்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாது.

மேலும் இதன் சம்பந்தமாக் "இங்கே செய்தியாக உள்ளது..."

அச் செய்தியின் சுருக்கத்தை இங்கே கொடுத்துள்ளேன்.

IT sector in West Bengal was launched by CITU, ruling CPM's trade union front, which said it was necessary because of alleged rampant flouting of workers' rights.

Launching the new trade union, CITU state president Shyamal Chakraborty said, "some people may not be happy at this development but this is a historic day before us.''

He alleged a number of IT companies were flouting rules framed by the government, depriving workers of basic rights like PF and ESI.

The CITU leader alleged workers' rights were regularly violated by IT companies and claimed he had a list of at least 30 people whose services were terminated without following proper procedure.

16 Comments:

Blogger நாடோடி said...

நீங்கள் சொல்வது போல் நிலமை கிடையாது. எனது இந்த பதிவில் BPOவில் சங்கம் ஆரம்பிக்க முயற்சிப்பதை பற்றி எழுதி இருந்தேன். இங்கு இவர்களின் வேலை நடக்காது. சங்கம் ஈ ஓட்டிகிட்டுஇருக்கவேண்யதுதான். யாரும் வரமாட்டார்கள் என்றே நினைக்கிறேன். சங்கத்தில் இருப்பவர்களுக்கு உறுதியா யாரும் வேலை கொடுக்கமாட்டாங்க. மற்ற துறைகள போல IT யில் யாரும் 25,30 வருடங்கள் ஒரே நிறுவனத்தில் வேலைபார்க்கமாட்டார்கள். அதானால் இங்கு தொழிற்சங்கத்துக்கு வேலையே இருக்காது.

November 15, 2006 9:23 AM  
Blogger Sivabalan said...

நாடோடி ,

ஒருவர் 20- 30 வருடங்கள் வேலை செய்தால் மட்டுமே தொழில் சங்கள் தேவை என்பதில்லை.

தொழிலாளர்கள் நலன் காக்க ஒரு ஜனநாயக அமைப்பு தேவை. அது எந்த துறையாக இருந்தாலும்.

இது முதல் முயற்சியே. இன்னும் காலம் பிடிக்கும்.

ஆனால் இது நிச்சயம் வரவேற்க வேண்டிய விசயம்.

தங்கள் கருத்துக்கும் வருகைகும் மிக்க நன்றி.

November 15, 2006 9:30 AM  
Blogger நாடோடி said...

அய்யா உங்களுக்கு சரியா புரியலையா?.
நீங்கள் மென்பொருள் வல்லுனரா?.
நீங்கள் மென்பொருள் வல்லூனர்னா நான் சொன்னது புரிந்திருக்கும்.

November 15, 2006 9:37 AM  
Blogger Sivabalan said...

அய்யா

நீங்கள் சொல்லவருவது நன்றாகவே புரிகிறது.

ஒரு நிறுவனத்தில் 10 வருடங்களுக்கு மேலாக பணிபுரியும் நன்பர்கள் நான் அறிவேன்.

November 15, 2006 9:43 AM  
Blogger We The People said...

//தொழிலாளர்கள் நலன் காக்க ஒரு ஜனநாயக அமைப்பு தேவை. அது எந்த துறையாக இருந்தாலும்.//

சார் இந்த வாதம் கரெக்ட். ஆனால் அதை கம்மூனிஸ்ட்டுகள் சொதப்பிவிடுவார்கள் என்றே நினைக்கிறேன். CITU போன்ற அமைப்புகள் பெங்கால், கேரளாவில் பல நிறுவனங்களை பல காரணங்கள் காட்டி அழித்து இருக்கிறார்கள். அது இந்த துறையிலும் நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம்??

November 15, 2006 9:43 AM  
Blogger நாடோடி said...

ஒரு example
ஒரு மென்பொருள் வல்லுனர் X நிறுவனம் Y ல் வேலைபார்க்கிறார் என்று கொள்ளுங்கள்.
நிறுவனம் Yயில் A,B,C,D என்று 4 project இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்.
நம்ம வல்லுனர் X Project A யில் வேலை என்று வைத்துக்கொள்ளுங்கள்.
அவர் Project Aயில் வாழ்நாள்முழுவதும் இருக்கமுடியாது, இருக்கவும் போவதில்லை.
எனெனில் Project A duration at worst maximum may be 10 years.
Then after?..
தொழிற்சங்கம்மா Project பிடிச்சுகுடுப்பாங்க.
He need to join in other Porject or start Look Company. This is the option left forhim after Project ends.

//தகவல் தொழில்நுட்ப தொழில் சங்கம் ஒன்று கொல்கத்தாவில் அமைக்கப் பட்டுள்ளது.
//
இதைதான் சொ.செ.சூமுனு சொல்லுவாங்க.
இப்பத்தான் westbengal ல IT Industry நுழைந்தாங்க. அதுக்குள்ள சூனியமா?..

November 15, 2006 9:49 AM  
Blogger Sivabalan said...

ஜெய சங்கர் (We the People),

நீங்கள் தொடுக்கும் வாதம் சரியானதே. ஆனால் வெறும் யூக அடிப்படையில் இவ்விசயத்தை அனுகினால் இது போன்ற முயற்சிகள் பயனளிக்காது. இத்துறையில் அதிகம் படித்தவர்கள் இருப்பதால் ஒரு நல்ல அமைப்பை உருவாக்க முடியும். நம்புவோமாக..

November 15, 2006 9:55 AM  
Blogger Amar said...

சிவா,

கேரள மக்கள் சொந்த மன்னில் வேலையில்லாமல் உலகம் முழுக்க பிழைப்பு தேடி அலைவது தான் கம்யூனிஸ்ட்டு தொழிற்சங்கங்களால் கிடைத்த பலன்.

INTUC போன்ற சங்கங்களால் ஏற்படும் சங்கடங்கள் குறைவு, கவனித்தீர்களா?

November 15, 2006 9:57 AM  
Blogger Sivabalan said...

சமுத்திரா

உண்மைதான். நீங்கள் சொல்வது மிகச் சரி. நான் மேலே சொன்னதுபோல் நல்லதொரு அமைப்பாக உருவாகட்டும். இது முதல் முயற்சியே. தேவையான மாற்றங்கள் கொண்டு சங்கம் உருவாகட்டும்.

வருகைக்கு மிக்க நன்றி

November 15, 2006 10:02 AM  
Blogger நாடோடி said...

//இத்துறையில் அதிகம் படித்தவர்கள் இருப்பதால்//

அதானாலத்தான் நான் மேலே சொன்னேன் நடப்பதற்கு சாத்தியங்கள் குறைவு.

ஏன்னு கேக்குறீங்களா..
எவனும் ஒத்துமையா இருக்கமாட்டான். சுயநலமா இருப்பான். தான்தான் அதிகாரத்தவச்சு இருக்கனும்னு நினைப்பான். இதையெல்லாம் தாண்டி சங்கம் பிரச்சனை கையிலெடுத்து போராடுவதுக்குள்ள அவன்அவன் மூட்டையா கட்டிட்டு(பிராஜகட் கொடுத்தவன்)் வேற இடத்துக்கு போயிடுவான்.

November 15, 2006 10:03 AM  
Blogger Sivabalan said...

ஜெய் சங்கர்,

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

November 15, 2006 10:04 AM  
Blogger Sivabalan said...

நாடோடி

நீங்கள் வைக்கும் வாதம் ஆதங்கத்தினால் ஏற்பட்டதே..

நல்லது நடந்தால் நல்லது தானே!!

என்ன சொல்லறீங்க..

November 15, 2006 10:09 AM  
Blogger நாடோடி said...

//நல்லது நடந்தால் நல்லது தானே!!//

நல்லது நடந்தால் யாராவது வேண்டாம் என்பார்களா?..

ஆனால் சாத்தியக்கூறுகள்?. இதுவரை அப்படி எதுவும் அதிகமாக நடந்துவிடவில்லையே.
எனக்கு தெரிந்து 90% மென்பொருள் வல்லுனர்களுக்கு கம்யூனிசம் என்பதையே "Poison"போலத்தானே பார்க்கிறார்கள்.

November 15, 2006 10:20 AM  
Blogger Dr.Srishiv said...

மிக்க நன்றி பாலன்...:)

November 15, 2006 2:01 PM  
Blogger Sivabalan said...

ஸ்ரீஷிவ் சார்,

வருகைக்கு மிக்க நன்றி.

November 15, 2006 2:05 PM  
Blogger Sivabalan said...

CNN-IBN வந்துள்ள செய்தி.

Even well-paid employees of companies like Tata Consultancy Services and Wipro said they weren't happy with the way they were treated at the workplace.

There are times when we feel really frustrated, like what kind of work we are being given, and sometimes in spite of having the capabilities of doing the work, you don't get the kind of work that you should get," Soumyajit Roy, an executive with Tata Consultancy Services, said.

மேலும் செய்திக்கு இங்கே செல்லுங்க

http://www.ibnlive.com/news/citu-gets-it-comrades-forms-first-bpo-trade-union/26304-7.html

November 16, 2006 8:08 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv