சீனா செய்வது சரியா?
இந்தியாசீனா இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. காஷ்மீர் பகுதியில் 43,180 சதுர கி.மீ., தூரத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக இந்தியா கூறி வருகிறது.
அதே நேரத்தில் அருணாச்சல பிரதேசத்தில் 90 ஆயிரம் சதுர கி.மீ., பகுதியை இந்தியா ஆக்கிரமித்துள்ளதாக சீனா கூறி வருகிறது.
இந்த எல்லைப் பிரச்னையை தீர்க்க இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில், இந்தியாவுக்கான சீன தூதர் சன் யுக்சி தனியார் "டிவி'க்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "எங்களை பொறுத்தவரை தாவாங்க் உட்பட ஒட்டு மொத்த அருணாச்சல பிரதேசமே சீனாவுக்கு உட்பட்டதே. ஒட்டு மொத்த அருணாச்சல பிரதேசத்தையும் எங்களுக்கு உரிய பகுதியாகவே நாங்கள் கோரி வருகிறோம்,' என்றார்.
எல்லைப் பிரச்னையை சுமூகமாக தீர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நேரத்தில் சீன தூதர் இது போல் கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் நேற்று கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர், "அருணாச்சல பிரேதசம் இந்தியாவுக்கு உட்பட்ட பகுதி,' என்று திட்டவட்டமாக கூறினார்.
சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, "வரும் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.
நன்றி:
செய்தி: தினமலர்
14 Comments:
சீன தூதரின் பொருபற்ற வார்த்தைகளை நான் கன்டிக்கிறேன். இவ்வாறு அவர் கூறியிருப்பது ஒட்டு மொத்த சீனாவின் கருத்து என்க் கொள்ளலாமா?
சீன அதிபரை வரவேற்பதில் மகிழ்ச்சியே. ஆனால் அவர் வருகைக்கு முன் இப்படி ஒரு மிரட்டல் தொனி கவலை அளிக்கிறது.
பார்ப்போம் வரும் நாட்களில் இந்த விசயம் எவ்வாறு செல்லும் என்று.
இரு நாட்டு தலைவர்களும் அமைதி பேச்சு வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்.
Sivabalan,
"irresponsibity" depends upon from what side of the border you see a thing.
both india and china have other challenges to meet than to fight over a small state. both have enough land to rule then why squabble over a small piece of land. are we not advising similarly to those who spend their lifetime on a litigation and courts on few inches of land?
சார்
பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கும் போது இது போன்ற பேட்டிகள் நிச்சயம் அதை சீர்குலைக்கவே செய்யும் என்பது என் கருத்து. அதுவும் சீன அதிபரின் வருகைக்கு முன் இவ்வாறு நடந்திருப்பது ஏதோ அரசியல் காரணம் இருக்குமோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
இதில் கம்யூனிஸ்டுகளிம் மவுனம் மேலும் வருத்தமளிக்கிறது.
அந்த உணர்வைதான் பதிவு செய்துள்ளேன்.
வருகைக்கு மிக்க நன்றி.
சீனாவின் இப்போக்கு மிகவும் தவறானது. நல்லிணக்க சூழலுக்கு இது போன்ற பேச்சுக்கு உதவாது.
காஷ்மீரில் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியில் இருந்து அவர்களை வெளியேற கேட்போம் என்று அருணாசல பிரதேசம் என்னுடையது என்று சொல்லி அப்பேச்சு வராமல் இருக்க செய்யும் உத்தியாகவும் இது இருக்கலாம்.
நம்ம இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகாரர்கள் என்ன சொல்லப்போறாங்க? இது பற்றி தனி பதிவு தான் போடனும்.
பிரபு ராஜ துரை சார்,
//"irresponsibity" depends upon from what side of the border you see a thing.//
இந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
ஆனால் நாம் சார்ந்திருக்கும் பக்கத்திற்குதான் பேச முடியும்..Ha Ha Ha..
test comment.. sorry blogeer problems..
சீனாவுக்கு இந்தியா என்றாலே கொஞ்சம் இளக்காரம் தான் சிவபாலன்.நமது காஷ்மிரை ஆக்கிரமித்துக்கொண்டு அடாவடி செய்துகொண்டு வருவதும் இல்லாமல், சிக்கிம் இந்தியாவுடன் இணைந்ததையும் ஏற்காமல் மேப்களில் சிக்கிமை தனிநாடாக காட்டிக்கொண்டு வந்தது. இரண்டுஆண்டுகளுக்கு முன் தான் சிக்கிமை இந்தியாவின் ஒரு பகுதியாக அங்கீகரித்தது.அருணாச்சல பிரதேசத்தையும் பல வருடங்களாக குறிவைத்து வருகிறது.
இந்திய அரசு விழிப்புடன் இருந்து சீனாவின் சதித்திட்டங்களை முறியடிக்க வேண்டும்
குறும்பன்
நீங்கள் ஊகிப்பதும் ஓரளவு சரியே.. வேறு அரசியல் காரணங்களும் இருக்கலாம்..
பொதுவாக, ஒரு அதிபர்/பிரதமர் மற்றொரு நாட்டுக்கு பயனம் மேற்கொள்ளும் முன் பல நல்லெண்ண நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்..
ஆனால் சீனா செய்யும் செயல் விந்தையாக உள்ளது.
ம்ம்ம்... மொத்தத்தில் நல்லது நடந்தால் சரி..
வருகைக்கு நன்றி
This comment has been removed by a blog administrator.
சிவா,
ஒரு பழ மொழி கேள்விப் பட்டிருக்கீங்களா...?? அது இதுதான், "நண்டு கொழுத்த வலையில் தங்கதாம் ;-)" அது போலத்தான் இருக்கு இந்த சிங் சாங்குகளின் கதை (சைனீஸைகளை இப்படித்தான் விளிப்போம்...கிண்டலுக்காக :-)).
முதல், முதல் கப்பல் கட்டுனவங்களாச்சே, கொஞ்சம் பார்த்து கிட்டுத்தான் இருக்கணும் நம்ம பக்கமிருந்து...
செல்வன் சார்,
சீனா அரசுடன் நல்லுறவு பேனும் அதே நேரத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும்..
உங்கள் கருத்துக்கும் வருக்கைக்கும் மிக்க நன்றி
தெகா
ஒரு சூப்பர் பழமொழியை சொல்லிட்டீங்க..
நல்லது நடக்கட்டும்..
சிவா,
சீனா திருந்தாது.
பொருளாதாரம் உயர-உயர அதிகமாக ரவுடித்தனம செய்ய வேண்டும் என்ற என்னம் அதிகமாகுமே ஒழிய குறையாது.
கம்யூனிஸ்ட்டுகளின் சர்வாதிகார ஆட்சி வேறு....கேட்பதற்க்கு யாருமில்லை என்ற நிலையில் இந்தியாவுக்கு சவால்கள் அதிகம் தான் ஆகும்.
[begin விளம்பரம்]
இன்று முத்துமாலை திட்டம் பற்றி ஒரு பதிவு போட்டு இருந்தேன் பார்த்தீர்களே?
[end விளம்பரம்]
சமுத்திரா,
இந்தியா,சீனா போன்ற நாடுகளுடன் விழிப்புடன் இருக்க வேண்டும்.
உங்கள் விளம்பரம் பார்த்தேன்.. ஆவன செய்யப் படும்..Ha Ha Ha..
வருகைக்கு மிக்க நன்றி
Post a Comment
<< Home