Wednesday, November 08, 2006

பிரபல டாக்டர் சிங்கை விஜயம் (அறிவிப்பு)

வாலிப, வயோதிக பதிவர்களே, அமெரிக்க புகழ் மருத்துவர் எஸ்கே ஐயா, என அன்போடு பதிவுலக நண்பர்களால் அழைக்கப்படும் இந்திய டாக்டர், டாக்டர் சங்கர் குமார், தனது சொந்த விசயம் காரணமாக தன் சென்னைப் பயணத்தை முடித்துக் கொண்டு சிங்கை வருகிறார்.

மேலும் வாலிப வயோதிக பதிவர்களுக்கு ஏற்படும் மனக்கவலை, சோர்வு, பயம், நடுக்கம், துக்கம், ஏக்கம், பெற்றோர்கள் அறிந்து கொள்ள பாலியல் கல்வி ஆகியவற்றை தன் ஆத்திகம், கசடற பதிவு மூலம் தீர்த்துவைக்கும் மருத்துவர் எஸ்கே, தன் நான்கு நாள் சுற்றுப் பயணமாக சிங்கை வருகிறார்.


பயண விவரம் : 11 / நவ / 2006 மாலை 6 முதல் முதல் 15 / நவ /2006 வரை
மருத்துவரை சந்திக்க, உரையாட ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய கைத்தொலைபேசி எண் : 9876 7586

(தொடர்பு கொள்பவர்களின் தகவல்கள் விரும்பினால் ரகசியம் காக்கப்படும்.)

:) :)

மேலும் பிரத்தியோகமாக மருத்துவர், வலைப்பதிவு நண்பர்களை / நண்பிகளை சந்திக்க அங்க்மோக்கியோ நூலகத்திற்கு வருகை புரிய உள்ளார். ஆர்வமுள்ளவர்கள் வந்து கலந்துகொள்ளலாம்.

நாள் : 12 / நவ / 2006 நேரம் மாலை 6 முதல் மாலை 8 வரை
இடம் : அங்மோகியோ சமூக நூலகம், சிங்கப்பூர்
கைத்தொலைபேசி எண் : 9876 7586 (கோவி.கண்ணன்)

சென்னை தொலை பேசி : 91 44 6532 8595 (தற்போதும் மற்றும் நவ 20 வரை தொடர்பு கொள்ளலாம்)
__________________________
எழுதியவர் : கோவி.கண்ணன்

14 Comments:

Blogger Hariharan # 03985177737685368452 said...

சிவபாலன்,

தலைப்பைப் பார்த்ததும தமிழகத்தின் பிரபல வாலிப வயோதிக பழனி டாக்டர் லயன் எஸ்.காளிமுத்துவோன்னு ஒருநிமிஷம் குழம்பிடுச்சி!

ஆயிரம் ஆனாலும் நம்ம எஸ்கேசார் மாதிரி ஆகமுடியுமா? சிங்கை அன்பர்களுக்கு நல்ல வாய்ப்பு!

November 09, 2006 12:31 AM  
Blogger Sivabalan said...

//Hariharan # 26491540 said...
சிவபாலன்,

ஆயிரம் ஆனாலும் நம்ம எஸ்கேசார் மாதிரி ஆகமுடியுமா? சிங்கை அன்பர்களுக்கு நல்ல வாய்ப்பு! //

ஹரிஹரன்...!

இது சாச்சாத் நம்ம எஸ்கே ஐயாவே தான். சிங்கை வருகிறார் இம்மாதம் 11 - 15 தேதிகளில்.

அன்புடன்
கோவி.கண்னன்

November 09, 2006 12:44 AM  
Blogger Sivabalan said...

கோவி.கண்னன் (GK),

SK அய்யா கூட நான்கு நாட்கள் என் ஜாய் பன்னுங்க..

November 09, 2006 7:29 AM  
Blogger Sivabalan said...

சிங்கை சிங்கங்களே,

SK அய்யா வரும் செய்தியை படித்தீர்களா!! முடிந்தால் ஒரு வலைப் பதிவர் சந்திப்பு செய்யுங்க..

GK தொடர்புகொள்ளுங்க..

November 09, 2006 7:47 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

//கோவி.கண்னன் (GK),

SK அய்யா கூட நான்கு நாட்கள் என் ஜாய் பன்னுங்க..//

சிபா,

எஸ்கே ஐயாவுக்கும், எனக்கும் அடுத்தவாரம் காமடி வாரம் !

நன்றி !

November 09, 2006 9:26 AM  
Blogger குமரன் (Kumaran) said...

நல்ல செய்தி. ஆனால் இந்த அறிவிப்பு எழுதியிருக்கும் முறை என்னவோ எனக்குப் பிடிக்கவில்லை.

November 09, 2006 11:37 AM  
Blogger Sivabalan said...

குமரன் சார்

இப்பதிவை எழுதியது திரு.கோவி.கண்ணன். நான் வெளியிட்டேன். அவ்வளவே..

திரு.கோவி.கண்ணன். வந்து உங்களுக்கு விளக்கமளிப்பார் என நம்புகிறேன்.

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

November 09, 2006 12:48 PM  
Blogger குமரன் (Kumaran) said...

ஆமாம் சிவபாலன். கோவி.கண்ணன் ஐயா எழுதியது என்று தான் தெளிவாக மேலேயே சொல்லியிருக்கிறீர்களே. பதிவைப் படித்தவுடன் என் மனநிலையைச் சொன்னேன். கண்ணன் ஐயாவும் விளக்கமெல்லாம் சொல்லத் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.

November 09, 2006 1:09 PM  
Blogger Sivabalan said...

குமரன் சார்

நன்றி

November 09, 2006 1:13 PM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

//Sivabalan said...
குமரன் சார்

இப்பதிவை எழுதியது திரு.கோவி.கண்ணன். நான் வெளியிட்டேன். அவ்வளவே..

திரு.கோவி.கண்ணன். வந்து உங்களுக்கு விளக்கமளிப்பார் என நம்புகிறேன்.
//

சிபா, குமரன்...!

வெளியிடும் முன் எஸ்கே ஐயாவிடம் ஒப்பம் பெற்றே வெளியிடப்பட்டது.

ஜாதி கூத்துகள் தொடர்ந்து பதிவுகளில் அரங்கேறும் இவ்வேளையில், ஒரு மாற்றுக்காக நடையை மாற்றி எழுதியது இது.

:)

November 09, 2006 6:56 PM  
Blogger எம்.கே.குமார் said...

எஸ்.கே. அய்யா அவர்களைச் சந்திக்க விரும்புகிறேன்.

விடாது கருப்பும் வருகிறாராம். அதற்காக கண்டிப்பாய் நான் வருவேன். :-)

கோவி கண்ணன், இங்கு ஒரு தகவல் போட்டிருக்கலாமே!
http://singaimurasu.blogspot.com/

அன்பன்,
எம்.கே.

November 09, 2006 10:18 PM  
Blogger Sivabalan said...

GK,

காமிடி வாரம் நல்லா கலைகட்ட வாழ்த்துக்கள்!! Ha Ha Ha...

November 10, 2006 9:57 AM  
Blogger Sivabalan said...

எம்.கே.குமார்,

முக்கியமானவர்கள் வருகிறார்கள்!! சந்தோசமாக போயிட்டுவாங்க...

வருகைக்கு நன்றி

November 10, 2006 9:59 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

சிபா..!
எஸ்கேவின் சிங்கைப் பயணம் சில காரணங்களால் தள்ளிப் போனதால் திட்டமிட்ட படி அவரால் ஞாயிற்றுக் கிழமை மாலை பதிவர்களை சந்திக்க முடியாது. அவர் ஞாயிறு மாலை 5.30 மணிக்குத் தான் சிங்கை வருகிறார்.

சந்திக்க விரும்பும் பதிவர்கள் ஞாயிறு மாலை 7.00 மணிக்கு 65 9876 7586 என்ற கைதொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால், எங்கு / எப்போது சந்திக்கலாம் என்று கலந்து ஆலோசித்து அறியமுடியும்.

November 10, 2006 10:04 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv