Thursday, November 09, 2006

இளையராஜா செய்வது சரியா?



பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுப்பு: இளையராஜாவுக்கு இல.கணேசன் பாராட்டு

இசைஞானி இளையராஜா பாரதியார் படத்துக்கு இசை அமைத்து பெருமை சேர்த்தார். ஆனால் தற்போது பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்து விட்டார். தெய்வ நம்பிக்கை கொண்டவர் இளையராஜா. கோடி ரூபாய் கொடுத்தாலும் பெரியார் படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என்று அவர் கூறியதை நினைத்து பெருமைபடுகிறேன். அவரை பாராட்டுகிறேன். அவர் லட்சிய பற்றுள்ளவர்.

திரு.இல.கனேசன் இவ்வாறு கூறியுள்ளார்.

141 Comments:

Blogger இலவசக்கொத்தனார் said...

இதில் என்ன தவறு இருக்கிறது? As a professional he has all the rights to choose what he works on. Also as an artist, he will not be in a position to give 100% for something he does not believe in. So rather than do a shoddy job, he has wisely turned down the offer.

என்னை நாத்திகம் பற்றி எழுதச் சொன்னால் தெரியவும் தெரியாது, முடியவும் முடியாது. இதையெல்லாம் ஒரு பரபரப்பு செய்தியாக sensationalize பண்ணாதிருத்தல் நலம்.

November 09, 2006 10:55 AM  
Blogger கால்கரி சிவா said...

கொத்தனார் சரியாதான் கொத்தியிருக்கார்.

இளையராஜா சொன்னதில் தப்பே இல்லை.

November 09, 2006 11:00 AM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

இசை ஞானி இசையை ஆத்திகம், நாத்திகம் என பாகுபடுத்துகிறாரா ? ம்
:(

November 09, 2006 11:01 AM  
Blogger ஜோ/Joe said...

//கோடி ரூபாய் கொடுத்தாலும் பெரியார் படத்துக்கு இசையமைக்க மாட்டேன் //
இப்படி இளையராஜா கூறியிருந்தால் அவரது ரசிகனாக வெட்கப்படுகிறேன் .இலவசகொத்தனாரின் லாஜிக் படி இதுவரை இளையராஜா அவர் சொந்த கொள்கைக்கு உடன்படும் படங்களுக்கு மட்டுமே இசையமைதாரோ ? "நேத்து ராத்திரி எம்மா" -வெல்லாம் அவரு கொள்கையா என்ன?

November 09, 2006 11:02 AM  
Blogger இலவசக்கொத்தனார் said...

//இசை ஞானி இசையை ஆத்திகம், நாத்திகம் என பாகுபடுத்துகிறாரா ? ம்//

இசை என்பது அவர் அவர் எண்ணங்களின் வெளிப்பாடு. தனக்கு பிடிக்காததை செய்ய முடியாது. சில கர்நாடக சங்கீத பாடகர்கள் சினிமா பாடல்கள் பாடுகிறார்கள் பலர் பாடுவதில்லை. பாடத் திறமை இல்லை என்று பொருள் இல்லை. ஆனால் அதில் விருப்பமில்லை என்றுதான் பொருள்.

இதுவும் அது போன்றே.

November 09, 2006 11:07 AM  
Blogger ஜோ/Joe said...

இசையமைக்க மறுக்க வேறு காரணங்கள் இருந்தால் சரி .கொள்கை தான் காரணம் என்றால் இளையராஜா பண்ணியது பேத்தல்.

November 09, 2006 11:07 AM  
Blogger மாசிலா said...

அடடா,
வளர்ந்த கடா
மாரிலே பாயுதே!

இந்த எளையராசா விட
நம்ம குஷ்பு அம்மாவுக்கு கோடி கும்புடு.

சும்மா கெடந்த கோடாரிய
கால்ல தூக்கி போட்டிகினாற...

இனிமே ஜாலிதான்,
நாய் கிழி கிழியபோயுவுது
நம்ம இசைஞானி(?) கந்தலு!

November 09, 2006 11:10 AM  
Blogger இலவசக்கொத்தனார் said...

//இலவசகொத்தனாரின் லாஜிக் படி இதுவரை இளையராஜா அவர் சொந்த கொள்கைக்கு உடன்படும் படங்களுக்கு மட்டுமே இசையமைதாரோ ? "நேத்து ராத்திரி எம்மா" -வெல்லாம் அவரு கொள்கையா என்ன?//

ஆமாம் ஜோ. அப்படித்தான் நினைக்கிறேன். அந்த பாடல் செய்யும் பொழுது அவரது தேவை பணம், புகழ் போன்றவைகளாக இருந்திருக்கலாம். இன்று அதே பணம் புகழ் தேவை இல்லாமல் போய் இருக்கலாம். தேவை என்பது எல்லோருக்கும் எல்லா நேரங்களிலும் ஒன்றாக இருப்பதில்லையே.

பத்து வருடங்கள் முன்பு நான் கேட்டுக் கொண்டிருந்த பாடல்களை என்னால் இன்று கேட்க முடியாது.

காரணம் என்னவாக இருந்தாலும் இது ஒரு தனிமனிதரின் முடிவு. அதனை விமர்சிக்க தேவையும் இல்லை, அதனால் நாம் சாதிக்க போவதும் ஒன்றுமில்லை.

உங்களுக்கு அவர் செய்கை பிடிக்கவில்லை என்றால் அது கட்டாயம் உங்கள் உரிமை.நீங்கள் அவர் பாடல்களை கேட்காமல் புறக்கணிக்கலாம். அது உங்கள் உரிமை. ஆனால் அதற்காக அவர் செய்தது தவறு எனச் சொல்ல நமக்கு எந்த உரிமையும் கிடையாது. இதுதான் நான் சொல்ல வந்தது.

November 09, 2006 11:12 AM  
Blogger ஜோ/Joe said...

//ஆமாம் ஜோ. அப்படித்தான் நினைக்கிறேன். அந்த பாடல் செய்யும் பொழுது அவரது தேவை பணம், புகழ் போன்றவைகளாக இருந்திருக்கலாம். இன்று அதே பணம் புகழ் தேவை இல்லாமல் போய் இருக்கலாம்.//

ஓ! இது தான் கொள்கையா!

//உங்களுக்கு அவர் செய்கை பிடிக்கவில்லை என்றால் அது கட்டாயம் உங்கள் உரிமை.நீங்கள் அவர் பாடல்களை கேட்காமல் புறக்கணிக்கலாம். அது உங்கள் உரிமை. ஆனால் அதற்காக அவர் செய்தது தவறு எனச் சொல்ல நமக்கு எந்த உரிமையும் கிடையாது.//

இசையமைப்பது அமைக்காதது அவர் உரிமை .ஆனால் அதற்கு கொள்கை தான் காரணமென்றால் ,ரொம்ப தமாஷா இருக்கு .இளையராஜா ரசிகனாக என் பெருந்த ஏமாற்றத்தை சொன்னேன் .அவ்வளவு தான்.

November 09, 2006 11:20 AM  
Blogger இலவசக்கொத்தனார் said...

இதுக்கும் நம்ம தெக்கி இங்க சொல்லறா மாதிரி கமலின் இல்வாழ்க்கை பத்தி பேசறதுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது எனது கருத்து.

இது எல்லாம் தனி மனித சுதந்திரம் சாமி.

November 09, 2006 11:24 AM  
Blogger குமரன் (Kumaran) said...

இளையராஜாவால் இந்த செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததா இல்லை இல.கணேசன் சொன்னதால் முக்கியத்துவம் வாய்ந்ததா? இளையராஜாவை இந்துத்துவாவில் அடக்கிவிட நடக்கும் முயற்சியின் விளைவான போராட்டமா? எப்படியோ வெறும் வாயை மெல்லுபவர்களுக்கு சுவையான அவல் கிடைத்துவிட்டது. இதோ ஒருவர் அவரை துரோகி என்று ஏற்கனவே சொல்லியாகிவிட்டது. நடக்கட்டும் நடக்கட்டும். நரம்பில்லா நாக்கு எதுவேண்டுமானாலும் சொல்லும்.

November 09, 2006 11:35 AM  
Blogger enRenRum-anbudan.BALA said...

The same people who oppose When isai jnani says that he is not interested to do music for this movie, simply kept quiet when some mindless persons said that Kushboo should not act as maniammai citing silly and stupid and invalid reasons. This is hypocrisy at its best (or worst;-)

Anyway, thanks for the info, Sivabalan !

November 09, 2006 11:35 AM  
Blogger Nakkiran said...

joe
"நேத்து ராத்திரி எம்மா" அவருடைய கடவுள் கொள்கைக்கு எதிரானது எப்படி என்பதை விளக்கமுடியுமா... பெரியார் அவர் மிகவும் நம்பக்கூடிய கடவுள் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது...அதனால் அவரால் முடியாது என்று சொல்லிவிட்டார்...

GK சார்
//இசை ஞானி இசையை ஆத்திகம், நாத்திகம் என பாகுபடுத்துகிறாரா ? ம்//

அவர் இசையை பாகுபடுத்தவில்லை... அவருக்கு இசையமைக்க விருப்பமில்லை என்றுதான் சொல்கிறார்.. இன்னும் சொல்லப்போனால் அவரை பொறுத்தவரை இசை, சரஸ்வதி தேவியின் அருள் என்று நினைக்கிறார்...

இது அவரின் தனிப்பட்ட உரிமை... இதில் சரியா தவறா என்ற பேச்சுக்கே இடமில்லை..

November 09, 2006 11:42 AM  
Blogger Boston Bala said...

சோஷலிஸம் பிடித்தவர்களிடம் 'மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் உபயோகித்து நிரலி எழுது... உனக்கு கோடி தருகிறேன்' என்றால், 'எனக்கு லீனக்ஸும் ஜாவாவும்தான் தோஸ்த்து' என்பார்.

வெஸ்ட் இண்டீஸில் காலம் தள்ளியிருந்தாலும் ராபின் சிங், இந்தியாவுக்காக கிரிக்கெட் ஆடத்தான் விரும்பினார்.

எனக்கு ஆங்கிலத்தில் கிறுக்க எளிதாக வரும் என்றாலும், தமிழில் வலைப்பதிவதையே விரும்புகிறேன்.

இல கணேசனுக்கு மாலை நாளிதழில் கவன் ஈர்ப்பைக் கோர ஆசை. இளையராஜா அகப்பட்டு இருக்கிறார். நாளைக்கு ரெஹ்மான்; நாளைக்கழிச்சி டெண்டுல்கர். அரசியல்வாதிக்கு அவல் தேவை.

அது சரி... இளையராஜா முடிவு குறித்து உங்க கருத்து என்ன சிவபாலன் : )

November 09, 2006 11:44 AM  
Blogger ஜோ/Joe said...

//The same people who oppose When isai jnani says that he is not interested to do music for this movie, simply kept quiet when some mindless persons said that Kushboo should not act as maniammai citing silly and stupid and invalid reasons. This is hypocrisy at its best (or worst;-)//

பாலா,
இங்கே இதுவரை அதிருப்தியை பதிவு செய்தவர்களின் நானும் ஒருவன் .குஷ்பு நடிக்கக்கூடாது என சொல்லப்பட்டதை எதிர்த்தவர்களில் (பதிவு செய்தவர்களில்)நானும் ஒருவன் என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

November 09, 2006 11:47 AM  
Blogger கால்கரி சிவா said...

//அது சரி... இளையராஜா முடிவு குறித்து உங்க கருத்து என்ன சிவபாலன் : )
//

அதிக பின்னூட்டம்

November 09, 2006 11:50 AM  
Blogger குமரன் (Kumaran) said...

//அது சரி... இளையராஜா முடிவு குறித்து உங்க கருத்து என்ன சிவபாலன் : )
//

பாபா. சிவபாலனின் கருத்து தான் தலைப்பில் இருக்கிறதே. :-)

November 09, 2006 11:52 AM  
Blogger Sivabalan said...

"மாக கவி" பாரதியார் படத்தை இயக்கியவரே இப்படத்தையும் இயக்குகிறார். அப்படி இருக்க இளையராஜாவின் கொள்கை காரனமாகத்தான் இதை மறுத்திருக்க கூடம்.

கொள்கையை தொழிலில் காட்டி தொழில் தருமத்தை மீறியுள்ளார் என்பது என் குற்றச்சாட்டு.

மற்றபடி இசை அமைப்பதும் அமைக்காமல் இருப்பதும் அவர் விருப்பம்.

November 09, 2006 12:05 PM  
Blogger bala said...

//நேத்து ராத்திரி எம்மா" -வெல்லாம் அவரு கொள்கையா என்ன?//

ஜோ அய்யா,

இந்த லெவெலை விட கீழே போகக்கூடாது என்பது அவர் கொள்கையா இருக்கலாம் அல்லவா?

பாலா

November 09, 2006 12:09 PM  
Blogger Thekkikattan|தெகா said...

நண்பர்களே,

எனக்குத் தெரிந்ததை, பட்டதை இந்த நேரத்தில் இங்கு பகிர்ந்து கொள்கிறேன். மனசில், படக்கென்று என்ன எண்ணம் எழுந்ததோ அதனை அப்படியே இங்கு முன் வைக்கிறேன்.

என் பதிவுகள் அனைத்துமே தனி மனித வெளிப்பாடுகள் ஆங்கீகரிக்கப் பட்டு, அவரவர்களின் எண்ணம் போல எடுக்கும் முடிவுகளை செயல் படுத்தி அதன் விளைவுகளை அந்த தனி மனிதரே சுவைத்துப் பார்க்கும் நிலையை நாம் வழங்க வேண்டும் என்ற கருத்தை முன் வைப்பதாகத்தான் என் பதிவுகள் இருக்கும்.

அதன் அடிப்படையில் இன்று இளையராசா என்ற தனி மனிதர், பல இன்னல்களுக்கிடையே அவர் அடைந்திருக்கும் உயரம் ஒரு தனி மனிதரின் உழைப்பால் கிட்டியதே அன்றி வேறு எதுவாகினும் உண்டா.

அப்படி இருக்கும் பொழுது அவரின் வளர்ச்சியும் காலங்கள் தோரும், எப்படி உடல் வளர் சிதை மாற்றங்களை சந்தித்து பயணிக்கிறதோ, அது போலவே மனமும் சொல்கிறது தானே.

அவருடைய பரிமாணத்தில் அவருக்கு கிடைத்த உலகியல் விசயங்கள், அவர் எடுக்கும், எடுக்கப்போகும் நிலைப்பாடுகள் ஒரு தனி மனிதரின் எண்ணங்களின் வெளிப்பாடே. அது அவரவர் நிலையில், அவரவருக்கிட்டிய பரிமாணத்தின், புரிதல்களின் அடிப்படையிலேயே அமைகிறது.

விசயம் அப்படியாக இருக்க, அந்த நிலைப்பாட்டில் நம்மின் எதிர்பார்ப்பு வேறு மாதிரியாக இருக்கும் பொழுது அதனை முன் வந்து அவர் செய்தால், அது ஒரு அரசியல் வாதி, சந்தர்ப்ப சூழ் நிலைக்கு தன்னை நிறம் மாற்றிக் கொள்வதற்கும் ஒரு தனி மனித முடிவுக்கும் எந்த வித்தியாசமுமில்லாமல் போகுவிடுகிறது.

எனவே, இளையராசா என்ற நபரை ஒரு தனி மனிதனாக, தெய்வங்களின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை உடையவராக இருக்கும் பட்சத்தில் அவர் எடுத்திருக்கக் கூடிய முடிவு, அவரின் தனி நிலையில் சரியே.

அதுவும் தனக்கு வாழ் நாளின் இறுதி நாட்களில் கூட தனது சொந்த அபிப்பிராயத்தை வெளிப்படுத்த அவருக்கு உரிமை உண்டா, இல்லையா?

மீண்டும் நான் எழுதிய இந்தப் பதிவில் ***காகிதப் புலிகளும் *வச்சிபார்க்கத் தெரியாத* கமலும்!! - http://thekkikattan.blogspot.com/2006/10/blog-post_116165144579488852.html
- கமலுக்கு கூறியது தான், எந்த ஒரு பிரபலத்தின் தனி மனித வெளிப்பாட்டு முடிவுகள் விமர்சனத்திற்கு வர வேண்டிய தேவையில்லை... என்று நான் எண்ணுகிறேன்.

Peace V.

November 09, 2006 12:16 PM  
Blogger குமரன் (Kumaran) said...

//இசைஞானி இளையராஜா பாரதியார் படத்துக்கு இசை அமைத்து பெருமை சேர்த்தார்//

இளையராஜா இசையால் பாரதியார் படத்திற்குப் பெருமையா? பாரதியார் படத்திற்கு இசையமைத்ததால் இளையாராஜாவிற்குப் பெருமையா?

இளையராஜா பெரியார் படத்திற்கு இசையமைக்காவிட்டால் நஷடம் இளையராஜாவுக்கா? பெரியார் திரைப்படத்திற்கா? பெரியார் திரைப்படத்திற்கு என்று யாரும் சொல்ல மாட்டார்கள் என்று நம்புகிறேன்.

November 09, 2006 12:17 PM  
Blogger Boston Bala said...

---கொள்கையை தொழிலில் காட்டி தொழில் தருமத்தை மீறியுள்ளார் என்பது என் குற்றச்சாட்டு.---

இளையராஜா சாமி கும்பிடுவார் என்பதை திரை ரசிகர்கள் அறிவார்கள்.

'பெரியார்' படத்தின் இசை 'ஹிட்டாகவில்லை' அல்லது விமர்சகர்களின் எழுத்தில் சொன்னால்

* 'இதயத்தைத் தொடவில்லை.'
* 'அவரால் இதைவிட சிறப்பாக செய்திருக்க முடியும்.'
* 'முந்தைய சிகரங்களைத் தொடவில்லை!'
* 'பாடல் வரிகளை இசை மூழ்கடிக்கிறது.' போன்ற குற்றச்சாட்டுகள் (அல்லது) ஆய்வுக் கட்டுரைகள் எழலாம்.

அப்போது, 'திருவண்ணாமலைக்குப் போகிறவர்தானே... அதனால்தான் இப்படி ம்யூசிக் போட்டிருக்கார்' என்றும் முடிவுரை கொடுப்பார்கள்.

இந்த மாதிரி அவதூறு எழாமல் இருக்க மறுத்துவிடுவதே நாகரிகமானது என்னும் பயம் கலந்த பாதுகாப்பு உணர்ச்சி 'தொழில் தருமத்தை' தோற்கடித்திருக்கும்.

November 09, 2006 12:19 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

//கொள்கையை தொழிலில் காட்டி தொழில் தருமத்தை மீறியுள்ளார் என்பது என் குற்றச்சாட்டு.//

ஒரு மருத்துவர் தன் கொள்கையைக் காரணம் காட்டி ஒருவருக்கு மருத்துவம் செய்யாதிருந்தாரானால் நீங்கள் சொல்வது சரி. ஆனால் அது ஒரு கலைஞனுக்குப் பொருந்தாது.

அவன் தன் மனதில் எழும் உணர்ச்சிகளுக்குத்தான் இசையாகவும், எழுத்தாகவும் படமாகவும் வடிக்கால் அமைத்துக் கொடுக்கிறான். ஆகவே, தனக்கு ஒவ்வாத விஷயங்களில் அவனது படைப்பார்வம் வெற்றியளிக்கப் போவதில்லை.

ஆகவே தொழில் தர்மம் என்று பெரிய வார்த்தை எல்லாம் போட்டுக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

November 09, 2006 12:33 PM  
Blogger enRenRum-anbudan.BALA said...

இளைய ராஜா ஆன்மிகத்தில் மிக்க ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டவர். அதன் காரணமாக, தன் தனிப்பட்ட விருப்பமாக, சுதந்திரமாக, பெரியார் என்ற நாத்திகவாதியைப் பற்றிய திரைப்படத்திற்கு இசையமைக்கக் கூடாது என்று முடிவெடுத்திருக்கலாம். அவர் அதை தனது கொள்கை என்று திட்டவட்டமாகக் கூறாதபோது, சிலர் தாமாகவே அம்முடிவை "கொள்கை ரீதியான முடிவாக" எடுத்துக் கொண்டு ஏதேதோ விவாதம் செய்வது / விமர்சனம் செய்வது சரியில்லை.

இல.கணேசன் கூறுவது இருக்கட்டும். இசை ஞானி இது குறித்து வரும் நாளில் ஏதாவது பேசினால், அச்சமயம் (as usual) இரண்டு குரூப்பா பிரிஞ்சு சண்டையிடலாம் அல்லவா ;-)) இன்னும் டைம் இருக்குல்ல :))

November 09, 2006 1:01 PM  
Blogger GiNa said...

இசைஞானி எடுத்த முடிவு அவர் தனிப்பட்ட விருப்பம் என்பதை மதிக்கிறேன்.அதே சமயம், கொஞ்சம் பட்ஜட் அதிகமாக இருந்த்து பெரியார் பட பாடல்களை ஹங்கேரியில் ரெக்கார்டு செய்து சிம்பனியாக் போட வாய்ப்பிருந்த்தால் ஞானி கொஞ்சம் யோசித்திருப்பார் :D

November 09, 2006 1:06 PM  
Blogger குமரன் (Kumaran) said...

பெரியார் பட பாடல்களை ஹங்கேரியில் ரெக்கார்டு செய்து சிம்பனியாக் போட வாய்ப்பிருந்த்தால் ஞானி கொஞ்சம் யோசித்திருப்பார் //

:-))

November 09, 2006 1:09 PM  
Blogger Sivabalan said...

இகொ

நன்றாக வாதம் செய்தீர்கள்..

நன்றி.

November 09, 2006 1:20 PM  
Blogger Sivabalan said...

கால்கரி சிவா அவர்களே,

//அதிக பின்னூட்டம்//

உங்களின் இந்த கம்ன்டை இரசித்தேன்

November 09, 2006 1:21 PM  
Blogger Sivabalan said...

GK,

பத்தவச்சிடீங்களே !!

November 09, 2006 1:22 PM  
Blogger Sivabalan said...

ஜோ

உங்கள் கருத்து என் எண்ண ஓட்டங்களுடன் ஒத்துப் போனது..

நன்றி

November 09, 2006 1:23 PM  
Blogger Sivabalan said...

மாசிலா,

வருகைக்கு நன்றி



சிநேகிதன்,

வருகைக்கு நன்றி

November 09, 2006 1:25 PM  
Blogger Sivabalan said...

குமரன் சார்

நிறைய நல்ல கேள்விகள், கருத்துக்களை சொல்லியிருக்கீங்க..

சிந்தனைக்கு விருந்து..

நன்றி

November 09, 2006 1:27 PM  
Blogger Sivabalan said...

எ.அ.பாலா

உங்க இரண்டு கமன்டும் நல்ல கமன்ட்.

நன்றி

November 09, 2006 1:30 PM  
Blogger Sivabalan said...

நக்கீரன்

வருகைக்கு நன்றி

November 09, 2006 1:32 PM  
Blogger Sivabalan said...

பாஸ்டன் பாலா,

Thanks for your best comments.

November 09, 2006 1:38 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

என்ன அதுக்குள்ள நன்றி நவில்தலுக்கு வந்துட்டீங்க? ஆட்டம் க்ளோசா? எதிர்பார்த்த லிஸ்டில் நிறையா பேரைக் காணுமே!!

:-D

November 09, 2006 1:40 PM  
Blogger குமரன் (Kumaran) said...

கொத்ஸ். அவிங்க எல்லாம் நம் தாய்த் திருநாட்டிலும் சிங்கையிலும் அமீரகத்திலும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப் பக்கம் இருப்பவர்கள் எல்லோரும் வேலையை ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்களும் நானும்? சொல்ல வேணுமா? :-)

November 09, 2006 1:44 PM  
Blogger ✪சிந்தாநதி said...

பெரியாரைச் சிறுமைப்படுத்தி இளையராஜா அப்படிக் கூறியிருந்தால் அது அவர் தமிழனாகப் பிறந்ததற்கே அவமானம். கொள்கை என்பதெல்லாம் பாவ்லா. நாத்திகம் ஆத்திகம் என்பதைவிட பெரியாரைச் சிறுமையாக எண்ணும் மனப்பாங்கு எப்படி வரமுடியும் என்பதே வியப்பு.

இல கணேசனைப் போன்ற அரசியல் கோமாளிகள் அப்படிக்கூறுவதில் ஆச்சரியமே இல்லை.

November 09, 2006 2:06 PM  
Blogger கால்கரி சிவா said...

//பெரியாரைச் சிறுமைப்படுத்தி இளையராஜா அப்படிக் கூறியிருந்தால் அது அவர் தமிழனாகப் பிறந்ததற்கே அவமானம்//

பெரியார் என்ன பெரிய கொம்பா? நான் அவமான படுத்துவேன். நான் தமிழனாக பிறந்ததற்கு யாருக்கு அவமானம்..உங்களுக்கா அல்லது அந்த வெண்தாடி வேஸ்ட் என்ற கன்னடருக்கா.

பெரியார் என்ன பெரிய இவரா? அவர் வாந்தது வாழ்க்கையாம் அதுக்கு ஒரு சினிமாவாம் அதுக்கு அரசாங்க உதவியாம் அதில் பணிபுரிய மறுத்தால் அவமானமாம்.....

November 09, 2006 2:18 PM  
Blogger Boston Bala said...

குமரன்,
இங்கு விழுந்த உங்களின் பின்னூட்டங்கள் ஒவ்வொன்றும் பளிச்!! வெகுவாக ரசித்தேன் : ))

---இளையராஜா பெரியார் படத்திற்கு இசையமைக்காவிட்டால் நஷடம் இளையராஜாவுக்கா? பெரியார் திரைப்படத்திற்கா? ---
---இந்தப் பக்கம் இருப்பவர்கள் எல்லோரும் வேலையை ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கிறார்கள---

November 09, 2006 2:23 PM  
Blogger குமரன் (Kumaran) said...

//பெரியாரைச் சிறுமைப்படுத்தி இளையராஜா அப்படிக் கூறியிருந்தால் அது அவர் தமிழனாகப் பிறந்ததற்கே அவமானம். //

யாராவது பன்முகப்படுத்துவோமா தமிழனைன்னு பதிவு போடலியா? தமிழன் என்றாலே அவன் நாத்திகனாகத் தான் இருக்க வேண்டும் என்று சொல்வது போல் இருக்கின்றது உங்கள் வார்த்தை. எல்லா தமிழர்களும் நாத்திகர்கள் இல்லை. எல்லா தமிழர்களும் பெரியாரை மதிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நாத்திகனில்லா மக்களும் (தமிழர், தமிழரல்லாதவர்) உண்டு. அவர்களிலும் பெரியாரை மதிப்பவர் உண்டு.

இனத்தைப் பற்றி பேசினால் அது தேசத்துரோகம் என்று சொல்வதைப் போல் இருக்கிறது நீங்கள் சொல்வது. பன்மைத் தன்மையை அழிக்கிறார்கள் என்று மற்றவர்களைக் கைகாட்டிக் கொண்டே அப்படிச் சொல்பவர்களும் பன்மைத் தன்மையை அழிக்கிறார்கள்.

November 09, 2006 2:25 PM  
Blogger Sivabalan said...

சிந்தாநதி அவர்களே,

பெரியாரை அவமதிக்க இளையராஜா எண்ணியிருக்க மாட்டார் எனறே நினைக்கிறேன். ஏனென்றால் இளையராஜாவுக்கும் பெரியாரின் சிந்தனைகள் தெரிந்திருக்கும்.

November 09, 2006 2:35 PM  
Blogger Sivabalan said...

கால்கரி சிவா அவர்களே

நீங்கள் பெரியாரை அவமானப் படுத்துவேன் என்று எந்த அர்த்ததில் கூறினீர்கள் என தெரியவில்லை. ஆனாலும் அவ்வாறு கூறியது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியது.

ஓசோவின் கருத்துக்களுடன் ஒத்த உங்கள் மனதில் இவ்வாறு எண்ணங்கள் வருவது அதிர்ச்சியளிக்கிறது.

November 09, 2006 2:36 PM  
Blogger Sivabalan said...

தெகா

உங்கள் கருத்து நல்ல கருத்து. எங்கே நான் மாறுபடுகிறேன் என்று நாளை சொல்கிறேன்.

அருமையான பின்னூடத்திற்கு நன்றி

November 09, 2006 10:13 PM  
Blogger கால்கரி சிவா said...

சிவபாலன்,

ஒருவரை கடவுளாக்கி அவரை அவமானப் படுத்தினால் வெட்கம், கொலை என கதறுபவர்கள் எவ்வாறு பகுத்தறிவாளராக இருக்க முடியும்

பெரியாரை இன்னொரு கடவுள் ஆக்குகிறார்கள் இந்த இறை மறுப்பாளர்கள். அதனால்தான் அவ்வாறு சொன்னேன்.

ஒஷோவின் புத்தகங்களை படிப்பதற்கும் பெரியாரை அவமான படுத்துவதற்கும் என்ன சம்பந்தம் எனக்கு புரியவில்லை.

பெரியார் ஒன்றும் பெரிய இவரில்லை. அவர் ஒரு குப்பை என்பது என் அபிப்ராயம். அதனால் நான் தமிழனில்லை என சொல்ல யாருக்கு அதிகாரம் இருக்கிறது. அதனால் வந்த கோபம் தான்.

உங்கள் மனம் அதனால் கஷ்ட்ப்பட்டிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்

November 09, 2006 10:21 PM  
Blogger Sivabalan said...

கால்கரி சிவா அவர்களே

மீன்டும் வந்து தன்நிலை விளக்கம் தந்தமைக்கு நன்றி.

மன்னிப்பு தேவையில்லை. இது வெறும் கருத்து பரிமாற்றமே.

என் வருத்தத்தை சொன்னேன். அவ்வளவே.

புரிதலுக்கு நன்றி

November 09, 2006 10:27 PM  
Blogger உங்கள் நண்பன்(சரா) said...

கால்கரி சிவா அவர்களே,

//அதிக பின்னூட்டம்//
நானும் ரசித்த பின்னூட்ட்டம்,

சி.பா 50க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!

எங்கே செல்லும் இந்தப் பாதை...... யாரே யார் அறிவார்?....


அன்புடன்...
சரவணன்.

November 09, 2006 10:34 PM  
Blogger தருமி said...

ஜோ,
சினிமா பாட்டு வாசிக்க என் key board தரமாட்டேன், சாமி பாட்டு வாசிக்க மட்டும்தான் இது என்று சொல்லும் சில நண்பர்கள் எனக்குத் தெரியும். அதைவிட இது கொஞ்சம் betterதான். இவைகளைப் பார்த்துச் சிரித்துவிட்டு செல்லத்தான் வேண்டுமேயன்றி அவர்களது 'சுய நம்பிக்கைகள்' மீதோ, 'கொள்கைகள்' மீதோ நாம் ஏதும் தீர்ப்பெழுத முடியாது; கூடாது என்று நினைக்கிறேன்.

November 09, 2006 10:59 PM  
Blogger G.Ragavan said...

இளையராஜா என்ன சொன்னார் என்பதையே யோசித்துப் பார்க்காமல்...அல்லது தெரிந்து கொள்ளாமல் பிரபலமில்லாத ஒரு அரசியல்வாதியின் பேச்சை வைத்துக் கொண்டு முடிவுக்கு வருவதில் நமக்கு நிகர் நாமேதான்.

பெரியார் படத்திற்கு இசையமைப்பதோ மறுப்பதோ இளையராஜாவின் உரிமை. என்ன காரணங்களுக்காக அவர் மறுத்தாலும் அது அவருடையது. அதற்காக அவரைக் கீழ்த்தனமாகப் பேசுவதை விடக் கீழ்த்தனமான செய்கை இருக்க முடியாது.

இப்பொழுதெல்லாம் தன்னோடு கருத்துக்கு ஒருவர் ஒத்துவராவிட்டால் அவரைக் கீழ்த்தரமாகப் பேசுவதே பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலை மாறவேண்டும். எதிர்க்கருத்துடையவன் எதிரி என்ற நிலமை மாறியே தீர வேண்டும். மக்களே கொஞ்சம் மூளையையும் பயன்படுத்துங்கள்.

பெரியாரின் சாதி எதிர்ப்புக் கொள்கையில் எனக்கு முழுச் சம்மதமுண்டு. ஆனால் இறையெதிர்ப்புக் கொள்கையில் சம்மதமில்லை. அந்த வகையில் கூட இளையராஜா மறுத்திருக்கலாமே!

ஜோ, நீங்கள் கூடவா இவ்வளவு அவசரப்பட்டு பின்னூட்டம் இடுவது! வேண்டாம் ஜோ.

November 10, 2006 5:00 AM  
Blogger Muthu said...

இளையராஜா சிறந்த இசையமைப்பாளர் என்பதில் சந்தேகம் இல்லை.ஆனால் சில சமயம் பேத்துவார்.

பார்ப்பனர் ஆக கடுமையாக முயற்சி செய்கிறார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம்.

இதுபோல அடிக்கடி "கருத்து" சொல்லுவார்.சீரியஸாக எடுத்துக்கொள்ள தேவை யில்லை.அவருக்கு அதற்கு உரிமை உண்டு.

November 10, 2006 6:07 AM  
Blogger Muthu said...

சிவபாலன்,

நன்றாக வாங்கி கட்டுவது போல் தெரிகிறது:))

இசைஞானி ஒரு வாழும் வரலாறு.இசை பொறுத்தவரை அவர் ஞானி.மற்றபடி அவருடைய சிந்தனைகளையும் நாம் அவரது இசையை வைத்து மதிப்பிட்டு குழப்பி கொள்வது தான் பிரச்சினை.

(நடுவில் சர்வ சமாதானவாதிகளின் இம்சை வேறு)

November 10, 2006 6:16 AM  
Blogger Sivabalan said...

தலைவர் முத்துவின் வருகை புண் பட்ட மனதிற்கு மருந்து!!!

நன்றி!! நன்றி!!! நன்றி!!

November 10, 2006 7:24 AM  
Blogger thiru said...

சிவபாலன்,

முத்துவின் கருத்து தான் எனது கருத்தும். இசைஜானிக்கு தான் உருவாகி வந்த அரசியல் களம் இன்று இல்லை. அவரது நம்பிக்கைகள், அடையாளம் மாறியிருக்கிறது. இதற்கு அடையாளமாக பல நிகழ்வுகளை சுட்டலாம். அவரிடமிருந்து அளவில்லாத இசையை தவிர வேறு தளங்களை எதிர்பார்ப்பது மிகையானது

ஒரு சாரார் ஆதிக்கம் மட்டுமே இருந்த ஒர் துறையில் இன்றும் அசைக்கமுடியாது உயர்வாக நிற்கும் அவரது இசைத்திறன் போற்றக்கூடியது. அந்த விதத்தில் இசைத்துறையை மற்ற மக்களுக்கும் திறந்து வைத்த மகத்தான பங்கு இசைஞானிக்கு உண்டு.

November 10, 2006 7:37 AM  
Blogger ramachandranusha(உஷா) said...

//அவிங்க எல்லாம் நம் தாய்த் திருநாட்டிலும் சிங்கையிலும் அமீரகத்திலும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்//

குமரன் உள்ளேன் ஐயா! ஆமாம் படத்துக்கு பாட்டு யாருங்க வாலியா
:-)))))

முத்து, சர்வசமாதானவாதியா? யாரு அது????

November 10, 2006 7:40 AM  
Blogger Sivabalan said...

திரு

நீங்கள் சொலவதுபோல் இசை எனபது ஒரு குறிபிட்டவர்களுக்கு மட்டுமே சொந்தமானது என்ற நிலையை மாற்றியவர் இளையராஜா. நிச்சயம் பெரிய விசயமே..

ஆனாலும் அவர் இவ்வாறு செய்த்தது வறுத்தமளிக்கிறது. அதன் பாதிப்பே இப்பதிவு.

வருகைக்கு நன்றி

November 10, 2006 7:43 AM  
Blogger பூங்குழலி said...

///இளையராஜா செய்வது சரியா? //

சரியே..
வடமொழி தெரியாதவனுக்கு நான் இசை சொல்லித்தருவதில்ல என்று அவர் தேடிப்போன குருநாதர் துரத்திவிட, இளையராஜா அவர்கள் அவ்வடமொழியை கற்றுக்கொள்ள பட்டபாடு அவருக்குத்தான் தெரியும்.

அம்மொழியை கற்றபிறகே அவருக்கு மேற்கொண்டு இசை கற்றுத்தரப்பட்டது.
அவ்வேளையில் வெங்காயமோ அல்லது வெங்காயத்தின் அடிபொடிகளோ எத்துனை அளவு அவருக்கு உதவியிருப்பார்கள்...

இளையராஜாவின் இந்த முடிவு அவருடைய குருநாதர்களில் ஒருவருக்கான காணிக்கையாகவே கருதுகிறேன்.

(எல்லாம் கேள்வி ஞானம்தான், தவறிருந்தால் திருத்தவும்)

நன்றி...

November 10, 2006 8:15 AM  
Blogger Sivabalan said...

பாலா,

வருகைக்கு நன்றி

November 10, 2006 8:15 AM  
Blogger Sivabalan said...

Flemingo,

வருகைக்கு நன்றி

November 10, 2006 8:22 AM  
Blogger Sivabalan said...

சரவணன் (உங்கள் நண்பன்),

வந்துடீங்களா!! வாங்க!!

வருகைக்கு நன்றி

November 10, 2006 8:24 AM  
Blogger Sivabalan said...

தருமி அய்யா,

//இவைகளைப் பார்த்துச் சிரித்துவிட்டு செல்லத்தான் வேண்டுமேயன்றி //

மிகச் சரியாக சொன்னீங்க..

வருகைக்கு நன்றி

November 10, 2006 8:26 AM  
Blogger Sivabalan said...

நாத்திகன்

வருகைக்கு நன்றி

November 10, 2006 8:27 AM  
Blogger Sivabalan said...

ராகவன்,

//தன்னோடு கருத்துக்கு ஒருவர் ஒத்துவராவிட்டால் அவரைக் கீழ்த்தரமாகப் பேசுவதே //

நீங்கள் சொல்லும் கருத்து இரு தரப்பினருக்கும் பொருந்தும்!

வருகைக்கு நன்றி

November 10, 2006 8:29 AM  
Blogger Sivabalan said...

இராமசந்திரனுசா

வருகைக்கு நன்றி

November 10, 2006 8:31 AM  
Blogger Sivabalan said...

பூங்குழலி,

//(எல்லாம் கேள்வி ஞானம்தான், தவறிருந்தால் திருத்தவும்) //

Ha Ha Ha..

வருகைக்கு நன்றி

November 10, 2006 8:33 AM  
Blogger ✪சிந்தாநதி said...

//பெரியார் என்ன பெரிய கொம்பா? நான் அவமான படுத்துவேன். நான் தமிழனாக பிறந்ததற்கு யாருக்கு அவமானம்..உங்களுக்கா அல்லது அந்த வெண்தாடி வேஸ்ட் என்ற கன்னடருக்கா.

பெரியார் என்ன பெரிய இவரா? அவர் வாந்தது வாழ்க்கையாம் அதுக்கு ஒரு சினிமாவாம் அதுக்கு அரசாங்க உதவியாம் அதில் பணிபுரிய மறுத்தால் அவமானமாம்.....//

சிவா நீங்கள் இப்படிக் கூறாமலிருந்தால் தான் ஆச்சரியம் என்பது எனக்குத் தெரியும்.

பெரியார் நாத்திகத்தை உயர்த்திப்பிடிக்க என்ன காரணம் என்பது பற்றி தெளிவான ஒரு பதிவு அல்லது பின்னூட்டம் ஒருமுறை பார்த்திருந்தேன். சுட்டி கிடைத்தால் தருகிறேன்.

பெரியாரை உயர்த்திப்பிடிக்க யாருக்கும் அவரது நாத்திகக் கொள்கைகள் அவசியமேயில்லை. அவரை அவமானப் படுத்துவதால் யாருக்கு மகிழ்ச்சி என்பதும் இங்கு எல்லோருக்குமே தெரிந்தது தான்.

இவ்வளவு வெளிப்படையாக உங்கள் மனத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி.

November 10, 2006 8:55 AM  
Blogger Sivabalan said...

சிந்தாநதி,

வருகைக்கு நன்றி

November 10, 2006 9:02 AM  
Blogger ✪சிந்தாநதி said...

குமரன்

//எல்லா தமிழர்களும் பெரியாரை மதிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நாத்திகனில்லா மக்களும் (தமிழர், தமிழரல்லாதவர்) உண்டு. //

உண்மை...! ஆனால் பெரியாரைச் சிறுமைப்படுத்தி இளையராஜா அப்படிக் கூறியிருந்தால்... என்பதே நான் கூறியது. அவர் அல்லது வேறு யாரும் பெரியாரை மதித்தாக வேண்டிய கட்டாயம் இல்லவே இல்லை.

ஆனால் சிறுமைப் படுத்துபவரின் நோக்கம் அல்லது மனநிலை நிச்சயம் நேரானது இல்லை. அவர் சிறுமைப்படுத்தினாரா என்பது கணேசனின் கூற்றை வைத்து முடிவு செய்து விட முடியாதுதான். எனவேதான் இளையராஜா அப்படிச் சிறுமைப் படுத்தி இருந்தால்... என்று கூற நேர்ந்தது.

சிவா நேரடியாகவே நான் சிறுமைப்படுத்துவேன் என்கிறார்...

November 10, 2006 9:09 AM  
Blogger வரலாறு.காம் said...

தகவலுக்கு நன்றி சிவபாலன்!

ராஜா உண்மையாக என்ன சொன்னார் என்று யாராவது எங்கிருந்தாவது சுட்டி எடுத்துத் தரமுடியுமா?

அரசியல்வாதிகளின் பாராட்டு/தூற்றல்களையும் பத்திரிகைகளின் கிசுகிசுத்தனமான செய்திகளையும் வைத்து நாம் அடித்துக்கொள்வது, சிறுபிள்ளைகளின் விளையாட்டுச் சண்டையினால் பெற்றோர் சண்டையிட்டுக் கொள்வதைப் போன்றது.

இளையராஜா இதற்கு முன்பும் பல படங்களுக்கு இசையமைக்க மறுத்திருக்கிறார்.

கடவுள் மறுப்பு மட்டும்தான் பெரியாரின் கொள்கையா? அல்லது பெரியார் திரைப்படம் அவரது நாத்திகவாதத்தைப் பற்றியது மட்டும்தானா?

எது எப்படியிருப்பினும், இது இளையராஜாவின் தனிப்பட்ட முடிவு என்று விட்டுவிடவேண்டியதுதான்.

ராஜாவின் ரசிகன் என்ற முறையில், அவர் இசையமைக்காதது வருத்தமே. பாரதி ஒரு கவிஞர். அதனால் இசை முக்கியமானதாக இருந்தது. ஆனால் பெரியார் படத்துக்குப் பின்னணி இசையைத்தவிரப் பாடல்களுக்கு வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை. 'காமராஜ்' படத்தின் 'நாடு பார்த்ததுண்டா' போன்ற பாடல் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

நன்றி
கமல்
www.varalaaru.com

November 10, 2006 9:25 AM  
Blogger Sivabalan said...

கமல் (வரலாறு.காம்),

இது சம்பந்தமாக IndiaGlitz செய்தி வெளியிட்டுள்ளது. சுட்டி இங்கே..

http://www.indiaglitz.com/channels/tamil/article/26721.html

மற்றபடி இளையாராஜாவைப் பற்றி வேறு எங்கும் பார்க்கவில்லை.

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

November 10, 2006 9:34 AM  
Blogger Sivabalan said...

சொல்ல மறந்துட்டேன், இந்த செய்தியை நான் எடுத்தது மாலைமலர் 09-11-06.

நன்றி

November 10, 2006 9:35 AM  
Blogger கால்கரி சிவா said...

//இவ்வளவு வெளிப்படையாக உங்கள் மனத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி.
//

சித்தாந்தி,

எப்போதுமே என் கருத்துகளை வெளிப்படையாகவே சொல்லிவருகிறேன். என் உண்மையான பெயர் அட்ரஸ் போட்டோ போட்டு.

வெளிப்படையாக கருத்துகள் சொல்வது பெருமையோ அல்லது சிறுமையோ அல்ல.

என் கருத்துகளின் மீது எனக்கு அசையாத நம்பிக்கை உள்ளது ஆகையால் தான் வெளிப்படை.

அவர் தான் ஒரு சாதரணன் என சொல்லிட்டாரில்லே அவரே அப்படியே ஒதுக்கி வைக்க வேண்டியதுதானே முறை. (இல்லை அப்படி சொல்லி நெகட்டிவ் மார்கெட்டிங் செய்து தமிழ்தந்தை ஆனது தந்திரமா)

அதைவிட்டு அவர் பெரியார் (ஏன் ராமசாமி என சொன்ன ஒத்துக்க மாட்டாரா). தமிழகத்தின் தந்தை, அவரை அவமதித்தால் தமிழனின் அவமானம் அது கிது என உளறுபவர்கள் உள்ள மட்டும் என் வெறுப்பு தொடரும்

November 10, 2006 9:39 AM  
Blogger Sivabalan said...

இராசன்,

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

November 10, 2006 9:52 AM  
Blogger ✪சிந்தாநதி said...

சிவா நீங்கள் பெரியாரை அவமானப் படுத்தினாலும் சரி சிறுமைப் படுத்தினாலும் சரி அதைப்பற்றி எனக்கொன்றும் கவலை இல்லை.

ஆனால் இளையராஜா அப்படிச் செய்திருந்தால் அவரது ரசிகன் என்ற முறையில் எனக்கு கேள்வி கேட்க உரிமையுண்டு.

rasan சொன்னபடி அவர் நன்றி கொன்றவராகி விடக்கூடாதென்ற ஆதங்கம் எங்களுக்குண்டு.

November 10, 2006 10:01 AM  
Blogger ✪சிந்தாநதி said...

தந்தை என்பது எனக்கும் உடன்பாடில்லாத வாசகமே. ஆனால் பெரியார் என்பது பெரியவர் என்ற பொருளில் தான் வரும். இதையே கேலி பேசுமளவுக்கான வெறுப்பு?

November 10, 2006 10:07 AM  
Blogger நாமக்கல் சிபி said...

//ஆனால் இளையராஜா அப்படிச் செய்திருந்தால் அவரது ரசிகன் என்ற முறையில் எனக்கு கேள்வி கேட்க உரிமையுண்டு//

இது ரசிகர் மன்றம் வெச்சி பேர் சம்பாதிக்கிற நடிகர்களுக்கு வேணா சரியா இருக்கலாம். அவந்தான் நல்லா இல்லாத படத்தையும் 50 நாள் ஓட்டறானு நடிகர்கள் அவனுக்கு பயப்படனும்...

பாட்டு நல்லா இல்லைனா நாம யாராவது பாட்டு கேப்போமா? அது இளையராஜாவா இருக்கட்டும், தேவாவா இருக்கட்டும், ரகுமானா இருக்கட்டும்...

இளையராஜாவுக்கு பெரியாரால வாழ்வு வந்துச்சினு சொல்றது எந்த அளவுக்கு ஞாயம்னு யோசிக்கணும். அவருக்கு அந்த திறமை இல்லைனா யாராவது அவர் பாட்டை கேப்போமா?

அவருக்கு சரஸ்வதி தேவியாலதான் அந்த வாழ்வு வந்துச்சினு அவர் நம்பினால் அதை நம்மால் மாற்ற முடியாது. மாற்றவும் தேவையில்லை. அது அவர் நம்பிக்கை.

சரி... இளையராஜா இல்லைனா என்னங்க ரகுமான வெச்சி சூப்பரா பாட்டு போடுவோம்னு சொல்லுங்க... அது புத்திசாலித்தனம் :-)

அநேகமா படம் வந்ததுக்கப்பறம் அதை பார்க்காதவனெல்லாம் தமிழனில்லைனு சொன்னாலும் சொல்லுவாங்க ;)

November 10, 2006 10:20 AM  
Blogger இலவசக்கொத்தனார் said...

ஆஹா, என்னடா இது இவ்வளவு நேரம் ஆகிவிட்டதே, இந்த பதிவு இன்னும் கடவுள் நம்பிக்கை மற்றும் கடவுள் மறுப்பு என்ற தளத்தில் இருந்து தடம் மாறி சாதிச்சாயம் பூசிக்கொள்ளவில்லையே என்று அதிசயப்பட்டேன். (மற்றொரு பதிவு வரும் பொழுதே அந்தச் சாயத்தோடுதான் வந்தது.)

ராசன் வந்து அதைச் செய்து விட்டார். இப்படி எதற்குமே சாதிச்சாயம் பூசாமல் விவாதிக்க முடியாத அளவு இவ்வலையுலகு இருப்பது வெட்கக் கேடு. இப்பொழுது சாதி பற்றி பேசித் திரியும் பல பதிவுகளில் ஒன்றாகத்தான் இதுவும் மாறப் போகிறது. சாதிக் கொடியை தூக்கிப் பிடிக்கும் இரு பிரிவினரும் வருவார்கள். அதில் மகிழ்ச்சியடையும் அனைவரும் வந்து வேடிக்கை பார்க்கலாம்.

இப்படி எல்லா விவாதங்களுக்கும் Least Common Factor ஜாதிதான் என இருப்பது மிகவும் வருந்தத்தக்க நிலைதான். என்றைக்குதான் இது மாறி ஆரோக்கியமான விவாதங்களும் இடம் கிடைக்குமோ தெரியவில்லை. இதற்காக என்னை திட்ட ரெடியாகும் மக்களுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது - Dont waste your time. நான் அதற்கு பதில் சொல்வதற்கு பதில் அந்த நேரத்தில் மேலும் கொஞ்சம் படித்து விக்கிபசங்களுக்கு வரும் கேள்விகளுக்கு பதில் சொல்வேன். கொஞ்சமவது பிரயோஜனம் உண்டு. இங்கு இனி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நன்றி. வணக்கம்.

November 10, 2006 10:24 AM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

Periyar did remarkable things but
there is more to modernity and
social change than what he did.
After breaking away from Congress
he did not take part in the freedom
struggle.Still India won freedom.
If at all anything despite people
like him and Justice Party the freedom movement won.Ilayaraja's
brother was associated with the
left movement.They also contributed to social reform
and mobilised labour.After a point Neither Periyar Nor DK evinced any interest in mobilising the working class to build a strong trade union
movement.So many positive developments took place
not because of Periyar but despite
Periyar.Even if there was no Peiyar Illayaraja would have made his mark as a great musician. Stop worshipping Periyar
start thinking rationally.

November 10, 2006 10:28 AM  
Blogger ✪சிந்தாநதி said...

இந்த பதிவு இன்னும் கடவுள் நம்பிக்கை மற்றும் கடவுள் மறுப்பு என்ற தளத்தில் இருந்து தடம் மாறி சாதிச்சாயம் பூசிக்கொள்ளவில்லையே என்று அதிசயப்பட்டேன்.//

இதில் அதிசயம் எதுவுமில்லை. ஆத்திக நாத்திக விவாதமே சாதீய தளத்தில் தான் இங்கே உருவாகிறது.

இதிலும் இனி இரண்டு கட்சி கட்டலாம்.

November 10, 2006 11:05 AM  
Blogger Sivabalan said...

பாலாஜி (வெட்டிப்பயல்),

கருத்துக்கு நன்றி!

வருகைக்கு நன்றி!

November 10, 2006 11:23 AM  
Blogger Sivabalan said...

Ravi Srinivas Sir,

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

November 10, 2006 11:25 AM  
Blogger GiNa said...

//பார்ப்பனர் ஆக கடுமையாக முயற்சி செய்கிறார் என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம்.//

எங்கடா ஆரம்பிக்கலயேன்னு பாத்தேன்! அடுத்தது ராஜா என்பதை ராசா என்று மாற்றாவிட்டால் அவருக்கு தமிழ் பற்றில்லை. சுவரொட்டிகளில் அவர் பெயர் மேல் தார் பூச்சுவோம்/சாணி அடிப்போம்னு ஜல்லி... மன்னீக்கவும் சல்லி அடித்து ஒரு தேசிய நெடுஞாலையே போடுவீர்களே!

இசையமைப்பது அவர் தொழில்,கேவலம் ஒரு $1.5 ப்ர்கர் விக்கும் கடைகூட 'we reserve the right to refuse service' னு போர்டு வச்சுக்கறான், தமிழ்நாட்டில் அந்த உரிமைகூட்வா கிடையாது? இந்த ஜாட்டன்கள் தமிழனாக இருப்பதுதான் தமிழுக்கு பெருமையா?

November 10, 2006 11:28 AM  
Blogger Sivabalan said...

தெகா

தனிமனித சுதந்திரத்திற்கு நிச்சயம் மதிப்பளிக்கப்படும்.

ஆனால் இந்த விசயத்தில் இளையராஜாவின் நிலைப்பாடு ஆச்சரியமாக உள்ளது.

வேறு பல காரனங்களால் அதை செய்தார் என்பதற்கு செய்தி ஏதும் இல்லை. அப்படி கொள்வாமாயின் ஒரு நாத்திகவாதியின் படத்து இசை அமைக்க கூடாது என்ற நிலைப்பாடு ஒரு சிறந்த இசை அமைப்பாளரிடமிருந்து வருவது மக்களின் சிந்தனைகளில் கேள்விகள் எழுவது சாத்தியமே.

இதில் தனிமனித சிந்தனைகள் மேலூங்குவது சரியா? அல்லது பொது சிந்தனை மேலோங்குவது சரியா?

இது தான் என்மனதில் இருக்கும் கேள்வி! இதற்கு தாங்கள் நேரம் கிடைக்கும் போது விளக்கவும்.

நன்றி.

November 10, 2006 12:07 PM  
Blogger சீனு said...

//பெரியாரைச் சிறுமைப்படுத்தி இளையராஜா அப்படிக் கூறியிருந்தால் அது அவர் தமிழனாகப் பிறந்ததற்கே அவமானம்//
இதில் அவமானம் என்ன வேண்டியிருக்கு. இசை அமைப்பதும் அமைக்காததும் அவர் இஷ்டம். சரியான காரணம் தெரியாமல் எதற்கு பேச வேண்டும்? பெரியாரை ஏற்றுக் கொள்வதென்றால் 100% கொள்கைகளுக்கும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறுவீர்கள் போலிருக்கிறதே?

கல்காரி சிவா,
காரம் அதிகம்.

பெரியார் படத்திற்கு ராசா இசை இல்லாமல் இருப்பது ஒரு மைனஸ் தான். காரணம் அவர் இசையின் சக்தியை பாரதி, காமராசர் படத்தில் உணர்ந்தேன். ராசா தொழில் முறையிலேனும் இந்தப் படத்திற்கு ஒத்துக் கொண்டிருக்கவேண்டும். அவர் இல்லாதது என்னைப் போன்ற ரசிகனுக்கு ஏமாற்றமே.

//இதில் தனிமனித சிந்தனைகள் மேலூங்குவது சரியா? //
சரியில்லை என்பது என் கருத்து.

November 10, 2006 12:46 PM  
Blogger குமரன் (Kumaran) said...

//இதில் தனிமனித சிந்தனைகள் மேலூங்குவது சரியா? அல்லது பொது சிந்தனை மேலோங்குவது சரியா?
//

பொதுபுத்தியைப் பத்தி பேசறீங்களா?

November 10, 2006 1:04 PM  
Blogger Sivabalan said...

சீனு

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

November 10, 2006 1:09 PM  
Blogger Nakkiran said...

//பெரியாரைச் சிறுமைப்படுத்தி இளையராஜா அப்படிக் கூறியிருந்தால் அது அவர் தமிழனாகப் பிறந்ததற்கே அவமானம்//

வாவ்... செம டயலாக்...so.. தமிழன்னு சர்டிபிகேட் வாங்கனமுனா, பெரியாரை வணங்க வேண்டும்.. பெரியார புடிக்காதுன்னு சொன்னா அவன் தமிழனில்ல.. 7 கோடி தமிழரில் 70 இலட்சம் பேர் பெரியார் சொன்ன நாத்திகத்தை ஒப்புக்கொண்டிருந்தால் அதிகம்.. எனவே தமிழகத்தில் வசிக்கும் மிச்ச 6 கோடிக்கும் மேலான ஆத்திக தமிழ்மக்களே, நீங்கள் பெரியாரை மதிக்காமல் சாமி கும்பிடுவதால், உங்களை திராவிடர் கழகம் தமிழினில்லை என்று அறிவிக்கிறது...சூப்பரப்பு....

November 10, 2006 1:13 PM  
Blogger Sivabalan said...

குமரன் சார்

பொது புத்தி என்பதை சற்று மாற்றி சொன்னேன்.

அதாவது, மனிதனுக்கு தனது கருத்து அல்லது தனது சிந்தனை நிச்சயம் முக்கியம். ஆனால் பொது வாழ்க்கை என்று ஒவ்வொருக்கும் உண்டு. உதாரனத்திற்கு நீங்கள் உங்கள் சொந்தகளுடன் இருக்கும் போது.

அந்த சூழ்நிலைகளில் ஒரு தனிமனிதனின் சிந்தனை/ கருத்து மேலோங்குவது சரியா? அல்லது பொது கருத்து/சிந்தனை மேலோங்குவது சரியா?

(பிரச்சனைகளைப் பொருத்து மாறுபடும் என்பதை ஒப்புக் கொள்கிறேன்)

ஆனால் இது போன்ற பிரச்சனைகளில் எது மேலோங்க வேண்டும். (தனி மனித விருப்பம் வேறு. மனிதன் என்ற சமூக விலங்கிற்கு சொல்லுங்கள்).

மேலும் என் நிலைப்பாட்டை சொல்லிவிட்டால் உங்களுக்கு எடுத்துரைக்க எளிதாகிவிடும்.

என்னை பொருத்தவரையில் இப்பிரச்சனையில் பொதுவான கருத்து மேலோங்க வேண்டும்.

(பொது கருத்தில் பிரிவினை இருக்கத்தான் செய்யும். ஆனால் தன்னுடைய அறிவின் படியும் தான் சார்ந்த துறையின் படியும் எப்பொது கருத்தை எட்ட வேண்டும் என்று நிச்சயம் தெரியும்.)

November 10, 2006 1:22 PM  
Blogger Sivabalan said...

நக்கீரன்,

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி

November 10, 2006 1:40 PM  
Blogger வரலாறு.காம் said...

//According to Ilayaraja, ' I have a great respect for Periyar. Certain ideas of Periyar still holds relevant. However he was a known atheist. But my life is total contrast to the ideas and thoughts of Periyar. Hence I thought it would not be appropriate for me to work in the movie and more over I though I cannot do justice to my job'.//

இதுதான் உண்மையிலேயே ராஜா சொன்னது.

இல.கணேசனின் கருத்தை மீண்டும் படித்துப் பாருங்கள்.

//கோடி ரூபாய் கொடுத்தாலும் பெரியார் படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என்று அவர் கூறியதை நினைத்து பெருமைபடுகிறேன்.//

சிரிக்கத்தான் தோன்றுகிறது. குமரன் (Kumaran) சொல்வதுபோல், இளையராஜாவை இந்துத்துவாவில் அடக்கிவிட நடக்கும் முயற்சி என்றே எண்ணத் தோன்றுகிறது.

நன்றி
கமல்
www.varalaaru.com

November 10, 2006 5:25 PM  
Blogger BadNewsIndia said...

Sivabalan,

நீங்க செஞ்ச தப்பு, இல.கணேசன் சொன்னத மட்டும் போட்டது.

controversy create பண்ணனும்னா நம்ம ஆளுங்களுக்கு சொல்லித்தரணுமா.

ராஜா சொன்னது இதுவாம் (இணையத்தில் உருவியது)

"According to Ilayaraja, ' I have a great respect for Periyar. Certain ideas of Periyar still holds relevant. However he was a known atheist. But my life is total contrast to the ideas and thoughts of Periyar. Hence I thought it would not be appropriate for me to work in the movie and more over I though I cannot do justice to my job'."


மனசுக்கு முழுசா பிடிக்காத வேலை செய்யாமல் இருத்தலே நல்லது.

அன்று 'நேத்து ராத்திரி யம்மா' மனசுக்கு புடிச்சா போட்டாரு?' -- இது மடக் கேள்வி.

மனிதன் வயது ஆக ஆக, அனுபவமும் கண்ணோட்டங்களும் மாறும். இன்றைய நிலையில் அவர் இப்படி நினைப்பது சரிதான்.

ரஜினி,மணிரத்னம்,பாலசந்தர் படத்துக்கு கூடத்தான் அவரு போட மாட்டேன்னு சொல்லிட்டாராம். அதுவும் தப்பா?

ஞானி ய தனியா அவர் இஷ்டத்துக்கு விடுங்க.
ஆனா, பெரியார் படத்துக்கு மிகப் பெரிய நட்டம் தான் இது.
வித்யாசாகரும் ஒண்ணும் மோசம் இல்ல. நல்லாதான் இருக்கு அவர் பாட்டும்.

November 10, 2006 6:34 PM  
Blogger BadNewsIndia said...

இதுலயும் தலித், உயர் ஜாதி, தமிழனுக்கு அவமானம், பெரியார் தாக்குதல், தொழில் தர்மம் மீறல் என்றெல்லாம் சரமாரியா சுத்தி சுத்தி அடிக்கராங்களே.
அடேயப்பா, நமக்குள் தான் எவ்வளவு திறமைகள்.

பாவம்யா ராசா. தனியா விடுங்க அவர. ரொம்ப கோபப்பட்டு இனி இசையே அமைக்க மாட்டேன்னு சொல்லிட்டா, எங்கள்ள கொஞ்சம் பேரு காத அறுத்து காக்காய்க்கு தான் போட வேண்டியிருக்கும்.

ஷ்ஷ்ஷ்.

November 10, 2006 6:42 PM  
Blogger SP.VR. SUBBIAH said...

// Ilavasakkothanaar Said: காரணம் என்னவாக இருந்தாலும் இது ஒரு தனிமனிதரின் முடிவு. அதனை விமர்சிக்க தேவையும் இல்லை, அதனால் நாம் சாதிக்க போவதும் ஒன்றுமில்லை.

உங்களுக்கு அவர் செய்கை பிடிக்கவில்லை என்றால் அது கட்டாயம் உங்கள் உரிமை.நீங்கள் அவர் பாடல்களை கேட்காமல் புறக்கணிக்கலாம். அது உங்கள் உரிமை. ஆனால் அதற்காக அவர் செய்தது தவறு எனச் சொல்ல நமக்கு எந்த உரிமையும் கிடையாது. இதுதான் நான் சொல்ல வந்தது.//

இளையராஜா, இசைஞானி என்பதில் எப்படி இரண்டாவது கருத்திற்கு இடமில்லையோ, அதேபோல அவர் விருப்பமில்லை என்று சொன்னதை விமர்சிப்பதற்கும் யாருக்கும் உரிமை இல்லை.அது தனி மனித சுதந்திரம்.அதை அனைவரும் உணர்வது நல்லது!

November 10, 2006 7:12 PM  
Blogger ✪சிந்தாநதி said...

//ஆத்திக தமிழ்மக்களே, நீங்கள் பெரியாரை மதிக்காமல் சாமி கும்பிடுவதால்,//
நக்கீரன் சார் பெரியாரை மதிப்பதற்கு அவர் கொள்கைகளை எல்லாமே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. நான் நாத்திகனுமில்லை.

நான் ராஜாஜியை மதிக்கிறேன். அதற்காக அவரது கொள்கைகளை ஏற்றுக் கொள்கிறேன் என்று அர்த்தமல்ல.

பெரியாரின் கொள்கைகள் பிடிக்கவில்லையா அதை விமர்சிக்கும் உரிமை எல்லோருக்குமே உண்டு. இங்கே நான் சொல்ல வந்த விஷயமே வேறு. பலரும் அதை திசைமாற்றி எங்கெங்கோ எடுத்துச் செல்கிறீர்கள்.

November 10, 2006 7:31 PM  
Blogger ✪சிந்தாநதி said...

//விமர்சிப்பதற்கும் யாருக்கும் உரிமை இல்லை.அது தனி மனித சுதந்திரம்.அதை அனைவரும் உணர்வது நல்லது!//

இங்கே விவாதம் தொடங்கியதே இளையராஜா சொன்னதை வைத்தல்ல. இல கணேசன் தன் கொள்கைகளை தூக்கிப் பிடிக்க இளையராஜாவின் இந்த செய்கையை பயன்படுத்திக் கொண்டதில் தான் ஆரம்பித்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதே உரிமையில் தான் இங்கே விவாதமும் நடக்கிறது. இளையராஜாவின் முடிவில் நேரடியாக யாரும் விமர்சனம் செய்யவில்லை. ஆனால் இல கணேசன் அதைத் தூக்கிப் பிடித்த விதம், தொனி வேறுபட்டது. அதிலிருந்து தான் இந்த விவாதம் ஆரம்பிக்கிறது. இதில் இளையராஜாவின் சுதந்திரமும் விமர்சிக்கப் படுவது தவிர்க்க முடியாத்து.

November 10, 2006 7:40 PM  
Blogger Udhayakumar said...

enna ithellam?

November 10, 2006 8:06 PM  
Blogger Udhayakumar said...

naanthaan 100...

November 10, 2006 8:07 PM  
Blogger பெத்தராயுடு said...

நூத்தியொண்ணாய நமஹ...

November 10, 2006 8:30 PM  
Blogger Muthu said...

என்ன சொல்கிறோம் என்று புரியாமலே தன் அறியாமையை வெளிகாட்டிய பிளமிங்கோ(என்னய்யா அர்த்தம்?) அவர்களுக்கு நன்றி.

November 10, 2006 8:54 PM  
Blogger லொடுக்கு said...

இலவசக்கொத்தனார் said...

உங்களுக்கு அவர் செய்கை பிடிக்கவில்லை என்றால் அது கட்டாயம் உங்கள் உரிமை.நீங்கள் அவர் பாடல்களை கேட்காமல் புறக்கணிக்கலாம். அது உங்கள் உரிமை. ஆனால் அதற்காக அவர் செய்தது தவறு எனச் சொல்ல நமக்கு எந்த உரிமையும் கிடையாது. இதுதான் நான் சொல்ல வந்தது.

அப்போ அவர் செய்தது 'சரி' என்று சொல்ல மட்டும் உங்களுக்கு எங்கிருந்து வந்தது உரிமை?

November 10, 2006 10:41 PM  
Blogger GiNa said...

This comment has been removed by a blog administrator.

November 10, 2006 10:46 PM  
Blogger GiNa said...

அறிவாளி முத்து (தமிழினி) (இதுக்கு என்னய்யா அர்த்தம்?)

உங்கள் பதிவை மீண்டும் ஒருமுறை படித்ததில் ஒன்று புரிந்தது:

//இதுபோல அடிக்கடி "கருத்து" சொல்லுவார்.சீரியஸாக எடுத்துக்கொள்ள தேவை யில்லை.அவருக்கு அதற்கு உரிமை உண்டு.//

இந்த உரிமையை தங்களுக்கும் நான் அளிக்கிறேன் :D

November 10, 2006 11:04 PM  
Blogger இலவசக்கொத்தனார் said...

..அப்போ அவர் செய்தது 'சரி' என்று சொல்ல மட்டும் உங்களுக்கு எங்கிருந்து வந்தது உரிமை?..

அவர் செய்வது அவர் விருப்பம் அது சரி என்றோ தவறென்றோ தீர்ப்பு சொல்ல நமக்கு எந்த வித உரிமையும் கிடையாது.

இப்ப சரியா லொடுக்கு சார்.

November 10, 2006 11:04 PM  
Blogger Muthu said...

//அறிவாளி முத்து (தமிழினி)//

நன்றி...


//உங்கள் பதிவை மீண்டும் ஒருமுறை படித்ததில் ஒன்று புரிந்தது://

பதிவா? பின்னூட்டமா? என்னய்யா சொல்ல வர்றே?

//இந்த உரிமையை தங்களுக்கும் நான் அளிக்கிறேன் :D//

தன்யனானேன்...

நான் முன்பே சொன்னதை மீண்டும் மீண்டும் நிரூபிப்பதற்கு நன்றி :))

November 10, 2006 11:19 PM  
Blogger டிபிஆர்.ஜோசப் said...

இப்பொழுதெல்லாம் தன்னோடு கருத்துக்கு ஒருவர் ஒத்துவராவிட்டால் அவரைக் கீழ்த்தரமாகப் பேசுவதே பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. இந்நிலை மாறவேண்டும். எதிர்க்கருத்துடையவன் எதிரி என்ற நிலமை மாறியே தீர வேண்டும். மக்களே கொஞ்சம் மூளையையும் பயன்படுத்துங்கள்.//

Well Said ராகவன்..

November 10, 2006 11:25 PM  
Blogger டிபிஆர்.ஜோசப் said...

சிவபாலன்,

ஒங்க பதிவுல இருக்கறதவிட வந்த பின்னூட்டங்கள்லருந்து இளையராஜாவைப் பற்றியும் பெரியார் என்ன செய்தார், செய்யவில்லை என்பதைப் பற்றியும் நிறையவே தெரிந்துக்கொள்ள முடிந்தது!

அதற்கு உங்களுக்கு நன்றி

November 10, 2006 11:28 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

//அவரது ரசிகனாக வெட்கப்படுகிறேன்//

//புண் பட்ட மனதிற்கு//

பெரியார் ஆதரவாளர்களே,
எதற்காக வெட்கப்படவேண்டும், மனம் புண்படவேண்டும்? இளையராஜாவின் முடிவில் அதிர்ச்சியடைய ஏதுமில்லை. எதிலுமே அளவுக்கு அதிகமாக நம்பிக்கை வைத்தால் அந்த நம்பிக்கை சிதறும்போது அதிர்ச்சியடையத்தான் செய்யும். அவருடைய பிறப்பை மட்டும் வைத்து அவரிடம் பெரியார் பற்று இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அவர் பிராமணீயத்தை முழுமையாக உள்வாங்கிக்கொண்ட நவபிராமணர். ஆகவே அவர் செயலை நினைத்து புலம்புவதை நிறுத்துவதே நீங்கள் பெரியாருக்கு செய்யும் மரியாதை. பெரியாரின் வாழ்க்கையை சினிமாவாக எடுப்பதிலோ அதற்கு இளையராஜா இசையமைப்பதால் மட்டுமே அவருடைய கருத்துக்கள் நிலைபெறப்போவதில்லை.

ஏதோ இல. கணேசனுக்கும், அவரையொத்தவர்களுக்கும் மெல்ல அவல் கொடுத்திருக்கிறார். அவர்கள் அசைபோட்டு ருசிக்கவிடுங்கள்.

November 10, 2006 11:49 PM  
Blogger ரவி ஸ்ரீநிவாஸ் said...

அவர் பிராமணீயத்தை முழுமையாக உள்வாங்கிக்கொண்ட நவபிராமணர்.

means what.

November 11, 2006 12:03 AM  
Blogger குழலி / Kuzhali said...

//அவருடைய பிறப்பை மட்டும் வைத்து அவரிடம் பெரியார் பற்று இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது. அவர் பிராமணீயத்தை முழுமையாக உள்வாங்கிக்கொண்ட நவபிராமணர். //

இந்த பதிவையும் அதிலுள்ள எல்லா பின்னூட்டங்களையும் பொறுமையாக படித்தேன், என் கருத்து எங்கே எதிலே பச்சக்கென்று ஒத்துவருகின்றது என்று பொறுமையாகவே படித்தேன், மேற்கண்ட வரிகள் நீண்ட காலமாக இளையராசா மீது எனக்கு இருந்த கருத்தை அப்படியே கூறியது. இங்கே இளையராசா மட்டுமல்ல, பலரும் நவீன பிராமணர்களாக மாறத்தான் துடிக்கிறார்கள்.

November 11, 2006 12:46 AM  
Blogger ஜோ/Joe said...

//"According to Ilayaraja, ' I have a great respect for Periyar. Certain ideas of Periyar still holds relevant. However he was a known atheist. But my life is total contrast to the ideas and thoughts of Periyar. Hence I thought it would not be appropriate for me to work in the movie and more over I though I cannot do justice to my job'."//

இது தான் இளையராஜா சொன்னதென்றால் இதில் எந்த தவறும் இல்லை .இங்கே நடந்த விவாதம் இளையராஜா சொன்னதாக இல கணேசன் சொன்னது உண்மையாக இருந்தால் என்னும் அடிப்படையுல் நடைபெற்றது என நம்புகிறேன் . அந்த வகையிலே என் கருத்தை சொன்னேன் .

ராகவன் இதை புரிந்து கொள்வார் என நம்புகிறேன் .ராஜாவின் ரசிகனாக அவர் சொன்னதாக கணேசன் சொன்னது ,அதற்கு கொள்கை என்பதாகவும் ,இதுவரை இளையராஜா அவரின் கொள்கை சார்ந்த பாடல்களுக்கே இசையமைத்தது போலவும் காட்டப்பட்டது தான் அதிச்சி .."கோடி கொடுத்தாலும்..." என்றெல்லாம் இல கணேசன் சொன்னது இடுகட்டிய பொய்யாக இருக்கும் பட்சத்தில் மகிழ்ச்சி.

November 11, 2006 1:57 AM  
Blogger Hariharan # 03985177737685368452 said...

பெனாத்தல் சுரேஷின் இதே மாதிரி இளையராஜா சர்ச்சைப்பதிவில் இட்ட எனது கருத்தையே இங்கும் வைக்கிறேன்!

//இளையராஜாவை நேர்மையாகச் செலுத்துவது அவரது தீவிரமான ஆன்மீக ஈடுபாடு.

செய்வனத்திருந்தச் செய்ய இயலாது என்பதாலேயே இசையமைக்க இயலாது என்று முடிவெடுத்திருக்கிறார்!

நேர்மை பிசகிய முடிவாக இதைக்காண வேண்டியதில்லை! இளையராஜாவை அவ்வளவு எளிதில் குறைகூறிவிட அவரை விமர்சிக்கும் எவர்க்கும் அவரளவுக்கு நேர்மை கிடையாது!//

November 11, 2006 2:06 AM  
Blogger Sivabalan said...

//But my life is total contrast to the ideas and thoughts of Periyar.//

இதுக்கு அர்த்தம் எப்படி எடுத்துக் கொள்வது? இந்த ஐடியாலஜியினால் தான் இசைக்க மறுக்கிறேன் என்கிறார்.
இதனால் தொழிலுக்கு நீதி பயக்க முடியாது என்கிறார்?

இதை தான் நான் குற்றம் சாட்டுகிறேன்.

அவ்வளவே.

ராகவன், நீங்க இதற்கு நேரம் கிடைக்கும் போது விளக்கம் கொடுங்க..

November 11, 2006 10:53 AM  
Blogger Sivabalan said...

சிந்தாநதி,

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

November 11, 2006 11:30 AM  
Blogger Sivabalan said...

Bad News India,

உங்கள் கருத்துக்கு நன்றி

வருகைக்கு நன்றி

November 11, 2006 11:33 AM  
Blogger Sivabalan said...

SP.VR.SUBBIAH அய்யா,

என்ன உங்க பதிவுகள் இப்ப எதும் வருவதில்லையே!! ரொம்ப பிஸியா?

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி

November 11, 2006 11:36 AM  
Blogger Sivabalan said...

உதய்,

இங்கே என்ன நடக்கிறது என்று எனக்கும் தெரியல.. Ha Ha Ha...

நூறாவது பின்னூடத்திற்கு நன்றி.

வருகைக்கு நன்றி

November 11, 2006 11:39 AM  
Blogger Sivabalan said...

பெத்த ராயுடு,

நூற்றிஒன்னாவது பின்னூடத்திற்கு நன்றி.Ha Ha Ha

வருகைக்கு நன்றி

November 11, 2006 11:41 AM  
Blogger Sivabalan said...

லொடுக்கு,

உங்கள் கருத்துக்கு நன்றி

வருகைக்கு நன்றி

November 11, 2006 11:42 AM  
Blogger Sivabalan said...

tbr.joseph அய்யா,

உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்ற

November 11, 2006 11:44 AM  
Blogger Sivabalan said...

மு. சுந்தரமூர்த்தி,


உங்கள் கருத்துக்கு நன்றி

வருகைக்கு நன்ற

November 11, 2006 11:45 AM  
Blogger Sivabalan said...

குழலி,

Ha Ha Ha..

கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

November 11, 2006 11:47 AM  
Blogger Sivabalan said...

Hariharan # 26491540,

உங்கள் கருத்துக்கு நன்றி

வருகைக்கு நன்றி

November 11, 2006 11:51 AM  
Blogger Sivabalan said...

நம்பி,

உங்கள் கருத்துக்கு நன்றி

வருகைக்கு நன்றி

November 11, 2006 11:53 AM  
Blogger BadNewsIndia said...

Sivabalan,

innum mudiyalayaa idhu?

////But my life is total contrast to the ideas and thoughts of Periyar.//
இதுக்கு அர்த்தம் எப்படி எடுத்துக் கொள்வது? இந்த ஐடியாலஜியினால் தான் இசைக்க மறுக்கிறேன் என்கிறார்.
இதனால் தொழிலுக்கு நீதி பயக்க முடியாது என்கிறார்?
இதை தான் நான் குற்றம் சாட்டுகிறேன்.
//

Why are you finding fault with what Raja said. He is clearly saying that he is not comfortable with some of Periyars thoughts. So, he cannot fully commit himself in giving a good composition for periyar.

for instance, if you are asked to give a speech about the good deeds of your manager who has a past history of sabotaging your close friends career. Will you be comfortable in giving that speech?

November 11, 2006 2:03 PM  
Blogger Sivabalan said...

Bad News India,

If I am a professional I should be always a professional to my profession. This what I have been taught & read.

If this is wrong, I do not have anything to discuss about it.

BTW, I am interested to know, who are the FRIENDS to Ilayaraja? Ha Ha Ha...

Just Kidding Man..

November 11, 2006 5:05 PM  
Blogger மு. சுந்தரமூர்த்தி said...

ravi srinivas asks "அவர் பிராமணீயத்தை முழுமையாக உள்வாங்கிக்கொண்ட நவபிராமணர் means what."

... means "wannabe Brahmin" a la "Oreo cookie" Black.

November 11, 2006 6:15 PM  
Blogger BadNewsIndia said...

Sivabalan,

//If I am a professional I should be always a professional to my profession. This what I have been taught & read.//

You are right. But, when I think I cant perform my profession to the best of my abilities for any reason, its apt to stay away from it.

ஆனாலும், 'கடமையை செஞ்சிருக்கலாம்'.
அவரும் அப்படிதான் நெனச்சிருப்பாரு.
அதுக்கப்பறம் வரும் விமர்சனத்துக்கு பயந்து ஒதுங்கி இருப்பாரு.

November 11, 2006 6:44 PM  
Blogger aathirai said...

//ரஜினி,மணிரத்னம்,பாலசந்தர் படத்துக்கு கூடத்தான் அவரு போட
மாட்டேன்னு சொல்லிட்டாராம். அதுவும் தப்பா? //
மணிரத்னம், வைரமுத்து கோஷ்டி இளையராஜாவை ஒழிக்கவே
ரகுமானை கொண்டு வந்தார்கள். அது போல ஏதாவது
பின்னனி அரசியல் இருக்கும். அது புரியாதவரை
100 blind men or 131 blind men describing the elephantதான்.

இந்த படத்துக்கு பாடலாசிரியர் யார்?

November 11, 2006 8:01 PM  
Blogger aathirai said...

லேட்டஸ்டாக குமுதம் ரிபோர்ட்டரில் ராஜா முதலில்
இந்த படத்துக்கு இசையமைக்க ஒப்புகொண்டதாகவும்
இடையில் தான் 'கடவுள் இல்லை' என்ற பாடலை
இசையமைக்க மறுத்து கழண்டுகொண்டதாக
போட்டிருக்கிறது. இவர் ஏறி வந்த ஏணியை உதைத்தார்
என்றெல்லாம் திட்டுவது சரியில்லை.

November 11, 2006 8:21 PM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

சிபா,

புனித பிம்பங்கள் இளையராஜாவை இசை அமைப்பாளர் என்று சொன்னால், 'தாரை தப்பட்டை அடிக்கிறவன் இசை அமைப்பாளாரா ? இவன் இசை ஞானியா ? என ஒரு காலத்தில் முகம் சுளித்தார்கள்.

பல புனித பிம்பங்கள் இளையராஜாவை திடீரென ஆதரரிப்பதற்கு இரண்டு முக்கிய காராணம் உண்டு.

1. பாஜக இல கனேசனே இளையராஜாவின் 'செயலுக்கு' மனம் திறந்து பாராட்டியது.

2. '*பெரியார்*' படத்துக்கு இளையராஜா இசை அமைக்க மறுத்தது.

இளையராஜா திடீரென்று ஞானம் பெற்றதாக தெரியவில்லை. புனித பிம்பங்களே இளையராஜா பற்றி இந்த சர்சைக்கு பிறகு ஞானம் அடைந்துள்ளார்கள் !

November 11, 2006 8:35 PM  
Blogger குமரன் (Kumaran) said...

கோவி.கண்ணன் ஐயா. மறைமுகமாக புனித பிம்பங்கள் என்று சொல்லாமல் யாரை யாரை அப்படி சொல்கிறீர்கள் என்று நேரடியாகவே சொல்லுங்களேன். நானும் தெரிந்து கொள்கிறேன் யார் யார் புனித பிம்பம் என்று.

November 11, 2006 8:48 PM  
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

//But my life is total contrast to the ideas and thoughts of Periyar.//

இதுக்கு அர்த்தம் எப்படி எடுத்துக் கொள்வது? இந்த ஐடியாலஜியினால் தான் இசைக்க மறுக்கிறேன் என்கிறார்.
இதனால் தொழிலுக்கு நீதி பயக்க முடியாது என்கிறார்?

இதை தான் நான் குற்றம் சாட்டுகிறேன்.
அவ்வளவே.
ராகவன், நீங்க இதற்கு நேரம் கிடைக்கும் போது விளக்கம் கொடுங்க..
//

சிவபாலன்,
எடுத்துக்காட்டுக்காகச் சொல்கிறேன்; வாழ்ந்து மறைந்த ஆன்மிகப் பெரியவர் (எம்மதம் ஆயினும் சரி) ஒருவரின் படத்துக்குத் தாங்கள் பாடல் எழுத வேண்டும் என்று கவியரசர் வைரமுத்து அவர்களைக் கேட்டு,
அவரும் தான் எழுதுவது அவ்வளவு சரியாக இராது என்று சொன்னால்,
அதை நாம் எப்படி எடுத்துக் கொள்வோம்?

1.
"ஐடியாலஜி காரணமாகத் தொழிலுக்கு நீதி பயக்க முடியாது" என்பது குற்றமா?
2.
குற்றம் தான் என்றால், அனைத்து தொழில்களுக்குமா? (உயிர் காக்கும் தொழில்கள், உணவு இவற்றை விட்டு விடலாம்)

இதற்குத் தனி விவாதம் தேவை! நீங்க தான் மனசு வைக்கணும்; தெளிவு பிறக்கும்! :-)

November 11, 2006 9:01 PM  
Blogger Kannabiran, Ravi Shankar (KRS) said...

////கோடி ரூபாய் கொடுத்தாலும் பெரியார் படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என்று அவர் கூறியதை நினைத்து பெருமைபடுகிறேன்.//

நான் பணத்தைப் பாக்கவில்லை; என்னால் அல்லது என் இசையால், ஒரு வரலாற்றுப் படம் சுவை குன்றி விடக் கூடாது என்ற பொருளில் இசை ஞானி சொல்லியிருந்தால்...சரி என்று விட்டு விடலாம்.

இல்லை, கொள்கைச் செருக்கால் சொல்லி இருந்தால்...என்ன செய்வது?

எப்படியும் இளையராஜா இதுக்கு வந்து இன்னொரு விளக்கம் கொடுக்கும் வரை,
"புனித பிம்பங்களும்" ஓயப் போவதில்லை; பெரியார் பற்றாளர்களும் ஒயப் போவதில்லை;

//குமரன் (Kumaran) சொல்வதுபோல், இளையராஜாவை இந்துத்துவாவில் அடக்கிவிட நடக்கும் முயற்சி என்றே எண்ணத் தோன்றுகிறது//

பாவம் இசைஞானி!
இந்துத்துவாவா? இசையா??
கடவுள் மறுப்பா? கானமா??
அடக்கிவிட நடக்கும் முயற்சியில், அன்னக்கிளி என்னப் பாடுபடுப் போகிறதோ???

November 11, 2006 9:21 PM  
Blogger கோவி.கண்ணன் [GK] said...

//குமரன் (Kumaran) said...
கோவி.கண்ணன் ஐயா. மறைமுகமாக புனித பிம்பங்கள் என்று சொல்லாமல் யாரை யாரை அப்படி சொல்கிறீர்கள் என்று நேரடியாகவே சொல்லுங்களேன். நானும் தெரிந்து கொள்கிறேன் யார் யார் புனித பிம்பம் என்று.
//

குமரன்,

மறைமுக சொல்லவில்லை, பலரும் பயன்படுத்தும் சொல்லாடல் தான். திராவிட ராஸ்கல், திராவகம், வந்தேறிகள், நடுநிலை வாந்தி என்பது போல் இடத்துக்கு தக்கவாறு பயன்படுத்துகிறார்கள். 'புனித பிம்பம்' என்ற வார்த்தை என்னையும் குறிக்கும் சில இடங்களில்.

பட்டமெல்லாம் சிறப்பு தகுதியின் அடிப்படையில் தற்காலிமாக வழங்கப்படுவது. பெயர் குறிப்பிட்டு பட்டயமாக எழுதி தரச்சொன்னால் எப்படி ? அப்பறம் அந்த பட்டம் தங்களுக்கே உரித்தது என்று உரிமை கோரல் வந்துவிடாதா ?

அடைமொழி சொனால் அனுபவிக்கனும் ஆராயக் கூடாது
:)

November 11, 2006 10:31 PM  
Blogger அருண்மொழி said...

இசை ஞானிக்கு வேறு கோபம் இருக்கலாம் அல்லவா? அதை ஏன் யாரும் யோசிக்கவில்லை. பணமுடை இருந்த நேரத்தில் பெரியார் திடல்காரர்கள் அவருக்கு கடன்கொடுக்க மறுத்துவிட்டார்கள். அதனால்தான் அவர் மறைமுகமாக ஒரு கோடி கொடுத்தாலும் என்று கோடி காட்டியுள்ளார்.

பெரியார் திரைப்படம் சுமார் 80-90 விழுக்காடு முடிவடைந்து விட்டது. சென்ற வாரம் புதன் முதல் சனி வரை மலேசியாவில் படப்பிடிப்பு நடந்தது. மலேசியாவின் மூத்த அரசியல்வாதி திரு. டத்தோ. சாமிவேலு அவர்கள் படப்பிடிப்பினில் கலந்து கொண்டு திரைப்பட கலைஞர்களுக்கு விருந்தளித்து சிறப்பித்தார். படத்தினை டிசம்பர் மாதத்தில் வெளியிட முழு மூச்சில் வேலைகள் நடந்து வருகின்றது.

November 11, 2006 11:36 PM  
Blogger Sridhar V said...

ஆஹா... அடுத்த hot topic ஆரம்பிச்சிடுச்சிப் போல... இன்னும் எத்தனைப் பதிவுகளோ...


எனக்கு இசையைப் பற்றி அவ்வளவு வாதம் செய்யும் அளவுக்கு ஞானம் கிடையாது. ஆனால் இளையராஜா தமிழ் சினிமா இசையின் அடையாளமாக அறியப்பட்டவர். தமிழ்த் திரையுலகத்தைத் தாண்டி பற்ப்பல முயற்சிகளை மேற்கொண்டவர்.

'கடவுள்' படத்திற்கு இசையமைத்த பொழுதே அவரிடம் இதே கேள்வி கேட்கப்பட்டது. மழுப்பலாகத்தான் பதில் சொல்லியிருந்தார். கடவுள் மறுப்புக் கொள்கையை தீவிரமாக எதிர்ப்பவராக இருந்தால் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக தங்களைப் பிரகடனப் படுத்திக்கொண்ட கலைஞர்களின் படங்களை (கமல், சத்யராஜ், மணிரத்னம் போல) அவர் புறக்கணித்திருக்க வேண்டும். அதாவது அப்படிப்பட்ட வாய்ப்புகள் வந்து அதை அவர் கொள்கை விரோத செயலாக அடையாளம் கண்டு மறுத்திருக்கிறாரா என்பது கேள்விக்குறிதான். இதுவரை அப்படி செய்திகள் நான் படித்தது இல்லை.

பெரியார் படத்தை அவர் நிராகரிக்க அவசியம் என்ன வந்தது?

இனி அவரின் எதிர்கால முடிவுகள் இந்த ஒரு முடிவின் அடிப்படையில் புரியப்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

அவர் செய்தது சரியா தவறா என்ற கேள்வியை விட அது முதிர்ச்சியானதா இல்லையா என்றுப் பார்க்கலாம். அப்படிப் பார்த்தால் ஏதோ உணர்ச்சிவசப்பட்ட அறிவிப்பு மாதிரிதான் தோன்றுகிறது.

November 11, 2006 11:50 PM  
Blogger G.Ragavan said...

// முத்து(தமிழினி) said...
(நடுவில் சர்வ சமாதானவாதிகளின் இம்சை வேறு) //

அதான முத்து. சமாதானம் வர விடலாமா! :-)))))))))))


// Sivabalan said...
ராகவன், //தன்னோடு கருத்துக்கு ஒருவர் ஒத்துவராவிட்டால் அவரைக் கீழ்த்தரமாகப் பேசுவதே // நீங்கள் சொல்லும் கருத்து இரு தரப்பினருக்கும் பொருந்தும்! //

நிச்சயமாக சிவபாலன். இது இரு தரப்பினருக்கும் பொருந்தும். கொஞ்சம் அறிவோடு சிந்திக்கிறோம் என்று நினைக்கின்றவர்களாவது இதிலிருந்து வெளியே வரவேண்டும். இல்லையென்றால் இருதரப்பிற்கும் வேறுபாடே இல்லாமல் போய் விடும்.

// ஜோ / Joe said...
இது தான் இளையராஜா சொன்னதென்றால் இதில் எந்த தவறும் இல்லை .இங்கே நடந்த விவாதம் இளையராஜா சொன்னதாக இல கணேசன் சொன்னது உண்மையாக இருந்தால் என்னும் அடிப்படையுல் நடைபெற்றது என நம்புகிறேன் . அந்த வகையிலே என் கருத்தை சொன்னேன் .

ராகவன் இதை புரிந்து கொள்வார் என நம்புகிறேன் . //

ஜோ, உங்களது நடுநிலமை பல பதிவுகளிலும் பின்னூட்டங்களிலும் நான் அறிந்ததே. முழுமையாக தெரியாத ஒரு செய்தியை வைத்து....அதுவும் ஒரு அரசியல்வாதியின் சொற்களை வைத்து அவசரப்பட்டு விட்டீர்களே என்பதுதான் என் வருத்தம். மற்றபடி ஜோ அதே பழைய ஜோதான். :-)

========================================

////// //But my life is total contrast to the ideas and thoughts of Periyar.///////

சிவபாலன்: இதுக்கு அர்த்தம் எப்படி எடுத்துக் கொள்வது? இந்த ஐடியாலஜியினால் தான் இசைக்க மறுக்கிறேன் என்கிறார்.
இதனால் தொழிலுக்கு நீதி பயக்க முடியாது என்கிறார்?

இதை தான் நான் குற்றம் சாட்டுகிறேன்.
அவ்வளவே.
ராகவன், நீங்க இதற்கு நேரம் கிடைக்கும் போது விளக்கம் கொடுங்க..



கண்ணபிரான் ரவி: சிவபாலன்,
எடுத்துக்காட்டுக்காகச் சொல்கிறேன்; வாழ்ந்து மறைந்த ஆன்மிகப் பெரியவர் (எம்மதம் ஆயினும் சரி) ஒருவரின் படத்துக்குத் தாங்கள் பாடல் எழுத வேண்டும் என்று கவியரசர் வைரமுத்து அவர்களைக் கேட்டு,
அவரும் தான் எழுதுவது அவ்வளவு சரியாக இராது என்று சொன்னால்,
அதை நாம் எப்படி எடுத்துக் கொள்வோம்? //

சிவபாலன், மேலே ஆதிரை குறிப்பிட்டிருக்கும் செய்தியைப் பாருங்கள். புதிய தகவல்கள் தெரிய வருகின்றன. கடவுள் இல்லை என்று இசையமைக்க மறுத்திருப்பதாகம் தெரிய வருகிறது. சரி.அதெல்லாம் போகட்டும். பெரியாரின் பல கொள்கைகளில் சிலவற்றிற்கு உடன்படுவதும் சிலவற்றிற்கு உடன்படாததும் தவறா? சாதீய எதிர்ப்பும் கடவுள் எதிர்ப்பும் குழப்பிக் கொள்ளப்படக் கூடாது. சமூக நீதி பற்றிய கருத்துகள் எனக்கு முழுமையான ஏற்புடையவையே. ஆனால் இறைமறுப்பும் தமிழ்மொழி பற்றிய கருத்துகளுக்கும் ஏற்பில்லை. அப்படி ஏற்காமல் இருப்பதும் ஏற்பதும் அவரவர் உரிமை. மதம் மட்டுமல்ல மொழி மட்டுமல்ல கருத்துகளும் திணிக்கப்படக் கூடாது.

தன்னை ஆன்மீகவாதியாக நினைத்துக் கொள்ளும் ஒருவர் எப்படி கடவுள் இல்லை என்று பாட முடியும். இல்லை பாடினாலும் அது எந்த அளவிற்கு ஒத்துப் போகும்? வெறும் வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கக் கூடாது சிவபாலன். ஏனென்றால் எல்லாருக்கும் தான் சொல்ல வந்ததைத் தெளிவாகச் சொல்லும் திறமை கிடையாது. ஆகையால் நாம் பல கோணங்களிலும் சிந்திக்க வேண்டியுள்ளது.

இப்படி வைத்துக் கொள்வோம். ஜிராவிற்குக் கோடிக் கணக்கில் மில்லியன் ட்ரில்லியன் கணக்கில் பணம் கிடைக்கிறது. அருணகிரிநாதரை வைத்து ஒரு திரைப்படம் எடுக்க விரும்புகிறார். ஜிராவிற்கு அப்துல் ரகுமான் மற்றும் மு.மேத்தா மேல் அபிமானம் உண்டு. ஆகையால் அவரிடம் போய் பாடல் எழுதித் தரக் கேட்டு அவர்கள் இருவரும் மறுத்தா ஜிரா என்ன செய்ய வேண்டும்? கிட்டத்தட்ட இதே நிலை. அருணகிரியைப் படித்தவர்களுக்கு அவர் கருத்துகள் தெரிந்திருக்கும். ஆக தவறாக எதுவும் சொல்ல வேண்டியில்லாத நிலையிலேயே இவர்கள் இருவரும் மறுப்பதற்கு வேறுகாரணிகள் இருப்பது தெளிவல்லவா. ஆக...வெறும் சொற்களை மடக்கி நீட்டிப் பொருள் கொண்டு வீண் பாய்ச்சல் செய்வது தேவையற்றது.

சீச்சீ இந்தப் பழம் புளிக்கும் என்று சொல்லி அடுத்து வேலையைப் பார்ப்பதே சிறந்தது. அதை விடுத்து.......அடப் போங்க சிவபாலன். இப்பல்லாம் இதையே பல பதிவுகள்ள சொல்ல வேண்டியிருக்கு. பலருக்கும் சண்டை போடத்தான் பிடிச்சிருக்கு. :-(

November 12, 2006 1:03 AM  
Blogger G.Ragavan said...

// // நானும் தெரிந்து கொள்கிறேன் யார் யார் புனித பிம்பம் என்று.
//

குமரன்,

மறைமுக சொல்லவில்லை, பலரும் பயன்படுத்தும் சொல்லாடல் தான். திராவிட ராஸ்கல், திராவகம், வந்தேறிகள், நடுநிலை வாந்தி என்பது போல் இடத்துக்கு தக்கவாறு பயன்படுத்துகிறார்கள். 'புனித பிம்பம்' என்ற வார்த்தை என்னையும் குறிக்கும் சில இடங்களில்.

பட்டமெல்லாம் சிறப்பு தகுதியின் அடிப்படையில் தற்காலிமாக வழங்கப்படுவது. பெயர் குறிப்பிட்டு பட்டயமாக எழுதி தரச்சொன்னால் எப்படி ? அப்பறம் அந்த பட்டம் தங்களுக்கே உரித்தது என்று உரிமை கோரல் வந்துவிடாதா ?

அடைமொழி சொனால் அனுபவிக்கனும் ஆராயக் கூடாது
:) //

கோவி, இப்பொழுதெல்லாம் இரண்டு விதமான புனிதபிம்பங்கள் இருக்கின்றன. இந்தப் பதிவிலும் கூட. ஒன்று ஆரிய புனித பிம்பங்கள். மற்றொன்று திராவிட புனித பிம்பங்கள். நானும் அடைமொழிதான் சொல்கிறேன். ஆராயாதீர்கள். :-) நானும் ஒரு ஸ்மைலி போட்டுக்கிறேன்.

November 12, 2006 1:07 AM  
Blogger nayanan said...

//Boston bala said:
அப்போது, 'திருவண்ணாமலைக்குப் போகிறவர்தானே... அதனால்தான் இப்படி ம்யூசிக் போட்டிருக்கார்' என்றும் முடிவுரை கொடுப்பார்கள்.

இந்த மாதிரி அவதூறு எழாமல் இருக்க மறுத்துவிடுவதே நாகரிகமானது என்னும் பயம் கலந்த பாதுகாப்பு உணர்ச்சி 'தொழில் தருமத்தை' தோற்கடித்திருக்கும்.
//

திருவண்ணாமலைக்குப் போகிறவர்கள் கூட,
அவரின் திருவாசக சிம்பொனி இசையை ஏற்றுக் கொள்ளவில்லை.

அதற்கு இசைப் பிழை என்பதைத் தவிர
வேறெந்த காரணமும் இல்லை.


அன்புடன்
நாக.இளங்கோவன்

November 12, 2006 9:12 AM  
Blogger nayanan said...

இப்பதிவிற்கான எனது பின்னூட்டை
http://nayanam.blogspot.com/2006/11/blog-post_12.html
-ல் காணலாம்.

November 12, 2006 11:58 AM  
Blogger அருண்மொழி said...

ஞானராஜசேகரன் உள்ளத் தூய்மையோடும் உயர்வாகவும் ‘பெரியார்’ படத்தை எடுப்போம் என்று என்னிடம் வரவில்லை. முறையான வழிகளில் என்னை அணுகவும் இல்லை. எந்த ஒரு படைப்பாளிக் கும் கலைஞனுக்கும் உள்ளத்தூய்மை வேண்டும். அப்படி உள்ளவன் இன்னொருவனைக் குற்றம் சொல்ல மாட்டான். என்னை இசையமைக்க அழைக்கவில்லை என்ற உண்மையான காரணம் அவர் மீது இருந்தாலும், எல்லாவற்றுக்கும் மேலாக தந்தை பெரியாரின் மாண்பையோ புகழையோ எவனும் தன் இசை யினால் இன்னும் ஒருபடி புதிதாக உயர்த்திவிட முடியாது!’’

என்னிடம் கொண்டு வந்து கொட்டும் எத்தனையோ குப்பைகளுக்கு இசையமைத்திருக்கிறேன். தந்தை ‘பெரியார்’ படத்துக்கு இசையமைக்க மாட்டேனா?

‘‘நான் ஆன்மிகத்தை விரும்புகிறவன் என்ற வகையில், பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைகளில் எனக்கு உடன்பாடு இல்லையென்றாலும், சுயமரியாதையையும் தன்னம்பிக்கையையும் அடிமட்டத்தில் இருந்த மக்கள் மனதிலே ஏற்படுத்தி, சாதி கொடுமைகளை அழிப்பதற்காகத் தன் வாழ்நாட்களையே அர்ப்பணித்த அவரை நான் மதிக்கவில்லை என்றால், நான் உண்மையான தமிழனே அல்ல. என் ரத்தத்தில் ஊறியிருக்கும் இந்த உணர்வு ஒன்றே தந்தை ‘பெரியார்’ படத்துக்கு இசையமைக்க மறுத்திருக்க மாட்டேன் என்பதற்கு சரியான ஆதாரம். இதை மக்கள் புரிந்து கொள்வார்கள்."

நன்றி - ஜூனியர் விகடன்

November 15, 2006 12:18 AM  
Blogger Sivabalan said...

அருண்மொழி,

மிக்க நன்றி.

இங்கே எடுத்து கொடுத்தமைக்கு மிக்க நன்றி..

தினமும் இளையராஜா பாடல்தான் என்னை மகிழ்விக்கிறது. அவர் இவ்வாறு செய்தது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது. அதன் பாதிப்பே இப்பதிவு.

நல்லபடியாக தன்னிலை விளக்கம் தந்தார். மகிழ்ச்சி..

வருகைக்கு மிக்க நன்றி

November 15, 2006 7:43 AM  

Post a Comment

<< Home

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv