லாலுவுக்கு ஏக மவுசு - மீள் பதிவு
லாலு பிரசாத் யாதவ் பாட்னா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.
உலகின் மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்க் என்ற பெருமையைப் பெற்ற இந்திய ரயில்வே துறை இனி தேறாது என்ற அளவுக்கு நெருக்கடியான சூழ்நிலையில், அதற்கான அமைச்சரானார் லாலு பிரசாத் யாதவ். அதிகரித்து வந்த டீசல் விலை, நிர்வாகச் சீர்கேடு என்று பல பிரச்னைகளில் சிக்கியிருந்தது ரயில்வே.
லாலுவிடம் ரயில்வே துறை வந்ததும் மாயாஜாலங்கள் நடந்தன. மோசமான நிலையில் இருந்த ரயில்வேயிடம் இன்று 11,000 கோடி ரூபாய் உபரி நிதி இருக்கிறது! இரண்டே ஆண்டுகளில் இதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் லாலு.
ரயில்வேயைக் கட்டி மேய்ப்பது சாதாரண விஷயமல்ல. 14 லட்சத்து 22 ஆயிரம் ஊழியர்கள். தினமும் 16 ஆயிரம் ரயில்கள். தினசரி 1.40 கோடி பயணிகளுக்கு சேவை செய்கிறது. அதிகரித்து வரும் நிர்வாகச் செலவுகள். கூடவே, ரூ.99, ரூ.999 என்று குறைந்த கட்டணங்களுடன் களத்தில் குதித்திருக்கும் விமானப் போக்குவரத்து நிறுவனங்களுடன் போட்டி...
டீசல் விலை உயர்வு ஒரு பெரிய சவால். லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரித்தாலே, ரயில்வேக்கு கூடுதல் செலவு ரூ.211 கோடி! இப்படி, அடுக்கடுக்காக மிரள வைக்கும் சவால்கள்!
சளைக்கவில்லை லாலு. சரியான ஆட்களை சரியான இடத்தில் வைத்துக்கொண்டார். முடிவெடுப்பதில் அதிகாரிகளுக்குப் போதுமான சுதந்திரம் தரப்பட்டது.
ஒரு விஷயத்தில் லாலு தெளிவாக இருந்தார். எந்தக் காரணத்தைக் கொண்டும் பயணிகள் கட்டணத்தை அதிகரிக்கவே கூடாது. குறப்பாக, ஏழை, நடுத்தர மக்களைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.
ரயில்வேக்கு பெருமளவு வருமானத்தை அள்ளித் தருவது சரக்குப் போக்குவரத்துதான்! அதில் செலவுகளைக் குறைக்கவும் வருமானத்தை அதிகரிக்கவும் வழிகள் ஆராயப்பட்டன.முன்பை விட அதிக சரக்குகளை இப்போது ஏற்றிச் செல்கிறது ரயில்வே. அதே ரயில்கள், அதே ஊழியர்கள்.. ஆனால் அதிக செயல்திறன். விளைவு? வருமானம் கொட்டியது.
புதுமைகளுக்கும் பஞசமில்லை. சரக்கு ரயில்களை இனி தனியாரும் இயக்கப் போகிறார்கள். இதன மூலம் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அள்ள முடியும் என்பது லாலுவின் கணக்கு. அடுத்த 7 ஆண்டுகளில் சரக்கு ரயில்களுக்கென்றே தனி பாதை உருவாகும்போது, ரயில்வே வருமானம் உச்சத்துக்குப் போய்விடும் என்கின்றனர் நிபுணர்கள்.
அண்மையில் டீசல் விலை உயர்ந்தபோது, சரக்குக் கட்டணத்தைக் குறைத்து புரட்சி செய்தார் லாலு. ‘அளவை அதிகரி; செலவைக் குறை‘ என்பது அவரது பார்முலா.
லாலுவை ஒரு மிகப் பெரிய கம்பெனியின் தலைமைச் செயல அதிகாரியாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால், இந்தப் பெருமையெல்லாம் 15 லட்சம் ரயில்வே ஊழியர்களைத்தான் சேரும் என்கிறார் அவர்!
இப்போது லாலுவுக்கு ஏக மவுசு. ரயில்வேயை எப்படி லாபகரமாக அவர் மாற்றினார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆளாளுக்குப் போட்டி போடுகிறார்கள்.
அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் (இந்திய மேலாண்மை கல்லூரி) மாணவர்கள் அவரது வெற்றிக் கதையைப் படிக்கப் போகிறார்கள். சர்வதேச அளவில் பிரபலமான ஹார்வர்டு பல்கலைக்கழகமும் அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறது.
இந்தப் பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பது, பிரான்சில் இருக்கும் ஹெச்இசி என்ற மேலாண்மைக் கல்லூரி. அதன் நிர்வாகி கரீன் ஜோலி, அண்மையில் லாலுவைப் பார்த்துப் பேசியிருக்கிறார். சர்வதேச நிறுவனமான ஜிஇ தலைவர் ஜெப்ரி இம்மெல்டும் லாலு புகழ் பாடுகிறார்.
நல்ல தலைமை இருந்தால் எதிலும் ஜெயிக்கலாம் என்பதற்கு இந்திய ரயில்வே ஒரு சாட்சி! ?
நன்றி: தினகரன்
16 Comments:
சிவா,
நீங்க சொல்றது அனைத்தும் உண்மையா? லாலூவைப் பற்றி இதுவரைக்கும் நான் கேள்விப் பட்டதெல்லாம் பொய்யோ பொய் என்று இந்த பதிவு தூக்கி அடித்து விட்டதே...
சரி தூங்கப் போறேன்... காலையில் வந்து மத்ததை பற்றி பேசுவோம்...
தெகா
உணமைதான்.. லாலு இப்ப அடிச்சு தூள் கிளப்புறாரு...
மறுபடியும் வாங்க.. நிறைய பேசலாம்..
இது லாலுவைப் பற்றிய என் பார்வையை மாற்றிய நிகழ்வு.
ரயில்வே துறையில் சாதனை புரிந்த லாலு ஏன் பிகாரில் கெட்ட பெயர் எடுத்தார் என்று ஒரு பிஹாரி நண்பரிடம் கேட்டபோது "பாட்னாவில் லாலுவை சுற்றியிருந்தவர்கள் ரவுடிகளும், அரசியல் தரகர்களும். டெல்லியில் அப்படிப்பட்டவர்கள் இல்லாததாலே லாலுவால் சாதிக்க முடிந்தது" என்றார்.
ராம் விலாஸ் பாஸ்வானின் காலத்துடன் ஒப்பிடும்போது இக்கூற்றை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒரு நிர்வாகி நிறுவனத்தை சிறப்பாக நடத்த உகந்த சூழலும் தேவையோ?
நிஜந்தானா இது ???
பெத்த ராயுடு,
உணமைதான். லாலு இப்பொழுது இரயில்வேயின் சூப்பர் ஸ்டார்..
பீகாரில் அவர் வெற்றி பெறாமல் போனதுக்கு பல காரண்ங்களில் Good Resource ஒன்றும்...
இரயில்வேயில் கிடைத்த Resource அளப்பரியது...
நல்ல Resource வைத்துதான் ஒரு Manager செயலாற்றமுடியும் எனப்தற்கு இதுவும் ஒரு சான்று.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
உதய்,
நிஜம் தான்.. லாலு தனது பணிகளை பாதி நேரம் ஏதாவது ஒரு இரயில் தான் பயணித்துக் கொண்டுதான் செய்கிறார்..
அதனால் அவர் எங்கே எப்பொழுது இறங்கி சோதனை செய்வார் என்பது சரிவர தெரியாததால் It Keeps every on Toes...
வருகைக்கு நன்றி.
வணக்கத்துடன்,
இரயில்வே மந்திரியாக லாலுவின் செயலபாடுகள் பல பேருக்கு ஆச்சியம் ஏற்படுத்தியுள்ளது..
வருகைக்கு நன்றி.
அட !!
பதிவிற்கு நன்றி சிவபாலன்..
கப்பி பய ,
அட ஆமாங்க....
வருகைக்கு நன்றி
siva,
good..i was planning this post...u have stolen..:))
but you have presented nicely...
முத்து,
நீங்களும் பதிவிட்டால் மகிழ்வேன்..
நம்ம லாலு.. நம்மதான் பாரட்ட வேண்டும்..
அதுவும் உங்கள் எழுத்துகளில் லாலுவை காண என்க்கு ஆவலாக உள்ளது.
வருகைக்கு நன்றி.
சிபா ... நன்றாக இருக்கிறது ... இதுவரை லல்லுவை கிண்டல் செய்துதான் பத்திரிக்கைகள் எழுதிவந்திருக்கின்றனர் ... சாதனைகளை லாலு விசயத்தில் மறைக்கப்பட்டன ... நீங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறீர்கள் !
லாலு ரயில்வேயை பொறுத்தவரை சாதனையாளர் தான் !
லல்லுவைப்பற்றி வழக்கம்போல ஊடகங்கள் ஒரு மோசமான பிம்பத்தை ஏற்படுத்தியிருந்தார்களோ என்ற சந்தேகம் எனக்கு முன்பிருந்தே உண்டு, சில மாதங்களுக்கு முன் எழுதிய என் பதிவு பீகார்,லல்லு, அரசியல்
GK,
உண்மைதான். லாலு இரயில்வேயை தலை நிமிர வைத்துள்ளார். நான்கு வருடங்களுக்கு முன்னர் இரயில்வே மிகவும் தினரிக்கொண்டிருந்த்து.
இந்த நிலை இப்பொழுது மாறியுள்ளது..
வருகைக்கு நன்றி.
குழலி
உங்கள் சந்தேகம் இப்போதைய லாலுவின் சாதனையால் வழுப்பெருவதாகவே நான் உணர்கிறேன்.
உங்கள் பதிவைப் படித்தேன் நன்றாக எழுதியுள்ளீர்கள்.
வருகைக்கும் கருத்துப் பதிவுக்கும் மிக்க நன்றி.
mobilemob,
Pls. give appropriate links only..
Post a Comment
<< Home