வர்றாரு வர்றாரு யாரு வர்றாரு...
டேய் நிறுத்துங்கடா ...
பேருசே தேவைல போல இருக்கே. இந்த இழு இழுக்கறீங்க
நொந்துபோய் எத்திருச்சு வந்திரப்போறாரு..
எலேய் இறங்கி பட்டைய கிளப்புங்கடா..
வர்றாரு வர்றாரு யாரு வர்றாரு தலைப்பா கட்டிகிட்டு தாத்தா வர்றாரு
ஒத்த ரூபா பொட்டுவச்சு சாமி வர்றாரு எட்டு காலு வாகனத்தில் ஏறி வர்றாரு.
ஒய்யாறி சிங்காரி சம்சாரி சோம்பேறி இல்லோருக்கும் உள்ளோருக்கும் இதுதானே ஒப்பாரி
பர பர மோளம் இது பட்டி தொட்டி தாளம்
பட பட வெடி போடு இது பஞ்சாயத்து ரோடு
வர்றாரு வர்றாரு யாரு வர்றாரு.....
கொட்டவியே உடமலே குரட்டை சத்தம் இல்லாமலே குந்திகிட்டு தூங்குறாரு
அழகு ராசா என் அழகு ராசா
தாத்தாவோட பேர வச்சு காக்காவுக்கு சோறு வெச்சு மூக்கு முட்ட தின்ன போறோம்
அழகு ராசா என் அழகு ராசா
அரன்மனை வீட்டை விட்டு ஆதங்கரை வர்றாரு
ஆறடி பள்ளத்துக்குள் நாத்து நட வர்றாரு
அன்னாடம் பொய் சொன்ன அரிச்சந்திரன் வர்றாரு
பட்டிமுதல் பாட்டு சொல்லும் உலவியா வர்றாரு
தாரை தப்பட்டைக்கு தலையாட்டி வர்றாரு
வீதியில் ஊரு சனம் விசிலடிக்க வர்றாரு
ஓடி வந்து இங்கு.. ஓடி வந்து இங்கு
அட ஊதுங்கடா சங்கு
பர பர மோளம் இது பட்டி தொட்டி தாளம்
பட பட வெடி போடு இது பஞ்சாயத்து ரோடு
வர்றாரு வர்றாரு யாரு வர்றாரு....
கூட்டியார வைச்சவரு கூத்தாடி வர்றாரு
செல்வங்களை சேர்த்தவரு செல்லாகாசா வர்றாரு
பேரு புகழ் கொண்டவரு தேருக்குள்ளே வர்றாரு
ஊரு சனம் மத்தியிலே ஊமைத்துரை வர்றாரு .. இதோடா..
கண்ணாடி போட்டவரு கண்ணைமூடி வர்றாரு
உதுபத்தி வாசனையில் ஊர்வலமா வர்றாரு
அய்யா போல இல்லே அய்யா போல இல்லே
இவர் ஆதிசிவன் புள்ளே
பர பர மோளம் இது பட்டி தொட்டி தாளம்
பட பட வெடி போடு இது பஞ்சாயத்து ரோடு
படம்: எம் மகன்
குரல்: மோகன், சந்திரன், முரளி
இசை : வித்யாசாகர்
நடிப்பு: பரத், கோபிகா, நாசர், வடிவேல்
இயக்கம்: திருமுருகன்
தயாரிப்பு: சத்ய ஜோதி தியாகராஜன்
வருடம்: 2006
இந்த பாடலின் "ஆடியோ இங்கே கேளுங்க.."
இதில் நடனம் நன்றாக உள்ளது. அதனால் "இதன் வீடியோ இங்கே பாருங்க.."
11 Comments:
Test comment...
சிவபாலன். இந்த படத்தில் 'கோழிக்குண்டு கண்ணு' பாட்டு எனக்குப் பிடித்தது. இந்தப் பாடலை இதுவரை கேட்டதில்லை. உங்க புண்ணியத்தால இதையும் இப்ப கேட்டாச்சு. பாத்தாச்சு. :-)
Nalla kuththu.... padam innum parkkala... innaikku paarththara vendiyathuthaan.
சிவபாலன் உங்க ஊருக்கு இந்தப் பாடல் எப்படி அதுக்குள்ள வரும்?
இங்கே பார்க்கும் போதும் நினைத்தேன் இதில் பரத்தின் சுறு சுறு நடனம்
அருமையாக இருக்கிறது என்று.
பாடல் யோசிக்க வைக்கிறது.
நன்றி.
நல்ல பாடல் சிவபாலன்! இசையும் கூட!
படத்தில் பார்த்தேன்!
தனும் கஷ்டப்பட்டுக்கொண்டு, பிறருக்கும் சுமையாக இருந்த ஒரு ஜீவன் மரணித்த பிறகு எவ்வளவு சந்தோஷம் அடைகிறார்கள் என்று அந்தப் பாடலின் பிண்ணனியை பார்த்தவர்களுக்கு புரியும்.
:))
குமரன் சார்,
நீங்கள் சொன்ன பாட்டும் கேட்டன். நன்றாக உள்ளது.
இது குத்துப் பாட்டு. ஆனால் ஆபாசம் இல்லை. அதனால் தான் பதிவிட்டேன்.
வருகைக்கு மிக்க நன்றி.
செம பாட்டு, செம குத்து ;-)
உதய்,
பாட்டு நல்ல குத்துதான்.. டேன்ஸ்ம்..
வருகைக்கு நன்றி
வல்லிசிம்ஹன் மேடம்,
பரத் இதில் நன்றாக நடனம் ஆடியுள்ளார்.
வருகைக்கு நன்றி
பித்தானந்தா,
என்னைப் போல் உங்களுக்கும் பாடல் பிடித்திருப்பது மகிழ்ச்சி.
வருகைக்கு நன்றி
தெகா,
பாடலைக் கேட்டீர்களா!!
மகிழ்ச்சி!!
வருகைக்கு நன்றி
Post a Comment
<< Home