நீதிமான்களுக்கு வலைவிரிச்சாச்சு ?
நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்க தேசிய நீதித்துறை கவுன்சிலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக 1968ம் ஆண்டின் நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தில் திருத்தம் செய்யப்பட இருக்கிறது.
இடைக்காலத் தடை எதுவும் ஏற்படாமல் அமல் ஆனால் அது இந்திய நீதித்துறை வரலாற்றில் முக்கிய நாளாக குறிக்கப்படும்.
முன்சீப் நீதிபதியில் இருந்து மாவட்ட நீதிபதிகள் வரையில் இந்தியா முழுவதும் சுமார் 11 ஆயிரம் பேர் இருப்பார்கள். இவர்கள் மீது புகார் எழுந்தால், விசாரித்து, தவறு உறுதியானால் அவர்களை பதவி நீக்கம் வரை செய்ய தொடர்புடைய உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.
ஆனால் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் மீதோ, உச்ச நீதிமன்ற நீதிபதியாகவே உட்கார்ந்திருப்பவர் மீதோ புகார்கள் வந்தால் கையைப் பிசைந்து கொள்ள வேண்டியதுதான்.
தற்பொழுது உள்ள முறைப்படி, இந்த புகார்களை மூன்று நீதிபதிகளைக் கொண்ட கமிட்டி ஆய்ந்து, குற்றவாளி என்று தீர்மானிக்க வேண்டும். அதன் பிறகு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் பதவி இறக்க தீர்மானம் கொண்டுவர வேண்டும்.
நீதிபதிகள் மீது வரும் புகார்களை விசாரிக்க ஒரு கவுன்சில் தேவை என்ற கருத்து வலுப்பட்டது. 2003ல் பா.ஜ.க. ஆட்சி இதில் ஓரளவு அக்கறை காட்டியது. மத்திய சட்ட அமைச்சராக இருந்த ஜனா. கிருஷ்ணமூர்த்தி, அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதினார்.
“மற்ற துறைகளைப் போலத்தான் நீதித்துறையும் இருக்கிறது. அது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை. தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். நீதிபதிகள் தவறு செய்யும் முன்பு ஓராயிரம் முறை யோசிக்க வைக்கும் அளவுக்கு பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார் ஜனா.
1. தாதாக்களுடன் தொடர்புடைய பதிப்பகத்திடம் புத்தகம் எழுதுவதற்காக 70 லட்சம் ரூபாய் முன்பணம் பெற்றதாக குற்றச்சாட்டு வந்ததை அடுத்து மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஏ.எம். பட்டாச்சார்யா ராஜினாமா செய்தார்.
2. கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அஜித் சென்குப்தா, ஓய்வு பெற்ற பிறகு அந்நிய செலவாணி முறைகேடுகளுக்காக கைது செய்யப்பட்டார்.
3. சர்வீஸ் கமிஷன் தேர்வில் தங்கள் உறவினருக்கு அதிக மதிப்பெண் கிடைக்க வழி செய்ததாக பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதிகள் மெஹ்தால் சிங் கில், அமர்பிர் சிங் ஆகியோர் ராஜினாமா செய்தார்கள்.
4. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.எஸ். ஆனந்த், ஏ.எம். அகமதி ஆகிய இருவர் மீதும் புகார்கள் புறப்பட்டன.
இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு கூட பல ஆண்டுகளைக் கடக்க வேண்டியிருந்தது. எனவேதான், அரசியலமைப்பு சட்டத்தை மறுஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட வெங்கடாசலய்யா கமிஷன், தேசிய நீதித்துறை ஆணையம் அமைத்து நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.
அதன்படிதான் இப்போது மசோதா வர இருக்கிறது. இதன்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தவிர, இதர உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது கவுன்சிலில் புகார் தரலாம்.
நீதித்துறையை அச்சுறுத்துவதற்காக இது கொண்டு வரப்படுவதாக சில விமர்சனங்கள் எழுந்தன. இது உண்மையல்ல.
அமைக்கப்பட இருக்கும் தேசிய நீதித்துறை கவுன்சிலில் உறுப்பினர்களாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அதன் மூத்த நீதிபதிகள் இருவர், உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் இருவர் என அவர்கள்தான் இருக்கப் போகிறார்கள். எனவே, கவுன்சில் அமைப்பதற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்க முடியாது.
விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட, கேள்விக்குட்படுத்த முடியாத சக்திகள் என யாரும் இருந்துவிடக்கூடாது என்பது குடியாட்சித் தத்துவம். அதுதான் இந்த மசோதாவின் மகத்துவம். ?
நீதிமான்களுக்கு வலை என்ற கட்டுரையில் திரு.ப.திருமாவேலன்
நன்றி: தினகரன்
11 Comments:
இந்த மசோதா எந்த தடையுமின்றி நாடாளுமன்றத்தில் இந்த முறை தாக்கல் செய்யப்படவேண்டும். அது நிறைவேறினால், நிச்சயம் அது நீதிதுறைக்கும் மக்களுக்கும் பொன் நாள்.
நீங்கள் சொல்லும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. ஏதோ இந்த மசோதா சட்டமானால் கொஞ்சம் பயம் இருக்கும்..ம்ம்
அடடா, உங்க கருத்தை வெளியே சொல்லமுடியாமல் போய்விட்டதா?! ம்ம்ம்..
நானும் யோசித்திட்டிருக்கிறேன்.. மற்ற ஆப்சன்களை திறக்கலாமா என்று.
இடைக்காலத் தடை எதுவும் ஏற்படாமல் அமல் ஆனால்...
ஆனால்தானே...பார்ப்போம்..பார்ப்போம்
தருமி அய்யா,
உங்கள் கருத்து சற்று சிந்திக்கவைக்கிறது.
எப்படியாவது இம்மசோதோ நிறைவேறினால் நிச்சயம் அது இந்திய மக்களாட்சியின் மைல் கல்.
பார்க்கலாம்..ம்ம்ம்
வருகைக்கு நன்றி
//நீதிபதிகள் மீது வரும் புகார்களை விசாரிக்க ஒரு கவுன்சில் தேவை என்ற கருத்து வலுப்பட்டது. //
நீதிக்கு நீதிபதிகள் தலைவணங்க வேண்டியதில்லை போலிருக்கிறது !
ம் வேலியே பயிரை மேய்ந்தால் விளைவது எப்படி ?
ம் ...ஹி ஹி ... சட்டம் எவ்வளவு வழுவோ அதை உடைக்க அவ்வளவு பணம் செலவு ஆகும் !
:)
GK,
வேலியே பயிரை மேய்வதை தடுக்கவே இம்மசோதா.. நிறைவேறுமா?
//சட்டம் எவ்வளவு வழுவோ அதை உடைக்க அவ்வளவு பணம் செலவு ஆகும் !//
நல்லா சொன்னீங்க..Ha Ha Ha
வருகைக்கு நன்றி
This comment has been removed by a blog administrator.
நிச்சயமாக இந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும், அதைப்போல கிடப்ப்பில் போடப்பட்டுள்ள லோக்பால் மசோதாவையும் நிறைவேற்றப்பட வேண்டும்.
வைசா,
உங்கள் வாதம் சரியானதே. இருப்பினும் இவர்கள் முதலில் இது போல் கமிசன் அமைப்பதே தவறு என்பது போல் கோசங்களை எழுப்புகின்றனர். இதில் மற்றவர்களை உள்ளே கொண்டுவந்தால் நிச்சயம் அதை வைத்தே இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் செய்துவிடுவார்கள்.
உண்மையில் இந்த மசோதா போன கூட்டத் தொடரிலேயே கொண்டுவரப்பட வேண்டியது. ம்ம்ம்ம்ம்ம்.. இந்த முறையாவது தாக்கலாகுமா? பொருத்திருந்தே பார்க்கவேண்டும்.
வருகைக்கு நன்றி
இந்தியன்,
உண்மைதாங்க இந்த மசோதா நிச்சயம் நிறைவேற்றப் படவேண்டிய ஒன்று. நீங்கள் சொல்வதுபோல் லோக் பால் மசோதாவும் நிச்சயம் வர வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
வருகைக்கு நன்றி
Post a Comment
<< Home