இட ஒதுக்கீடு எனும் ஆயுதம்
சமுதாயத்தில் மேலே இருப்பவர்களைக் கீழே தள்ளிவிட்டு, கீழே இருப்பவர்களை அந்த இடத்துக்குக் கொண்டு வருவதுதான் இட ஒதுக்கீடு என்று ஒரு பிரிவினர் கருதுவதால்தான் இந்தப் பிரச்னையில் அடிக்கடி சர்ச்சை எழுகிறது.
மேலே உள்ளவர்கள் அப்படியே இருக்கட்டும். கீழே உள்ளவர்களையும் - பின்னுக்குத் தள்ளப்பட்டு பல நூற்றாண்டுகளாக அப்படியே இருப்பவர்களையும் - மேலே கொண்டு வருவதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் இட ஒதுக்கீடு என்ற ஆயுதம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளாததால்தான் இந்த சர்ச்சை.
இன்னும் சொல்லப்போனால், நலிந்த மக்களின் உரிமைதான் அவர்களுக்கான இட ஒதுக்கீடு.
இதை மையமாக வைத்துதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1917ல் துவக்கப்பட்டு, நாளடைவில் அது நீதிக் கட்சியாக மாறியது.
1. ஆண்டாண்டு காலமாக அரசு அதிகாரத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அந்த நிலையை மாற்றி, எல்லா பிரிவினருக்கும் அரசாங்கத்தில், நிர்வாகத்தில் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதே இட ஒதுக்கீட்டின் நோக்கம்.
2. இந்த இட ஒதுக்கீடு இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்க வேண்டும் என்றும் இப்போது கேள்வி எழுப்பப்படுகிறது.
3. இந்தியா விடுதலை பெற்று 59 ஆண்டுகள் கடந்துவிட்டன. தாழ்த்தப்பட்டவர்கள். ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டோர் இன்னுமா முன்னேறவில்லை?
4. இவ்வளவு காலம் அந்தப் பிரிவினர் இட ஒதுக்கீட்டின் பலன்களை அனுபவித்தது போதாதா? என்று ஒரு தரப்பினர் இப்போது கேள்வி எழுப்புகிறார்கள்.
5. இந்தியா போன்ற பன்முக அமைப்பைக் கொண்ட நாட்டில் நலிந்த பிரிவு மக்கள் ஒரே இரவில் முன்னேறிவிட முடியாது. இந்தப் பிரிவு மக்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய 100 ஆண்டுகள்கூட ஆகலாம்.
6. இட ஒதுக்கீட்டை அரைகுறை மனதுடன் அமல் படுத்தியதன் விளைவுதான் இந்த கால தாமதத்துக்குக் காரணம் என்று கூட கூறலாம்.
7. தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதையே இதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம்.
8. இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் என்ற கருத்து, பிற்படுத்தப்பட்டோரில் தொடங்கி இப்போது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வரை வளர்ந்துவிட்டது.
9. இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெறும் தகுதி படைத்த பிரிவினரில் வசதியானவர்களை (கிரீமி லேயர்) நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறியிருப்பது பற்றி நாடு முழுவதும் விவாதம் துவங்கிவிட்டது.
10.இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைப் புகுத்த வேண்டும் என்பது இதன் முக்கிய அம்சம்.கூடவே, இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்துக்கு மிகாமல் மாநில அரசுகள் பார்த்துக்கொள்ள வேண்டும்.
11. பின்தங்கிய வகுப்பினரில் வசதியானவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது. இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவிகிதத்துக்கும் அதிகமானால், நாட்டில் ஜாதீயம் நிலைத்துவிடும் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து சொல்லியிருக்கிறது.
12. சமூக ரீதியில், கல்வி ரீதியில் பின்தங்கியவர்கள் பொருளாதார ரீதியில் முன்னேறி இருக்கலாம். ஆனால், அவர்களது சமூக அந்தஸ்து இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.
13. மேலும் வருமானம் என்பது நிரந்தரமானது அல்ல. வருமானத்தை அளவீடாக வைத்து இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டால், இட ஒதுக்கீட்டின் அடிப்படையே தகர்க்கப்பட்டதாகிவிடும்.
14. பின்தங்கியவர்களை, ஒடுக்கப்பட்டவர்களை பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, சமூக ரீதியாகவும் முன்னேற்றுவதுதான் இட ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கம் என்பதைப் புரிந்துகொண்டாலே, இந்த பொருளாதார அளவுகோல் வாதம் அடிபட்டுவிடும்.
15. இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெற்று, அதன் மூலம் டாக்டர்கள், வக்கீல்கள், துணைவேந்தர்கள், மாவட்ட ஆட்சியர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் என்று ஆனவர்கள் எல்லாம் முன்னேறியவர்கள் இல்லையா? அவர்களது பிள்ளைகளுக்கெல்லாம் இடஒதுக்கீடு எதற்கு? அவர்களை கிரீமி லேயர் பிரிவில் சேர்த்து, இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெறுவோர் பட்டியலில் இருந்து விலக்கிவிடலாமே? என்ற கருத்து இப்போது திட்டமிட்டு பரப்பப்படுகிறது.
16. தந்தைதான் மேலே வந்து விட்டாரே... மகன் எப்படிப் போனால் என்ன? என்பதைப் போன்றது இது.
17. இட ஒதுக்கீட்டில் இருந்து கிரீமி லேயரை நீக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்து குறித்து நாடு முழுவதும் விவாதம் துவங்கிவிட்டது.
18. சமூக நீதிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள, அனைத்து மாநிலங்களும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று வலியுறுத்தி, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருக்கிறார்.
19. சமூக ரீதியாகப் பின்தங்கியவர்களுக்குதான் இட ஒதுக்கீடு. பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு அல்ல என்பதை அரசியல் சட்டம் தெளிவுபடுத்தியுள்ளது.
20. சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பல நூற்றாண்டுகளாக அடக்கி வைக்கப்பட்ட மக்களுக்கு நாடு சுதந்திரம் பெற்ற பின்னர்தான் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது.
21. சமூக ரீதியாகவும் அவர்கள் முன்னேறுவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.
22. பல ஆயிரம் ஆண்டுகளாக நம் சமூகத்தில் ஜாதி முறை தொடர்ந்துகொண்டு இருக்கிறது. எனவே, 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கையால் ஜாதீயம் நிலைத்துவிடும் என்று சொல்வது ஏற்புடையது அல்ல என்று அந்தக் கடிதத்தில் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
23. அரசியல் சட்டத்தால் இட ஒதுக்கீடு உரிமை பெறத் தகுதி உள்ளவர்கள் பட்டியலில் கிரீமி லேயர் என்ற ஒரு புதுப் பிரிவு ஏற்படுத்தப்பட்டால், அதுவே பிற்காலத்தில் இன்னொரு புதிய சமூகத்தை உருவாக்கிவிடலாம்.
24, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரில் கிரீமி லேயர் பிரிவைக் கண்டுபிடிப்பதில் காலத்தைச் செலவிடுவதைவிட, இட ஒதுக்கீட்டை நியாயமாகவும் தீவிரமாகவும் அமல்படுத்தினால், கீழே இருக்கும் மக்கள் விரைவில் தாமாக முன்னேறிவிடுவார்கள்.
அத்தகைய நிலை வர பாடுபடுவோமே! ?

24 Comments:
//சமுதாயத்தில் மேலே இருப்பவர்களைக் கீழே தள்ளிவிட்டு, கீழே இருப்பவர்களை அந்த இடத்துக்குக் கொண்டு வருவதுதான் இட ஒதுக்கீடு என்று ஒரு பிரிவினர் கருதுவதால்தான் இந்தப் பிரச்னையில் அடிக்கடி சர்ச்சை எழுகிறது.//
சிபா...!
இப்ப நீங்க எண்ணை பலகாரம் செய்கிறீர்கள், என்ன செய்விங்க ?
வெந்ததை திருப்பி போடுவிங்க,
நல்லா வெந்ததை எடுத்துடுவிங்க,
வேகதது இன்னும் கொஞ்சம் வேகலாம் என்று சிறிது நேரம் வைத்திருப்பீர்கள் இல்லையா ?
அதுதான் இட ஒதுக்கீடு !
:)
இட ஒதுக்கீடு என்ற ஆயுதம் என்ற கட்டுரையிலிருந்து திரு.க.குணசேகர்.
நன்றி: தினகரன்
தருமி அய்யா, இது தினகரனில் இருந்து எடுத்த கட்டுரை. அதனால் தாங்கள் ஏற்கனவே கேட்டுக் கொண்டதுபோல் இடப்பங்கீடு எனும் வார்த்தையை இங்கே பயன்படுத்த முடியாதற்கு வருந்துகிறேன்.
GK,
வெந்தது வேகாதது.. எவ்வளவு அருமையா சொல்லிட்டீங்க..
சூப்பர்..
புரிய வேண்டியவர்களுக்கு நிச்சயம் புரியும்.
வருகைக்கு நன்றி
சிவபாலன் ஐயா,
தற்போதைய இடப்பங்கீட்டினை கீழ்மட்டத்திலிருக்கும் பிரிவினரில் வெகுதியானவர்களை அடையும் வண்ணம் மாற்றஙகள் செய்யட்டும்.
அதே சமயத்தில் கூடுதலாக மருத்துவக்கல்விக்கு பொறியியல் கல்விநிலையங்கள் மாதிரி நிறைய இடங்களை பங்கீட்டிற்கு எடுத்துவர திறப்பதும் அவசியம்.
50 வருஷமா இருக்கிற அதே 10 மெடிக்கல் காலேஜ் அதே அளவிலான இடங்கள் மக்கள் தொகை விகிதம் மற்றும் கல்வி கற்பது பற்றிய விழிப்பு மிகவேகமாக உயர்ந்துவிட்ட சூழலில் கூடுதலாக ஒவ்வொரு ஆண்டும் 10 மருத்துவக்கல்லூரிகள் தமிழகத்தில் அடுத்த 10 ஆண்டுகளுக்குத் தொடங்கினாலும் தேவை கூடுதலாகவே இருக்கும்.
அரசியல் ஆயுதமாக வீணே இந்த ஒரே விஷயம் மீண்டும் மீண்டும் ஆண்டுகொரு கவலைத்திருவிழாவாக வருவது துர் அதிர்ஷ்டம்!
இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெற்று, அதன் மூலம் டாக்டர்கள், வக்கீல்கள், துணைவேந்தர்கள், மாவட்ட ஆட்சியர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் என்று ஆனவர்கள் எல்லாம் முன்னேறியவர்கள் இல்லையா? அவர்களது பிள்ளைகளுக்கெல்லாம் இடஒதுக்கீடு எதற்கு? அவர்களை கிரீமி லேயர் பிரிவில் சேர்த்து, இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெறுவோர் பட்டியலில் இருந்து விலக்கிவிடலாமே? என்ற கருத்து இப்போது திட்டமிட்டு பரப்பப்படுகிறது.
16. தந்தைதான் மேலே வந்து விட்டாரே... மகன் எப்படிப் போனால் என்ன? என்பதைப் போன்றது இது.
Do children of IAS officers and
ministers need reservation or do
children of poor workers and poor
pesants need reservation.Removal of creamy layer benefits the really backward and downtrodden
sections among BCs and OBCs and
not the so called forward
castes. Why should that upset you.
தற்போதைய இடப்பங்கீட்டினை கீழ்மட்டத்திலிருக்கும் பிரிவினரில் வெகுதியானவர்களை அடையும் வண்ணம் மாற்றஙகள் செய்யட்டும்.
The elite sections in BCs,OBCs
will oppose this tooth and nail.
சொல்ல வந்தேன் ..சொல்லீட்டீங்க..நன்றி
Hariharan,
நீங்கள் சொல்வதுபோல் அது வெகுதியானவர்களுக்கு தான் போய் சேர வேண்டும். அதில் மாற்றுக் கருத்தில்லை. அது எம்மாதிரியான மாற்றங்கள் என்பது முக்கியம். இட ஓதுக்கீட்டின் அடிப்படையில் மாற்றம் செய்யதால் அது அதன் உண்மையான நோக்கத்திற்கு பங்கம் விளைவிக்கும்.
மற்றபடி மேலும் அதிக மருத்துவக் கல்லூரி அமைய வேண்டும் எனும் உங்கள் கருத்தை வழிமொழிகிறேன்.
மேலும் ஏன் மருத்துவக் கல்லூரிகள் அதிகப் படுத்தப்படவில்லை என அறிந்தவர்கள் கூறினால் நன்றாக இருக்கும்.
வருக்கைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
//15. இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெற்று, அதன் மூலம் டாக்டர்கள், வக்கீல்கள், துணைவேந்தர்கள், மாவட்ட ஆட்சியர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் என்று ஆனவர்கள் எல்லாம் முன்னேறியவர்கள் இல்லையா? அவர்களது பிள்ளைகளுக்கெல்லாம் இடஒதுக்கீடு எதற்கு? அவர்களை கிரீமி லேயர் பிரிவில் சேர்த்து, இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெறுவோர் பட்டியலில் இருந்து விலக்கிவிடலாமே? என்ற கருத்து இப்போது திட்டமிட்டு பரப்பப்படுகிறது.//
இதிலென்ன தப்பு... இதனால், அதே சமூகத்தில் உள்ள இன்னும் பின்தங்கியவருக்கு வாய்ப்பு கிடைக்கும் அல்லவா? இதிலென்ன திட்டமிட்டு பரப்பபடுகிறது,.. இதனால் உயர் ஜாதிக்காரன் ஆதாயம் அடையப்போவதில்லை... முன்னேறிய பிற்படுத்தப்பட்ட மக்களே, இன்னும் பின் தங்கியுள்ள தம் ச்மூகத்து மக்களுக்கு வாய்ப்பு தராமல், உயர்சாதிக்காரர்களை குறை சொல்லிக்கொண்டிருப்பது நகைப்புக்குறியது.. ஏனென்றால் இப்போது அவன் செய்வது அதே கொடுமை தான்.. உயர் சாதிப் பிற்படுத்தப்பட்டவன்....
//16. தந்தைதான் மேலே வந்து விட்டாரே... மகன் எப்படிப் போனால் என்ன? என்பதைப் போன்றது இது.//
தந்தை மேலே வந்த பின் (சமூகம்+பொருளாதாரம்).. தன் மகனை வழிநடத்த அவருக்கு எந்த சமூகத்தடையும் இல்லை என்று அர்த்தம்...உண்மையும் கூட...அதற்கு பிறகும் அவர்கள் முன்னேறவில்லையென்றால் அவர்களின் முயற்ச்சின்மையைத் தான் காட்டுகிறது.. இவ்ர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதின் மூலம், நீங்கள் அதே சமுகத்தில் இன்னும் பின் தங்கியுள்ள இன்னொரு குடும்பத்திற்கு அநியாய்ம் செய்கிறீர்கள்...
Ravi Srinivas Sir,
உங்கள் வாதத்திற்கு இந்தப் பதிவு முழுதும் விளக்கமாக பதில் கூறப்பட்டுள்ளது. மீன்டும் ஏன் அந்த கேள்வி. அதும் BC and OBC மீது மிகுந்த அக்கறை உடையது போல் ஒரு தாக்கத்தை உருவாக்க முயல்வதை என்னவென்று சொல்வது?
//Why should that upset you.//
இது போல் தனிமனித கேள்விகளுக்கு அப்பாற்பட்டது இப்பதிவின் நோக்கம் என்று புரிய வேண்டியவர்களுக்கு புரியும்.
Ravi Srinivas Sir,
Hariharanக்கு கூறிய பதிலைப் பார்க்கவும்.
வருக்கைக்கு நன்றி
இட ஒதுக்கீடோ பங்கீடோ, அப்படி ஒன்று உள்ளவரையில் சாதிப்பிரிவினையை ஒழிக்க முடியாது. இதற்கு ஒரே வழி இட ஒதுக்கீட்டை ஒரேயடியாக ஒழிப்பது தான். அரசு நினைத்தால் குறைந்தது கல்வி அளவிலாவது இதைச் செயல்படுத்த முடியும். ஐந்தாண்டுகளில் நிறைவேற்றக் கூடியதை ஐம்பதாண்டுகளாகியும் இழுத்துக் கொண்டு செல்வது அரசியலாரின் சுயநலத்தையே காட்டுகிறது.
தற்போது படித்து வேலையின்றி இருப்போர் ஏராளம். பள்ளிகளையும் கல்லூரிகளையும் அரசும் தனியாரும் நடத்துவதை விட ஊர்மக்கள் பொறுப்பில் விட்டால் வியக்க வைக்கும் மாற்றம் வரும். ஊர்மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை இப்பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் செய்யலாம் ( ஆண்டு தோறும் கோயில் திருவிழாக்களுக்கு பண உதவி செய்வதில்லையா? ) பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு படிப்புடன் விளையாட்டு மற்றும் சிறு தொழில் பயிற்றுவித்து அதில் வரும் பணத்தைக் கொண்டு அவர்களது பொத்தகங்கள் மற்றும் பல தேவைகளுக்குச் செலவிடலாம். ஊர்மக்கள் நடத்தும் பள்ளிகள் கல்லூரிகளில் அந்த ஊரைச் சேர்ந்த பிள்ளைகளுக்கு இலவசமாக கல்வி புகட்டலாம். அந்தந்த ஊர்களில் உள்ள படித்த வேலையில்லா இளைஞர்களை இப்பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியப் பணியில் ஈடுபடுத்தலாம்.
இப்படி ஊர்மக்கள் நடத்தினால் அக்கல்விக்கூடங்களில் சாதி மத பேதம் இருக்காது. அத்தோடு அனைவருக்கும் கல்வி கிடைக்கவும் வகை செய்யும். இங்கே அமெரிக்காவில் கூட இப்படிச் செய்வதாக அறிந்தேன். NCBH போன்ற கடைகளில் மிகக் குறைவான விலைக்குத் தரமான பொத்தகங்கள் தமிழிலேயேக் கிடைக்கின்றன. இவற்றை வாங்கி பயன்படுத்தலாம். மாணவர்கள் ஆண்டு முடிந்ததும் அவற்றைத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும். இதனால் குமுகாயச் சிந்தனை மக்களுக்குப் பெருகும். அரசையே நம்பிக் கொண்டிருக்கும் குணமும் மாறும். அரசியலிலும் சீக்கிரமே மாற்றம் வரும்.
சென்னையில் நான் வசித்த இடத்தில் இது போல் ஒரு பள்ளி நடத்தினர். வேலையில் இருப்போர் கூட பகுதி நேரம் கல்வி பயிற்றுவித்தோம். அங்கே சாதி மத பேதம் என்றுமே இருந்ததில்லை. இப்போதும் அப்பள்ளி இருக்கிறதா என்று தெரியவில்லை. நாம் நினைத்தால் எதையும் எளிதில் மாற்றலாம். நமது வலிமை தெரியாமல் அரசியலாரை நம்புவதால் தான் இட ஒதுக்கீடு என்று மற்றவர் கையை எதிர் நோக்குகிறோம்.
3. இந்தியா விடுதலை பெற்று 59 ஆண்டுகள் கடந்துவிட்டன. தாழ்த்தப்பட்டவர்கள். ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டோர் இன்னுமா முன்னேறவில்லை? //
அது என்னமோ தெரியலா, என்ன மாய மந்திரமோ புரியலா. சொல்ல வாரேன், ஆனா வார்த்தை, வார்த்தைதான் வெளியே வரமாட்டேன்ங்கிறது... (கமல் குணா பேசுற மாதிரி ஒரு தபா பேசி பார்த்துகோங்க, சிவா... )
தருமி அய்யா,
நீங்கள் வந்து சொல்வீர்கள் என நினைத்தேன்.. அதனால்தான்..
வருகைக்கு மிக்க நன்றி
நக்கீரன்
முழுப் பதிவையும் படித்துவிட்டுதான் பின்னூடமிட்டுள்ளீர்கள்??!!.. அப்பறம் ஏன் மேலும் அதே கேள்வி...
உண்மையில் நிறைய பேர் BC/OBC மேல் அக்கறை கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது. உயர் சாதி கீரிமி லேயர் பற்றி குழலி பதிவைப் படித்தீர்கள்தானே..
உயர் சாதி க்ரீமிலேயரே தயாரா? By குழலி
http://kuzhali.blogspot.com/2006/09/blog-post_10.html
வருகைக்கு மிக்க நன்றி
FloraiPuyal,
ஜாதி ஒழிய வேண்டும் உங்கள் சிந்தனையை வரவேற்கிறேன். ஆனால் பாருங்க ஜாதி அடிப்படையில் தான் இன்னும் தாழ்த்தப்பட்ட மக்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். இதை யாரும் மறுக்க முடியாது. அதனால் இட ஒதுக்கீடை ஒழிக்க ஜாதியை ஒழிக்கலாம் என்ன பார்வை இன்றைய நிலையில் பயனளிக்காது.
மற்றப்டி அனைவரும் சேர்ந்து பள்ளி ஆரம்பிக்கலாம் என்பது இன்றைய நிலையில் சாத்தியக்கூறு மிகக் குறைவு. அதைவிட இப்பொழுது இருக்கும் அமைப்புகளில் என்ன செய்ய முடியும் என்று யோசிப்பது நலம்.
//இட ஒதுக்கீடு என்று மற்றவர் கையை எதிர் நோக்குகிறோம்.//
இது வார்த்தைகளில் ஆதிக்க சக்தி நான் பார்க்கிறேன்.
வருகைக்கு மிக்க நன்றி
தெகா
நல்லா சொன்னீங்க..
முன்னேற்றம் வரும்.. நம்புவோமாக..
வருகைக்கு மிக்க நன்றி
அன்பின் சிவபாலன். நான் சாதியைப் பற்றியே பேசவில்லை. இட ஒதுக்கீட்டைப் பற்றி மட்டும் தான் இங்கு பேசுகிறேன். ஏன் அனைவரும் கல்வி கற்கக் கூடாது என்று தான் கேட்கிறேன்.
சாதி மதம் என்பது ஒருவரது நம்பிக்கை. இவ்விரண்டையும் தாண்டி ஒருவர் தனது வாழ்நாளில் வெளிவருவது மிகக் கடினம். அப்படி வந்தோரை நான் பாராட்டுகிறேன். இங்கே நான் குறிப்பிட விரும்புவது முன்னேறியவர்களின் பாதுகாப்பின்மையும் அல்லாதோரின் ஆதங்கமுமே இன்றைய சாதிக்கொடுமைகளுக்குக் காரணம். இதற்கு முதல் மருந்து அனைவருக்கும் கல்வி என்பது மறுக்க முடியாதது.
நான் புதிதாகப் பள்ளிகள் தொடங்கச் சொல்லவில்லை. இருக்கும் கல்விக்கூடங்களை மக்கள் பொறுப்பேற்று வழிநடத்த வேண்டும் என்று தான் கூறுகிறேன். நமக்கு நாமே என்பதே நான் விரும்புவது. ஒருவருக்கு உணவளிப்பதை விட அவ்வுணவைத் தேடிக் கொள்ள பயிற்றுவிப்பது சிறந்ததல்லவா? தவிர நான் கூறுவது ஒன்றும் இயலாததல்லவே.
//
இது வார்த்தைகளில் ஆதிக்க சக்தி நான் பார்க்கிறேன்
//
என்ன சொல்கிறீர்கள் என்று புரியவில்லை. நமக்கு நமது வலிமை முதலில் தெரிய வேண்டும் என்று சொல்கிறேன். பார்ப்பனீயத்தை மற்றும் எல்லா ஈயங்களை விடவும் கொடிய அரசியலீயம் உருவாகி வருகிறது. அதை முளையிலே கிள்ள தவறி விட்டோம். இப்பொழுதாவது அதை முதலில் களைய வேண்டும்.
FloraiPuyal,
தங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி.
நீங்கள் சொல்லும் நமக்கு நாமே என்பது சாத்தியமாகலாம்.. நடைமுறை சிக்கல் நிறைந்தவை. ஆனால் நல்ல சிந்தனை. வரவேற்கிறேன்.
ஆதிக்க விசயத்தில் நீங்கள் சொன்ன விளக்கத்திற்கு நன்றி. புரிந்துகொண்டேன்.
வருகைக்கு மிக்க நன்றி
இந்தப் பதிவிற்கும் விவாதத்திற்கும் நன்றி! இது குறித்து நான் எழுத முனைந்ததை முன் எடுத்துச் செல்லவும் சில விஷயங்களை அறிந்து கொள்ளவும் உதவிகரமாக இருந்தது.
பிரபுராஜ துரை சார்
உங்களுக்கு இப்பதிவின் மூலம் சில விசயங்கள் கிடைக்குமெனின் நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும் செய்தி.
இது சம்பந்தமாக நீங்கள் எழுதபோகும் பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
வருகைக்கு மிக்க நன்றி
In Tamil Nadu reservation is in vigue since 1920s.The Amba Shankar
commission pointed out that some
castes benefit disproportionately
from reservations while many castes hardly get any benefit.
Is 88% of the population so socially and educationally backwrd
that they need reservation.Reservation cannot
erase or eclipse equality.
Hence creamy layer,50% limit are
reasonable.
///////
//15. இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெற்று, அதன் மூலம் டாக்டர்கள், வக்கீல்கள், துணைவேந்தர்கள், மாவட்ட ஆட்சியர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் என்று ஆனவர்கள் எல்லாம் முன்னேறியவர்கள் இல்லையா? அவர்களது பிள்ளைகளுக்கெல்லாம் இடஒதுக்கீடு எதற்கு? அவர்களை கிரீமி லேயர் பிரிவில் சேர்த்து, இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெறுவோர் பட்டியலில் இருந்து விலக்கிவிடலாமே? என்ற கருத்து இப்போது திட்டமிட்டு பரப்பப்படுகிறது.//
இதிலென்ன தப்பு... இதனால், அதே சமூகத்தில் உள்ள இன்னும் பின்தங்கியவருக்கு வாய்ப்பு கிடைக்கும் அல்லவா? இதிலென்ன திட்டமிட்டு பரப்பபடுகிறது,.. இதனால் உயர் ஜாதிக்காரன் ஆதாயம் அடையப்போவதில்லை... முன்னேறிய பிற்படுத்தப்பட்ட மக்களே, இன்னும் பின் தங்கியுள்ள தம் ச்மூகத்து மக்களுக்கு வாய்ப்பு தராமல், உயர்சாதிக்காரர்களை குறை சொல்லிக்கொண்டிருப்பது நகைப்புக்குறியது.. ஏனென்றால் இப்போது அவன் செய்வது அதே கொடுமை தான்.. உயர் சாதிப் பிற்படுத்தப்பட்டவன்....
//16. தந்தைதான் மேலே வந்து விட்டாரே... மகன் எப்படிப் போனால் என்ன? என்பதைப் போன்றது இது.//
தந்தை மேலே வந்த பின் (சமூகம்+பொருளாதாரம்).. தன் மகனை வழிநடத்த அவருக்கு எந்த சமூகத்தடையும் இல்லை என்று அர்த்தம்...உண்மையும் கூட...அதற்கு பிறகும் அவர்கள் முன்னேறவில்லையென்றால் அவர்களின் முயற்ச்சின்மையைத் தான் காட்டுகிறது.. இவ்ர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பளிப்பதின் மூலம், நீங்கள் அதே சமுகத்தில் இன்னும் பின் தங்கியுள்ள இன்னொரு குடும்பத்திற்கு அநியாய்ம் செய்கிறீர்கள்...
////////
இது தான் என் கருத்தும்.
Post a Comment
<< Home