அணுசக்தி உடன்பாடு - என்ன செய்கிறார்கள் இடதுசாரிகள்?
இந்தியா அமெரிக்கா இடையே ஏற்பட்டிருக்கும் அணுசக்தி உடன்பாடு, புரிந்துணர்வு என்ற நிலையிலேயே தொங்கிக் கொண்டிருக்கிறது.
அதாவது, இந்த அணுசக்தி உடன்பாட்டினால் ஏற்படும் நன்மைகள் என நமது பிரதமர் சொல்வது என்னவென்றால்,
நமது நாட்டின் மின் தேவைகளை சமாளிப்பதில், எதிர் காலத்தில் அணுசகதி மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும். தற்போது இந்திய எண்ணை நிறுவனங்கள் நாம் நுகர்வதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகத்தான் உற்பத்தி செய்கின்றன. இந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து குறைவாகவே இருக்கிறது.
இந்தியாவில் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு வளம் குறைவாகவே இருக்கிறது என்பது நம் எல்லாருக்கும் தெரியும். எண்ணை இறக்குமதி சுமையை இனியும் நம் பொருளாதாரம் தாங்காது.
இத்தகைய உண்மையான சூழ்நிலைகள், அதிகரிக்கும் நம் தேவையை சமாளிக்க புதிய திட்டத்துக்கு நம்மை கட்டாயப்படுத்தி உள்ளது. அதன்படி பார்த்தால் நமது மின் தேவைகளை தீர்க்க அணுசக்தி மற்றும் சூரியசக்தி போன்றவை முக்கிய பங்குவகிக்கும். எனவே தான், அணுசக்தியை மேம்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது என்கிறார்.
மேலும் இந்த உடன்பாட்டின் மூலம் 40000 MW மின்சாரம் 2025 வருடத்திற்குள் தயாரிக்க முடியும் என தெரிகிறது.
இதன் மூலம் அதிகரித்துவரும் மின் தேவையை சமாளிக்க முடியும் என நம்பப்படுகிறது.
ஆனால் இந்த உடன்பாட்டிம் மூலம், நாம் அணுசக்தி ஆயுதங்கள் சோதனை செய்ய முடியாது என எதிர்க்கட்சிகள், இடதுசாரிகள் சொல்கின்றனர். ஆனால் பிரான்ப் முகர்ஜி இதை மறுக்கிறார்.
இந்த பிரச்சனையால், ஆட்சிக்கே ஆபத்து என்ற நிலைமை. நிபந்தனை அற்ற ஆதரவு என்று சொல்லி வந்த இடதுசாரிகள் இப்பொழுது தன் நிலையில் மாற்றியுள்ளனர்..
இனி என்ன பல ஆயிரம் கோடி செலவில் புதுத் தேர்தல்தான்.. வாழ்க இந்திய ஜனநாயகம்.
சரி, எனக்கு இன்னொரு சந்தேகம், இந்த உடன்பாட்டிற்கு வேறு ஏதேனும் நாடுகள் முட்டுக்கட்டை போடுகிறதா? அதனால் தான் இவ்வளவு எதிர்ப்பா? இல்லை உண்மையிலேயே ஒரு ஆபத்தான உடன்பாடா?..
உண்மையில் என்ன நடக்கிறது?..
யாருமே இதைப் பற்றி பேசமாட்டீங்கறீங்க.. அதுதான் நம்ம ஆரம்பிப்போம் என்று நினைத்ததால் இந்த இடுக்கை..
10 Comments:
அமெரிக்க அணு தொழில் நுட்பத்தை நம்மிடம் தினிக்கும் ஒரு ஆரம்ப நிலையே இந்த ஒப்பந்தம் அதனால் நன்மை நாமக்குத்தான் ஆனால் கட்டிவாளம் பெரியண்ணன் கையில் இருக்கிறது... புதிய எந்த அணுத்ழொழில் நுட்ப பரிசோதனையும் அண்ணன் அனுமதி பெற்றே அல்லது அவர்களுக்கு தெரியப்படுத்திய பிறகோ செய்ய முடியும் இதனால்தான் இடதுசாரிகள் எதிர்கின்றனர் அப்படி அண்ணனுக்கு தெரியாமல் செய்யும் போது எல்லா ஒப்பந்தங்களும் மண்டையைப் போடும் என்பதே அண்ணனின் எச்சரிக்கை. அதாவது அணுசக்தி ஒப்பந்தம் எனும் தங்கக் கூண்டில் இந்தியா சாமி அவனிட்டத்தில் அப்றம் என்னா....
மகி
நம்ம NPTயில் கையெழுத்து இட முடியாது. அப்படி செய்தால், நாம் அவ்வளவுதான். நாம் கையெழுத்து இடவில்லை என்றால் நமக்கு எவனும் உதவி செய்யமாட்டீங்கறான். சீனாவிற்கு எல்லாம் எளிதாக கிடைக்கிறது. ஆஸ்திரேலியாவின் யுரேனியத்திலிருந்து எல்லாம்.
நமக்கு என்று வரும்போதுதான் எல்லாவித எதிர்ப்பும். நம்ம இடதுசாரிகள் திரைமறைவு வேலை ஏதாவது செய்கிறார்களா? என எனக்கு ஒரு சின்ன சந்தேகம்.
நாளைய தேவையை மனதில் கொண்டால் இந்த ஒப்பந்தம், NPT கையெழுத்து இடமாலேயே எனும் போது ஓரளவு சரி என்ப்படுகிறதி.. சில சுட்டிகளில் சென்று பார்த்ததை வைத்து சொல்கிறேன்.
என்னுடைய கருத்து தவறாக இருக்கலாம்.. ஏதாவது சுட்டி இருந்தால் கொடுங்க.. இடதுசாரிகளின் எதிர்ப்பு சரி என்பதற்கு..
தினமலர் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது..
அதன் சுருக்கம் கிழே..
மேலும் செய்திக்கு தினமலர் வலைத்தளத்தைப் பாருக்கள்.
கீழ்க்கண்ட நடைமுறைகளை இந்தியா பின்பற்ற வேண்டிய பொறுப்புகளையும் இந்த சட்டம் அளிக்கிறது.
1. மின் உற்பத்திக்கான அணுசக்தி, ராணுவ அணுசக்தி ஆகிய இரண்டாக இந்திய அணுசக்தித்துறை பிரிக்கப்பட வேண்டும் (இதன்படி இந்தியா பிரித்துவிட்டது).
2. சர்வதேச ஆய்வாளர்கள் இந்தியாவிலுள்ள அணு சக்தி வசதிகளைப் பார்வையிட அனுமதிக்க வேண்டும்.
3. எதிர்காலத்தில் அணு ஆயுத சோதனைகள் செய்யக்கூடாது.
4. இந்த சட்டத்தின் பிரிவு 104 (ஏ)(2)ன் படி, ஒப்பந்தத்தை ரத்து செய்ய எப்போதும் அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் உண்டு.
5. சட்டப்பிரிவு 103ன் படி, அணு ஆயுதங்களுக்குத் தேவைப்படும் பொருட்களை தயாரிக்கும் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும்.
6. சட்டப் பிரிவு 104ன் படி, அணு ஆயுதப் பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லக்கூடாது.
7. சட்டப்பிரிவு 105 (5)ன் படி, அணு ஆயுத உற்பத்தியை முழுவதுமாக நிறுத்தி வைக்க இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்பந்தம் தயார் செய்ய வேண்டும்.
இந்தியாவில் மின் சக்தி உற்பத்தி செய்யும் அணு உலைகளுக்கு, அணு எரிபொருட்கள் போதுமான அளவில் இல்லை. இந்நேரத்தில் மூன்றாவது பொக்ரான் அணு குண்டு சோதனை ஏன் நடத்த வேண்டும் என்ற எண்ணம் சிலருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்தியா வளர்ந்து வரும் சூழ்நிலையில் தேவையற்ற பொருளாதாரத் தடைகளுக்கு மீண்டும் ஏன் ஆட்பட வேண்டும் என்றும் கருதுகின்றனர்.வாஜ்பாய் அரசு மேற்கொண்ட அணு ஆயுத சோதனையில் போதுமான தகவல்கள் பெறப்பட்டுள்ளன என்று பாபா அணு ஆராய்ச்சி மைய தலைவர் ஆர். சிதம்பரம் அப்போது அறிவித்தார். புதிய அணு குண்டு வடிமைப்புகளுக்கான பரிசோதனை செய்வதற்காகத் தான் நாடுகள் அணு ஆயுத சோதனைகள் செய்கின்றன. ஒருவேளை சீனாவோ, பாகிஸ்தானோ அணு ஆயுத சோதனை செய்யும் பட்சத்தில் அந்த சூழ்நிலையில் நாம் சோதனை மேற்கொள்வதில் தவறில்லை என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர்.
அனானி
தயவு செய்து தொடர்புடைய சுட்டியை கொடுங்க..
அந்த சுட்டி எங்கோ போகிறது..
அன்புள்ள சிவபாலன்,
மன்மோகனும், பிரணாபும் சொல்வதாலேயா அவற்றை ஏற்றுக்கொள்ளத்தேவையில்லை.
மன்மோஹன் சிங்கும் நம்பகத்தன்மை இல்லாதவர் என்பதை அறிந்தபோது சற்று வேதனையாகத்தான் இருந்தது.
முதல்நாள், 'அணுகுண்டு சோதனை நமது இறையாண்மை சம்பந்தப்பட்டது, நாம் அதை விட்டுக்கொடுக்கமாட்டோம். இந்த ஒப்பந்தம் நம்மை அணு ஆயுத சோதனை செய்வதிலிருந்து எவ்விதத்திலும் தடுத்து நிறுத்தாது' என்கிறார் ...
மறுநாளே அமெரிக்காவிலிருந்து (Sean McCormick) உறுதியாக சொல்கிறார் 'இந்தியா அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டால், இந்த ஒப்பந்தமே ரத்து செய்யப்படும், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் இதுகாறும் தந்துதவப்பட்ட எரிபொருட்கள் திரும்ப பெறப்படும்' என்று.
இப்போது சொல்லுங்கள் இடதுசாரிகளின் பயத்தில் அடிப்படை இல்லையா என்று.
உண்மையில் நமது இறையாண்மை, மக்கள் நலம் என்பதெல்லாம் உண்மையெனில், ஏன் நமக்கு சாதகமாக இதை நிறைவேற்றக்கூடாது ? ஒப்பந்தம் நம் நிபந்தனைகளுக்கு ஏற்ப இல்லாவிட்டால் அப்படிப்பட்ட ஒப்பந்தமே தேவையில்லை என்று துணிவாக ஒரே குரலில் இந்தியா கூறுமாயின் அமெரிக்கா சர்வ நிச்சயமாய் இறங்கி வருமென்பதே என் எண்ணம்.
சீனா விஷயத்தில் ஒருவேளை மேற்குலகம் அடக்கி வாசிக்கலாம்; அவர்கள் இடும் நிபந்தனைக்கு கட்டுப்பட்டு ஒப்பந்தங்களை நிறைவேற்றலாம் (உ-ம். தொலைதொடர்பு துறையில் அந்நிய முதலீட்டு வரம்பை 74% வரை உயர்த்தியே ஆகவேண்டும் என்றெல்லாம் சீனாவில் யாரும் துடிப்பதில்லை. ஆனால் அங்கேதான் ஒப்பீட்டளவில் இந்தியாவைவிட செல்பேசி பயனாளர்கள் மிக அதிகம்)
அன்புடன்
முத்துக்குமார்
முத்துக்குமார்,
Sean McCormick) அவர் சொன்னதை மீடியாக்கள் தவறாக கொடுத்துவிட்டன. அவர் சொன்னது அது எந்த நாடாக இருந்தாலும் அப்படித்தான் என்று. அவர் கூறியதை வெள்ளை மாளிகை வேறு விதமாக சொல்லியுள்ளதே..
Washington, August 18: With the remarks of the US State Department spokesman creating an uproar in India, Washington has clarified to New Delhi that its position remains that the civil nuclear cooperation will not be suspended automatically even if an atomic test was conducted.
http://www.expressindia.com/fullstory.php?newsid=91015
எனக்கு தெரிந்து, நீங்கள் சொல்வதுபோல் கூட்டுக் குழுவின் மூலம் தீர விசாரிக்கலாம்..
ஆனால் இது எல்லாம் காங்கிரஸ் ஆட்சிக்குள் இந்த ஒப்பந்தம் நிறைவாது. சரி அடுத்த ஆட்சி யார் வந்தாலும், அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் உறுதி என்கிறார்கள். அப்ப இன்னும் இது சிக்கலை அதிகப் படுத்தும். எதுவாக இருந்தாலும் உரிய நேரத்தில் முடிப்பது அனைவருக்கும் நல்லது. அதற்காக தவறான ஒப்பந்தத்தை முடிக்க வேண்டும் என்று சொல்லவில்லை.
இடதுசாரிகள் செய்வது எல்லாம் சரி என்று நினைத்தாலும் இழப்பு இந்தியாவிற்கு என்பது என் எண்ணம்.
சிக்கல் மிகுந்த உடன்பாடுதான்..ம்ம்ம்..
கருத்துக்கு மிக்க நன்றி!
குமுதம் ர்ப்போர்டரில் வெளியாகியுள்ள கட்டுரையின் சுருக்கம் கீழே
முழுவதும் படிக்க குமுதம் ரிப்போர்டர் வலைத்தளத்திற்கு செல்லுங்கள்
அணுவாற்றல் மூலம் கணிசமான அளவில் குறுகிய காலத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு வெளிநாடுகளிலிருந்து பெரிய அணு உலைகளையும் அதற்கான செறிவூட்டப்பட்ட யுரேனிய எரிபொருளையும் பெறவேண்டியுள்ளது. அதே சமயம், நாமே வடிவமைத்துக் கட்டிய மற்றும் இனி கட்டுகிற அணு உலைகளையும், தேவையான அளவு இயற்கை யுரேனியப்பொருளையும் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து, முழுமையாக இயக்க முடியும். இதைத்தான் அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தத்திற்கு முக்கிய காரணம் என்று மத்திய அரசு கூறுகிறது.
அடுத்தகட்டமாக, மேலே குறிப்பிட்ட அணு உலைகளிலிருந்து வெளியேற்றப்படும் எரிபொருளிலிருந்து புளுட்டோனியப் பொருளைப் பிரித்தெடுத்து, அதன்மூலம் வேக ஈனுலைகளை நிறுவி மின்சாரம் தயாரிக்க முடியும். இதற்கு முன்னோடியாக, இத்தகைய வேக ஈனுலை ஒன்று கல்பாக்கத்தில் ஏற்கெனவே கட்டப்பட்டு வருகிறது.
புளுட்டோனியப் பொருளைப் பிரித்தெடுக்கக்கூடிய ஆலைகள் தற்போது அமெரிக்காவில் நிறுவப்படுவதில்லை. புளுட்டோனியம் அணுஆயுதங்களில் பயன்படுத்தப்படுகிற பொருள் என்பதுதான் இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஏற்கெனவே ஏராளமான அளவில் அமெரிக்கா புளுட்டோனியப் பொருளைத் தயாரித்துக் குவித்துவைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. அணுஆயுதம் கைவசம் உள்ளவை என்று ஏற்கப்படாத மற்ற நாடுகள், இத்தகைய ஆலைகளை நிறுவுவதையும் அமெரிக்கா ஏற்பதில்லை. அவை இத்தகைய ஆலைகளை நிறுவும் பட்சத்தில் அவற்றுடன் ஒத்துழைப்பு கூடாது என்கிறது அமெரிக்க சட்டம்.
இந்தக் கண்ணோட்டத்தில்தான், அமெரிக்காவுட னான 123 ஒப்பந்தத்தில், வெளிநாட்டு உதவியுடன் நிறுவப்பட்ட அணு உலைகளில் தோன்றிய புளுட்டோனியப் பொருளைப் பிரித்தெடுப்பதற்கு அமெரிக்கா சம்மதிக்க வேண்டும் என்று கூறி, அதற்கான உறுதியையும் இந்தியா பெற்றுள்ளது. இவை இந்த ஒப்பந்தத்தில் நமக்குச் சாதகமான அம்சங்கள்.’’
வேறு எந்த நாடுகளுடன் அமெரிக்கா இந்த ஒப்பந்ததத்தைச் செய்துள்ளது? அந்த நாடுகள் எப்படிப் பயன்படுத்துகின்றன?
‘‘உலகில் பல நாடுகளுடனும் அமெரிக்கா 123 ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. சீனாவைத் தவிர, மற்றவை அணுஆயுதம் கைவசம் இல்லாதவை என்பதால் அவற்றில் பல நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக, அணு உலைகளும் அணுவாற்றலைச் சார்ந்த ஏனைய நிறுவனங்களும் பன்னாட்டு அணுவாற்றல் ஏஜென்சியின் விரிவான கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்பவை இவற்றில் அடங்கும். தவிர, புளுட்டோனியம் தயாரிக்கக்கூடாது, யுரேனியப்பொருளை செறிவூட்டும் ஆலை அமைக்கப்படக்கூடாது. என்றாலும், ஜப்பான் நாடு புளுட்டோனியம் தயாரிக்க மற்றும் யுரேனியப் பொருளை செறிவூட்ட ஆலைகள் நிறுவுவதை அமெரிக்கா அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா ஜனநாயகமுறையை அமல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், இல்லாவிட்டால், அணுவாற்றல் துறையில் ஒத்துழைப்பு கிடையாது என்று அமெரிக்க நாடாளுமன்றம் சட்டம் கொண்டுவந்ததும் உண்டு. ஆனால், அமெரிக்க அரசு அதை ஏதேதோ சொல்லிச் சமாளித்தது என்பதும் உண்மை.’’
//அமெரிக்காவில் ஆட்சி மாற்றம் உறுதி என்கிறார்கள். அப்ப இன்னும் இது சிக்கலை அதிகப் படுத்தும். எதுவாக இருந்தாலும் உரிய நேரத்தில் முடிப்பது அனைவருக்கும் நல்லது. ...இடதுசாரிகள் செய்வது எல்லாம் சரி என்று நினைத்தாலும் இழப்பு இந்தியாவிற்கு என்பது என் எண்ணம். //
well said. unfortunately BJP also sinks low and playing against India's interests. they are going to loose educated one's support. third front is full of jokers and no one of them is taken seriously. I think congress should seek the support of mayawathi so that they are close to half way mark.
சிவபாலன்,
தங்கள் கருத்துக்கு நன்றி. நான் MSN India இணையப்பக்கத்து செய்தியில் McCormack ஒப்பந்தம் ரத்தாகும் என்றே சொன்னதாக படித்தேன்.
http://content.msn.co.in/News/National/NationalHT_160807_0849.htm
தோரிய அடிப்படையிலான அணு உலைகள் நடைமுறைக்கு வந்து இயங்க ஆண்டுகள் பிடிக்கும் நிலையில், இதுவே பெருகிவரும் நமது மின்சார தேவையை கணிசமாக பூர்த்தி செய்ய வல்லது என்ற நோக்கில், நான் இந்த ஒப்பந்தத்தை வரவேற்கவே செய்கிறேன்.
ஆனால் at what cost ? எதற்கு, எந்தளவிற்கு நாம் மண்டியிடவேண்டும் என்பதே இங்கு பிரச்சினை.
ஒப்பந்தம் நம்மை அதிகம் கட்டுப்படுத்தாத, நமக்கு அதிக சாதகமாக இருக்கும் பட்சத்தில் இடதுசாரிகள் இதை மறுக்கமாட்டார்கள் என்றே நம்புகிறேன்.
அன்புடன்
முத்துக்குமார்
This is Dinamalar Article about N-Deal
http://www.dinamalar.com/2007aug20/political_ind1.asp
Post a Comment
<< Home