ரஜினி - கமல் யார் சிறந்தவர்?!?!
நான் பத்தாம் வகுப்பு வரும் வரை எங்க ஊரில் ஓலைக் குடிசை திரை அரங்குதான். அதில் தரை டிக்கெட் என்பது வெறும் மணல்தான். டிக்கெட் விலை 75 பைசா, அடுத்து பென்ஞ்சு 1.25 பைசா. கடைசி 1.75 பைசா.
நான் கடைசி டிக்கெட்டில்லெல்லாம் அமர்ந்து படம் பார்த்தே இல்லை. பென்ஞ்சு அல்லது தரை, இவைக்களுக்குள்தான்.
இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், எங்களுடைய பள்ளியும் எங்களுடைய டியூசன் சென்டரும் இந்த திரை அரங்கிற்கு பக்கத்தில்தான்.
அதுவும் டியூசன் சென்டர், அரச மரத்தடியில் ஒரு மேடையில் இருக்கும். அந்த மேடையில் இருந்து பார்த்தால் திரை அரங்கிற்கு வருபவர்கள் போகிறவர்கள் எல்லாம் தெரியும்.
சரி இதில் சொல்ல வருவது என்னவென்றால், ரஜினி கிராம மக்களைக் கவர்ந்தாரா? அல்லது கமல் கிராம மக்களைக் கவர்ந்தாரா? என்பது தான். சரியில் இதில் எப்படி சிறந்தவர் என்று கூற முடியும்.. எது எதற்கோ மக்கள் தீர்ப்பு மகேஷன் தீர்ப்பு எனும் போது, இதற்கும் பொருந்தும் என நான் நினைக்கிறேன்.
சரி, ரஜினி படம் வெளியாகும் போது அந்த திரை அரங்கில் நடக்கும் காட்சியை விளக்குகிறேன்.
1. ரஜினி படம் (பழைய படம், புதுப் படம்) என்றவுடன் முதல் நாளே அவர்கள் இரசிகர்கள் மாலை, தோரணங்கள் என அந்த இடத்தை கலக்கிவிடுவர். அது போக ஊரில் எங்கு எங்கு முக்கியமான இடங்களோ அங்கேயும் இது போல் மாலை தோரணங்கள் தான். (இவை புதுப் படங்கள் - அதாவது நகரங்களில் ஓடி முடித்து எங்க ஊருக்கு முதன் முதலாய் வரும் படங்கள் என்றால் இன்னும் அதிகம்)
2. சரி, இரசிகர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் அப்படித்தான். ஆனால் நம்ம ஊர், பக்கத்து ஊர் வாசிகள்..அட்டா.. சும்மா சொல்லக்கூடாது, குடும்பமாக திருமணங்களுக்கு போவது போல் மாட்டு வண்டி கட்டி கிளம்பிவிடுவார்கள். அந்த திரை அரங்கைச் சுற்றி தோட்டம் என்பதால், அங்கே, மாட்டு வண்டி நிறுத்த தனி இடம் கொடுக்கப்பட்டிருக்கும். அதுபோக அவ்வாறு மாட்டு வண்டியில் வருபவர்களுக்கு டிக்கெட் தனியாக வழங்கப்படும்.
3. ரஜினி படம் வந்து முதல் மூன்று நாட்களுக்கு ஹவுஸ் புல்தான். டிக்கெட் கிடைக்கவே கிடைக்காது. அவரது ரசிகர்கள் மற்றும் முதல் மூன்று நாட்களுக்குள் பார்க்க வேண்டும் என்பவர்கள் எல்லாம் பார்த்த பிறகுதான் மற்றவர்கள் படை எடுக்க ஆரம்பிப்பார்கள்.
4. ரஜினி நடித்த வரும் படங்கள் எதுவானலும் சுமார் ஒரு வாரம் ஓடும். நல்ல படங்கள் குறைந்தது 10 நாட்கள். எல்லா நாளும் கூட்டத்திற்கு குறை இருக்காது.
5. நான் ஆறாவது நாள் அல்லது இன்றே கடைசி போட்டவுடன் பார்த்துவிடுவேன். நானும் அப்ப ரஜினி ரசிகன் தான்.
சரி இப்ப கமல் நடித்த படங்கள்.
மேல் சொன்ன எதுவும் அவ்வளவு எளிதாக கமலுக்கு பொருந்தாது.
கமல் படங்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் வரும், போகும். சகலகலா வல்லவன் போன்ற படங்கள் மேற் கூறியது போல் அனைத்து ஆர்ப்பாட்டங்களுடன் வந்து சென்றது. மற்றவை, கூட்டம் இருக்கும் ஆனால், திருவிழா போல் இருக்காது.
ஆக, அது போன்ற கிராமங்களில் ரஜினிதான் சிறந்தவர் (அய்யா, சிறந்தவர் என்பது கூட்டத்தை இழுப்பவர் என்று பொருள் கொள்ளவும்.. அங்கே அப்படித்தான் பேசிக்குவாங்க.. அதை அப்படியே சொன்னேன் அவ்வளவே)
ஆனால் உண்மையில் யார் சிறந்தவர் என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டுமா?
Kamal Hassan, one of the finest actors in the country was given his due recognition when the Sathyabama Deemed University conferred the doctorate on him on Monday evening at the Jeppiaar Nagar in Chennai.
நன்றி
அன்புடன்
சிவபாலன்.
42 Comments:
நல்ல பதிவு.
ஜேப்பியார் கொடுத்த டாக்டர் பட்டம் தான் கமலுக்கு கிடைத்த பொருத்தமான அங்கீகாரம் என்பதை ஒத்துகொள்கிறேன்:)
கமல்ஹாசனுக்கும் ரசினிக்கு உள்ள வித்தியாசம்...சிவாஜிக்கும் எம்.ஜி.ஆருக்கும்..உள்ள வித்தியாசம்...
சினிமாவ சினிமாவ மட்டும்...பார்த்திருந்தால்...இன்னைக்கு தமிழ் நாட்டின் தலை எழுத்துயே வேற...
கமலுக்கு எதற்கு இந்த அங்கீகாரம் என்று யாரவது விளக்குவாங்களா..
செல்வன் சார்,
ஆம்.. அந்த அங்கீகாரம் கமலால் பெருமை பெற்றது என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்! :)
டாக்டர்,
எந்த போட்டி என்றாலும் Tie Breaker என்று ஒன்று இருக்கும்.. அப்படி பார்க்கையில் இங்கே Tie Breaker என்பது என்ன என்பதுதான் கேள்வி? :)
பதில் சொல்லுங்க.. நேரம் கிடைக்கும் போது..
வாங்க TBCD,
சரியா சொன்னீங்க.. சினிமாவை சினிமாவா பார்க்கச் சொல்லி..
நன்றி
நன்றி...கமலுக்கு குடுத்த ஓட்டுக்கு
:-))
ஆகா மங்கை,
இப்படி சத்தமில்லாமல் என்னை மாட்டிவிட்டு போறீங்களே..
நம்ம கோயமுத்தூர் ஆட்களையே நம்பக்கூடாதுப்பா! :-))
கமலஹாசன் படங்கள் எந்த காலத்திலும் பெயர் சொல்லும்,
சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, அவ்வை சண்முகி, தேவர்மகன், விருமாண்டி என எந்தகாலத்தில் பார்த்தாலும் கலை என்ற நோக்கில் மிகச் சிறப்பாக செய்து இருப்பார்.
ஆனால் ஜனரஞ்சகம் என்ற பெயரில் ரிலிஸ் ஆகிய பின்பு ரஜினி படங்கள் திருவிழா காட்சி போல அப்பொழுதே எல்லாம் முடிந்துவிடுகிறது.
இதில் ரஜினி நடித்த ராகவேந்திரா தவிர எல்லாம் கரம் மசாலா படங்கள் தான். சினிமா இலக்கியம் என்ற எல்லைக்குள் வராது. கமெர்சியல் படங்கள்.
//இதில் ரஜினி நடித்த ராகவேந்திரா தவிர எல்லாம் கரம் மசாலா படங்கள் தான். சினிமா இலக்கியம் என்ற எல்லைக்குள் வராது. கமெர்சியல் படங்கள்.//
:))))
GK..எல்லாமே கரம் மசாலா படங்களா? :)))))
//ஆனால் உண்மையில் யார் சிறந்தவர் என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டுமா? //
இருவரும் உச்ச நடிகர்கள் என்றாலும் ,பல்கலைத் திறமையை வைத்து பார்க்கும் போது முழு சினிமா கலைஞன் என்ற முறையில் கமல் எட்டாத உயரத்தில் இருக்கிறார்
கமலஹாசனுக்கு காவடி தூக்குங்க...
யார்ங்க..கலை இலக்கியத்திற்கு வரையறை போடுறது..
இது தான்..இலக்கியம் அப்படின்னு...எப்படி சொல்லுறீங்க...
கதாப்பாத்திரங்களை மீறியவர்கள் இருவருமே...
//*கோவி.கண்ணன் said...
ரஜினி நடித்த ராகவேந்திரா தவிர எல்லாம் கரம் மசாலா படங்கள் தான். சினிமா இலக்கியம் என்ற எல்லைக்குள் வராது. கமெர்சியல் படங்கள்.*//
3 மணி நேரம் மூளையின் அணுக்களுக்கு திரைப்படம் மூலமாகத்தான் வேலை கொடுக்க வேண்டுமென்றால் இருக்கவே இருக்கார்.மற்றபடி திரைப்பட தர்க்கம் பார்க்க வேண்டாம், மனதை கொஞ்சம் கட்டவிழ்த்து விடுவோமென்பவர்களுக்கு ரஜனி.tbcd சொன்னது கூட ஒப்பீட்டுக்கு நல்லாவே இருக்குது.கடந்த காலங்கள் அதனையே பறைசாற்றுகின்றன.
எங்க ஊர் பக்கமெல்லாம் ராமராஜன்,விஜயகாந்த் படங்கள் வந்தாத்தான் தோரணம் கட்டுவதெல்லாம்!!!!!
கமலை ரஜனியுடன் ஒப்பிடுவது. தவறு. வேண்டுமானால் ரஜனியை ஆட்டுக்கார அலமேலுவை ஒரு திருவிழாவாக்கிய (சிவபாலன் இலக்கணப்படி) ஆட்டுன் வேண்டுமானால் ஒப்பிடலாம். ரஜனி சந்தைப்படத்தப்பட்டிருருக்கும் ஒரு நுகர்வுப்பொருள் சோப்பு சீப்பு போல. காலம் மாற மாற ஒரு கோடி கலர் பேப்பர்களுடன் வந்து ஆடிவிட்டுப் போகும்... அவ்வளவுத்தான்.
வணக்கம் சிவபாலன்,
உங்கள் கருத்து எல்லாம் சரி. ஆனால் கூட்டத்தை மட்டுமே வைத்து கருத்தை சொல்லி இருக்கிறீர்களே? சினிமா ஒரு கலை. அதில் காலத்தால் அழிக்கமுடியாமல் இருக்கும் படைப்புகளை வைத்தல்லவா நீங்கள் எழுதியிருக்க வேண்டும்? ரஜினி தகவல்கள் எல்லாம் உண்மை தான். நீங்கள் சொன்னது போல் கமலின் சில சிறந்த படைப்புகள் (உ.தா அன்பே சிவம், ஹே ராம்) வெற்றி பெறவில்லை தான்.ஆனால் அவை சினிமா விமர்சகர்களால் பெரிதும் பாரட்டப்பட்டவை (என்னிடம் ஆதரங்கள் உள்ளன தேவையானால் அனுப்புகிறேன்).காரணம்? கமலின் படைப்புகள் எல்லாம் வித்தியாசமானவை.
ஒரு ரஜினி படம் என்றால் ஏழையாக இருந்து பணக்காரனாக ஆவது, இல்லை சொத்துக்கு சொந்தக்காரன் ஆனால் வீட்டு வேலைக்காரனாக் இருப்பார்,இல்லை சொந்தம் அவரை ஏமாற்ற மீண்டும் பணம் சம்பாதிப்பார்.
(உ.தா முத்து, வேலைக்காரன், அருணாச்சலம், படையப்பா, அண்ணாமலை, சிவாஜி,(நிறைய படங்கள் எனக்கு பெயர் தெரியவில்லை), மற்றும் வர இருக்கும் எல்லா படங்களும்....)
சில மாறாத விஷயங்கள்
1. எஸ்.பி.பி முதல் பாடல்,
2. கொஞ்சம் அம்மா இல்லை தங்கை சென்டிமென்ட்,
3. ஒரு பாம்பு (எல்லா படமும் சிவாஜி உட்பட, சந்திரமுகியில் தேவை இல்லாமல் ஒன்று),
4. பன்ச் டயலாக்.
மேலே சொன்ன நிறைய இல்லாததனால் பாபா சரியாக போகாதது தெரிந்தது தான்.
அதனால் ஒரு ரசிகனாக நான் போய் திரையில் இதை எல்லாம் பார்த்தால் நான் எதிர்பார்த்தது எல்லாம் இருந்த சந்தோஷத்தில் திரும்புகிறேன். சில பார்முலாக்கலை மாற்றாமல் அவர் தன் மேல் நம்பிக்கை இல்லாதவராகத்தான் நான் பார்க்கிறேன்.
ஈசலாகத்தான் அவர் படங்கள்.
இங்கே சிவாஜி, எம்.ஜி.ஆர் பற்றி பேசினால். அந்த காலத்தில் சிவாஜியை விட எம்.ஜி.ஆர் க்கு தான் நிறைய ரசிகர்கள். ஆனால் இப்போது எம்.ஜி.ஆர் எங்கே? அவர் பெயர் அரசியலால் சில நேரம் கேட்கிறோம். ஆனால் கலை உலகில் சிவாஜி தான் சாகாவரம் பெற்றுள்ளார் (நீங்களும் ஒப்புக்கொள்வீர் என நினைக்கிறேன்). அதே நிலை தான் ரஜினிக்கும் ஏற்படும்.
ப்ளஸ்:
1. ரசிகர் மட்டுமே.
மைனஸ்:
1. ஒரே விஷயம் மீண்டும் மீண்டும்.
2. கலை வளர்க்க தவருகிறார்
சரி இப்போது கமலுக்கு வருவோம்.
இவர் படங்கள் சில ஓடாத காரணம். அவை எதிர்பார்ப்புக்கு பொறுந்தாதது தான் (அவர் படங்கள் ஒரே போல் இருப்பதில்லை அதனால் எல்லா ரசிகர்களும், மக்களும் தான் ஒரு விஷயத்தை கற்பனை செய்ய அது நிறைய பேரோடு ஒத்து போகாமல் போக படம் ஓடுவதில்லை). ஒரு முழு கலைஞர். ஒரு படத்தை தனி ஆளாக எடுக்கும் திறமை. நிச்சயம் சிவாஜியை மிஞ்சி விட்டார். ஹாலிவுட் படங்களுக்கு நிகராக ஒப்பிடும் தரம். இது ரஜினி படங்களில் மிஸ்ஸிங் (நிறைய படங்கள் சில வருடம் கழித்து பார்த்தால் சிரிப்பு வரும் என்பது உண்மையா இல்லையா? நீங்கள் தான் பதில் சொல்ல வேண்டும்)
மைனஸ்:
1. ரசிகர் மன்றம் வேண்டாம் என தனக்கு தானே குழி வெட்டிக்கொண்டார்.
2. படங்கள் பார்க்க வருபவர் எல்லாம் மிக்க படித்தவர் என நினைத்து விட்டார் (சில படங்களில் வரும் வசனம் பாமரனுக்கு புரிவதில்லை).
3. மீடியா ஆதரவு இல்லை.
ப்ளஸ்:
1. சினிமாவில் அ முதல் ஃ வரை தெரிந்துள்ளார்,
2. தோல்வி பயம் இல்லை (அது தான் நல்ல படைப்புகள் தரக்காரணம்).
3. எல்லாம் புதுமை.
இன்னும் சொல்ல நிறைய இருந்தாலும் முடிக்கிறேன். நான் மேலே சொன்ன எதுவும் உங்கள் அலசலில் இல்லையே நண்பரே??
மீண்டும் ஒரு பெரிய கட்டுரை எழுதுவீர்கள் என நினைக்கிறேன்.
என்னைப்பொருத்த வரை கமல், ரஜினி இருவரும் இப்போது தமிழ் சினிமாவின் கடவுள்கள். ஆனால் இப்போது மசாலாக்களை மட்டுமே நம்பி படம் எடுக்க வரும் சின்ன சின்ன கலைஞர்களை விட கொஞசமாவது ரஜினி வேறுபட்டால் தான் அவருக்கு மரியாதை.
ஒரு வீட்டில் ஒரு சின்ன குழந்தை செய்வதையே நல்ல பெரியவர் செய்தால் நன்றாகவா இருக்கும்? மீண்டும் ஒரு ராகவேந்திரா, ஆறில் இருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் வந்தால் ரஜினியை ரசிக்கலாம் ஆனால் அவருக்கு அந்த தைரியம் இருக்கிறதா? அல்லது தோல்வி பயத்தில் அதே மாவை மீண்டும் அரைக்கப்போகிறாரா? இமேஜ் தானாக ஏற்படுத்திக்கொண்டது தானே?
ஸ்ரீ
(யாரையும் புண்படுத்த எழுதவில்லை)
நல்ல பரிசலிப்பு!
கருவாடு விக்கிற கடையில நிறைய எப்ப பார்த்தாலும் கூட்டமிருக்கு. ஆனா, கல்லாவில வெறும் சில்லரைதான் மிஞ்சும். :-)
வைரம் விக்கிறவர் கடையில காத்தாடுது, ஆனா, எப்பாவவுது ஒருத்தர் உள்ளே வாரார், அதுவும் குவாலிட்டியான கஸ்டமரா :-)). இவ்விரண்டிற்கும் என்ன வித்தியாசம்.
நானும் ஒரு முறை மணல் திட்டுக் கட்டி படம் பார்த்திருக்கிறேனே, சிவா! அதுக்கெல்லாம் கொடுத்து வைச்சிருக்கணுமில்லையா, இருவேறு உலகங்களில் பிரவேசித்து பார்த்து இவ்வுலகை முழுதுமாக அனுபவித்து செல்வதற்கு.
நல்ல கலக்கல் பதிவு சிவபாலன்.
// ஜாகிர் said...
கமலை ரஜனியுடன் ஒப்பிடுவது. தவறு. வேண்டுமானால் ரஜனியை ஆட்டுக்கார அலமேலுவை ஒரு திருவிழாவாக்கிய (சிவபாலன் இலக்கணப்படி) ஆட்டுன் வேண்டுமானால் ஒப்பிடலாம். ரஜனி சந்தைப்படத்தப்பட்டிருருக்கும் ஒரு நுகர்வுப்பொருள் சோப்பு சீப்பு போல. காலம் மாற மாற ஒரு கோடி கலர் பேப்பர்களுடன் வந்து ஆடிவிட்டுப் போகும்... அவ்வளவுத்தான். //
ஜாகிர்..... :))))))))))))))))))) சரியாகத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். ரஜினியின் இன்றைய நிலை அப்படித்தான் இருக்கிறது. அதற்கு ரஜினியும் முக்கியக் காரணம். இவருக்கு நடிக்கவே தெரியாதா என்ன? முள்ளும் மலரும் இன்றைக்கும் எனக்குப் பிடித்த படம். மூன்று முடிச்சு..ஆகா...ஜானி, தில்லு முல்லு இப்பிடிப் படங்களையும் சொல்லலாம்தான். ஆனால் அதையெல்லாம் அங்கேயே விட்டு விட்டு இப்பொழுது இப்பிடி வந்து விட்டார். வயதுக்கேற்ற வேடங்களில் நடித்தால் நன்றாக இருக்கும். இல்லையென்றால்....படம் வரும் போது மட்டும் திருவிழா...மத்த நேரத்துல தெருவிழாதான்.
ஸ்ரீ, உங்கள் கருத்தோடும் நான் ஒத்துப் போகிறேன். எம்.ஜி.ஆர் படங்கள் ஓடிய ஓட்டம் உலகுக்குத் தெரியாததா...எம்.ஜி.ஆர் படங்கள்ள நல்லபடம் எதுன்னு கேளுங்க? பதில் சொல்றதுக்குள்ள கண்ணாமுழி வெளிய வந்துரும். அதே நடிகர் திலகம் படத்துல நல்ல படங்கள 50, 60, 70, 80, 90ன்னு பட்டியல் போடலாம். அந்தந்தக் காலத்துக்கான நடிப்பு அங்க இருக்கும். பூப்பறிக்க வருகிறோம் பார்த்திருக்கீங்களா? அதுல யாரோ அஜய்னு கதாநாயகனாம். ஆனா படத்துல இவருதான் அரசாங்கம். எல்லாருக்கும் ஒன்னு கேட்டுக்கிறேன். அந்தப் படத்தத் திருட்டு வீசிடிலயாவது பாருங்க. அப்பத் தெரியும்.
இப்ப இருக்குற நடிகர்களை எடுத்தாலும் இந்த விஜய் சூர்யா வேறுபாடு தெளிவாத் தெரியுதே. ரெண்டு பேருமே மசாலாப் படம் செய்வாங்க. ஆனா விஜய் நடிச்ச நல்ல படம்னா...காதலுக்கு மரியாதை, அப்புறம் ஒரு விக்ரமன் படம் வந்ததே..அவ்வளவுதான். மத்தபடி எல்லாம் ஒரே மாவுதானே. சூர்யா படம்னா...மசாலப் படங்கள்ளயும் ஒரு மாறுதலை எதிர்பார்க்கலாம். காக்க காக்க ஒரு மாதிரி...பிதாமகன் ஒரு மாதிரி...கஜினி ஒரு மாதிரி...பேரழகன் ஒரு மாதிரி...இதுதான் நாளைக்குப் பேசப்படும். போக்கிரிகளும் போக்கிரிராஜாக்களும் அல்ல.
¯í¸û À¾¢× «Õ¨Á. À¢ýëð¼í¸û «¨¾Å¢¼ «Õ¨Á
ராகவன்,
ஏதோ எம்.ஜி.ஆர் படங்களெல்லாம் ஓட்டமாக ஓடியது போலவும் ,சிவாஜி படங்களெல்லாம் வெறும் நல்ல பெயர் எடுத்ததாகவும் பெரும்பாலும் இப்போது சொல்லப்படுகிறது .ஆனால் உண்மை அதுவல்ல.
30 -களிலேயே நடிக்க வந்த எம்.ஜி.ஆர் 135 படங்கள் நடித்து முடித்த போது ,1952-ல நடிக்க வந்த சிவாஜி 200 படங்களை தாண்டியிருந்தார் .ஒரே நாளில் இரு படங்கள் ரிலீசாகி இரண்டும் 100 ஓடிய சரித்திரமெல்லாம் நடிகர் திலகத்துக்கு உண்டு . அது போல பாகப்பிரிவினை ரிலீசாகி 60 நாட்களில் பாசமலர் ரிலீசானது .இரண்டும் வெள்ளி விழா கண்டது .சும்மா தியேட்டரில் கேட்கும் விசில் சத்தத்தை வைத்து ரசிகர்களையும் ,வசூலையும் கணக்கு போட வேண்டாம். தமிழ் திரையுலக சரித்திரத்திலே 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரிலீஸாகி 100 நாள் ஓடிய படம் வீரபாண்டிய கட்டபொம்மன்.
// ஜோ / Joe said...
ராகவன்,
30 -களிலேயே நடிக்க வந்த எம்.ஜி.ஆர் 135 படங்கள் நடித்து முடித்த போது ,1952-ல நடிக்க வந்த சிவாஜி 200 படங்களை தாண்டியிருந்தார் .ஒரே நாளில் இரு படங்கள் ரிலீசாகி இரண்டும் 100 ஓடிய சரித்திரமெல்லாம் நடிகர் திலகத்துக்கு உண்டு . அது போல பாகப்பிரிவினை ரிலீசாகி 60 நாட்களில் பாசமலர் ரிலீசானது .இரண்டும் வெள்ளி விழா கண்டது .சும்மா தியேட்டரில் கேட்கும் விசில் சத்தத்தை வைத்து ரசிகர்களையும் ,வசூலையும் கணக்கு போட வேண்டாம். தமிழ் திரையுலக சரித்திரத்திலே 10 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரிலீஸாகி 100 நாள் ஓடிய படம் வீரபாண்டிய கட்டபொம்மன். //
இதெல்லாம் தெரிஞ்சவங்க நீங்க எடுத்துச் சொல்லனும். சொல்லுங்கய்யா..தெரிஞ்சிக்கிறோம்.
//எந்த போட்டி என்றாலும் Tie breaker என்று ஒன்று இருக்கும்.. அப்படி பார்க்கையில் இங்கே Tie breaker என்பது என்ன என்பதுதான் கேள்வி? :)//
டை என்று ஒன்று வந்தால் தான் டைபிரேக்கர் என்று ஒன்று வரும் சிவபாலன்:)
ஆனால் கமல் சிறந்த நடிகர் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.காரணம் கமலும் சரிகாவும் பிரிந்தபோது, சரிகா "உலகிலேயே சிறந்த நடிகர் என்றால் அது கமலஹாசன் தான்" என்று கண்ணீர் மல்க சொல்லிவிட்டு போனார்:)
கமலின் நடிப்பு சிரத்தை குறித்த தகவல்களை கலைப்புலி தாணுவிடம் கேட்டால் கதை கதையாக சொல்வார்.ஆளவந்தானில் பத்து நிமிஷ காட்சிக்கு 2 கோடி ரூபாய் செலவு செய்தாராம்.கடைசியில் எடிட்டிங்கில் அந்த காட்சியை கமலே வெட்டிவிட்டாராம்.தாணுவின் கண்ணில் அப்போது ரத்தக்கண்ணீரே வந்துவிட்டதாம்.படம் ரிலீசானபின் அவர் தற்கொலை செய்துகொள்ளாதது ஆண்டவன் புண்ணியம் என்கிறார்கள்.
கமல் ஒரு சூடோ-இன்டலெக்சுவல். கமல் ரசிகர்கள் எல்லாம் அறிவுஜீவி என சிலருக்கு நினைப்பு. அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ரஜினியை விட எந்த விதத்திலும் மேம்பட்டவரல்ல கமல்.அவர் நடித்த எந்த வேடத்திலும் அவரை விட சிறப்பாக ரஜினி நடித்திருக்க முடியும்.
திரையுலகில் கமலின் உண்மையான இடம், இரண்டாம் இடம்தான்.இரண்டு என்பது ஒன்றும் மோசமல்ல. பிராட்மனுக்கு அடுத்த இடம் என்பது பெருமைக்குரியதுதான்.அதுபோல் ரஜினியுடன் ஒப்பிடப்பட்டு பேசப்படுவது கமலுக்கு நிச்சயம் பெருமைதான்.
//ஆனால் கமல் சிறந்த நடிகர் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.காரணம் கமலும் சரிகாவும் பிரிந்தபோது, சரிகா "உலகிலேயே சிறந்த நடிகர் என்றால் அது கமலஹாசன் தான்" என்று கண்ணீர் மல்க சொல்லிவிட்டு போனார்:)
கமலின் நடிப்பு சிரத்தை குறித்த தகவல்களை கலைப்புலி தாணுவிடம் கேட்டால் கதை கதையாக சொல்வார்.ஆளவந்தானில் பத்து நிமிஷ காட்சிக்கு 2 கோடி ரூபாய் செலவு செய்தாராம்.கடைசியில் எடிட்டிங்கில் அந்த காட்சியை கமலே வெட்டிவிட்டாராம்.தாணுவின் கண்ணில் அப்போது ரத்தக்கண்ணீரே வந்துவிட்டதாம்.படம் ரிலீசானபின் அவர் தற்கொலை செய்துகொள்ளாதது ஆண்டவன் புண்ணியம் என்கிறார்கள்.
கமல் ஒரு சூடோ-இன்டலெக்சுவல். கமல் ரசிகர்கள் எல்லாம் அறிவுஜீவி என சிலருக்கு நினைப்பு. அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
ரஜினியை விட எந்த விதத்திலும் மேம்பட்டவரல்ல கமல்.அவர் நடித்த எந்த வேடத்திலும் அவரை விட சிறப்பாக ரஜினி நடித்திருக்க முடியும்.
திரையுலகில் கமலின் உண்மையான இடம், இரண்டாம் இடம்தான்.இரண்டு என்பது ஒன்றும் மோசமல்ல. பிராட்மனுக்கு அடுத்த இடம் என்பது பெருமைக்குரியதுதான்.அதுபோல் ரஜினியுடன் ஒப்பிடப்பட்டு பேசப்படுவது கமலுக்கு நிச்சயம் பெருமைதான். //
I really dont understand why we people compare kamal and rajini. As per me cinema is an art and kamalhasan is an artist. Rajini is not an artist but an entertainer you can compare rajini with many entertainers in the field but not with kamal and we are talking about skill not personal character, so dont use what sarika said. Do you think rajini would have done better in salangai oli or nayagan or aboorva sagothararkal or Thevar mahan certainly not rajini dont know dance,act,commitment or art. How can you expect rajini in kamal's shoes impossible. Now vijay is in rajini's place but no one can catch kamal's place. He is the complete packge of cinema.
Thanks
Silicon Sillu said...
¯í¸û À¾¢× «Õ¨Á. À¢ýëð¼í¸û «¨¾Å¢¼ «Õ¨Á
//
உங்கள் பதிவு அருமை. பின்னூட்டங்கள் அதைவிட அருமை/
சிவபாலனே,
பதினாறு வயதினிலே, மூன்று முடிச்சு, அபூர்வ ராகங்கள் படங்களுக்கு யாருக்காக கூட்டம் வ்ந்தது?
பாரதி ராஜாவுக்கா பாலச்சந்தருக்கா?
சகாதேவன்.
This comment has been removed by the author.
Mr.Selvan,
Rajini too is a good actor, and Latha is the rite person to certify him as she is seeing rajni acting to hide out his inability of marrying Amala.how many know this??!!(personally i feel rajni-Amala pair in real life, nicer!)
yes kamal fans are arivu jeevis.and That Arivu is instilled in us by Kamalji.
i think u became tensed as all the post were supporting kamal. but in that tension u forgot to note that almost all are gently agreeing that rajni took over kamal in Box Office. and thats the ONLY department where kamal is No.2 ACtually No.2 is not ba either, as u too said, and sometimes, yes sometimes even rajni too has been in No.2 in terms of BO!
and yes, Dhaanu didn't attempt suicide but do you know what was the state of the producer who made Nattukku oru Nallavan????
//அது போல பாகப்பிரிவினை ரிலீசாகி 60 நாட்களில் பாசமலர் ரிலீசானது .இரண்டும் வெள்ளி விழா கண்டது .//
சின்ன திருத்தம் .பாகப்பிரிவினை அல்ல , பாவமன்னிப்பு . பாகப்பிரிவினை-யும் வெள்ளிவிழா படம் என்பது வேறு விஷயம்.
//இதில் ரஜினி நடித்த ராகவேந்திரா தவிர எல்லாம் கரம் மசாலா படங்கள் தான்// one of rajini's finest films is mullum malarum.
However as far as acting is concerned one is Mt Everest and the other is just "Parangi malai". Kamal yawns for that perfection..that makes his films more enjoyable to 'slightly elite' class.
if Kamal is a better actor he would have had more fans and better box office turn overs...since common man do not like Kamal as much as Rajni..that can only mean Kamal doesn't attract people..that means Kamal is a lesser actor than Rajni...
isn't it simple enough?
East or West Rajni is BEST...now it is even coming to.. NORTH OR SOUTH..RAJNI IS BEST
பொதுவாக நல்ல திரைப்படங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு தேசிய விருது வரை செல்லும் படங்கள் வர்த்தக ரீதியாக வெற்றி பெறுவதில்லை .வர்த்தக ரீதியாக வெற்றி பெறும் படங்கள் விருது பெறும் தகுதியோடு இருப்பதில்லை .இந்த இடைவெளியை வெற்றிகரமாக குறைத்தது கலைஞானி கமல் தான் .அவருக்கு தேசிய விருது கிடைத்த படங்கள் மூன்றாம் பிறை ,நாயகன் ,இந்தியன் .மூன்றுமே மிகப்பெரிய வெற்றிப்படங்கள் .வெள்ளி விழா படங்கள் . கமல்ஹாசனின் பாக்ஸ் ஆபிஸ் திறமை பற்றி இங்கே உளறுபவர்கள் இதை கொஞ்சம் கருத்தில் கொண்டால் நல்லது.
then why can't Kamal be #1 in box office?
even Ramarajan gave "some" box office hits....1 or 2 or 3 hits don't count...so is Kamal..we can compare Kamal to Ramarajan.
Mister Somberi,
The reason why kamal is not No 1 in the box office is because of the foolishness of the majority of the people. Do you think ramarajan is equal to kamal? Certainly not. Rajini is most suitable to be compared with the ramarajan because both of them dont know the fact that cinema is an art. Box office alone doesn't decide who is better. In tamilnadu and kerala sakeela movies were exceptionally successful, so do you think she is a great actor? Rajini is also of same sort he is a mere entertainer nothing more than that. Here we are dicussing that who is the better not the better entertainer. Kamal movies are of world class, wait, rajini movies are also of world class but the rest of the world is watching his movies just as they watch some tom & jerry cartoon. So better go home and watch some padikkadhavan or paasakathavan which is suitable for your name but dont joke in this website.
who is best ? everyone has their own choice and reasons...like "who is best batsman sachin or lara ? best music director illayaraja or a.r rahman ?best singer s.p.b or hariharan? janaki or lathamangeshkar? amithab or sharuk ? siranjevi or nagarjun ? vijay or ajith? ...."
for all people have their own reason to say they r the best....
if you ask kamal he will say rajini is best in making people,children ,producers,theatre owners happy .
if you ask rajini(note already rajini have told answer for this) "kamal is the best actor he is just an entertrainer " kamal is best is acting...
siva everyone is best in one thing ..no one is best in everything...for me rajini and kamal both are best ..because both are in high spot than "good and better " both are best ...
rajini veriyan
if Rajni is giving what majority of the people want
Rajni is acting good( so people like him as a good entertainer) and he is a good businessman (giving what consumer wants)
then Kamal is nothing in both cases..
we can find better street performer, platform beggers on street who can act, dance and sing 1000 times better than Kamal..
so Kamal is nothing when it comes to acting for people's liking..or even acting....
ஓ மிஸ்டர் சோம்பேரி,
நடிப்புத்திறமை மட்டுமே காரணம் என்றால் தெருக்கலைஞர்கள் 1000 மடங்கு மேல் என்பது போல சொல்லி இருக்கீங்க. அப்போ காசு தான் முக்கியம்னு நீங்க சொன்னீங்கன்னா தெருவில் குரங்கு கூட தான் வித்தை காட்டி சம்பாரிக்குது அப்போ அதோட ரஜினியை ஒப்பிடலாமா மச்சான்? ஏன்யா ரஜினியே ஒப்புக்கொண்டார் கமல் தான் தன்னை விட சிறந்த நடிகர்னு அது உங்களுக்கும் தெரியும். உண்மையை ஒத்துக்க கஷ்டமா இருக்கா? உண்மை கசக்க தான் மாப்ளை செய்யும். Better try to accept facts buddy
சிவபாலன்
'ரஜினி கமல் யார் சிறந்தவர்?' என்ற - நடிப்பு, வசூல் என்று எதையும் ஒப்புமைப் படுத்தாத தட்டையான கேள்விக்கு 'இருவரும் அவரவர் பாணியில் சிறந்து விளங்குகிறார்கள்' என்றுதான் சொல்ல முடியும். இருவரும் பல்வேறு விதங்களில் சாதனை செய்திருக்கிறார்கள்.
ரஜினியால் இன்னும் சிறப்பாக எத்தனையோ நல்ல படங்களைத் தரமுடியும் - அதை அவர் செய்வதில்லை என்பது என் வருத்தம். பொழுதுபோக்கு, வசூல் என்ற பெயரில் சிவாஜி மாதிரி படங்களையெல்லாம் அவர் செய்யத்தான் வேண்டுமா? முத்து, அண்ணாமலை, வீரா போன்றவற்றில் இருந்த எளிமையும், அழகும், நேர்த்தியான கதையமைப்பும் காட்சிகளும் ஏன் காணாமல் போய்விட்டன?
கமலைப் பற்றிச் சொல்வதென்றால் நடிகர் என்ற எல்லைக்குள் நில்லாமல் திரைப்படத்தின் பல துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறார். அந்த நிபுணத்துவம் அவரது படங்களை மெருகேற்ற நிறைய உதவுகிறது - பலன் - நமக்கு நல்ல படங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன.
ரஜினி தற்போதைய உச்ச நடிகர் என்ற இடத்தைத் தக்க வைத்துக்கொண்டே - ஆனால் சிவாஜி போன்று செய்யாமல் - அண்ணாமலை, முத்து, ஏன் முள்ளும் மலரும், தில்லு முல்லு போன்ற படங்களைத் தரமுடியும். அவர் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவரவர் திறமையையும் சாதனைகளையும் மனம் விட்டு பாராட்டத் தவறியதேயில்லை.
இந்த நட்பைப் புரிந்து கொண்டு இருவரின் சிறப்பான தனித்தன்மையை ரசித்துக் கொண்டிருப்பது ரசிகனுக்கு அழகு.
இருவரையும் ஒரே தராசில் நிறுத்த முயல்வது சரியல்ல.
Sri machi you got the point..If a kurangu can make more money(general audience paying) than Rajni..that Kurangu must be better act..don't you think so?
that is why i am saying Kurangu and Kamal are same because they are behind Rajni when it comes to attracting "general audience",,,,,
I dun see this as a honest opinion on the abilities of Kamal or Rajini..
Generation of tamilians have been lining up between two camps to war at each other..
yesterday it was Sivaji vs MGR
today its Rajini vs kamal.
Though we witness a smooth relationship between the matinee idols we waste our energy and time trying to find fault with each of them...
The actual title of this post cud be changed to who is better Rajini fan or kamal fan.. then we would definitely have more purpose to fight each other...
I second selvan's thought that kamal fans are desparate to prove themselves as genius and belittle the other lot which is simply unacceptable
The fact lies both make movies of the same kind...
Shreya who is much younger to Rajini is paired with him in his latest flick sivaji.. kamal similarly is paired with asin whos should also be his daughter's age...
Commerce and kudos are equally important for them to survive..they know their markets better
For someone who mentioned kamal doesnt have a rasigar manaram.. he does have one.. which is also engaged in the same type of activities which rajini manrams do..
rajini its called rasigar manarams
kamal its narpani manram
well to say that vijay has come up to capture rajini's place
whoeva said that havent u guys seen vikram in action pithamagan..kasi which is a much improvised version of playing a blind man's character than kamal's raajapaarvai..
Well avvai shanmughi,thenali,PKS,vasool raja.. what genre of films do they belong to
someone said cant imagine Rajini in the role of nayagan...
so do we cant think of kamal as Baasha...
not to hurt anybody just expressing my thoughts
Thanks
Dev
Hey come on guys all the rajini fans know this greedy man who always get a lot of money from cinema industry but will invest it back in tamilnadu. I accept kamal cant play the role of baasha because only cartoon characters like him can act in those kind of movies which has got no logic. Some body asked that what kind of movie are these thenali,pks etc. Those are the movies which teaches the real homour to the tamil industry rather than making ugly fun on others in the movies. Somberi is comparing kamal to monkey it shows his calibre. Mister somberi a monkey cant get national award at the age of 5. We accept that rajini is good entertainer the reason is the poor taste of the tamil industry. Hey come on man how a tooth pick like person can fight with ten persons please ask rajini to learn something from amithab in selecting the roles ask him to stop spoiling the tamil cinema by acting movies like sivaji. Even in the same movie he is talking a lot reformation of the country the only good thing he can do to the country is to stop acting movies
//"ரஜினி - கமல் யார் சிறந்தவர்?!?!" ///
இப்போ நாட்டுக்கு ரொம்ப முக்க்க்க்க்கியம்......
ஏன் சிவா நீங்களும் இப்படி?
-அபுல்
யய்யா. எனக்குத் தெரிஞ்சு ரஜினி Vs. கமல்னு தலைப்பு வச்சி கற்காலத்துல இருந்து இந்தப் பதிவு வரை நடைபெற்ற விவாதங்கள் எதுவும் ஒழுங்கா அடுத்தவரைத் திட்டாம நடந்ததா சரித்திரமே இல்லை.
இது மட்டும் விதிவிலக்கா?. பாருங்க இப்போ இந்த ஆட்டைல கமல், ரஜினி தவிர, எம்ஜியார், சிவாஜி, அமிதாப், ராமராஜன், விஜயகாந்த், ஆட்டுக்கார அலமேலு, குரங்கு குசலா என்று எல்லாரையும் இழுத்துவிட்டாச்சு.
நீங்களும் நானும்தான் பாக்கி சிவபாலன் :-)
நான் இனிமே இந்த ஆட்டைக்கு வரமாட்டேன்!
when it comes to popularity both are equal only. at the same time, rajini's cine popularity cannot be converted into political votes[we saw this at elections2004] and kamal's popularity cannot be converted into cinema tickets, becos he tries different plots each and every time, none of his recent films are similar. so this popularity will assure him an opening equal to rajni but sustainance is surely based on talent, wicdh sometimes shines and sometimes shades...
so kamal is on right track. but rajni, as many siad here is yet to comeback again with ngood films. the bad thing is, he, after having such big power and popularity not using them on trying good films. the gud thing is he still has that chance
and mr.dev u said kamal fans are desperate to prove they are arivujeevis. not so. becos its a truth. i dont mean that only kamal fans see and digest world movies but most of the kamal fans are so. infact even kamal films itself are deep and intricate. see the below post by a kamal fan.
http://www.allthingskamal.info/blog/2007/08/09/kamal-in-his-elements/
can u expect such stuff from a rajini fans??? most of kamal fans promptly accept kamal is next only to rajni when it comes for Bo. but its only rajni fans who tris to burry the past recors of kamal where many times he overrided rajni films. infact kamal still has some record unbroken
Post a Comment
<< Home