சாதனை படைத்த சாந்தி!! வாழ்த்துக்கள்!!



தோகாவில் 15வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. தடகள பிரிவில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கட்டக்குறிச்சியை சேர்ந்த சாந்தி, வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இதன் மூலம் இந்தியாவுக்கு தடகள போட்டியில் முதல் பதக்கத்தை பெற்றுத்தந்தவரும், தமிழக விளையாட்டு வீரர்களில் முதலாவது பதக்கம் பெற்றவர் என்பதும் பெருமைக்குரிய சாதனையாகும்.
இந்த சாதனை படைத்த சாந்தி, ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர் செங்கல் சூளையில் கூலி வேலை செய்கிறார்கள்.
இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்துள்ள சாந்தியின் சாதனையைப் பாராட்டி அவருக்கு ரூ. 15 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி, நேற்று அறிவித்தார்.