Thursday, August 31, 2006

வெற்றி பாதையில் விஜயகாந்த்..



ஏ சி நீல்சன் நடத்திய சர்வே முடிவுகள்


தேமுதிக கட்சி செல்வாக்கு
மே'06 - 8.4%
ஆகஸ்ட்'06 - 13.9%


தெற்கு மண்டலம்
மே'06 - 7.7%
ஆகஸ்ட்'06 - 10.6%


மேற்கு மண்டலம்
மே'06 - 9.7%
ஆகஸ்ட்'06 - 17.8%


மத்திய மண்டலம்
மே'06 - 6.3%
ஆகஸ்ட்'06 - 13.0%


வடக்கு மண்டலம்
மே'06 - 9.0%
ஆகஸ்ட்'06 - 14.2%


நன்றி: தினகரன்

Wednesday, August 30, 2006

HIP HOP இசை இரசிகர்களுக்கு..



Hip Hop - இந்த இசைப் பற்றி பல பேர் அறிந்திருக்கலாம். இருந்தாலும் ஒரு சிறிய அறிமுகம்..

Hip hop music (also referred to as rap or rap music) is a style of popular music.

Typically, hip hop music consists of one or more rappers who tell semi-autobiographic tales, often relating to a fictionalized counterpart, in an intensely rhythmic lyrical

"மேலும் அறிய இங்கே செல்லுங்க.."


உண்மையாகவே இந்த இசை கேட்பதற்கு ஜாலியாக உள்ளது. நீங்களும் இரசித்து கேட்டுப்பாருங்க..

தற்பொழுது மிகவும் பிரபலமாக உள்ள மற்றும் எனக்கு பிடித்த பாடல்களை இங்கே கொடுத்துள்ளேன்.. கேட்டு மகிழுங்கள். இங்கே விடியோவாகவும் உள்ளது. அதனால் பார்த்தும் மகிழுங்கள்.


1. "UNFAITHFUL BY RIHANNA." இந்த பாடல் ஒரு பெண் தனது ஆண் துனைக்கு துரோகம் செய்துவிட்டு வருந்துவது போல் காட்சி அமைத்திருக்கிறார்கள். கீழே பாடலின் சில வரிகளை கொடுத்துள்ளேன்.

Story of my life
Searching for the right
But it keeps avoiding me
Sorrow in my soul
Cause it seems that wrong
Really loves my company



2. "Ridin' Dirty Ft Krayzie Bone BY Chamillionaire.." இந்த பாடல் உங்களை ஆட்டம் போட்டு பாடம் வைக்கும். கண்டிப்பாக பாருங்க / கேளுங்கள்..

பாடலின் சில வரிகள்..

They see me rollin
They hatin
Patrolling they tryin to catch me ridin dirty
Tryin to catch me ridin dirty
Tryin to catch me ridin dirty


3."It's Goin' Down BY Yung Joc." இந்த பாடலும் துள்ளல் மிகுந்த பாடலே..

பாடலின் சில வரிகள்.

meet me in the Trap
it's goin down
meet me in the mall
it's goin down
meet me in the club
it's goin down
anywhere you meet me guaranteed to go down

4. "Buttons Ft Snoop Dogg BY Pussycat Dolls.." இந்த பாடலில் கொஞ்சம் விரசம் அதிகம்.. அதனால் Viewers Discretion Recommended.

பாடலின் சில வரிகள்..

I'm telling you to loosen up my buttons babe (uh huh)
But you keep frontin' (uh)
Sayin' what you gon' do to me (uh huh)

Friday, August 25, 2006

வெள்ளிக்கிழமை ஸ்பெஸல்..- படம் பார்க்க வாங்க.






Tuesday, August 22, 2006

Covansys India - சென்னையில் வேலைவாய்ப்பு..

Covansys India சென்னையில் வேலைவாய்ப்பு உள்ளது. கிழே அது சம்பந்தப்பட்ட விவரங்கள் கொடுத்துள்ளேன்.. பார்த்துக்கொள்ளவும்..

இங்கே பதிவு படிக்க வருபவர்கள் நிறைய பேருக்கு நன்பர்கள் இருக்கலாம். அவர்களுக்கு இந்த விசயத்தை தெரியபடுத்தினால் நிச்சயம் உபயோகமாக இருக்கும்..

இந்த வேலைவாய்பில் ஆர்வம் உள்ளவர்கள் இங்கே பின்னூடமாக உங்கள் Email முகவரியை கொடுங்கள். நான் இந்த Covansys India வேலை செய்யும் எனக்கு மிகவும் தெரிந்தவரின் Email முகவரியை தருகிறேன் மேற்கொண்டு தொடர்புகொள்ள..

உங்கள் பின்னூடத்தை வெளியிடமாட்டேன்...

Monday, August 21, 2006

பாலுணர்வு - Readers Discretion Recommended..


பொதுவாக பாலுணர்வு என்பது ஒரு குற்றமான காரியமாகவே பெரும்பாலான மனிதர்களால் எண்ணப்படுகிறது. உலகம் தோன்றியதிலிருந்து இன்று வரையிலும் பாலுணர்வு மனித இனத்தின் அத்தனை பிரிவினரையும் கவர்ந்துள்ளது. இதன் அடிப்படையில் கலை, இலக்கியம், ஆகியவையும் அமைந்துள்ளன.

அதே சமயம் மதம், தத்துவம், சட்டம் போன்ற மனித நடத்தைகளை வடிவமைக்கும் கூறுகள் பாலுணர்வு பற்றிய மதிப்பீடுகளையும் நம்பிக்கைகளையும் நிறுவ முயன்றுள்ளன.

எனவே வரலாற்றின் அடிப்படையில் பார்க்கப் போனால் கலாச்சாரங்களின் எழுச்சியும், வீழ்ச்சியும் கூட மரபு சார்ந்த அல்லது மரபை மீறிய பாலுணர்வுப் பழக்கங்களாலும் சிந்தனைகளாலும் ஏற்பட்டுள்ளன என ஆணித்தரமாகக் கூற முடியும்.

ஒரு வகையில் இத்தகைய பாலியல் பற்றிய கல்வியின் மூலம் நாம் மனிதர்கள் மற்றும் மனித இயல்பின் சிக்கல்களையும் பற்றித் தரிந்து கொள்ள முடியும்.

உளவியல் அறிஞர் சிக்மண்ட் பிராய்டின் கருத்துப்படி பாலுணர்வு என்பது ஓர் ஆற்றல் வாய்ந்த உளவியல் மற்றும் உடலியல் சக்தி என்பதே.

ஹென்றிமில்லர் என்ற இலக்கியமேதை தனது நாவல்களில் பாலுணர்வு பற்றிய வெளிப்படையான உரையாடல்களைக் கையாண்டு மனித வாழ்வில் பாலுணர்வுன் முக்கியத்துவத்தைத் தௌளத் தௌவாக எடுத்துக் காட்டுகிறர்.

சுவேதகேது என்பார் நந்திதேவரின் காமசாஸ்திர நூலை ஆய்ந்து அதைச் சுருங்கச் சொல்ல விரும்பி 500 அத்தியாயங்களுக்குள் அடக்கி ஒரு நூலாக இயற்றினார். ஆனால் இந்த நூலும் பெரியதாக இருப்பதாக எண்ணிய பாஞ்சால நாட்டைச் சேர்ந்த பப்ரவ்யன் என்பார் அதையே 150 அத்தியாயங்களுக்குள் சுருக்கிச் சொன்னார்.

பாலுணர்வு ஆழமான ஒரு பொருள் உள்ளது. அது மனித ஆளுமையின் ஒட்டுமொத்த பரிமாணத்தையும் கொண்டது என்பதே ஆகும். எனவே வெறும் பாலுணர்வுக் கிளர்ச்சியை மட்டுமே செக்ஸ் என்ற வார்த்தைக்கு அர்த்தமாகக் கருதுவது அறியாமையிலும் அறியாமை தான்.

பாலுணர்வு மிகவும் நுண்ணியமான விஷயமாகக் கருதப்படுவதால் இதைப் பற்றிய கருத்துக்கள் சமூகத்தில் பல தட்டுக்களில் இருப்பவர்களிடையே வேறுபடுகின்றன.

பாலுணர்வுகளைச் சுற்றியுள்ள கலாசார, ஒழுக்கக் கட்டுப்பாடுகளைப் பற்றி அறிந்துகொள்ள இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அவர்கள் கருச்சிதைவு, திருமணத்திற்குமுன் உடலுறவு, கருத்தடை சாதனங்கள், ஓரினச் சேர்க்கை போன்ற விஷயங்கள் பற்றி விவாதிக்கவும் பேசுவதற்கும் ஒரு களம் இவர்களுக்கு அமைந்தாலொழிய சமுதாயத்தில் உண்மையான நல்ல மாற்றங்களை ஏற்றபடுத்த வாய்பில்லை.

" பாலியல் கல்வியின் அவசியம் பற்றி இங்கே" நன்றாக அலசியுள்ளார்கள். அதையும் படிங்க...

ஷெனாய் இசை மேதை "பாரதரத்னா" பிஸ்மில்லாகான் மரணம்

Free Image Hosting at www.ImageShack.us

உலக புகழ்பெற்ற ஷெனாய் இசை மேதை "பாரதரத்னா" உஸ்தாத் பிஸ்மில்லாகான் இன்று (21-08-06) அதிகாலை மாரடைப்பால் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 91.

பிஸ்மில்லாகான் 1916ம் ஆண்டு மார்ச் 21ந் தேதி அரண்மனை இசை கலைஞர்கள் குடும்பத்தில் பிறந்தார். வாரணாசி விஸ்வநாதர் கோயிலில் ஷெனாய் இசை கலைஞராக இருந்த அவருடைய மாமா அலிபக்ஸ் விலை யாட்டுவிடம் பிஸ்மில்லாகான் ஷெனாய் இசைக்கருவி வாசிக்க பயிற்சி பெற்றார்.

அவர் தனது வாழ்நாளில் உலக நாடுகள் பலவற்றுக்கும் சென்று தனது இசைத்திறமையால் மக்களை மகிழ்வித்தார். இந்தியாவின் உயரிய விருதான "பாரதரத்னா' விருது 2001ல் அவருக்கு வழங்கப் பட்டது. இது தவிர, பத்மவிபூஷண், சங்கீத நாடக அகாடமி விருது, தான்சேன் விருது போன்ற பல்வேறு விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

எளிமையாக வாழ்ந்த பிஸ்மில்லா கான் எங்கு சென்றாலும் சைக்கிள் ரிக்ஷாவில்தான் செல்வதை வழக்க மாக கொண்டிருந்தார். மறைந்த பிஸ்மில்லாகானுக்கு 5 மகன்களும், 3 மகள்களும் இருக்கிறார்கள்.

பிஸ்மில்லாகான் மறைவை யொட்டி இன்று ஒருநாள் தேசிய துக்க தினமாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பதிவு எண்:50. இப்படியும் ஜெயிக்கிறது இங்கிலாந்து...

Darrell Hair removes the bails after Pakistan refused to take the field


இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையேயான கடைசி மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி லண்டனின் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது. இதில் இங்கிலாந்து முதன் இன்னிங்சில் 173 ரன்னில் சுருண்டது. இதையடுத்து ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 504 ரன்கள் குவித்தது.

2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து ஒரு விக்கெட் இழப்பிற்கு 78 ரன் எடுத்தது. 56-வது ஓவரை உமர்குல் வீசினார். இந்த ஓவர் முடிந்தவுடன் நடுவர்கள் டாரல் ஹேர் மற்றும் பில்லிடாக்ரோவ் ஆகியோர் பந்தை ஆய்வு செய்தனர்.அதன்பிறகு பந்தை பாகிஸ்தான் வீரர்கள் சேதப்படுத்தி உள்ளதாக குற்றம்சாட்டினர்.

இதனால் இங்கிலாந்து மேலும் பந்தும் மாற்றப்பட்டது. அணிக்கு கூடுதலாக 5 ரன்கள் வழங்கப்பட்டது. பாகிஸ்தான் கேப்டன் இன்ஜமாம் உள்பட வீரர்கள் அனைவருக்கும் கடும் அதிர்ச்சியாக இருந்தது.

தேனீர் இடைவேளைக்கு சென்ற பாகிஸ்தான் வீரர்கள் அதன்பிறகு விளையாட வர மறுத்துவிட்டனர். நீண்ட நேரத்திற்கு பிறகு பாகிஸ்தான் வீரர்கள் விளையாட சம்மதித்து மைதானத்தில் களம் இறங்கினார்.

ஆனால் நடுவர்கள் அப்போது மைதானத்தை விட்டு வெளியே வந்துவிட்டனர். மேலும் போட்டியை தொடர்ந்து நடத்த அவர்கள் மறுத்து விட்டனர். ஐ.சி.சி.யின் விதி 2.10-ன் படி பாகிஸ்தான் அணி விளையாட மறுத்ததன் காரணமாக இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

வரலாற்றில் முதன்முறையாக அதுவும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து 129 ஆண்டுகளில் ஒரு அணி விளையாட மறுத்து மற் றொரு அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவது இதுதான் முதன்முறையாகும்.

இது தொடர்பாக ஆலோசகர்கள் கூறுகையில் 26 கேமிராக்கள் மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது. இதில் ஒன்றில் கூட பந்து சேதம் அடைந்ததாக படம் எடுக்கப்படவில்லை.

நன்றி: மாலை மலர்.

Darrell Hair no-balls Muttiah Muralitharan in 1995

Sunday, August 20, 2006

வ.வா.சங்கத்திற்காக...



வ.வா.சங்க உறுபினர்கள் மற்றும் நகைச்சுவையை இரசிக்கனும் என்று நினைப்பவர்கள் கொஞ்சம்
" இங்கே போயிட்டுவாங்க.." கைப்புள்ள என்ன செய்கிறார் என்று அறிய...

Friday, August 18, 2006

Non - வெஜிடேரியன்களுக்கு மட்டும்..

"இங்கே போங்க" நல்ல விசயம் உங்களுக்கு காத்திருக்கிறது.


"திரு.செல்வன் அவர்கள்" ஒரு பதிவு போடிருக்கிறார்... அதையும் படியுங்க..

பாடல்: மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி


வெளையற பூமியடா வெவசாயத்தை பொறுபா கவனுச்சு செய்யுறோமடா

உண்மையா உழைக்கிற நமக்கு எல்லா நன்மையும்களும் நாடி வந்துகூடுதடா..

மணப்பாறை மாடு கட்டி மாயாவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்னக்கண்ணு
பசுந்தழைய போட்டு பாடு படு செல்லக்கண்ணு

ஆத்தூரு கிச்சடி சம்பா பாத்து வாங்கி விதை விதைச்சி
நாத்த பறிச்சி நட்டுப்போடு சின்னக்கண்ணு
தண்ணிய ஏற்றம் புடிச்சு இறக்கி போடு செல்லக்கண்ணு

கருதை நல்ல வெளையச்சு மருத ஜில்லா ஆளை வச்சி
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னக்கண்ணு
நல்லா அடிச்சி கூட்டி அளந்து போடு செல்லக்கண்ணு

( என்றா.. பல்லக்காட்ட்ற... அட தண்ணிய சேந்து...)

பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே
விருதுநகர் வியாபாரிக்கு சின்னக்கண்ணு
நீயும் வித்து போட்டு பணத்தை எண்ணு செல்லக்கண்ணு


சேத்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
உங்க அம்மா கையில கொடுத்து போடு சின்னக்கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்லக்கண்ணு

மணப்பாறை மாடுகட்டி...


படம் : மக்களைப் பெற்ற மகராசி

வருடம் : 1957

பாடலை இயற்றியவர் : மருதகாசி

பாடலைப் பாடியவர் : T.M.சவுந்தர்ராஜன்

பாடலுக்கு இசை அமைத்தவர் : கே.வி.மகாதேவன்

ராகம் : சிந்து பைரவி

இயக்கியவர் : ஏ.பி.நாகராஜன்

நடித்தவர் : நடிகர் திலகம் சிவாஜி கனேசன்

தயாரிப்பு : நடிகர் வி.கே.ராமசாமி

.

"பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள்....."

ஐ.ஏ,ஸ், ஐ.பி.எஸ். தேர்வுகளில் மாபெரும் அநீதி...

SC - 15%, ST - 7.5%, OBC - 27%

மொத்தம் 49.5% இடம் ஒதுக்கப்படுவதை அரசியல் சட்டம் கட்டாயமாக்குகிறது.

மீதமுள்ள 50.5% இடங்கள் பொதுப் பட்டியலில் இருக்கவேண்டும். ஆனால் இங்குதான் மிகப் பெரிய சமூக அநீதி நடக்கிறது.

50.50% முழுமையாக உயர் சாதியினருக்கு ஒதுக்கப்படுகிறது. எவ்வாறு என்று கேட்ட்கிறீர்களா..

அதாவது OBC/SC/ST பிரிவில் மிக அதிக மதிப்பெண் பெற்றிருந்தாலும் நீங்கள் பிரிவை குறிப்பிட்டிருந்தால் உங்களை அந்த (OBC/SC/ST) பிரிவில் மட்டும் சேர்த்துக் கொண்டு Open Competition பிற வகுப்புகளுக்கு விட்டுவிடுவார்கள்..

ஒருவன் அதிக மதிப்பெண் பெற்றிருந்தால் அவன் (Open Competition) பொதுப் பட்டியலில்தான் சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று உச்ச நீதிமன்றமும் உயர்நீதி மன்றமும் பல முறை அறிவுறுத்தியும் தன்னிச்சையாக செயல்படுகிறது U.P.S.C தேர்வாணையம்..

ஆக இப்பொழுது நடைமுறையில் இருக்கும் இடப்பங்கீட்ட்டில் 50.5% உயர் சாதியினருக்கு...

இது எப்படி இருக்கிறது... ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


மேலும் முழுக் கட்டுரையும் படித்து பாருங்க...



நன்றி: தினகரன்.

இந்த விசயம் பற்றி "தருமி அய்யாவின் பதிவு..."

"திரு.குழலி அவர்கள் " ஒரு அருமையான பதிவிட்டிருக்கிறார்.. அதையும் படிங்க..

இதைப் பற்றி " Doctor Bruno --1," " --2," பதிவிட்டிருக்கிறார்... அதையும் படிங்க..

Thursday, August 17, 2006

திரைக் கதை - All Rights Reserved

Wednesday, August 16, 2006

புவியியற் தகவல் முறைமைகள் - Geographic Information Systems (GIS)

புவியியற் தகவல் முறைமைகள் என்பது புவியியல் வரைபடங்களை ஏற்படுத்தி சேகரித்து ஆராய்ந்து ஒரு அறிக்கை/கோப்பாக வெளிக்கொணரும் அமைப்பு/முறைமை. இதைப் பயன் படுத்தி திட்டமிடுதல், நில பயன்பாட்டு மேலாண்மை, இயற்கை வளங்கள் அறிதல், சுற்றுச்சூழல் மேலாண்மை, போக்குவரத்து, நகர கட்டமைப்புகள் மற்றும் மற்ற மேலாண்மை தகவல்கள் ஆகியவை மேற்கொள்ளலாம்..

உண்மை என்னவெனில், இதன் பயன் பாடு வரையறுக்க முடியாதது..

சில எளிதான உதாரணங்கள்..

1. தபால்காரர் தொலைவில் காடுகளின் ஊடே உள்ள கிராமத்திற்கு செல்ல எளிய வழி கண்டறிதல்.

2.வெள்ளம் ஏற்படும் போது தண்ணீரில் மூழ்கும் அபாயம் உள்ள பகுதிகளை கண்டறிதல்.

3. தேயிலை தோட்ட சாகுபடி முறைகளை எளிமைப் படுத்துதல்.

4.தண்ணீர் மேலாண்மை..

5. போக்குவரத்து இடைஞ்சலை சரி செய்ய..

இன்னும் ஏராளம்...

புவியியற் தகவல் முறைமைகள் வரைபடம் பல அடுக்குகளை கொண்டது. ஒவ்வொரு அடுக்குகளிலும் பல தகவல்கள் உள்ளடக்கியிருக்கும். இந்த தகவல்கள் இருவகையாக பிரிக்கலாம்.
1. நில மேற் புள்ளி தகவல் - Spatial Data
2. அதன் உடன் சேர் தகவல் - Attribute Data


இந்த தகவலின் மூலம் பூமியில் அதன் இருப்பிடம், அதன் பெயர் மற்றும் பிற விசயங்களை அறியமுடியும்.

"இந்த" வலைதளத்தில் சில "Thesis" உள்ளன. நிச்சயம் உபயோகமாக இருக்கும். மேலும் அதிக தகவலை இங்கே தெரிந்துகொள்ளலாம்.


கீழே சில வரைபடங்களை கொடுத்துள்ளேன்... ஒரு புரிதலுக்காக..

எனக்கு நேரம் கிடைக்கும் போது இதைப் பற்றி நிறைய சொல்லுகிறேன்.


Existing Water Supply Newtwork From Source to City

.


Locations of resevoirs and Water Supply network


.


Zones Locations


.


Division Map


.


Showing Densities in MCH Area (Divisions-Wise)


.



Showing LPCD – Division Wise


.



Showing Water Demand and Supply-Division Wise


.



and Non Coverage Area by The Resevoirs

அசுரன் அவர்களுக்கு என் பதில் - "கோக் ஏன் குடிக்கக் கூடாது"


அசுரன் அவர்கள் சில் கேள்விகளை "இந்தப் பதிவில்" கேட்டிருந்தார்..


அவருக்கு முடிந்தவரை எனக்கு தெரிந்தவற்றை பதிலாக்கியுள்ளேன். அதை அப் பதிவிலேயே கூறியும் உள்ளேன்..

ஆனால் அவர் கேள்வின் முக்கியதுவம் கருதி அதை இங்கு தனிப் பதிவாக இடுகிறேன்.

ஒத்த மற்றும் மாற்று கருத்துள்ளவர்கள் கருத்தை பதிய ஏதுவாக இருக்கவே இந்த தனிப் பதிவு.

இனி பதிவு..


அசுரன்: நான் பதில் சொன்னது போல் நீங்களும் எனது நாடு அடிமையாவது பற்றிய முந்தைய பின்னூட்டத்தின் பெரும் பகுதிக்கு கருத்து சொல்லக் கடைமைப் பட்டுள்ளீர்கள்.

என் பதில்: இந்த உலகம் முழுவதும் ஒருவரை ஒருவர் சார்ந்துதான் இருக்கிறோம்.. பொதுவாக அடிமைப் படுதலுக்காக இதை சொல்கிறேன்.

இனி இந்த பிரச்சனை சமந்தமாக அடிமை படுதலைப் பற்றை என் கருத்து..

கோக் மட்டுமல்ல இன்னும் பிற் விசயங்களிலும் தான் நாம் அடிமைப் பட்டுள்ளோம்.. அதை எக் கோணத்தில் அனுகிறோமோ அதன் அள்வுகோலே இதற்கும் என்பது என் கருத்து.



அசுரன் : இது இந்த பொருளாதார அமைப்பின் failure இல்லையா?

என் பதில்: இது சந்தைப் படுத்துதலினால் வரும் சில எதிர் வினைகள். அந்த எதிர் வினை இல்லாமல் சந்தைப் படுத்துதலும் இல்லை..

சந்தைப் படுத்துதல் சம்ந்தமாக உங்கள் கருத்தைப் பொருத்தே என் கருத்தை சொல்லமுடியும்.



அசுரன்: ஒருங்கிணைந்து போராடி தனது விடுதலையை தேடிக் கொண்ட, புரட்சி செய்த அந்த சமுதாயத்துக்கு வேறு கஸ்டமான மாற்று வழிகளை கையாளுவதோ அல்லது தனது தேவைகளை மாற்றிக் கொள்வதோ பெரிய பிரச்சனையாக இருக்காது.

என் பதில்: நீங்கள் சொல்லும் சமுதாயம் நிச்சயம் தற்போதய இளைய தலைமுறைக்கு பொருந்தாது என்பது என் கருத்து. காரணம் உலகமே ஒரு சிறு கிராமம் போல் சுருங்கிவிட்டதால் கூட இருக்கலாம்.

அதனால் இன்றைய இளைய சமுதாயம் நீங்கள் சொல்வதுபோல் எளிதாக தகவமைத்துக் கொள்ளாது.



அசுரன் : சந்தை உற்பத்தியில்தான் தேவைகளை விளம்பரங்கள் மூலம் உருவாக்க வேண்டியுள்ளது. அதாவது 'தேவை உற்பத்தி'(விளம்பரங்கள்) என்பதே ஒரு தனி தொழிலாக உருவாகியுள்ள கோமாளித்தனம் ஏகாதிபத்திய சமூக்த்தின் சீரழிவைத்தான் காட்டுகிறது.

என் பதில்: நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வானொலி தொலைக்காட்சி கூட தேவை இல்லைதான். ஒரு காலத்தில் அதை அவ்வாறுதான் சொன்னார்கள். இப்பொழுது அரசாங்கமே இலவசமாக கொடுக்கும் அளவுக்கு முக்கியமாகிவிட்டது..

பொருளாதார வளர்ச்சியின் அங்கம் இது.. என்பது என் கருத்து.



அசுரன்: தன்னுள் இயைந்து செயல்படும் இயற்கையை, தனித்தனியாக தனக்குள்ளேயே அடித்துக் கொள்ளும் ஒருங்கிணைப்பு இல்லாத ஏகாதிபத்திய மனித சமூகம் எதிர் கொள்ள முடியும் என்று நினைப்பது அடி முட்டாள்தனமானது

என் பதில்: இதில் எனக்கு மாற்று கருதில்லை..

ஆனால் வளர்ந்துவரும் பொருளாதாரம், மக்கள் தொகை, வேலை வாய்ப்பு போன்ற பல விசயங்களையும் கருத்தில் கொள்ள கடமைப் பட்டுள்ளோம்.

Tuesday, August 15, 2006

எங்க வீட்டு நூலகம் - கலைமாமணி விக்கிரமன்










....

நன்றி: குங்குமம்.


" வ.வே.சா. எழுதிய "என் சரித்திரம்" என்ற தன் வரலாற்றுப் புத்தகம் எனக்கு மிகவும் பிடித்தது.

நான் அமுதசுரபி ஆசிரியராக பணியாற்றிய போது மதிப்புறைக்காக ஒவ்வொரு புத்தகத்திலும் இரண்டு புத்தகங்கள் வரும். அதில ஒரு புத்தகத்தை என நூலகத்திற்கு கொண்டுவந்துவிடுவேன்." -கலைமாமணி விக்கிரமன்


உங்கள் வீட்டு நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை பட்டியிலிட "மீன்டும் ஒரு அழைப்பு.."

கல்பனா சாவ்லா விருது



சமூக நீதிக்காக பாடுபட்ட ஐ.ஐ.டி. பேராசிரியை வசந்தா கந்தசாமிக்கு தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதை முதல்வர் கருணாநிதி இன்று (15-08-06) வழங்கினார்.

சுதந்திர தின விழாவில் பிரதமர் மன்மோகன்சிங்



* எல்லை தாண்டிய தீவிர வாதம் அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்குள் தீவிர வாதிகள் ஊடுருவுவதை பாகிஸ்தான் தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து நாடுகளும் கூட்டு முயற்சியால் தீவிரவாதத்தை ஒழித்து கட்ட வேண்டும்.

* புதிய இந்தியாவை உருவாக்க தேச ஒற்றுமை மற்றும் அரசியல் கருத்தொற்றுமை தேவை.

* பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டு வருகிறது.

* பணவீக்கத்தை கட்டுப்படுத்த முன்னுரிமை.

* நம்முடைய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் யாரும் பலவீனப் படுத்திவிட முடியாது. மும்பை சம்பவம் அதற்கு ஒரு உதாரணம்.

* உற்பத்தி துறையில் 11 சதவீத வளர்ச்சி.

* பெண் சிசுக் கொலை அறவே ஒழிக்கப்பட வேண்டும். பாலின வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

நன்றி: தினமலர், மாலைச்சுடர்

Monday, August 14, 2006

நாகைக் கலங்கரை விளக்கம்.

டாக்டர் வசந்தா கந்தசாமிக்குப் பூர்வீகம் நாகை மாடட்டம் ஒரத்தூர். அப்பா பால சுப்ரமணியம் ஆசிரியர்.

ஸெட்ல்லா மேரி கல்லூரியில் பட்டம் பெற்ற வசந்தா, சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். எத்திராஜ் கல்லூரியில் விரிவுரையாள்ராகச் சேர்ந்துள்ளார். பின்னர், ராமானுஜம் கணித நிறுவனத்தில் 5 ஆண்டுகள் ஆராய்ச்சிப் பணி. 1988ல் சென்னை ஐ.ஐ.டி.யில் விரிவுரையாளராகச் சேர்ந்தார்.

கணிதத்தில் ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும் என்ற கனவுடன் அங்கு காலடி வைத்தார். அங்கு சமூக அநீதி தலைதூக்கியிருப்பதை பார்த்த அவருக்கு, தாங்க முடியாத அதிர்ச்சி. சிறு வயதிலேயே பகுத்தறிவு, சுயமரியாதை பின்னணியில் வளர்ந்த வசந்தா, சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். அவரால் ஐ.ஐ.டிக்குள் நடக்கும் சமூக அநீதிகளைக் கண்டு சும்மா இருக்க முடியவில்லை.

மேலும் ....




இந்த ஆண்டுக்கான ‘கல்பனா சாவ்லா விருது’ ஐ.ஐ.டி. விரிவுரையாளர் டாக்டர் டபிள்யூ.பி.வசந்தா கந்தசாமிக்கு வழங்கப்படுகிறது.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்துக்கு தடை

தமிழ்நாட்டில் அனைத்து ஜாதியினரும் கோவில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட வேண்டும். இதில் ஜாதி பாகுபாடு காட்டக்கூடாது என்ற கோரிக்கை எழுந்தது. இதை தொடர்ந்து அனைத்து ஜாதியை சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக நியமிக்க வகை செய்யும் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இது தொடர்பாக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959-ல் திருத்தம் கொண்டு வர இந்த மசோதா வகை செய்கிறது.

இந்த அவசர சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

மதுரை மற்றும் திருச்சியை சேர்ந்த ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்க உறுப்பினர்கள் சார்பில் இந்த வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சபர்வால் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.

வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அனைத்து ஜாதி யினரும் கோவில் அர்ச்சகர்கள் ஆகும் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தது.

இது தொடர்பாக தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது

நன்றி: The Hindu, மாலைமலர்.
http://www.hindu.com/thehindu/holnus/000200608141201.htm

Friday, August 11, 2006

"பாகிஸ்தானுக்கு நன்றி"

படம்: இஸ்லாமபாத்

SK அய்யாவின் "இந்தப் பதிவில்" அழைப்பு விட்டிருந்தார். அதை ஏற்று இப்பதிவு.


அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை குறிவைத்து எந்நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்று இரு நாடுகளின் உளவுத்துறைகள் ஏற்கனவே எச்சரித்திருந்தன.

இந்நிலையில், பாகிஸ்தான் - ஆப்கன் எல்லைப் பகுதியில் தீவிரவாதி என்ற சந்தேகத்தில் ஒருவனை பாக். உளவுத்துறையினர் சில வாரங்களுக்கு முன்பு கைது செய்தனர்.

அவனிடம் நடத்தப்பட்ட தீவிர விசாரணையில் முக்கிய தீவிரவாதிகளுடன் அவனுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்தது. விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்தினர்.

விமானங்களை தகர்க்க தீவிரவாதிகள் தயாராகிவிட்டனர். வெகு விரைவில் அத்தாக்குதலை நடத்த நாள் குறிக்கப்பட்டுவிட்டது என்று அவன் கூறினான். இங்கிலாந்தில்தான் இந்த தாக்குதல் நடக்கப்போகிறது என்றும் தெரிவித்தான்.


இங்கிலாந்து உளவுத்துறைக்கு இத்தகவலை பாக். அதிகாரிகள் உடனே தெரிவித்தனர்.

இதையடுத்து, இங்கிலாந்து தலைநகர் லண்டன், ஹீத்ரு, பர்மிங்காம், தேம்ஸ் பள்ளத்தாக்கு உட்பட பல பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. விமான நிலையங்கள் உடனே சீல் வைக்கப்பட்டன. பயணிகளோடு பயணிகளாக தீவிரவாதிகள் கலந்திருக்கலாம் என்பதால், அவர்களைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டது.

Thursday, August 10, 2006

கல்பனா சாவ்லா விருது - Dr. வசந்தா கந்தசாமி



ஐ.ஐ.டி. விரிவுரையாளர் டாக்டர் வசந்தா கந்தசாமிக்கு, இந்த ஆண்டுக்கான ‘கல்பனா சாவ்லா விருது வழங்கப்படும்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ‘தீரச்செயல் புரியும் பெண்ணுக்கு விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா பெயரில் ஆண்டுதோறும் தமிழக அரசு விருது வழங்குகிறது. இந்த ஆண்டுக்கான ‘கல்பனா சாவ்லா விருது’ ஐ.ஐ.டி. விரிவுரையாளர் டாக்டர் டபிள்யூ.பி.வசந்தா கந்தசாமிக்கு வழங்கப்படு கிறது.

டாக்டர் வசந்தா கந்தசாமி, கணிதத்துறையில் சிறந்த அறிஞர், ஆராய்ச்சியாளர். ஐ.ஐ.டி. நிறுவனத்தில் 17 ஆண்டுகள் விரிவுரையாளராக பணிபுரிந்து, கணிதத்தில் பல மாணவர்கள் டாக்டர் பட்டம் பெற வழிகாட்டியாக இருந்துள்ளார்.


கணிதத்துறையில் இவர் எழுதிய 14 நூல்கள் அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளது. எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பாகவும் 2 நூல்கள் எழுதியுள்ளார்.


ஐ.ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றும்போது, சமூக நீதி அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று போராடியுள்ளார்.


டாக்டர் வசந்தா கந்தசாமியின் கணித அறிவாற்றலையும், சமூக நீதியை நிலைநாட்டிட தீரமுடன் போராடிய மன உறுதியையும் பாராட்டி, அவருக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.


இந்த விருது ரூ.5 லட்சத்துடன், பதக்கமும் கொண்டது. சுதந்திரத் தினத்தன்று முதல்வர் கருணாநிதி இந்த விருதை வழங்கி கவுரவிக்கிறார்

நன்றி: The Hindu, தினகரன்

http://www.hindu.com/2006/08/10/stories/2006081019050500.htm

Wednesday, August 09, 2006

ராஜாஜியின் சிந்தனைத் துளிகள்



1. ஆணின் மூளையும், பெண்ணின் நல்லிதயமும், ஒரு குழந்தையின் புத்துணர்வும் சேர்ந்தே ஒரு சிறந்த மனிதனை உருவாக்கும்.

2. ஒரு புது மொழியைக் கற்க சிறந்த வழி ஒரு குழந்தை செய்வது போல -- உற்றுக் கேள்!

3. உன் நடத்தையில் ஒரு மாற்றம் வந்தாலன்றிசெய்துதான் ஒரு புது நிகழ்வைக் கற்க வேன்டுமனின், உன்னால் அதை முழுது கற்று, உள்வாங்குவது மிகக் கடினம்.

4. ஒரு நிகழ்வில் நீ ஈடுபடவில்லையெனின், உன் உணர்வுகள் அதில் ஈர்க்கப்படவில்லை எனப் பொருள். ஈடுபடாமல் விலகி நிற்கிறாய் என்றால், உன் உணர்ச்சிகளை அடக்கி இருக்கிறாய் எனப் பொருள்.

5. சமநிலையைத் திணிப்பதின் மூலம் ஒற்றுமையை ஒரு நாட்டில் உருவாக்க முடியாது.

6. மத[இறை] அனுபவம் என்பது ஒரு பொருள் அதுதான் என்னும் விழிப்புநிலை. உண்மைநிலையின் மேல் உள்ள தீவிர தெரிபு.

7. பொறுமை ஒரு பலம்; பலவீனம் அல்ல.

8. நம் எண்ணங்களாலும், செயல்களாலும் நம்மை உருவாக்கிக் கொள்கிறோம்; நமது அடுத்த பயனத்துக்கு நம் ஆன்மாவைக் கொண்டு செல்லத் தயார் செய்து கொள்ளுகிறோம் என்னும் திடநிலையின் தீவிரம்.

9. நன்னடத்தை என்பது ஏதோ வெறும் காற்றில் அலையும் பொருள் அல்ல; தீர்மானமான முடிவு மற்றும்னம்பிக்கை மூலமே அது இயங்கும். சில நேரங்களில் அப்படித் தானே மிதப்பது போலத் தோன்றலாம்; ஆனால், உண்மையில் மரபுகளின் மற்றும் குடும்ப வளர்ப்பின் மூலமே அது நிகழக் கூடும். ஆன்மீக ஆதாரம் மிகத் தேவையான ஒன்று இதற்கு.

10. ஒரு சமூகத்தை நேசிப்பது ஒரு நற்குணமே1 தீயபண்பல்ல! நாம் கட்டுதற்கு உதவும் ஒரு செங்கல். நாம் நிற்கும் இந்தப் பூமி போன்று நிஜமானது. சமூகத்தை ஒதுக்கித் தள்ளிவிட்டு, அதன் இடத்தில் உண்மையில்லாத, பொய்யான வேறொன்றைக் கட்ட முயற்சிப்பது அறிவீனமான, பலனற்ற ஒரு செயல்.


01 - 10 வரை தமிழாக்கம் செய்து தந்த திரு SK அய்யா அவர்களுக்கு எனது நன்றிகள்.


11.திருவள்ளுவர் அனைத்துப் பிரிவினர்களையும் சமயங்களையும் கடந்து உலகளாவிய சிந்தனை கொண்ட அரிய மாமனிதர்களில் ஒருவர். அவரது பார்வை எந்தவிதமான கொள்கைகளாலோ பிடித்தங்களாலோ மறைக்கப் படவில்லை. அவர் தமது நல்லொழுக்க விதிகளை எழுதிய நடை மனித உளவியலை அவர் நன்கு அறிந்திருந்ததைக் காண்பிப்பதுடன் தீமைகளை எதிர்த்து நிகழ்த்தும் போராட்டத்தில் மனிதர்களுக்கு நடைமுறை குறிப்புகளை வழங்கும் ஆர்வத்தையும் காட்டுகின்றன.

12. விஞ்ஞானம் பருப்பொருளின் ஆதாரத்தின் திரைகளை கிழித்து படைப்பின் ஒப்பனையறையில் அத்துமீறிய நாள் ஒரு துரதிட்டமான நாளாகும். கோபமுற்ற இயற்கை பழி வாங்குவதைப்போல உள்ளது. ஞானம் வருந்தி சிறுமையும் மன்னிப்பும் தேட வேண்டும்.

13. இராமாயணம் வரலாறும் இல்லை புவியியலும் இல்லை. அது ஒரு இந்து புராணம். பெர்னாட்ஷா போன்ற மதமறுப்பாளரே புராணங்களின் இன்றியமையாமையினை ஏற்றுக் கொண்டுள்ளனர். புராணங்கள் மதத்தின் ஒருங்கிணைந்த பாகம். எவ்வாறு ஒரு பழத்தின் சாற்றுக்கும் சுவைக்கும் அதன் தோலும் கட்டமைப்பும் பாதுகாப்பு நல்குமோ அவ்வாறே சமயத்திற்கும் நாட்டுகலாசாரத்திற்கும் புராணங்கள் தேவையானவை.

14இந்த நீண்ட முன்னேற்ற காலத்தில் மனித இனம், நிறம் மற்றும் பிற வித்தியாசங்களை வைத்து தங்களை பல இனங்களாகவும் நாடுகளாகவும் பிரித்துக்கொண்டு, ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு, வளர்ச்சியடைந்த விஞ்ஞான மற்றும் தொழிற்நுட்பங்களால், தம்மில் சிறந்தவற்றை முழுவதும் அழிக்க பயமுறுத்துவது எத்தனை சோகமானது ?

11 - 14 வரை தமிழாக்கம் செய்து தந்த திரு.மணியன் அவர்களுக்கு எனது நன்றிகள்.



1. It needs three things to make a truly great man - a man's brain, a woman's heart and a child's freshness of outlook.

2.The way to learn a language is to do as a child does: listen to it.

3. It is very difficult to assimilate new facts or ideas when they may demand a change of conduct.

4. To be disinterested means that one's feelings are not involved. To be detached means that one has learned to subdue one's emotions.

5. You don't bring unity to the country by imposing uniformity.

6. Religious experience means a consciousness that a thing is so: an intense awareness of reality.

7. Patience is a sign of strength, not weakness.

8. We make ourselves by our own thoughts and actions, and it is the character that we hammer out in this life that the soul carries With it at the start of its next journey.

9. Right conduct cannot float in the air, but requires a conviction and faith to support it. It may in some cases seem so to be able to float—but it is really supported by tradition and family upbringing. A spiritual foundation is necessary for right conduct.

10. Love of one’s community is a virtue and not a vice. It is a brick which can help us to build. It is a fact as true as the earth we stand upon, and it is futile to ignore it and build on something that is not true and does not exist.

11. Tiruvalluvar was one of those rare and great men whose catholic spirit rose above all denominations and religions, whose vision was not clouded by dogma or prejudice of any kind. His approach to moral doctrine is marked by a very thorough knowledge of human psychology, and a desire to help men with practical hints in the struggle against evil.

12. It was an unfortunate day when science lifted the curtain of fundamental matter and trespassed into the greenroom of creation. It seems as if outraged Nature is having her revenge. Knowledge must go into penitence and humble condition and forgiveness.

13. The Ramayana is not history or biography. It is a part of Hindu mythology. Even an iconoclast like Bernard Shaw has acknowledged the essentiality of myths.Mythology is an integral part of religion. It is as necessary for religion and national culture as the skin and the skeleton that preserve a fruit with its juice and its taste

14.But what a tragedy it is that human beings have, during the long period of this advance, developed colour and other differences, and divided themselves into races and nationalities and created fields of mutual conflict which, together with progress in science and technology, threaten to bring about total destruction of the best elements of the human specie

பி.கு. பதிவு ஆங்கிலத்தில் உள்ளது. மன்னிக்கவும்.

Monday, August 07, 2006

"கோக்" ஏன் குடிக்க கூடாது?

Free Image Hosting at www.ImageShack.us

அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மைய (சி.எஸ்.இ.) இயக்குனர் சுனிதா நாராயண் 02-08-06 அன்று ஆய்வு முடிவுகளை வெளியிட்டார்.

குளிர்பானங்களில் 23 மடங்கு அதிகமாக பூச்சிமருந்துகள் இருப்பது தெரிந்தது.

குறிப்பாக கெபலாகுனோர் - 4 மடங்கு
லிண்டேன் - 54 மடங்கு
குளோர்பைரிஃபாஸ் - 47 மடங்கு அதிமாக உள்ளது.

இதனால் ஏற்படும் பாதிப்பு
புற்றுநோய்
நரம்பு கோளாறுகள்
மூளை பாதிப்பு
பார்வை கோளாறு.

கடந்த 2003 பிப்ரவரியில் இந்த சர்ச்சை ஆரம்பித்தபோது, குளிர்பானங்கள், தண்ணீர் பாட்டில்கள் இரண்டிலுமே பூச்சிமருந்து கலந்திருக்கிறது என்றார் சுனிதா. தண்ணீர் பாட்டில்களுக்கான தரக் கட்டுப்பாடுகளை நிர்ணயித்து மத்திய அரசு அதே ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. 5 மாதங்கள் விசாரணை நடத்திய கூட்டுக்குழு 2004 பிப்ரவரியில் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது.

சி.எஸ்.இ. சொன்ன பல குற்றச்சாட்டுகளை ஆமோதித்த நாடாளுமன்றக் குழு, இந்திய நிலைமைக்கு ஏற்றவாறு குளிர்பானங்களுக்கு தரக் கட்டுப்பாடு களை நிர்ணயிக்க வேண்டும் என அரசுக்கு ஆலோசனை சொன்னது. ஒரு ஆண்டு காலத்துக்கு குளிர்பானங்களில் இருக்கும் பூச்சிமருந்துகள் பற்றி கண்காணித்து, அதன்பிறகு தரக்கட்டுப்பாடுகளை நிர்ணயிக்கலாம் என இது முடிவெடுத்தது.

இதற்கிடையே இந்திய தர நிர்ணயக் கழகம் தனியாக, ஒரு தரக்கட்டுப்பாடு நிர்ணயிக்க முயன்றது. இதை குளிர்பான நிறுவனங்கள் எதிர்த்தன.
குளிர்பானங்கள் மூன்றே பொருட் களை வைத்துதான் தயாரிக்கப்படுகின்றன. தண்ணீர், சர்க்கரை மற்றும் குளிர்பான கான்சன்ட்ரேஷன். சர்க்கரையின் தரத்தை ஆராயாமல், குளிர்பானத்துக்கு தரம் நிர்ணயம் செய்யக்கூடாது என்பது அவர்களின் ஆட்சேபம்.

இதைத் தொடர்ந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நாடு முழுக்க 200 சர்க்கரை சாம்பிள்களை எடுத்து ஆராய்ச்சி செய்தது. சர்க்கரையில் பூச்சிமருந்து எதுவும் இல்லை என முதற்கட்ட ஆராய்ச்சி முடிவில் தெரிந்தது. இரண்டாவது கட்ட ஆராய்ச்சி முடிவு வரும் 2007 மார்ச்சில் வெளிவரும். அப்போதுவரை வேறெந்த முடிவும் எடுக்க வாய்ப்பு இல்லை. அதன்பின், தண்ணீரை பரிசோதிக்க வேண்டும் என குளிர்பான நிறுவனங்கள் கேட்டாலும் கேட்கலாம்.


02-08-06 அன்று உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு மசோதா நாடாளுமன்றத்தில் குரல் ஓட்டு மூலம் நிறைவேற்றப்பட்டது. இந்தியாவில் உணவுக் கண்காணிப்பு என்பது, கிட்டத்தட்ட 9 அமைச்சகங்கள் சம்மந்தப்பட்ட விவகாரம். எல்லா அமைச்சகங்களிலும் ஒரு சுற்று சுற்றிவரும்போது, தட்டிக்கழிப்பது இயல்பாகி விடுகிறது. இதுதவிர, கலப்படம் தொடர்பான நடவடிக்கை என்பது மாநில அரசு சார்ந்த விஷயமாகி விடுகிறது.


தண்ணீரில் இயல்பாக இருக்கும் பூச்சிமருந்துகள் குளிர்பானத்தில் சேர்கின்றன. நாங்கள் முடிந்தவரை அதை நீக்குகிறோம் என்கின்றன குளிர்பான நிறுவனங்கள்.


ஆனால், மேற்கத்திய நாடுகளில் செய்யும் சுத்திகரிப்பு முறைகளை இந்த நிறுவனங்கள் இங்கே செய்வதில்லை என்பதுதான் குற்றச்சாட்டே.

Update:-

பெப்சிகோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் டிக் டெட்விலர் நேற்று(09-08-06) கூறும்போது, இந்தியாவில் தயாராகும் எங்கள் பானங்களில் நச்சுப்பொருள் கலக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் புகாரை மறுக்கிறோம். இந்திய நாட்டின் தரக்கட்டுப்பாட்டுச் சட்டம் மற்றும் சர்வதேச கட்டுப்பாட்டு சட்டங்களின் அடிப்படையிலேயே அவை தயாராகின்றன. உலகம் முழுவதும் எந்த தரம், ருசியில் அவை இருக்கிறதோ, அதே தரம் மற்றும் ருசியில்தான் இந்தியாவிலும் இருக்கிறது என்றார்.
-------------------------

ஐரோப்பிய யூனியன் விதிமுறைகளின்படியே இந்தியாவில் குளிர்பானங்களை தயாரிக்கிறோம். நச்சுப் பொருள் இருக்கிறதா, இல்லையா என்று உறுதியாக தெரியாமலேயே பல மாநிலங்களில் தடை விதித்துள்ளது அதிருப்தி அளிக்கிறது என்று கோககோலா நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கார்ஜ் ஜோரஸ் கூறியுள்ளார்.
-------------------------


நன்றி: தினகரன்

Sunday, August 06, 2006

கொங்கு நாட்டு புத்தகத் திருவிழா!!

இந்த புத்தகத் திருவிழாவில் முக்கியமான விசயம் என்னவென்றால் 250 ரூபாயிக்கு மேல் புத்தகம் வாங்கினால் "புத்தக ஆர்வலர்" என்னும் சான்றிதழை மக்கள் சிந்தனைப் பேரவை வழங்குகிறது.



நன்றி: தமிழ் முரசு.

கிழக்கு பதிப்பகம் அறையில் இலக்கிய நூல்கள் கிடைத்தாலும் ஜெ.ராம்கி எழுதிய "மு.க" அதிகமாக விற்பனையாகிறது.


மக்கள் சிந்தனை பேரவை சார்பில் ஈரோட்டில் புத்தக திருவிழா நடந்து வருகிறது. விழாவுக்கு நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். இந்தியன் ஆயுர்வேத மருத்துவமனை அறிவழகன், மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், பாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். யாருக்கு பரிசு கொடுத்தாலும், புத்தகத்தை பரிசு கொடுங்கள் என புத்தக திருவிழாவில் குமரிஅனந்தன் பேசினார்.

நன்றி: தின மலர்.

Thursday, August 03, 2006

திரு.ஞானக்கூத்தனின் வீட்டு நூலகம்...

"பிரியவே முடியாத புத்தகங்கள் இன்னமும் உள்ளன. அவற்றில் ஒன்று A.S.P.அய்யரே கையெழுத்திட்ட "இரட்டை நாடகங்கள்" மற்றது 1940ல் வெளியான"தொனி விளக்கு".

கமலகாசன் எனக்கு கொடுத்த 'க', இதை எழுதியவர் ராபர்ட்டோ கலாஸோ என்ற இத்தாலியர். இன்னொரு புத்தகமும் கமல்காசன் கொடுத்தது. அது 'ட்யூஸ் டேஸ் வித் மாரிஸ்'. இது Hollywood திரைப்படம் ஆகிறது." - ஞானக்கூத்தன்

Free Image Hosting at www.ImageShack.usFree Image Hosting at www.ImageShack.us Free Image Hosting at www.ImageShack.us

நன்றி: குங்குமம்


என்னடா இவன் மறுபடியும் நூலகம் பதிவை ஆரம்பிச்சுட்டானேனு பார்கிறீங்களா.
இன்னும் நிறைய பேர் இந்த நூலகப் பதிவு போட வேண்டியுள்ளது..

அதனால இன்னும் கொஞ்ச வாரத்திற்கு இந்த குங்குமம் எங்க வீட்டு லைப்ரேரி பக்கம் தொடரும்...

"மீன்டும் ஒரு அழைப்பு."


ஒரு டெயில் பீஸ்..

திரு.கமலகாசன், நிறைய புத்தக வெளியீட்டு விழாவுக்கு போவாரு. அவருடைய புத்தகக் காதல் அனைவரும் அறிந்ததே.

அவர் ஆறு மாதங்களுக்கு முன்னால் கோவையில நடந்த புத்தக வெளியீட்டு விழாவுக்கு சென்றிருந்தார்.

அவர் பேசியதாவது...

கேரளாவில் எழுத்தாளனுக்கு நல்ல மரியாதை உள்ளது. அங்கே குழந்தைகளை எழுத்தாளினிடம் அழைத்து சென்று ஆசி பெற்று நாக்கில் எழுத சொல்லி வேண்டுகின்றனர்.

ஆனால், இங்கே எழுத்தாளனுக்கு மரியாதை கிடையாது.

எழுத்தாளனை மதியுங்கள். அப்பொழுதுதான் சமுதாயத்தில நல்ல மாற்றங்கள் நிகழும்.

நிறைய புத்தகம் படியுங்க..

படிக்க பிடிக்கலாயா, காமம் சம்மந்மான புத்தகத்தையாவது படித்து தொலையுங்க.. கொஞ்ச நாட்களில் மற்ற புத்தகதையும் படிப்பீங்க...

டிஸ்கி:
இந்த செய்தியை நான் தினமலர் நாளிதழில் ஆறு மாத்திற்கு முன் படித்தது... பிழைகள் இருக்கலாம்..

Wednesday, August 02, 2006

தந்திரி என்பவர் யார்?



சபரிமலை நடைமுறைகளைத் தெரிந்துகொண்டாலே, சர்ச்சை தொடர்பான பல விஷயங்கள் புரிபடும். திருவாங்கூர் தேவஸ்தானம் என்று அழைக்கப்படும் தேவசம் போர்டுக்குச் சொந்தமாக ஆயிரத்துக்கும் அதிகமான கோயில்கள் இருக்கின்றன. அதில் சபரிமலையும் ஒன்று.

அந்த வகையில் கோயில் நிர்வாக விஷயங்களில் தேவசம் போர்டுக்கு அதிகாரம் உண்டு. ஆனால், வழிபாடு சம்மந்தமான முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம், செங்கன்னூர் தாழமண் மடத்தைச் சேர்ந்த குடும்பத்தினருக்கே பரம்பரை பரம்பரையாக உண்டு.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள்தான், ஆண்டுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் சபரிமலையில் தந்திரியாக இருப்பார்கள். அதிகபட்ச அதிகாரம் பெற்றவர்கள் அவர்களே.
அவர்களுக்கு அடுத்தபடியாக அதிகாரம் படைத்தவர்கள், மேல்சாந்தி என்றழைக்கப்படும் குருக்கள். அவர்களுக்குக் கீழே இருப்பவர்கள் கீழ்சாந்தி.

தேவசம் போர்டுக்குச் சொந்தமான கோயில்களில் குருக்களாக இருப்பவர்களில் அனுபவம் வாய்ந்த முதியவர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதிலிருந்து ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள். அப்படி தேர்வானவர், ஓராண்டுக்கு மேல்சாந்தியாக இருப்பார். இதே போல் தேர்ந்தெடுக்கப்படும் இன்னொருவர் கீழ்சாந்தியாக 3 ஆண்டுகள் இருப்பார்.

மேல்சாந்தியும் கீழ்சாந்தியும் தேவசம் போர்டைச் சேர்ந்தவர்கள் என்றாலும், சபரிமலையைப் பொறுத்தவரை தந்திரிக்குக் கட்டுப்பட்டவர்கள். ஐயப்பனின் நகைகளைப் பராமரித்துவரும் பந்தள ராஜ பரம்பரையினருக்குக் கூட கோயில் உள்ளே அறை கிடையாது. ஆனால் தந்திரிக்கும் மேல்சாந்திக்கும் உண்டு.

அதிகாரம் படைத்த தந்திரிகளின் பலம் சபரிமலையில் மட்டுமே. அவர்களுக்கு வேறு கோயில்களிலும் வேலை இல்லை. அதிகாரமும் இல்லை. இதில் முக்கியமான விஷயம், அவர்கள் சந்நியாசிகள் இல்லை. குடும்பஸ்தர்கள்.

ஐயப்பன் சீசன் இல்லாத நாட்களில் வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் யாகம் செய்யவும் பிரதட்சண பூஜை செய்யவும் கிளம்பிவிடுவார்கள். தவிர, ஐயப்பனையே தொட்டு வணங்கும் வல்லமை படைத்தவர் என்ற பெருமை தந்திரிகளுக்கு உண்டு.

நன்றி: தினகரன்.

Tuesday, August 01, 2006

படம் பார்க்க வாங்க...





Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv