Sunday, December 10, 2006

சாதனை படைத்த சாந்தி!! வாழ்த்துக்கள்!!சாந்தியின் பெற்றோர்கள்


தோகாவில் 15வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. தடகள பிரிவில் மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கட்டக்குறிச்சியை சேர்ந்த சாந்தி, வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.


இதன் மூலம் இந்தியாவுக்கு தடகள போட்டியில் முதல் பதக்கத்தை பெற்றுத்தந்தவரும், தமிழக விளையாட்டு வீரர்களில் முதலாவது பதக்கம் பெற்றவர் என்பதும் பெருமைக்குரிய சாதனையாகும்.


இந்த சாதனை படைத்த சாந்தி, ஓர் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர் செங்கல் சூளையில் கூலி வேலை செய்கிறார்கள்.


இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்துள்ள சாந்தியின் சாதனையைப் பாராட்டி அவருக்கு ரூ. 15 லட்சம் பரிசு வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி, நேற்று அறிவித்தார்.

Wednesday, December 06, 2006

திரு. குமரன் முடிவு - தமிழ்மண வாசகர்களுக்கு இழப்பு!என்னடா இவன் லீவு என்று சொல்லிட்டு போனானேன்.. திரும்பி வந்துட்டானேனுன்னு யோசிக்கிறீங்களா!!

இன்றுஇப்படி ஒரு பதிவைப் படித்தேன். மிகவும் வருத்தமளிக்கும் செய்தி.குமரன் சார், நீங்கள் இப்படி ஒரு முடிவு எடுப்பது உங்கள் தனிப்பட்ட உரிமை & விருப்பம்..


இருப்பினும் ஒரு நல்ல பதிவர் மற்றும் நல்ல தமிழ் பதிவர், ஒரு பெரிய ஊட்கத்திலிருந்து விலகுவது நிச்சயம் தமிழ் கூறும் நல் உலகிற்கு பெரிய இழப்பே!!

புதிதாக வரும் வாசகர்கள் உங்கள் பதிவை படிக்க முடியாமல் போகலாம். அது நல்லதல்ல..

இது உங்களுக்கு தனிப்பட்ட முறையில் எந்த இழப்பு இல்லாவிடினும் மற்றவர்களுக்கு இது கசப்பு செய்தியே!

அந்த கசப்பு செய்தி, வதந்தியாக இருக்கட்டும்..

உங்கள் முடிவை மறுபரிசிலனை செய்யுமாறு அன்புடன் வேண்டுகோள்விடுக்கிறேன்.. வேண்டுமென்றால் சிறிய ஓய்விற்கு பிறகு மீன்டும் வாருங்கள்!!

மீன்டும் நீங்கள் வருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்..

Tuesday, December 05, 2006

விட்டாச்சு லீவு!!
கொலம்பஸ்! கொலம்பஸ்!! விட்டாச்சு லீவு!!!

கொண்டாட (இந்தியாவிற்கு அருகே) கண்டுபிடித்து கொண்டா ஒரு தீவு!!
டிசம்பர் 15ம் தேதியிலிருந்து ஜனவரி 1 வரை சென்னை, கோவை வாசம்...


ஆகா நினைக்கவே சந்தோசமாக இருக்கிறது.


உங்கள் அனைவரையும் மீன்டும் ஜனவரி முதல் வாரத்தில் சந்திக்கிறேன்.. அதுவரை லீவு!!

Monday, December 04, 2006

பரிதிமாற்கலைஞர் நூல்கள் நாட்டுடமைபரிதிமாற்கலைஞர் எழுதிய நூல்கள் நாட்டுடமையாக்கி, அவரது மரபுரிமை பெற்ற 19 பேருக்கு ரூ.15 லட்சம் நிதியை முதல்வர் கருணாநிதி நேற்று வழங்கினார்.

தமிழ் உயர் தனிச் செம்மொழி என்று முதல் குரல் கொடுத்தவர் பரிதிமாற் கலைஞர். தமிழ் ஆசிரியரான அவர், சூரியநாராயண சாஸ்திரி என்ற தனது பெயரை பரிதிமாற் கலைஞர் என்று அழைத்துக் கொண்டவர்.


கலாவதி, மதிவாணன், நாடகவியல், தமிழ் மொழியின் வரலாறு, தமிழ்ப் புலவர் சரித்திரம், சித்திரக் கவி விளக்கம் உட்பட 13 நூல்களை பரிதிமாற் கலைஞர் எழுதியுள்ளார். பரிதிமாற் கலைஞரின் தமிழ்ப் பணியைப் போற்றும் வகையில், அவரது நூல்களை நாட்டுடமையாக்கப்பட்டன.மறைமலையடிகள் பேத்திக்கு உதவி

மறைமலையடிகளாரின் பேத்தியும், தமிழ் அறிஞர் புலியூர்க் கேசிகனின் மனைவியுமான சுந்தரத்தம்மை, வயது முதிர்ந்த நிலையில் சிரமப்படுகிறார்.

புலியூர்க்கேசிகன் சேமித்து வைத்திருக்கும் அரிய தமிழ் நூல்களை தமிழ் வளர்ச்சி இயக்ககம் பெற்றுக்கொண்டு, அவற்றுக்கு ஈடாக சுந்தரத்தம்மைக்கு ரூ.1 லட்சமும், மருத்துவ செலவிற்கு ரு.50 ஆயிரமும் வழங்கவும், மறைமலையடிகளாரின் கொள்ளுப்பேத்தி கலைச்செல்விக்கு தமிழ் வளர்ச்சித்துறையில் முதுநிலை ஒப்பச்சர் பணி நியமனம் வழங்கவும் முதல்வர் கருணாநிதி அனுமதி அளித்தார்.

Saturday, December 02, 2006

பெரியார் பற்றி கல்கி
தமிழ்நாட்டில், இராமசாமியாரின் பிரசங்கம் ஒன்றை மட்டுந்தான், என்னால் மூன்றுமணி நேரம் உட்கார்ந்து கேட்க முடியுமென்று தயங்காமல் கூறுவேன்.

அதிக நீளம் என்னும் ஒரு குறைபாடு இல்லாவிட்டால், ஈரோடு ஸ்ரீமான் ஈ.வே.ராமசாமி நாயக்கருக்குத் தமிழ்நாட்டுப் பிரசங்கிகளுக்குள்ளே முதன்மை ஸ்தானம் தயங்காமல் அளித்து விடுவேன்...

அவர் உலகாநுபவம் என்னும் கலாசாலையில், முற்றுமுணர்ந்த பேராசிரியர் என்பதில் சந்தேகமில்லை. எங்கிருந்துதான் அவருக்கு அந்தப் பழமொழிகளும், உபமானங்களும், கதைகளும், கற்பனைகளும் கிடைக்கின்றனவோ நானறியேன்.

இராமசாமியாரின் பிரசங்கம், பாமர ஜனங்களுக்கே உரியது என்று ஒரு சிலர் கூறக்கேட்டிருக்கிறேன். பாமர ஜனங்களை வசப்படுத்தும் ஆற்றல், தமிழ்நாட்டில் வேறெவரையும் விட, அவருக்கு அதிகம் உண்டு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதிலிருந்து அவருடைய பிரசங்கம், படித்தவர்களுக்கு ரசிக்காது என்று முடிவு செய்தல் பெருந்தவறாகும்.
Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv