Wednesday, May 30, 2007

வழக்குரைஞர்களா அல்லது மிருகங்களா இவர்கள்? - வீடியோ

உ.பி.யில் ஆக்ரா மாவட்ட கோர்ட் வளாகத்தில் வைத்து தலித் இனத்தை சேர்ந்த வினோத் என்பவரை கட்டி வைத்து வழக்குரைஞர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். அவருடைய தலை முடியையும் பாதி சவரம் செய்து அவமான்ப்படுத்தியுள்ளனர்.Friday, May 25, 2007

இடஒதுக்கீடு கேட்பது மானமற்ற காரியமல்ல: கலைஞர் கருணாநிதி

பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடிற்காக போராடுவது மானக் கேடான விஷயம் அல்ல என்று சென்னையில் நடந்த சமூக நீதி மாநாட்டில் முதல்வர் கருணாநிதி பேசினார்.

சென்னை அண்ணா அறிவாலயம் பின்புறம் உள்ள கலைஞர் அரங்கத்தில், அகில இந்திய இதர பிற்படுத்தப்பட்ட ஊழியர் சங்கங்களின் பேரவை சார்பில் சமூக நீதி மாநாடு நடந்தது.

இதில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

தமிழகத்தில் இடஒதுக்கீடு பற்றி எண்ண கூடியவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். இடஒதுக்கீடு கேட்கும்போது நீதியே இடஒதுக்கீடு கேட்கிறது. நமக்கல்ல யாருக்கோ ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீடு நியாயமா என்று கேட்ட குரல் உங்களுக்கும் கேட்டிருக்கும்.

இங்கு பேசிய சிலர் என்னை குறிப்பிட்டு, கருணாநிதி கையில்தான் உள்ளது என்றனர். ஆனால் என் கையில் எதுவும் இல்லை. இன்று நேற்று அல்ல, 1916, 17, 18களில் முதன் முதலில் தமிழகத்தில் சமூக நீதிக்காக கொடி நாட்டப்பட்டது.

அவற்றுக்காக பாடுபட்டவர்களையெல்லாம் வழிநடத்திச் சென்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, தாழ்த்தப்படுத்தப்பட்ட மக்கள் வாழ அன்றைக்கு வழி வகுத்தவர் தந்தை பெரியார். அவர் வழி நின்று அண்ணாவும், அவருக்கு ஆதரவாக காமராஜரும் செயல்பட்டனர். அவர்களின் கடமை, லட்சிய உணர்வு, அவர்கள் விட்டு சென்ற பணியை தமிழக இளைஞர்கள் தொடர வேண்டும்.

இடஒதுக்கீடிற்காக போராடுவது மானமற்ற காரியம் அல்ல. போராடி வெற்றி பெற்றால் மானமுள்ள காரியம். போரடாடிக் கொண்டே இருந்தால், அதை விட மானமற்ற செயல் வேறு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

எனவே அந்த மானத்தை காப்பாற்ற, இழந்ததை திரும்ப பெற இருப்பதை பறிக் கொடுத்தோம். இழந்ததை திரும்ப பெற நாம் களத்திற்கு வந்திருக்கிறோம். எதற்கும் அஞ்சாமல் வீரத்தோடு நடைபோடவேண்டும். நானே கூட அல்லது என்னைப் போன்று பதவிலேயே இருப்பவர்களும் கூட துச்சம் என மதிக்கிற காலம் வரும். அந்த காலம் என்று வேண்டுமானாலும் வரலாம்.

வேலை வாய்ப்பிலேயே எங்களுக்கு இத்தனை சதவீத கொடுங்கள் என்று கேட்டு கெஞ்ச வேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம். இதுகுறித்து சோனியா காந்திக்கும், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் மற்ற மத்திய அமைச்சர்களுக்கும் கடிதம் எழுதுகிறேன்.

60 ஆண்டுகாலமாக போராடி பெற்ற இடஒதுக்கீட்டை டெல்லியில் வருகின்ற ஒரு உத்தரவு உடைத்து விடுகிறது.
இதர பிற்படுத்தப்பட்டவர்கள் என்றால், யாரையோ தனித்து பிரித்து விடுகிறோம். தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோர். எனவே இதர என்பது வேண்டாம். நாம் அனைவரும் பிற்படுத்தப்பட்டோர். இதர பிற்படுத்தப்பட்டோர் பாராளுமன்ற குழு அமைக்க வேண்டும் என்ற உங்கள் தீர்மானம் வரவேற்க கூடிய தீர்மானம். இதிலே இதர என்ற வார்த்தை தேவையில்லை.

பிற்படுத்தப்பட்டோருக்கான பாராளுமன்ற குழுவை உடனே அமைக்க வேண்டும் என போராடுவேன், வாதாடுவேன். அனைத்து கட்சித்தலைவர்கள் கூட்டம் கூட்டி இது குறித்து முடிவு எடுத்து அதை டெல்லிக்கு எடுத்து செல்வேன்.

இது பாராளுமன்ற குழு அல்ல. பிற்படுத்தப்பட்டோருக்கான பாதுகாப்பு குழுவாக இருக்கும். ஆகவே அந்தகுழு அமைய நான் பாடுபடுவேன் என்ற உறுதியை இந் மாநாட்டில் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

மாநாட்டில் தி.க. தலைவர் கி.வீரமணி, மத்திய சமூக நலத்துறை அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், பாமக தலைவர் ஜி.கே.மணி, தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Thursday, May 24, 2007

துபாய் ..."WOW" - PPT

Wednesday, May 23, 2007

ரஜினியின் சிவாஜி - சற்றுமுன் போட்டி


ரஜினி நடித்து உள்ள "சிவாஜி" ஜீன் 15ம் தேதி வெளியிடப்படுகிறது என்பது தெரிந்த விசயம். ஆனால் படம் வெளியாகும் போது எந்த பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க ரஜினி சில"கட்டளைகளை" அவரது இரசிகர்களுக்கு அறிவித்துள்ளார்.


எந்த பிரச்சனையும் இல்லாமல் படம் குறித்த தேதியில் ரீலிஸாகி வெற்றி பெற வாழ்த்துக்கள்.


ரஜினி சார், படத்தை ரீலிஸ் செய்யுங்க.. ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறோம்.

சரி.. தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்...

அதாவது சற்றுமுன் - 1000 விமர்சனப் போட்டியை எல்லாரும் தெரிந்து வைத்திருப்பீர்கள். அந்த போட்டிக்கு கடைசி நாள் ஜீன் - 10, 2007.

அந்த போட்டிக்கு இன்னும் நிறைய ஆக்கங்களை எதிர்பார்க்கிறோம்.

போட்டியில் நிறைய பேர் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்.

போடிக்கான விபரங்கள்" இங்கே இருக்கிறது"


பரிச்சுக்காக போட்டி என எண்ணாமல் திறமைக்கான போட்டி என் கருதி அதிக அளவில் கலந்துகொள்ளுங்கள்.

போட்டியில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் மிக மிக அருமையான MP3பாடல்கள் அனுப்பி வைக்கப்படும். இதை தனிப்பட்ட முறையில் நான் அனுப்பி வைக்கிறேன்.

இது ஒரு ஊக்கத்திற்காக...

Wednesday, May 16, 2007

அன்னை தெரசா - வைரமுத்து பதில்கள்
கேள்வி: பொது வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு முதல் தகுதி என்ன?


வைரமுத்துவின் பதில்:


அவமானம் தாங்குதல்.

சுயமானமே பெரிதென்று கருதுகின்றவர்கள் பொதுமானம் காக்க முடியாது.

அனாதைப் பிள்ளைகளுக்கு நிதி திரட்டக் கடை வீதிக்குப் போகிறார் அன்னை தெரசா. ஒரு கடைக்காரன் கஞ்சன், தேனிலவுக்குக் கூடத் தனியாய்ப் போய்வந்தவன். அவனிடம் கையேந்துகிறார் அன்னை...

‘‘ஏதாவது கொடுங்கள் என் பிள்ளைகளுக்கு...’’

‘‘ஒண்ணும் தரமுடியாது; ஓடிப்போ கெழவி’’ ஏந்திய கை மடங்கவில்லை.

‘‘ஏதாவது கொடுங்கள்... என் பிள்ளைகளுக்கு...’’

‘‘சொன்னாக் கேக்கமாட்ட...’’

ஏந்திய இடக்கையில் வந்து விழுகிறது அவன் காறித்துப்பிய கற்றை.

எச்சில் விழுந்த இடக்கையை மூடிக்கொண்டு

‘‘நீ காறித்துப்பியது எனக்கு; என் பிள்ளைகளுக்கு...’’ என்று வலக்கை நீட்டுகிறார் அன்னை.

எழுந்து நின்று கும்பிட்டு, கண் துடைத்துக்கொண்டே காசு போடுகிறான் கடைக்காரன்..

Tuesday, May 15, 2007

சிகாகோவில் பெரியார்சிகாகோ புளுமின்ங்டேலில் உள்ள புளுமின்ங்டேல் கோர்ட் திரையரங்கில் வரும் ஞாயிறு (20-05-07) மாலை 4.30 மணி காட்சியில் "பெரியார்" திரைப்படம் திரையிடப்படுகிறது. டிக்கெட் பெற www.indiaglitz.com செல்லவும்.

Friday, May 11, 2007

தயாநிதி மாறன் செய்தது சரியா?நன்றி: தினமலர்

Monday, May 07, 2007

பொது இடத்தில் கட்டி அணைப்பது அநாகரிகமா?பொது இடத்தில் கணவன் மனைவி கட்டிப் பிடிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று மக்களிடம் தினகரன் ஏசி நில்சன் நடத்திய சர்வே முடிவு.உண்மையில் மக்களின் இந்த மன நிலை என்னை சற்று யோசிக்க வைக்கவிட்டது. அதுவும் 90%.. ம்ம்ம்ம்..

அப்ப திரையரங்கில் கானும் சினிமாவில் ஓகேவா?

என்னை பொருத்தவரையில் இது அவர்களின் தனிப்பட்ட விருப்பம்.

நன்றி: தினகரன்

Wednesday, May 02, 2007

"ஒரு சகாப்தத்தின் வரலாறு" - பெரியார் திரைப்பட விமர்சனம்நடிப்பு: சத்யராஜ், குஷ்பு, ஜோதிர்மயி

தயாரிப்பு: லிபர்டி கிரியேஷன்ஸ்

இயக்கம்: ஞான ராஜசேகரன்

இசை: வித்யாசாகர்

சினிமாவை,‘இந்த நாட்டை பிடித்த நோய்’ என்றவர் பெரியார். சினிமாக்காரர்களை வெறும் கூத்தாடிகள் என்று கண்டித்தவர் அவர். நாடு உருப்பட இந்த சக்திகள் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசி வந்தவர். இப்போது அவரைப் பற்றியே ஒரு சினிமா. அவர் இருந்து பார்த்திருந்தால் தனது தடியால் தட்டி மகிழ்ச்சி அடைந்திருப்பார். பெரியாரின் நோக்கம் சிதையாமல், எண்ணம் திரிக்கப்படாமல் இப்படியரு படம் தயாரிக்கப்பட்டிருப்பதே பாராட்டப்பட வேண்டியது.

சாதி பாகுபாடு, பால் வேறுபாடு, பொருளாதார ஏற்றத்தாழ்வு& இதுவே அவரின் மையப்புள்ளி. மற்றவை கிளைக் கதைகள். இதை முழுமையாக உள்வாங்கிக் கொண்ட இயக்குனராக ஞான ராஜசேகரன் இருந்தது பெரியாரின் அதிர்ஷ்டம்!

பண வசதி படைத்த ஈரோடு வெங்கடப்ப நாயக்கர் என்ற வைணவ குடும்பத்தில் பிறந்த பெரியாரின் 19&வது வயதில் தொடங்குகிறது படம். மூப்பு, கிழப்பருவம் தாண்டிய முதிர் கிழப்பருவத்தில் கூட அமைதியாக இல்லாமல் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டு, நான் உங்களை சூத்திரனா விட்டுவிட்டு போகிறேனே என்று துக்கம் தொண்டையிலடைக்க மேடையில் சரிவதில் முடிகிறது படம். சரியாகச் சொன்னால் அவர் இறப்பதற்கு ஐந்து நாட்களுக்கு முன் நடந்த காட்சி இது.

ஈரோடு வட்டாரத்தில் மட்டுமே அறிமுகமாகியிருந்த வியாபாரி பெரியார், காந்தியின் நிர்மாணத் திட்டங்களால் காங்கிரஸ் இயக்கத்தில் நுழைந்து, வகுப்புவாரி இடஓதுக்கீடுக் கொள்கையை அவரின் நண்பர்களே ஏற்காமல் துரோகம் செய்ததால் வெகுண்டெழுந்து, காஞ்சிபுரம் மாநாட்டில் வெளியேறியது வரை படத்தின் முதல்பாதி. காங்கிரசை ஒழிப்பதே முதல் வேலை என வெளியேறி, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மூலைக்கும் பயணமாகி, எது தனக்கு சரியெனப்பட்டதோ அதை மட்டுமே பேசி, சுயமரியாதைத் தலைவராக வலம் வந்து தமிழ்நாட்டு முதலமைச்சர்கள் அனைவருக்கும் கட்டளையிடும் தந்தையாக பரிணாமம் பெறுவது இரண்டாவது மீதி.

முதல்பாதியில் இருக்கும் காட்சிப்படுத்தல், இடைவேளைக்குப் பிறகு துணுக்குகளின் கோர்வையாகி விடுகிறது. எந்த பிரபலத்தையும் புறக்கணித்துவிடக் கூடாது, எந்த தகவலையும் விட்டுவிடக்கூடாது என்ற பதற்றத்தில் சில காட்சிகள் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. உடல் நலமில்லாத பெரியாரை, ராஜாஜி பார்க்க வருவது, பிரசவத்துக்குத் துடித்த பிராமணப் பெண்ணுக்கு தனது வாகனத்தை கொடுத்து உதவுவது போன்ற காட்சிகள் தவிர்க்கப்பட்டிருந்தால் இன்னும் சில முக்கியமான காட்சிகளைச் சேர்த்திருக்கலாம். உதாரணத்துக்கு,பெரியாரிடம் சண்டை போட்டுவிட்டு அண்ணா விலகிய ஓராண்டுக்குப் பின் இருவரும் திருச்சி சிறையில் சந்திப்பது, சேர்க்கப்பட்டிருக்க வேண்டிய காட்சி.

இதுபெரியார் படம் என்பது போலவே சத்யராஜ் படம். நக்கல், நையாண்டியால் மட்டுமே பேர் வாங்கிய சத்யராஜுக்குள் இப்படியரு தனித்தன்மை ஒளிந்திருந்தது ஆச்சர்யம்தான். பட்டுத் துணிகள், அங்கவஸ்திரத்துடன் வலம் வந்த பெரியார், அதை தூக்கியெறிந்து விட்டு கதர் துணி அணியும்போது சத்யராஜ் அச்சு அசலாகவே பெரியாராகிவிடுகிறார்.

நெஞ்சுக்கும் மேலே லுங்கியை கட்டிக்கொண்டு, கருப்பு சட்டைப் பட்டனை திறந்துவிட்டபடியே மேடையிலிருந்து எழுந்து நிற்கும்போது பெரியாராகவே வாழ்கிறார் சத்யராஜ். பெரியாரின் குரலையும் அதனதன் தன்மைக்கு ஏற்ப மாற்றி உச்சரிப்பது சிறப்பு. 18 ஆண்டு பிரிவுக்கு பிறகு, சந்திக்க வந்த அண்ணாவைப் பார்த்து பெரியார் வெட்கப்படும் காட்சிக்கு கூடுதல் சபாஷ் போடலாம்.

முதல் மனைவி நாகம்மையாக ஜோதிர்மயியும், இரண்டாவது மனைவி மணியம்மையாக குஷ்புவும் வாழ்ந்திருக்கிறார்கள். எந்த சாயமும் இல்லாத அழகு சாயல் கொண்டவர் நாகம்மை. சாதாரண ராமசாமியை பெரியார் ஆக்கியவர் அவர். நாகம்மை போன்றே இயல்பான முகம் ஜோதிர்மயிக்கு. அதேபோல் மாட்டுத் தொழுவ விருந்தில், சாணி மணம் பாராமல் பெரியார் சாப்பிட மணியம்மை திணறும் காட்சியில் அசத்துகிறார் குஷ்பு.

தங்கர்பச்சான், ராஜ்குமாரின் ஒளிப்பதிவு அந்தக் காலத்தை கண்முன் நிறுத்துகிறது. வைரமுத்துவின் பாடல் வரிகள் பெரியார் கொள்கையை பேசுகிறது.

‘ராமர் தொட்டதால் அணில் முதுகில் மூன்று கோடு வந்ததென்றால், சீதை முதுகில் எத்தனை கோடு உண்டு, அல்லது சீதையை ராமன் தொடவே இல்லையா?’ என்ற வரிக்கு தியேட்டரில் பறக்கிறது கைதட்டல்.

பெரியாரை பற்றி தெரியாத, உணராத தலைமுறைக்கு அவரை அறிமுகம் செய்து வைத்தாலே அது பெரிய வெற்றி. இந்தப் படம் அதை செய்திருக்கிறது.

நன்றி: தினகரன்.
சட்டசபை உறுப்பினர்களுக்காக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ தியேட்டரில் "பெரியார்"படம் நேற்று திரையிடப்பட்டது. இதற்கு வந்திருந்த முதல்வர் கருணாநிதி, அமைச்சர் அன்பழகன், தி.க.தலைவர் கி.வீரமணி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலு உள்ளிட்டோர் சிரித்து பேசிக் கொண்டிருக்கின்றனர்.
Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv