Friday, June 29, 2007

கிளி ஜோசியம் பார்க்கவேண்டுமா? - Weekend Special!
சும்மா இலவசம்தான்.. "இங்கே கிளிக் செய்து உள்ளே போங்க.."


கிளி ஜோசியம் சொல்லும்..

என்ன சொன்னது என்று கொஞ்சம் பின்னூடத்தில் சொல்லிட்டு போங்க..

Wednesday, June 27, 2007

யார் அந்த தொழிலதிபர்? Any Guess?

‘‘கோவையை உலுக்கிய ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டணை பெற்று கோவை மத்திய சிறையில் இருக்கிறார் ஒரு தொழிலதிபர். இதே வழக்கில் ஓர் அரசியல் வி.ஐ.பி.யும் ஆயுள் தண்டனை பெற்றிருக்கிறார். இந்த நிலையில், தண்டணை பெற்ற அந்தத் தொழிலதிபர், ஆரம்பத்திலிருந்தே சிறைக்குள் இல்லை. இருதய நோய் இருப்பதால் அரசு மருத்துவமனையிலேயே காலத்தைத் தள்ளிக்கொண்டு இருக்கிறார்.’’

பணபலம் இருப்பதால் கோவையின் பெரிய பெரிய டாக்டர்கள் எல்லாம் இங்கு வந்து சிகிச்சையைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட மருத்துவ அறிக்கைகள், ஸ்கேன், எக்ஸ்_ரே போன்ற விஷயங்களை ஆராய்ந்து பார்த்துவிட்டு, சிறை நிர்வாகமும் தொடர்ந்து அவரை மருத்துவமனையிலேயே இருக்க அனுமதித்திருக்கிறது. இந்த நிலையில்தான் திடீர் சர்ச்சை வெடித்திருக்கிறது.’’


‘‘சிறைக்குள் இருக்க வேண்டிய அந்தத் தொழிலதிபர் மருத்துவமனையிலேயே இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் அந்த மருத்துவ ஆவணங்கள் எதுவுமே அவருக்குரியது இல்லையாம். உண்மையான இருதய நோயாளி ஒருவரின் மருத்துவச் சான்றுகள் மற்றும் ரிப்போர்ட்களை தன்னுடையதாகக் காட்டித்தான் இந்த சொகுசு வாழ்க்கையை அனுபவித்து வருகிறாராம் அந்தத் தொழிலதிபர்!’’

‘‘ம்... தற்செயலாக இந்த விஷயத்தைத் தோண்டிப் பார்த்த அதிகாரிகள், சிறை நிர்வாகம், மருத்துவமனை இரண்டு தரப்பிலும் உள்ள முக்கிய அதிகாரிகள் மற்றும் டாக்டர்கள் பலரை பணத்தால் குளிப்பாட்டி இந்த ராஜவாழ்க்கையை தொழிலதிபர் தொடர்ந்து வந்திருக்கிறார் என்று கண்டறிந்திருக்கிறார்கள். அடுத்து என்ன செய்வது என்று கேட்டு அரசின் முடிவுக்காகக் காத்திருக்கிறார்கள். இவ்வளவு நடந்தும் இன்றுவரை எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் வழக்கம் போல் சொகுசு வாழ்க்கையைத் தொடர்ந்து வருகிறார் அந்தத் தொழிலதிபர்’’

- நன்றி: குமுதம் ரிப்போட்டர்

Friday, June 22, 2007

அந்த ஒரு நிமிடம் மனிதன் என்ற இனம் மட்டுமே


குன்னூர் அருகே வெலிங்டன் மயானத்தில் அமைக்கப்பட்டுள்ள, தமிழகத்தின் முதல் காஸ் மயானம் வரும் 24ம் தேதி முதல் செயல்பட உள்ளது. இதற்காக, 21ம் தேதி வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

Monday, June 18, 2007

எனக்கு இன்று நடந்த விபத்து.
இன்று(18-06-07) எப்பொழுதும் போல் காலையில் (6.30 AM) அவசர அவசரமாக அலுவலகம் செல்ல தயாராகிக்கொண்டிருந்தேன். எனது மகள் வழக்கிற்கு மாறாக அதிகாலையிலே எழுந்து கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தாள். ஏனோ காலையில் எழுந்ததில் இருந்த ஏதோ ஒரு பரபரப்பு மணதில் ஒட்டிக் கொண்டிருந்தது. ஒரு வேளை திங்கள் காலை என்பாதால் கூட இருக்காலாம்.

பிறகு காரில் எறி அமர்ந்து வண்டியை ஆன் செய்தவுடன், பெட்ரோல்(காஸ்) இல்லை என்ற லைட் எரிய தொடங்கியது. என் மீது எனக்கே கோபம் வந்தது. சனி, ஞாயிறு இரண்டு நாட்கள் சுற்றியிருக்கிறோம். நடுவில் பெட்ரோல் போடாமல் விட்டுவிட்டோமே என்று.

வழக்கம் போல் டாக் ரேடியோவை ஆன் செய்துவிட்டு வண்டியை கிளப்பினேன்.

முதல் கேஸ் ஸேடசன் ஒன்று வந்தது. சரி அடுத்த ஸேடசன் ஆபிஸ்க்கு பக்கமாக இருக்குமே, அங்கே போட்டுக்கலாம் என சென்றேன்.

அந்த காஸ் ஸேடசனுக்குள் நுழைய வேண்டுமென்றால் எதிர் வரும் போக்குவரத்தை துண்டித்துவிட்டுதான் செல்ல முடியும்.

நானும் இடது இன்டிக்கேட்டரைப் போட்டுவிட்டு நின்றேன். சில விநாடிகளில் எதிர் போக்குவரத்து கார்கள் வழிவிட்டு நின்றன்.

ஒரு நன்றியை கை செய்கையில் கூறிவிட்டு இடது பக்கம் திரும்பினேன். அது மூன்று லேன் ரோடு. எனக்கு இரு லேன் வண்டிகள்தான் வழிவிட்டன. மூன்றாவதை நான் மறந்தேவிட்டேன். அவ்வளவுதான், அதில் வேகமாக வந்த கார் எனது காருடன் மோத ..

நானும் அந்த ஓட்டுநர்( அமெரிக்க பெண்) இருவம் காயமின்றி தப்பினோம்.

ஆனால் செல்வு மட்டும் 700$ கடந்துவிட்டது. போலிஸின் டிக்கடுடன்..

Thursday, June 14, 2007

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ


கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
பச்சைக் கிளியானால் பறந்தேனும் தேடுவேன்
பாடி வரும் தென்றல் தேரேறி ஓடுவேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்
சென்ற இடம் காணேன்
சிந்தை வாடலானேன்
சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ

நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
நின்ற இடம் யாவும் நிழல் போலத் தோணுதே
அன்று சொன்ன வார்த்தை அலை போல மோதுதே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே
கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே

கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ
காலம் இனி மேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ
கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ

பாடல்: கண்கள் இரண்டும் என்று
திரைப் படம்: மன்னாதி மன்னன்
பாடியவர்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.வி - டி.கே.ஆர்
நடிகை: பத்மினி

Wednesday, June 13, 2007

இது சரியா? - ‘ரஜினிகாந்தி’நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘சிவாஜி’ திரைப்படம் நாளை மறுநாள் ரிலீசாகிறது. இதையட்டி அவரது ரசிகர்கள் பல இடங்களில் பேனர் வைத்துள்ளனர். திருச்சி உறையூரில் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் ருபாய் நோட்டில் காந்தியின் உருவ படத்திற்கு பதில் ரஜினி படம் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் ரஜினியை ‘ரஜினிகாந்தி’ என்று குறிப்பிட்டுள்ளனர்

Monday, June 11, 2007

கடவுளா நீ கல்லா- பெரியார் - வீடியோ

கடவுளா நீ கல்லா கடவுளா நீ கல்லா

மேலோர் என்று சிலரை படைத்து கீழோர் என்று பலரை படைத்தால்
கடவுளா நீ கல்லா
நாயும் பூனையும் நடந்தால் புண்ணியம் மனிதர் நடந்தால் பாவம் என்றால்
கடவுளா நீ கல்லா
தண்ணீர் விழுந்தால் பாறையும் கரையும் கண்ணீர் விழுந்தும் கரையவில்லையே

கடவுளா நீ கல்லா

எங்கள் நிலங்களை அபகரித்தீர்
அபகரித்தீர் அபகரித்தீர்
எங்கள் குளங்களை மறுதலித்தீர்
மறுதலித்தீர் மறுதலித்தீர்


கால்நடை உலவிடும் வீதியில் எங்கள் கால்களை அபகரித்தீர்
வெளவ்வால் நுழைகிற கோயிலில் எங்கள் வாசலை அடைத்துவிட்டீர்
சூத்திரன் நுழைந்திட சாத்திரம் இல்லை என்று சூத்திரம் எழுதிவிட்டீர்
சூத்திரம் எழுதிவிட்டீர்


நீங்கள் மட்டும் நீங்கள் மட்டும் விந்து விழுந்து பிறந்தவர்கள்
நாங்கள் என்ன நாங்கள் என்ன எச்சில் விழுந்தா பிறந்தவர்கள்
எச்சில் விழுந்தா பிறந்தவர்கள்

கடவுளா நீ கல்லா

இந்த கோயிலை அமைத்தது யார்
அமைத்தது யார் அமைத்தது யார்

உச்சியில் கோபுரம் சமைத்தது யார்
அமைத்தது யார் சமைத்தது யார்


எங்கள் கைகளும் கால்களும் தீண்டியிராவிடில் கோயில்கள் ஏதுவும் இல்லை
எங்கள் தோளைத் தொடமால் கடவுளர் யாரும் கருவறை சேர்ந்ததில்லை
புழுதியில் உழுதவன் வேர்வையிலாவிடில் பூசைகள் ஏதுவும் இல்லை
பூசைகள் ஏதுவும் இல்லை


மனிதர் தர்மம் பொதுவாகட்டும் மனுதர்மங்கள் உடையட்டும்
வானவில்லில் மட்டும் இனிமேல் வர்ண பேதம் இருக்கட்டும்
வர்ண பேதம் இருக்கட்டும்

கடவுளா நீ கல்லா

மேலோர் என்று சிலரை படைத்து கீழோர் என்று பலரை படைத்தால்
கடவுளா நீ கல்லா
நாயும் பூனையும் நடந்தால் புண்ணியம் மனிதர் நடந்த்தால் பாவம் என்றால்
கடவுளா நீ கல்லா
தண்ணீர் விழுந்தால் பாறையும் கரையும் கண்ணீர் விழுந்தும் கரையவில்லையே

கடவுளா நீ கல்லா

படம்: பெரியார்
பாடல்: வைரமுத்து
இசை: வித்யாசாகர்
இயக்கம்: ஞான இராஜசேகரன்
குரல்: மதுபாலகிஷ்னன், மாணிக்க விநாயகம், சந்திரன், ரோஷினி
வருடம்: 2007


Sunday, June 10, 2007

சிவாஜி FEVER!
Saturday, June 02, 2007

கலைஞருக்கு பிறந்த நாள்.

தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு இன்று (03-06-07) 84வது பிறந்த நாள்.


Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv