Saturday, March 31, 2007

மாணவர்களால் அர்ஜின் சிங் அவமானப்படுத்தப்பட்டார் - வீடியோ

ஜவர்களால் நேரு பல்கலைக்கழக விழாவிற்கு சென்ற மத்திய அமைச்சர் அர்ஜீன் சிங் அவர்களை பலகலைக்கழக மாணவர்கள் அவமானப்படுத்தப்படுத்தினர்.

Friday, March 30, 2007

இப்படை தோற்கின் எப்படை வெல்லும் !!

மீள்பதிவு : இப்படை தோற்கின் எப்படை வெல்லும் !!

நம்ம மணிகண்டன் இதை மீள்பதிவு செய்ய சொல்லி அன்புகட்டளையிட்டிருந்தார். அவரின் ஆசையை ஏற்று இங்கே மீள்பதிவு.

இப்பதிவை பார்த்துவிட்டு யாரும் என்னை அடிக்க வராதீர்கள்.. போற்றலும் தூற்றலும் போகட்டும் "மணிகண்டனுக்கே.."


பி.கு. இந்தியா வெல்லும் என்ற பெரிய நம்பிக்கையில் போட்ட பதிவு இது. ஆனால் வைசா மிகச் சரியா சுட்டிக் காட்டியிருதார்..ம்ம்ம்ம்ம்மீள்பதிவு செய்யும் போது ஏனோ தமிழ்மண பட்டை சரியாக வேலை செய்யவில்லை. அதனால் பழைய பதிவு ""இப்படை தோற்கின் எப்படை வெல்லும் !!" இங்கே செல்லுங்க..."

Thursday, March 29, 2007

முதுகை பாதுகாத்துக்கொள்வது எப்படி

என் சமுதாயமே விழித்தெழு!!
நன்றி: தினமலர்

Tuesday, March 27, 2007

(Weird) என்னிடம் சற்று மாறுபட்டவைகள்


நம்ம மணிகண்டன், முத்துக்குமரன், சந்தோஷ், மற்றும் நந்தக்குமார், இவர்கள் என்னை என்னிடம் இருக்கும் மாறுபட்டவைகள் பற்றி பகிர்ந்துகொள்ளுமாறு அழைப்புவிடுத்திருந்தனர்.

அவர்களின் அன்பிற்காகவும் இந்த சங்கில்த் தொடருக்காவும் இங்கே என்னிடம் சற்று மாறுபடுபவைகளை பகிர்ந்துகொள்கிறேன்.


1. தருமபுரம் சுவாமிநாதனின் தேவாரப் பாடல்கள்

நான் பிறந்த வளர்ந்த சூழ்நிலை தேவாரம் திருவாசகம் என ஒரே அமர்க்களப்படும். நமக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் எனது தாத்தா (அவரும் சுவாமிநாதன் தான்) பாட பாட கேட்டுக் கொண்டே இருக்கலாம். அதனாலோ என்னவோ தருமபுரம் சுவாமிநாதனின் குரல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஒரு நாள் முழுவதும் கேட்க சொன்னாலும் கேட்பேன். அவருடைய தேவாரப் பாடல்கள்தான் எனது காரில் (நான் மட்டும் பயனம் செய்யும் போது) அதிகமாக ஒலிக்கும்.


2. சக்கரை,பால் இல்லா "டீ"

எனக்கு எப்போதும் சக்கரை பால் இல்லா டீ தான் பிடிக்கும். இதனால் பல இடங்களில் எனக்கும் மற்றவர்களும் தர்ம சங்கடங்கள் ஏற்பட்டுள்ளன. எங்க வீட்டிலும் தான். என்னுடை மகள் இதை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டே இருப்பாள்.


3. THE HINDU பேப்பர்

நான் இந்தியாவை விட்டு கிளம்பும் வரை காலையில் Hindu பேப்பருடன் டீ.. ஆகா.. சுகமான காலை.. ஆனால் வீட்டில் இதனால் பலமுறை சண்டையும் வந்திருக்கிறது.


4. நடப்பது.

எவ்வள்வு தூரம் வேண்டுமானலும் சலிக்காமல் நடப்பேன். காந்திபுரம் To வடவள்ளி சுமார் 20 கி.மி. அடிக்கடி நண்பர்களுன் நடப்பேன்.. ஆனால் சுமார் மூன்று (Bakery) பேக்கரியாவது ஏறி இறங்கிவிடுவோம்..

தற்பொழுது சுத்தமாக நடையே இல்லை. சற்று வருத்தம்தான்.


5. Weirdனா நிகழ்வு

நண்பர் ஒருவர், (இங்கே அமெரிக்காவில்தான்) தொடர்து இரு நாட்கள் தூங்காமல் வேலை. ஏதோ Critical Issue போல.

வேலை முடித்து காரில் வீடு திரும்பும் போது, ஒரு சிக்னலில் வந்து நின்று இருந்தார். அப்போது லேசா தூக்கம் வர, சற்று கண்ணை மூடி விட்டார். அவ்வளவு தான் ஒரு 10 நிமிடம் ஆழ் தூக்கம். பின்னாடி நின்றிருந்த ஒருவர் (Cop)போலிஸ்க்கு சொல்லிவிட, Cop வந்து நண்பரை எழுப்பியிருக்கிறார்.

ஏன் இப்படி தூங்கிட்டீங்க என கேட்க, இல்லையே சும்மா 2 வினாடிதான் கண்ணை மூடினேன், இன்னும் சிக்னல் மாறலேயே என சொல்ல.. அவ்வளவுதான், உடனே எங்கே வேலை செய்கிறீர்கள் என கேட்டு, DUI Test செய்து, நண்பரின் மேலாளருடன் பேசி இரு நாட்கள் தொடர்ந்து வேலை செயவது முதல் எல்லாம் தெரிந்துகொண்டார்.

பிறகு அறிவுரை எல்லாம் கூறிவிட்டு, அருகில் உள்ள கடையில் காபி வாங்கி கொடுத்துள்ளார்.

நம் நண்பருக்கு மகிழ்ச்சி தாங்க முடியல.. என்ன இருந்தாலும் அமெரிக்கன் COP சூப்பர் என..

கடைசி வரை மிக நன்றாக பேசி நன்றி கூறி விடை பெறும் முன் கையில் US $250 Ticket தினித்துவிட்டு சென்றுவிட்டார்.நான் அழைக்க விரும்பும் பதிவர்கள்

1. பீம்பாய் - ஈரோடு

2. ஆதிசேஷன்

3. தொட்டாராயசுவாமி

4. சர்தார்

5. சூர்யா

பருத்தி வீரன் பாடல்கள் வீடியோ


"எலேலே என் உசுருக்குள்ளே.... Click Here"

பாடியவர்கள்: யுவன்சங்கர் ராஜா, கிருஷ்னராஜ், மாணிக்க விநாயகம், ஸ்ரேயா கோஷல்
------------------------------------------------------------------------"ஊரோரம் புளியமரம் .... Click Here"

பாடியவர்கள்: பாண்டி, லட்சுமி, சரோஜா, கலா
------------------------------------------------------------------------"அறியாத வயசு .... Click Here"

பாடியவர்: இளையராஜா
------------------------------------------------------------------------"சரிகம பத நி .... Click Here"

பாடியவர்கள்: மதுமிதா, மதுரை சரோஜா, அமீர்
------------------------------------------------------------------------படம்: பருத்தி வீரன்
வருடம்: 2007
இயக்கம் : அமீர்
இசை: யுவன்சங்கர் ராஜா
தயாரிப்பு: Studio Green Ltd.
நடிப்பு: கார்த்தி, பிரியா மணி

Monday, March 26, 2007

CNN-IBN TV க்கு எனது கண்டனங்கள்


கிரிகெட்டில் நம்ம ஆளுங்க மண்ணை கவ்வியது அனைவருக் அறிந்ததே. கிரிகெட் மீது நாம் வைத்திருக்கும் ஆதித வெறியால் நம்மால் அந்த தோல்வியை ஒரு விளையாட்டில் ஏற்பட்ட தோல்வியாக பார்க்க முடியவில்லை மேலும் அது ஒரு பெருங் குற்றமாகவே பார்க்கிறோம்.

அதற்கு ஒரு சான்று இந்த தொலைகாட்சி நிறுவனம் செய்திருக்கும் செயல். "அதை காண இங்கே செல்லுங்க.."

இதில் விளையாட்டு வீரர்களை வேவ்வேறு தொழில் செய்வது போல் சித்தரித்துள்ளனர். இதன் மூலம் அந்த தொழில்கள் கேவலமானவை என்கிறார்களா?

வருத்தமளிக்கிறது. அந்த தொலைக் காட்சிக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Youtube.con நிறுவனத்தின் நிறுவனர் இங்கே சிகாகோவில் Jewel-Oscoவில் பில் போடும் தொழிலாளியாக பணி புறிந்தவர். அதை பெறுமையாகத்தான் இன்னும் நினைக்கிறார்..

எங்கே செல்கிறோம் நாம்.

இதோ தமிழக முன்னோடி பத்திரிக்கை தினமலர் இந்த கேலி சித்திரத்தை வெளியிட்டு தனது தரத்தை தாழ்த்தி கொண்டது.

Friday, March 23, 2007

கோவை ஐடி பார்க் - படங்கள் & பரப்பளவு

இமெயிலில் வந்தது.. உங்கள் பார்வைக்கு..

கீழே கோவை ஐடி நிறுவனங்களுக்கு தேவையான பரப்பளவு மற்றும் சில புகைப் படங்கள் உள்ளன. கோவை வெகு வேகமாக வளர்ந்து வருகிறது.

கோவையை சார்ந்த நண்பர்கள், அங்கே முதலீடு செய்ய சரியான நேரமிது.

Wednesday, March 21, 2007

"இந்தியா" - உயிர் காக்கும் காவலன் - இறுதி பகுதி

முதல் பகுதிக்கு "இங்கே செல்லுங்க.."

அதன் தொடர்ச்சி...

ஏறக்குறைய ஒன்பதாயிரம் காப்புரிமை விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. எல்லாமே, பழைய மருந்துகளில் சிறு மாற்றம் செய்து தயாரிக்கப்பட்ட புது மருந்துகளுக்கான காப்புரிமை விண்ணப்பங்கள். “நோவர்ட்டிஸ் நிறுவனத்துக்கு காப்புரிமை வழங்கிவிட்டால், அவ்வளவுதான்! இதைக் காட்டியே, அனைத்து உயிர் காக்கும் மருந்து, மாத்திரைகளுக்கும் காப்புரிமை பெற்றுவிடும். அதன்பிறகு, இவை ஏழைகளுக்கு எட்டாக் கனியாகிவிடும்“ என்கிறது இந்த அமைப்பு.

நோவர்ட்டிஸ் போலவே கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் தனது எய்ட்ஸ் தடுப்பு மருந்தான கோம்பிவிர் மருந்துக்கும் பொரீங்கர் இன்ஜெல்ஹீம் தனது நெவராபைன் மருந்துக்கும் காப்புரிமை கேட்டுள்ளது.

கிளியட் சயின்ஸ் நிறுவனம் விர்ரியட் மருந்துக்கும் அப்போட் நிறுவனம் ரிட்டோனாவிர், லோப்பினாவிர், கலெட்ரா மருந்துகளுக்கும் காப்புரிமை கேட்டுள்ளன.

இவையெல்லாமே பழைய மூலக் கூறுகளில் சிறு மாற்றம் செய்து தயாரித்த புதிய மருந்துகள்.

இந்தியாவில் இந்த மருந்துகளை சிப்லா, ரான்பாக்சி லேப்ஸ், ஸ்டிரைட்ஸ் ஆர்கோலேப், ஹெட்ரா டிரக்ஸ் போன்ற நிறுவனங்கள் தயாரித்து, மிகவும் குறைந்த விலையில் உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகின்றன.

உலகம் முழுவதும் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளுக்கு, எம்எஸ்எப் போன்ற தொண்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களிடம் இருந்து எய்ட்ஸ் மருந்துகளை வாங்கி இலவசமாக வழங்கி வருகின்றன.

இந்திய மருந்துகளுக்கு ஆகும் செலவு ஒரு நோயாளிக்கு ஓராண்டுக்கு வெறும் ரூ.5,940தான். ஆனால், காப்புரிமை பெற்றுவிட்டால் ரூ.4.69 லட்சம் செலவாகும். அதனால்தான் இந்திய அரசின் நிலைக்கு ஆதரவாக பன்னாட்டு தொண்டு அமைப்புகள் களத்தில் இறங்கியுள்ளன.

இந்தியாவில் தயாரிக்கப்படும் எய்ட்ஸ் மருந்துகள் அனைத்துமே இந்திய காப்புரிமைச் சட்டம் பிரிவு 3-டியின் கீழ் வருகின்றன. அதாவது, பழைய மூலக் கூறுகளில் மாற்றம் செய்து தயாரிக்கப்படும் புதிய மருந்துகளுக்கு காப்புரிமை தருவதில்லை என்ற விதிமுறைதான் இது.

இதைத்தான் இப்போது பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்க்கின்றன. வழக்கு போடுகின்றன. அவை வெற்றி பெற்றுவிட்டால், தோல்வி இந்திய நோயாளிகளுக்கு மட்டு மல்ல... உலகம் முழுவதும் இந்தி யாவில் தயாராகும் மலிவு விலை மருந்துகளை பயன்படுத்தும் அனைவருக்குக்குமே தான்.

மலிவு விலை மருந்துகளில் ஏறக்குறைய 50 சதவீதத்திற்கு மேல் இந்தியாவில்தான் தயாரிக்கப்பட்டு, உலக நாடுகள் முழுவதுக்குமே விநியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக தென் ஆப்ரிக்கா, கென்யா, உகாண்டா, வங்கதேசம், இலங்கை போன்ற ஏழை நாடுகளுக்கு, இந்தியாவில் இருந்துதான் அதிக அளவில் மருந்துகள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
எல்லாமே தொழில்தான்.

ஆசிரியர் தொழிலுக்கு எப்படி ஒரு புனிதம் இருக்கிறதோ அதேபோல், மருத்துவத் தொழிலுக்கும் ஒரு மகத்துவம் இருக்கிறது. நம் வாழ்க்கையின் சில நேரங்களில் டாக்டர்தான் கடவுள். அவர் கொடுக்கும் மருந்துதான் நம் உயிர். பணம் முக்கியம்தான். ஆனால், அது அடுத்தவரின் உயிரைப் பணயம் வைத்து அதில் கிடைக்கும் பணமாக இருக்கக் கூடாது என்பதை மருந்து நிறுவனங்கள் உணர வேண்டும். உணரும் நேரம் வரும்!?

Monday, March 12, 2007

மைக்ரோவேவ் Oven சமயற்குறிப்புகள் (Microwave Oven- Recipes)


மைக்ரோ வேவ் Oven பயன்படுத்தி என்ன சமயல்கள் செய்யலாம் என இந்த சமயற்குறிப்பு புத்தகத்தில் உள்ளது.

120 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தில் சுமார் 100 வகையான சமயற்குறிப்புகள் உள்ளது. சைவம் மற்றும் அசைவ சமயற்குறிப்புகளை உள்ளடக்கியது..


"இங்கே சென்று Download செய்துகொள்ளுங்கள்.."

File Size : 3.82 MB

Saturday, March 10, 2007

கமலுக்கு "வாழும் வரலாறு" விருது


அகில இந்திய வர்த்தகர் சங்கம், "வாழும் வரலாறு" என்ற பட்டத்தை கமல்ஹாசனுக்கு வழங்குகிறது.

வரும் 28-ம் தேதி மும்பையில் நடக்கும் விழாவில் மத்திய தகவல், ஒலிபரப்பு துறை அமைச்சர் பிரியரஞ்சன்தாஸ் முன்ஷி இவ்விருதை வழங்குகிறார்.


தொழில் அதிபர்களையும், கார்ப்பரேட் அமைப்புகளையும் உறுப்பினர்களாக கொண்ட எப்.ஐ.சி.சி.ஐ இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை:

கலை வாழ்க்கை மட்டுமல்லாமல் தன் செயல்பாடுகள் அனைத்திலும் தனித்தன்மையும், நேர்மையும் கலந்து சிறப்புறச் செயல்படுபவர் கமல். திரைத்துறையின் முன்னேற்றத்தை நல்லதோர் எதிர்காலம் நோக்கி இட்டுச் செல்பவர்களில் முக்கியமானவர்.
இவரது தொழில் சிரத்தை மக்களும், சினிமாத்துறையினரும் நன்கு அறிந்த ஒன்று. சம்பாத்தியத்தை எல்லாம் தன் துறையிலேயே செலவிடும் வெகு சிலரில் கமல் ஒருவர்.


திரைக்கதைகள் யுக்தியாலும், கருத்துக்களாலும், வியத்தகு திரைக்கதையாளராக அவரை ஆக்கியுள்ளது. ஒரு இயக்குனராக பலதுறை வித்தகங்களை நெருடலின்றி ஒரே சீராக படைக்கும் திறமை இவரை இந்தியாவின் மிக முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் இடம் பெறச் செய்திருக்கிறது. தனது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றிய உலகத்து முதல் நடிகர்.


இவரது தலைமையில் இயங்கும் இவ்வியக்கம் சமுதாய கலாசார மாறுதல்களை தமிழகத்திலும் இந்தியாவிலும் ஏற்படுத்தும் என்பது உறுதி. தற்போது எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காகவும் கமல்ஹாசன் தலைமையில் இவ்வியக்கம் அமைதியாக அழுத்தமான தொண்டு செய்து வருகிறது.


பகுத்தறிவுவாதியான கமலுக்கு கும்பிடும் உருவமாக, மதமாக, மனிதம் மட்டுமே விளங்குவது ஆச்சர்யமாகவும், நிகழும் இந்திய அரசியலில் சார்பற்று இருந்து கொண்டே தேச சேவையில் ஈடுபடும் போக்கு வியக்கத்தக்கதாகவும் உள்ளது.

Wednesday, March 07, 2007

"இந்தியா" - உயிர் காக்கும் காவலன் - பகுதி - 1


உயிர் காக்கும் மருந்துகளைத் தயார் செய்யும் பன்னாட்டு நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்திருக்கிறது. அவை எதிர்ப்பது இந்திய அரசின் காப்புரிமைச் சட்டங்களை. இந்த வழக்கில் நோவர்ட்டிஸ், கிளாக்ஸோ ஸ்மித்கிளைன், அப்போட் போன்ற பல நிறுவனங்களுக்கு எதிராக சர்வதேச மற்றும் இந்திய தொண்டு நிறுவனங்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. அது என்ன வழக்கு?சுவிட்சர்லாந்தை சேர்ந்த பன்னாட்டு நிறுவனம் நோவர்ட்டிஸ். இந்த நிறுவனத்தின் தயாரிப்பு க்ளீவாக் என்ற மருந்து. லுக்கேமியா மற்றும் வயிறு புற்றுநோயை குணப்படுத்தும் மருந்து இது. புற்றுநோயை தடுக்கும் இந்த ஒரு மருந்து மூலமே உலகம் முழுவதிலும் இருந்து 250 கோடி டாலர் (ரூ.11,250 கோடி) கிடைக்கிறது இந்த நிறுவனத்துக்கு. இந்த மருந்துக்குதான் காப்புரிமை கேட்டு அது வழக்காடுகிறது.


சீனா, ஆப்ரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் வழக்கு தொடர்ந்து, வெற்றியும் பெற்றுவிட்டது. இதனால் அங்கெல்லாம் இந்த மருந்தை வேறு யாரும் தயாரிக்க முடியாது. இந்தியாவிலும் இந்த மருந்தை மற்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்யவிடாமல் தடுக்க, காப்புரிமை வழக்கு தொடர்ந்துள்ளது.


எந்தெந்த மருந்துகளுக்கு காப்புரிமை தரலாம், எதற்கெல்லாம் தரக் கூடாது என்பதற்கு இந்தியா சில விதிமுறைகளை பின்பற்றுகிறது. புதிய மூலக் கூறுகள் மூலம் கண்டுபிடிக்கப்படும் புதிய மருந்துகளுக்கு உடனடியாக காப்புரிமை கிடைக்கும். ஏற்கனவே இருக்கும் மூலக் கூறுகளில் சிறிய மாற்றங்கள் செய்து, அல்லது இருக்கும் மருந்துகளை கலந்து உருவாக்கும் மருந்துகளுக்கு காப்புரிமை தருவதில்லை என்ற விதிமுறையை கடைப்பிடிக்கிறது இந்தியா. இதைத்தான் எதிர்க்கிறது நோவர்ட்டிஸ்.


‘இதுபோன்ற விதிமுறைகளால், மருத்துவத் துறையில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு இடமில்லாமல் போய்விடும்‘ என வாதிடுகிறது. மேலும், எங்கள் மருந்தை இந்திய மருந்து நிறுவனங்கள் காப்பியடித்து உற்பத்தி செய்து உலகெங்கும் மலிவாக விற்பதால் எங்கள் லாபம் பாதிக்கப்படுகிறது. எனவே காப்புரிமை அளிக்க வேண்டும் என்கிறது.


இந்த விஷயத்தில் மருந்து கம்பெனிகளுக்கு எதிராகவும் இந்திய அரசின் நிலைக்கு ஆதரவாகவும் தொண்டு நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. காரணம், மருந்தின் விலை. நோவர்ட்டிஸ் தயாரிக்கும் க்ளிவெக் மருந்தை தொடர்ந்து ஓராண்டு வாங்கி பயன்படுத்தும் நோயாளிக்கு ஆகும் செலவு ரூ.14 லட்சம். ஆனால் இந்திய நிறுவனங்களின் இதே வகை மருந்துக்கு வெறும் ரூ.96 ஆயிரம்தான் ஆகிறது. எனவே “இந்த மருந்துக்காக நோவர்ட்டிஸ் காப்புரிமை பெற்றுவிட்டால், பணக்காரர்கள் மட்டுமே மருந்து வாங்க முடியும். ஏழைகள் சாக வேண்டியதுதான் என்கிறது எம்எஸ்எப் (மெடிசின்ஸ் சேன்ஸ் பிரான்டியர்ஸ் - எல்லைகள் இல்லாத மருந்துகள்) என்ற சேவை அமைப்பு.
Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv