Tuesday, February 27, 2007

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பயிற்சி

பயிற்சியில் சேர தகுதிகள்


1. விண்ணப்பதாரர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும்.

2. குறைந்த பட்சம் 8வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. 01.01.2007 அன்று 14 வயது நிரம்பியவராகவும் 24 வயது உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

4. சைவ பயிற்சிக்கு சைவ கோட்பாடுகளையும, வைணவ பயிற்சிக்கு வைணவ கோட்பாடுகளையும் கடைபிடிப்பவர்களாக இருக்க வேண்டும்.

5. மாணவர் சேர்க்கையில் வகுப்புவாரி ஒதுக்கீடு முறை பின்பற்றப்படும்.


விண்ணபத்திற்கு கடைசி நாள் 21.3.2007


Friday, February 23, 2007

பாக்யராஜ் நடிக்கும் 'அய்யா வழி'ஆன்மிகத்தையும் சமத்துவத்தையும் இரு கண்களாக கருதிய வைகுண்டசாமி வேடத்தில் நடிக்க தயாராகிறார் பாக்யராஜ்

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரிமாவட்டம் சாமிதோப்பு என்னும் ஊரில் பல அற்புதங்களை நிகழ்த்தி மக்களிடம் மகானாக காட்சியளித்தவர் அய்யா வைகுண்டசாமி.

அன்றை மன்னராட்சி காலத்தில் மக்களை அடிமைப்படுத்திய அரசர்களுக்கே சிம்மசொப்பணமாக விளங்கி மனிதர்களை கடவுளாக நினைத்தவர் வைகுண்டசாமி. அம்பேத்கார், பெரியார் போன்றோருக்கு முன்பே சமத்துவம் அமைத்த அவரது வாழ்க்கை வரலாறு 'அய்யாவழி' என்ற பெயரில் திரைப்படமாகிறது.

இதில் வைகுண்டசாமியாக பாக்யராஜ் நடிக்கவுள்ளார். இவருடன் மணிவண்ணன், சஞ்சய், செந்தில், மதன்பாப், சார்லி, பாலாசிங், சந்திரசேகர், தியாகு,'வெண்ணிறஆடை' நிர்மலா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

முரளி - லைலா நடித்த 'காமராசு' படத்தை இயக்கிய பி.சி. அன்பழகன் திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்து இயக்குகிறார். கதை ஆய்வுக்குழுவில் எழுத்தாளர் பொன்னீலன், தினகரன் - மணிபாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Thursday, February 22, 2007

இடபங்கீடும் சர்வே நிறுவனங்களும் - இறுதி பகுதி

"பகுதி - 1" , "பகுதி - 2"

தொடர்ச்சி...


ஆனால், இந்த அறிக்கைகளை வைத்து, பிற்படுத்தப்பட்ட இனங்களைச் சேர்ந்த தலைவர்கள், தங்கள் இனத்தின் மக்கள்தொகையை மிகைப்படுத்திக் காட்டி சலுகைகள் பெற முயற்சிக்கிறார்கள் என்று சில ஆதிக்க சாதி பத்திரிகைகள் தொடர்ந்து எழுதி வருகின்றன.

ஆனால், எவ்வளவு குறைத்துச் சொன்னாலும், அதைவிடக் குறைவாகவே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு உரிமை கிடைத்து வருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இழந்துவந்ததில் கொஞ்சத்தைக் கூட இந்த சமூகங்கள் பல மாநிலங்களில் பெறவில்லை என்பதுதான் சுடும் நிஜம்

இந்தியாவில் 1931ல் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு இப்படி நடைபெறவில்லை. சமூக நீதிக்காக தமிழகத்தில் எழுந்த போராட்டத்தின் விளைவாக, முதல் பிற்படுத்தப்பட்டோர் கமிஷனை 1953ல் மத்திய அரசு அமைத்தது. அப்போது எம்.பி.யாக இருந்த காகா கலேல்கர் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த கமிஷன், 1955 மார்ச் 30ல் தன் அறிக்கையை அரசிடம் அளித்தது. இந்தியா முழுக்க 2,399 சாதிகளை பிற்படுத்தப்பட்ட இனங்களாக அடையாளம் காட்டிய கலேல்கர், 1961ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக எடுக்க வேண்டும் என பரிந்துரைத்தார்.

வேலையில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற கலேல்கர், எல்லா கல்வி நிலையங்களிலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 70 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றார். இது சாதிப் பிளவை அதிகரிக்கும் என கமிஷன் உறுப்பினர்களில் சிலரே முரண்பட்டார்கள். ஆனால், கலேல்கர் தெளிவாகச் சொன்னார்:

சாதியின் பெயரால் அடக்கி வைக்கப்பட்ட ஒருவரை, அந்த சாதிக்கு முன்னுரிமை கொடுப்பதன் மூலம் மட்டுமே மேலே கொண்டுவர முடியும். முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்இந்தப் பரிந்துரைகளை அப்போதைய அரசு ஏற்கவில்லை. ஜனதா ஆட்சியில் மண்டல் கமிஷன் அமைக்கப்பட்டது. 80ம் ஆண்டு டிசம்பரில் தன் அறிக்கையை அரசிடம் கொடுத்தார் மண்டல். சரியான புள்ளிவிவரங்கள் கிடைக்காததால் 1931ம் ஆண்டு எடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை வைத்து, உத்தேச நிர்ணயமாக பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவிகிதம் என அவர் சொன்னார். தீவிரவாதம் தலைதூக்கியிருக்கும் பகுதிகளில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாதபோது, அரசே இதைத்தான் செய்கிறது.


மண்டலின் பரிந்துரைகளை அமல்படுத்த பத்து ஆண்டுகள் கழித்து வி.பி.சிங் வரவேண்டி இருந்தது. அவரை தமிழக முதல்வர் கருணாநிதி வற்புறுத்த வேண்டியிருந்தது. அப்போதும்கூட, இட ஒதுக்கீடின் உச்சவரம்பு 50 சதவிகிதத்தை தாண்டக்கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின் நிபந்தனை இருப்பதால், வெறும் 27 சதவிகித இட ஒதுக்கீடே கிடைத்தது. அதையும் எல்லா இடங்களிலும் அமல்படுத்த இன்னமும் போராட வேண்டிய நிலை.


52 சதவிகித மக்களுக்கு 27 சதவிகிதமே அரைகுறையாக கிடைத்திருக்க, இருப்பதையும் பறிக்க நீதிமன்றங்களைத் தூண்டும் வேலைதான், இது போன்ற குழப்ப கணக்கெடுப்புகள்!?

Wednesday, February 21, 2007

இடபங்கீடும் சர்வே நிறுவனங்களும் - பகுதி - 2

பகுதி - 1 - படிக்க " இங்கே செல்லுங்க......"

அதன் தொடர்ச்சி..


என்ன சோப்பு உபயோகிக்கிறீர்கள் என்று 100 பேரிடம் கேட்டு, இந்தியாவில் முப்பது சதவிகிதம் பேர் எங்கள் சோப்பைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்று ஒரு நிறுவனம் சொல்லலாம். அதில் ஓரளவுக்காவது உண்மை இருக்கக்கூடும். ஆனால், ஒன்றேகால் லட்சம் வீடுகளில் ஒரு கணக்கெடுப்பு நடத்தி, அதன் அடிப்படையில் இந்தியாவில் எந்தெந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் எவ்வளவு இருக்கிறார்கள் என்று எப்படி சொல்ல முடியும் என்பதுதான் சமூக நீதி அமைச்சகத்தின் கேள்வி.


இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு விதமானது. உதாரணமாக, வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் கிறிஸ்தவர்கள் 90 சதவிகிதம் பேர் இருக்கிறார்கள். மிசோரத்தில் 87 சதவிகிதம் மக்கள் கிறிஸ்தவர்கள். இந்த இடங்களில் மாதிரி கணக்கெடுப்பு நடத்திவிட்டு, இந்தியா கிறிஸ்தவர்கள் நிறைந்த நாடு. மற்றவர்கள் சொற்பமாக இருக்கிறார்கள் என்று ஒரு முடிவை வெளியிட்டால், அது எவ்வளவு பெரிய அபத்தம்?!


எத்தனையோ சாதிகள், அதில் உட்பிரிவுகள் என இந்தியா முழுக்க குழப்பங்கள் உண்டு. ஒரு சாதி ஒரு இடத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் பிரிவில் இருக்கும். இன்னொரு இடத்தில் பிற்படுத்தப்பட்ட இனமாக அடையாளம் காணப்படும். உதாரணமாக, பரவர், பாணர் இனங்கள் கன்னியாகுமரி மாவட்டத்திலும் நெல்லை மாவட்டத்தின் செங்கோட்டை வட்டத்திலும் தாழ்த்தப்பட்டோர் பிரிவில் வருகிறது. தமிழகத்தின் ஏனைய இடங்களில் இவர்கள் மிகவும் பிற்படுத்தப்பட்ட இனமாகக் கருதப்படுகிறார்கள். இப்படி இருக்கும் வேறுபாடுகளை எப்படி கணித்தார்கள் என்பது இன்னொரு கேள்வி.


இதே குழப்படி வேலையை இந்த நிறுவனம் தொடர்ந்து செய்து வருகிறது என்பதுதான் வேதனை. 1999-2000மாவது ஆண்டுக்கான கணக்கெடுப்பின் முடிவில், இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 36 சதவிகிதம்தான். அதிலும் முஸ்லிம்களை கழித்துவிட்டால் வெறும் 32 சதவிகிதம்தான் என்று இந்த நிறுவனம் அறிவித்தது.

98-ம் ஆண்டு தேசிய குடும்ப நல புள்ளிவிவரம் எடுக்கப்பட்டது. இதுவும் மத்திய அரசு நிறுவனம் ஒன்றின் கணக்கெடுப்புதான். இந்தியாவில் முஸ்லிம்கள் தவிர இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 29.8 சதவிகிதம்தான் இருக்கிறார்கள் என அறிவித்தது அந்த புள்ளிவிவரம்.

மத்திய அரசின் இரண்டு வெவ்வேறு நிறுவனங்கள் முரண்பட்ட முடிவுகளை வெளியிடும்போது எது சரி? எது தவறு? இரண்டுமே தவறா? என்ற கேள்விகள் எழக்கூடும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அப்படி யாரும் கேட்கவில்லை.

Tuesday, February 20, 2007

இடபங்கீடும் சர்வே நிறுவனங்களும் - பகுதி - 1


One out of six Indians are born into the country's "Untouchable" caste. (Source :http://news.nationalgeographic.com)சமூக நீதியை நிலைநிறுத்துவதற்காக தலித்துகளுக்கும் பழங்குடியினருக்கும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே, அதை இல்லாமல் செய்வதற்கான சதித்திட்டங்கள் ஆதிக்க சக்திகளால் நடத்தப்படுகின்றன. நாட்டையே நிர்வகிக்கும் உயர் அதிகார மையங்களின் நிழலில் அந்த சக்திகள் தஞ்சம் புகுந்து, இதை செய்கின்றன.


இதில் லேட்டஸ்டாக கிளம்பியிருக்கும் விவகாரம் ஒரு கருத்துக் கணிப்பு. இந்த கருத்துக் கணிப்பு முடிவு வெளியான நேரம்தான் முக்கியமானது. பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவிகித இட ஒதுக்கீட்டை மத்திய அரசு அமல் செய்திருக்கிறது.

இது தொடர்பாக அரசிடம் உச்ச நீதிமன்றம் சில விளக்கங்கள் கேட்டிருக்கிறது.

. 27 சதவிகிதம் என்ற எண்ணிக்கையை எப்படி முடிவு செய்தீர்கள்? யார் யார் பிற்படுத்தப்பட்டவர்கள் என்பதை எப்படி முடிவு செய்வீர்கள்? எப்படி அமல்படுத்துவீர்கள்? என்பவை நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள்.


இந்தியாவில் பிற்படுத்தப்பட்டோர் 52 சதவிகிதம் இருப்பதாக ஏற்கனவே மண்டல் கமிஷன் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நவம்பர் முதல் தேதி தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனம் ஓர் அறிக்கை வெளியிட்டது. எங்கள் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் பிற்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 41 சதவிகிதம்தான் என்று அறிவித்தது இந்த நிறுவனம்.


இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலை பற்றி ஒவ்வோர் ஆண்டும் மாதிரி கணக்கெடுப்பு நடத்துகிறது இந்த நிறுவனம். ஜூலை 2004 முதல் ஜூன் 2005 வரையிலான காலத்துக்கு எடுக்கப்பட்ட 61வது சுற்று கணக்கெடுப்பு முடிவுகளை வெளியிடும்போது இதைச் சொல்லியிருக்கிறது இந்த நிறுவனம். 7,999 கிராமங்கள், 4,602 நகரப்பகுதிகளில் 1 லட்சத்து 24 ஆயிரத்து 680 வீடுகளில் எடுக்கப்பட்ட மாதிரி கணக்கெடுப்பு இது.

ஒரு மாதிரி கணக்கெடுப்பு எப்படி மக்கள்தொகை அளவை பிரதிபலிக்க முடியும்? என்று சமூக நீதி அமைச்சகம் கேள்வி எழுப்பி இருக்கிறது.

ஆனால், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல்ரீதியான முறையில்தான் நாங்கள் கணக்கெடுப்பு நடத்தினோம். நாங்கள் தரும் பெரும்பாலான புள்ளிவிவரங்கள், மக்கள்தொகை கணக்கெடுப்போடு ஒத்துப் போயிருக்கின்றன என்றார் இந்த அமைப்பின் உயர் அதிகாரி ஒருவர்.

நன்றி: தினகரன்

Sunday, February 18, 2007

தமிழ்த்தாத்தா 153வது பிறந்த நாள்!!டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் தமிழ்த் தாய்க்குச் செய்திருக்கும் தொண்டுகளைப் பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. தமிழ்த் தாத்தா, தரணி போற்றும் நல்லவராக மெல்லத் தமிழை வாழ வைத்த வள்ளலாக விளங்கியவர்.

பலர் பெயரால் மட்டும் கேள்விப்பட்டிருந்த பழந்தமிழ் இலக்கியங் களைக் கண்டுபிடித்து அச்சேற்றித் திருத்தமான உயர்ந்த பதிப்புகளாக வெளியிட்டவர். அவர் வெளிக் கொண்டு வந்த பல நூல்களில் சீவக சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூறு, பத்துப்பாட்டு என்னும் பாடல்கள் முக்கியமானவை.

உ.வே.சா அவர்கள் சிவபக்தியில் திளைத்தவர். ஆனால் அவரிடம் மத வேறுபாடில்லை! ஜைன மத நூலான சீவகசிந்தாமணியே உ.வே.சா.வின் பதிப்பில் முதல் அரும்பாகும்.

தமிழ்த் தொண்டினால் இன்பம் உண்டு என்னும் உண்மையை எனக்கு முதலில் வெளிப்படுத்தியது சிந்தாமணி நூலே என்கிறார் சாமிநாதய்யர்.

சைவம், அத்வைதம், வைணவம் என்னும் மூன்று சமயக் கருத்துக்களே தமிழ்நாட்டில் அதிகமாக வழங்கி வந்தன. ஜைன சமயத்தைப் பற்றி அறிந்தவர்களையோ, ஜைன சமயம் பற்றிக் கூறும் நூல்களையோ காண்பது அரிதாக இருந்தது. ஆயினும் புறச் சமயமான ஜைனத்தின் மேன்மையை உலகறியச் செய்தவர் சிந்தாமணி நூல் பதிப்பின் மூலம் உ.வே.சா.தான் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

திருவாசகம், திருக்குறள், நாலடியார் இவைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த திரு.ஜி.யு. போப் அவர்களுக்கு உ.வே.சாவின் பதிப்பு வேலைகள் தான் மொழி பெயர்ப்புக்குத் தூண்டுதலாக அமைந்தன.

ஓலைச் சுவடிகளைத் தேடி நடந்தும், மாட்டு வண்டிகளிலும் பயணம் செய்தவர் தமிழ்த்தாத்தா. போக்குவரத்து வசதியில்லாத அந்தக் காலகட்டத்தில் இவ்வளவு பொக்கிஷங்களைத் தமிழ் உலகிற்கு அவர் தேடித் தந்திருக்கிறார் என்றால் அப்பணிக்கு ஈடு இணை ஏது?நன்றி: www.sify.com

Friday, February 16, 2007

தாலியே தேவையில்லை நீ தான் என் பொஞ்சாதி
இந்த பாடல் தாமிரபரணி என்ற படத்திலிருந்து. இந்த பாடல் இனிமையாக இருக்கிறது. படமாக்கிய விதமும் நன்றாக உள்ளது. யுவனின் இசை தாளம் போட வைக்கிறது. நேரம் கிடைக்கும் போது பொறுமையாக இரசித்து கேளுங்கள்.


பாடல் வரிகளை - படிக்க " இங்கே செல்லுங்க......"பாடலின் வீடியோ - பார்க்க " இங்கே செல்லுங்க......"பாடலின் ஆடியோ - கேட்க " இங்கே செல்லுங்க......"திரைப்படம் : தாமிரபரணி
இசை : யுவன் சங்கர் ராஜா
இயக்கம் : Hari
பாடியவர்கள் : பவத்தாரிணி, Hariharan
நடிப்பு : விசால்,பானு
இயற்றியவர் : பா.விஜய்
வருடம்: 2006


நன்றி : www.pkp.in

Tuesday, February 13, 2007

ஆப்ரிக்கா பார்க்காத கடவுள்!! ( படங்கள் - Readers Discretion recommended)

Monday, February 12, 2007

ரஜினி செய்தது சரியா? தவறா?

டாக்டர். உமா தனபாலன். இவர் குளோபல் ஹெல்த் அண்ட் ஹைஜீனிக் சொல்யூஷன் நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். இவர்களது ஒட்டுமொத்த குடும்பமும் அமெரிக்காவில்தான் வசித்து வருகிறது.

விமானமேறச் சென்ற டாக்டர் உமாவுக்கும் லூப்தான்ஸா ஏர்வேல் நிர்வாகிகளுக்கும் வாக்குவாதம் தொடங்கி, ஒரு கட்டத்தில் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் அளவிற்குப் பிரச்னை நீண்டு விட்டிருக்கிறது.

லூப்தான்ஸா ஏர்வேஸ் பொறுப்பு அதிகாரியாக அனுப்குமார் என்பவர் இருந்தார்.

டாக்டர். உமாவிடமிருந்த பயண ஆவணங்களைச் சரி பார்த்தவர், ‘மூன்றாம் தேதி டிக்கெட் எடுத்து விட்டு அதை ஆறாம் தேதிக்குத் தள்ளிப்போட்டது ஏன்?’ என்று கேட்டதுடன் அதற்காக இருநூறு டாலரை அபராதமாகக் கட்டச் சொன்னார். ‘பணத்தைக் கட்டினால்தான் பயணிக்க முடியும்’ என்றார்.

முறைப்படி உங்கள் நிறுவனத்திற்குத் தகவல் கொடுத்து விட்டுத்தான் மாற்றினேன். எனக்கு உடம்பு சரியில்லை என்ற தகவலைச் சொன்னதால் மருத்துவச் சான்றோடு வரச் சொன்னார்கள். ஆக, முன்கூட்டியே உரிய முறையில் தகவல் கொடுத்து சரியாக நடந்து கொண்ட நான், எதற்காக அபராதம் கட்ட வேண்டும்?’

ஆனால், நிர்வாகி அனுப்குமார் டாக்டர். உமா சொன்னதைக் காதில் வாங்கிக் கொள்ளவேயில்லை. அபராதம் கட்டினால்தான் போக முடியும் என்பதை கடினமான வார்த்தைப் பிரயோகத்தோடு பேசினார்!’’ என்று ஆதங்கப்பட்டவர்.

அப்படியே கீழே வீசப்பட்ட டிக்கெட், மற்ற ஆவணங்களைக் குனிந்து எடுத்தபடி நிமிர்ந்தபோது ஆச்சர்யம்! எதிரே சூப்பர் ஸ்டார் ரஜினி நின்று கொண்டிருந்தார். அவரும் அதே விமானத்தில் அமெரிக்கா செல்ல வந்திருந்தார் போலிருக்கிறது. (சிவாஜி ஷ¨ட்டிங்கிற்காக அன்று அவர் அமெரிக்கா சென்றார்!)

நடந்ததையெல்லாம் மீண்டும் அவரிடம் எடுத்துச் சொல்லி, இதில் என்ன தவறு இருக்கிறது? பார்த்துக் கொண்டிருக்கும் நீங்களாவது இதைத் தட்டிக் கேட்கக்கூடாதா?’ .

அவரோ, பரவாயில்லம்மா. அபராதத் தொகையைக் கட்டிவிட்டு, விமானத்தினுள் செல்லுங்கள் மற்றதை பிறகு பார்த்துக் கொள்ளுங்கள்!’ என்ற பதிலையே ஆறுதல் போன்று கூறினார்.


இது குமுதம் ரிப்போட்டரில் வந்த கவர் ஸ்டோரி.. முழுவதும் படிக்க www.kumudam.com செல்லவும்.

நன்றி: www.kumudam.com

Sunday, February 11, 2007

14 தமிழ்ச் சான்றோர் நூல்கள் நாட்டுடமை

தமிழ்ச் சான்றோர் 14 பேரின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டுள்ளன. அவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 6 லட்சம் பரிவுத்தொகை வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழுக்கு பெருந்தொண்டாற்றி சிறப்புமிக்க நூல்களை படைத்துள்ள தமிழ்ச் சான்றோர்களின் நினைவை போற்றும் வகையிலும் அவர்களின் படைப்புகள் பெருமளவில் மக்களை சென்றடையும் நோக்கிலும் அவர்களின் நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டு, அவர்களது மரபுரிமையினருக்கு பரிவுத் தொகைகள் அரசால் அளிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில்

மாயூரம் வேதநாயகம் பிள்ளை,

சக்தி வை.கோவிந்தன்,

தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்,

தா.நா.குமாரசாமி,

கா.சு.பிள்ளை,

புலவர் குலாம் காதிறு நாவலர்,

வை.சதாசிவப் பண்டாரத்தார்,

டாக்டர் சி. இலக்குவனார்,

மகாவித்வான் தண்டபாணி தேசிகர்,

தி.ஜ.ரங்கநாதன்,

நாரண துரைக்கண்ணன்,

டாக்டர்கள் மா.ராசமாணிக்கனார்,

வ.சு.ப.மாணிக்கம்,

புலவர் கா.கோவிந்தன்

14 தமிழ்ச் சான்றோர்களின் நூல்களை அரசுடைமையாக்கப்படுகிறது.

அவர்கள் ஒவ்வொருவர் குடும்பத்தாருக்கும் தலா 6 லட்சம் ரூபாய் வீதம் பரிவுத் தொகை வழங்கிட அனுமதித்து முதல்வர் கருணாநிதி இன்று அறிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Thursday, February 08, 2007

கமலகாசன் - வை ராஜா வை - அம்மாவும் நீயே!

நான் சீரியஸான பதிவு ஒன்று ரெடி செய்துவிட்டு பதிவிடமுடியாமல் இருக்கிறேன். சூழ்நிலை போர்களமாக இருப்பதால்.. :))

அதானால் சும்மா ஜாலிக்காக, எனக்கு பிடித்த நடிகர் கமலின் பாடல்கள்..
-----------------------------------------------------------------------

Wednesday, February 07, 2007

சூப்பர் பவுல் விளம்பரங்கள்! (Super Bowl Commercial)

இந்த விளமப்ரம் சிறந்த விளம்பரம் என MSN.COM வாசகர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர்.


Blockbuster Super Bowl Commercial 2007

இந்த விளம்பரங்கள் நான் இரசித்தது. இவையும் நல்ல Rating பெற்றன.

Rock Paper scissors throw a rock bud light super bowl ad
Bud Light Super Bowl commercial 2007


Tuesday, February 06, 2007

அன்றும் இன்றும்...

எங்க ஊரில் குளிரும் பனியும் பட்டையை கிளப்புகிறது. அதுவும் கிட்டத்தட்ட இன்று பனிப் புயல்தான். இன்று வீடு வந்து சேர 2 மணி நேரம் டிரைவ் செய்யவேண்டியிருந்த்தது..

இதில் பழைய படங்கள் நான் எடுத்தது. இன்றைய படங்கள் சிகாகோ டிரிபுனில் இருந்து எடுத்தது..கொண்டாட்டம் !?

இமெயில் வந்தது... உங்கள் பார்வைக்கு..
Celebration means......
Four friends.
Bahar barsaat.
Four glasses of beer.


Celebration means......
Hundred bucks of petrol.
A rusty old bike.
And an open road.


Celebration means......
Maggi noodles.
A hostel room.
4.25 a.m.


Celebration means......
3 old friends.
3 separate cities.
3 coffee mugs.
1 internet messenger.


Celebration means......
Rain on a hot tin roof.
Pakoras deep-frying.
Neighbours dropping in.
A party.


Celebration means......
You and mom.
A summer night.
A bottle of coconut oil.
A head massage.


You can spend Hundreds on birthdays,
Thousands on festivals,
Lakhs on weddings,
but to celebrate

all you have to do is spend your Time with your loved ones.

Keep in touch with your loved ones ..........

.

Monday, February 05, 2007

சிகாகோ DownTown - SCREEN SAVER

நண்பர்களே!! இங்கே சில Screen Saver கொடுத்துள்ளேன்.. விரும்புவோர் கிழே கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் சென்று Download செய்துகொள்ளவும்.

------------------------------------------------------------------------------------Chicago Downtown Birds Eye View - இங்கே போய் " Download...." செய்துகொள்ளவும்

------------------------------------------------------------------------------------Garden - இங்கே போய் " Download...." செய்துகொள்ளவும்

------------------------------------------------------------------------------------
Chicago Lake Front - இங்கே போய் " Download...." செய்துகொள்ளவும்


------------------------------------------------------------------------------------
Spring in Chicago - இங்கே போய் " Download...." செய்துகொள்ளவும்


------------------------------------------------------------------------------------
Chicago - இங்கே போய் " Download...." செய்துகொள்ளவும்

------------------------------------------------------------------------------------Chicago Whitesox - இங்கே போய் " Download...." செய்துகொள்ளவும்

------------------------------------------------------------------------------------


நன்றி: சிகாகோ டிரிபுன் நாளிழிதழ் ( Chicago Tribune - Daily)

Friday, February 02, 2007

ஜில்லென்று ஒரு ஊட்டி!!

முடிந்தால் வீடியோவில் ஆடியோவை "MUTE" செய்துட்டு பாருங்க..

இயற்கையை இன்னும் அதிகமாக இரசிக்கலாம்..

Thursday, February 01, 2007

" OFFICE " - கார்டூன்

இமெயில் வந்த கார்டூன்... உங்கள் பார்வைக்கு..------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Labels: , ,

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv