Monday, October 30, 2006

ஜீவ் மில்கா சிங் (JEEV MILKHA SINGH)- வாழ்த்துகள்!!

Free Image Hosting at www.ImageShack.us

ஸ்பெயினில் நடந்த ‘வோல்வோ மாஸ்டர்ஸ்’ ஐரோப்பிய கோல்ப் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் ஜீவ் மில்கா சிங் சாம்பியன் பட்டம் வென்றார். பரிசுக் கோப்பையுடன் உற்சாகமாகப் போஸ் கொடுக்கிறார் ஜீவ்.Free Image Hosting at www.ImageShack.us


ஐரோப்பிய கோல்ப் போட்டி :

வால்டெரமா, அக். 31: ஸ்பெயின் நாட்டில் நடந்த ‘வோல்வோ மாஸ்டர்ஸ்’ ஐரோப்பிய கோல்ப் பந்தயத்தில், இந்திய வீரர் ஜீவ் மில்கா சிங் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.

ஐரோப்பிய கோல்ப் போட்டியில் பட்டம் வெல்லும் முதல் ஆசிய வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு பரிசுத் தொகையாக மூன்றே முக்கால் கோடி ரூபாய் வழங்கப்பட்டது. தனிநபர் விளையாட்டில், இவ்வளவு பெரிய தொகையை வென்ற முதல் இந்தியர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஜீவ் மில்கா சிங் ஐரோப்பிய அளவில் ‘டாப் 20’ மற்றும் உலக அளவில் ‘டாப் 100’ கோல்ப் வீரர்களில் ஒருவராக இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய கோல்ப் போட்டிகளில் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

உதயமாகட்டும் புதிய இந்தியா!


அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகளைப் பார்க்கும்போதோ, அதைப் பற்றிப் படிக்கும்போதோ, நம்மவர்களுக்கு அந்த மாதிரி எல்லாம் நம் நாடு இல்லையே என்று! . வளர்ந்த நாடுகள், வல்லரசு நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் அந்த நாடுகளுக்கு இன்னொரு முகமும் இருக்கிறது. அந்த இன்னொரு முகத்தை அறிந்த இந்தியர் எவரும், தன் நாட்டைப் பற்றித் தாழ்வாக நினைக்க மாட்டார் என்பதுதான் நிஜம்.

வறுமை தாண்டவமாடும் பூமி... பாம்பாட்டிகள், குரங்காட்டிகள் நிறைந்த ஊர்... இந்தியர்கள் எல்லோரும் மூட நம்பிக்கைகளில் திளைப்பவர்கள்...

கோவணங்களைக் கட்டிக்கொண்டிருக்கும் பரதேசிகள் நிறைந்த ஊர்... வதவதவென்று குழந்தைகளைப் பெற்றுத் தள்ளுபவர்கள்...

இந்தியாவைப் பற்றி மேலைநாடுகளில் பெரும்பாலானவர்கள் இப்போதும் இப்படிதான் நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த இமேஜ் கொஞ்சமாக மாறத் தொடங்கியிருந்தாலும், பொதுவாக பெரும்பாலான வெகுஜன ஊடகங்கள் இந்தியாவை இன்னும் கேலிப் பார்வைதான் பார்க்கின்றன.

1. வளர்ந்த நாடுகளிலேயே அமெரிக்காவில்தான் வறுமையில் வாடுவோர் எண்ணிக்கை அதிகம். சுதந்திரம் பெற்று 200 ஆண்டுகளைக் கடந்துவிட்ட அமெரிக்காவிலேயே இந்த நிலை!

2. இந்தியாவின் வளங்களைக் கொள்ளையடித்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் வெளியேறி 59 ஆண்டுகள்தான் ஆகிறது. இந்த குறுகிய காலத்துக்குள்ளேயே இந்தியா நிறைய சாதித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

3. ஆனாலும், இந்தியா பற்றி பெரும்பாலான மேலைநாட்டு ஊடகங்கள் திட்டமிட்டு பொய்யான தகவல்களைப் பரப்பி வருகின்றன. "தி இண்டிபெண்டன்ட்" பத்திரிகை சமீபத்தில் ஐரோப்பிய நாட்டைவிடவும் இந்தியா அதிக அளவில் கார்பன் போன்ற விஷ வாயுக்களை உற்பத்தி செய்கிறது என்று அந்தக் கட்டுரை சகட்டுமேனிக்குக் குற்றம் சுமத்தியது.

4. ஒரு விஷயத்தை அந்தப் பத்திரிகை மறந்துவிட்டது & அல்லது, மறைத்துவிட்டது. 110 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவை ஐரோப்பாவில் உள்ள எந்த ஒரு தனி நாட்டுடனும் ஒப்பிட முடியாது; ஒப்பிடக் கூடாது. மாறாக, ஐரோப்பா கண்டம் முழுவதுடனும் ஒப்பிட வேண்டும்.

5. ஓர் அமெரிக்கர் உற்பத்தி செய்யும் கார்பன் டையாக்சைடு வாயுவின் அளவில் பத்தில் ஒரு பங்கைதான் ஓர் இந்தியர் சராசரியாக உற்பத்தி செய்கிறார் என்பதுதான் உண்மை.

6. அதே பத்திரிகை, சில நாள் கழித்து இன்னொரு கட்டுரை வெளியிட்டது. உலகின் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் அதிகரித்து வரும் மக்கள்தொகைதான் என்று குறிப்பிட்டு, அதற்காக இந்தியாவையும் சீனாவையும் குறைகூறியிருந்தது.

7. இந்தியாவின் மக்கள்தொகை அதிகம்தான் என்பதும் அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருப்பது அதுதான் என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால், உலகின் எல்லாப் பிரச்னைகளுக்கும் இதுவா காரணம்? வெறும் எண்ணிக்கை அடிப்படையிலா நாடுகளை ஒப்பிடுவது?

8. இந்தியாவில் சராசரியாக ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பில் 336 பேர் வசிக்கிறார்கள். இங்கிலாந்தில் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பில் 246 பேர் வசிக்கிறார்கள். உலகின் அதிக மக்கள்தொகையைக் கொண்ட சீனாவில் ஒரு சதுர கிலோமீட்டர் பரப்பில் 137 பேர்தான் உள்ளனர்.

9. உலகில் உள்ள அத்தனை மக்களையும் அமெரிக்காவில் குடியேறச் செய்தாலும், ஒரு சதுர கிலோமீட்டருக்கு 300 பேர் கூட இருக்க மாட்டார்கள். அப்படி இருக்கும்போது, உலகப் பிரச்னைகளுக்கு மக்கள்தொகை பெருக்கம்தான் காரணம் என்பதை எப்படி ஏற்க முடியும்?

10. சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் இந்தியாவின் செயல்பாடு பாராட்டும் வகையில்தான் இருக்கிறது. ஆனால், இதெல்லாம் அமெரிக்க, இங்கிலாந்து பத்திரிகைகளில் செய்திகளாக இடம் பெறுவதில்லை.

11. எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும் நாடுகளில் இந்தியாவை எப்போதுமே முதலிடத்தில் வைத்துப் பார்க்கும் வழக்கம் மேற்கத்திய ஊடகங்களுக்கு உண்டு. ஆனால், 110 கோடி மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது, எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் மிகக் குறைவு என்பதை அவை ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை.

12. இவ்வளவு மக்கள்தொகை இருந்தும், பல மொழி, பல இனம், பல கலாசாரம் என்று இருந்தும் இந்தியா என்ற ஒரு நாடு ஜனநாயக வழிமுறைகளில் இருந்து இன்னமும் விலகாமல் இருக்கிறதே! இதையும் மேற்கத்திய நாடுகள் அங்கீகரிப்பதில்லை.

13. வறுமையாகட்டும், சுற்றுச்சூழல் பிரச்னைகள் ஆகட்டும், சுகாதாரம் ஆகட்டும், எல்லா பிரச்னைகளுக்கும் இந்தியா போன்ற வளரும் நாடுகள் மீது பழி போட்டுவிட்டு, தப்பித்துக்கொள்வது என்பது வளர்ந்த நாடுகளின் வழக்கம் ஆகிவிட்டது.

14. தகவல் தொழில்நுட்பம், அணு ஆராய்ச்சி, வின்வெளி ஆய்வு போன்றவற்றில் வல்லரசுகளுக்கு இணையாக இந்தியா வளர்ந்திருக்கிறது. நாம் இன்னமும் செய்ய வேண்டியதை மறந்துவிடக் கூடாது.

15. கிட்டத்தட்ட 30 கோடி இந்தியர்களுக்கு மூன்று வேளை உணவு என்பதே ஒரு கனவாக இருக்கிறது என்பது கொடுமை. இந்தியாவில் வறுமை எப்போது முற்றிலும் ஒழிக்கப்படுகிறதோ அப்போது ஒரு புதிய இந்தியா பிறக்கும்.


நன்றி: தினகரன்

Thursday, October 26, 2006

பூரி மசால் - இந்த வார ஜோக்...

கனவன் டாக்டர் என நினைத்துக் கொண்டு கம்பவுன்டரிடம்..

கனவன்: டாக்டர் என் மனைவிக்கு காது சரியாக கேட்கவில்லை. அவளை மருத்தவமனைக்கு அழைத்தால் வருவதில்லை. மிகவும் கூச்சப் படுகிறாள். அதனால், நீங்க நல்ல யோசனை ஒன்று சொல்ல வேண்டும்.

கம்பவுன்டர்: நீங்க நோயாளி இங்கே கூட்டிட்டு வந்தால் தான் சிகிச்சை தர முடியும்.

கனவன்: அவள் வரமாட்டிங்கறாளே. நீங்க ஏதாவது யோசனை சொல்லுங்க..

கமபவுன்டர்: சரி ஒரு ஐடியா தரேன்..நீங்க அவங்களுக்கு எவ்வள்வு தூரத்திலிருந்து பேசினால் கேட்பதில்லை என்று தெரிந்து சொன்னால் அதை வைத்து ஏதாவது செய்யலாம்.

கனவன்: சரிங்க அப்படியா ஆகட்டுங்க..இப்பொழுது கனவன் மனைவியிடம் பரிசோதனை செய்ய வருகிறார்.(சுமார் 40 அடி தள்ளி நின்று) கனவன் : மீனாட்சி, இன்றைக்கு நைட் என்னடி டிபன்..

மனைவி: எந்த ஒரு சத்தமும் இல்லை.(இப்பொழுது சுமார் 30 அடியில் நின்று) கனவன் : ஏய் மீனாட்சி, இன்றைக்கு நைட் என்னடி டிபன்..

மனைவி: எந்த ஒரு சத்தமும் இல்லை.(இப்பொழுது சுமார் 20 அடியில் நின்று) கனவன்: ஏன்டீ, இன்றைக்கு நைட் என்ன டிபன்..

மனைவி: எந்த ஒரு சத்தமும் இல்லை.(இப்பொழுது சுமார் 10 அடியில் நின்று) கனவன் : ஏம்மா மீனாட்சி, இன்றைக்கு நைட் என்ன டிபன்..
இப்பொழுது, மனைவி: பூரி மசால் என்று நாளு முறை சொல்லிட்டேன்..

Dr.அன்புமணி இராம்தாசு பார்வைக்கு..
நன்றி: The Hindu.

Wednesday, October 25, 2006

அமெரிக்காவில் கவலை ரேகை...


வாய்ப்புகளை வாரி வழங்கும் பூமி. கல்வியில், தொழில்நுட்பத்தில், அறிவியலில் அமெரிக்காவுக்கு இணையாக எதுவும் இல்லை' என்றுதான் அமெரிக்காவைப் பற்றி உலகம் முழுவதும் உள்ள கருத்து. அதிகார மையமாகவும் உலகப் பொருளாதாரத்தின் கேந்திரமாகவும் அமெரிக்கா வளர்ந்தது.

அமெரிக்கா என்ற அச்சை சுற்றியே உலகப் பொருளாதாரம் இயங்குகிறது. அப்படிப்பட்ட அமெரிக்காவின் பொருளாதாரம் இப்போது எப்படி இருக்கிறது?

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி இந்த ஆண்டு 3.5 சதவீதம் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது (சீனாவின் வளர்ச்சி 10 சதவீதத்துக்கும் மேல், இந்தியாவின் வளர்ச்சி 8 சதவீதத்துக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது).

அமெரிக்காவில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 4.6 சதவீதம்தான். இந்த ஆண்டு பெரும்பாலான தொழில் நிறுவனங்கள் எக்கச்சக்கமாக லாபம் சம்பாதித்துள்ளன. இதையெல்லாம் பார்த்தால், அமெரிக்கப் பொருளாதாரத்தின் எதிர்காலம் நம்பிக்கை அளிப்பதாகத் தோன்றும். ஆனால், அத்தகைய நம்பிக்கைக்கு இடமில்லை என்பதுதான் உண்மை.

1. அமெரிக்காவின் ஏற்றுமதியைவிட இறக்குமதி அளவு அதிகம். இரண்டுக்கும் இடையில் உள்ள இடைவெளி கடந்த ஓராண்டில் மட்டும் 80,000 கோடி டாலர்.

2. சேமிப்பு என்பதே அமெரிக்க மக்களுக்கு மறந்துவிட்டது. அமெரிக்க மக்கள் கடந்த ஆண்டில் தாங்கள் சம்பாதித்ததைவிட 50,000 கோடி டாலர் அதிகமாக செலவிட்டுள்ளனர். வங்கிகளில் கடன் கிடைக்கிறது என்பதற்காக, வருமானத்தை மீறி பொருள்களை வாங்கிக் குவித்து வருகின்றனர்.

3. இந்த நிலை தொடர்ந்தால், அடுத்த 4 ஆண்டுகளில் அமெரிக்காவில் மிகப் பெரிய நிதி நெருக்கடி ஏற்படும் என்று அந்த நாட்டின் தலைமை வங்கியின் தலைவர் பால் வோல்கர் எச்சரித்திருக்கிறார்.

4. அமெரிக்க அரசும்கூட கடன்களை வாங்கிக் குவிக்கிறது.

5. பத்திரங்கள் வெளியீடு மூலமும் இதர வழிகளிலும் சராசரியாக தினமும் 300 கோடி டாலர்களை கடனாக வாங்கிக் கொண்டிருக்கிறதாம் அமெரிக்க அரசு.

6. இந்த கடன்களும் சேமிப்பே இல்லாத அமெரிக்க மக்களின் செலவுகளும்தான் அமெரிக்கப் பொருளாதாரத்தை 'செழிப்பானதாக' வெளியுலகுக்குக் காட்டிக்கொண்டு இருக்கிறது.

7. நிலைமையைச் சமாளிக்க, வட்டி விகிதத்தை அதிகரிப்பது பற்றியும் டாலர் மதிப்பைக் குறைப்பது பற்றியும் யோசிக்க வேண்டிய நிலைக்கு அமெரிக்க அரசு தள்ளப்பட்டுள்ளது.

8. இந்த நடவடிக்கைகளை அமெரிக்கா எடுக்குமானால், சர்வதேசப் பொருளாதாரத்தில் அது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

9. இராக்கில் நடந்துவரும் நிழல் யுத்தத்துக்கும் தீவிரவாதத்துக்கு எதிரான போரின் காரணமாக, வளர்ச்சிப் பணிகளுக்கான, சமூகப் பணிகளுக்கான ஒதுக்கீடு சுருங்கி வருகிறது. சுகாதாரம், கல்விக்கு செலவிடும் தொகை ஏற்கனவே குறைந்துவிட்டது.

10.நியூ ஆர்லியன்ஸ் நகரை காத்ரீனா புயல் தாக்கியபோதே, அமெரிக்கர்கள் தங்களைப் பற்றிக் கொண்டிருந்த கனவுகள் நொறுங்கிவிட்டன. நிவாரணப் பணிகளுக்குத் தேவையான பணத்தைத் திரட்ட அந்த நாட்டு அரசாங்கத்தால் முடியவில்லை. முறையான நிவாரணப் பணிகள் நடக்காததால், கொள்ளை, வன்முறைகள் வெடித்தன.

11. அமெரிக்காவின் இப்போதைய மக்கள்தொகை 30 கோடி. இவர்களில் 3.7 கோடி பேர் (12.7 சதவீதம்) வறுமையில் உள்ளனர். வளர்ந்த நாடுகள் எதிலும் இந்த அளவுக்கு வறுமை இல்லை.

12. இப்படி வறுமையில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள், கறுப்பினத்தவர்கள் அல்லது, ஸ்பானிக்ஸ் என்று அழைக்கப்படும் ஸ்பெயின் வம்சாவளியினர். இருப்பவர்கள், இல்லாதவர்கள் இடையிலான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருவதால், குற்றங்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

13.ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையில் அதிகரித்து வரும் இடைவெளி, தொடர்ந்து உயர்ந்து வரும் பட்ஜெட் பற்றாக்குறை, வறுமை, மக்களிடையே உள்ள ஏற்றத்தாழ்வுகள் ஆகியவை, அமெரிக்காவுக்கு வளமான எதிர்காலம் உண்டா என்ற கேள்வியை எழுப்பியுள்ளன.

14.இதனால், தங்கள் நாட்டின் மீது அமெரிக்க மக்கள் நம்பிக்கை இழந்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.

அமெரிக்கா என்ற கனவு தேசத்தின் இன்றைய நிலை பிரகாசமாக இல்லை.


"கனவு தேசத்தில் கவலை ரேகை" என்ற கட்டுரையில் திரு.ஆர்.உமாசங்கர்

நன்றி: தினகரன்

தமிழ்நாட்டில் அடிமைகள்
சேலத்தில் உள்ள தனியார் ஜவுளி நிறுவனம் ஒன்றில் ஒரிசாவை சேர்ந்த 33 பேர் கொத்தடிமைகளாக வேலை செய்து வந்தனர். அவர்களை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு மீட்டனர். சேலத்தில் உள்ள எருமாபாளையம் அரசு பள்ளியில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை ஒரிசாவுக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Monday, October 23, 2006

நாங்கள் என்ன பாவம் செய்தோம்?


பீகார் மாநிலத்தில் உள்ளது கல்யாண்பட்டி என்ற கிராமம். இங்கு, ஒரு அரசுப் பள்ளி உள்ளது. ஆரம்பத்தில், தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் காலனியில் இந்தப் பள்ளி இருந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு உயர் ஜாதி மக்கள் வசிக்கும் பகுதிக்கு பள்ளி இடம் மாறியது.


அப்போதிருந்து தாழ்த்தப்பட்ட குழந்தைகள், பள்ளி வளாகத்துக்கு உள்ளேயே அனுமதிக்கப் படவில்லை. பள்ளிப் பதிவேட்டில் அந்தக் குழந்தைகளின் பெயர் உள்ளது. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக தாழ்த்தப்பட்ட குழந்தைகளை பள்ளிக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர்.


இன்றாவது பள்ளிக்குள் அனுமதிப்பார்கள்; பாடம் படிக்கலாம் என ஆசையோடு செல்வோம். ஆனால், அங்கு அடி, உதைதான் கிடைக்கும். பள்ளிக்குள் நுழைய விடாமல் துரத்தி அடித்து விடுவார்கள். நாங்கள் என்ன பாவம் செய்தோம்?... இது, பிரபாஷ் குமார் என்ற சிறுவனின் அழுகுரல்.


இருப்பது ஒரே பள்ளி. எங்கள் வாழ்க்கைதான் சீரழிந்துவிட்டது. எங்கள் குழந்தைகளாவது படிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால், ஜாதி வெறி இங்கு தலை விரித்து ஆடுகிறது. இந்த பள்ளியில் எங்கள் குழந்தைகள் படிப்பது சாத்தியமில்லை.


எங்கள் குழந்தைகளை ஆசிரியர்களே அடித்து, உதைத்து, அவமானப்படுத்தி, கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகின்றனர். எங்கு போய் சொல் வது இந்தக் கொடுமையை?... குமுறுகிறார் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த நந்த்லால்.


பள்ளியை மீண்டும் தங்கள் காலனிக்கு மாற்றிவிட்டால் பிரச்னை தீர்ந்துவிடும் என தாழ்த்தப்பட்ட மக்கள் கருதுகின்றனர். அப்படி செய்தால் விளைவுகள் பயங்கரமாக இருக்கும் என்று மிரட்டுகின்றனர் உயர் ஜாதியினர். கல்யாண்பட்டி கிராமம் போல பீகாரில் பல கிராமங்களில் ஜாதி வெறி தலை விரித்து ஆடுகிறது. ஆனால், பீகார் அரசோ, கண்டும் காணாமல் இருக்கிறது.

நன்றி: தினகரன்

Sunday, October 22, 2006

இந்திய கம்யூனிஸ்டு எதிர்ப்பு - உச்ச நீதி மன்ற உத்தரவுக்குசுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவுக்கு இந்திய கம்யூனிஸ்டு பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மத்திய செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-


சமூகத்தில் ஆண்டாண்டு காலமாக நீடித்து வரும் தீண்டாமை கொடுமை, சமூக பாகுபாடு, கல்வி, வேலைவாய்ப்பில் சமஉரிமை மறுப்பு ஆகியவை காரணமாக இட ஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு இட ஒதுக்கீட்டு கொள்கையையும், அதன் அமலாக்கத்தையும் மாற்றி அமைக்க பார்க்கிறது. இதன்மூலம் பாராளுமன்ற, சட்டசபைகளின் அதிகாரத்தை ஆக்கிரமிக்கிறது.


நமது ஆட்சி முறையில் பாராளுமன்றத்துக்குதான் அதிக அதிகாரம் உள்ளது. அது மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கிறது. கொள்கைகளையும், சட்டங்களையும் உருவாக்குகிறது. கொள்கை முடிவு என்பது பாராளுமன்றத்தின் அதிகாரத்துக்கு உட்பட்டதே தவிர, நீதித்துறையின் அதிகாரத்துக்கு உட்பட்டது அல்ல.


இட ஒதுக்கீடு எவ்வளவு காலத்துக்கு நீடிக்க வேண்டும் என்பதை பாராளுமன்றம், சட்டமன்றங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு தீர்மானிக்க கூடாது.


சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, பிற்போக்கு தனமானது. இது சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான நீதித்துறை தாக்குதல். ஆகவே, இதில் பாராளுமன்றம் தலையிட்டு இந்த ஆபத்தான போக்கை மாற்றி அமைக்க வேண்டும். இல்லாவிட்டால், அனைவருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு என்ற லட்சியத்தை இத்தீர்ப்பு சிதைத்து விடும்.


இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Friday, October 20, 2006

WEEKEND ஜோக் : யாரோ எடுத்து சென்றுவிட்டார்கள்ஒரு MBAயும் BComம் சுற்றுலா செல்கின்றனர். அங்கே டென்ட் அமைத்து உறங்கச் சென்றனர். சிறுது நேரத்திற்கு பிறகு இருவரும் பேசிக்கொண்டனர்.

BCom MBAவைப் பார்த்து மேலே வானத்தில் என்ன தெரிகின்றது என்று.

அதற்கு MBA சொன்னான் இலடசக்கனகான வின்மீன்கள் தெரிகிறது.

BCom : அவை என்ன சொல்கிறது ?

MBA : வான அறிவியலின் படி பார்த்தால் இலட்சக்கனக்கான பால்வெளி உள்ளது அதில் கோடிக்கனக்கான கோள்கள் உள்ளது.

MBA : சோதிட முறைப்படி சனி சிம்ம ராசிக்கு செல்கிறார்

MBA : நேரத்தை கணித்தால் இப்பொழுது நேரம் 2 மணி 15 நிமிடங்கள்.

MBA : வானிலை வைத்துப் பார்த்தால் நாளை நன்றாக இருக்கும்.இப்பொழுது MBA Bcomஐ பார்த்து உனக்கு என்ன சொல்கிறது என்றான்..


அதற்கு


Bcom : உண்மையை சொல்ல வேண்டுமானல் நமது டென்டை யாரோ எடுத்து சென்றுவிட்டார்கள்..

Thursday, October 19, 2006

ஒரு ஜாலியான பதிவு- யாரையும் காயப்படுத்த அல்ல..


நான் காதலிக்கிறேன்... பாசமாக இருக்கிறேன்... தோழமையோடு இருக்கிறேன்... எல்லாவற்றுக்கும் மேல், சிந்திக்கிறேன் என்று நினைக்கிறீர்களா? உங்களைப் பார்த்து கைகொட்டிச் சிரிக்கிறது சமீபத்திய ஆய்வு.

மனிதன் ஒருபோதும் சிந்திப்பதுமில்லை; காதலிப்பதுமில்லை; பாசம் செலுத்துவதுமில்லை; தோழமையோடு பழகுவதுமில்லை என பொட்டில் அடிப்பதுபோல் சொல்கிறது.

1. மேம்பட்ட விலங்கு என்பதைத் தவிர மனிதனுக்கு வேறு எந்த சிறப்புத் தகுதியும் கிடையாது. சிந்திப்பது மட்டுமே மனிதனை விலங்குகளிடம் இருந்து பிரித்துக் காட்டுகிறது என்று சொல்வது, அபத்தம் என்கிறார்கள் மானிட ஆய்வாளர்கள்.

2. ஒருபோதும் நாமாக சிந்திப்பதில்லை. ஒரு புத்தகமோ, ஒரு உரையாடலோ, ஒரு இசையோ, ஒரு மவுனமோதான் நம்மை சிந்திக்கத் தூண்டுகிறது. தூண்டுவதற்கு ஏதாவது இல்லாவிட்டால் நம்மால் சிந்திக்கவே முடியாது. நம்மை சிந்திக்கத் தூண்டும் புத்தகத்தை எழுதிய மனிதனுக்குக்கூட வேறு ஏதேனும் ஒன்று தூண்டுதலாக இருந்திருக்கும்.

3. மொத்தத்தில் கூட்டு சிந்தனையே அனைத்து தத்துவங்களுக்கும் காரணம்.
இந்த இடத்தில்தான் மொழியின் சிக்கல் விஸ்வரூபம் எடுக்கிறது. உதாரணமாக, "அம்மா" என்று ஒருவரை அழைக்கும்போதே மற்றவர்கள் யாரும் "அம்மா" இல்லை என்பதை உணர்த்துகிறோம். எதிர்பாலினத்தைக் காதலிப்பதாகச் சொல்லும்போதே, மற்றவர்களை வெறுக்கிறோம் என்பதை ஏற்கிறோம். ஒருவரை நேசிக்கும்போதே, அடுத்தவரை நேசிக்கவில்லை என்பதையும் ஒப்புக்கொள்கிறோம். மொத்தத்தில், ஒவ்வொரு வார்த்தையும் அதற்கான எதிர்மறையை சுமந்துகொண்டே அலைகிறது.

4. இப்படி புனிதமாக நாம் நினைக்கும் எல்லாம் வெறும் புடலங்காய்தான் என்றால் அதிர்ச்சியாக இருக்கும். ஆனால் உண்மை அதுதான்.

5. உண்மையில் தன்னைத் தவிர யாரையும் யாரும் காதலிப்பதுமில்லை, நேசிப்பதுமில்லை. சுயநலமாக வாழ்வது மட்டுமே இயல்பானது.

6. அடுத்தவரை வீழ்த்த நாம் நடத்தும் நாடகமே வாழ்க்கை. வாழ்க்கையின் அர்த்தமே, அடுத்தவர் முன்னேறாமல் தடுப்பதுதான். மனதின் சந்தோஷமே அடுத்தவர் வீழ்ச்சியில்தான் அடங்கியிருக்கிறது.

7. விலங்குகளின் இயல்பே மனிதனின் இயல்பு. அப்படி இருக்கக் கூடாது என்று நினைக்கும் போதுதான் குற்ற உணர்வுகளும் மன அவஸ்தைகளும் ஏற்படுகின்றன.

8. புனிதம் என்று காலம் காலமாக எழுதப்பட்டும் பேசப்பட்டும் வரும் விஷயம் காதல். உண்மையில் காதலைப் போன்ற பம்மாத்து வேறு எதுவுமே கிடையாது.

9. ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண் இருக்கிறாள். ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஓர் ஆண் இருக்கிறான். தனக்குள் இருக்கும் பெண்ணின் பிரதிபலிப்பை வேறொரு பெண்ணிடம் சாயலாகக் காணும் ஆண், அவளைக் காதலிப்பதாக நினைக்கிறான். அவளை அடைவதன் மூலம், வேறொரு ஆணிடம் அவள் போவதைத் தடுக்கிறான். இதே தியரியை பெண்ணுக்கும் பொருத்தலாம்.

10. பிரச்னை என்னவென்றால், ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும், தனக்குள் இருக்கும் மறுபாதியை பலரிடம் காண்பதுதான். அதனால்தான், அனுபவம் கூடக் கூட, காதல் உணர்வு வளர்ந்துகொண்டே போகிறது; மாறிக்கொண்டே இருக்கிறது. மறுபாதியின் பிரதிபலிப்பைக் காணும்போதெல்லாம் உணர்ச்சிப் பெருக்கெடுக்கிறது. பரிணாம வளர்ச்சியில் இந்த உண்மையை ஆண், பெண் இருவருமே புரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் இப்போது காதலுக்காக வகுக்கப்பட்ட பல வார்த்தைகள் இறந்து, ஆவணக் காப்பகங்களில் செல்லரித்துப் போயிருக்கின்றன.

11. இன்று சராசரியாக ஒவ்வொருவரும் பன்னிரெண்டு, பதிமூன்று வயது முதலே மறுபாதியை எதிர்கொள்ள ஆரம்பித்துவிடுகிறார்கள். அது முதலே காதல் உணர்வு அரும்ப ஆரம்பித்துவிடுகிறது. அதனால்தான், இருபத்து மூன்று வயதுப் பெண்ணிடம் காதலிப்பதாக ஓர் ஆண் சொல்லும்போது அவள் சிரிக்கிறாள். அவளுக்குத் தெரியும், போகப் போக இன்னும் அதுபோன்ற பலரை தான் எதிர்கொள்ள நேரிடும் என்று!

12. ஒவ்வொருவரும் இன்று நேரில், போனில், இன்டர்நெட்டில் என்று எதிர் பாலினத்தைச் சேர்ந்த பலரிடம் தினமும் பேசுகிறார்கள். கொஞ்சுகிறார்கள். எதற்காகப் பேசுகிறோம், பழகுகிறோம் என்பது இருவருக்குமே தெரியும். ஆனாலும் தெரியாதது போல நடந்துகொள்வதில் இருக்கும் சுவாரஸ்யம், அந்த உறவை அனுமதிக்கிறது. தப்பித் தவறி யாராவது ஒருவர் வெளிப்படுத்தும்போது, திடுக்கிடுவது போல் காட்டிக்கொள்வது நமது ‘புனிதத்தைக் காப்பாற்றுகிறது.

13. உண்மையில் அன்றாடம் நாம் சந்திப்பவர்களில் நமது எதிர்காலத்துக்கு யார் உதவுவார்களோ அவர்களை வாழ்க்கைத் துணையாக ஏற்க மனம் அனுமதிக்கிறது.

14. இன்றைய தேதியில் திருமண மையங்களில் பதிவு செய்பவர்கள்கூட, இன்ன தகுதியுள்ள, இன்ன வேலை செய்யக்கூடிய வரன்தான் தேவை என்பதைத் தெளிவாகக் கேட்டுப் பெறுகிறார்கள். காதலிப்பதாக சொல்பவர்கள்கூட, சாதாரணமானவர்களைக் காதலிப்பதில்லை. தகுதியானவர்களை, தங்கள் எதிர்காலத்துக்கு பயன்படக் கூடியவரை மட்டுமே காதலிக்கிறார்கள்.

15. பரஸ்பர உதவிகளே காதலின் அடித்தளம். இந்தத் தகுதியும், பயனும் ஆறு போல ஓடிக்கொண்டிருக்கும் வரைதான் காதல் உறவும் நீடிக்கும். குட்டையைப் போல தேங்கிவிட்டால், சாக்கடையைப் போல உறவும் நாறி, பிரிவை நோக்கி நகர்ந்துவிடும்.
தோழமையும் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.

16.தேவை அறிந்து உதவுபவன் மட்டுமே நண்பனாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவான். உதவாதவன் விரோதி பட்டியலில் முதல் இடத்தைப் பிடிப்பான்.
இப்படி உதவுபவனும் சாகும் வரை உதவ வேண்டும். அப்போதுதான் அவன் உயிர் நண்பன்.

17. எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்போதுதான் சந்தோஷம் பிறக்கிறது. எதிர்பார்ப்பு நிறைவேறாதபோது துக்கம் தொண்டையை அடைக்கிறது. அப்படியானால் சந்தோஷமும் துக்கமும்கூட கற்பிதம்தானே?

18. மனது ஏற்கும் விஷயம் சரியாகவும் ஏற்க அச்சப்படும் விஷயம் தவறாகவும் அர்த்தமாகும்போது, உணர்வுகளும் பொய்யாக அல்லவா போகிறது?

19. நன்றி, விசுவாசம், நேர்மை, நியாயம்... போன்ற வார்த்தைகள் புனிதமல்ல. ஒரு செயலைச் செய்ய அச்சப்படும்போது, நம்மை நாமே சமாதானப்படுத்துவதற்காக உச்சரிக்கப்படும் வார்த்தைகள் அவை. அவ்வளவுதான்.

20. விசுவாசிகளை தலைவன்கூட நம்புவதில்லை. தலைவனைத் தவிர வேறு யாரையும் சமூகம் அங்கீகரிப்பதில்லை. இந்த விலங்கின் இயல்பை ஏற்றுக்கொண்டவன் புத்திசாலி. ஏற்கத் தயங்கி யோசிப்பவன் முட்டாள்!

21. இந்த சமூகத்தில் வேட்டையாடத் தெரிந்தவன் மட்டுமே வாழத் தகுதியானவன். வேட்டையாட அஞ்சுபவன், வேட்டையாடப்பட வேண்டியவன். நீங்கள் வேட்டையாட விரும்புகிறீர்களா? வேட்டையாடப்பட விரும்புகிறீர்களா? இந்த இரண்டில் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுப்பதைப் பொறுத்து உங்கள் எதிர்காலம் இருக்கும். ?எது புனிதம் என்ற கட்டுரையில் திரு.கே. என். சிவராமன்

நன்றி: தினகரன்

நடிகை ஸ்ரீவித்யா திடீர் மரணம்
பிரபல நடிகை ஸ்ரீவித்யா நேற்று திருவனந்தபுரத்தில் காலமானார். அவருக்கு வயது 53. பிரபல பின்னணி பாடகி எம்.எல்.வசந்தகுமாரியின் மகளும், தமிழ் திரைப்பட நடிகையுமானவர் ஸ்ரீவித்யா.

கடந்த வாரம் ஸ்ரீவித்யா திடீர் உடல்நலக் கோளாறு காரணமாக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புற்றுநோய் காரணமாக ஸ்ரீவித்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக செய்திகள் வெளியாயின. எனினும், உறுதியான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீவித்யா திடீரென மரணமடைந்தார். 53 வயதான அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும், இதையடுத்து சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

செய்தி: தின மலர்

Wednesday, October 18, 2006

நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை
மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடப்பங்கீடு செய்வது தொடர்பாக உச்சநீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை ஏற்க இயலாது.
கொள்கை தொடர்பான விசயங்களில் முன்கூட்டியே தலையிட நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருத்து தெரிவித்துள்ளது.

டெல்லியில் மார்க்சிஸ்ட் பொலிட் பீரோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடப்பங்கீடு அளிப்பது தொடர்பாக சட்டம் கொண்டு வருவது என்பது நாடாளுமன்ற நிலைக் குழுவின் சொந்த விஷயம். அது தொடர்பாக அந்தக் குழு ஆலோசித்து வருகிறது.

தனது அறிக்கை நாடாளுமன்றத்தில்தான் அந்தக் குழு முதலில் தாக்கல் செய்ய வேண்டும். சட்டம் கொண்டு வரப்பட்ட பின், அது தொடர்பாக விசாரணை நடத்தவோ, தலையிடவோ, கருத்து சொல்லவோ நீதிமன்றங்களுக்கு உரிமை உண்டு. ஆனால், சட்டம் கொண்டு வரப்படுவதற்கு முன்பே அதில் தலையிடவோ, கொள்கை விஷயங்களில் தலையிடவோ நீதிமன்றங்களுக்கு சிறிதும் அதிகாரம் இல்லை.

கொள்கை விஷயங்கள் எதுவானாலும், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெற வேண்டும். அது நாடாளுமன்றத்துக்கே உள்ள தனிப்பட்ட உரிமை. சட்டம் கொண்டு வருவதில், நாடாளுமன்றத்தில் அதை அறிமுகம் செய்வதுடன் அரசின் பணி முடிந்துவிட்டது.

பின்னர், அதை நிறைவேற்றுவதோ, திருத்தம் செய்து நிறைவேற்றுவதோ நாடாளுமன்றத்தின் உரிமை. அதனால், இடப்பங்கீடு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் அதற்கு அரசு உட்பட யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.

ஆனால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன் நாடாளுமன்ற நிலைக்குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடாளுமன்றத் அதிகாரத்தில் தலையிடுவதாகதான் கருத வேண்டும். இதை ஏற்க முடியாது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இதற்கிடையில் இடப்பங்கீடு விவகார உத்தரவில் திருத்தம் செய்தது உச்சநீதிமன்றம்

உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடப்பங்கீட்டை அமல்படுத்துவது பற்றிய நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபின் சமர்ப்பிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

இடப்பங்கீடு தொடர்பான நாடாளுமன்ற நிலைக் குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில்தான் முதலில் தாக்கல் செய்ய வேண்டும் என்று பல அரசியல் கட்சிகள் கூறின.

இந்த நிலையில், தனது உத்தரவில் திருத்தம் செய்து உச்சநீதிமன்றம் நேற்று வெளியிட்டது.

Tuesday, October 17, 2006

லிவ் இன் அரேஞ்மென்ட்மேற்கத்திய பாணி "லிவ் இன் அரேஞ்மென்ட்' கலாசாரம், பரவத்துவங்கி விட்டது. பெங்களூரை தொடர்ந்து ஐதராபாத்திலும் சாப்ட்வேர் துறையில் கைநிறைய சம்பளம் வாங்கும் சாப்ட்வேர் இன்ஜினியர்களிடம் இப்படிப்பட்ட பழக்கம் தொற்றி வருகிறது.

காதலன், காதலி இவருக்கும் தங்களின் வரம்பு எது என்று தெரியும் என்று கூறினாலும், அந்த வரம்பு என்பது அவர்கள் நிர்ணயிப்பது தான். அவர் களுக்கு குழந்தை பெற்று, வளர்க்க வேண்டும், ஆளாக்க வேண்டும் என்று நினைக்கும் போது தான், அவர்களால், சட்டப்பூர்வ திருமணம் பற்றி சிந்திக்க நேர்கிறது.

அவர்களில் இருவருக்கும் எல்லா வசதிகளும் கிடைக்கிறது. ஆனால், வாழ்க்கை, பந்தம், கட்டுப்பாடு என்பதெல்லாம் நம்பிக்கையில்லாத விஷயமாகி வருகிறது. இவர்களின் பெற்றோர், இவர்களின் திருமணத்தை நடத்த முன்வந்தாலும், இந்த ஆணோ, பெண்ணோ முன்வருவதில்லை.

நாங்கள் ஒரே ப்ளாட்டில் தங்குவது தவறாக தெரிகிறதா? நாங்கள் இருவரும் காதலிக்கிறோம். ஆனால், திருமணம் என்ற பந்தத்துக்குள் போக தயாரில்லை. இப்படியே இருப்போம். குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவைப்பட்டால், அதை சட்டப்பூர்வமாகத்தான் செய்வோம்' என்று கூறுகின்றனர்.

பிரபல மனோதத்துவ நிபுணர் நிரஞ்சன் ரெட்டி கூறுகையில், "இந்த சமுதாயத்தின் கட்டுப்பாடான நடைமுறைகள் பிடிக்கவில்லை. நாங்கள் மாற்றத்தான் போகிறோம். அதற்காகத்தான் இந்த திருமண சடங்கு, சம்பிரதாயங்களை உடைக்கிறோம். நாங்கள் திருப்தியாக வாழாத நிலையில் பிரிந்துவிடுவோம் என்றும் கூறுகின்றனர்.

அந்த அளவுக்கு அவர்களிடம் திருமண பந்தம் என்ற கட்டுப்பாட்டின் மீது பயம், வாழ்வில் பிடிப்பின்மை, பாதுகாப்பின்மை இருப்பதை உணர முடிகிறது' என்றார்.

நன்றி: தினமலர்

Monday, October 16, 2006

மந்திர சக்தியா? இயந்திர சக்தியா?

இது பெரியார் கூறிய கருத்து.. இன்றும் தேவைப் படுகிறது..


பகுத்தறிவு

இராமாயணத்திலும், பாரத்திலும் ஆகாய விமானம் இருக்கிறது. ஆனால், அது மந்திர சக்தியால் ஓடியிருக்கிறது. ஆங்கில இலக்கியத்தில் ஆகாய விமானம் பற்றிய விளக்கம் இருக்கிறது. இது இயந்திர சக்தியால் ஓடுகிறது. நமக்கு எது வேண்டும்? மந்திர சக்தியா? இயந்திர சக்தியா?

அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் தேவைக்கும் பொருத்தமில்லாத காரியங்கள் பழக்கத்தின் பேராலோ, வழக்கத்தின் பேராலோ, தெய்வத்தின் பேராலே மதத்தின் பேராலே, சாதி வகுப்பின் பேராலோ மற்றெதன் பேராலே நடத்தப்படக் கூடாது.

கடவுள் சென்னது, மகான் சொன்னது, ரிஷி சென்னது, அவதார புருடர்கள் சொன்னது என்று பார்க்கின்றானே ஒழிய, தன்புத்தி என்ன சொல்லுகிறது என்று பார்ப்பதே இல்லை.

மூட நம்பிக்கைகளைப் பகுத்தறியாமல் பின்பற்றியதாலேயே உழை ப்பாளி அடிமையாகவும், சோம்பேறி ஆண்டானாகவும் இருக்கும் நிலை வந்தது.

மாறுதலைக் கண்டு அஞ்சாமல், அறிவுடைமையோடும் ஆண்மையோடும் நின்று எதையும் நன்றாய் ஆராச்சி செய்து, காலத்திற்கும் அவசியத்திற்கும் தக்க வண்ணம் தள்ளுவன தள்ளிக் கூட்டுவன கூட்டித் திருத்தம் செய்ய வேண்டியது பகுத்தறிவுடைய மனிதனின் இன்றியமையாத கடமையாகும்.


அறிவியல்

வாழ்க்கையில் இவ்வளவு மாற்றமடைந் துள்ள நம் மக்களின் புத்திமட்டும் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போலவே இருக்கிறதே!.

கொஞ்ச காலத்திற்குமுன் கடவுளைப் பற்றிய கதைகளை அப்படியே, அதாவது கடவுள் சக்தியில் நடைபெற்றது என்று நம்பிக்கொ ண்டிருந்தவர்கள் கூட, இப்பொழுது அப்படியே நம்புவதற்கு வெட் கப்பட்டுக் கொண்டு, தங்களுக்குள்ள அறிவு வளர்ச்சியில்லாத தன் மையை மறைத்துக் கொண்டு, விஞ்ஞானத்தின் மூலம் அக்கதைகளை மெய்ப்பிக்க முயற்சி எடுத்துக் கொண்டு சிரமப்படுகிறார்கள்.

சக்கிமுக்கிக் கல்லால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து "எடிசன்" அப்புறம் படிப்படியாக முன்னேற்றமாகி இப்பொழுது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம்; எனவே மாற்றம் இயற்கையானது; அதைத் தடுக்க யாராலும் முடியாது.
மக்கள் பிறப்புக்கூட இனி அருமையாகத்தான் போய் விடும்.

அது போலவே சாவும் இனிக் குறைந்து விடும். மனிதன் வெகு சுலபமாக நூறு ஆண்டு வாழ முடியும். யாரும் சராசரி என்று இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற மாட்டார்கள்.

ஆண், பெண் உறவுக்கும் பிள்ளைப் பேற்றுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும்.

Sunday, October 15, 2006

இது தான் கடவுள்


இதுவும் கடவுள்இதுவும் கடவுள்


இதுவும் கடவுள்


அட இது கூட கடவுள்தான்..விசயம் என்னவென்றால்..

இது முன்னாடி அமர்ந்து திருப்புகழ் பாடினாலும், குரான் படித்தாலும், பைபிள் படித்தாலும் இதுக்கு ஒன்னும் கேட்டகப் போறதில்லை..


ம்ம்ம்ம்ம்..


இளைஞர்களே நல்ல படிங்க, சுயமாக சம்பாரித்து மேலும் படிங்க.. முன்னேறுங்க..


அப்ப கடவுள், அது எல்லாம் வயதான பிறகு பார்த்துக்கொள்ளலாம்..

Friday, October 13, 2006

தமிழ் நாட்டை சுத்திப் பார்க்க போறேன்...

ஜிலு ஜிலு ஊட்டி.. டேன் டீ எஸ்டேட், ஊட்டி...ஜில்லென்ற குற்றாலம்..தமிழக கிராமங்களின் வழியாக - செங்கல்பட்டு To மகாபலிபுரம்
விவேகானந்தரும் வள்ளுவரும் இனைந்து நிற்கும் கன்னியாகுமாரிநன்றி: கூகுல் வீடியோ

Thursday, October 12, 2006

என்னாத்த சொல்வேனுங்கோ !!SEEING IS BELIEVING: Ending weeks of estrangement, Union Health Minister Anbumani Ramadoss and AIIMS Director Dr. P. Venugopal going round the dengue-chikungunya wards at the Institute in Delhi on Wednesday.கலர் போட்டோ கிடைத்தது.. சரின்னு வலையேற்றம் பண்ணியாச்சு..


இது சம்பந்தமான செய்தியை "படிக்க இங்கே செல்லுங்க.."
நன்றி: The Hindu.

Wednesday, October 11, 2006

ஒரே ஆண்டில் 27% இடப் பங்கீடு
கலை, சமூகவியல் மற்றும் இலக்கியப் பாடங்களில் ஒரே ஆண்டில் 27 சதவீத இடப் பங்கீட்டை அமல்படுத்தலாம் என்று மொய்லி கமிட்டி அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

27 சதவீத இடப் பங்கீட்டை 3 ஆண்டுகளில் படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று பொதுவாக பரிந்துரைத்து இருப்பதாக முதலில் தகவல் வெளியானது. இப்போது இதுபற்றி மேலும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.

கலை, சமூகவியல், மற்றும் இலக்கியப் பாடங்களில் முதல் ஆண்டிலேயே 27 சதவீத இடப் பங்கீட்டை அமல்படுத்தி விடலாம். மற்ற பாடங்களில் குறைந்தது 2 ஆண்டுகளில் முடியாவிட்டால் 3 ஆண்டுகளில் அமல்படுத்திக் கொள்ளலாம்.

இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (ஐ.ஐ.டி.) முதன்மை மருத்துவக் கல்லூரிகளான எய்ம்ஸ், ஜிப்மர் போன்றவற்றில் 2007 முதல் ஆண்டுக்கு 9 சதவீதம் வீதம் 3 ஆண்டுகளில் அமல்படுத்தலாம்.

6 ஐ.ஐ.எம். கல்வி நிலையங்களில் இதை அமல்படுத்துவதற்கு ஒரே மாதிரியான திட்டங்கள் வகுக்கப்படவில்லை.

நன்றி: தமிழ்முரசு, THE HINDU.

Tuesday, October 10, 2006

லெப்டினென்ட் பார்த்திபனுக்கு வீர அஞ்சலி


இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை லெப்டினென்ட் பார்த்திபன் (23) சரமாரியாக சுட்டுத்தள்ளினார். இதில் ஐந்து தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். நேருக்கு நேர் நடந்த இந்த சண்டையில் லெப்டினென்ட் பார்த்திபனின் மார்பில் குண்டு பாய்ந்து வீரமரணம் அடைந்தார்.


பார்த்திபனின் தந்தை ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மேஜர் நடராஜன் (60). இவர் சென்னையை அடுத்த பம்மல் அண்ணாநகர் 2வது மெயின் ரோட்டில் வசித்து வருகிறார்.

மேஜர் நடராஜனின் மனைவி தமிழ்ச்செல்வி. பம்மலில் உள்ள நாடார் கமிட்டி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள். மூத்த பெண் புஷ்பா, பார்த்திபன் 2வது மகன், கடைசி தங்கை கார்த்திகா.

பார்த்திபன் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் பி.எஸ்சி பட்டப்படிப்பு முடித்து விட்டு அதே கல்லூரியில் எம்.எஸ்சி முதுகலை படிப்பில் சேர்ந்து படித்து வந்தார்.


சென்னை ராணுவ அகாடமியில் பயிற்சியை முடித்து விட்டு கடந்த ஏழு மாதத்திற்கு முன்புதான் காஷ்மீர் எல்லையில் பணியில் அமர்த்தப்பட்டார்.

அங்கு நடந்த பல சண்டைகளில் பங்கேற்று, தீவிரவாதிகளை விரட்டியடித்தார். நேற்றுமுன்தினம் தீவிரவாதிகளுடன் நடந்த சண்டையில் 23 வயதில் தாய்நாட்டிற்காக பார்த்திபன் தனது உயிரை தியாகம் செய்துள்ளார்.

நன்றி: தமிழ்முரசு, THE HINDU.

Monday, October 09, 2006

என்ன செய்கிறார் அன்புமணி இராமதாசு??
டெல்லியில் தலைகாட்டிய டெங்கு நோய் இன்று 18 மாநிலங்களில் பரவி 56 உயிர்களை பலிவாங்கியுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் 3500 பேர் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர். கொள்ளை நோய் என அறிவிக்காவிட்டாலும் நிலைமை மோசம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதார செயலர் பி.கே.ஹோட்டா - எங்களுக்கு கிடைத்துள்ள தகவல்படி 3500க்கும் அதிகமானோர் இந்நோய்க்கு ஆளாகியுள்ளனர். நிலைமை சீரியசாக இருந்தாலும், கையை விட்டு போகவில்லை.

இதற்கிடையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று மட்டும் புதிதாக 28 பேர் டெங்கு நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இம் மருத்துவமனையில் 6 ஆயிரம் பேருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

நிலைமை மோசமானவர்கள் மட்டுமே மருத்துவமனையில் வைத்து கவனிக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் மருந்து மாத்திரை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நோயை கொள்ளை நோயாக அறிவிக்க வேண்டும் என எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிருப்பு டாக்டர்கள் சங்க தலைவர் அனில் சர்மா கோரிக்கை விடுத்துள்ளார்.

Delhi has reported 886 cases, followed by Kerala (713), Gujarat (424), Rajasthan (326), West Bengal (314), Tamil Nadu (306) and Maharashtra (226), Uttar Pradesh (79), Haryana (65), Karnataka (59) and Andhra Pradesh (9).

நன்றி: தமிழ் முரசு, The Hindu

Saturday, October 07, 2006

திருந்த வேண்டாம்...திருந்த வேண்டாம்...


இவர் இந்து மதத்தை சார்ந்தவர்

இவர் கிருஸ்துவ மதத்தை சார்ந்தவர்

இவர் முஸ்லிம் மதத்தை சார்ந்தவர்

இவர் உயர் சாதியை சார்ந்தவர். இவர் தான் இந்த சாதியில் பிறத்ததை மிகவும் பெருமையாக நினைப்பவர். அது கடவுளின் அருளால்தான் அவர் இந்த உயர் சாதியில் பிறந்தாராம்..

இவர் தாழ்ந்த சாதியில் பிறந்தவர். இதுவும் கடவுள் சித்தமாம்...ம்ம்ம்ம்ம்...

அட இப்புட்டுத்தான நம்ம ஆட்டம்..

Friday, October 06, 2006

சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா
நான் சொல்லப்போகும் வார்த்தையை நல்லா எண்ணிப்பாரடா

நீ எண்ணிப்பாரடா


(சின்னப்பயலே)


ஆளும் வளரணும் அறிவும் வளரணும் அதுதான்டா வளர்ச்சி- உன்னை
ஆசையோடு ஈன்றவளுக்கு அதுவே நீ தரும் மகிழ்ச்சி

நாளும் ஒவ்வொரு பாடம் கூறும் காலம் தரும் பயிற்சி- உன்
நரம்போடுதான் பின்னி வளரணும் தன்மான உணர்ச்சி

(சின்னப்பயலே)


மனிதனாக வாழ்ந்திட வேண்டும் மனதில் வையடா தம்பி
வளர்ந்துவரும் உலகத்திற்கே நீ வலது கையடா

தனி உடைமை கொடுமைகள் தீர தொண்டு செய்யடா நீ
தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா


(சின்னப்பயலே)
வேப்பமர உச்சியில் நின்னு பேயொண்ணு ஆடுதுன்னு
விளையாடப் போகும்போது சொல்லிவைப்பாங்க - உன்

வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளிவைப்பாங்க - இந்த
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்தைகளை

வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே - நீ
வீட்டிற்குள்ளேயே பயந்துகிடந்து வெம்பிவிடாதே

நீ வெம்பி விடாதே


(சின்னப்பயலே)"பாடலை இங்கே கேட்டு மகிழுங்க..."படம்: அரசிளங் குமாரி
பாடல்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்திரம்.
இசை: ஜி.இராமநாதன்
குரல்: டி.எம்.சௌந்தர் ராஜன்
வருடம்: 1961
நடிப்பு: புரட்சித்தலைவர் எம்.ஜி.இராமச்சந்திரன்.

Thursday, October 05, 2006

பெயரைச் சொல்ல"வா"...அது நியாமாகுமா!!


உங்க செல்லப் பெயரை (Max 8 letters) கொடுத்தீங்கன்னா நம்ம பென்குயின் அண்ணாத்த உங்களுக்கு ஒரு அதியசயத்தை காண்பிப்பார்.. அது என்னவென்று அறிய ஆவலா.. "இங்கே போங்க..."

Monday, October 02, 2006

புலவர் பாட பத்திர ஓனான்டி.

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv