Friday, August 31, 2007

நடிகர் சரத்குமாருக்கு வாழ்த்து!




இன்று புதுக்கட்சி தொடங்கும் நடிகர் சரத்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

அரசியலில் கண்ட கண்ட கழுதை எல்லாம் இருக்கு இப்ப இன்னொரு..

அடப் போங்கப்பா.. வர வர அரசியல் செய்தி படிக்கும் ஆசையே போயிவிட்டது..

எனினும் மக்களாட்சியில் இது எல்லாம் சகஜம்..

சரத்குமார், நீங்களும் உங்களால் முடிந்த அளவுக்கு ஓட்டுகளைப் பிரியுங்க.. பெரிய கட்சிகள் ஆட்டம் காணட்டும்..

மக்களோடு மக்களாய் எல்லோரும் சேர்ந்து கும்மி அடிப்போம்..

(இப்ப, அத்வானி சொன்ன ஒரு விசயம் நியாபகத்திற்கு வருகிறது - இரு கட்சி ஆட்சி முறை.. சில சமயம் சரியோன்னு கூட தோன்றுகிறது..ம்ம்ம்ம்ம்ம்)

Thursday, August 30, 2007

தினமலர் - தமிழ் முரசு - மாறுபடும் கோணம்



நன்றி : தமிழ் முரசு

-----------------------------------------





நன்றி : தினமலர்

---------------
சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வுகள் அழியக்கூடாது என்பதற்காகவும் நடத்தப்படும் நிகழ்வாகவே நான் பார்க்கிறேன். தமிழ் தேவாரம் பாடி இது போன்று குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) செய்யக் கூடாது என சென்னை உயர் நீதி மன்றம் தடை விதித்திருப்பது இங்கே குறிப்பிடடத் தககது.

தினமலர் தன் வாசகர்கள் யாரெனறு அறிந்து அவர்களுக்கு ஏற்றவாறு செய்தி வெளியிடுகிறது. தமிழ்முரசும் அவ்வாறே, இங்கே பத்திரிக்கைகளை குறை சொல்வது ஒரு புறம் இருந்தாலும் சமுதாய அமைப்பு மீதுதான் அதிகம் குற்றம் சாட்டவேண்டியுள்ளது.


உங்கள் கருத்தை சொல்லுங்கள்..

Tuesday, August 28, 2007

"மாற்றுத்திறனுடையோர்" - உடல் ஊனமுற்றோர் அல்ல..


தமிழகத்தில் உள்ள பெரிய கோயில்களுக்கு செல்லும் மாற்றுத்திறனுடையோர் கோயில் முழுவதும் சுற்றிப்பார்த்து மன நிறைவுடன் சுவாமி தரிசனம் செய்ய முடியாத நிலை இருந்தது. இக்குறையைப் போக்கும் விதமாக நெல்லை டவுன் நெல்லையப்பர் கோயிலில் ‘வீல்சேர்’ வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாற்றுதிறன் படைத்தவர்களை வீல்சேரில் அமர வைத்து கோயில் பணியாளர்கள் மற்றும் உழவார பணிக்குழுவினர் கோயில் பிரகாரங்கள் மற்றும் சுவாமி சன்னதி, அம்மன் சன்னதி போன்ற பகுதிகளுக்கு அழைத்துச் செல்வர்.

நன்றி: தமிழ் முரசு 28-08-07

----------------------------------------

மேலே இருக்கும் செய்தி தமிழ் முரசு மாலை நாளிதழில் படித்தேன். மிக அருமையான சொல். "மாற்றுத்திறனுடையோர்" . இனி அவர்கள் உடல் ஊனமுற்றோர் அல்ல. அவர்களுக்கு சாதாரண மக்களின் திறனுக்கு பதில் மாற்று திறன் இருக்கிறது. அதைக் கொண்டு உலகில் வாழ்கின்றனர்.

இனி தயவு செய்து எல்லோரும் மாற்றுத்திறனுடையோர் என்ற சொல்லைப் பயன்படுத்தலாமே!

Monday, August 27, 2007

நம்ம "சோ" விவகாரம் என்ன ஆனது?

நம்ம இட்லிவடையார் பதிவில் சூடாகிறார் "சோ" என்ற சோ அவர்களின் பேட்டியை பதிவிட்டிருந்தார்.

உண்மையில் நல்ல கேள்வி. "சோ" வை அரசியல் விமர்சகர் என சொல்வதைவிட திமுக விமர்சகர் என சொல்லலாம். அப்படி போட்டு தாக்கியிருக்கிறார். இரசித்தேன். நன்றி!

சரி, இந்த இடுக்கை அதைப் பற்றி அல்ல..

நான் சோ அவர்களைப் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தேன்.. "இதற்கு சோ கார்ட்டூன் போடுவாரா?" என்று..

இந்த விசயம் என்னவானது எனத் தெரியவில்லை.. எந்த ஊடகங்களிலும் இதைப் பற்றி தொடர் நிகழ்வுகள் செய்தியைக் காணோம்.. யாரேனும் பார்த்தால் சொல்லுங்கப்பா!

தெரிந்துகொள்ளலாம் என்ற ஆர்வம்தான்..

Thursday, August 23, 2007

நோ கமென்ட்ஸ்....:(




Tuesday, August 21, 2007

கம்யூனிஸ்டுகளே இது சரியா?

அணுசக்தி ஒப்பந்தத்தை குப்பைத் தொட்டியில் வீச இடதுசாரிகள் முயலுவதன் மூலம் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.


முன்னாள் தூதரும், இந்தியாவின் அணுசக்தி துறையில் முக்கிய பங்கு வகித்தவருமான அருந்தாதி கோஷே கூறுகையில், அமெரிக்காவுடனான நமது அணுசக்தி ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுமானால் சீனாவுக்கு தலைமை அந்தஸ்து கிடைத்து விடும். இடதுசாரிகளும் அவர்கள் விரும்பியதை அடைந்து விடுவார்கள். இதற்கு மாறாக இந்த ஒப்பந்தம் அமலாக்கப்படுமானால் ஜப்பான், ஐரோப்பிய நாடுகளும் இந்தியாவுடன் ஒத்துழைக்கும் என்றார்.

இந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தாவிட்டால் தொழில்நுட்பத்தில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டு விடும். ஆசியாவில் சீனா தான் ஆதிக்கம் செலுத்த வேண்டும். இந்தியா 2வது இடத்தில் தான் இருக்க வேண்டும் என்று சில புத்திசாலிகள் நினைக்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையான இந்தியர்கள் இதை ஏற்க மாட்டார்கள் என்று அணுசக்தி துறையின் இன்னொரு நிபுணர் கே. சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


ராணுவ மற்றும் ஆயுத ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் இயக்குனர் சி. உதய் பாஸ்கர் கூறுகையில், அணுசக்தி ஒப்பந்தத்தை மாற்றி அதை சீர்குலைக்க வேண்டும் என்றே முயற்சி நடக்கிறது. அணு ஆயுத சோதனை நடத்துவதால் மட்டும் இந்தியாவுக்கு பலம் கிடைத்து விடாது. இந்த ஒப்பந்தம் மூலம் உலக அளவில் இந்தியா சக்தி படைத்த நாடுகளில் ஒன்றாகி விடும். இந்த ஒப்பந்தத்தை தவற விட்டால் வருங்காலத்தில் இதுபோன்ற சந்தர்ப்பம் இந்தியாவுக்கு கிடைக்காமல் போய்விடும் என்றார்.


சென்னையைச் சேர்ந்த ஆய்வாளரும், மத்திய அமைச்சரவை செயலகத்தின் முன்னாள் கூடுதல் செயலாளருமான பி.ராமன், ஒரு ஆங்கில பத்திரிகையில் எழுதியுள்ள கட்டுரையில், இந்தியாவின் இறையாண்மை உரிமைகள் குறித்து கவலைப்படுவதாக கம்யூனிஸ்ட்கள் நடிப்பதை கைவிட வேண்டும். சீனா வருத்தம் அடையுமே என்பதற்காகத் தான் அவர்கள் அமெரிக்காவுடான உறவை எதிர்க்கிறார்கள். நமது வெளியுறவுக் கொள்கையை இடதுசாரிகள் போதிக்க அனுமதிக்க கூடாது. இது சீனாவுக்கு ஆதரவான நிலையில் கொண்டுபோய் விட்டு விடும் என்று எச்சரித்து உள்ளார்.

நன்றி: தினகரன்

Monday, August 20, 2007

அணுசக்தி உடன்பாடு - என்ன செய்கிறார்கள் இடதுசாரிகள்?




இந்தியா அமெரிக்கா இடையே ஏற்பட்டிருக்கும் அணுசக்தி உடன்பாடு, புரிந்துணர்வு என்ற நிலையிலேயே தொங்கிக் கொண்டிருக்கிறது.

அதாவது, இந்த அணுசக்தி உடன்பாட்டினால் ஏற்படும் நன்மைகள் என நமது பிரதமர் சொல்வது என்னவென்றால்,

நமது நாட்டின் மின் தேவைகளை சமாளிப்பதில், எதிர் காலத்தில் அணுசகதி மிகவும் முக்கியமான பங்கு வகிக்கும். தற்போது இந்திய எண்ணை நிறுவனங்கள் நாம் நுகர்வதில் மூன்றில் ஒரு பங்குக்கும் குறைவாகத்தான் உற்பத்தி செய்கின்றன. இந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடர்ந்து குறைவாகவே இருக்கிறது.

இந்தியாவில் எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு வளம் குறைவாகவே இருக்கிறது என்பது நம் எல்லாருக்கும் தெரியும். எண்ணை இறக்குமதி சுமையை இனியும் நம் பொருளாதாரம் தாங்காது.

இத்தகைய உண்மையான சூழ்நிலைகள், அதிகரிக்கும் நம் தேவையை சமாளிக்க புதிய திட்டத்துக்கு நம்மை கட்டாயப்படுத்தி உள்ளது. அதன்படி பார்த்தால் நமது மின் தேவைகளை தீர்க்க அணுசக்தி மற்றும் சூரியசக்தி போன்றவை முக்கிய பங்குவகிக்கும். எனவே தான், அணுசக்தியை மேம்படுத்த மத்திய அரசு தீவிரமாக உள்ளது என்கிறார்.

மேலும் இந்த உடன்பாட்டின் மூலம் 40000 MW மின்சாரம் 2025 வருடத்திற்குள் தயாரிக்க முடியும் என தெரிகிறது.

இதன் மூலம் அதிகரித்துவரும் மின் தேவையை சமாளிக்க முடியும் என நம்பப்படுகிறது.

ஆனால் இந்த உடன்பாட்டிம் மூலம், நாம் அணுசக்தி ஆயுதங்கள் சோதனை செய்ய முடியாது என எதிர்க்கட்சிகள், இடதுசாரிகள் சொல்கின்றனர். ஆனால் பிரான்ப் முகர்ஜி இதை மறுக்கிறார்.

இந்த பிரச்சனையால், ஆட்சிக்கே ஆபத்து என்ற நிலைமை. நிபந்தனை அற்ற ஆதரவு என்று சொல்லி வந்த இடதுசாரிகள் இப்பொழுது தன் நிலையில் மாற்றியுள்ளனர்..

இனி என்ன பல ஆயிரம் கோடி செலவில் புதுத் தேர்தல்தான்.. வாழ்க இந்திய ஜனநாயகம்.

சரி, எனக்கு இன்னொரு சந்தேகம், இந்த உடன்பாட்டிற்கு வேறு ஏதேனும் நாடுகள் முட்டுக்கட்டை போடுகிறதா? அதனால் தான் இவ்வளவு எதிர்ப்பா? இல்லை உண்மையிலேயே ஒரு ஆபத்தான உடன்பாடா?..

உண்மையில் என்ன நடக்கிறது?..

யாருமே இதைப் பற்றி பேசமாட்டீங்கறீங்க.. அதுதான் நம்ம ஆரம்பிப்போம் என்று நினைத்ததால் இந்த இடுக்கை..

Saturday, August 18, 2007

நன்றி! நன்றி! நன்றி!




நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. - திருக்குறள்


என்னை தமிழ்மண நட்சத்திரமாக தேர்ந்தெடுத்து, எனக்கு வாய்ப்பளித்த, தமிழ்மண நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த நன்றி!

நான் தான் நட்சத்திரம் என்று அறிந்தவுடன், உதயக்குமாரில் தொடங்கி தஞ்சாவூரான் வரை, எத்தனை அன்பு மிகு உள்ளங்கள் என்னை சுற்றி, என்னை வாழ்த்த இருக்கிறது, என்று அறியும் போது மட்டற்ற மகிழ்ச்சி!

தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் ஆதரவு நல்கிய, அனைத்து பதிவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!

எனது இடுக்கையில் பின்னூடமிட்டு, தனது கருத்துக்களை பகிர்ந்துகொண்ட, அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி!

பின்னூடமிடா விட்டாலும், படித்து, ஆதரவு அளித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி!

நன்றி! நன்றி! நன்றி!

அன்புடன்
சிவபாலன்.

வாழ்க்கையை யோசிங்கடா - YOU CAN PUT THAT BLAME ON ME

நட்சத்திர வாரத்தின் கடைசி நாள். அதனால் கொஞ்சம் ஜாலியாக இந்த வாரத்தை முடிச்சுக்கலாம் என நினைக்கிறேன்.. அதனால்.

நான் இப்ப முனு முனுத்துக் கொண்டிருக்கும் பாடல்களை இங்கே தருகிறேன். பாட்டை கேட்டுப் பாருங்க.. நீங்களும் முனு முனுப்பீர்கள்.


முதலில் ஒரு தமிழ் பாடல்.. ரொம்ப ஜாலியா இருக்கிறது..

படம்: சென்னை 600028
இசை: யுவன் சங்கர் ராஜா
பாடல்: கங்கை அமரன்
குரல்:ரஞ்சித், கார்த்திக், திப்பு, ஹரிச்சரன், பிரேம் ஜி அமரன்
இயக்கம்: வெங்கட் பிரபு
தயாரிப்பு: சரன், சரவனா
வருடம்: 2007



வாழ்க்கையை யோசிங்கடா, தலையெழுத்தை நல்லா வாசிங்கடா

யோசிச்சு பாருங்கடா, எல்லோரும் ஒன்னா சேருங்கடா
இருக்கிற வரைக்கும் அனுபவிக்க, இளமை இருக்குதடா
வருகிற வரைக்கும் இலாபமடா, வசதியை தேடுங்கடா

இனி ஜல்சா பண்ணுங்கடா உஜாலா ஜில்பா காட்டுங்கடா..

நியாபகம் வந்ததடா, அந்த நாள் நியாபகம் வந்ததடா
நண்பன விட ஒருத்தன் , லைஃப்க்கு தேவை இல்லையடா
நட்புக்கு கூட கற்புகள் உண்டு, நல்லா தெரிஞ்சுக்கடா
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தால் வெற்றிகள் குவியுமடா
நம்ம வெற்றிகள் குவியுமடா.

இனி ஜல்சா பண்ணுங்கடா உஜாலா ஜில்பா காட்டுங்கடா..

உழைக்கும் கையை நம்பி, நாளை உலகமே இருக்குதடா
உண்மைக்கு போராடி, குரல் கொடுத்தால் ஊரே வணங்குமடா
நான் உங்க தோழன், நீ எந்தன் நண்பன், பிரிவே இல்லையடா
நாளைய உலகம் இளைஞர்கள் கையில், நம்பிக்கை வையுங்கடா
என் மேல நம்பிக்கை வையுங்கடா.

இனி ஜல்சா பண்ணுங்கடா உஜாலா ஜில்பா காட்டுங்கடா..

காதல் வந்துச்சுனா, முகத்தில் கலர் பல தெரியுமடா
கண்ணாடி முன்னாடி நீ நின்னா, கவர்ச்சிகள் தோன்றுமடா
காதல் இருந்தா கவலைகள் தீரும், காதல் பண்ணுங்கடா
அந்த கல்யாணம் மட்டும் லேட்டா யோசி, நல்லா இருக்குமடா
வாழ்க்கை நல்லா இருக்குமடா.

இனி ஜல்சா பண்ணுங்கடா உஜாலா ஜில்பா காட்டுங்கடா..

டாவுல விழுந்தாக்கா மனசு நோவுல அழுகுமடா
தீவுல இருப்பதுபோல் திசையே தெரியாம போகுமடா
இன்னைக்கு சிரிப்பா, நாளைக்கு முறைப்பா, இன்னமும் இருக்குதடா
அந்த ரோதனைகள் நமக்கு இப்போ எதுக்கு, உசாரா இருந்துக்கடா
ஃபிகர நம்பாம பொழச்சுக்கடா.

இனி ஜல்சா பண்ணுங்கடா உஜாலா ஜில்பா காட்டுங்கடா






அடுத்து ஒரு ஆங்கிலப் பாடல்..

தயவு செய்து ஒரு முறையாவது கேட்டுப்பாருங்க.. ப்ளீஸ்.. நிச்சயம் நல்ல பாடல்.

வீடியோவில் எந்த விரசகாட்சியோ அல்லது கெட்ட வார்த்தைகளோ இல்லை..

நிச்சயம் நல்லாயிருக்கும்..

Akon Sorry, Blame It On Me Lyrics

As life goes on I'm starting to learn more and more about responsibility
And I realize that everything I do is affecting the people around me
So I want to take this time out to apologize for things that
I've done things that haven't occurred yet
and things that they don't want to take responsibility for


I'm sorry for the times that I left you home
I was on the road and you were alone
I'm sorry for the times that I had to go
I'm sorry for the fact that I did not know


That you were sitting home just wishing we
Could go back to when it was just you and me
I'm sorry for the times I would neglect
I'm sorry for the times I disrespect

I'm sorry for the wrong things that I've done
I'm sorry I'm not always there for my sons
I'm sorry for the fact that I'm not aware
That you can't sleep at night when I am not there

Because I'm in the streets like everyday
I'm sorry for the things that I did not say
Like how you are the best thing in my world
And how I'm so proud to call you my girl

I understand that there's some problems
And I'm not too blind to know
All the pain you kept inside you
Even though you might not show

If I can't apologize for being wrong
Then it's just a shame on me
I'll be the reason for your pain
And you can put the blame on me

You can put the blame on me
You can put the blame on me
You can put the blame on me
You can put the blame on me

Said you can put the blame on me
Said you can put the blame on me
Said you can put the blame on me
You can put the blame on me

I'm sorry for the things that he put you through
And all the times you didn't know what to do
I'm sorry that you had to go and sell those bags
Just trying to stay busy until you heard from dad

When you would rather be home with all your kids
As one big family with love and bliss
And even though pops treated us like kings
He got a second wife and you didn't agree

He got up and left you there all alone
I'm sorry that you had to do it on your own
I'm sorry that I went and added to your grief
I'm sorry that your son was once a thief
[Sorry, Blame It On Me lyrics on http://www.metrolyrics.com]


I'm sorry that I grew up way to fast
I wish I would of listened and not be so bad
I'm sorry that your life turned out this way
I'm sorry that the feds came and took me away

I understand that there's some problems
And I'm not too blind to know
All the pain you kept inside you
Even though you might not show

If I can't apologize for being wrong
Then it's just a shame on me
I’ll be the reason for your pain
And you can put the blame on me

You can put the blame on me
You can put the blame on me
You can put the blame on me
You can put the blame on me

Said you can put the blame on me
Said you can put the blame on me
Said you can put the blame on me
You can put the blame on me

I'm sorry that it took so long to see
But they were dead wrong trying to put it on me
I'm sorry that it took so long to speak
But I was on tour with Gwen Stefani

I'm sorry for the hand that she was dealt
And for the embarrassment that she felt
She's just a little young girl trying to have fun
But daddy should of never let her out that young

I'm sorry for Club Zen getting shut down
I hope they manage better next time around
How was I to know she was underage
In a 21 and older club they say

Why doesn't anybody want to take blame
Verizon backed out disgracing my name
I'm just a singer trying to entertain
Because I love my fans I'll take that blame

Even though the blame's on you
Even though the blame's on you
Even though the blame's on you
I'll take that blame from you

And you can put that blame on me
And you can put that blame on me
You can put that blame on me
You can put that blame on me


And you can put that blame on me

And you can put that blame on me



வீடியோவைக் காண ..."இங்கே செல்லுங்க.."




Akon Sorry, Blame It On Me Lyrics

Friday, August 17, 2007

ரஜினி - கமல் யார் சிறந்தவர்?!?!


நான் பத்தாம் வகுப்பு வரும் வரை எங்க ஊரில் ஓலைக் குடிசை திரை அரங்குதான். அதில் தரை டிக்கெட் என்பது வெறும் மணல்தான். டிக்கெட் விலை 75 பைசா, அடுத்து பென்ஞ்சு 1.25 பைசா. கடைசி 1.75 பைசா.

நான் கடைசி டிக்கெட்டில்லெல்லாம் அமர்ந்து படம் பார்த்தே இல்லை. பென்ஞ்சு அல்லது தரை, இவைக்களுக்குள்தான்.

இதில் முக்கியமான விசயம் என்னவென்றால், எங்களுடைய பள்ளியும் எங்களுடைய டியூசன் சென்டரும் இந்த திரை அரங்கிற்கு பக்கத்தில்தான்.

அதுவும் டியூசன் சென்டர், அரச மரத்தடியில் ஒரு மேடையில் இருக்கும். அந்த மேடையில் இருந்து பார்த்தால் திரை அரங்கிற்கு வருபவர்கள் போகிறவர்கள் எல்லாம் தெரியும்.

சரி இதில் சொல்ல வருவது என்னவென்றால், ரஜினி கிராம மக்களைக் கவர்ந்தாரா? அல்லது கமல் கிராம மக்களைக் கவர்ந்தாரா? என்பது தான். சரியில் இதில் எப்படி சிறந்தவர் என்று கூற முடியும்.. எது எதற்கோ மக்கள் தீர்ப்பு மகேஷன் தீர்ப்பு எனும் போது, இதற்கும் பொருந்தும் என நான் நினைக்கிறேன்.

சரி, ரஜினி படம் வெளியாகும் போது அந்த திரை அரங்கில் நடக்கும் காட்சியை விளக்குகிறேன்.

1. ரஜினி படம் (பழைய படம், புதுப் படம்) என்றவுடன் முதல் நாளே அவர்கள் இரசிகர்கள் மாலை, தோரணங்கள் என அந்த இடத்தை கலக்கிவிடுவர். அது போக ஊரில் எங்கு எங்கு முக்கியமான இடங்களோ அங்கேயும் இது போல் மாலை தோரணங்கள் தான். (இவை புதுப் படங்கள் - அதாவது நகரங்களில் ஓடி முடித்து எங்க ஊருக்கு முதன் முதலாய் வரும் படங்கள் என்றால் இன்னும் அதிகம்)

2. சரி, இரசிகர்களை விட்டுவிடுங்கள் அவர்கள் அப்படித்தான். ஆனால் நம்ம ஊர், பக்கத்து ஊர் வாசிகள்..அட்டா.. சும்மா சொல்லக்கூடாது, குடும்பமாக திருமணங்களுக்கு போவது போல் மாட்டு வண்டி கட்டி கிளம்பிவிடுவார்கள். அந்த திரை அரங்கைச் சுற்றி தோட்டம் என்பதால், அங்கே, மாட்டு வண்டி நிறுத்த தனி இடம் கொடுக்கப்பட்டிருக்கும். அதுபோக அவ்வாறு மாட்டு வண்டியில் வருபவர்களுக்கு டிக்கெட் தனியாக வழங்கப்படும்.

3. ரஜினி படம் வந்து முதல் மூன்று நாட்களுக்கு ஹவுஸ் புல்தான். டிக்கெட் கிடைக்கவே கிடைக்காது. அவரது ரசிகர்கள் மற்றும் முதல் மூன்று நாட்களுக்குள் பார்க்க வேண்டும் என்பவர்கள் எல்லாம் பார்த்த பிறகுதான் மற்றவர்கள் படை எடுக்க ஆரம்பிப்பார்கள்.

4. ரஜினி நடித்த வரும் படங்கள் எதுவானலும் சுமார் ஒரு வாரம் ஓடும். நல்ல படங்கள் குறைந்தது 10 நாட்கள். எல்லா நாளும் கூட்டத்திற்கு குறை இருக்காது.

5. நான் ஆறாவது நாள் அல்லது இன்றே கடைசி போட்டவுடன் பார்த்துவிடுவேன். நானும் அப்ப ரஜினி ரசிகன் தான்.

சரி இப்ப கமல் நடித்த படங்கள்.

மேல் சொன்ன எதுவும் அவ்வளவு எளிதாக கமலுக்கு பொருந்தாது.

கமல் படங்கள் ஆர்ப்பாட்டமில்லாமல் வரும், போகும். சகலகலா வல்லவன் போன்ற படங்கள் மேற் கூறியது போல் அனைத்து ஆர்ப்பாட்டங்களுடன் வந்து சென்றது. மற்றவை, கூட்டம் இருக்கும் ஆனால், திருவிழா போல் இருக்காது.

ஆக, அது போன்ற கிராமங்களில் ரஜினிதான் சிறந்தவர் (அய்யா, சிறந்தவர் என்பது கூட்டத்தை இழுப்பவர் என்று பொருள் கொள்ளவும்.. அங்கே அப்படித்தான் பேசிக்குவாங்க.. அதை அப்படியே சொன்னேன் அவ்வளவே)

ஆனால் உண்மையில் யார் சிறந்தவர் என்று நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரியவேண்டுமா?


Kamal Hassan, one of the finest actors in the country was given his due recognition when the Sathyabama Deemed University conferred the doctorate on him on Monday evening at the Jeppiaar Nagar in Chennai.


நன்றி

அன்புடன்
சிவபாலன்.

இலங்கைத் தமிழர்கள் - நான் அறிந்தவை

நான் முதன் முதலில் இலங்கைத் தமிழர் பற்றி அறிந்தது அரசு பொருட்காட்சியில்தான். அப்ப எம்ஜிர் ஆட்சிக் காலம். எங்கு பார்த்தாலும் இலங்கையில் நடக்கும் இனப் படுகொலைகள் பற்றித்தான் பேச்சு. அப்ப எங்க ஊரில் பேசிகொள்பவர்கள் எல்லாம் சிங்களவர்கள் அரக்கர்கள் அதனால் இதயமில்லாமல் தமிழர்களை (மனிதர்களை) கொன்று குவிக்கிறார்கள் என. அந்த வயதில் அரக்கர்கள் இன்னும் உயிருடன் தான் இருகிறார்கள் என்று நம்பினோம். ஆகையால் அவர்களை அழிக்க கடவுள் முருகன் செல்ல வேண்டும் என்றெல்லாம் நண்பர்களுக்குள் பேசியிருக்கிறோம்.

அந்தப் பொருட்காட்சியில் நான் கண்ட காட்சி இன்னும் என் மனதில் வடுவாக உள்ளது. அந்த அரங்கில் கற்பினி பெண்களோ சிறுவர்களோ அனுமதிக்கப்படவில்லை. ஏனென்றால் அவ்வளவு கொடுமையான இன்னல்களை விளக்கும் புகைப் படங்கள் அடங்கிய காட்சி அரங்கம் அது. இருப்பினும் எனது உறவினர் கொஞ்சம் பிரபலமானவர். அவர் பெயரைச் சொல்லி நாங்கள் உள்ளே சென்றோம்.

உள்ளே சென்றதும் ஏன்டா உள்ளே வந்தோம் என்று ஆகிவிட்டது. என்னால் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது அந்த கோர காட்சிகளை. உண்மையில் அந்த புகைப் படங்களைப் பார்த்தவர் எவரும் இலங்கைத் தமிழரின் மீது இரக்கம் கொள்வர்.

இது போன்ற சமயத்தில் எங்கள் வீட்டுக்கு வாடகைக்கு வீடு வேண்டும் என்று ஒரு இலங்கைத் தமிழர் குடும்பம் வந்தது.


சில விசாரனைக்குப் பின் அவர்களை எங்கள் வீட்டில் தங்க அனுமதித்தோம். அந்த குடும்பத்தில் மொத்தம் ஆறு பேர்.

எல்லோரும் மிக நன்றாக பழகக் கூடியவர்கள். ஆனால் அவர்கள் ஏனோ இலங்கை விசயத்தை எப்போதும் பகிர்ந்தது கிடையாது. ஓரு வேளை அதீத சோகம் கூட காரணமாக இருக்கலாம்.

கிட்டதட்ட(முக்கியமாக தினத்தந்தி) எல்லா பத்திரிக்கைகளும் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாகத்தான் செய்திகளை வெளியிட்டன.

அப்ப எல்லோரும் எண்ணியது..இன்னும் ஒரு இரு மாதங்களுக்குள் இந்த இனப் பிரச்சனை முடிவுக்கு வந்துவிடும் என்பதுதான். எனென்றால் அவ்வளவு தீவிரமாக இருந்தது..ம்ம்ம்ம்ம்...
(ஆனால் இன்னும் இந்த இனப் பிரச்சனை நடக்கிறது என்றால்...சோகம்)


Tamil civilians face a dangerous journey to India


Here a refugee child eats a meal provided by the school within the camps


அந்த சமயத்தில், என்னுடைய கல்லூரி வகுப்பில் ஒரு மாணவன் வந்து சேர்ந்தான். அவன் இலங்கைத் தமிழர் அல்ல. இருப்பினும் இலங்கை விசயங்களை மிகத்தெளிவாக கூறுவான்.

இதற்கிடையில் ராஜீவ் காந்தி மரனம் இந்தியத் தமிழர் சிந்தனையை சற்று மாற்றியது. அதற்கு காங்கிரஸ் மேல் தமிழக மக்கள கொண்டிருந்த அன்பு கூட ஒரு காரணம். (அன்னை இந்திரா இறந்த போது அவருடைய திரு உருவம் பொருந்திய புகைப் படத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று நல்ல அடக்கம் செய்தனர்.. அவ்வளவு காங்கிரஸ் பாசம்) ஊடகங்கள் மற்றொரு காரணமாக இருக்கலாம்.

எனது கல்லூரி நண்பர் சொன்ன சில விடயங்கள், முக்கியமாக, அதாவது இலங்கையின் வடக்குப் பகுதியில் என்ன நடக்கிறது. அதே போல் கிழக்கில் என்ன நடக்கிறது என..

ஆனால் என்னால் முழுமையாக புரிந்துகொள்ளமுடியாது. இப்பொழுது ஓரளவு பரவாயில்லை..

சரி இப்ப எனக்குத் தெரிந்த விடங்கள் இலங்கைத் தமிழர் பற்றி

இதில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும். அதே போல் என்னைப் போன்றோர்கள், இலங்கை தமிழர் பற்றி ஓரளவு முழுமையாக அறிந்துகொள்ள ஏதேனும் சுட்டி இருந்தால் தரவும்.

1. இலங்கைத் தமிழர்கள் சுமார் 2000 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் உள்ளனர்.

2. முக்கியமாக இலங்கையின் வடக்குப் பகுதியிலும் கிழக்குப் பகுதியிலும் வாழ்கின்றனர்.

3. சிங்கள இனத்தவர் தமிழ் இனத்தின் மீது சிறுபான்மையினர் என்ற முறையில் அனைத்து வன் தாக்குதலையும் செய்கின்றனர்.

4. தமிழர் வாழும் இடங்களை அபகரித்துக் கொண்டு அங்கே சிங்களவர்களை குடியமர்த்தும் வேலையில் இறங்கியுள்ளனர். இதன் மூலம் தமிழர் இருப்பைக் குறைக்க முடியும் என நம்புகின்றனர்.

5. இலங்கைத் தமிழரில் பல பிரிவு உண்டு. முஸ்லிம்கள் உட்பட இன்னும் பிற.

6. இந்தியா சரியான பார்வையின் மூலம் இந்த இனப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு கூறமுடியும். ஏனென்றால் பக்கத்தில் இருக்கும் பெரிய நாடு என்ற முறையில்.

7. ராஜீவ் இழப்பு பெரிய இழப்பு என்ற போதிலும், அருகில் நடக்கும் இனப்படுகொலைகளை கண்டுகொள்ளாலாமல் இருப்பது எனக்கு சரி என்று படவில்லை.

8. ஒரு ஆக்கப்பூர்வமான ஒப்பந்தம் இரு தரப்பிற்கும் பாதகமின்றி உருவாக்கப் படவேண்டும். அதில் நார்வே, இந்தியா பங்கு கொண்டு ஒரு உடன்பாடு ஏற்படுத்தலாம்..

ஏதாவது செய்யுங்க.. ப்ளீஸ்.. பாவம் எவ்வளவு பிஞ்சுகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிட்டது..

Thursday, August 16, 2007

நான் இரசித்த "ஹாலிவுட் நட்சத்திரங்கள்!" (HOLLYWOOD STARS)

பொதுவாகவே ஹாலிவுட் என்றவுடன் நம் மனதில் வருவது பிரம்மாண்டம் தான். திரை அரங்கிற்கு நம்மை இழுத்து வருவது இந்த பிரம்மாண்டம் என்றாலும் படத்தில் சொல்லப்படும் பொருள், தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் நம் அபிமான நட்சத்திரங்களும் தான். பல படங்கள் நமக்கு பிடித்த நட்சத்திரங்கள் தோன்றுவதாலேயே படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது என்றால் மிகையாகாது.

அந்த வகையில் நான் இரசித்த ஹாலிவுட் நட்சத்திரங்களை பட்டியிலிடும் முயற்சிதான் இந்த இடுக்கை.

முதலில் நம்ம அம்மினிகளை பட்டியலிட்டு விடலாம்.


ஜீலியா ராபர்ட்ஸ் (Julia Roberts):



இந்த பெயரைக் கேட்டாலே எதோ மந்திரிச்சு விட்டது போல் உள்ளது. மிக நல்ல நடிகை. மிக அழகாக பாத்திரங்களுக்கு ஏற்ப நடித்திருப்பார். உண்மையில் இவரை வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் இல்லை. இவர் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது என்றால்


1. எரின் ப்ராக்விச் (Erin Brockovich)

2. ரன் எவே பிரைட் (Runaway Bride)

3. நாட்டிங் கில் (Notting Hill)

4. மை பெஸ்ட் பெரன்ட்ஸ் வெட்டிங் (My Best Friend's Wedding)



ஏஞ்சலினா ஜீலி (Angelina Jolie)



வாவ். அவ்வளவு தாங்க வார்த்தையே வருது. ஒவ்வொரு படமும் கலக்கியிருப்பாங்க. அதுவும் சன்டை காட்சிகளில் அவர் தோன்றும் போது இன்னும் அழகு கூடிவிடும். கண்கள் பார்த்துக்கொண்டே இருக்கலாம். நான் இரசித்த சில படங்கள்

1. லாரா கிராஃப்ட் டோம் ரெய்டர்- கிரடில் ஆப் லைப் (Lara Croft Tomb Raider: The Cradle of Life)

2. லாரா கிராஃப்ட் டோம் ரெய்டர் (Lara Croft: Tomb Raider)

3. மிஸ்டர் & மிஸ்ஸஸ் ஸிமித் (Mr. & Mrs. Smith)

4. லைப் ஆர் சம்திங் லைக்தட் (Life or Something Like It)




கேத்ரின் ஷீட்டா ஜோன்ஸ் (Catherine Zeta-Jones):



அழகாய் இருப்பாங்க. எனக்கு மிகவும் பிடிக்கும். தனக்கு என்று ஒரு பானி வைத்துள்ள நடிகை. முகம் பாவனைகளே பல விசயங்களைப் பேசும்.

இரசித்த படங்கள்

1. தெ டெர்மினல் (The Terminal)

2. இன்டாலரபல் குரியால்டி. (Intolerable Cruelty) (கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம்...செம கல்க்கல்..)

3. என்ட்ரப்மென்ட் (Entrapment)

4. மாஸ்க் ஆப் சோரோ (The Mask of Zorro)



ட்ரூவ் பெரிமோர் (Drew Barrymore)



நல்ல நடிகை. அழகிய முகம். இவர் நடித்த படங்களில் நான் இரசித்தது

1. 50 ஃபர்ஸ்ட் டேட்ஸ்(50 First Dates). (ஏடம் சேன்டலருடன் சேர்ந்து அட்டகாடமாக நடித்திருப்பாங்க. மனநோயாளிப் பாத்திரம். ஆன மிக நேர்த்தியா செய்திருப்பாங்க.)

2. டூப்ளக்ஸ் (Duplex). (வாவ். மிக ஜாலியான படம். பென் ஸ்டிலருடன் ஜோடி சேர்ந்து நடித்த படம். அமெரிக்க நடுத்தர வாழ்க்கையை படம் பிடித்து காட்டியிருப்பாங்க..நல்ல படம்)



சேன்ட்ரா புல்லாக் (Sandra Bullock).



இவங்க சிரிப்புதான் அழகு. துறு துறுவென நடிப்பாங்க. இவர் நடித்த பல படங்கள் எனக்கு பிடிக்கும். அவற்றில் சில

1. மிஸ் காஞ்சினியால்டி (Miss Congeniality)

2. ஸ்பீட் (Speed)

3. பிரிமோனிசன் (Premonition)

4. க்கிரேஷ் (Crash)

5. டூ வீக்ஸ் நோட்டிஸ் (Two Weeks Notice)



சரி, இப்ப நம்ம ஹிரோக்களைப் பார்க்கலாம்.


டாம் ஹான்ஸ் (Tom Hanks).



இவரைப் பற்றி அறிமுகமே தேவை இல்லை. எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நல்ல நடிகர். இவரிடம் எனக்கு பிடித்தது அவருடைய கண்கள். பேசும் கண்கள் என்று கூட சொல்லலாம். அவர் நடித்த படங்களில்

1. தி டெர்மினல். (The Terminal)

2. கேஸ்ட வே (Cast Away)

3. தி டா வின்ஸி கோட் (The Da Vinci Code)



ஏடம் சான்ட்லர் (Adam Sandler)



இவர் நம்ம பேவரட். எனக்கு இவரை மிகவும் பிடிக்கும். இவருடைய எல்லாப் படங்களுமே எனக்குப் பிடிக்கும். நம்ம ஊர் ரஜினி மாதிரி. அவர் நடித்து எனக்கு ரொம்ப பிடித்த படங்கள்.

1. எங்கர் மேனஜ்மென்ட் (Anger Management). (கட்டாயம் பார்க்கவேண்டிய படம்)

2. கிளிக் (Click)

3. 50 ஃபர்ஸ்ட் டேட்ஸ்(50 First Dates).

4. மிஸ்டர். டீட்ஸ் (Mr. Deeds)

5. ஸ்பேங்லிஸ் (Spanglish)

6. பிக் டேடி (Big Daddy)

7. ஹப்பி கில்மோர் (Happy Gilmore) - (ஜாலியான படம்)



ராபின் வில்லியம்ஸ் (Robin Williams)



இவர் நடிப்புக்கு ஈடு இனையே இல்லை என சொல்லலாம். அவ்வளவு நேர்த்தியா ஒவ்வொரு பாத்திரத்தையும் செய்வார். நிச்சயம் இவருடைய நடிப்பை யாரும் பிடிக்கவில்லை என சொல்லவே மாட்டாங்க.. உண்மையில் சில வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது இவருடைய நடிப்பை.. வாவ்..சிம்பிளி சூப்பர்..

அவர் நடித்த படங்களில் எனக்கு பிடித்தது:

1. மிஸ்ஸஸ் டவுட் பயர் (Mrs. Doubtfire). ( நம்ம ஊர் அவ்வை சன்முகி)

2. ஆர்.வி. (R.V.)

3. நைட் அட் தி மியூசியம் (Night at the Museum)

4. தி ஃபைநல் கட் (The Final Cut)

5.ஒன் ஹவர் போட்டோ (One Hour Photo)(தயவு செய்து பாருங்க!)..


இவருடைய படங்கள் நிறைய இருக்கு.. மிகச் சுருக்கமாக கொடுத்திருக்கிறேன்.



கெவின் கேலைன் (Kevin Kline)



சிறந்த நடிகர். மிக நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.. அவற்றில் சில ..

1. லைஃப் ஏஸ் எ ஹவுஸ் (Life as a House) (தயவு செய்து பாருங்க)

2. தி எம்பரர்ஸ் கிளப் (The Emperor's Club)-- (A Clean Film..Pls See this movie)



பென் ஸ்டில்லர் (Ben Stiller):




ரொம்ப ரொம்ப ஜாலியான நடிகர். அப்பாவியாய் நடிப்பதில் இவரை விட்டால் ஆளே இல்லை என சொல்லலாம். இவர் நடித்த படங்கள் நிறைய பார்த்திருக்கிறேன். எதுவுமே எனக்கு பிடிக்கவில்லை என சொல்ல முடியாது. நல்ல நடிகர். அவர் நடித்த படங்கள் சில..

1. நைட் அட் தி மீயூசியம் (Night at the Museum) (இது கட்டாயம் பார்க்க வேண்டிய படம்)

2. மீட் தி ஃபாக்கர்ஸ் (Meet the Fockers) (கொஞ்சம் ஒரு மாதிரியான படம்தான்..ஆனாலும் ரொம்ப ஜாலியாக இருக்கும்)

3. மீட் தி ஃபேரன்ட்ஸ். (Meet the Parents)

4. டூப்ளக்ஸ் (Duplex) (கட்டாயம் பாருங்கள்)



நிக்கோலஸ் கேஜ் (Nicolas Cage).



இவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். நல்ல நடிகர். எல்லா பாத்திரங்களையும் திறம்பட செய்யக்கூடியவர். அவர் நடித்த படங்களில் எனக்கு பிடித்தது.

1. லார்ட் ஆப் வார் (Lord of War). ( தயவு செய்து பாருங்க.. உலகில் நடக்கும் அத்தனை போர்களும் ஏன் நடக்கிறது என்பதை மிக அழகாக படம்பிடித்திருப்பார்கள். கடைசி வரிதான் படத்தின் பன்ஞ்.. அது என்ன வென்றால்.. உலகின் போர்களின் கடவுள்.. அமெரிக்க ஜனாதிபதி என்று முடிக்கும் போது ..சூப்பர் என கை தட்ட சொல்லும்)

2. தி வெதர் மேன் (The Weather Man)

3. கோஸ்ட் ரைடர் (Ghost Rider)

4. தி ஃபேமிளி மேன் (The Family Man) ( கட்டாயம் பாருங்க.. அருமையான திரைக்கதை)

5. அடாஃப்ஷன் (Adaptation)

Wednesday, August 15, 2007

வெற்றிலைப் பாக்கு - Adult சிறுகதை!



அன்று முழு நிலவு. தெளிந்த வானம். செம்மேடு கிராமத்தில் மின்சார விளக்குகள் மிகக் குறைவு. அதனால் நிலவின் ஒளி வெள்ளதில் வயல் வெளிகள், தெருக்கள் மற்றும் வீடுகள் எல்லாம் மிக அழகாக காட்சி அளித்தன.

அந்த ஒளிவெள்ளத்தில் கிழே தெரியும் தனது நிழலை பார்த்து மகிழ்ந்தவாறு சரவணன் அவன் பாட்டி வீடு நோக்கி சென்றான்.

பாட்டியும் தாத்தாவும் எப்போதும் 8 மணிக்கெல்லாம் படுத்துவிடுவார்கள். தற்பொழுது மணி 9.

"பாட்டி....பாட்டி" என்று தட்டிய கதவை திறக்க பாட்டிக்கு சில நிமிடங்கள் ஆனது.


"என்னடா இந்த நேரத்தில்" என்ற பாட்டியின் கேள்விக்கு "இல்லை பாட்டி", "அம்மா தான் அனுப்பி வைத்தாங்க". என்றான் சரவணன்.

"சரி உள்ளே வா!".

"என்னடா விசயம்?" என்றாள் பாட்டி.

"பாட்டி எங்க அப்பா ஒன்னு கேட்கச் சொன்னார்". "அப்பறம் எங்கம்மா ஒன்னு கேட்கச் சொன்னாங்க" என்ற சரவணனை உற்றுப் பார்த்தார் தாத்தா.

அதற்குள் தாத்தா, "உங்க அப்பாவா?"....." ம்ம்ம்"

காலைச் சுற்றி வந்த பூனையை இரசித்தவாறே "ஆமாம்" என்றான் சரவணன்.

"பாட்டி", "எங்க அம்மா உனக்கு எத்தனையாவது குழந்தை?" எனற சரவணனின் கேள்விக்கு, "இது என்னடா கேள்வி?!", "உங்க அம்மாதான் ஏழாவது, கடைசி வேற". "இதைக் கேட்கத்தான் இந்த நேரத்தில் வந்தியா?!"

"இல்லை பாட்டி"... "அது இல்லை கேள்வி?" என்றான் சரவணன்.

என்ன கேள்வியாக இருக்கும் என்று அந்த மழழையின் முகத்தை பார்த்தவாரே கயிற்று கட்டிலில் சென்று அமர்ந்தாள் பாட்டி.

"என்னடா சொல்லுடா" என்றார் தாத்தா.

"அப்பா வந்து எங்கம்மாவை ஏன் பெத்தீங்கன்னு கேட்டுவிட்டு வரச்சொன்னாரு". என்றான்.

பாட்டி சததம் போட்டு சிரித்துவிட்டாள்.

"ஏன்டா உங்க அப்பா", "அப்படி கேட்டார்?" என்றாள் பாட்டி.

"இல்லை", "எனக்கு ஒரு தங்கச்சி பாப்பா வேணும் என்று அப்பா கிட்ட சொன்னேன்". "அவர் எங்க அம்மா கிட்ட கேட்டார்." "எங்க அம்மா வேணாம் என்று சொல்லிட்டாங்க.." "அதனால் தான், எங்க அப்பா எங்க அம்மாவை ஏன் பெத்தீங்கன்னு?" "உங்க கிட்ட கேட்கச் சொன்னார்", என்றான் மழழை மொழியில்.

"சரி உங்க அம்மா என்ன கேட்கச் சொன்னாள்?" என்று வினவினார் தாத்தா.

"எங்க அம்மா, வெற்றிலை பாக்கு வாங்கி வரச்சொன்னாங்க" என்றான சரவணன்.

அதற்கு பாட்டி, "இங்க ஏதுட வெத்திலைப் பாக்கு?"

"நீங்க எப்பவுமே நிறைய வைத்திருப்பீங்களாமா?!" என்றான் சரவணன்.

அதற்குள், தாத்தா, "ஏன்டா?" "இப்பதான் தங்கச்சி பாப்பா வேண்டாம் என்று உங்க அம்மா சொல்லியதாக சொன்னாய்", "அதற்குள சமாதணமாகி வெத்திலைப் பாக்கு வாங்கி வரச்சொல்லிட்டாளா!?" என்று சொல்லி சிரித்தார்.

சரவணனுக்கு ஒன்றும் புரியவில்லை.


"அந்த காலத்தில் நாங்க போடாத வெத்திலைப் பாக்கா?" என மனதில் நினைத்தவாறே, வெற்றிலைப் பாக்கு சுண்ணாம்புடன் எடுத்து சரவணன் கையில் கொடுத்தார் தாத்தா.

Tuesday, August 14, 2007

நான் எடுத்த வீடியோக்கள் - குளிர்காலம், துருவக் கரடி, விஸ்கான்சின் டெல்ஸ், பூங்கா

அமெரிக்காவில் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு குறைவே இருக்காது. உண்மையில் நமக்குத்தான் நேரம் பத்தாது. இந்தியாவிலும் நிறைய இடங்கள் உண்டு. ஆனால் சென்று அடையும் நேரம் அதிகம் தேவைப் படும்.

இங்கே, நேரம் கிடைக்கும் போதெல்லாம், எங்கயாவது சென்றுவிடுவோம். இரண்டு கேம்கார்டர் (CAMCORDER)வைத்திருக்கிறோம். ஒன்று சோனி(SONY) மற்றொன்று கெனான்(CANON).

சோனியில் எடுக்கும் தரம் எப்பொழுதும் மிக நன்றாக இருக்கும். அதாவது, ஒலிகளை மிகத்துள்ளியமாக பதிவு செய்யும். எடுத்த வீடியோவை டிவியில் போட்டு பார்க்கும் போது நேரில் செல்லும் அனுபவம் ஏற்படும். ஆனால் அதுவே கேனான், அவ்வளவு துல்லியமாக இல்லை. இது என் அனுபவம்.

சரி, அப்படி எடுத்த வீடியோக்கள் என்னிடம் நிறைய உள்ளது. அதில் ஒரு சிலவற்றை இங்கே பகிர்ந்துகொள்ளலாம் என்ற எண்ணத்துடன் இந்த இடுக்கை.


குளிர்காலம்: - "CHICAGO WINTER DELIGHTS"


இந்த வீடியோ போன வருடம் டிசம்பர் மாதம் எடுத்தது. வீடியோ எடுத்த நாளுக்கு முந்தைய இரவில் பெரிய பனிப் புயல். அதானல் அலுவலகத்திலிருந்து எனக்கு வீடு வந்து சேர சுமார் 5 மணி நேரம் ஆனது. பொதுவாக ஒரு மணி நேரம்தான் ஆகும்.

அந்தப் பனிப்புயலின் தாக்கம் எவ்வாறு உள்ளது என்பதை வீடியோவில் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

இங்கே சென்றால் கூட "குளிர்காலம்" வீடியோ பார்க்கலாம்




அடுத்த வீடியோ துருவக் கரடி.இந்த துருவக் கரடி இருக்கும் இடம் "லிங்கன் விலங்கியல் பூங்கா." இந்த கரடியை படம் பிடிக்க வெகு நேரம் காத்திருக்க வேண்டியது ஆகிவிட்டது. அது அந்த கண்ணாடித்தொட்டியின் இன்னொரு பக்கத்தில் சென்று அங்கேயே இருந்துவிட்டது. கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கே செல்ல முடியவில்லை. சிறிது நேரத்திற்கு பிறகு வந்து காட்சி தந்தது.

கரடி எப்படி விளையாடுகிறது என்று வீடியோ பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.

இங்கே சென்றும் "துருவக் கரடி" வீடியோ பார்க்கலாம்





அடுத்து விஸ்கான்சின் டெல்ஸ் (WISCONSIN DELLS). இது நான் இருக்கும் இல்லினாய்(ILLINOIS) மாகானத்திற்கு பக்கத்து மாகானமான விஸ்கான்சினில் உள்ளது. (நம்ம உதயககுமார் ஊர்)


அந்த இடத்திற்கு பெயர் டெல்ஸ். இதை தண்ணீர் விளையாட்டு இடங்களின் உலகத் தலை நகரம் என்று அழைக்கிறார்கள் "(WISCONSIN DELLS - THE WATER PARK CAPITAL OF THE WORLD)". அது உண்மையும் கூட. எவ்வளவு விதமான தண்ணீர் விளையாட்டுகள் உலகில் உள்ளதோ அவ்வளவு அங்கே கிடைக்கும். காசும் அவ்வளவு ஒன்றும் அதிகமில்லை. அதுவும் சீசன் இல்லாத காலங்களில் மிகக் குறைவு.

அங்கே படகில் சென்று சுற்றிப்பார்க்கும் வசதியும் உள்ளது. நான் படகில் செல்லும் போது எடுத்த வீடியோ தான் இங்கே கொடுத்துள்ளேன். பார்த்து இரசியுங்கள்.

இங்கே சென்றும் "விஸ்கான்சின் டெல்ஸ" வீடியோ பார்க்கலாம்







அடுத்து, சிகாகோ தாவிரவியல் பூங்கா. இந்த பூங்கா எங்க வீட்டிலிருந்து சுமார் 5 மைல் தூரத்தில் இருக்கிறது. மிக அழகாக இருக்கும். நம்முடைய ஊட்டி தாவரவியல் பூங்கா போன்றே மிக அருமையாக இருக்கும். இதைப் பற்றி ஏற்கனவே நம்ம சிறில் அலெக்ஸ் படங்களுடன் பதிவு போட்டிருக்கிறார்.

நல்ல அமைதியான சூழல். சுத்தமான காற்று, ஆனந்தமான சூழ்நிலை. இந்த "பூங்காவில்" உறுப்பினராக சுமார் இரண்டு வருடங்கள் இருந்தேன். நிறைய முறை சென்று அதன் அழகை இரசித்திருக்கிறேன். அப்படி ஒரு முறை எடுத்த வீடியோ இப்ப உங்களுக்காக பகிர்ந்துகொள்கிறேன்.

இங்கே சென்றும் "சிகாகோ தாவிரவியல் பூங்கா" வீடியோ பார்க்கலாம்






நன்றி

அன்புடன்
சிவபாலன்

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் - கொடிகாத்த குமரன்

புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்.

பொது உடைமைக் கொள்கை திசையெட்டும் சேர்ப்போம்
புனிதமோ டதை எங்கள் உயிரென்று காப்போம் (புதிய)

இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
"இது எனதெ"ன்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம். (புதிய)

உணர் வெனும் கனலிடை அபர்வினை எரிப்போம்
"ஒரு பொருள் தனி" எனும் மனிதரைச் சிரிப்போம்! (புதிய)

இயல் பொருள் பயன் தர மறுத்திடில் பசிப்போம்
ஈவதுண்டாம் எனில் அனைவரும் புசிப்போம். (புதிய)

- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்





அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்



திருப்பூர் குமரன்





இந்த நன் நாளில் கொடிகாத்த குமரனைப் பற்றி சிறு குறிப்பு:

திருப்பூர் குமரன் : தோற்றம் - 4.10.1904
: மறைவு - 11.1.1932


1932 ஆம் ஆண்டு ‘சட்ட மறுப்பு இயக்கம் மீண்டும் தொடங்கிய போது தமிழகம் முழுவதும் அறப்போராட்டம் பரவிய நேரத்தில் திருப்பூரில் தேசபந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் அச்சமயம் ஏற்பாடு செய்த மறியல் போராட்டத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு, கையில் தேசியக் கொடியினை ஏந்தி, தொண்டர் படைக்குத் தலைமை ஏற்று, அணிவகுத்துச் சென்றபோது காவலர்களால் தாக்கப்பட்டு தடியடிபட்டு மண்டைபிளந்து, கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி மயங்கி விழுந்து, பின்னர் மருத்துவமனையில் உயிர் துறந்தவர் திருப்பூர் குமரன் அவர்கள். இதனால், கொடிகாத்த குமரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

குறைந்த வருமானத்தைக் கொண்டு வறுமையிலும் செம்மையாக வாழ்ந்த அவர் நாட்டுபற்று மிக்கவர். விடுதலை வேட்கையால் உந்தப்பட்டு திருப்பூரில் தொடங்கப்பட்ட அறப்போராட்டத்தில் பங்கேற்றுப் பின்னர் போராட்டக் குழுவிற்கே தலைமையேற்றவர்.

விடுதலைப் போரில் தமிழகத்தின் பெருமையை விடுதலைப் போரில் தமிழகத்தின் பெருமையை உயர்த்திட்ட வீர மறவருள் ஒருவரான அவர் கொடிகாத்த குமரன் என்ற பெயருடன் இந்திய வரலாற்றில் என்றும் நிலைத்திருப்பவர்

அவரது தியாகத்தைப் போற்றும் வகையில் அரசு கோவை மாவட்டம் திருப்பூரில் நினைவு மண்டபம் அமைத்துள்ளது.

Monday, August 13, 2007

பசுமைக் குடில் விளைவு! (GREENHOUSE EFFECT)


பல ஊடகங்களில் தற்பொழுது, "பூமி வெப்பம் அதிகரிக்கிறது", "கால நிலை மாற்றம்", "பனிக்கட்டிகள் உருகுகின்றன" என்பது போன்று தலைப்பிட்டு செய்திகளை படித்து / பார்த்திருப்பீர்கள். இதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணம் சொல்கிறார்கள். இதன் நடுவே, இதில் அரசியல் வேறு உள்ளே புகுந்துவிட்டது. அதனால், அடுத்த கட்ட நடவடிக்கைகள் எல்லாம் கேள்விக் குறியாகி உள்ளது.

சரி, இந்த இடுக்கை அதைப் பற்றி எல்லாம் பேசப் போவதில்லை.

இதில் நான் எடுத்துக் கொண்ட விடயம், பசுமைக் குடில் விளைவு!. இந்த வார்த்தையை பல இடங்களில் கேட்டிருப்பீர்கள். ஆனால் அதற்கு எளிய தமிழில் விளக்கம் பெறுவது என்பது சற்று சிரமமாக உள்ளது. அதனால், இந்த "பசுமைக் குடில் விளைவு" என்றால் என்ன? அதன் விளைவு என்ன?!, என்று இதைப் பற்றி நான் அறிந்தவற்றை இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.


குளிர் பிரதேசங்களில் (ஊட்டி) சில செடிகளை வளர்க்க ஒரு கண்ணாடி அறையை வைத்து அதில் வளர்ப்பார்கள். இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இது எதற்கு?

அதாவது பகலில் ஏற்படும் வெப்பம், இரவில் இல்லாமல் போய்விடும். இதனால் அந்த செடிகள் பயனற்றுப் போகும். இதை தடுக்கத்தான் இந்த கண்ணாடிக் குடில்.



அறைக்குள் பகலில் கண்ணாடி வழியே வரும் வெப்பம், இரவில் மிதமான வெப்ப நிலை நிலவ, உள்ளே இருக்கும் வெப்பம் வெளியேறாமல் தடுத்து கண்ணாடிகள் காக்கின்றன. இதனால் அந்த செடிகள் தொடர்ந்து வளர முடியும். இது தான் பசுமைக் குடில் விளைவு என்கிறோம்.

சரி, இதற்கும் பூமிக்கும் என்ன சம்பந்தம்?




அதாவது, பூமியும் இது போலத்தான். பகலில் எற்படும் வெப்பம் இரவில் இல்லாமல் போவதைத் தடுக்க, இந்த கண்ணாடிகள் போன்று, சில வாயுக்கள் செயல்படுகின்றன. இன்னும் சொல்லப் போனால், பூமியில் அதிக வெப்பம் அல்லது அதிக குளிர், இவை இரண்டையும் இந்த வாயுக்கள் தடுக்கின்றன. அந்த வாயுக்களுக்குப் பெயர்தான், பசுமைக் குடில் வாயுக்கள்.

அந்த வாயுக்கள் யாவை?: நீர் ஆவி, கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைடு மற்றும் ஓசோன் (O3).

இதெல்லாம் சரி, இப்ப அதற்கு என்ன பங்கம் வந்துவிட்டது.?

அதாவது, இந்த கரியமில வாயு நாம் சுவாசிக்கும் போதும், மரங்கள் மூலமும், வாகணங்களில் பயன்படுத்தப் படும் எண்ணெய் (பெட்ரோல். டீசல்) மூலமும், அனல் மின் நிலையங்களில் பயன்படுத்தப் படும் நிலக்கரி மூலமும், இந்த வாயுவின் இருப்பு நம் பூமியில் அதிகமாகிறது. இதில் முக்கிய காரணி என கருத்துப்படுவது வாகனங்களில் இருந்து வெளியேறும் வாயுதான். (கார்பன் மோனோ அக்ஸைடு). நமது குளிர்சாதனப் பெட்டிகளும் கனிசமான வாயுக்களை வெளியிடுகிறது.


சரி, இந்த வாயு அதிகமாவதால் என்ன பிரச்சனை?

அதாவது, இந்த வாயுக்கள் எவ்வாறு கவசம் போல் செயல் படுகிறதோ அதே போல் இந்த வாயுக்களின் அளவு அதிகமாகும் போது பூமி வழக்கத்தை விட அதிகமாக சூடாகிறது. இவ்வாறு அதிக சூடாவதால், "கால நிலை மாற்றங்கள்", "பனிக்கட்டி உருகுதல்", போன்றவைகள் நிகழ்கின்றன.

இப்ப அந்தப் படத்தை பார்த்தால் இன்னும் தெளிவாகப் புரியும்.

இப்ப, கிழே ஒரு செய்தி இருக்கிறது அதைப் படித்துப் பாருங்க.. இந்தப் பிரச்சனையின் (விளைவின்) தீவிரம் புரியும்.

இந்த செய்தி ஜீலை 30, 2007 - தினகரனில் வெளியானது.



பூமி வெப்பம் அதிகரிப்பால் புயல் அபாயம் 2 மடங்கு உயர்வு

வாஷிங்டன், ஜூலை 30-

புவியின் வெப்பநிலை அதிகரிப்பால், அட்லான்டிக் கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கை கடந்த நூற்றாண்டைவிட இரு மடங்குக்கு மேல் அதிகரித்துள்ளதாக அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழலை மனிதர்கள் அதிகளவில் மாசுபடுத்துவதால் புவியின் வெப்பம் அதிகரித்துள்ளது.

"இதன் காரணமாக கடலில் உருவாகும் புயல்களும் அதிகரித்துள்ளது" என அமெரிக்க வானிலை ஆராய்ச்சியாளர் ஹோ லண்ட், பீட்டர் ஜே.வெப்ஸ்டர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். இவர்களின் ஆய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் கூறியிருப்பதாவது:

கடந்த 1905ம் ஆண்டு முதல் 1930ம் ஆண்டு வரை அட்லான்டிக் கடலில் ஆண்டு சராசரியாக 6 புயல்கள் உருவாகியது. இதில் 4 சூறாவளி.

கடந்த 1931ம் ஆண்டு முதல் 1944ம் ஆண்டு வரை சராசரியாக 10 புயலும், 5 சூறாவளியும் உருவாகியது. 1995 முதல் 2005ம் ஆண்டு வரை சராசரியாக 15 புயலும், 8 சூறாவளியும் உருவாகியது. கடந்த 2006ம் ஆண்டில் 10 புயல்கள் உருவாகியுள்ளன.

இப்படி புயல்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த 100 ஆண்டுகளில் அட்லான்டிக் கடல் மட்டத்தின் வெப்பம் 1.3 டிகரி பாரன்ஹீட் அதிகரித்துள்ளது. கடல்மட்டத்தின் வெப்பம் அதிகரிப்பதால், காற்று மண்டலத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு புயல்கள் உருவாகிறது.

அட்லான்டிக் கடலில் அடிக்கடி உருவாகும் புயலால் அமெரிக்க மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அதோடு வர்த்தகமும் பெருமளவில் பாதிப்படைகிறது.
இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.


இந்த "சுட்டியையும்" சென்று பாருங்கள்.
It is thought that over 13,000 sq km of sea ice in the Antarctic Peninsula has been lost over the last 50 years.

கொஞ்சம் "இங்கேயும் சென்று"பார்த்துவிடுங்கள். பசுமைக் குடில் விளைவை கேரபிக்கல் முறையில் விளக்கு உள்ளனர்.

"இங்கே"இன்னும் 90 ஆண்டுகளில் பூமி எவ்வாறு இருக்கும் என்று படம் பிடித்து காட்டி இருக்கிறார்கள். இது போல் ஏராளமான சுட்டிகளைத் தரலாம்.


சரி, இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

உண்மையில் தற்பொழுது பூமியை ஆள்பவன் மனிதன் தான். பூமியின் வரலாற்றில் இது முக்கியமான காலம். ஆனால், நம்மால்தான் இந்த பூமி அழிவை நோக்கி செல்கிறது என்றால், பரிணாம சுழற்சியில் மனிதன் என்ற ஒரு விலங்கு உருவாகமால் போயிருக்கலாம், என்று தோன்றுகிறது. இத்தகைய மனிதன் இல்லாமல் இருந்திருந்தால், மற்ற மரம், செடி, கொடி, விலங்குகள், பறவைகள் எல்லாம் மகிழ்ச்சியாக வாழ்ந்திருக்கும். நாம் செய்யும் செயல்களால் நம்மோடு சேர்ந்து இவைகளும் பாதிக்கப்படுவது, கொடுமை.

ஆக, இந்த பசுமைக் குடில் விளைவைக் குறைக்க மனிதனால் மட்டுமே முடியும். எப்படி என்றால், முடிந்தவரை இந்த வாயுக்களின் அளவை பூமியில் அதிகரிக்காமல் இருப்பதுதான்.

ஐநா மற்றும் உலக நாடுகள் பல மாநாடுகளை நடத்திக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அதன் தீவிரம் இன்னும் ஒவ்வொரு மனிதனையும் சென்றடையவில்லை. அவ்வாறு சென்றடையாவிட்டால் இதன் விளைவை குறைப்பது மிகக் கடினம்.


நாளைய சந்ததியினரை நினைத்து இப்போதே செயல் படவேண்டும்!


ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!

நன்றி!

அன்புடன்
சிவபாலன்

Sunday, August 12, 2007

தமிழ்மணத்தின் அழைப்பு - இராவணன் - கடவுள்



அனைவருக்கும் வணக்கும். "தமிழமண நட்சத்திரம்" என்ற புதிய மற்றும் முதல் தகுதி. உண்மையில் மகிழ்ச்சியாக இருக்கிறது. வரும் வாரம் முழுவதும் எனக்கு தெரிந்த/பார்த்த/இரசித்த விடயங்களை பகிர்துகொள்ளப்போகிறேன்.

சுமார் மூன்று வாரத்திற்கு முன், தமிழ் மணத்திடமிருந்து மின்னஞ்சல் வந்தது. அது என்னுடைய வேறு ஒரு மின்னஞ்சலில் இருந்ததால் கவனிக்காமல் விட்டுவிட்டேன். நான்கு
நாட்களுக்குப் பிறகுதான் மின்னஞ்சலைப் பார்த்தேன். ஆகா, யாராவது நம்ம கிட்ட விளையாடறாங்களா? இல்லை உண்மையான மின்னஞ்சல்தானா? என்று. தமிழ்மணத்தின் தொடர் மின்னஞ்சலை வைத்து உண்மை என அறிந்தேன்.

உண்மையில், இதற்கு முன் நட்சத்திரமாக ஜொலித்த, ஒவ்வொரு பதிவரும், ஏதோ ஒருவகையில் சிறந்தவர்கள். அந்த இடத்தில் இப்ப நான் இருப்பது எனக்கு மகிழ்ச்சிதான்.

அதற்கு தமிழ் மணத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.


சரி இனி என்னைப் பற்றி சுருக்கமாக..

நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கோவையில் வடவள்ளி என்ற கிராமத்தில் தான். என்னுடைய பள்ளிப் பருவம் முழுவதும் வடவள்ளிதான். பிறகு இளங்கலை பொறியியல் பட்டம் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும், முதுகலை பொறியியல் பட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும், பயின்றேன்.

சென்னை, கோவை, மீன்டும் சென்னை, பெங்களூர், இப்போ சிகாகோ, என்று பணியிடங்கள் மாறி மாறி,வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது.

நான் பதிவுலகிற்கு வந்தது "தமிழகத் தேர்தல்" எனும் வலைப் பக்கத்தை படிக்க வந்தபோதுதான்.(அரசியலில் அவ்வளவு ஈடுபாடு.)



சரி, என் வாசிப்பு என்றால், சின்ன வயதில் தேவாரம் திருவாசகம் எல்லாம். (வீட்டில் கட்டாயம்.. அதனால்). அப்பறம் நாளிதழ்கள், வார இதழ். இவைகள்தான். வைர முத்துவின் கவிதைகள் விரும்பி படிப்பேன்.

ஆனால், நான் முக்கியமாக சொல்ல வேண்டிய வாசிப்பு. அண்ணாவின் நாடகங்கள். எங்கள் வீட்டில் திராவிட இயக்க நூல்கள் சில இருக்கும். ஆனால் நான் எல்லாவற்றையும் படிக்கவில்லை.

அதில் மிக ஈர்த்தது அண்ணாவின் நாடகங்கள்.

அதில் மிக சுவாரசியமானது "நீதிதேவன் .... மயக்கம்".(நாடகத்தைப் படிக்க இங்கே சொடுக்கி உள்ளே செல்லவும்) கட்டாயம் படித்துப் பாருங்க. (ஏற்கனவே நிறைய பேர் படித்திருப்பீர்கள்). எவ்வளவு அழகாக எழுதியிருப்பார்!. இன்றைக்கும், அது மிக நல்ல நாடகம்தான். இந்த நாடகத்தை படிக்கும் முன், நீங்கள் வைத்திருக்கும் எந்த ஒரு நம்பிக்கையையும் சற்று தள்ளி வைத்துவிட்டு, ஒரு பாமரனாக இதைப் படியுங்கள். படித்த பிறகு உங்கள் கருத்தை பகிர்ந்துகொள்ளுங்கள்.

நாடகத்தைப் பற்றி சுருக்கமாக.. பூவுலகில் நடந்த வரலாறு மற்றும் கற்பனை விடயங்கள் அனைத்தும் மக்கள் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டதால் எல்லா விடயங்களும் மறு ஆய்வுக்கு உட்படுத்தப் படுகிறது. அதில் முதலில் எடுத்துக்கொள்ளப்படுவது இராவணன் குற்றவாளியா? அதனால் இலங்கை அழிந்தது முறையா? சரியா? என்ற வழக்கு.

அந்த வழக்கில், கம்பன், நீதி தேவன் என எல்லோரும் மன்றத்தில் கூடி இருக்க, இராவணன், தனது பக்க நியாத்தை எடுத்துரைப்பது போன்று காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.

படித்துப்பாருங்கள்.. நீங்கள் மயங்கி விழுந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல.. பேரறிஞர் அண்ணாதான் பொறுப்பு!


சரி என்னுடைய இன்னுமொரு முக்கியமான வாசிப்பு/ விடயம்.

கடவுள் மறுப்பும் பெரியாரும். பெரியார் பல முக்கியமான மாற்றங்களை சமுதாயத்தில் ஏற்படுத்தியவர். அவருடைய பல கொள்கைகளில் என்னை மிக கவர்ந்தது கடவுள் மறுப்புதான். ஆனால், இந்த கொள்கை, இந்த சமுதாயத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமால் போனது, "மனிதன் என்ற இனத்திற்கே பேரிழப்பு" என்று நான் கருதுகிறேன். இல்லாத ஒன்றுக்காக மனிதன் தன்னை எவ்வளவு வருத்துக்கொள்கிறான் எனும் போது, பெருத்த ஏமாற்றமும் வருத்தமும் தான்.

கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் எல்லாம் கெட்டவர்கள், மற்றவர்கள் நல்லவர்கள், என நான் சொல்லவில்லை. ஆனால், "நாம் மனிதன்" என்று கடைசி வரை அறியாமால் செல்வதற்கு, இந்த கடவுள் எனும் கற்பனை விடயமும் ஒரு காரணம், என நான் கருதுகிறேன்.

நிறைவாக ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். கடவுள் என்ற கற்பனை விடயத்தை மறுத்த பிறகுதான், நான் ஏதோ சுதந்திர உலகில் இருப்பது போன்று உணர்கிறேன். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இதனால், "எனக்கு எந்த துன்பமும் வருவதில்லை" என்று நான் சொல்லவில்லை. எல்லா மனிதருக்கும் இருக்கும் பிரச்சனைதான் எனக்கும் இருக்கிறது. இதில் கடவுள் என்ற கற்பனையை தூக்கி எறிந்தவுடன், ஒரு சுமை குறைந்துள்ளது போல் உணர்கிறேன்!



பொய்யையும் புரட்டையும் அழித்து இந்த பூமியை புதிதாக உருவாக்குவோம்!


நன்றி!

அன்புடன்
சிவபாலன்.

Thursday, August 09, 2007

பூணூல் இல்லாததால் பொற்காலமில்லை!? - கலைஞர் எழிச்சியுரை!



பெரியார் படம் 100வது நாள் விழாவில் முதல்வர் கலைஞர்.மு.கருணாநிதி கலந்து கொண்டு கலைஞர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி ஆற்றிய எழுச்சியுரையில் சில பகுதி கிழே.. முழுவதும் படிக்க "விடுதலை" செல்லுங்கள்.

பெரியார் பிறக்காமல் இருந்தி ருந்தால், இன்றைக்கு நாமெல்லாம் இவ்வளவு சிறப்பாக வாழ முடியாது. ஏதோ ஓரளவு நாம் சிறப்பாக இருக்கிறோமென்றால் - நான் ஒரு முதலமைச்சராக இருக்கிறேன் என்றால் - பலரும் அமைச்சர்களாக இருக்கிறார்கள் என்றால் - தம்பி சத்யராஜ் ஒரு திறமையுள்ள நடிகர் என்று பாராட்டப்படுகிறார் என்றால் - நம்முடைய சிவகுமாருக்குப் புகழும் பெருமையும் கிடைத் திருக்கிறது என்றால் - இது கிடைக்கவேண்டுமேயானால் நான் சொல்வதற்காக யாரும் தவறாக எண்ணிக் கொள்ளக்கூடாது - அவர்களுடைய திறமைகளைக் குறைத்து மதிப்பிடுகிறேன் என்று எண்ணக் கூடாது. ஒரு நூல் குறுக்கே இருந்தால்தான் எந்தச் சிறப்பும் இல்லாமல் எங்களுக்குப் பெருமையும், புகழும் இந்த நாட்டிலே கிடைக்கும்.

இங்கே பேசியவர்களில் பல பேர் பொற்காலம் என்று சொன்னார்களே, பொற்காலம்தான். ஆனால் இந்தப் பொற்காலத்தை மதிக்கின்றவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? இந்தப் பொற்காலத்திற்குக் காரணகர்த்தாவாக இருப்பவன் பூணூல் அணியாத ஒரே குறையினால் இதைப் பொற் காலம் என்று ஏற்க மறுக்கிறவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள்? இந்தக் கேள்வியை என்னுடைய மண்டைக்குள்ளே, நெஞ்சுக்குள்ளே, மூளைக்குள்ளே திணித்த ஒருவர் என்னுடைய ஆசான் பெரியார் அல்லவா? அந்த வினாக்குறிப் பிறந்த காரணத்தால் தானே விழிப்புற்றது தமிழகம். விழிப்புற்றது இந்த இனம், விடுதலை பெற்றது இந்த இனம். இல்லா விட்டால் ஆண்டான் அடிமைகளிலே நாம் அடிமைகளாக இருந்திருப்போம்.

நம்மையெல்லாம் மனிதர்களாய் ஆக்கிட தம்மையே தியாகம் செய்தவர் தந்தை பெரியார்


சிலர் ஆண்டவர்களாக இருப்பார்கள். சிலர் உயர்சாதிக்காரர் களாக வாழ்வார்கள். நாம் மடிந்து மடிந்து அடிமையிலும் கீழாய், பொட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய் இன்றைக்கு நலிந்து போய் கிடப்போம். இப்படித்தானே இருந்தது சமுதாயம். இன்றைக்கும் 50 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் பிறப்பதற்கு முன்பு வரலாற்றை எண்ணிப் பார்த்தால், திரும்பிப் பார்த்தால் என்ன நிலைமை? அந்த நிலைமையை எல்லாம் தடுத்து நிறுத்தி, நம்மையெல்லாம் மனிதர்களாய் ஆக்குகின்ற அந்த மாபெரும் தியாகத்தைச் செய்து, அதற்காகப் போரிட்டு, சமுதாயத்திலே சண்டாளன், நாத்திகன் என்றெல்லாம் திட்டப்பட்டு, ஏகப்பட்ட வசைமாரிகளுக்கு உட்பட்டு, நமக்காக அல்லவா தந்தை பெரியார் தியாகியாக மாறினார், நமக்காக அல்லவா தந்தை பெரியார் இவ்வளவு பெரும் வேதனைகளையெல்லாம் சுமந்தார், இவ்வளவு பெரும் இழிவுகளையெல்லாம் ஏற்றுக் கொண்டார், அவர் இழிவுகளை ஏற்றுக் கொண்டார். நாம் ஏற்றம் பெற்றோம்.

Wednesday, August 08, 2007

"எரிகிறதா புதைக்கிறதா" புகழ் தெகாவின் புதிய இடுக்கை



நம்ம எல்லோருக்கும் தெகாவை நன்றாக தெரியும். ஒரு காலத்தில் "என்னை எரிக்கிறதா இல்லை புதைக்கிறதா" என்று கேட்டு ஒரு பெரிய அலையை ஏற்படுத்தியவர்.

நல்ல பதிவர். பல முக்கியமான விசயங்களை பதிவுலகிற்கு கொண்டு வந்து விவாதப் பொருளாக்கியவர்.

அவர் தற்பொழுது எடுத்துக் கொண்டிருக்கும் இன்னுமொரு முக்கியமான விசயம் "வால்மார்ட் இந்தியாவிற்கு அவசியமா?" என்பது.

அங்கே எனக்கு தெரிந்த விசயங்களை பகிர்ந்துகொண்டிருக்கிறேன். அதை இங்கேயும் கொடுத்துவிடுகிறேன்.

------------------------------------------------------

// ஆமாம் தெகா. எங்க குடும்பம் விவசாயக் குடும்பம் தான். அதுவும் வானம் பார்த்த பூமி (மானவாரி நிலங்கள்).

அது போன்ற நிலங்களில் விளைச்சலும் அதை வணிகம் செய்வதும் எவ்வளவு கடினம் எனபதை உணர்ந்தவன்.

வால்மார்ட், இது போன்ற விவாசாயிகளில் குரல் வலையை நசுக்குகிறதா அல்லது இடைத்தரகர்களை நசுக்குகின்றதா என்பதைப் பார்க்க வேண்டும்.

பொதுவாக விவசாயிகள் சில்லறை வணிகத்தில் ஈடுபடுவதில்லை. அதனால் வால்மார்ட் இடைத்தரகர்களைவிட நல்ல விலை கொடுக்கலாம்.

ஆனால் பிரச்சனை ஆரம்பமே அங்கு தான். விவசாயிக்கு நல்ல விலை வரவில்லை என்றால் மற்ற இடத்திற்கு பொருளை தற்பொழுது நிலையில் விற்க முடியும். ஆனால் வால்மார்ட் வந்தால் இந்த நிலையில் என்ன மாற்றம் வரும் என்பதை அறிய விரும்பிகிறேன்.

அதே போல் விதைகளை அவர்களே கொடுக்கும் பட்சத்தில் அந்த விதைகள் நம் மண் வளங்களை சுரண்டும் வண்ணமும், ஒவ்வொரு முறை விதைகளுக்கு வால்மார்ட் நம்பி இருக்கும் நிலையும் இருந்தால் அது மிகப் பெரிய ஆபத்து. ஏனென்றால் விதைகளின் விலை வால்மார்ட் வசம் போய்விடும். அப்படியாகின் நம் விவசாயிகள் தூக்கில் தான் தொங்க வேண்டும். //

-----------------------------------------

// தெகா

மேலும், இது மற்ற வர்த்தகத்திற்கும் பொருந்தும். எப்படி என்றால், ஒரு லுங்கி தாயாரிக்கும் ஆலையை எடுத்துக்கொள்வோம்.( சேலும் அதை ஒட்டிய இடங்களில் இந்த ஆலை மிக அதிகம்).

ஒரு வேளை வால்மார்ட் இந்த நிறுவனங்களிடமிருந்து ( அதாவது குடிசைத் தொழில் போல் செய்யும் நிறுவனங்கள்) கொள்முதல் செய்வதாக வைத்துக் கொண்டால், வால்மார்ட் போக போக தனது தனது தொழில் ஏற்படும் மாற்றங்கள் இந்த நிறுவனங்களின் மீது தினிக்கும்.

மக்களும் வால்மார்டிடமே விரும்பி செல்கிறார்கள் என்றால், மற்ற நிறுவனங்கள் தனித்து இயங்க முடியாமல் போகலாம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், குடிசை தொழில் போல் செய்பவர்கள் காணாமல் போய்விடுவர்.

இது என் சிற்று அறிவுக்கு ஏற்ப என் கருத்தை சொல்லியிருக்கிறேன். இந்த வர்த்தகத்தை பற்றி அறிந்தவர்கள் இன்னும் தெளிவாக விளக்கலாம். எனக்கும் மற்றவர்களும் உபயோகமாக இருக்கும்.

நன்றி //

------------------------------------

நான் எதிர்ப்பார்பதெல்லாம், இந்த வால்மார்ட் உண்மையில் நம் இந்தியாவில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை பற்றி ஒரு தெளிவான விவாதம்/கட்டுரை.

அங்கே நடக்கும் இந்த விவாதத்தில் நீங்களும் கலந்துகொண்டு கருத்தை பகிர்ந்துகொள்ளவும்..

Tuesday, August 07, 2007

பதிவர் பட்டறை - தி நியு இந்தியன் எக்ஸ்பிரஸ் - சில குழப்பங்கள்!




சென்னை பதிவர் பட்டறையை மிக அழகாக வெளியிட்டு நம் அனைவரின் மகிழ்வுக்கும் காரணமான தி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிழதலுக்கு ஒரு பெரிய நன்றி!

இது போன்ற பட்டறையை நடத்தி காட்டிய நல் இதயங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். வணங்குகிறேன்!

ஆனால், இந்தியன் எக்ஸ்பிரஸ் முதல் பக்கத்தல் வந்த பதிவர் பட்டறையை பற்றி வந்த கட்டுரை அவ்வளவாக இரசிக்க முடியவில்லை.

அதாவது அதில் குறிப்பிடப்பட்டுள்ளது போல் கும்மி, மொக்கை, உள் குத்து, ஜல்லி, கயமைத்தனம், கவுஜ (கவிதை), தடாலடி போட்டி, பா.க.ச (பாலபாரதி கலாய்போர் சங்கம்)- இதைத் தேடித்தான் புதுப்பதிவர்கள் வரவேண்டுமா?

நான் இவற்றை எதிர்க்கவும் இல்லை, தவறு என்று சொல்லவும் இல்லை.

ஆனால், ஒரு பிரபல நாளிதழ், ஒரு மிக முக்கியமான நிகழ்வை இவ்வாறு கொடுத்தது, எனக்கு சற்று அதிர்ச்சிதான். அதுவும் இந்தப் பட்டறையை நடத்தியவர்களின் எண்ணங்கள் முழுவதும் தமிழை முன் நிறுத்தும் முயற்சி எனும் போது, இது போன்ற கட்டுரைகள் புதிதாக தமிழ் உலககிற்கு வரவேண்டும் என்பவர்களை எவ்வாறு ஊக்கிவிக்கும் என்பது எனக்கு குழப்பமும் சந்தேகமும் தான்.

நிச்சயம், அந்த பத்திரிக்கையில் மிக நல்ல ஆசிரியர்கள் இருப்பார்கள். அவர்களிடம் கொடுத்து நல்ல விதமாக ஒரு கட்டுரையை கொடுத்திருக்கலாம் என்பது என் ஆதங்கம்.

இங்கே நிறைய பதிவர்கள் பட்டறையைப் பற்றி தங்கள் அனுபங்களை மிக அழகாக கொடுத்திருக்கிறார்கள். அவற்றுடன் ஒப்பிட்டால் கூட இந்தக் கட்டுரை சற்று தரம் தாழ்ந்ததாகவே நான் கருத்துகிறேன்.

ஒரு வேளை என் பார்வை தவறோ?! இருக்கலாம்!


பி.கு. இந்த இடுக்கை யார் மனதையும் புண்படுத்த இல்லை. அப்படியாகின் என் வருத்தத்தையும் மன்னிப்பையும் இப்பொழுதே கூறிவிடுகிறேன்.

ரகசியமானது காதல் மிக மிக - பாடல் - விடியோ





ரகசியமானது காதல் மிகமிக
ரகசியமானது காதல்
முகவரி சொல்லாமல் முகம்தனை மறைக்கும்
ஒருதலையாகவும் சுகமனுபவிக்கும்
சுவாரசியமானது காதல் மிகமிக
சுவாரசியமானது காதல்

சொல்லாமல் செய்யும் காதல் கனமானது
சொல்லச் சொன்னாலும் சொல்வதில்லை மனமானது
சொல்லும் சொல்லைத் தேடித்தேடி யுகம் போனது
இந்த சோகம் தானே காதலிலே சுகமானது
வாசனை வெளிச்சததைப் போல அது சுதந்திரமானதுமல்ல
ஈரத்தை இருட்டினைப் போல அது ஒளிந்திடும் வெளிவரும் மெல்ல

ரகசியமானது காதல் மிகமிக
ரகசியமானது காதல்

கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது
கேட்கும் கேள்விக்காகத் தானே பதில் வாழுது
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது
நீரினை நெருப்பினைப் போல விரல் தொடுவதில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளைப் போல அதை உயிரினில் உணரணும் மெல்ல

ரகசியமானது காதல் மிகமிக
ரகசியமானது காதல்



படம்: கோடம்பாக்கம்
இசை : சிற்பி
பாடல் : விஜய் சாகர்
நடிப்பு: நந்தா, தியா
குரல்: Harini, Harish Ragvendra
வருடம்: 2005
இயக்கம் : ஜகன் ஜி
தயாரிப்பு: செவ்வேல்

Friday, August 03, 2007

திரை பின்னால் சிம்பு அடிக்கும் கூத்து! - வீடியோ

லண்டனில் நடந்த கலை நிகழ்ச்சியில் தமிழ் சினிமா நட்சந்திரங்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். அந்த நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பட்டது. அதில் சிம்பு சில் காட்சிகளை தொகுத்து சன் டிவிக்காக வழங்கியுள்ளார். அதன் வீடியோ கிழே..

நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கலாம்.. இருந்தாலும் மீன்டும் ஒரு முறை பாருங்கள்.. ஜாலியா செய்திருக்கிறார்.



திரு.குமரன் அவர்களின் இடுக்கைக்கு ஒரு பதில்

PAMBAN BRIDGE, Tamil Nadu, India.


திரு.குமரன் அவர்கள் "இந்தப் பதிவில்." அமெரிக்காவில் பாலம் இடிந்து விழுந்ததை பற்றி கூறியிருக்கிறார். அதில் சில விசயங்களையும் தனது பின்னூடத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

நானும் ஒரு பின்னூடமிட்டேன். அதற்கு அவர் பதில் பின்னூடமிட்டுள்ளார்.முதலில் அந்தப் பாலம் ஏன் விழுந்திருக்கும் என்று என் சிற்றரிவுக்கு எட்டியவரை யோசித்துப் பார்த்தேன். Structural Failure ஆக இருக்க வாய்ப்பு அதிகம். (அமெரிக்க வானொலியில் பேசிய ஒரு பொறியாளர்கூட இதை குறிப்பிட்டிருந்தார்)

இதில் Fatigue Load என்று ஒன்று உள்ளது. அதாவது காலம் ஆக ஆக எற்படும் Shearக்கு ஏற்றவாறு (Joints)சந்திப்புகளிலும் அந்த (Span)ஸ்பேனின் மையத்திலும் ஏற்படும் மாற்றங்கள்.இது 40 வருடம் கடந்தும் நடக்கலாம். அல்லது 60 வருடம் கடந்தும் நடக்கலாம். திரு.வடுவூர்.குமார் சில விசயங்களை பின்னூடத்தில் சொல்லியிருந்தார். அது ஏற்புடையதே! நான், அந்த உடைந்த பாலத்தின் புகைப் படத்தை பார்த்தேன். அது உடைந்திருப்பதைப் பார்த்தால் அது Structural Failure இருக்க வாய்ப்பு அதிகம்.

சரி, இதில் திரு.குமரன் இடுக்கையில் இன்னும் சில.

1. நம்ம ஊரில் பாலம் விழுந்தால் கண்டு கொள்ள மாட்டார்கள்.

நிச்சயம் இல்லை. இது என்னால் எற்றுக் கொள்ளமுடியாது. எந்த வகையான பாலம் என்பது முக்கியம். இது போல் நகரின் பிராதான சாலையில் விழுந்தால் அது மிகப் பெரிய விசயம். அந்தத் துறையை சார்ந்த ஒவ்வொரு பொறியாளாரும் பாதிக்கப்படுவார்கள். அதுவும் உடனடி சஸ்பென்ட் தான். இங்கே இவனுங்க இந்த பாலம் விழுந்த அறிக்கை தாக்கல் செய்யவே இன்னும் 2 வருடங்களாவது ஆகும். இதை யாரும் மறுக்க முடியாது.

2. ஒவ்வொரு வருடம் ஆய்வு செய்கிறார்கள். இல்லை. இது எனக்கு சரியாக தெரியவில்லை. நான் கேள்விப் பட்டவரையில் இரண்டு வருடங்கள்க்கு ஒரு முறை என. சரி அது எப்படியோ, இந்தியாவில், இது போன்று சோதனை செய்வதில்லையா? யார் சொன்னது.

பாலத்தின் தன்மைக்கு ஏற்ப, குறிப்பிட்ட கால அவகாசத்தில் பொது பணித்துறையோ, நெடுஞ்சாலைத் துறையோ செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இதையும் மீறி பாலங்கள் விழந்த்தான் செய்கின்றன. ஆனால் இது போன்ற மிக பிராதான பாலங்கள் நிச்சயம் கிடையாது. சில சமயம், பாலம் பராமரிப்பு சில உள்ளாட்சி அமைப்புகளிடம் செல்வதுண்டு. அங்கே கோட்டை விட்டு விடுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.


ஒரு ஆறு மாதங்களுக்கு முன் ஒரு ரயில்வே மேம்பாலம் இடிந்துவிழுந்தது. ஆனால அது மிகப் பழைமையான பாலம். அதை பயன்பாட்டுக்கு உகந்தது இல்லை என பல வருடங்களுக்கு முன்பே மூடிவிட்டார்கள்.


இன்னொரு முக்கியமான விசயம், உலகிலேயே, நில நடுக்கம் ஏற்பட்டு பெருந்த சேதம் ஏற்பட்டும், ஒரு சிறு கீறல் கூட விழாத நீர் தேக்க தொட்டியை கட்டிய பெருமை இந்தியனுக்கு மட்டுமே உண்டு. இன்னும் அதில் பல ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.

3. சரி, இந்தப் பாலம் விழுந்தவுடன், அமெரிக்காவில் உள்ள மற்ற பாலங்களையும் சரி செய்துவிடுவார்கள். இதை என்னால் ஏற்றுக் கொள்ள முடிய்வில்லை. இது மீடியா மூன்று நாண்கு நாட்களுக்கு சொல்லிவிட்டு விட்டுவிடும். ஒரு கமிட்டி அமைக்கப்படும்.

இங்கும் உள்ளாட்சி அமைப்புகள் பலம் வாய்ந்தவை. ஆனால் பல திட்டங்களுக்கு பட்ஜெட் பற்றாக்குறை. ( இது நான் படிக்கும் நாள்ழிதலை வைத்து சொல்கிறேன்.) அதனால், ஒரு பாலம் யார் பாரமறிப்பில் உள்ளது என்பதைப் பொருத்து இது மாறுபடும். மாகாணங்களிலும் பட்ஜெட் பற்றாகுறை உள்ளது. அதாவது தீடிர் திட்டங்களுக்கு.

4. இந்தியாவில் இது போல் நடந்தால் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்களா? இல்லை! அந்த அந்த துறையை சார்ந்தவர்கள் செயல் பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். மீடியாவில் வரவில்லை என்பதற்காக ஒட்டு மொத்த நாட்டையும் சொல்வது சரியில்லை.

5. தூண்கள் இல்லாமல் கட்ட்பட்டால் இது போன்று ஏற்பட வாய்ப்புள்ளதா? இல்லை! இந்தியாவில் இது போல் ஏராளம் உள்ளது.


இது அமெரிக்கா அல்லது இந்தியா என்ற பார்வை சரியில்லை. இந்திய பொறியாளர்கள் எந்த விததிலும் சளைத்தவர்கள் இல்லை.

அப்பறம் ஏன் சென்னையில் வானுயர்ந்த கட்டிங்கள் இல்லை.?

அய்யா, சென்னையில் LIC BUILDINGவிட உயரமாக கட்ட முடியாது. அது சட்டம். அதுவும் இல்லாமல், இந்தியாவில் Vertical Development அனுமத்தித்தால் Horizontal Develpment கிராமங்கள் மேம்பாடு அடையாது என்பதால் Floor Space Index மிக மிக குறைவாக அனுமதிக்கிறார்கள்.

அதனால் நம்மால் வானுயர்ந்த கட்டிடங்கள் கட்ட முடியாது என்பது தவறு. நிச்சயம் முடியும்! அரசாங்கம் அனுமத்தித்தால்.

Thursday, August 02, 2007

இலங்கைத் தமிழர்களுக்கு ஒரு GRAND SALUTE!


சமகால தமிழிலக்கியத்திற்கு ஈழம் வழங்கியுள்ள கொடை என்று அ.முத்துலிங்கம் படைப்புகளைச் சொல்லலாம். 1958 முதல் எழுதிவரும் முத்துலிங்கம் யாழ்ப்பாணத்தில் பிறந்து பல அரசியல் நெருக்கடிகளால் புலம் பெயர்ந்தவர். இருபது வருடங்களாக ஐக்கியநாடுகள் சபையில் அதிகாரியாகப் பணிபுரிந்துவிட்டு ஓய்வு பெற்றபின் தன் மனைவியுடன் தற்சமயம் கனடாவில் வசிக்கிறார்.


குமுதம் தீராநதியில் வெளிவந்த அவருடைய பேட்டி, இங்கே உங்கள் பார்வைக்கு. முழுவதும் படிக்க தீராநதி இதழைப் பார்க்கவும்.

தீராநதி: நீங்கள் விரும்பினாலும் திரும்ப இயலாத ஒரு தேசமாக இலங்கை மாறிக் கொண்டு வருகிறது. இந்த அரசியல் நெருக்கடிகள் உங்களை எந்த அளவிற்குப் பாதித்திருக்கிறது?

அ. முத்துலிங்கம்: மாணவனாயிருக்கும்போதே பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. சொந்த நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டு கொழும்பிலிருந்து கப்பல்களில் யாழ்ப்பாணம் போய்த் தப்பியவர்களில் நானும் ஒருவன். என் குடும்பம், உறவினர், சிநேகிதர் என்று எல்லோரும் அந்தக் கப்பலில் இருந்தனர். எனக்கு அப்போதிருந்த ஒரே சொத்து நான் படிக்கும் பாடப் புத்தகங்களும், சேர்த்து வைத்திருந்த இலக்கிய நூல்களும்தான். அவற்றை ஒவ்வொன்றாகத் திரும்பவும் சேர்க்கவேண்டி வந்தது. என்னுடைய சகோதரர் குண்டுவீச்சில் வீட்டை இழந்தார். என்னுடைய சகோதரிகள் சொத்தை இழந்தனர். எனக்கு எல்லாமாயிருந்த அண்ணன் சமீபத்தில் ஊரடங்குச் சட்டத்தின்போது நிராதரவாக மருத்துவமனையில் காலமானார். நான் ஓய்வு பெற்று கனடாவைத் தேர்ந்தெடுத்து இங்கே வாழ்ந்து கொண்டிருந்தாலும், அடிக்கடி கனடாவின் அதி உயர்ந்த படைப்பாளியான அலிஸ் மன்றோ கூறியதை நினைத்துக்கொள்வேன். ‘நீ புகுந்த நாட்டில் எவ்வளவு வசதிகளோடு வாழ்ந்தாலும் ஒருபோதும் அந்த நாடு உன் சொந்த நாடாக மாறாது. அது நீ இறக்கப்போகும் ஒரு நாடாகவே இருக்கும். உன் பிறந்த நாடுதான் உன் சொந்த நாடு.’


தீராநதி: இலங்கையில் சிங்களவர் மட்டுமே நிறைந்திருந்த ஒரு நிறுவனத்தில் தனியான ஒரு தமிழ் மேலதிகாரியாக கடமையாற்றியிருக்கிறீர்கள். அன்று உங்களுள் நடந்த பாதுகாப்பு, அச்ச மன உணர்வுப் போராட்டம் குறித்துப் பேசலாமா?

அ. முத்துலிங்கம்: நான் கொழும்பு பல்கலைக் கழகத்துக்கு நுழைவுத் தேர்வு எழுதி அனுமதி பெற்றபோது, எங்கள் புகுமுக வகுப்பில் 55 சதவீதம் தமிழர்களாகவும் மீதி சிங்களவராகவும் இருந்தார்கள். சிங்களவர் பெரும்பான்மையாக இருந்த ஒரு நாட்டின் பல்கலைக்கழகத்தில் தமிழர் தொகை அதிகமாக இருந்தது. எங்களுக்கு இயற்பியல், வேதியியல், கணிதம் படிப்பித்த பேராசிரியர்களும் தமிழர்களாகவே இருந்தார்கள். நாங்கள் வகுப்பில் அகரவரிசைப்படி அமர்வோம். எங்கள் வரிசையில் முனசிங்க என்ற சிங்களவர் இருந்தது ஞாபகம். சிங்களம், தமிழ் என்ற பேதம் எங்கள் மனங்களில் அப்போது இல்லை. விரிவுரைகள் ஆங்கிலத்திலேயே நடக்கும். இயற்பியல் பேராசிரியர் கரும்பலகையில் சிக்கலான விடையைத் தேடும்போது உரத்த குரலில் 'ஏழு எட்டு அம்பத்தாறு', 'நாலு ஆறு இருபத்தி நாலு' என்று பெருக்கல் வாய்பாட்டைச் சொல்லிச் சொல்லி எழுதுவது சர்வ சாதாரணம்.

இரண்டாவது வருடம் இனப்போர் வெடித்தது. தமிழர்கள் கொலை செய்யப்பட்டு, வீடு வாசல் இழந்து அகதிகள் ஆனார்கள். அமைதி ஏற்பட்ட பின்னர் பல்கலைக்கழகத்துக்குத் திரும்பினால், நிலைமை முற்றிலும் மாறிவிட்டது. சிங்களம், தமிழ் என்ற பிரிவு ஏற்பட்டதை என் கண்ணால் கண்டேன். அதன் பின்னர் பிளவு கூடியதே ஒழிய ஒன்று சேரவில்லை. நான் வேலையில் சேர்ந்தபோது எனக்கு மேலதிகாரியாக ஒரு வெள்ளைக்காரர் இருந்தார். அவரின் கீழ் நான் நாலைந்து வருடங்கள் வேலை பார்த்தேன். அவர் நாட்டை விட்டுக் கிளம்பியதும் அவர் பார்த்த வேலை என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. நான் ஒருவனே அப்போது தமிழன். எனக்கு மேலேயிருந்த இயக்குனர் சேர்மன் ஒரு பிரபலமான சிங்களவர்; ஜனாதிபதியின் சகோதரர். கம்பெனி இருந்தது சிங்களப் பிரதேசத்தில். வெள்ளைக்கார அதிகாரி இருக்கும்வரைக்கும் பிரச்னை இல்லை. ஆனால், ஒரு தமிழ் மேலதிகாரி சிங்கள ஊழியர்களிடம் வேலை வாங்குவது சிரமமானது. நிர்வாகம் கண்டிப்பும் கருணையும் கலந்து இருக்கவேண்டும். ஒரு சின்னத் தகராறு என்றாலும் வேலை நிறுத்தம் என்று ஆரம்பித்துவிடுவார்கள். முட்டை மேலே நடக்கும் வித்தை.

ஆப்பிரிக்காவில் வேலை கிடைத்ததுதான் தாமதம், திரும்பிப் பாராமல் நாட்டைவிட்டு ஓடிவிட்டேன்.

தீராநதி: நவீனம், பின்நவீனம் என்பது குறித்தெல்லாம் விவாதங்கள் தமிழில் நடத்தப்படும் காலம் இது. உங்களின் படைப்புகளில் இவற்றிற்கான சிறு கூறுகளைக் கூட பார்க்க முடியவில்லை. இக்கோட்பாடுகள் பற்றிய உங்களின் அளவீடு என்ன?

அ. முத்துலிங்கம்: நீங்கள் கேட்ட இதே கேள்வியை நான் அமெரிக்காவின் சிறந்த எழுத்தாளர், புலிட்ஸர் பரிசு பெற்ற Frank McCourt அவர்களிடம் ஒருமுறை கேட்டேன். அவர் சொன்ன பதிலையே கீழே தருகிறேன். 'நான் ஒரு கதைசொல்லி. கதைதான் எனக்கு முக்கியம். நான் modern, postmodern என்றெல்லாம் நினைப்பதில்லை.' அதையேதான் நானும் சொல்கிறேன். மேலும், இலக்கியம் என்பது உண்மையை நோக்கிய ஒரு பயணம். பின்நவீனத்துவம் உண்மை என்று ஒன்றில்லை. அது மாறிக்கொண்டே இருக்கிறது என்று சொல்கிறது. ஆகவே எனக்கு அது எப்படிப் பொருந்தும். ஆதியிலிருந்து மனிதன் கதை சொல்லி வந்திருக்கிறான். எழுத்து பிறப்பதற்கு முன்னரே கதை பிறந்துவிட்டது. ஆப்பிரிக்காவிலே சில இனக் குழுவினர் பேசும் மொழிக்கு எழுத்துரு கிடையாது. காலம் காலமாக வாய்மொழியாக வந்த கதைகளையே சொல்கிறார்கள். எங்கள் இதிகாசங்கள், ஹோமரின் இலியட், ஒடிசி எல்லாம் வாய்மொழியாக வந்து பின்னர் எழுத்துரு பெற்றவை. தொன்று தொட்டு வந்த கதை வடிவம் இது. 2000 வருட காலத்துக்கு இது தாக்குப் பிடித்தால், மேலும் 2000 வருட காலத்துக்கு இந்த முறை நிற்கும். நியூட்டனின் புவி ஈர்ப்பு விதிகளைக் கேட்ட மாணவன் ஆசிரியரிடம் 'எத்தனை வருடங்களுக்கு திருப்பித் திருப்பி அதே விதிகளைக் கட்டி மாரடிப்பது. அலுத்துவிட்டது, எனக்கு புது விதிகள் வேண்டும்' என்று சொன்னது போலத்தான்.

மேற்கிலே அவர்கள் பின்நவீனத்துவத்தைக் கைவிட்டு நாளாகிவிட்டது. இங்கே பின்நவீனத்துவம் வேண்டும் என்று சொல்பவர்கள் அதிலே முயற்சிசெய்து பார்க்கலாம்; தவறே இல்லை. எப்படிப் பார்த்தாலும் தமிழுக்கு லாபம்தான்.



தீராநதி: வருங்கால தமிழ் இலக்கியத்தை முன்னெடுத்துச் செல்பவர்கள் ஈழப் படைப்பாளிகளாகவே இருப்பார்கள் என்று முன்பொரு முறை கார்த்திகேசு சிவத்தம்பி பேசி இருந்தார். அதை உறுதிப்படுத்துவது போல இன்று ஷோபா சக்தி, புஷ்பராஜா, நீங்கள் எல்லோரும் சேர்ந்து தமிழ் நவீன இலக்கியத்தை வேறு முனைப்போடு நகர்த்திக் கொண்டு செல்கிறீர்கள். ஒட்டுமொத்தமான ஈழ இலக்கியம் குறித்து உங்களின் மதிப்பீடு என்ன?

அ. முத்துலிங்கம்: ஈழத் தமிழர்கள் தமிழ் இலக்கியத்துக்குப் புது வேகம் கொடுத்து முனைப்போடு நகர்த்திச் செல்கிறார்கள். அது உண்மை. இலங்கையில் நிலவும் போர்ச்சூழல் ஒரு காரணமாக இருக்கலாம். அல்லது புலம்பெயர்ந்த இடத்தில் ஏற்பட்ட கலாச்சார மாற்றங்களாக இருக்கலாம். ஆனால், நான் எப்படி வருங்கால தமிழ் இலக்கியத்தை ஈழத்துப் படைப்பாளிகளே முன்னெடுத்துச் செல்வார்கள் என்று தீர்க்கமாகச் சொல்லமுடியும்? ஐம்பது வருடத்துக்குப் பிறகு தமிழ் இலக்கிய ஆராய்ச்சி செய்யும் ஒரு மாணவன் அல்லவா அதைக் கண்டுபிடிக்கவேண்டும்.

தமிழ் சினிமாவுக்கு தமிழில் தலைப்பு வைத்தால், அதற்கு சலுகை என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. இப்படி உலகத்தில் வேறு எங்கேயும் நடக்குமா? போர்ச்சுகல்லில் எடுக்கும் ஒரு படத்துக்கு போர்ச்சுகல் தலைப்பு வைக்கவேண்டும் என்று அரசு சொல்லுமா? தமிழிலே தலைப்பு வைத்துவிட்டு உள்ளே முற்றிலும் ஆங்கிலப் பாடலாக இருந்தால் என்ன செய்வது? கொடுத்த சலுகையைப் பிடுங்கிவிடுவார்களா? ‘இலக்கணம்’ என்ற தலைப்பில் ஒரு தமிழ்ப் படம் சமீபத்தில் வந்தது. படம் ஏனோதானோ என்று இருந்தாலும், அதில் வந்த வசனங்களில் ஓர் ஆங்கிலச் சொல்கூட இல்லை. ஓரிடத்திலும் நான் வசனம் புரியாமல் முழிக்கவில்லை. இயற்கையாகவே இருந்தது. இது பாராட்டத்தக்கது. கனடாவுக்கு யாராவது வந்தால் நான் சில புதுமைகளை அவர்களுக்குக் காட்டுவேன். கனடியத் தமிழ்த் தொலைக்காட்சியில் நடக்கும் ஒத்திகை இல்லாத நேரடி ஒளிபரப்பு விவாதங்கள் முற்றுமுழுதாக தமிழ் வார்த்தைகளிலேயே நடக்கின்றன. வானொலியில் செய்திகள் சுத்தமான தமிழில், நல்ல உச்சரிப்புடன் வருகின்றன. சாதாரண உரையாடல்களில் தனித்தமிழ் நுழைந்துவிட்டது. நான் கேட்ட கவியரங்கம் ஒன்றில் இப்படி ஒரு கவிதை. (மன்னிக்கவும், நினைவில் இருந்து சொல்லுகிறேன்). updating என்றால் பொருள் இற்றைப்படுத்துதல்.

கணினியை இற்றைப்படுத்தச் சொன்னாய்_ படுத்தினேன். கைப்பேசியை இற்றைப்படுத்தச் சொன்னாய்_படுத்தினேன். காதலைச் சொல்ல மறுக்கிறாய், கைகோர்க்க மறுக்கிறாய், கட்டிப்பிடிக்க மறுக்கிறாய். இருபதாம் நூற்றாண்டில் இன்னமும் இருக்கிறாயே! உன் இருதயத்தை இற்றைப்படுத்து இற்றைப்படுத்து என் இனியவளே. கனடிய அரசாங்கம் தமிழிலே தலைப்பு வைப்பதற்கு, கவிதை எழுதுவதற்கு, செய்தி வாசிப்பதற்கு ஒரு சலுகையும் தருவதில்லை. ஈழத்தமிழர்கள் தாங்களாகவே செய்கிறார்கள். English dictionary, American dictionary என்பதுபோல வருங்காலத்தில் 'ஈழத்தமிழ் அகராதி' என்று ஒன்று வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவர்கள் அவ்வளவு வேகமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.



தீராநதி: அரசியல் தன்மையற்ற ஒரு நபராகவே நீங்கள் இருக்கிறீர்கள். இலங்கை அரசியல் நெருக்கடி குறித்தெல்லாம் ஏதாவது கருத்துகள் உங்களிடம் உள்ளனவா, மறுக்காமல் பேசுங்கள்?

அ. முத்துலிங்கம்: எதைச் சொல்கிறீர்கள்? என் சிறுகதைகள் ஏன் அரசியல் பின்னணி இல்லாமல் இருக்கின்றன என்று கேட்கிறீர்களா? இலங்கைப் பின்னணியில் நேர்த்தியான நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் எல்லாம் வந்துகொண்டே இருக்கின்றன. நேரடி அனுபவம் இல்லாததால் நான் ஆழமாகப் பதிவுசெய்ய முடிவதில்லை ஆனால், என்னுடைய எத்தனையோ சிறுகதைகளில் ஈழத்து காட்சிகள் வந்து வந்து போகும். புதுமைப்பித்தன் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றி எழுதவில்லை. எமிலி டிக்கின்ஸன் அமெரிக்க உள்நாட்டுப் போர் பற்றி அவர் எழுதிய 1700 கவிதைகளில் ஒன்றில்கூட எழுதவில்லை. அதற்காக அவர்கள் அதுபற்றிக் கவலைப்படவில்லை என்று ஆகிவிடுமா?

பல நாடுகளில் சிறுபான்மையினரைப் பாதுகாக்க சட்டம் இயற்றுவார்கள். ஆனால், உலகிலேயே ஒரு பெரும்பான்மையைப் பாதுகாக்க சட்டம் கொண்டுவந்த நாடு இலங்கையாகத்தான் இருக்கும். இங்கே எப்படி ஜனநாயகம் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கலாம். ஜனநாயகத்தில் எனக்கு நம்பிக்கையும், மதிப்பும் போய்க்கொண்டிருக்கிறது. பெரும்பான்மை வைத்ததுதான் சட்டம் என்று ஆகிவிட்டது. அவர்கள் போனால் போகட்டும் என்று விட்டுக்கொடுப்பதுதானா நீதி? பெரும்பான்மை உள்ள ஒரு நாட்டில் ஜனநாயகம் இயங்கவேண்டும் என்றால், சிறுபான்மைக்குப் பாதுகாப்பு அரசியல் சட்டத்திலேயே ஐயத்துக்கு இடமில்லாமல் சொல்லப்பட்டிருக்கவேண்டும். அல்லாவிடில் சிறுபான்மைக்கு விமோசனமே கிடையாது. பேச்சு வார்த்தைகள் நடந்தபோது ‘தீர்வு வந்துவிடும், தீர்வு வந்துவிடும்’ என்று உலகம் எதிர்பார்த்தது. மறுபடியும் போர் என்றால் இழப்பு இரண்டு பக்கமும்தான். உலகிலே எத்தனையோ பாரிய பிரச்சினைகள். ஈராக், பாலஸ்தீனம், சூடான். யார் இலங்கைப் பிரச்சினையை கவனிக்கிறார்கள்; எல்லோருமே கைவிட்டுவிட்டார்கள். தீர்வை அவர்களாகத்தான் தேடவேண்டும்.


தீராநதி: எழுதுவதைத் தவிர வேறு ஏதாவது ஈடுபாடுகள் உங்களுக்கு கனடாவில் உள்ளனவா?

அ. முத்துலிங்கம்: தமிழ் இலக்கியத் தோட்டம் என்ற அமைப்பு கனடாவில் இருக்கிறது. அதில் நான் இயங்கி வருகிறேன். தன்னார்வலர்களால் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், லாபநோக்கற்ற குழுவாக ரொறொன்ரோவில் பதிவுசெய்யப்பட்டது. இது வருடா வருடம் வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனைக்கான விருதை வழங்கி கௌரவிக்கிறது. ஒவ்வொரு நாடும் தங்கள் தங்கள் நாடுகளில் இலக்கியம் படைப்பவர்களுக்கு கௌரவம் செய்கிறது. ஆனால், இந்த அமைப்பு உலகளாவிய ரீதியில் செயல்படுகிறது. சென்ற வருடம் இந்த விருது பேர்க்லி பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் ஜோர்ஜ் எல் ஹார்ட்டுக்கு வழங்கப்பட்டது. இது நாடு, சமயம், நிறம், சாதி கடந்தது. இதற்கான ஒரு நிதியம் ரொறொன்ரோ பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. ரொறொன்ரோ ஆர்ட்ஸ் கவுன்சில் தொடர்ந்து இரண்டு வருடங்கள் நிதியுதவி அளித்து ஊக்கப்படுத்தியிருக்கிறது. இதற்கு நடுவர்கள் 15 பேர் இந்தியா, இலங்கை, மலேசியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் சுற்றுமுறையில் விருதுத் தேர்வுக் குழுவில் பணியாற்றுவார்கள். தமிழ் இலக்கிய சாதனை விருது மட்டுமல்லாமல், மேலும் மூன்று பரிசுகளும் வருடாவருடம் வழங்கப்படுகின்றன. புனைவு இலக்கியம், அபுனைவு இலக்கியம், சுந்தர ராமசாமி நினைவாக வழங்கப்படும் தமிழ் தகவல் தொழில்நுட்ப சாதனை விருது. தமிழின் எதிர்காலம் தமிழ் தகவல் தொழில்நுட்பத்தில் பெரிதும் தங்கியிருக்கிறது. ஆகவே, இந்த விருது முக்கியத்துவம் பெறுகிறது. மற்ற விருதுகள் போல இதுவும் உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் பூட்டிய அறைக்குள் இருந்து தமிழ்ச் சேவை புரியும் தகவல் தொழில்நுட்பக்காரர் ஒருவருக்குப் போய்ச்சேரும்.

அடுத்து நான் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பது தமிழ் விக்கிபீடியாவில். இது ஒரு கலைக்களஞ்சியத்துக்குச் சமம். ஆனால் இரண்டு வித்தியாசங்கள் உள்ளன. தமிழ் விக்கிபீடியாவை இணையம் மூலம் உலகில் எங்கிருந்தும் யாரும் பயன்படுத்திக்கொள்ளலாம். இரண்டாவது, இது கல்வியாளர்களால் மாத்திரம் உருவாக்கப்படுவது இல்லை. யாரும் எழுதலாம். எவரும் பங்கு பற்றி திருத்தங்கள் செய்யலாம். ஆகவே, கட்டுரைகளில் ஆசிரியர் பெயர் இராது. ஆங்கிலத்தில் உள்ள விக்கிபீடியாவில் பத்து லட்சம் கட்டுரைகள் இருக்கின்றன. இந்திய மொழிகளில் தெலுங்கில் 26000 கட்டுரைகள், வங்காளியில் 12700 கட்டுரைகள் சேர்ந்துவிட்டன. தமிழ் விக்கிபீடியா இந்த மாதம் 10,000 கட்டுரைகள் இலக்கை தொட்டுவிட்டதாக அறிகிறேன். அதற்கும் கீழே ஹிந்தி, கன்னடம், மலையாளம் என்று வருகிறது. என்னுடைய வேலை எனக்குத் தெரிந்த படைப்பாளிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் என்று அணுகி அவர்களிடம் கட்டுரை பெற்று களஞ்சியத்தில் சேர்க்க உதவுவது. தங்கள் பெயர் வராததால் பலர் தயங்குகிறார்கள். உலகம் முழுவதும் வியாபித்திருக்கும் தன்னார்வத் தமிழர்கள், இந்தப் பணியில் முழுமூச்சுடன் வேலை செய்கிறார்கள். இந்த வருடம் முடிவதற்கிடையில் கட்டுரைகளின் எண்ணிக்கையை 20,000_க்கும் மேலாக உயர்த்தும் முயற்சியில் இருக்கிறார்கள்.

ரொறொன்ரோவில் எனக்குத் தெரிந்த ஓர் இளைஞரின் பெயர் நற்கீரன். பொறியியல் முதுகலை படிக்கிறார். நாளுக்கு இரண்டு மணித்தியாலம் ஒதுக்கி இதற்காக உழைக்கிறார். அவருக்கு இதனால் ஒரு சதம் லாபம் இல்லை. முழுக்க முழுக்க தமிழ்ச் சேவை என்பது இதுதான். உலகம் முழுக்க வாழும் கல்வியாளர்கள், படைப்பாளிகள், ஆராய்ச்சியாளர்கள் இதற்கு மனமுவந்து உதவவேண்டும். கட்டுரைகளை எழுதி 'தமிழ் விக்கிபீடியா' என்று தலைப்பிட்டு யாரும் natkeeran@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம். றீ

_ சந்திப்பு : கடற்கரய்
படங்கள் : அப்பாத்துரை

Wednesday, August 01, 2007

4 SQUARE கணக்கு

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv