Friday, September 29, 2006

வடிவேலு:அதிகம் பேசுவதில்லை..மவுன விரதம்

வடிவேலு காமடி - படம்: வெற்றிக் கொடி கட்டு

Wednesday, September 27, 2006

ஓரினச்சேர்க்கை...



ஓரினச் சேர்க்கைக்கு எதிரான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு ரத்து செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் செய்து வருகிறது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்துடன் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஒரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377 ஐ நீக்க வேண்டும் என பிரபல ஆங்கில எழுத்தாளர் விக்ரம் சேத், அருந்ததி ராய், பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் மற்றும் பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமர்தியா சென் ஆகியோர் குரல் கொடுத்திருந்தனர்.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் கூடுதல் செயலர் சுஜாதா ராவ், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகளுடன் இரண்டு முறை ஆலோசனை நடத்தியுள்ளார்.

இந்தியாவில் 24 லட்சம் ஓரினப் பிரியர்கள் இருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 8 சதவீதத்தினரை மட்டுமே அரசால் அடையாளம் காண முடிந்துள்ளது. தண்டனைச் சட்டத்திலிருந்து ஓரினச்சேர்க்கையை நீக்கி விட்டால் ஓரினப் பிரியர்களை அடையாளம் காண்பது எளிது. இதனால் எய்ட்ஸ் நோய் பரவலை நம்மால் கட்டுப்படுத்த முடியும் என்கிறார் சுஜாதா ராவ்.

நன்றி: தமிழ் முரசு

Sunday, September 24, 2006

பழம்பெரும் நடிகை பத்மினி மரணம்


சென்னை : நாட்டியப் பேரொளி என திரையுலக ரசிகர்களால் அழைக்கப்பட்ட பழம் பெரும் நடிகை பத்மினி மாரடைப்பால் நேற்று இரவு சென்னையில் காலமானார். இவரது மகன் ஆனந்த் அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

அமெரிக்காவில் இருந்த நடிகை பத்மினி, கடந்த மாதம் அங்கிருந்து சென்னைக்கு வந்தார். பின்னர் எம்.ஜி.ஆர்., நடித்த நாடோடி மன்னன் படம் மீண்டும் திரையிடப்பட்டதற்கான விழா சென்னையில் நடந்தது. இதில், பத்மினி கலந்து கொண்டார். நேற்று முன்தினம் சென்னையில் தமிழ் திரையுலம் சார்பில் முதல்வருக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் கலந்து கொண்டார்.


இந்நிலையில், சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் வசித்து வந்த பத்மினி நேற்று காலையில் மாரடைப்பு காரணமாக கல்யாணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மாலையில் அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு, அங்கு சிகிச்சைப் பலனின்றி இரவு 10.10 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது.

செய்தி: தினமலர்

Saturday, September 23, 2006

வேண்டும் வேண்டும் இட ஒதுக்கீடு !




மயானத்தில் பிணம் சுடவும்,
மாநகராட்சி குப்பை அள்ளுவதற்கும்,

பினவறையில் சவம் அறுக்கவும்,
தினை அறுத்து தூற்றுவதற்கும்,

ஊசி பாசி விற்பதற்கும்,
ஊரார் ஆடைகள் வெளுப்பதற்கும்,

ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கும்,
ஆடு மாடு மேய்த்திடவும்,

சேற்றிலிறங்கி நாற்று நடவும்,
மாற்றான் தோட்டம் காத்திடவும்,

நைந்த செருப்பை தைத்திடவும்,
நாவிதம் நயமுடன் செய்திடவும்,

நாமும் கேட்போமே இடஒதுக்கீடு !



இக்கவிதையை எழுதியது திரு.கோவி.கண்ணன். அவர்கள்.

இக்கவிதையை அவரின் சம்மத்ததுடன் இங்கே கொடுத்துள்ளேன்.

இக்கவித்தையை அவருடைய வலைதளத்திலேயே படிக்க

"இங்கே செல்லுங்க.."

Friday, September 22, 2006

வைரமுத்துவின் கவிதைகள் - ஒலி நாடா



இது ஒரு மீள் பதிவு...

அமெரிக்க தேசிய நூலக காங்கிரஸ்க்காக திரு.வைரமுத்து அவர்கள் தனது கவிதைகளை தானே வாசித்து ஒலி நாடாவாக பதிவு செய்துள்ளார். அவற்றில் சில வற்றை இங்கே கொடுத்துள்ளேன்..

கேட்டு மகிழுங்கள்..


"காதல்"


"மரங்கள்"


"மதுரை மாநகர்"


"நயாகரா நீர்வீழ்ச்சி"


"நாட்டுப் புற பாட்டு"


"சொல் அதிகாரம்"


"இலை"


"விலங்குகள்"


"சிறுமியும் தேவதையும்"


"உயில்"


"நிலையாமை"


"மானுடம்"


கவிஞர் வைரமுத்துவின் "தண்ணீர் தேசம்"

சில வரிகள்

// உன் உடம்பு என்பதே
முன்றில் இரண்டுபங்கு தண்ணீர்.
உன் அழகுதேகம் என்பது 65
சதம் தண்ணீர்.

மெய்யாகவா?

தமிழிடம்
பொய்சொல்வேனா?
விஞ்ஞானம் விளம்பக்கேள்...
வாழும் உயிர்களை
வடிவமைத்தது தண்ணீர்.
70 சதம் தண்ணீர் - யானை.
65 சதம் தண்ணீர் - மனிதன்.
என் அமுதமே. உன் உடம்பில்
ஓடுவது 7.2 லிட்டர் உப்புத்
தண்ணீர்.

நம்ப முடியவில்லை.

உண்மைக்கு உலகம்வைத்த
புனைபெயர் அதுதான். //


// வாழ்நாளில் 66,000 லிட்டர்
தண்ணீர் குடித்தான்.
ஆயுளில் முன்றில் ஒருபங்கு
தூங்கினான்.
நான்குகோடி முறை
இமைத்தான்.
நாலரை லட்சம் டன்
ரத்தத்தை இதயத்தால்
இறைக்கவைத்தான்.
35 ஆயிரம் கிலோ உணவு -
அதாவது எடையில் இந்திய
யானைகள் ஏழு தின்றான்.
மரித்துப் போனான்.

இதற்குத்தானா மனிதப்பிறவி //

Saturday, September 16, 2006

தந்தை பெரியார் பிறந்த தின நல்வாழ்த்துக்கள்

கி.பி 1879 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 தேதி தந்தை பெரியார் பிறந்தார்.


----------------------------------------------ராஜாஜியுடன் பெரியார்.------------------------




நான் மனிதனே! நான் சாதாரணமானவன், என் மனத்தில் பட்டதை எடுத்துச் சொல்லி யிருக்கிறேன். இதுதான் உறுதி. இதை நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்று சொல்லவில்லை. ஏற்கக்கூடிய கருத்துக்களை உங்கள் அறிவைக் கொண்டு நன்கு ஆய்ந்து ஏற்றுக்கொள்ளுங்கள், மற்றதைத் தள்ளிவிடுங்கள். - தந்தை பெரியார்

Friday, September 15, 2006

ஏலோ ஏலோ காதல் வந்தால்...





ஏலோ ஏலோ காதல் வந்தால் ஏலோ ஏலோ
காலை மாலை கனவுகள் வருமே ஏலோ ஏலோ

கண்ணும் கண்ணும் ஏலோ ஏலோ
கையும் கையும் ஏலோ
உரச உரச ஏலோ ஏலோ
மனசுக்கள்ள ஏலோ ஏலோ
உசுரக்குள்ள ஏக்கம் ஏலோ
மயக்கம் என்ன ஏலோ ஏலோ

காரணம்தான் காதல்னாளோ



ஏலோ ஏலோ காதல் வந்தால் ஏலோ ஏலோ
காலை மாலை கனவுகள் வருமே ஏலோ ஏலோ

காதல் தென்றல் வருடும் போது கண்கள் சிவந்தேனே
பச்சைநீரில் குளிக்கும் போது பற்றி எரிந்தேனே
காதல் தொல்லையாலே கடன்காரியானேன்
பதில் ஒன்று சொன்னால் பணக்காரியாவேன்
தொண்டை குளிக்குள்ளே சிக்கிக் கொண்ட முள்ளாய்

சொல்லத்தவித்தேன்



ஏலோ ஏலோ காதல் வந்தால் ஏலோ ஏலோ
காலை மாலை கனவுகள் வருமே ஏலோ ஏலோ

காற்றை மிதித்து வானத்திலேறி மேகம் உடைப்பேனே
நிலவை மெல்ல உருட்டி வந்து நிலத்தில் பதிப்பேனே
அதிகாலை பூவாய் அழகாக ஆனேன்
அலைபோல நான் தான் அடங்காமல் போனேன்
அச்சம் மடம் நானம் அத்தனையும் காணம்

உன்னை கண்டதால்



ஏலோ ஏலோ காதல் வந்தால் ஏலோ ஏலோ
காலை மாலை கனவுகள் வருமே ஏலோ ஏலோ

படம் : கொக்கி
இசை: தினா
பாடல்: கபிலன்
குரல்: Madhu Sree
இயக்கம்: பிரபு சாலமன்
வருடம்: 2006

"பாடலை இங்கே கேட்டு மகிழுங்கள்..."






தினா தொலைக்காட்சி தொடர்களில் இசை அமைக்க ஆரம்பித்து பிறகு திரைப் படங்களில் இசை அமைக்ககிறார்.

நல்ல நல்ல பாடல்களை தந்துள்ளார் இந்த வளர்ந்துவரும் இசை அமைப்பாளர்.

Thursday, September 14, 2006

எழுத்துப்பிழையா...கவலையைவிடுங்க...

Tuesday, September 12, 2006

டாக்டர் அம்பேத்கரின் சிந்தனைத் துளிகள்..






1. நான் தீண்டத்தகாத சமூகத்தில் பிறந்தேன். அந்தச் சமூகத்திற்காகவே சாவேன். என்னுடைய சமூகத்தின் நலனே வேறு எதைக் காட்டிலும் எனக்கு உயர்ந்ததாகும்.


2. ஜனநாயகம் அரசாங்கத்தைவிட மேலானது. அது, ஒன்றிணைந்து வாழ்வதை அடிப்படையாகக் கொண்டது. ஒருங்கிணைந்த வாழ்க்கையை மேற்கொள்ளும் மக்களே ஒரு சமூகத்தை உருவாக்குகின்றனர். இத்தகைய சமூக உறவு முறைகளில்தான் ஜனநாயகத்தின் வேர்கள் கண்டெடுக்கப்பட வேண்டும்.


3. ஜனநாயகம் என்பது, சமத்துவத்திற்கு மற்றொரு பெயர். நாடாளுமன்ற ஜனநாயகம் சுதந்திர தாகத்தை, விழைவைக் கிளர்த்தி விட்டு விட்டது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், சமத்துவத்திற்கு ஆதரவாக அது ஒரு போதும் தலையசைத்ததுகூட இல்லை. சமத்துவத்தின் முக்கியத்துவத்தை அது உணரத் தவறிவிட்டது. அதுமட்டுமல்ல, சுதந்திரத்திற்கும் சமத்துவத்திற்கும்கூட, அது எத்தகைய முயற்சியையும் எடுத்துக் கொள்ளவில்லை. இதன் விளைவு, சுதந்திரம் சமத்துவத்தை விழுங்கி விட்டது. அதுமட்டுமல்ல, பல்வேறு ஏற்றத் தாழ்வுகள் தோன்றவும் வழிவகுத்து விட்டது.


4. சமூகம்' இயற்கையாகவே தோன்றியதாக நாம் நினைக்கிறோம். சமூக ஒற்றுமையை முன்னெடுக்கும் தன்மைகள் பெருமைபடத்தக்கவையாகும். இது, சமூக நோக்குடனும், தொண்டு மனப்பான்மையுடனும், பொது வாழ்வில் நேர்மையுடனும், ஒருவருக்கொருவர் இரக்கத்துடனும், ஒத்துழைப்புடனும் வாழும் தன்மைகளைக் கொண்டதாகும்.


5. வகுப்பு சித்தாந்தம், வகுப்பு நலன்கள், வகுப்புப் பிரச்சினைகள், வகுப்பு மோதல்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் இயக்கம் தனக்கு சாவுமணி அடிக்கும் என்பதை ஆதிக்க வகுப்பு நன்கு உணர்ந்துள்ளது. அடிமை வகுப்புகளை திசைதிருப்புவதற்கும், அவற்றை ஏமாற்றுவதற்கும் மிகச் சிறந்த வழி தேசிய உணர்வையும், தேச ஒற்றுமையையும் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை ஆதிக்க வகுப்பு நன்கு அறியும்.


6. இந்து சமுதாயத்தில் அடிமட்டத்திலுள்ளவர்கள் கல்வி கற்பது கடுமையான குற்றமாக கருதப்பட்டது. இதை மீறி கல்வி கற்பவர்கள் காட்டுமிராண்டித்தனமான, மனிதத் தன்மையற்ற, குரூரமான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்: அவர்களது நாக்குகள் துண்டிக்கப்பட்டன; அவர்களது செவிகளில் காய்ச்சிய ஈயம் ஊற்றப்பட்டது


7. கல்வி சாதியை ஒழித்து விடுமா? இதற்குரிய பதில் ‘ஆம்'; அதே நேரத்தில் ‘இல்லை'! இன்று வழங்கப்படும் கல்வியால், சாதியை ஒன்றும் செய்து விட முடியாது. அது எப்போதும் போலவே நிலைப் பெற்றிருக்கும். மேல் சாதியில் இருக்கும் பெரும்பான்மையினர் மெத்தப் படித்திருக்கிறார்கள். இருப்பினும், ஒருவர்கூட, தான் சாதிக்கு எதிராக இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்லை. உண்மையில்,படித்த நபர், கல்வி கற்காமல் இருப்பதைவிட, அவர் கல்வி கற்ற பிறகு சாதி அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே அதிகம் விரும்புகிறார். ஏனெனில், சாதி அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ள, கல்வி கூடுதல் நலனை அவருக்கு அளிக்கிறது. இதன் மூலம் அவர் பெரிய பதவிகளைப் பெறும் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது, கல்வி சாதியை ஒழிக்க உதவிகரமாக இல்லை.



8. தற்பொழுதுள்ள கொள்கையின் குறைபாடு என்னவெனில், கல்வி பரவலாக அளிக்கப்படுகிறது; ஆனால், இந்திய சமூகத்தில் எந்தப் பிரிவினருக்கு கல்வி அளிக்கப்பட வேண்டுமோ அவர்களுக்கு கல்வி வழங்கப்படவில்லை. சாதி அமைப்பு முறையை நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்ள விரும்பும் இந்திய சமூகத்தின் சுயநலவாதிகளுக்கு கல்வி அளிக்கப்பட்டால், சாதி அமைப்பு பலப்படுத்தப்படும். இதற்கு மாறாக, இந்திய சமூகத்தின் சாதி அமைப்பு முறையை நிர்மூலமாக்க நினைக்கும் அடித்தட்டு மக்களுக்கு கல்வி அளிக்கப்பட்டால், சாதி அமைப்பு கண்டிப்பாக ஒழிந்துவிடும்.



9. இந்திய மக்கள் கொண்டாட்டங்களை அதிகம் விரும்பினாலும், புத்தர் பிறந்த நாளை அவர்கள் இதே உணர்வோடு ஏன் கொண்டாடுவதில்லை. புத்தருடைய காலத்தில்,1. வேதங்கள் புனிதத் தன்மையுடையதாகவும், என்றென்றும் மாறாததாகவும் கருதப்பட்டது 2. யாகம் 3. சதுர்வர்ண தர்மம் (நான்கு வர்ணங்களை அடிப்படையாகக் கொண்ட வர்ணாசிரம தர்மம்). வேதத்தில் எழுதப்பட்டுள்ள அனைத்தும் அது அறிவுக்கு ஏற்புடையதா இல்லையா என்பதெல்லாம் பொருட்டல்ல அது தவறே இல்லாதது. வேதங்கள் புனிதமானவை என்பதை புத்தர் ஏற்க மறுத்து, அதை முதல் விலங்காகக் கருதினார். வேதங்களை ஏற்பதற்குப் பதில், அதை மறுத்து, அறிவை அடிப்படையாகக் கொண்ட உண்மையை ஒப்புக் கொள்வதே புத்தரின் நிலைப்பாடாக இருந்தது.



10. உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தற்கால சமூக, அரசாங்க ஒழுங்கமைப்பு குறித்த அடிப்படையான செயல்முறை ஆவணங்களை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.



Sunday, September 10, 2006

சூர்யா ஜோதிகா திருமணம் சென்னையில் நடந்தது

நடிகர் சூர்யா நடிகை ஜோதிகாவுக்கு சென்னையில் இன்று காலை திருமணம் நடந்தது. ( 11-09-06). திருமணத்திற்கு முதல்வர் கருணாநிதி வந்திருந்தார். உறவினர்களும் நடிகர் நடிகைகளும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்






Saturday, September 09, 2006

FedEX Cast Away - சும்மா பொழுது போக்க..

FedEX Cast Away

Wednesday, September 06, 2006

சில்லுனு ஒரு காதல்..







சூர்யா, ஜோதிகா, பூமிகா நடிப்பில் நாளை வெளியாகிறது..

இயக்கம்: கிருஸ்னா

தயாரிப்பு: K.E.ஞானவேல்

இசை: A.R.ரகுமான்

சரி வந்ததும் வந்தீக கிழே நகைச்சுவைப் படங்கள் இருக்கிறது பார்த்து இரசித்துவிட்டு போங்க..











Monday, September 04, 2006

முதலைகள் "ஸ்டீவ் இர்வின்" மரனம்



இவரை பல சேனல்களில் முதலைகளுடன் கண்டு களித்திருப்பீர்கள். அவர் இன்று(04-09-06) கடலில் விச மீன் தாக்கி உயிரிழந்தார்..

பிறந்த நாள்: 22-Feb-1962
பிறந்த இடம்: விக்டொரியா, ஆஸ்திரேலியா

இவர் பல ஊடகங்களிக் வந்துள்ளார். நான் இரசிக்கும் சில நிகழ்ச்சிகளில் இவரதும் ஒன்று..

இவரைப் பற்றி அறிய " இங்கே " செல்லுங்கள்..




இரண்டு இலட்சத்திற்கு 6000

Free Image Hosting at www.ImageShack.us

மத்திய அரசு அதிகாரி பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 2லட்சம் பணியிடங்கள் ஒதுக்கப்பட்ட போதிலும் வெறும் 6000 பேர் தான் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிற்படுத்தப்பட்டோரை புறக்கணிக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்று மண்டல் கமிஷன் பரிந்துரை செய்தது. இதை ஏற்று 1993ம் ஆண்டு முதல் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. மத்திய அரசில் உள்ள மொத்த பதவிகளில் 30லட்சத்து 58ஆயிரத்து 506 பணியிடங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கு என நிர்ணயிக்கப்பட்டன.

ஏ பிரிவு அதிகாரி பணியிடங்களில் 80ஆயிரத்து 11 பணியிடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் இடஒதுக்கீட்டை அமல்படுத்தி 13 ஆண்டுகள் ஆன பிறகு கூட அத்தனை பணியிடங்களும் நிரப்பப்படவில்லை. ஏ பிரிவு அதிகாரிகளாக 3090 பேர் தான் இப்போது பணிபுரிகின்றனர்.

இதே போல பி பிரிவு அதிகாரிகளாக 1லட்சத்து 39ஆயிரத்து 409 பணியிடங்கள் வழங்கிய போதிலும் 3123 பேர் தான் வேலை பார்க்கின்றனர்.

இதே போல சி பிரிவில் 20லட்சத்து 49ஆயிரத்து 970 பணியிடங்கள் ஒதுக்கியிருந்தாலும் அதில் பணிபுரிவது 1லட்சத்து 6 ஆயிரத்து 309 தான்.

டி பிரிவில் 8லட்சத்து 2 ஆயிரத்து 116 பணியிடங்களில் 26,158 பேர் தான் பணிபுரிகின்றனர்.

4 பிரிவுகளிலும் சேர்ந்து ஒரு லட்சத்து 38ஆயிரத்து 670 பிற்படுத்தப்பட்டோர்கள் தான் உள்ளனர்.

அதாவது பிற்படுத்தப்பட்டோருக்கு என 27 சதவீதம் ஒதுக்கப்பட்டும் வெறும் 3.9 சதவீதம் பேர் தான் பணிஅமர்த்தப்பட்டுள்ளனர்.

நன்றி: தமிழ் முரசு
Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv