Sunday, September 30, 2007

அக்டோபர்-PIT புகைப் பட போட்டிக்காக..!

இந்த புகைப் படங்கள் அனைத்தும் கடந்த சில தினங்களுக்கு முன் சிகாகோ இயற்கை அருகாட்சியகத்தில் உள்ள வண்ணத்துப்பூச்சிகளின் சொர்க்கம் எனும் காட்சியகத்தில் பகல் நேர வெளிச்சத்தில் எடுக்கப்பட்டது.

இந்த "இனையதளத்திற்கு" சென்றால் அந்த அருகாட்சியகத்தைப் பற்றி அறிந்துகொள்ளலாம்.

===================================================================================================================================================================================================================================================================================================================================================================

Friday, September 28, 2007

வடவழி - வடவள்ளி - கரிகாற் சோழன்

இன்று குமுதம் வலைதளத்தை பார்வையிடும் போது வைரமுத்து பதில்களைப் பார்த்தேன். அதில் ஊர் பெயர்கள் எவ்வாறு மறுவுகிறது என்பதைப் பற்றி விளக்கியிருந்தார். உதாரணத்திற்கு

சிராப்பள்ளி’ என்பது ஊரின் பழம்பெயர். இடைக்காலத்தில் ‘‘திரு’’ வென்ற அடைமொழி இணைந்து ‘திரு சிராப்பள்ளி’ என்றாகி ‘திருச்சிராப்பள்ளி’ என்று வளர்ந்து, ‘திருஸ்னாப்பள்ளி’ என்று ரயில்வே மொழியாகி ‘‘திருச்சி’’ என்று சுருங்கி ‘‘ட்ரிச்சி’’ என்று ஆகிவிட்டது என குறிப்பிட்டிருந்தார்.


இதைப் படித்தவுடன் எனக்கு எங்கள் ஊர் பெயர் எவ்வாறு மறுவுயது என்பதை இங்கே பகிர வேண்டும் என்ற எண்ணம் வந்தது. அதன் விளைவே இதன் இடுக்கை.

எங்கள் ஊர் வடவள்ளி, கோவை மாவட்டத்தில் மருதமலை செல்லும் வழியில் உள்ளது.

உண்மையில் இதன் பெயர் வடவழி. அதாவது வடக்கு வழி. காலப் போக்கில் இது வடவள்ளி ஆகிவிட்டது. இன்னும் பழைய பத்திரங்கள் ஏடுகளில் இது வடவழி என்றே வழங்கப்படுகிறது.

ஆனால் அது மறுவி வடவள்ளி என மாறிவிட்டது.

சரி, அது என்ன வடவழி.

கோவையில் பேருர் எனும் ஊரில் சிவன் கோவில் உள்ளது. பட்டிஸ்வரன் எனும் பேரில் வணங்கப்பட்டு வருகிறது. இந்த கோவில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கரிகாற் சோழனால் கட்டப்பட்டது. அதைத் தொடந்து கோசல மன்னர்களாலும் விஜய நகரப் பேரரசினாலும் அந்த கோவில் முழுமை பெற்றது. ( அந்த தலத்தின் தல புராணம் எனக்கு சரியாக தெரியாது. தெரிந்தவர்கள் பகிர்ந்துகொள்ளுங்கள்.)அந்த காலகட்டத்தில் பேருர் மற்றும் அதன் சுற்றிய பகுதிகள் மிகப் பெரிய வனம். இதன் குறிப்பு தேவாரப்பாடல்களிலும் உள்ளது.

இந்த கோவில் கட்டுவதற்கு தேவையான கற்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன. அதாவது அந்த ஊரிலிருந்து வடக்குப் பகுதியில் கணவாய் (கணுவாய்) எனும் மலைப் பகுதியிலிருந்து தான் கற்களைக் கொண்டு வரமுடியும். அந்த மலையை அடைய வடவழியாகத்தான் செல்ல வேண்டும். அந்த மலையிலிருந்து கொண்டுவந்த கற்களை தரம் பிரித்து எடுத்துச் செல்ல சிற்பிகள் அமைத்து தங்கிய ஊர்தான் வடவழி.

இது பேருர் வரலாற்று குறிப்பில் இருப்பதாக கேள்வி.
இந்த செய்தி முழுக்க முழுக்க எனது தாத்தா என்னிடம் பகிர்ந்தது. இதன் நம்பகத்தன்மை பற்றி எனக்கு தெரியாது. அதற்கான முயற்சிகளை நான் இதுவரை செய்யவில்லை.

இந்த செய்திக்கு மாற்று கருத்து இருப்பின் வரவேற்கிறேன்.

நன்றி

இது சம்பந்தமான சுட்டிகள்:

"வடவள்ளி - ஆங்கில விக்கிபீடியா"

"பேருர் பற்றிய செய்தி - 1"

"பேருர் பற்றிய செய்தி - 2"

Wednesday, September 26, 2007

வாவ்! கலக்கும் தமிழகம்!!

தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான பாடநூல்களை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

பள்ளிப் பாடநூல்களை 1970 முதல் தமிழ்நாட்டுப் பாடநூல் கழகம் வெளியிட்டு வருகிறது. அரசு மற்றும் மானியம் பெறும் பள்ளிகளுக்கு மாநில மொழி பாடத் திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு இலவச பாட நூல்களை வழங்குகிறது.ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள பாடநூல்களை தற்போது இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழகம் மட்டுமின்றி வெளிநாட்டினரும் இந்த பாடத்திட்டங்களை பயன்படுத்த "டவுன்லோடு' செய்து கொள்ள முடியும்.

அரசுப் பொது தேர்வுகளுக்கான கடந்த மூன்றாண்டுக்கான வினாத்தாள்கள் இடம் பெற்றுள்ளன.இதன் மூலம் பாடத் திட்டங்களை ஆய்வு செய்யவும், இணைய தளம் வழியாக மற்றவர்களின் கருத்துகளை பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.

நன்றி: தினமலர்.


"இங்கே (www.textbooksonline.tn.nic.in)" சென்று அனைத்து பாட நூல்களையும் இலவசமாக டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

Monday, September 24, 2007

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!நன்றி: தினமலர்

Sunday, September 23, 2007

எங்க வீட்டு அருகே உள்ள பூங்கா! - படங்கள்.


Friday, September 21, 2007

கருணாநிதியின் தலையையும் நாக்கையும் வெட்டிக் கொண்டுவருபவர்களுக்கு தங்கம் பரிசு

விஹெச்பி தலைவர் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் ராம் விலாஸ் வேதாந்தி, கருணாநிதியின் தலையையும் நாக்கையும் வெட்டிக் கொண்டுவருபவர்களுக்கு தங்கம் பரிசளிக்கபடும் என்றும் அதை அயோத்தி துறவியின் கரங்களால் வழக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.மேலும் செய்திக்கு செல்லவும்: "WWW.REDIFF.COM".

Thursday, September 20, 2007

இதெல்லாம் ரொம்ப அநியாயம் :)

Wednesday, September 19, 2007

ரஜினி வாங்கிய இரயில் - வீடியோ

வேலைக்கு நடுவே கொஞ்சம் ஆசுவாசப்பட You Tube மேயும் போது இந்த வீடியோ கண்ணில் பட்டது. ஏற்கனவே இந்த வீடியோவை நீங்க பார்த்திருக்கலாம். எனினும் இன்னொரு முறை பாருங்க..

ஆமா, உண்மையிலேயே ரஜினி இரயில் வாங்கியிருக்காறா?

Tuesday, September 18, 2007

உங்கள் சந்ததியும் என் சந்ததியும் என்னவாகும்??

வழக்கம் போல் இதுவும் இமெயிலில் வந்ததுதான். ஆனால் கொஞ்சம் அதிர வைக்கிறது.

இது உண்மையில் கலாம் அவர்களால் உருவாக்கப்பட்டதா என்பது தெரியாது. ஆனால் இது போன்று நடக்க வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.இது போன்று நம் பூமி அழிந்து போக பல காரணங்கள் இருந்தாலும் பசுமைக்குடில் விளைவும் ஒரு காரணமாக அமையும் என்பது என் புரிதல். இது சம்பந்தமாக "என் பதிவு.".

Friday, September 14, 2007

ரஜினியிடம் இப்படி ஒரு கேள்விரஜினியிடம் இப்படி ஒரு லொள்ளு கேள்வியை கேட்டிருப்பது "தமிழ்சினிமா.காம்... ".

JUST FOR FUN... TAKE IT EASY...

SHEDD AQUARIUM, சிகாகோ - படங்கள்

SHEDD AQUARIUM, சிகாகோ, அமெரிக்காவில் உள்ளது. இது John G. Shedd, (retired president of Marshall Field & Company)என்பவரால் மே, 30, 1930ல் உருவாக்கப்பட்டது.
இது மிச்சிகன் ஏரியின் கரையில் அமைந்துள்ளது.


சில குறிப்புகள்.

ஒரு வருடத்திற்கு வரும் பார்வையாளர்கள் : சுமார் 2 மில்லயன்கள்

பரப்பு : 422,000 சதுர அடி.

உயிரினங்கள்: சுமார் 22,000 கடல் வாழ் உயிரினங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டிருக்கிறது.

காட்சி: டால்பின் காட்சி, ஷார்க் (sharks)காட்சி, அமேசான் பகுதி (Anacondas and Piranhas)

நான் இது வரை ஒரு முறை தான் சென்றுள்ளேன். நுழைவு கட்டணம் அப்படி ஒன்றும் அதிகம் இல்லை.

உள்ளே சென்றவுடன் ஒரு புதிய உலகில் உள்ளது போன்ற உணர்வு ஏற்படும். ஆனால் முழுவதும் ஒரே நாளில் பார்க்க முடியாது. (நீங்கள் பி.டி.உஷா போன்று வேகமாக ஓடினால் மட்டுமே முடியும்).

யாராவது இந்தப் பக்கம் வந்தீங்கன்னா, ஒரு நடை போய் பார்த்துட்டு போங்க.. கொடுத்த காசுக்கும் செலவு செய்த நேரமும் நிச்சயம் வீனாகாது..!==========================================================


=============================================================


=============================================================


=============================================================


=============================================================


=============================================================


=============================================================


=============================================================


=============================================================


இந்த மீன் அருங்காட்சியகம் பற்றி அறிய "இங்கே செல்லுங்க.. ".

Wednesday, September 12, 2007

"அமெரிக்காவில் மகன்" - நடிகர் சிவக்குமார் வாசித்த கவிதை -வீடியோ

நடிகர் சிவக்குமார் தனது "அகரம்" அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பேசிய போது தனது நண்பர் ஒருவர் எழுதிய கவிதையை வாசித்தார். அந்த கவிதையை இங்கே தருகிறேன்.
அந்த நிகழ்ச்சியின் வீடியோவைக் காண "இங்கே செல்லுங்க.. ". அங்கே "Surya's Gesture" என்ற வீடியோவைக் கிளிக் செய்யுங்க..


கவிதை கிழே..

=======================================================================

மகனே நீ பிறந்த அன்று
தோட்டத்தில் நட்டு வைத்தேன்
ஒரு தென்னங்கன்று

என் வியர்வையில்
நீ வளர்ந்தாய்
நான் வார்த்த தண்ணீரில்
தென்னை வளர்ந்தது.

எங்கோ இருந்து
நீ ஈட்டும் பணம்
உனக்கு இன்பம் தருகிறது

இங்கே இருக்கும் தென்னை
எனக்கு சுவை நீரில் சுகம் தரும்
பழம் தருகிறது

ஒரு நாள் இமெயிலில்
நீ மூழ்கியிருக்கும் போது
என்னை, ஈ மொய்த்த
செய்தி வந்து சேரும்

இறுதிச் சடங்கில்
நீ இல்லாது போனாலும்
தென்னை ஓலை
கடைசி மஞ்சமாகும்

=========================================================================

இதெல்லாம் உண்மையா என தெரியாது!

கீழே சில படங்களை இணைத்துள்ளேன். இவை அனனத்தும் எனக்கு இமெயிலில் வந்தவை. ஆனால் அதன் நம்பகத்தன்மை பற்றி எனக்கு தெரியாது. இருப்பினும் பகிர்தலில் தவறில்லை என தோன்றியதால் உங்கள் பார்வைக்கு..Tuesday, September 11, 2007

இவர் தான் உண்மையான தலைவர்தொண்டமுத்தூர், செப்.11- : கோவை மாவட்டம், தென்னம்மநல்லூர் ஊராட்சியின் தலைவர் சிவசாமி. தி.மு.க.வைச் சேர்ந்தவர். பி.எஸ்.சி. பி.எட் படித்தவர். ஞாயிறுதோறும் இவர் தனது நண்பர்களுடன் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிக ளில் உள்ள பொதுக்கழிப்பிடங்களைச் சுத்தம் செய்யும் பணியை மேற் கொண்டு வருகின்றனர்.
கழிப்பிடம் செல்லும் பாதையில் உள்ள முட்புதர்களை அகற்றுதல், வெள்ளை அடித்தல், சுத்தம், சுகாதாரம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.தென்னம்மநல்லூர் காந்தி காலனியிலுள்ள பொதுக்கழிப்பிடத்தைச் சுற்றியுள்ள புல்செடிகளை பொதுமக்களுடன் சேர்ந்து அகற்றுகிறார் ஊராட்சி தலைவர் சிவசாமி.
மூன்று வாரங்களாக ஞாயிறுதோறும் கழிப்பிடங்களைச் சுத்தம் செ ய்யும் பணியை தொடர்ந்து வருகிறார். ஊராட்சி பகுதியில் தனி நபர் கழிப்பிடம் அமைக்க பொது மக்களை வலியுறுத்துகிறார்.

ஊராட்சி தலைவரே கழிப்பிடத்தைச் சுத்தம் செய்வது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும். சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடம் மேலோங்கும். ஆண்களே சுத்தம் செய்வதால் கழிப்பிடத்தை பெண்கள் முறையாக பயன்படுத்துவர். கழிப்பிடம் மட்டுமின்றி ரோடு, சாக்கடை போன்றவையும் சுத்தம் செய்யும் பணியை யும் நானே முன்னின்று மேற்கொள்வேன். அனைத்து தரப்பு மக்களுக்கும் சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும், என்று ஊராட்சி தலைவர் சிவசாமி நம்பிக்கை தெரிவிக்கிறார்.


- நன்றி - தமிழ் முரசு, நாள் : 11-09-2007.

Sunday, September 09, 2007

திராவிட நெடுஞ்சாலையா?

ஆனந்த விகடனில் ஒரு கேலி துணுக்கு வந்துள்ளதாக படித்தேன்.

அந்த கேலி எதைப் பற்றி என்றால், தேசிய நெடுஞ்சாலை என்பதை தமிழ் நாட்டில் திராவிட நெடுஞ்சாலை என மாற்றிக்கொள்ளலாம் என கேலி செய்யப்பட்டுள்ளது.

ஆதிக்க சக்திகள் தனது விச நாக்கை அவ்வப்போது வெளி நீட்டும். இதுவும் அது போன்று தான்.

இதில் என்ன கொடுமை என்றால், படிப்பவன் திராவிடன் (தமிழன்). ஆனால் அவன் அடையாளங்களை எப்படி எல்லாம் அழிக்கலாம் என்று தனது குருர எண்ணங்களை வெளிப்படுத்தவே இது போன்ற ஆதிக்க சக்திகளின் ஊடகங்கள் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றன.

பெரியார், அண்ணா போன்ற பெருந்தலைவர்கள் போராடி ஒரு இன மக்களை விழிப்படையச் செய்தது இந்த திராவிடன் என்ற உணர்வை வைத்துதான். அந்த உணர்வின் மூலம்தான் நாம் ஆதிக்க சக்திகளுக்கு எதிராக ஒன்று கூடட முடிந்தது என்றால் மிகை ஆகாது.


இன்னும் அந்த போராட்டங்கள் மீதம் இருக்கிறது என்பதை காட்ட இங்கே ஏராளமான உதாரணங்கள் உள்ளது. அதை இங்கே பல பதிவுகளில் படித்திருப்பீர்கள். அந்த வகை சார்ந்தது தான் இந்த இடுக்கையும்.

இப்படி ஒரு கேலி துணுக்கை வெளியிட்டு தனது மன அழுக்கை வெளிக்காட்டிக் கொண்ட ஆனந்த விகடன் வார இதழக்கு எனது எதிர்ப்புகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

சரி, இந்த இடுக்கையில் இன்னுமொரு முக்கியமான விடயம், கொஞ்சம் துறை சார்ந்த கருத்து, அது இங்கே பகிர்ந்துகொள்வது அவசியம் என கருதுவதால் இங்கே கொடுக்கிறேன்.

முதலில், இந்தியாவில் சாலைகள் எப்படி வகைப்படுத்தப்படுகிறது என பார்ப்போம்.

1. அதி விரைவு சாலைகள் - மொத்தம் 200 கி.மீ.
2. தேசிய நெடுஞ்சாலைகள் - மொத்தம் 66,590 கி.மீ.
3. மாநில நெடுஞ்சாலைகள் - மொத்தம் 1,31,899 கி.மீ.
4. முக்கிய மாவட்ட சாலைகள் - மொத்தம் 4,67,763 கி.மீ.
5. கிராம மற்றும் இதர சாலைகள் - மொத்தம் 26,50,000 கி.மீ.

சரி, இதை நிறுவகிக்கவும், பராமரிக்கவும் தனித்தனி துறைகள் உள்ளன. எவ்வாறு என்றால், அதி விரைவு சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை, தேசிய நெடுஞ்சாலை மற்றும் மேம்பாட்டு துறை கவனிக்கும். மற்ற சாலைகளை அந்த அந்த மாநில நெடுஞ்சாலைத்துறை கவனிக்கும். (இங்கே நெஞ்சாலைத்துறை ஊழியர்கள் போராட்டும் கூட மாநில நெடுஞ்சாலைத்துறையை எதிர்த்துதான். இது ஒரு சிறு குறிப்பு.)

ஆனால், எல்லா சாலைகளிலும் மாநில மற்றும் மத்திய அரசின் பங்களிப்பு இருக்கும். அவ்வாறு தான் நிதி ஒதுக்கீடுகள் இருக்கும். இந்தியாவில் சாலை ஆதாரங்களுக்கு நாம் பெருமளவு உலக வங்கியைத்தான் சார்ந்திருக்கிறோம். அதற்கு பெருமளவு வட்டியும் கட்டிக் கொண்டுதான் இருக்கிறோம்.

இந்த சாலைகள் நிர்மாணிக்கும் போது, அதில் எல்லா பிராதான சாலைகளிலும் இந்திய ராணுவ டாங்கிகள் வந்து செல்லும் அளவுக்கு அமைக்க வேண்டும். அதாவது அந்த டாங்கிகளை தாங்கும் சுமை சக்தி சாலைகள் மற்றும் அதில் வரும் மேபாலங்களுக்கு இருக்க வேண்டும்.

முக்கிய மேபாலங்கள் மற்றும் சாலைகளின் வரைபடங்கள் மற்றும் விபரங்கள் இராணுவத்திற்கு அனுப்ப வேண்டியது ஒவ்வொரு நெடுஞ்சாலைத்துறையின் கடமை. சில சமயம் அதை இராணுவம் நேரில் சென்று சோத்திக்கலாம். ஆனால் அது போல் நடப்பதில்லை.

ஆக, இது போன்று நெடுஞ்சாலைகளை வகைப்படுத்துவது அந்த துறை சார்ந்த செயலே. அதாவது அதை நிறுவகிக்கவும் பாரமரிக்கவும் வகைப்படுத்தும் ஒரு செயல்.

இதில் தேசிய என்பது தேசியம் என பொருளாகாது.

இவ்வளவு காலம் பத்திரிக்கை துறையில் இருக்கும் ஆ.வி.க்கு இது தெரியாமலா இருந்திருக்கும்?

அல்லது, நம் தோழர்களை சீண்டிப் பார்க்கும் எண்ணமா?


நன்றி: National Highways Authority of India.

Saturday, September 08, 2007

கிடு கிடு கிழவர்கள் - வென்றது இங்கிலாந்து.
சனிக்கிழமை கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம் என எதையும் படிக்காமல் வெறும் டிவி மட்டும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

கொஞ்சம் போர் அடித்தது. சரி, செய்தி படிக்கலாம் என தினமலர் வெப்சைட் போனால்.. வழக்கம் போல் கிழவர்களின் கிடு கிடு ஆட்டத்தால் வென்று இருக்கிறது இங்கிலாந்து. கேப்டன் கிழவன் டிராவிட் டக் அடித்து வெளியேறியுள்ளார். என்னப்பா அங்கே குளிர் அதிகமாக.. கிழவனால் மூன்று பந்துகளுக்கு மேல் நிற்க முடியவில்லையே..


ஒட்டு மொத்தத்தில் இந்த கிழவர்கள் விளம்பரங்களில் சம்பாதிப்பதற்காக நம் நாடு அவமானப்பட வேண்டியுள்ளது. அதனால் தான் டீமை விட்டு விலகாமல் அட்டை போல் ஒட்டிக் கொன்டு நம் மானம் எனும் ரத்தத்தை உறிஞ்சுகிறார்கள்.. இந்த கிழவர்கள்.

தொடரை வென்ற எதிரணிக்கு எனது வாழ்த்துக்கள்..


(கிழவர்கள் என்ற பதம் வயதான நல் இதயங்களை காயப்படுத்த அல்ல.. அவ்வாறு யாரேனும் உணர்ந்தால் அதற்காக எனது வருத்தங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.)

Tuesday, September 04, 2007

இடது தான் நல்லது.. அதனால் இடதுக்கு மாறுங்க..

நீங்கள் செல் போன் அதிகம் பயன் படுத்துபவரா? அப்படி என்றால் இந்த செய்தியை கொஞ்சம் படியுங்க.அதாவது நீங்கள் செல் போன் பயன்படுத்தும் போது எப்போதும் இடது காதில் வைத்து பேசுங்கள். இதன் மூலம் உங்கள் மூளைக்கு பாதிப்ப குறைகிறது.

இது இமெயிலில் எனக்கு வந்தது.. உங்களுக்கும் உபயோகமாக இருக்குமே என்பதால் இங்கே பார்வைக்கு..

Monday, September 03, 2007

ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறீர்கள்!

நம்மில் பல பேருக்கு இந்த உணவுச் சங்கிலி விடயம் புரிய மறுக்கிறது. இது உண்மையில் சில சமயம் எரிச்சலைத்தான் வரவைக்கிறது.

கிழே இரு செய்திகளைப் பாருங்கள்.

1. குரங்கு குட்டியை விழுங்க நினைத்த மலைப்பாம்புடன் சண்டையிட்ட தாய் குரங்கு. இது உணவுச் சங்கிலியில் நிகழும் சாதரண விடயம். இதில் மனிதன் என்ற சமூக விலங்கு ஒன்று குறுக்கே புகுந்து ஏதோ குரங்கை காப்பாற்றுவதாக எண்ணி மலைப்பாம்பை கோடாரியால் கொல்ல அதன் வாயில் இருந்த தாய் குரங்கும் இறந்துவிட்டது. குட்டி காப்பாற்றப்பட்டது.


நன்றி: தினகரன் - நாள்: 04-09- 2007
------------------------------


2. காட்டில் வாழும் பாம்பு ஒன்று காட்டு எலியை இரையாக்கும் படம். இதுவும் ஒரு சாதரண நிகழ்வுதான். ஆனால் இதைப் படிக்கும் மக்களின் எண்ணம் என்னவாக இருக்கும் என்ற சிந்தனை.


நீலகிரி மாவட்டம் மஞ்சூரில் நேற்று கட்டுவிரியன் பாம்பிடம் ஒரு காட்டெலி சிக்கி உயிருக்கு போராடியது. அந்த உயிர்த்துடிப்புக் காட்சிகள்: எலியை பாய்ந்து பிடிக்கிறது பாம்பு. வாலால் சுருட்டி எலியை அமுக்குகிறது. அடுத்த படங்களில் உயிருக்கு போராடி, துடிக்கிறது எலி.

நன்றி: தினகரன் - நாள்: 04-09- 2007
-------------------------------------

இந்த செய்தியையும் கொஞ்சம் படியுங்க..முதுமலை யானை முகாம் அருகே உணவு கிடைக்காமல் இறந்து கிடந்த 2 வயது புலிக்குட்டி.

நன்றி: தமிழ் முரசு - நாள்: 01-09- 2007
-----------------------------

பாம்பு பாவம் பார்த்தால் தான் சாக வேண்டியதுதான்.

மேற்கண்ட விடயத்தில் குறிப்பாக குரங்கு பற்றிய செய்தியில் ஏன் அந்த மனிதன் அவ்வாறு நடந்துகொண்டான். இரக்கம் ஒரு காரணம். அப்ப, அந்த பாம்பின் மீது யார் இரக்கம் காண்பது. மற்றுமொரு பார்வை என்னவென்றால், பாவம் புண்ணியம் என்ற மனிதனின் சிந்தனை.

இந்த பாவம் புண்ணியம் என்பது நமக்குள் அதாவது மனிதனிக்குள் சுமுகமாக வாழ்த்தான் என்பது என் எண்ணம்.

ஆனால் இதை வைத்தே கடவுள் என்ற பய உணர்வையும் சேர்த்தி மனிதனுக்குள் வைத்துவிட்டார்காள். புரிந்துகொண்டால் எல்லோருக்கும் நலம்.

முடிந்தால் இந்த "வீடியோவைப் பாருங்கள்.."

பி.கு. நான் ஏதோ இரக்க குனம் அற்றவன் என்ற முடிவுக்கு வந்துவிடாதீர்கள். உணவுச் சங்கிலி விடயத்தில் அது பொருந்தாது என்பது என் எண்ணம்.
Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv