Sunday, April 29, 2007

தளைதட்டாத வெண்பா - காதல் : வைரமுத்து




மல்லிகா, துறையூர்: கேள்வி: - மண்ணுக்குள் போனாலும் மல்லிகா எனது கண்ணுக்குள் நீ வாழ்வாய் கண்ணே என்று எனக்கு வெண்பா எழுதியிருக்கிறான் என் அண்ணனின் நண்பன். எனக்குக் காதல் வந்துவிடும்போல் இருக்கிறதே!




வைரமுத்துவின் பதில்:

தங்கை மல்லிகா! மொழி பார்த்தோ, முகம் பார்த்தோ வந்துவிடக் கூடாது காதல், நேசித்தல்_ புரிதல்_ பொருந்துதல்_ மதித்தல் _ சத்தியம்_ சாத்தியம் எல்லாம் கூடிய கலவையே நல்ல காதல். இன்னொன்று_ உன் நண்பன் எழுதிய வெண்பா தளைதட்டுகிறது.

மல்லிகா என்பது கூவிளம் விளமுன் நேர்வர வேண்டும் வெண்பாவுக்கு; இங்கே நிரை வந்திருக்கிறது. என என்ற புளிமாச்சீருக்குப் பிறகு நிரை வரவேண்டும். இங்கே நேர் வந்திருக்கிறது. இன்னொன்று கண்ணே என்று முடியக்கூடாது வெண்பா. நாள்_ மலர்_ காசு_ பிறப்பு என்ற வாய்பாடுகளுள் ஒன்றால்தான் அது முடிய வேண்டும். ஆகவே மண்ணுக்குள் போனாலும் மல்லிகா என்னிரண்டு கண்ணுக்குள் நீ வாழ்வாய் காண் என்றிருந்தால் அது தளைதட்டாத வெண்பா. வெண்பா தளைதட்டினால் திருத்திக் கொள்ளலாம். காதல் தளை தட்டாமல் பார்த்துக்கொள்.



நன்றி: குமுதம்

Saturday, April 28, 2007

ஆஸ்திரேலியா உலக சேம்பியன்



எதிரிகளே இல்லா உண்மையான சேம்பியன். அஸ்திரேலியாவின் திறமையில் பாதி கூட ஒரு அணியும் பெறவில்லை என்பது என் எண்ணம்..

தன்னிகரில்லா சேம்பியன்!!!

வாழ்த்துக்கள்!!!

பாரதிதாசன் பிறந்த தின நல்வாழ்த்துக்கள்

தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!






1891 - ஏப்ரல் 29, அறிவன் (புதன்) இரவு பத்தேகால் மணிக்குப் புதுவையில் சுப்புரத்தினம் பிறந்தார். தந்தை கனகசபை. தாய் இலக்குமி. உடன்பிறந்தோர் தமையன் சுப்புராயன். தமக்கை சிவகாமசுந்தரி. தங்கை இராசாம்பாள்.

1908 - புதுவை அருகில் உள்ள சாரம் முதுபெரும் புலவர் (மகா வித்துவான்) பு.அ. பெரியசாமியிடமும் பின்னர் பெரும் புலவர் பங்காரு பத்தரிடமும் தமிழ் இலக்கணஇலக்கியங்களையும் சித்தாந்த வேதாந்த பாடங்களையும் கசடறக் கற்றார். மாநிலத்திலேயே முதல் மாணவராகச் சிறப்புற்றார். புலவர் சுப்புரத்தினத்தை வேணு "வல்லூறு" வீட்டுத் திருமணத்தில் பாரதியார் காணும் பேறு பெற்றார். பாரதியாரின் தேர்வு எடையில் நின்றார். வென்றார். நட்பு முற்றியது. பாரதியாரின் எளிய தமிழ், புலமை மிடுக்கேறிய சுப்புரத்தினத்தைப் பற்றியது.

1918 - பாரதியாருடன் நெருங்கிப் பழகிய பழக்கத்தால் சாதி, மதம், கருதாத தெளிந்த உறுதியான கருத்துகளால் ஈர்ப்புற்றுப் புலமைச் செருக்கும் மிடுக்கும் மிகுந்த நடையில் எழுதும் தேசிய தெய்வப் பாடல்களைப் பழகு தமிழில் எழுதுதல். புதுவை, தமிழக ஏடுகளில் புதுவை கே.எசு.ஆர்., கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எசு. பாரதிதாசன் என்ற பெயர்களில் பாடல், கட்டுரை, கதை மடல்கள் எழுதுதல். 10 ஆண்டுக்காலம் பாரதியாருக்கு உற்றுழி உதவியும் உறு பொறுள் கொடுத்தும் தோழனாய் இருந்தார்.


1944 - பொரியார் முன்னிலையில் தலைமகள் சரசுவதி திருமணம். மணமகன் புலவர் கண்ணப்பர். "இன்ப இரவு" (புரட்சிக்கவி) முத்தமிழ் நிகழ்ச்சி அரங்கேற்றம். இருண்ட வீடு, காதல் நினைவுகள், நல்ல நீர்ப்பு (நாடகம்) அழகின் சிரிப்பு ஆகிய நூல்கள் ஒன்றன் பின் வெளியிடல். சதி சுலோசனா என்ற திரைப்படத்திற்குக் கதை, உரையாடல், பாடல் எழுதுதல். குடும்ப விளக்கு 2 வெளியிடல். செட்டிநாடு முழுவதும் இலக்கியச் சொற்பொழிவு நடத்திப் பகுத்தறிவு இயக்கத்தைக் காலூன்றச் செய்தல். கலைவாணர் என்.எசு.கே. வுக்காக "எதிர்பாராத முத்தம்" நாடகமாத் தீட்டித் தருதல். "கற்கண்டு" பொறுமை கடலினும் பெரிது இணைத்து எள்ளல் நூல் வெளியிடல்.

Wednesday, April 25, 2007

ஐஸ்வர்யா ராய் அபிசேக் ஜோடி விமானத்தில்

ஐஸ்வர்யா ராய் அபிசேக் ஜோடி விமானத்தில் பயனம் செய்யும் புகைப் படங்கள் பிரியமுடன் கேபி அவர்களின் பதிவில் பார்த்தேன்.

மிக அழகாக இருந்தது. அது உங்கள் பார்வைக்கு..



படம் பார்க்க "இங்கே கிளிக் செய்யுங்க.."

நன்றி: PKP.IN

Tuesday, April 24, 2007

தமிழ்மணத்திற்கு ஆதரவு!


சாதி/மத வெறியர்கள் பரப்பும் அவதூறுகளை புறந்தள்ளி தமிழ்மணத்திற்கு எனது முழு ஆதரவை அளிக்கிறேன்.

Thursday, April 12, 2007

படைப்பாளிக்கு பதில் சொல்லும் பொறுப்பும உண்டு : வைரமுத்து


கேள்வி: படைப்பது மட்டுமே என் வேலை; பதில் சொல்வதல்ல என்கிறார்களே சில எழுத்தாளர்கள்...?


வைரமுத்துவின் பதில்:

சோழமன்னனின் தமிழ் அவை. நளவெண்பாவை அரங்கேற்றுகிறான் புலவன் புகழேந்தி. தளைதட்டாத வெண்பாச்சுவையில் தரைசுற்றிக் கிடக்கிறது தமிழ்க் கூட்டம்.

மாலைப்பொழுதின் மனோகரம் சொல்லவந்த புலவன் _‘‘மல்லிகையே வெண்சங்கா வண்டூத’’ என்கிறான். அதாவது _ மல்லிகைப்பூக்களில் தேன் குடிக்கும் வண்டினங்களைப் படிமப்படுத்தியவன் ‘மல்லிகைப் பூக்களைச் சங்குகளாக்கி வண்டுகள் ஊதி ஒலிசெய்யும் பொழுது’ என்கிறான்.

‘நிறுத்து’ என்கிறான் ஒட்டக்கூத்தன்.

‘‘சங்கூதுகிறவன் சங்கின் பின்புறமிருந்து ஊதுவதே மரபு. மல்லிகைப்பூக்களின் மேற்புறம் தேன் குடிக்கும் வண்டுகள் சங்கூதுவதாய்ச் சொல்வது காட்சிப்பிழை; இது வெண்பா அல்ல; வெறும்பா.’’

ஒரு ஞான நிசப்தம் நுரைகட்டி நிற்கிறது சபையில்.


புகழேந்தி பதிலிறுக்கிறார்:
‘‘ஒட்டக்கூத்தரே உட்காருமய்யா! கள் குடிப்பவனுக்குத் தலை எது கால் எது என்று தெரியாதய்யா.’’


படைப்பது மட்டுமன்று; பதில் சொல்லும் பொறுப்பும் உண்டு படைப்பாளிக்கு.

- வைரமுத்து

"குமுதத்தில் வைரமுத்துவின் பதில்கள் என்ற பகுதியிலிருந்து."

படித்ததில் எனக்கு பிடித்தது.

நன்றி: குமுதம்

Wednesday, April 11, 2007

புத்துணர்ச்சி PPT

இதில் இரண்டாவது Slideல் வரும் விசயத்தை அவரவர் நம்பிக்கைக்கே விட்டுவிடுகிறேன்.

Monday, April 09, 2007

வாழ்க்கை பயனம் PPT

Wednesday, April 04, 2007

"முயல் ஆமை " புதிய கதை - PPT

இடப் பங்கீடு ஒழிந்தால் சாதி ஒழியுமா?

சாதி ஒழிப்பு வீரர்களே : சாதி அளவுகோலை பயன்படுத்துவது கிண்டல் செய்யப்படுகிறது. பாம்புக்கடிக்கு மருந்தாக பாம்பின் விசம் பயன்படுத்தப்படுவது போலவேதான் சம்த்துவம் உருவாக்கப்பட சாதி அளவுகோல் பயன்படுத்தப்படுகிறது.



நன்றி: தினகரன்

Tuesday, April 03, 2007

Online ல் பிச்சை - கார்ட்டூன்

Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv