ஊரில் பெரிய ஜோதிடர். அந்த வட்டாரத்தில் இவரை தெரியாதவர்களே இல்லை. ஆனால் அதெல்லாம் சுமார் 20 வருடங்களுக்கு முன். கிராமச் சூழ்நிலையில் இருந்து படிப்படியே நகரச்சுழ்நிலைக்கு மாறிவிட்ட அந்த ஊரில் சின்னசாமி சோதிடரின் வட்டம் குறுகிவிட்டது. சோதிட வருமாணத்தை வைத்தே தனது இரு மகன்களுக்கும் நல்ல படிப்பு சொத்து என நல்ல முறையில் முன்னேற்றிவிட்டார்.
ஆனால் ஓடி ஆடிய அந்த ஜீவன் தற்பொழுது மரணப்படுக்கையில்.. அது கிட்டதட்ட அவருடைய கடைசி நிமிடங்கள். அனைத்து நெருங்கிய பந்தகளும் அவருடைய வீட்டில்.
ஏம்பா சிவஞானம்! உங்க அப்பா கடைசியா எப்ப சாபிட்டார்?
இரண்டு நாளா வெறும் தண்ணீர்தான் உள்ளே இறங்குகிறது!
பதில் சொன்ன சிவஞானத்தை சற்று நிமிர்ந்து பார்த்தார் உறவினர் ஒருவர்.
அதற்குள் இன்னொருவர் அப்படின்னா, இன்றைக்கு இரவு கடப்பதே ரொம்ப கஷ்டம்..ம்ம்ம்..
சற்று நேரத்தில் சிவஞானத்தின் மகள் ஓடி வந்து, அப்பா "உங்களை உள்ளே உடனே வர சொன்னாங்க" என்றாள்.
கிட்டதட்ட முக்கிய உறவுகள் சின்னசாமியை சுற்றி..
ஒருவர். ஏம்பா, புறப்பாடு ஆரம்பித்துவிட்டது. எல்லாரும் தேவாரம் திருவாசகம் பாடுங்க. ஆன்மா நல்லதை கேட்டுவிட்டு செல்லட்டம்.
"நமசிவாய வாழ்க" என சிவஞானம் ஆரம்பிக்க அனைவரும் கூட பாட ஆரம்பித்தனர்.
ஆம், தனது சிறுவயதில் இருந்தே உழைப்பு உழைப்பு என்று இருந்த அந்த ஜீவன் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கியது.
சரி எல்லாம் நல்ல படியா முடிந்துவிட்டது. அவருக்கும் வயது 75ஐ கடந்துவிட்டது. அதுனால சும்மா அழுது ஆர்ப்பாடம செய்யாதீங்க. அடுத்தது ஆகவேண்டியதை பாருங்க.
அப்ப, பூஜை செய்து ஒப்படைத்துவிடலாமே! என்றார் ஒருவர்.
சிவஞானம் பூஜை பொருட்களுக்கு ஏற்பாடு செய்யுப்பா! என்றது வீட்டின் வெளியில் இருந்து வந்த ஒரு குரல்.
சிவஞானம் சற்று யோசித்தார். அட மணி 2.30 ஆகிவிட்டதே. இந்த அர்தராத்திரியில் எப்படி பொருள் வாங்குவது.?. ம்ம்..
அதற்குள் அவருடைய மைத்துனர் ஏங்க ரொம்ப யோசிக்கிறீங்க? நம்ம அண்ணாச்சி கடை, ரங்கசாமி அண்ணன் கடை, விசாலாட்சி ஸ்டோர் எல்லாம் இருக்கு. வாங்க பார்த்துக்கொள்ளுவோம்.
சரி என சிவாஞானம் தனது பைக்கில் மைத்துனரையும் ஏற்றிக்கொண்டு கிளம்பினார்.
அந்த கடைத்தெருவில் வெறும் நிசப்த்தம்.
"அண்ணாச்சி அண்ணாச்சி" என்று குரல் கொடுத்தனர். உபயோகமில்லை. சரி வா!, அடுத்த கடைக்கு செல்வோம்.
ரங்கசாமியை எப்படியோ எழுப்பிவிட்டார்கள். ஆனால் அவர், "சரக்கு சுத்தாம இல்லை", "நாளைக்குத்தான் கிடைக்கும் என்றார்!"
ஒருவித ஏமாற்றத்துடனும் ஒரு துளி நம்பிக்கையுடனும் விசாலாட்சி ஸ்டோர் சென்றனர். அங்கே இருந்த காவலாளி " கடை இரண்டு நாளா லீவு.! முதலாளி வீட்டில் விசேசம்.!"
சிவஞானதின் மனதில் கவலை தொற்றிகொண்டது.
அதற்குள் அவருடைய மைத்துனர்.. மாமா!, "ஒன்னு சொன்னா கோபிக்க மாட்டீங்களே?!"
"நம்ம சேவியர் கடையில் போய் பார்க்கலாம்!" என்றார் மைத்துனர்.
இந்து அமைப்பின் தலைவர் என்ற முறையில் கோவில் அருகில் "சர்ச்" கட்டும் விசயத்தில் சேவியருடன் போன வாரம்தான் பெருத்த வாக்குவாதம்.
இப்ப, அதுவும் இந்த நேரத்தில் அவனைப்போய் எழுப்பவது சரியா? என சிவஞானத்தின் சிந்தனை தடுமாறியது.
என்னா ஆனாலும் சரி.. கேட்டுப் பார்த்துவிடுவோம் என இருவம் சேவியர் கடை நோக்கி.
காலிங் பெல் சத்தம் கேட்டு வெளியே வந்த சேவியர்.. "யாரது".. "யாருங்க இந்த நேரத்தில்?!"
"நான் தான் சிவஞானம்.!"
சேவியருக்கு "திக்" என்று ஆகிவிட்டது.
அவனுடைய மனதில் பல எண்ணம்.. இருப்பினும்
"என்ன அண்ணே இந்த நேரத்தில்?" என்றான்.
"எங்க அப்பா கொஞ்ச நேரத்திற்கு முன் இறந்துவிட்டார்."
"அடடா.. சரிண்ணே??" என்றான் சேவியர்.
"அதான் பூஜை பொருள் வாங்கனும். அது தான் இங்கே! இந்த நேரத்துல உன்னை எழுப்பவதற்கு மன்னிச்சுவிடுப்பா.."
"என்ன அண்ணே இப்படி சொல்லிடீங்க.! முப்பது வருசமா தாயா புள்ளையா பழகுகிறோம். இது போல சமயத்தில் உதவாவிட்டால் எப்படி? "
"வாங்கண்ணே" என்று சிவஞானத்தின் கைகளை பற்றினான் சேவியர்.