Thursday, November 30, 2006

விஜயகாந்த் - முதல் போராட்டம்


முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தக் கோரி தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தலைமையில் தேனியில் சனிக் கிழமை (டிச.2) உண்ணா விரதப் போராட்டம் நடைபெறுகிறது. மாவட்டத் தலைநகர்களில் தேமுதிக நிர்வாகிகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவார்கள்.


இது குறித்து விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:

மத்தியிலும் மாநிலத்திலும் கேரளத்திலும் ஆளுகின்ற கட்சிகள் அனைத்தும் ஒரே முகாமைச் சேர்ந்தவை. அப்படி இருந்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பையே துச்சமென மதித்து நிறைவேற்றாமல் இருப்பது தமிழக மக்களை வஞ்சிக்க அவர்கள் நடத்தும் ஒரு நாடகமோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

இன்னும் சில நாள்களுக்குள் வடகிழக்குப் பருவமழை நின்றுவிடும். அதற்குப் பிறகு நீரே இல்லாத போது நீர்த்தேக்கம் பற்றி யார் பேசப் போகிறார்கள். மக்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைப்பதாலேயே இன்னும் 15 நாள்களில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர்கள் கூடுவார்கள் என்று அறிவித்துள்ளனர்.

எனவே தமிழக மக்கள் தங்கள் ஒன்றுபட்ட சக்தி மூலமே தங்களுக் குரிய நியாயத்தை நிலைநாட்ட முடியும் என்ற உணர்வை வெளிப் படுத்த வேண்டும் என்ற நோக்கத் தோடு தே.மு.தி.க டிச. 2ம் தேதி (சனிக் கிழமை) தமிழ்நாடு எங்கும் தமிழ் மக்கள் சார்பாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கிறது.

Wednesday, November 29, 2006

சிகாகோ - நேரில் வந்து சந்தித்த பதிவர்கள்.

நாள்: 25 - 11 -06.
இடம்: சிகாகோ


சுமார் 3.30 PM மணியளவில் உதய்குமார் எங்கள் வீட்டுக்கு வந்தார். படத்தில் பார்ப்பதை விட இளைமையாக இருந்தார். நாங்கள் இருவரும் சிகாகோ தாவரவியல் பூங்காவிற்கு செல்ல இருந்தபோது சிறிலிடம் இருந்து தொலைபேசி. பூங்கா இன்று 4.00 மணியுடன் மூடிவிடுவார்கள் என்று.

சரி, நீங்கள் எங்க வீட்டுக்கே வந்து விடுங்கள் என்றேன். அழைப்பை ஏற்று எங்கள் வீட்டுக்கு தன் மனைவி குழந்தையுடன் வந்தார். இவரும் போட்டோவை விட இளமை. கண்ணாடி அணியவில்லை.

வலைப் பதிவுகளில் அரசியல், சார்ப்பு நிலை, கருத்து சுதந்த்திரம் , தமிழ் மொழி - இதைச் சுற்றி விவாதங்கள் நடந்தன.

இனிப்பு, வடை, டீ இடையிடையே..

மொத்தத்தில் மிக அருமையான சந்திப்பு.


Tuesday, November 28, 2006

வளர்ச்சி பாதையில் தமிழ்நாடு.


சிறப்பு பொருளாதாரா மண்டலங்கள் தமிழ்நாட்டை உலக சந்தையில் பாதுகாப்பான வழியில் நிறுத்த வேண்டுமானால் உள்கட்ட்மைப்பில் சமசீரற்று இருக்கும் உற்பத்தி தொழில் மற்றும் தகவல் நுட்ப தொழில் கவனம் செலுத்தப் படவேண்டும் என்று தலைமை செயலளர் திரு.L.K.திருபாதி கூறி உள்ளார்.


மேலும் அவர் கூறுகையில்..

1. தமிழ்நாடு முதலீட்டாளர்களை விரும்பி வரும் இடமாக உருவாக்க அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும்.


2. விவசாயம் 14% of GDP. விவாசயத்தை சார்ந்து 56% தமிழ்நாட்டில் உள்ளனர்.

3. சேவைத் துறை - (தகவல் தொழில் நுட்பம் உட்பட) - 56% of GDP

4. உற்பத்தி தொழில் - 30% of GDP



வேலை வாய்ப்பு:

1. கடந்த ஆறு மாதங்களில் 6 நிறுவனங்களுடன் தொழில் தொடங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் மதிப்பு 2685 கோடி ரூபாய். இந்த நிறுவனங்கள் 53000 பணியிடங்களை தரும்.

2. மேலும் பல நிறுவனங்கள் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளன. அது கிட்டதட்ட 1.61 லடசம் பணியிடங்களை உருவாக்கும்.


மின்சாரம்

தமிழ்நாடு அடுத்த மூன்று ஆண்டு மின்சார தேவையை சந்திக்க தயராக உள்ளது என்று மின்சார துறை செயலளர் திரு.R.சடபதி கூறினார்.

11வது திட்டத்தின் கீழ் 3000 MW மின்சாராம் பற்றாகுறை ஏற்படும். அது சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.


தகவல் தொழில் நுட்ப துறை

இந்திய தகவல் தொழில் நுட்ப துறையில் தமிழ்நாட்டின் பங்கு 14%.
அதை 25% உயர்த்த இலக்கு நிறனிக்கப்பட்டுள்ளது என்று திரு.Dr.C.சந்திரமௌளி கூறினார்
.

150 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதில் 49 மில்லியன் சதுர அடி இடம் அடங்கும். சுமார் 6.5 மில்லியன் சதுர அடி இந்த வருடத்திற்குள் தயாராகிவிடும்.

சென்னையில் இன்னுமொரு டைடல் பார்க் 1.28 மில்லியன் சதுர அடி உருவாக்கப்பட உள்ளது. இதன் மூலம் 12000 பேர் பணியமர்தமுடியும்.

வரும் ஜனவரியில் கோவையில் தகவல் தொழில் நுட்ப பூங்கா ஆரம்பிக்கப் படும். மதுரை மற்றும் திருச்சியிலும் தகவல் தொழில் நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.


விவசாயதுறை வளர்ச்சி:

ஓசூரில் உள்ள விவசாய ஏற்றுமதி மண்டலம் போல் மஞ்சளுக்கு ஈரோட்டிலும் மூலிகைகளுக்கு நருங்கேரியிலும் மலர்களுக்கு மதுரையிலும் உருவாக்கப்படும்.


சிறப்பு பொருளாதார மண்டலங்கள்:

In-Principle approval Given : 19
Formal Approval (Land with Develpoer): 26.
IT and ITES : 20
Product - Specific SEZs (non IT) : 19
Multi-Product SEZs: 6.

Monday, November 27, 2006

பள்ளிக்கூடம்...

இந்தப் படத்தின் ஸ்டில் நல்லாயிருந்தது. அதனால் உங்களின் பார்வைக்கு..


இது தான் மதமா?...





















இது தான் மதமா? ... இது தான் மதமா?....இது தான் மதமா?.....


.............................இது எனக்கு வேண்டாம்..............

Wednesday, November 22, 2006

80 ஆயிரம் கோடி ரூபாய்


11-வது ஐந்தாண்டு திட்டத்தில் தமிழ்நாட்டின் திட்ட மதிப்பீடு ரூ.80 ஆயிரம் கோடி என்று திட்டக்குழு துணைத்தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் கூறினார்.


முதல்-அமைச்சரும் மாநிலத் திட்டக்குழு தலைவருமான கருணாநிதியை, மாநில திட்டக்குழு துணைத்தலைவர் பேராசிரியர் மு. நாகநாதன் தலைமையில் உறுப்பினர்கள் சென்னை கோட்டையில் நேற்று மாலை சந்தித்து 11-வது ஐந்தாண்டு திட்ட அணுகுமுறை அறிக்கையை வழங்கினார்கள்.


பின்னர் பேராசிரியர் மு. நாகநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அவர் கூறியதாவது:-

10-வது ஐந்தாண்டு திட்டத்தில் தமிழ்நாட்டின் திட்ட மதிப்பீடு 40 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்தது. இப்போது 11-வது ஐந்தாண்டு திட்டத்தில் திட்ட மதிப்பீடு 70 முதல் 80 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


11-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் சமூக நலத் துறைகளில் வளர்ந்து வரும் பொதுச்செலவுகளை மேற்கொள்வதற்காக தமிழக அரசு அதிக நிதியினை மத்திய அரசிடம் இருந்து பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.


தற்போது தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் விவசாயத்தில் பெரிய தேக்க நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த தேக்க நிலையை போக்க விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

விவசாயத்தை 50 சதவீத மக்கள் நம்பி வாழ்கிறார்கள். அதை லாபகரமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .


அரசு உதவிகள், விவசாயிகளுக்கு சந்தை தொடர்புகளை ஏற்படுத்தி கொடுப்பது, ஊரகப் பகுதிகளில் சேமிப்பு கிடங்குகள் அமைப்பது , ஆறுகளை இணைப்பது போன்ற நடவடிக்கை மூலம் விவசாயத்தை மேம்படுத்தலாம் என்று அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளோம்.

தகவல் தொழில் நுட்பத் துறையும், அதன் தொடர்புடைய மற்றத் துறைகளும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு முக்கிய தூண்டுதல் சக்தியாக வளர்ந்து வருகின்றன. தொழில்துறையின் வளர்ச்சிக்கு ஏற்ப தொழிற் பயிற்சி பள்ளிகள், தொழில் நுட்ப பயிற்சி நிறுவனங்களில் புதிய பாடத்திட்டங்களையும், பயிற்சி முறைகளையும் கற்பிக்க வேண்டும்.

தனது வரி வருவாயை உயர்த்துவதற்காக சேவை வரி விதிக்கும் உரிமையை மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு மாநில அரசு வலியுறுத்த வேண்டும்.

சமத்துவம் - திறன் நெறிமுறைகளுக்கு ஏற்ப மாநிலங்கள் நிதியினை பெறும் வண்ணம் மத்திய அரசு நிதி அளிக்கும் அமைப்பை மாற்றிட வேண்டும் என்று எங்கள் அறிக்கையில் கூறியுள்ளோம்.

இந்த அணுகுமுறை அறிக்கை விவாதத்துக்கு வைக்கப்படும். அடுத்து 6 மாதத்துக்கு பிறகு இறுதி அறிக்கையை சமர்ப்பிப்போம். இவ்வாறு பேராசிரியர் மு.நாகநாதன் கூறினார்.

Tuesday, November 21, 2006

சிகாகோ மில்லேனியம் பார்க்...

ஒரு மூன்று மாதங்களுக்கு முன் சிகாகோ மில்லேனியம் பார்க் போனேன்.. அப்ப எடுத்த புகைப் படங்கள்.. உங்கள் பார்வைக்கு..













-------இது லேக் சோர் டிரைவ்----


சிகாகோ மில்லேனியம் பார்க்கைப் பற்றி அறிய " இங்கே செல்லுங்க...."

Monday, November 20, 2006

அப்துல்கலாம்-ரஜினிகாந்த்-பெரியார்-இளையராஜா

இந்திய தெற்கு மாநிலங்கள் அமைந்து ஐம்பது வருடம் நிறைந்ததை ஒட்டி CNN-IBN TV பல தொடர்களை வழங்கிவருகிறது. இதை ஒட்டி யார் அதிகம் பிரபலமானவர் என்று சர்வே ஒன்றை நடத்தியது.




சர்வே முடிவுகள்


இந்திய ஜனாதிபதி அப்துல் கலாம். - 32%

நடிகர் ரஜினிகாந்த் - 24%

தந்தை பெரியார் - 21%

இசை ஞானி இளையராஜா- 12%

பாடகி பாரத் ரத்னா சுப்புலட்சுமி - 9.5%

சதுரங்க விளையாட்டு வீரர் விஸ்வனாதன் ஆனந்த் - 1.9%



மேலும் விபரம் அறிய " இங்கே செல்லுங்க...."

Sunday, November 19, 2006

114.உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்.

ஏய் எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு
கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு
சுத்தமாக சொன்ன் தெல்லாம் போறலியா
மொத்தமாக காதுல தான் ஏறலியா


உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆன்டவன் அந்த மதம்.

அட போங்கடா போங்கடா போங்கடா
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா

கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுறன் கேளுடா

அந்த ஆன்டவன் தான் கிருஸ்துவனா முஸ்லிமா இல்லை இந்துவா


உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்.....


மனசுக்குள்ள நாய்களும் நரிகளும
நால்வை பேய்களும் நாட்டியமாடுதடா

மனிதனென்னும் போர்வையிலிருக்குது
பார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா

அட யாரும் திருந்தலயே இதுக்காக வருந்தலயே
அட யாரும் திருந்தலயே இதுக்காக வருந்தலயே

நீயும் நானும் ஒன்னு இது நெசந்தான் மனசுல என்னு
பொயையும் புரட்டையும் கொன்னு இந்த பூமிய புதுசா பன்னு



சும்மா சொன்னத சொன்னத சொல்லவா
சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா

அட உன்னதா நம்புறன் நல்லவா
உன்னால மாறுதல் வந்திடுமல்லவா


உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்......


கணக்கிலொரு கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும் இருப்பது உண்மையடா

கூட்டல் மட்டும் வாழ்க்கையில் நடக்குது
பாவத்தை பெருக்குது இது என்ன ஜென்மமடா

இப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்ல பொழுது
இப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்ல பொழுது


அடியே ஞானத்தங்கம் இங்கு நானொரு ஞானச்சிங்கம்
இதைப் பார்த்தா பொய்களும் ஓடும் இரண்டு போட்ட உலகமும் மாறும்

அட பத்திரம் பத்திரம் பத்திரம் தீர்ப்பு நாள் பக்கத்தில் பக்கத்தில் வருது
இது சத்தியம் சத்தியம் சத்தியம் சத்தியத்தின் சந்ததி சீக்கிரம் வருது


உன் மதமா என் மதமா ஆன்டவன் எந்த மதம்......



இந்த பாடலின் "ஆடியோ இங்கே கேளுங்க.."


படம்: ராமன் அப்துல்லா
பாடல்: கவிஞர் வாலி
இசை: இசை ஞானி இளையராஜா
குரல்: நாகூர் E.M.HANIFA
இயக்கம்: பாலுமகேந்திரா
வருடம்:1997

Saturday, November 18, 2006

தினமலருக்கு வாழ்த்துக்கள்!!







தினமலர் ஜெயித்துகாட்டுவோம் நிகழ்ச்சியை தொடர்து நடத்திவருகிறது. இது மாணவ/மாணவிகளுக்கு எனக்கு தெரிந்தவரையில் உதவியாக உள்ளது. அதற்காக தினமலருக்கு வாழ்த்துக்கள்.


இது போன்று மற்ற பத்திரிக்கைகளும் மாணவ/மாணவிகளுக்கு உதவ முன்வரவேண்டும். அதைப் பற்றி யாராவது தெரிந்தால் சொல்லங்கப்பா!!

Friday, November 17, 2006

பெரியார் பற்றி அண்ணா


பெரியாரின் பணி, தற்குறிகள் நிரம்பிய தமிழகத்திலே, கல்வீச்சு மண்வீச்சுக்கிடையே என்பதை அறிய வேண்டும். அதிலும் சகலமும் உணர்ந்த சகலகலா வல்லுநர்களும், வெறும் சாமியாடிகளைக் கூடக் கண்டித்துப் பேசச் சக்தியற்றுக் கிடந்த நிலையில், பெரியாரின் பெருங்காற்றுத் தமிழகத்திலே வீசி, நச்சுமரங்களை வேரொடு கீழே பெயர்த்தெறிந்தது என்பதையும் உணர வேண்டும்..

சாக்ரடீஸ், லெனின், பிராட்லா, பர்னாட்ஷா, ரூசோ முதலிய பேரறிஞர்களும் புரட்சிகாரர்களும் எதற்காக உலகிலே போற்றப்படுகிறார்களோ, அவ்வளவையும் ஒருங்கே திரட்டி ஓருருவில் பார்க்க வேண்டுமானல், அது பெரியார்தான். --- அறிஞர் அண்ணா.

Thursday, November 16, 2006

சென்னையில் இன்று..

வள்ளுவரை இறக்கிவிட்டு
கலைஞரை ஏற்றுகிறீர்களா?
படி(வெளி)யில் பெண்.



ஆபீசுக்கு சீக்கிரம் போக வேண்டும் என்பதற்காக கலங்கரை விளக்கம் டூ அடையாறு பஸ்சில் நேற்று மாலை மிகவும் ஆபத்தான நிலையில் பயணம் செய்யும் பெண்... வழக்கம்போல, ஓடும் பஸ்சில் ஏறும் இளைஞர்.

நன்றி: மாலை முரசு

Wednesday, November 15, 2006

தகவல் தொழில்நுட்ப துறையில் மகத்தான நாள்



தகவல் தொழில்நுட்ப துறையில் 14-11-06 அன்று மகத்தான நாள். தகவல் தொழில்நுட்ப தொழில் சங்கம் ஒன்று கொல்கத்தாவில் அமைக்கப் பட்டுள்ளது.

தொழில் சங்கங்கள் வெறும் வேலை நிறுத்தம் செய்வதற்கே என்று நினைத்தால் அது மிகப் பெரிய முட்டாள்தனம்.

இந்த துறையில் தொழில் சங்கம் அமைத்திருப்பது அத்துறையில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களும் ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் வந்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாது.

மேலும் இதன் சம்பந்தமாக் "இங்கே செய்தியாக உள்ளது..."

அச் செய்தியின் சுருக்கத்தை இங்கே கொடுத்துள்ளேன்.

IT sector in West Bengal was launched by CITU, ruling CPM's trade union front, which said it was necessary because of alleged rampant flouting of workers' rights.

Launching the new trade union, CITU state president Shyamal Chakraborty said, "some people may not be happy at this development but this is a historic day before us.''

He alleged a number of IT companies were flouting rules framed by the government, depriving workers of basic rights like PF and ESI.

The CITU leader alleged workers' rights were regularly violated by IT companies and claimed he had a list of at least 30 people whose services were terminated without following proper procedure.

Tuesday, November 14, 2006

சீனா செய்வது சரியா?



இந்தியாசீனா இடையே பல ஆண்டுகளாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. காஷ்மீர் பகுதியில் 43,180 சதுர கி.மீ., தூரத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக இந்தியா கூறி வருகிறது.

அதே நேரத்தில் அருணாச்சல பிரதேசத்தில் 90 ஆயிரம் சதுர கி.மீ., பகுதியை இந்தியா ஆக்கிரமித்துள்ளதாக சீனா கூறி வருகிறது.

இந்த எல்லைப் பிரச்னையை தீர்க்க இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், இந்தியாவுக்கான சீன தூதர் சன் யுக்சி தனியார் "டிவி'க்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், "எங்களை பொறுத்தவரை தாவாங்க் உட்பட ஒட்டு மொத்த அருணாச்சல பிரதேசமே சீனாவுக்கு உட்பட்டதே. ஒட்டு மொத்த அருணாச்சல பிரதேசத்தையும் எங்களுக்கு உரிய பகுதியாகவே நாங்கள் கோரி வருகிறோம்,' என்றார்.


எல்லைப் பிரச்னையை சுமூகமாக தீர்க்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நேரத்தில் சீன தூதர் இது போல் கூறியது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் நேற்று கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர், "அருணாச்சல பிரேதசம் இந்தியாவுக்கு உட்பட்ட பகுதி,' என்று திட்டவட்டமாக கூறினார்.

சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ, "வரும் 20ம் தேதி முதல் 23ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார்.

நன்றி:

செய்தி: தினமலர்

Sunday, November 12, 2006

உலகின் புதிய கடவுள்



வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ளது டி.வீரப்பள்ளி கிராமம். இங்கு வசிக்கும் சம்பத்குமார் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் வளர்ந்துள்ள தென்னை மரத்தில் ஈச்சம்பழம் போல் ஆயிரக்கணக்கான பிஞ்சு விட்டுள்ளன. இந்த அதிசயத்தை கண்ட கிராம மக்கள், மரத்தை தெய்வமாக வழிபட தொடங்கி விட்டனர்.

Friday, November 10, 2006

நமக்காக இயற்கையா?!...

தெகா அவர்கள் ஒரு அருமையான பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவின் நோக்கம் இது போன்ற விசயங்கள் மக்கள் மத்தியில் விழிப்புனர்ச்சி ஏற்படவேன்டும் என்பதே..


தயவுசெய்து "அப்பதிவை" படித்துவிட்டு இங்கே வாங்க.. அப்பொழுதுதான் இப்பதிவின் ஆழத்தை அனுபவிக்க முடியும்.

அப்பதிவுக்கு இது ஒரு இனைப்பு (அல்லது விளம்பரம்) என்க் கொள்ளலாம்..


சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பி.டி.ரக நெற்பயிரை பயிர் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாவட்டம் ஆலாந்துறையில் உள்ள ஒரு வயலில் பயிரிடப்பட்டிருந்த பயிர்களை பிடுங்கி எறிந்து தமிழக விவசாயிகள் சங்கத்தினர் நேற்று போராட்டம் நடத்தினர்.



கோவை ஆலாந்துறை அடுத்துள்ள ராமநாதபுரம் கிராமத்தில் விவசாயி ஒருவருக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தை பி.டி விதை களை(மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள்) தயாரிக்கும் தனியார் நிறுவனம் குத்தகைக்கு எடுத்து பயிரிட்டு வந்தது. இங்கு பயிரிடப்பட்ட பி.டி ரக நெற்பயிரால் வயல் வெளியில் சுற்று சூழல் மாசு ஏற்பட்டுள்ளதாக தமிழக விவசாயிகள் சங்கத்தினர் புகார் கூறினர்.


இந்நிலையில், நேற்று விவசாய சங்கத்தினர் பி.டி.நெற்பயிர் பயிரிடப்பட்டுள்ள வயலுககுள் சென்றனர். கையுறை, முகமூடி அணிந்து, வயலின் எல்லை யை குறிக்கும் வகையில் பல அபாய பலகைகளையும், யாரும் நுழை யாத வகையில் நாடாக்களை கொண்டு வேலி அமைத்தனர்.


பின்னர், முற்றிய, அறுவடைக்கு தயாராக இருந்த பி.டி.நெற் பயிரை வேரோடு பிடுங்கினர்.
மேலும், கோவை மாவட்ட கலெக்டர் உடனே இங்கு வர வேண்டும் என்றும், பி.டி.நெற்பயிரை சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டத்தின்படி எரித்து அழிக்க வேண்டும் என்றும் கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.


இது குறித்து உழவர் உழைப்பாளர் கட்சி மாநில தலைவர் செல்லமுத்து கூறுகையில், ‘‘பி.டி பருத்தி விதைகளை விதைத்தால், அதிக மகசூல் ஆகும் என்று வாக்குறுதிகளை அமெரிக்க தனியார் நிறுவனம் கூறி வருகிறது.


இந்த விதையால், ஆந்திரா, மகாராஸ்டிரா மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். உணவை நச்சாக மாற்ற முயற்சிக்கும் இந்த கம்பெனியின் நடவடிக்கையை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது, என்றார்.



தெகா, "நேசி" என்ற பெயரில் இன்னொரு பதிவிட்டிருக்கிறார். "பரிணாமச் சீர்கேடு ஒர் அறிமுகம்..." அதையும் கொஞ்சம் படித்துவிடுங்க.. ப்ளிஸ்

ராங் நெம்பர்.. இந்த வார ஜோக்



பெண்- 1: Hallo..ஏன்டி எப்படி இருக்க..

பெண்- 2: ம்ம்ம்.. எனக்கு நேத்து நைட்ல இருந்து கொஞ்சம் உடம்பு சரியில்லை "அம்மா"!


பெண்- 1: ஏன்டி என்ன ஆச்சு.?

பெண்- 2: அதை ஏன் கேட்குறே.. சரி அதை விடுமா.. எனக்கு நிறைய வேலை ஆக வேண்டியுள்ளது.. இவினிங் பார்ட்டி வேற இருக்குது.. என்ன செய்வதென்றே தெரியவில்லை..


பெண்- 1: அப்படி என்னடி வேலை இருக்குது..

பெண்- 2: வீட்டை கீளின் பன்னனும்.. துணி வாசிங் போட வேணும்..


பெண்- 1: சரி.. அப்பறம்

பெண்- 2: காரை கிளீன் பன்னனும், கார் வாஸ்க்கு எடுத்துட்டு போகனும்.


பெண்- 1: ஏய், அது தானே பன்னிவிடலாம் விடு.. சும்மா போட்டு மனசை கொழுப்பிக்காதே..

பெண்- 2: இவினிங் பார்ட்டிக்கு வேற ரெடி பன்னனும்..


பெண்- 1: சரி விடுடி, நான் இப்பவே கிளம்பி வரேன்.. அப்படி ரமேசுக்கும் போன் பன்னி கொஞ்சம் முன்னாடியே வரவெச்சரு.. வேலையை ஈசியா முடிச்சிரலாம்.

பெண்- 2: ரமேசா?!! அது யாரு?!!



பெண்- 1:
ஏய்! என்னடி உம்புருசனையே யாருன்னு கேட்கற..

பெண்- 2: என்னது இரமேசு எம்புருசனா!


பெண்- 1: Is it் 244253214??


பெண்- 2: சாரி ராங் நெம்பர்..



பெண்- 2: அப்ப யாரும் வரமாட்டாங்களா!!!

Thursday, November 09, 2006

இளையராஜா செய்வது சரியா?



பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுப்பு: இளையராஜாவுக்கு இல.கணேசன் பாராட்டு

இசைஞானி இளையராஜா பாரதியார் படத்துக்கு இசை அமைத்து பெருமை சேர்த்தார். ஆனால் தற்போது பெரியார் படத்துக்கு இசையமைக்க மறுத்து விட்டார். தெய்வ நம்பிக்கை கொண்டவர் இளையராஜா. கோடி ரூபாய் கொடுத்தாலும் பெரியார் படத்துக்கு இசையமைக்க மாட்டேன் என்று அவர் கூறியதை நினைத்து பெருமைபடுகிறேன். அவரை பாராட்டுகிறேன். அவர் லட்சிய பற்றுள்ளவர்.

திரு.இல.கனேசன் இவ்வாறு கூறியுள்ளார்.

Wednesday, November 08, 2006

பிரபல டாக்டர் சிங்கை விஜயம் (அறிவிப்பு)

வாலிப, வயோதிக பதிவர்களே, அமெரிக்க புகழ் மருத்துவர் எஸ்கே ஐயா, என அன்போடு பதிவுலக நண்பர்களால் அழைக்கப்படும் இந்திய டாக்டர், டாக்டர் சங்கர் குமார், தனது சொந்த விசயம் காரணமாக தன் சென்னைப் பயணத்தை முடித்துக் கொண்டு சிங்கை வருகிறார்.

மேலும் வாலிப வயோதிக பதிவர்களுக்கு ஏற்படும் மனக்கவலை, சோர்வு, பயம், நடுக்கம், துக்கம், ஏக்கம், பெற்றோர்கள் அறிந்து கொள்ள பாலியல் கல்வி ஆகியவற்றை தன் ஆத்திகம், கசடற பதிவு மூலம் தீர்த்துவைக்கும் மருத்துவர் எஸ்கே, தன் நான்கு நாள் சுற்றுப் பயணமாக சிங்கை வருகிறார்.


பயண விவரம் : 11 / நவ / 2006 மாலை 6 முதல் முதல் 15 / நவ /2006 வரை
மருத்துவரை சந்திக்க, உரையாட ஆர்வம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய கைத்தொலைபேசி எண் : 9876 7586

(தொடர்பு கொள்பவர்களின் தகவல்கள் விரும்பினால் ரகசியம் காக்கப்படும்.)

:) :)

மேலும் பிரத்தியோகமாக மருத்துவர், வலைப்பதிவு நண்பர்களை / நண்பிகளை சந்திக்க அங்க்மோக்கியோ நூலகத்திற்கு வருகை புரிய உள்ளார். ஆர்வமுள்ளவர்கள் வந்து கலந்துகொள்ளலாம்.

நாள் : 12 / நவ / 2006 நேரம் மாலை 6 முதல் மாலை 8 வரை
இடம் : அங்மோகியோ சமூக நூலகம், சிங்கப்பூர்
கைத்தொலைபேசி எண் : 9876 7586 (கோவி.கண்ணன்)

சென்னை தொலை பேசி : 91 44 6532 8595 (தற்போதும் மற்றும் நவ 20 வரை தொடர்பு கொள்ளலாம்)
__________________________
எழுதியவர் : கோவி.கண்ணன்

கோவையில் ஒரு மழைக்காலம்


கோவை, பேருர். நொய்யல் ஆறு - படித்துறை



கோவை, பேருர். நொய்யல் ஆறு - படித்துறை



கோவை, கணுவாய் பன்னிமடை




ஊட்டி, பைக்கார அனை



கோவை, குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி


ஊட்டி, பைக்கார நீர்வீழ்ச்சி

Monday, November 06, 2006

இட ஒதுக்கீடு எனும் ஆயுதம்

சமுதாயத்தில் மேலே இருப்பவர்களைக் கீழே தள்ளிவிட்டு, கீழே இருப்பவர்களை அந்த இடத்துக்குக் கொண்டு வருவதுதான் இட ஒதுக்கீடு என்று ஒரு பிரிவினர் கருதுவதால்தான் இந்தப் பிரச்னையில் அடிக்கடி சர்ச்சை எழுகிறது.

மேலே உள்ளவர்கள் அப்படியே இருக்கட்டும். கீழே உள்ளவர்களையும் - பின்னுக்குத் தள்ளப்பட்டு பல நூற்றாண்டுகளாக அப்படியே இருப்பவர்களையும் - மேலே கொண்டு வருவதற்காகக் கொண்டு வரப்பட்டதுதான் இட ஒதுக்கீடு என்ற ஆயுதம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளாததால்தான் இந்த சர்ச்சை.


இன்னும் சொல்லப்போனால், நலிந்த மக்களின் உரிமைதான் அவர்களுக்கான இட ஒதுக்கீடு.

இதை மையமாக வைத்துதான் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1917ல் துவக்கப்பட்டு, நாளடைவில் அது நீதிக் கட்சியாக மாறியது.

1. ஆண்டாண்டு காலமாக அரசு அதிகாரத்தில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரே ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அந்த நிலையை மாற்றி, எல்லா பிரிவினருக்கும் அரசாங்கத்தில், நிர்வாகத்தில் நியாயமான பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்பதே இட ஒதுக்கீட்டின் நோக்கம்.


2. இந்த இட ஒதுக்கீடு இன்னும் எவ்வளவு காலத்துக்கு நீடிக்க வேண்டும் என்றும் இப்போது கேள்வி எழுப்பப்படுகிறது.

3. இந்தியா விடுதலை பெற்று 59 ஆண்டுகள் கடந்துவிட்டன. தாழ்த்தப்பட்டவர்கள். ஆதிவாசிகள், பிற்படுத்தப்பட்டோர் இன்னுமா முன்னேறவில்லை?

4. இவ்வளவு காலம் அந்தப் பிரிவினர் இட ஒதுக்கீட்டின் பலன்களை அனுபவித்தது போதாதா? என்று ஒரு தரப்பினர் இப்போது கேள்வி எழுப்புகிறார்கள்.

5. இந்தியா போன்ற பன்முக அமைப்பைக் கொண்ட நாட்டில் நலிந்த பிரிவு மக்கள் ஒரே இரவில் முன்னேறிவிட முடியாது. இந்தப் பிரிவு மக்கள் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைய 100 ஆண்டுகள்கூட ஆகலாம்.


6. இட ஒதுக்கீட்டை அரைகுறை மனதுடன் அமல் படுத்தியதன் விளைவுதான் இந்த கால தாமதத்துக்குக் காரணம் என்று கூட கூறலாம்.

7. தாழ்த்தப்பட்டோருக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதையே இதற்கு உதாரணமாகச் சுட்டிக்காட்டலாம்.

8. இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் என்ற கருத்து, பிற்படுத்தப்பட்டோரில் தொடங்கி இப்போது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வரை வளர்ந்துவிட்டது.


9. இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெறும் தகுதி படைத்த பிரிவினரில் வசதியானவர்களை (கிரீமி லேயர்) நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கூறியிருப்பது பற்றி நாடு முழுவதும் விவாதம் துவங்கிவிட்டது.

10.இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைப் புகுத்த வேண்டும் என்பது இதன் முக்கிய அம்சம்.கூடவே, இட ஒதுக்கீடு 50 சதவிகிதத்துக்கு மிகாமல் மாநில அரசுகள் பார்த்துக்கொள்ள வேண்டும்.

11. பின்தங்கிய வகுப்பினரில் வசதியானவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கக் கூடாது. இட ஒதுக்கீட்டின் அளவு 50 சதவிகிதத்துக்கும் அதிகமானால், நாட்டில் ஜாதீயம் நிலைத்துவிடும் என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து சொல்லியிருக்கிறது.

12. சமூக ரீதியில், கல்வி ரீதியில் பின்தங்கியவர்கள் பொருளாதார ரீதியில் முன்னேறி இருக்கலாம். ஆனால், அவர்களது சமூக அந்தஸ்து இன்னமும் அப்படியேதான் இருக்கிறது.



13. மேலும் வருமானம் என்பது நிரந்தரமானது அல்ல. வருமானத்தை அளவீடாக வைத்து இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டால், இட ஒதுக்கீட்டின் அடிப்படையே தகர்க்கப்பட்டதாகிவிடும்.



14. பின்தங்கியவர்களை, ஒடுக்கப்பட்டவர்களை பொருளாதார ரீதியாக மட்டுமின்றி, சமூக ரீதியாகவும் முன்னேற்றுவதுதான் இட ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கம் என்பதைப் புரிந்துகொண்டாலே, இந்த பொருளாதார அளவுகோல் வாதம் அடிபட்டுவிடும்.

15. இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெற்று, அதன் மூலம் டாக்டர்கள், வக்கீல்கள், துணைவேந்தர்கள், மாவட்ட ஆட்சியர்கள், உயர் போலீஸ் அதிகாரிகள் என்று ஆனவர்கள் எல்லாம் முன்னேறியவர்கள் இல்லையா? அவர்களது பிள்ளைகளுக்கெல்லாம் இடஒதுக்கீடு எதற்கு? அவர்களை கிரீமி லேயர் பிரிவில் சேர்த்து, இட ஒதுக்கீட்டின் பலன்களைப் பெறுவோர் பட்டியலில் இருந்து விலக்கிவிடலாமே? என்ற கருத்து இப்போது திட்டமிட்டு பரப்பப்படுகிறது.

16. தந்தைதான் மேலே வந்து விட்டாரே... மகன் எப்படிப் போனால் என்ன? என்பதைப் போன்றது இது.

17. இட ஒதுக்கீட்டில் இருந்து கிரீமி லேயரை நீக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் கருத்து குறித்து நாடு முழுவதும் விவாதம் துவங்கிவிட்டது.


18. சமூக நீதிக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை எதிர்கொள்ள, அனைத்து மாநிலங்களும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்று வலியுறுத்தி, அனைத்து மாநில முதல்வர்களுக்கும் தமிழக முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருக்கிறார்.



19. சமூக ரீதியாகப் பின்தங்கியவர்களுக்குதான் இட ஒதுக்கீடு. பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு அல்ல என்பதை அரசியல் சட்டம் தெளிவுபடுத்தியுள்ளது.


20. சமூகம் மற்றும் கல்வி ரீதியாக பல நூற்றாண்டுகளாக அடக்கி வைக்கப்பட்ட மக்களுக்கு நாடு சுதந்திரம் பெற்ற பின்னர்தான் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது.

21. சமூக ரீதியாகவும் அவர்கள் முன்னேறுவதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளது.

22. பல ஆயிரம் ஆண்டுகளாக நம் சமூகத்தில் ஜாதி முறை தொடர்ந்துகொண்டு இருக்கிறது. எனவே, 50 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டுக் கொள்கையால் ஜாதீயம் நிலைத்துவிடும் என்று சொல்வது ஏற்புடையது அல்ல என்று அந்தக் கடிதத்தில் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.


23. அரசியல் சட்டத்தால் இட ஒதுக்கீடு உரிமை பெறத் தகுதி உள்ளவர்கள் பட்டியலில் கிரீமி லேயர் என்ற ஒரு புதுப் பிரிவு ஏற்படுத்தப்பட்டால், அதுவே பிற்காலத்தில் இன்னொரு புதிய சமூகத்தை உருவாக்கிவிடலாம்.


24, தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரில் கிரீமி லேயர் பிரிவைக் கண்டுபிடிப்பதில் காலத்தைச் செலவிடுவதைவிட, இட ஒதுக்கீட்டை நியாயமாகவும் தீவிரமாகவும் அமல்படுத்தினால், கீழே இருக்கும் மக்கள் விரைவில் தாமாக முன்னேறிவிடுவார்கள்.


அத்தகைய நிலை வர பாடுபடுவோமே! ?

நீதிமான்களுக்கு வலைவிரிச்சாச்சு ?



நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்க தேசிய நீதித்துறை கவுன்சிலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. இதற்காக 1968ம் ஆண்டின் நீதிபதிகள் (விசாரணை) சட்டத்தில் திருத்தம் செய்யப்பட இருக்கிறது.

இடைக்காலத் தடை எதுவும் ஏற்படாமல் அமல் ஆனால் அது இந்திய நீதித்துறை வரலாற்றில் முக்கிய நாளாக குறிக்கப்படும்.

முன்சீப் நீதிபதியில் இருந்து மாவட்ட நீதிபதிகள் வரையில் இந்தியா முழுவதும் சுமார் 11 ஆயிரம் பேர் இருப்பார்கள். இவர்கள் மீது புகார் எழுந்தால், விசாரித்து, தவறு உறுதியானால் அவர்களை பதவி நீக்கம் வரை செய்ய தொடர்புடைய உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது.


ஆனால் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் மீதோ, உச்ச நீதிமன்ற நீதிபதியாகவே உட்கார்ந்திருப்பவர் மீதோ புகார்கள் வந்தால் கையைப் பிசைந்து கொள்ள வேண்டியதுதான்.

தற்பொழுது உள்ள முறைப்படி, இந்த புகார்களை மூன்று நீதிபதிகளைக் கொண்ட கமிட்டி ஆய்ந்து, குற்றவாளி என்று தீர்மானிக்க வேண்டும். அதன் பிறகு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் பதவி இறக்க தீர்மானம் கொண்டுவர வேண்டும்.


நீதிபதிகள் மீது வரும் புகார்களை விசாரிக்க ஒரு கவுன்சில் தேவை என்ற கருத்து வலுப்பட்டது. 2003ல் பா.ஜ.க. ஆட்சி இதில் ஓரளவு அக்கறை காட்டியது. மத்திய சட்ட அமைச்சராக இருந்த ஜனா. கிருஷ்ணமூர்த்தி, அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் எழுதினார்.
“மற்ற துறைகளைப் போலத்தான் நீதித்துறையும் இருக்கிறது. அது எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இல்லை. தேசிய நீதித்துறை ஆணையம் அமைக்கப்பட வேண்டும். நீதிபதிகள் தவறு செய்யும் முன்பு ஓராயிரம் முறை யோசிக்க வைக்கும் அளவுக்கு பாதுகாப்பு அம்சங்களை ஏற்படுத்த வேண்டும்’’ என்றார் ஜனா.


1. தாதாக்களுடன் தொடர்புடைய பதிப்பகத்திடம் புத்தகம் எழுதுவதற்காக 70 லட்சம் ரூபாய் முன்பணம் பெற்றதாக குற்றச்சாட்டு வந்ததை அடுத்து மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த ஏ.எம். பட்டாச்சார்யா ராஜினாமா செய்தார்.

2. கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த அஜித் சென்குப்தா, ஓய்வு பெற்ற பிறகு அந்நிய செலவாணி முறைகேடுகளுக்காக கைது செய்யப்பட்டார்.

3. சர்வீஸ் கமிஷன் தேர்வில் தங்கள் உறவினருக்கு அதிக மதிப்பெண் கிடைக்க வழி செய்ததாக பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதிகள் மெஹ்தால் சிங் கில், அமர்பிர் சிங் ஆகியோர் ராஜினாமா செய்தார்கள்.

4. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.எஸ். ஆனந்த், ஏ.எம். அகமதி ஆகிய இருவர் மீதும் புகார்கள் புறப்பட்டன.


இப்படிப்பட்ட நடவடிக்கைகளுக்கு கூட பல ஆண்டுகளைக் கடக்க வேண்டியிருந்தது. எனவேதான், அரசியலமைப்பு சட்டத்தை மறுஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட வெங்கடாசலய்யா கமிஷன், தேசிய நீதித்துறை ஆணையம் அமைத்து நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்தது.


அதன்படிதான் இப்போது மசோதா வர இருக்கிறது. இதன்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தவிர, இதர உச்ச நீதிமன்ற நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது கவுன்சிலில் புகார் தரலாம்.


நீதித்துறையை அச்சுறுத்துவதற்காக இது கொண்டு வரப்படுவதாக சில விமர்சனங்கள் எழுந்தன. இது உண்மையல்ல.

அமைக்கப்பட இருக்கும் தேசிய நீதித்துறை கவுன்சிலில் உறுப்பினர்களாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் அதன் மூத்த நீதிபதிகள் இருவர், உயர் நீதிமன்ற மூத்த நீதிபதிகள் இருவர் என அவர்கள்தான் இருக்கப் போகிறார்கள். எனவே, கவுன்சில் அமைப்பதற்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்க முடியாது.


விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட, கேள்விக்குட்படுத்த முடியாத சக்திகள் என யாரும் இருந்துவிடக்கூடாது என்பது குடியாட்சித் தத்துவம். அதுதான் இந்த மசோதாவின் மகத்துவம். ?



நீதிமான்களுக்கு வலை என்ற கட்டுரையில் திரு.ப.திருமாவேலன்

நன்றி: தினகரன்

Saturday, November 04, 2006

வர்றாரு வர்றாரு யாரு வர்றாரு...




டேய் நிறுத்துங்கடா ...
பேருசே தேவைல போல இருக்கே. இந்த இழு இழுக்கறீங்க
நொந்துபோய் எத்திருச்சு வந்திரப்போறாரு..

எலேய் இறங்கி பட்டைய கிளப்புங்கடா..


வர்றாரு வர்றாரு யாரு வர்றாரு தலைப்பா கட்டிகிட்டு தாத்தா வர்றாரு
ஒத்த ரூபா பொட்டுவச்சு சாமி வர்றாரு எட்டு காலு வாகனத்தில் ஏறி வர்றாரு.
ஒய்யாறி சிங்காரி சம்சாரி சோம்பேறி இல்லோருக்கும் உள்ளோருக்கும் இதுதானே ஒப்பாரி


பர பர மோளம் இது பட்டி தொட்டி தாளம்
பட பட வெடி போடு இது பஞ்சாயத்து ரோடு


வர்றாரு வர்றாரு யாரு வர்றாரு.....


கொட்டவியே உடமலே குரட்டை சத்தம் இல்லாமலே குந்திகிட்டு தூங்குறாரு
அழகு ராசா என் அழகு ராசா

தாத்தாவோட பேர வச்சு காக்காவுக்கு சோறு வெச்சு மூக்கு முட்ட தின்ன போறோம்
அழகு ராசா என் அழகு ராசா

அரன்மனை வீட்டை விட்டு ஆதங்கரை வர்றாரு
ஆறடி பள்ளத்துக்குள் நாத்து நட வர்றாரு

அன்னாடம் பொய் சொன்ன அரிச்சந்திரன் வர்றாரு
பட்டிமுதல் பாட்டு சொல்லும் உலவியா வர்றாரு

தாரை தப்பட்டைக்கு தலையாட்டி வர்றாரு
வீதியில் ஊரு சனம் விசிலடிக்க வர்றாரு

ஓடி வந்து இங்கு.. ஓடி வந்து இங்கு
அட ஊதுங்கடா சங்கு


பர பர மோளம் இது பட்டி தொட்டி தாளம்
பட பட வெடி போடு இது பஞ்சாயத்து ரோடு


வர்றாரு வர்றாரு யாரு வர்றாரு....


கூட்டியார வைச்சவரு கூத்தாடி வர்றாரு
செல்வங்களை சேர்த்தவரு செல்லாகாசா வர்றாரு

பேரு புகழ் கொண்டவரு தேருக்குள்ளே வர்றாரு
ஊரு சனம் மத்தியிலே ஊமைத்துரை வர்றாரு .. இதோடா..

கண்ணாடி போட்டவரு கண்ணைமூடி வர்றாரு
உதுபத்தி வாசனையில் ஊர்வலமா வர்றாரு

அய்யா போல இல்லே அய்யா போல இல்லே
இவர் ஆதிசிவன் புள்ளே


பர பர மோளம் இது பட்டி தொட்டி தாளம்
பட பட வெடி போடு இது பஞ்சாயத்து ரோடு




படம்: எம் மகன்
குரல்: மோகன், சந்திரன், முரளி
இசை : வித்யாசாகர்
நடிப்பு: பரத், கோபிகா, நாசர், வடிவேல்
இயக்கம்: திருமுருகன்
தயாரிப்பு: சத்ய ஜோதி தியாகராஜன்
வருடம்: 2006



இந்த பாடலின் "ஆடியோ இங்கே கேளுங்க.."

இதில் நடனம் நன்றாக உள்ளது. அதனால் "இதன் வீடியோ இங்கே பாருங்க.."

Thursday, November 02, 2006

நான் தான் கடவுள் - இந்த வார ஜோக்



காதலி: நீங்க எங்கப்பாகிட்ட வந்து பேசினால்தான் நம்ம கல்யானம் நடக்கும். இல்லை என்றால் இப்படியே காதலிச்சிட்டே இருக்க வேண்டியதுதான். நான் வேற பணக்கார குடும்பத்தில் பிறந்து தொலச்சுட்டேன்.

காதலன்: சரி.. சரி.. எப்ப வரனுன்னு சொல்லு வந்திடுறேன்.. இப்ப கொஞ்சம் ஜாலியா.... பேசு..

காதலி: வருகிற சனிக்கிழமை சாய்ங்காலம் 6.30 மணிக்கு வந்திடுங்க.


------


காதலியின் அப்பா: வாங்க குமார், நீங்க வருவீங்கன்னு வானதி சொன்னா. ம்ம்.. சொல்லுங்க..நீங்க என்ன படித்திருக்கீங்க?

காதலன்: நிறைய படிக்கனுன்னு ரொம்ப ஆசை இருக்கு.. எல்லா கடவுள் பார்த்துக்கொள்வார்


காதலியின் அப்பா: என்ன வேலை செய்யறீங்க?

காதலன்: பெரிய பெரிய வேலைக்கு போகனுன்னு நினைத்துட்டு இருக்கேன்.. எல்லா கடவுள் செய்வார்.


காதலியின் அப்பா: வீடு வாசல் சொத்து சுகம் ஏதாவது?

காதலன்: எல்லா கடவுளை பிராத்திச்சுட்டு இருக்கேன்.. நிச்சயமா நடக்கும்.

காதலியின் அப்பா: சரி குமார், நீங்க போயிட்டு வாங்க.. வானதி வந்து உங்களை சந்திப்பா.


-------


காதலி: அப்பா, என்ன சொல்லறாரு அவர்?


காதலியின் அப்பா: உன் காதலன் "நான் தான் கடவுள் என முழுமையாக நம்புகிறான்"

லாலுவுக்கு ஏக மவுசு - மீள் பதிவு



லாலு பிரசாத் யாதவ் பாட்னா பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

உலகின் மிகப் பெரிய ரயில்வே நெட்வொர்க் என்ற பெருமையைப் பெற்ற இந்திய ரயில்வே துறை இனி தேறாது என்ற அளவுக்கு நெருக்கடியான சூழ்நிலையில், அதற்கான அமைச்சரானார் லாலு பிரசாத் யாதவ். அதிகரித்து வந்த டீசல் விலை, நிர்வாகச் சீர்கேடு என்று பல பிரச்னைகளில் சிக்கியிருந்தது ரயில்வே.

லாலுவிடம் ரயில்வே துறை வந்ததும் மாயாஜாலங்கள் நடந்தன. மோசமான நிலையில் இருந்த ரயில்வேயிடம் இன்று 11,000 கோடி ரூபாய் உபரி நிதி இருக்கிறது! இரண்டே ஆண்டுகளில் இதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் லாலு.

ரயில்வேயைக் கட்டி மேய்ப்பது சாதாரண விஷயமல்ல. 14 லட்சத்து 22 ஆயிரம் ஊழியர்கள். தினமும் 16 ஆயிரம் ரயில்கள். தினசரி 1.40 கோடி பயணிகளுக்கு சேவை செய்கிறது. அதிகரித்து வரும் நிர்வாகச் செலவுகள். கூடவே, ரூ.99, ரூ.999 என்று குறைந்த கட்டணங்களுடன் களத்தில் குதித்திருக்கும் விமானப் போக்குவரத்து நிறுவனங்களுடன் போட்டி...

டீசல் விலை உயர்வு ஒரு பெரிய சவால். லிட்டருக்கு ஒரு ரூபாய் அதிகரித்தாலே, ரயில்வேக்கு கூடுதல் செலவு ரூ.211 கோடி! இப்படி, அடுக்கடுக்காக மிரள வைக்கும் சவால்கள்!

சளைக்கவில்லை லாலு. சரியான ஆட்களை சரியான இடத்தில் வைத்துக்கொண்டார். முடிவெடுப்பதில் அதிகாரிகளுக்குப் போதுமான சுதந்திரம் தரப்பட்டது.

ஒரு விஷயத்தில் லாலு தெளிவாக இருந்தார். எந்தக் காரணத்தைக் கொண்டும் பயணிகள் கட்டணத்தை அதிகரிக்கவே கூடாது. குறப்பாக, ஏழை, நடுத்தர மக்களைப் பாதிக்கும் எந்த நடவடிக்கையும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தார்.

ரயில்வேக்கு பெருமளவு வருமானத்தை அள்ளித் தருவது சரக்குப் போக்குவரத்துதான்! அதில் செலவுகளைக் குறைக்கவும் வருமானத்தை அதிகரிக்கவும் வழிகள் ஆராயப்பட்டன.முன்பை விட அதிக சரக்குகளை இப்போது ஏற்றிச் செல்கிறது ரயில்வே. அதே ரயில்கள், அதே ஊழியர்கள்.. ஆனால் அதிக செயல்திறன். விளைவு? வருமானம் கொட்டியது.

புதுமைகளுக்கும் பஞசமில்லை. சரக்கு ரயில்களை இனி தனியாரும் இயக்கப் போகிறார்கள். இதன மூலம் ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி அள்ள முடியும் என்பது லாலுவின் கணக்கு. அடுத்த 7 ஆண்டுகளில் சரக்கு ரயில்களுக்கென்றே தனி பாதை உருவாகும்போது, ரயில்வே வருமானம் உச்சத்துக்குப் போய்விடும் என்கின்றனர் நிபுணர்கள்.

அண்மையில் டீசல் விலை உயர்ந்தபோது, சரக்குக் கட்டணத்தைக் குறைத்து புரட்சி செய்தார் லாலு. ‘அளவை அதிகரி; செலவைக் குறை‘ என்பது அவரது பார்முலா.

லாலுவை ஒரு மிகப் பெரிய கம்பெனியின் தலைமைச் செயல அதிகாரியாகத்தான் பார்க்கிறார்கள். ஆனால், இந்தப் பெருமையெல்லாம் 15 லட்சம் ரயில்வே ஊழியர்களைத்தான் சேரும் என்கிறார் அவர்!

இப்போது லாலுவுக்கு ஏக மவுசு. ரயில்வேயை எப்படி லாபகரமாக அவர் மாற்றினார் என்பதைத் தெரிந்துகொள்ள ஆளாளுக்குப் போட்டி போடுகிறார்கள்.

அகமதாபாத்தில் உள்ள ஐஐஎம் (இந்திய மேலாண்மை கல்லூரி) மாணவர்கள் அவரது வெற்றிக் கதையைப் படிக்கப் போகிறார்கள். சர்வதேச அளவில் பிரபலமான ஹார்வர்டு பல்கலைக்கழகமும் அந்த ரகசியத்தைத் தெரிந்துகொள்ள விரும்புகிறது.


இந்தப் பட்டியலில் லேட்டஸ்டாக சேர்ந்திருப்பது, பிரான்சில் இருக்கும் ஹெச்இசி என்ற மேலாண்மைக் கல்லூரி. அதன் நிர்வாகி கரீன் ஜோலி, அண்மையில் லாலுவைப் பார்த்துப் பேசியிருக்கிறார். சர்வதேச நிறுவனமான ஜிஇ தலைவர் ஜெப்ரி இம்மெல்டும் லாலு புகழ் பாடுகிறார்.

நல்ல தலைமை இருந்தால் எதிலும் ஜெயிக்கலாம் என்பதற்கு இந்திய ரயில்வே ஒரு சாட்சி! ?



நன்றி: தினகரன்

Wednesday, November 01, 2006

கலர் மாறுதுங்கோ..









இடம்: ஜெனிவா ஏரி, இல்லினாய் மாநிலம், அமெரிக்கா


அப்பறம் என்ன... இது தான்..



இடம்: மன்டலின், இல்லினாய் மாநிலம், அமெரிக்கா


இந்த படங்கள் போன வருடம் எடுத்தவை.

இந்த வருடம் இன்னும் ஜெனிவா ஏரிக்கு செல்லவில்லை. இந்த வார இறுதியில் செல்லலாம் என எண்ணியுள்ளேன்.
Free Counter
Free Counter
More than a Blog Aggregator www.streambox.tv